Thursday, July 5, 2012

நாக்கு நாலு முழம்..... சால்னா.

         
சப்பாத்திக்கு ஒரே மாதிரி 'சைட் டிஷ்' செய்து கொண்டிருந்துவிட்டு ஒருநாள்,  ஒரு நண்பர் சொன்ன ரெசிப்பியின் படி இது மாதிரிச் செய்து சாப்பிட்டிருக்கிறோம். மைதா மாவில் வீட்டிலேயே லேசாக கோதுமை மாவு கலந்தோ கலக்காமலேயோ பரோட்டா செய்தும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டிருக்கிறோம். அதை இப்படிச் செய்தோம்.

          
இஞ்சியையும் பூண்டையும் போதுமான தேவையான அளவு எடுத்து மிக்சியில் அரைத்துக் கொளளவும். அல்லது ரெடிமேட் இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுத்து வாணலியில் இட்டு வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தை அதில் இட்டு,  பொன்னிறமாகும் வரை வதக்கி, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். வெந்தயப் பொடி (சற்று தூக்கலாய்), தனியாப் பொடி, காரப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். (தேவைப்பட்டால் பீன்ஸ், கேரட், உருளை என்று சேர்த்துக் கொள்ளலாம்). தேங்காய்த் துருவலையும் முந்திரிப் பருப்பையும் அரைத்து விட்டு  ஒரு கொதி வந்ததும், இறக்கிவிடலாம். இதை, சப்பாத்திக்கோ, பரோட்டாவுக்கோ தொட்டுக் கொள்ளலாம்.


       
அறியாத முகங்கள் என்று சிவசங்கரி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். திரு கருப்பையா மூப்பனாருடன் பழகிய அனுபவங்கள் பற்றிச் சொல்லி, அவர்கள் வீட்டுக்கே சென்று அவர் தினசரிப் பழக்க வழக்கங்களைப் பற்றி எழுதியுள்ள புத்தகம். 
சால்னா, 
மூப்பனார் அவர்களுக்குப் பிடித்த ஐட்டமாம். அதை எப்படிச் செய்வது என்று அவர்கள் குடும்ப உறுப்பினர் லதாவிடம் கேட்டு சிவசங்கரி எழுதியுள்ள குறிப்பு கீழே: 
     
"பயத்தம் பருப்பை வேக வைக்கணும். மிளகாய், மல்லியோடு தேங்காய் சேர்த்து சாந்தாக அரைத்துக் கொள்ளணும். பட்டை, ஏலம், கிராம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கி, வேக வைத்த பருப்பு, தேங்காய்ச் சாந்து, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் - சால்னா ரெடி!
      
கருப்பையா மூப்பனார் இந்தச் 'சால்னா'வைத் தொட்டுக் கொண்டு ஆப்பம் விரும்பிச் சாப்பிடுவாராம். 
               
ஆனால் சால்னா எனப்படும் இந்த டிஷ் பொதுவாக ரோட்டோரக் கடைகளில் அசைவம் கலந்து கிடைக்கும்!
          
அறியாத முகங்கள், 
சிவசங்கரி, 
சூர்யா பப்ளிகேஷன்ஸ், 

புத்தகம் விலை:: 
30 ரூபாய்.  
                   

15 comments:

Ramani said...

நாலு முழ நாக்கு கொஞ்சம்
ஆர்வத்தைத் தூண்டித்தான் போகிறது
பயனுள்ள பதிவு பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

என்னடாப்பா, நாலூ நாளா ஆளையே காணோமேனு நினைச்சேன்; பார்த்தால் சப்பாத்தியும், சால்னாவும்சாப்பிட்டுட்டு இருக்கீங்க. பாகற்காயில் ஒரு சைட் டிஷ் செய்து பார்த்துட்டு எழுதினேன். ஒரு மாசத்துக்கும் மேலே ஆச்சு; போணியே ஆகலை! போணி பண்ணுங்க போய்! :)))))

Geetha Sambasivam said...

இந்தச் சால்னா எங்கிருந்து வந்ததுன்னா, கும்பகோணத்திலே உ.கி.வெங்காயம், பூண்டு, பாசிப்பருப்பு, கடலைமாவு சேர்த்துக் கடப்பானு ஒண்ணு பண்ணுவாங்க(எனக்குப் பிடிக்காது என்பது வேறே விஷயம்) இந்தக் கடப்பாவோடு இட்லி என்பது அங்கே ரொம்பப் பிரபலம். அந்தக் கடப்பா தான் கொஞ்சம் மாற்றங்களோடு சால்னாவாகி இருக்கு என்பது என்னுடைய யூகம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களிலும் கட்டுரையிலும் நல்ல ருசி உள்ளது. ;)

ஹுஸைனம்மா said...

//தேவைப்பட்டால் பீன்ஸ், கேரட், உருளை என்று சேர்த்துக் கொள்ளலாம்//

மட்டன், சிக்கன், முட்டை சேர்த்தால்தான் சால்னா. ஒன்றும் சேர்க்கலைன்னா, அது ‘எம்ட்டி’ சால்னா!! ஆனால் காய்கறி சேர்த்தால் அது சால்னா இல்லை, வெஜ்குருமா (or) குழம்பு!!:-)))

சரி, பதிவுக்குக் காரணம் சால்னாவா, சிவசங்கரியா?

மோகன் குமார் said...

Pasi vanthuduchchu. Veetukku kilamburaen :-)

ராமலக்ஷ்மி said...

2 செய்முறைகள்! எட்டு முழமாகி விட்டது நாக்கு:). நன்றி. செய்து பார்க்கிறோம்.

middleclassmadhavi said...

//படங்களிலும் கட்டுரையிலும் நல்ல ருசி உள்ளது. ;)// :-))))
athE athE!

வெங்கட் நாகராஜ் said...

செய்து பார்த்திட வேண்டியது தான். நமக்கும் கொஞ்சம் நாக்கு நீளம் தான்.

சீனு said...

படித்ததுமே ருசித்துப் பார்க்க தோன்றுகிறது


படித்துப் பாருங்கள்

சென்னையின் சாலை வலிகள்

seenuguru.blogspot.com/2012/07/blog-post.html

அமைதிச்சாரல் said...

ருசின்னு வர்றப்ப நாலென்ன நாப்பது முழமாவும் நீளும் நாக்கு :-)))

சால்னாவுல பருப்பெல்லாம் சேர்க்க மாட்டாங்களே.. அப்படிச் சேர்த்தா அது குழம்பில்லையோ ?????

Geetha Sambasivam said...

அமைதி, வெஜ் சால்னா எப்படினு பகிர்ந்து கொள்ளுங்கள். :))))) எனக்குச் சொன்னது கடப்பாதான் சால்னா என்று.

Geetha Sambasivam said...

சால்னா ஓவர் டோஸோ? ஶ்ரீராம் ஆளையே காணலை? :)))))

எங்கள் ப்ளாக் said...

ஸ்ரீராமின் கக கணி கனி கப கடு கத் கது கடு கச் கசு !

Geetha Sambasivam said...

சால்னாவைக் கணினிக்கும் கொடுத்துட்டாரோ? ஒத்துக்கலை போலிருக்கு. :))))))

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!