எட்டெட்டு முந்தைய பகுதி (21) சுட்டி இதுதான்!
மாயாவின் ஆவி: "அம்மா பிங்கி இறந்தப்போ என்ன நடந்துச்சு? அப்போ நீ ஏதோ சொல்ல ஆரம்பித்து தொடரும் என்று சொல்லிட்டே. அதை பதிவாசிரியர் அப்படியே போட்டுவிட்டார். வாசகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு பதிவாசிரியரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள். பதிவாசிரியர் பாவம் வாயில்லா பூச்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்! ஏதேனும் சொல்லி அவரைக் காப்பாற்று அம்மா!"
மாயாவின் அம்மா ஆவி: "வாயில்லா பூச்சியா! அப்போ எங்கள் ப்ளாக் ல இந்த மாதம், ஞாயிறு படம் எதிலாவது, அவருடைய படம் வருகிறதா என்று பார்ப்போம். பிங்கி அந்த கோக்க கோலாவைப் பருகத் தொடங்கிய நேரத்தில், உன்னுடைய ஓ ஏ (வாசகர்கள் இவர் பெயரை ஏன் ஏ ஓ என்று குறிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை!) பாத் ரூமிலிருந்து வெளியே வந்தார். அவர், பிங்கி கையில் இருக்கின்ற கோக்க கோலாவைப் பார்த்ததும், "என்ன பிங்கி! நான் குடிக்க வேண்டிய கோக்க கோலாவை, நீ குடிக்கின்றாய்! ஏன்?" என்றார்.
அதற்கு, பிங்கி, ** " ................ .......... ........... .................. "
(வாசகர்களில் எவ்வளவோ வசனகர்த்தாக்கள் இருப்பார்கள். எல்லோருக்கும் ஒரு சான்ஸ். ** இவைதான், பிங்கி, இந்தப் பிறவியில் பேசிய கடைசி வார்த்தைகள் அல்லது கடைசி பாரா அல்லது கடைசி கட்டுரை. இதை சொல்லி முடித்ததும், அவள், வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விழுந்து உயிரை விடுகின்றாள். நறுக்கென்று நாலு வார்த்தைகள் - அல்லது நாற்பது வார்த்தைகள் அல்லது நானூறு வார்த்தைகளுக்குள் பிங்கி பேசிய வசனம் எழுதுங்கள். பின்னூட்டமாகப் பதியுங்கள்; அல்லது எங்கள் ப்ளாக் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப் படும் வசனத்திற்குப் பரிசு உண்டு.)
(?தொடரும் ?? ) - மா அ ஆவி!
மாயாம்மா - ஆ ... ஆளை விடுங்க! நான் சென்ற பகுதியில் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்! பதிவாசிரியர்..
****************************** *******************
கே வி - எ சா மேஜையிலிருந்து, அவர் கேட்ட பிளாஸ்டிக் பெட்டியை எடுத்துத் தருகின்றார்.
எ சா, அந்தப் பெட்டியைத் திறந்து, அதிலிருந்து ஒரு சோதனைக் குழாய், ஒரு இரசாயன பாட்டில் எல்லாவற்றையும் எடுத்து, டீப்பாய் மீது வைக்கின்றார். பிறகு, கே வி இடம், "இங்கே பாருங்க, இந்த மாத்திரை நீங்க நினைக்கின்ற மாதிரி கொடிய விஷமாக இருந்தால், மாத்திரையிலிருந்து கொஞ்சம் சுரண்டி, இந்த சோதனைக் குழாயில் போட்டு, இதோ இந்த இரசாயன திரவத்தை அதில் ஊற்றினால், நிறமற்ற இந்த திரவம், நீல நிறமாக மாறும். இதோ கத்தியால் கொஞ்சம் சுரண்டிப் போட்டு விட்டேன். திரவத்தை ஊற்றிவிட்டேன். பாருங்க? அஞ்சு செக்கண்ட், பத்து செக்கண்ட்.... இருபது செக்கண்ட் ...... ஒரு நிமிடம் ஆகி விட்டது. நீல நிறம் ஏதாவது தெரிகிறதா?"
கே வி சோதனைக் குழாய் திரவத்தை வெளிச்சத்தில் வைத்து ஆராய்கிறார். "ஊம்ஹூம் - இல்லை சார். நீல நிறமாற்றம் எதுவும் இல்லை. திரவம், நிறமில்லாமல்தான் இருக்கின்றது."
எ சா: "இப்போ இந்த மாத்திரையில் விஷம் இல்லை என்று நம்புகிறீர்களா?"
கே வி: "கொஞ்சம் நம்பிக்கை வருகிறது. ஆனாலும் ......"
எ சா: "என்ன ஆனாலும்? முழுவதும் நம்பிக்கை வரவில்லை. இல்லையா? சரி இப்போ பாருங்க...." என்று சொல்லியபடி, கத்தியால் தான் சுரண்டியிருந்த மாத்திரையை, தன் வாயில் போட்டுக் கொள்கிறார், எ சா!
கே வி: "ஐயோ - சார்! என்ன காரியம் செஞ்சீங்க! வேண்டாம் - துப்பிடுங்க, துப்பிடுங்க!"
எ சா மாத்திரையை விழுங்கிவிட்டு, லேசாக புன்னகைக்க ஆரம்பித்து, சப்தமாக சிரித்து, பிறகு சற்று நேரம் மெளனமாக கே வி யை பார்க்கிறார். திடீரென்று, வயிற்றைப் பிடித்துக் கொண்டு, அப்படியே சோஃபாவில் சாய்கிறார். கண்கள் மூடிக் கொள்கின்றன.
(தொடரும்)
திடீரென்று, வயிற்றைப் பிடித்துக் கொண்டு, அப்படியே சோஃபாவில் சாய்கிறார். கண்கள் மூடிக் கொள்கின்றன. ??????!!!!!
பதிலளிநீக்குபிங்கி வசனம் மாதிரி, எசா கடைசியில் சோபாவில் சாய்ந்ததும் கேவி வசனம் என்று கேட்டு ஒரு பரிசு வழங்கல் வைத்திருக்கலாம். பிங்கி வசனம் ஈஸி. இது கஷ்டம். அதுக்காக சொன்னேன்.
பதிலளிநீக்குடாய் .... ஓ ஏ!
பதிலளிநீக்குவாடா நாயே!
குடிச்சேன்டா கோலா
முடிச்சேன்டா கூலா!
பிடிச்சேன்டா வயிறை
விட்டேன்டா உயிரை!
(ஏய் டண்டணக்கா
டணக்குணக்கா...!)
இதை ரகசியமாப் போட்டிருக்கீங்க போல! :( அப்டேட்டே ஆகலை. கு.குவோட கமெண்ட் வித்தியாசமா இருக்கவே க்ளிக்கினால் இந்தப் பதிவு சொல்லாமல் கொள்ளாமல், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கூகிள் சதியா? மாயாவோட ஆவி சதியானு தெரியலை. :P
பதிலளிநீக்குபடிச்சுட்டு வரேன்.
பதிலளிநீக்குபிங்கி வசனம்: இத்தனை நாட்களாகியும் நீங்க வேறே நான் வேறேயா? உங்களுக்கு வைச்சதை நான் குடிச்சால் என்ன, நீங்க குடிச்சால் என்ன! நீங்க வேறே வரவழைச்சுக்குடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க
பதிலளிநீக்குபிங்கி மயங்கி விழுகிறாள்.
பிங்கி வசனம்: எனக்கு இல்லாத உரிமையா இனிமேலே! உங்களோடது எல்லாமும் என்னோடது தானே! கேவலம் இந்த கோலாவை நான் கு...........டிக்க்க்க்க்க்க்க்க்க................க்கூடாஆஆஆஆஆஆஆஆதா!
பேசுகையிலேயே பிங்கி மயங்கி விழுகிறாள்.
கு.கு.வோட வசன இம்சையும் நல்லாத் தான் இருக்கு. :))))
பதிலளிநீக்குசாமியார் நடிக்கிறாரா? இல்லாட்டி அது தூக்க மாத்திரையா?
பதிலளிநீக்குஇந்த வார வா.பூ இந்தப் பதிவோட ஆசிரியர். போன வாரம் வந்த வா.பூ. போன பதிவோட பதிவாசிரியரா? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு
பதிலளிநீக்குகீதாம்மா, பின் தொடர்ந்து கொடுத்த ஊட்டம் ஆறு ஆச்சு; இன்னும் ரெண்டே ரெண்டு தான் பாக்கி.:))
பதிலளிநீக்குஜீவி சார், கொடுத்தாப் போச்சு, ஆனால் பாருங்க என்னதான் கமென்டினாலும் எங்கள் ப்ளாக் காரங்க அசைஞ்சு கொடுக்கமாட்டாங்க, என்ன பெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு?? :))))))
பதிலளிநீக்குஜீவி சார், எட்டெட்டுனு வந்திருக்கிறதாலே எட்டெட்டு 64 கமென்ட் போடணும்னு சொல்லிடப் போறாங்க. :P
பதிலளிநீக்குகணக்கு சரியாப் போச்சு இல்லையா? :)))))
இந்த வாரம் எட்டெட்டு இல்லையா...
பதிலளிநீக்குஒவ்வொரு எட்டெட்டு பதிவிலும், வினோத் குமார் வந்து கமெண்ட்
பதிலளிநீக்குபோடும் வரையிலும், அடுத்த பதிவு போடமாட்டாராம், பதிவாசிரியர்!
இப்போ வினோத் வந்தாச்சு, அடுத்த பதிவு எழுத ஆரம்பித்துவிட்டார், பதிவாசிரியர்!