வெள்ளி, 9 மார்ச், 2012

எப்படி சமாளிப்பது?


சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் அடிக்கடி நிகழும் பிரச்னை இது. 

'எப்பொழுது வந்து நின்றது, யார் நிறுத்தினார்கள்' என்று தெரியாது. ஆனால், நம் வீட்டு வாசலில், கேட்டுக்கு மிக அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டிருக்கும். ஸ்கூட்டர் / பைக் போன்று இருந்தால் கூட அப்புறப்படுத்திவிடலாம். ஆனால், இது கார். கண்ணாடிகள் ஏற்றப்பட்டு, (அதுவும் உள்ளே பார்க்க முடியாதபடி கறுப்புக் கண்ணாடிகள்!) அழகாக நிறுத்தி இருப்பார்கள். 

தொடர்ந்து இரண்டு நாட்கள் முதல், ஒரு வாரம் பத்து நாட்கள் கூட இவ்வாறு நிறுத்தி வைத்து விடுவார்கள். 

நம் வீட்டு நாலு சக்கர வாகனத்தை வெளியில் எடுக்க முடியாது. நாம் நினைத்தபடி வெளியில் எங்கும் சென்று வர இயலாது. கிட்டத் தட்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட கைதிகள் போல நாம் இருக்கவேண்டிய நிலைமை! 

கார் சொந்தக்காரர் யார் என்று தெரியாது. கொண்டு வந்து நிறுத்தியவரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ('ஓஹோ - அப்படீன்னா அது உங்க கார் இல்லையா?' என்று கேட்பார் பக்கத்து வீட்டு ஓ சி பேப்பர் படிப்பாளி!) 

இந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு அல்லது இப்படி நேராமல் தடுக்க என்ன வழி? வாசகர்கள் வழிகள் சொல்லுங்கள். 
=================

கீழே காணும் பார்க்கிங் எப்படி செய்வது? நீங்கள் யாராவது முயன்றது உண்டா? 
    
இந்த சப்ஜெக்டில் இருக்கும் பொழுதே ஓரிரு கார் (டிரைவிங்) ஜோக்குகளும் சொல்லி முடிக்கின்றேன். 
    
வேகமாக வந்த கார், வீட்டுக் காம்பவுண்டு சுவரை இடித்துக் கொண்டு உள்ளே வந்து நின்றது. கோபமாக ஸ்தலத்திற்கு விரைந்து வந்த வீட்டு சொந்தக்காரரிடம், காரை ஓட்டி வந்தவர் கேட்டார்: "எக்ஸ்கியூஸ் மீ. திருநீர்மலை கோவிலுக்கு எப்படி போவது? வழி சொல்வீர்களா?"
  
வீட்டு சொந்தக்காரர்: " இப்படியே நேரா போனீங்கன்னா எங்க வீட்டு ஹால் வரும். அதை இடித்துவிட்டு போனீங்கன்னா சமையலறை. அதையும் இடிச்சுகிட்டு கொல்லைபுறம் போனா கொஞ்ச தூரத்துல திருநீர்மலை ஏரி வரும். அதுல விழுந்து அக்கரைக்குப் போயிட்டா, மெயின் ரோடு. அதுல போனா திருநீர்மலைக் கோவில் வந்துடும்."  
    
****

படு வேகமாக வந்த கார், ஒரு பாதசாரியை இடிக்காத குறையாக அருகே பெரிய ஹாரன் சத்தத்துடன், சடன் பிரேக் போட்டு நின்றது. கார்க்கண்ணாடிக் கதவை சற்றுக் கீழே இறக்கிய ஓட்டுனர், பதற்றத்துடன், "சார்! ஷேக்ஸ்பியர் வீட்டுக்கு எப்படிப் போகவேண்டும்?" என்று கேட்டார். 
  
பாதசாரி, விவரமாக வழியைக் கூறிவிட்டு, "நீங்க நிதானமாகவே போகலாம். ஷேக்ஸ்பியர் செத்துப் போய் ரொம்ப வருடங்கள் ஆயிடுச்சு" என்றார்! 
                        

25 கருத்துகள்:

  1. அந்த திருநீர்மலை ஜோக்குக்கு படங்கள் எங்க சார் புடிச்சீங்க... அபாரம் போங்க... ரசிச்சுச் சிரிச்சேன்.

    பதிலளிநீக்கு
  2. நம் வீட்டு நாலு சக்கர வாகனத்தை வெளியில் எடுக்க முடியாது. நாம் நினைத்தபடி வெளியில் எங்கும் சென்று வர இயலாது. கிட்டத் தட்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட கைதிகள் போல நாம் இருக்கவேண்டிய நிலைமை! /


    eககள் நிலைமையும் இதுதானே
    எங்கள் பிளாக கார ரே!

    பதிலளிநீக்கு
  3. நம் வீட்டு நாலு சக்கர வாகனத்தை வெளியில் எடுக்க முடியாது. நாம் நினைத்தபடி வெளியில் எங்கும் சென்று வர இயலாது. கிட்டத் தட்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட கைதிகள் போல நாம் இருக்கவேண்டிய நிலைமை! /


    eககள் நிலைமையும் இதுதானே
    எங்கள் பிளாக கார ரே!

    பதிலளிநீக்கு
  4. ஷேக்ஸ்பியர் செத்துப்போய் ரொம்ப நாளாச்சு! ROFL.. :-)

    பதிலளிநீக்கு
  5. கஷ்டம் தான். சிலர் வாகனங்களை லேசா சேதப்படுத்தி தங்கள் கோபத்தை தணிச்சிப்பாங்க.

    பதிலளிநீக்கு
  6. ஹிஹிஹி, காலங்கார்த்தாலே எழுந்து வந்ததும் ஜோக்கிலே கலக்கிட்டீங்க. நல்லா இருக்கு.

    அது சரி,எப்படிச் சமாளிக்கிறதுனு சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போமில்ல??

    வீட்டை வித்துட்டுத்தான் போகணும்! :)))))

    அப்படியே இந்த அடுக்கு மாடிக்குடியிருப்புக் கட்டும் கான்ட்ராக்டர் போடற மணல், ஜல்லி, செங்கல், கம்பிகளினால் உங்க வீட்டுக்குப் பால்கூட வர முடியாமல் இருக்கிற நிலைமையும் சேர்த்துக் கேட்டிருக்கலாம்.

    எல்லா அவதியையும் பட மறுபடி இந்தியாவுக்குக் கிளம்பிட்டு இருக்கோம். :))))))

    பதிலளிநீக்கு
  7. பதிவு நகைச்சுவையா....இல்ல ஆதங்கப்பதிவான்னு யோசிச்சுக்கிட்டே சிரிச்சிட்டு இருக்கேன் !

    பதிலளிநீக்கு
  8. towing service ஒண்ணு சென்னையில் ஆரம்பிக்கலாம் போலத் தோணுதே?

    பதிலளிநீக்கு
  9. ஹி ஹி..ஆனா என்னைக்காவது நம்ம வண்டிய நிறுத்தி ஒரு பூவோ வாழைப்பழமோ வாங்கறதுக்குள்ள கர்ம ச்ரத்தையா அங்க ஒரு வாட்ச்மேன் வண்டிய நிறுத்தாத எடுன்னு சண்டைக்கு வருவானே:))

    பதிலளிநீக்கு
  10. உங்களைப் போன்ற சாதுவானவர், நல்லவர் இருக்க முடியாதென்றே எண்ணுகிறேன்:)! “No Parking in Front of the Gate" எனும் அறிவிப்பிலாத தனிவீடுகளைப் பார்க்க முடியாது. கேட்டை விட்டுத் தள்ளி நிறுத்தியிருந்தாலும் கூட அவங்க வீட்டு சுவற்று முன்னாலும் நிற்கக் கூடாதென வெளியில் வந்து கூப்பாடு போடுவார்கள் [இப்படி நாட்கணக்காய் நிறுத்தி யாரேனும் கடுப்பேற்றியிருப்பாங்கன்னு இப்பதான் புரியுது:)]. வீடுகள் இருக்கும் பகுதிகளில் கடைகளும் வந்து விட்டதால் இது பெரிய பிரச்சனைதான். கடைக்காரர்களே வரும் வாடிக்கையாளரை வீடுமுன் வண்டிகளை நிறுத்தி விடாதீர்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்வதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  11. No Parking in Front of the Gate" //

    ஹிஹிஹி, சென்னையிலே இதைப் போட்டதுக்கு அப்புறமாத் தான் எங்க வீட்டுக்கு எதிரே நிறைய வண்டிங்க. அதுவும் இரு சக்கர வண்டிகள் ஒரே நேரம் 3,4 நிக்கும். நாங்க வெளியே வரணும் எடுங்கனு சொன்னால், முறைப்பாங்க பாருங்க, நம்ம தப்பாச் சொல்லிட்டோமோனு பயம்மா இருக்கும். அவங்களா எடுத்தாத்தான்! இல்லைனா நாம வண்டியை நகர்த்திவிட்டு நம்ம வண்டியை எடுத்துட்டு வெளியே போகணும். அப்போக் கூடப் பார்த்துட்டே நிப்பாங்க. ஆனால் உதவிக்கு வர மாட்டாங்க. எங்கேயோ யாருக்கோ என்னமோனு இருப்பாங்க.

    பதிலளிநீக்கு
  12. இல்லைனா அவங்க வண்டியை நாமளே நகர்த்திட்டுனு வந்திருக்கணும். :))))))

    பதிலளிநீக்கு
  13. எங்களுக்கும் அதே பிரச்னை தான்...
    ஆனால் தெரியாதவர்களது வண்டியாளல்ல
    எதிர்வீட்டுக்காரர்களால்.......
    நாம் மரம் வளர்த்து வைத்திருப்பது
    அவர்கள் வண்டி நிறுத்த.......
    ஆனால் நம் வண்டியை வெயிலில்
    நிறுத்த வேண்டி உள்ளது......
    என்ன செய்வது....

    இருந்தாலும் திருநீர்மலை ஜோக் ஓவர் தான்.

    பதிலளிநீக்கு
  14. //நம்ம தப்பாச் சொல்லிட்டோமோனு பயம்மா இருக்கும். //

    நீங்களும் ரொம்ப ரொம்ப நல்லவங்க:)! இங்கே வண்டியை விடுபவர்கள்தான் பயப்படணும்.

    பதிலளிநீக்கு
  15. ஹிஹி.. அவங்களுக்கு ரெண்டு ரூவா குடுத்துப் பாருங்களேன்.. வண்டியை நகத்துவாங்க.. அஞ்சு ரூவா கொடுத்தா வண்டியை நிறுத்தாம கூட இருக்கலாம்.. யார் கண்டது?

    //அப்புறமாத் தான் எங்க வீட்டுக்கு எதிரே நிறைய வண்டிங்க..

    பதிலளிநீக்கு
  16. அப்பாதுரை-யின் towing business-ஐ வளர்க்க குறைந்தது இரண்டு சக்கரங்களுக்கு காற்று எடுத்து விட்டுடலாம். ஒன்று மட்டும் எடுத்தால் ஸ்டெப்னி மாட்டிவிடுவார்கள்! இதில் என்ன ஒரு பிரச்சினை என்றால்.. கார் பஞ்சராகிவிட்டது என்று சொல்லி கூடுதலாய் ஒரு நாள் நிறுத்திவிடுவார்கள்...

    பதிலளிநீக்கு
  17. 1 tyre = Rs 5000

    சார்.. உங்க கண்ணு முன்னாடி 20 ஆயிரம் இருக்கு... என்ஜாய்...
    ஹிஹி...

    பதிலளிநீக்கு
  18. பட்டாப்பட்டி அரசியல் வாதியோ?

    பதிலளிநீக்கு
  19. திருநீர்மலை சூப்பர்.
    எங்க ரோடுல ரெண்டு பாங்க், ரெண்டு ஆஸ்பத்திரிகள் ,இன்னும் ஒரு துணிமணிபஜார் வரப் போகிறது.
    அஞ்சப்பர் கூட வரலாம் என்று ஒரு ஹேஷ்யம். ஏற்கனவே சாலையைக் கடக்க முடியவில்லை. :(
    நிறுத்துவதோடு ,அதைப் பற்றிக் கொஞ்சமும் குற்ற உணர்வே கிடையாது.

    பதிலளிநீக்கு
  20. குரோம்பேட்டைக் குறும்பன்10 மார்ச், 2012 அன்று 11:57 AM

    வீட்டில் உள்ள காலி அட்டை டப்பா (வாஷிங் பவுடர் / பேபி ஃபுட் / நாய் ஆகாரம் etc etc!) ஒன்றை எடுத்து, அதை உல்டா (inside - out) செய்து கொள்ளவும். வெளியே தெரியும் அட்டைப் பகுதியில், "FOR SALE" என்று மார்க்கர் பேனாவால் எழுதவும். பிறகு இதை பார்க் செய்யப்பட்டிருக்கும் அனாமத்து கார் மீது செல்லோ டேப் கொண்டு ஒட்டவும்.
    மறுநாள் அந்தக் கார் அங்கே நிச்சயம் இருக்காது. முயன்று பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  21. நமக்கு வர ஆட்டோக்களை எல்லாம் குரோம்பேட்டைக்குத் திருப்பிடலாம். குறும்பனார் வீட்டு வாசல்லே நிறுத்துவாங்க. அவர் விற்பனைக்கு னு ஒட்டுவார். ஜாலிலோ ஜிம்கானா! :)))))எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!

    பதிலளிநீக்கு
  22. இதோ இக்கணமே ஐடியாத் தங்கம் என்ற பட்டத்தைக் குரோம்பேட்டைக் குறும்பனாருக்கு
    தங்கத்தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்கிறேன்.
    நீங்க சொல்கிறபடி செய்ய எங்க சிங்கம் ரெடி:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!