வியாழன், 26 ஜூலை, 2012

உள் பெட்டியிலிருந்து 07 2012

            
எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் ...
            
அவள் : "இன்று எனக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை"
            
அவன் : "தெரியும்"
            
அவள் : "ஐ லவ் யூ.."
           
அவன் : ஐயும் லவ் யூடா செல்லம் லவ் யூ... லவ் யூ..."
 
             
சர்ஜரி முடிந்து, அவள் கண் விழித்துப் பார்த்த போது அவள் தந்தை மட்டும்தான் எதிரில் இருந்தார். 
          
அவள் : "எங்கேப்பா அவர்..?"
          
தந்தை : "உனக்கு இதயம் கொடுத்தது யார் என்று தெரியுமா...?"
            
அவள் : (அதிர்ச்சியுடன்) "என்ன?" (அழத் தொடங்குகிறாள்)
          
தந்தை : "அட, ஏம்மா... உன் ஆளு வெளியில் போய் இருக்கான். நான் அந்தக் கேள்வி சும்மாதான் கேட்டேன்.. இதோ வர்றான் பாரு..."
           
இது சினிமாவா என்ன... கண் கலங்கும் திருப்பம் வர...!!
                  
=======================
கடை உள்ளே நீதான் காப்பியாத்தணும்...!
   
ஒவ்வொரு புன்னகைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லாத உங்களுக்கு, கண்ணீருக்குக் கண்டனம் சொல்ல மட்டும் என்ன உரிமை?
              
=========================================       
ப்ளீஸ்....  ப்ளீஸ்....
            
என்னைப் பற்றிக் கேட்டதை வைத்து அல்ல, என்னைப் பற்றி அறிந்ததை வைத்து என்னை எடை போடுங்கள்.
     
உங்களுக்குத் தெரியவில்லை என்றால் என்னைக் கேளுங்கள்.
          
உங்களால் ஒத்துக் கொள்ள முடியா விட்டால் என்னுடன் வாதம் செய்யுங்கள்.
        
உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் என்னிடமே சொல்லுங்கள்.
           
ஆனால் மெளனமாக என்னை எடை போட மட்டும் ஆரம்பித்து விடாதீர்கள்.
             
===================================
                
காதலைச் சொல்ல புதிய வழி
           
அவன் : "உங்களை ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா..."
அவள் : "எதற்கு?"
அவன் : "சும்மா என் குழந்தைகளுக்கு அவர்களின் அம்மா இளவயதில் எப்படி இருந்தார்கள் என்று காட்டத்தான்.."
             
==================================
சார்...ஒரு நிமிஷம்...
                 
வாழ்க்கையோட அர்த்தம் என்ன கடவுளேன்னு கேட்டானாம் ஒருத்தன். 
            
உண்மைல வாழ்க்கைக்குன்னு அர்த்தம் ஏதுமில்லைடா மகனே... அர்த்தத்தை உருவாக்க உனக்குக் கொடுக்கும் ஒரு வாய்ப்புதாண்டா மகனே வாழ்க்கைன்னாராம் கடவுள்.
==================================================
              
அட...!
                
சிலர் உங்களைக் குருட்டுத் தனமாய் நம்பும்போது தயவு செய்து அதை நிரூபித்து விடாதீர்கள்.
            
=================================================
             
நம்ப முடியாத மெசேஜ்...

நாம் குருட்டுத் தனமாய் நம்பும் சிலர் மாறத் தொடங்கும்போது நம்மை வெறுக்கிறோமே தவிர அவர்களை வெறுக்க முடிவதில்லை.
              
=========================================
            
ரொம்பக் கஷ்டமுங்க...
   
நோயுற்ற கணவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள் மனைவி.
            
மருத்துவர் மனைவியிடம் சொன்னார். "ரொம்பப் பேசாதீங்க.. ரொம்பக் கேள்வியா கேட்டுகிட்டு இருக்காதீங்க... அவர் அப்பா அம்மா பற்றி தப்பாப் பேசாதீங்க... உங்க ஷாப்பிங் எல்லாம் குறைச்சுக்கோங்க... அவருக்கு அட்வைஸ் பண்ணிகிட்டே இருக்காதீங்க... திட்டாதீங்க.. அவர் சொல்றதைக் கேளுங்க.. டிவி சீரியல் எல்லாம் பார்க்காதீங்க... நகை வாங்கணும்னு எல்லாம் சொல்லாதீங்க... இப்படி ஒரு வருஷம் இருங்க.. உங்க கணவர் பிழைச்சிடுவார்..."

திரும்பும் வழியில் கணவன் மனைவியிடம் கேட்டான். "டாக்டர் என்ன சொன்னார்?"

மனைவி சொன்னாள், "நீங்க பிழைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டார்.."  
===============================
                   

20 கருத்துகள்:

 1. முத்தான முத்துக்கள் ஒவ்வொன்றும் அருமை படித்ததும் எனக்கும் ஒன்று நியாபகம் வருகிறது

  உன் திருமணம் காதல் திருமணம் என்றால்
  நீ காதலித்தவளை கரம் பிடிப்பை
  உன் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால்
  அடுத்தவன் காதலித்தவளை கரம் பிடிப்பை

  பதிலளிநீக்கு
 2. அனைத்து முத்துக்களும் மிக மிக அருமை
  குறிப்பாக டாக்டரைப் பார்த்த கணவர்
  சுவரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. பல்சுவை பதிவு....

  ///ஒவ்வொரு புன்னகைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லாத உங்களுக்கு, கண்ணீருக்குக் கண்டனம் சொல்ல மட்டும் என்ன உரிமை ?///
  உண்மையான தத்துவம்...

  கண்ணொளியில் கேட்ட பாடலில் பிடித்த வரிகள் : "இதுக்குப் போயி அலட்டிக்கலாமா ?"

  நன்றி...

  பதிலளிநீக்கு
 4. காமெடி தான் என்றாலும் எந்த மனைவியும் கணவனிடம் அப்படி சொல்ல மாட்டார்.

  அப்புறம் இன்னொரு விஷயம்: உங்க ரெகுலர் கஷ்டமர்சில் எவ்ளோ பெண்கள்? எப்படி நீங்கள் இப்படி போடலாம்? வருவாங்க பாருங்க கீதா மேடம். ஹுசைனம்மா எல்லாரும். அப்புறம் இருக்கு உங்களுக்கு :)

  பதிலளிநீக்கு
 5. ரொம்பக் கஷ்டமுங்க...

  நோயுற்ற கணவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள் மனைவி.

  மருத்துவர் மனைவியிடம் சொன்னார். "ரொம்பப் பேசாதீங்க.. ரொம்பக் கேள்வியா கேட்டுகிட்டு இருக்காதீங்க... அவர் அப்பா அம்மா பற்றி தப்பாப் பேசாதீங்க... உங்க ஷாப்பிங் எல்லாம் குறைச்சுக்கோங்க... அவருக்கு அட்வைஸ் பண்ணிகிட்டே இருக்காதீங்க... திட்டாதீங்க.. அவர் சொல்றதைக் கேளுங்க.. டிவி சீரியல் எல்லாம் பார்க்காதீங்க... நகை வாங்கணும்னு எல்லாம் சொல்லாதீங்க... இப்படி ஒரு வருஷம் இருங்க.. உங்க கணவர் பிழைச்சிடுவார்..."

  திரும்பும் வழியில் கணவன் மனைவியிடம் கேட்டான். "டாக்டர் என்ன சொன்னார்?"

  மனைவி சொன்னாள், "நீங்க பிழைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டார்.."
  ===============================//

  ஹிஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 6. தத்துவங்கள் அருமை.

  4-வது ரசிக்க வைத்தது.

  சரியாக கேட்டிருக்கிறார் மோகன் குமார்:)! எத்தனை காலம்தான் இதை நகைச்சுவை என சொல்வீர்கள்?

  பதிலளிநீக்கு
 7. அதானே, ரா.ல. ஜிங் சக் ஜிங் சக் ஜிங் சக், என்னோட ஜால்ரா சத்தம் தான்! :)))))


  நான் நகைச்சுவையாகவே எடுத்துண்டேன். ஆங்கிலத்தில் இதையே படிச்சிருக்கேன். :)))))

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  பதிலளிநீக்கு
 9. உண்மைல வாழ்க்கைக்குன்னு அர்த்தம் ஏதுமில்லைடா மகனே... அர்த்தத்தை உருவாக்க உனக்குக் கொடுக்கும் ஒரு வாய்ப்புதாண்டா மகனே வாழ்க்கைன்னாராம் கடவுள்.

  அர்த்தமுள்ள பகிர்வுகள்...

  பதிலளிநீக்கு
 10. அனைத்தும் அருமை!

  பாடல் ரசித்த பாடல்... :)

  பதிலளிநீக்கு
 11. உங்களுக்கு என்னைப்(engalblog) பிடிக்கவில்லை/பிடித்திருந்தால் என்றால் என்னிடமே / மற்றவர்களிடம் சொல்லுங்கள்.

  # விளம்பரம்..!!

  பதிலளிநீக்கு
 12. // உன் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால்
  அடுத்தவன் காதலித்தவளை கரம் ...//

  நல்லவேளை.. 'அடுத்தவனை'னு சொல்லல.. ..

  பதிலளிநீக்கு
 13. //ஒவ்வொரு புன்னகைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லாத உங்களுக்கு, கண்ணீருக்குக் கண்டனம் சொல்ல மட்டும் என்ன உரிமை?//

  அருமையான வரி! ஆழ்ந்த அர்த்தமுள்ளதும் கூட!!

  உள்பெட்டியிலிருந்து வெளியே வந்து விழுந்தவை அனைத்தும் ரசிக்க வைத்தன!!

  பதிலளிநீக்கு
 14. வித்தியாசமான சிந்தனை அந்த படம் எடுக்கும் உத்தி அவளின் குழந்தைக்கு காட்ட !ஹீ

  பதிலளிநீக்கு
 15. //இது சினிமாவா என்ன... கண் கலங்கும் திருப்பம் வர//

  Awesome! The 'Scary Movie' series is full of such jokes! (though often dancing between the line of obscene and funny!)

  பதிலளிநீக்கு
 16. காதலைச் சொல்ல நல்ல வழியொன்று,ப்ளீஸ் ப்ளீஸ் ரசிச்சேன்.எல்லாத்தையும்விட எஸ்.பி.பி மயக்குகிறார்.
  அருமை நன்றி !

  பதிலளிநீக்கு
 17. எஸ்.பி.பிக்கு இணை சொல்ல யாருமில்லை. யப்பா.. இப்பவும் சொக்க வைக்கிறார். உள்பெட்டியின் மற்ற விஷயங்களும் பிரமாதமுங்கோ. காதலியின் இதயமாற்று அறுவை சிகிச்சையை ரொம்பவே ரசிச்சேன்.

  பதிலளிநீக்கு
 18. தத்துவங்கள்!!

  பாலசுப்ரமணியம்: நல்ல மனிதர். இப்போ அவரின் மகனால் படும்பாட்டை நினைத்துப் பரிதாபம்தான் வருகிறது. குர் ஆனில் ஒரு வசனம் வரும், “உங்கள் செல்வமும், பிள்ளைகளும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோதனைகள்” என்று. இதுதான் நினைவு வருகிறது; பயமும்.

  கணவன் -பிழைப்பது கஷ்டம் ஜோக்(கஷ்டம்டா!!): இதெல்லாம் அரதப் பழசு.

  @மோகன்: // ரெகுலர் கஷ்டமர்சில் எவ்ளோ பெண்கள்?//
  அதென்ன “கஷ்டமர்ஸ்”?? டைப்பிங் மிஸ்டேக்னு சொன்னா நம்பமாட்டேன்!! உங்க கஷ்டம் புரியுது!! :-))))))

  பதிலளிநீக்கு
 19. நன்றி சீனு

  நன்றி ரமணி சார்

  நன்றி அமைதிச்சாரல்

  நன்றி திண்டுக்கல் தனபாலன்

  நன்றி மோகன்குமார்

  நன்றி கீதாசாம்பசிவம்

  நன்றி ராமலக்ஷ்மி

  நன்றி வலையகம் வலைஞன்

  நன்றி இராஜராஜேஸ்வரி

  நன்றி வெங்கட்

  நன்றி மாதவன்

  நன்றி மனோ சாமிநாதன்

  நன்றி தனிமரம்

  நன்றி bandhu

  நன்றி ஹேமா

  நன்றி கணேஷ்

  நன்றி ஹுஸைனம்மா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!