செவ்வாய், 24 ஜூலை, 2012

ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து...?


ஆஸ்பத்திரியில் ஒரே வார்டில் தினம் ஒரு மரணம் என்பதை ஆராய்ந்த நிபுணர் குழு அதற்கு வார்டு சுத்தம் செய்யும் முனியம்மா தான் காரணம் என்பதை ஒரு இரண்டு மூன்று நாளில் கண்டு பிடித்த கதையை நாம் எல்லோரும் கேட்டும் படித்தும் இருக்கிறோம்

இதோ இன்னொரு முனியம்மா கதை. 

எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பு.  மாடிப்படி, சுற்றுச் சுவர் இங்கெல்லாம் இருக்கும் விளக்குகளுக்கும், செக்யூரிட்டி அறைக்கும் சூரிய ஒளியில் இயங்கும் சாதனங்களைப் போட்டு விட்டால் நன்றாக இருக்கும் என்று யோசித்து யோசித்து கடைசியில் போட்டும் விட்டார்கள்.  ஒரு வாரத்துக்கு எங்கும் P V  பற்றி தான் பேச்சு.  இதை இன்னும் கொஞ்சம் பெரியதாகச் செய்தால் நம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப் படும் பொழுது இன்னும் உபயோகமாக இருக்குமே என்று எண்ணி வரும் ஞாயிறன்று மதியம் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரு கூட்டம் போடலாம் என்று எல்லோருக்கும் மாதவன் சொல்லியதும் அன்றி நேரம் கிடைத்த பொழுதெல்லாம் இன்னும் என்னென்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே புகார்கள் வரத் தொடங்கின.


'மாதவன் சார், நேற்று நான் ஷிப்ட் முடிந்து வரும் பொழுது மாடிப்படியில் விளக்குகளே இல்லை ரொம்ப கஷ்டப் பட்டுப் போனேன்' என்ற கணேஷிடம் ' இல்லையே, நான் நேற்று ஒரு ரிசப்ஷனுக்குப் போய் விட்டு கொஞ்சம் லேட் ஆகத்தான் வந்தேன். அப்போ எல்லாம் எரிந்து கொண்டிருந்ததே ! செக்யூரிட்டி பாலன் வந்ததும் எதற்காகவாவது அணைத்து வைத்திருந்தாரா என்று கேட்கிறேன்'  என்றார்.  அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் புகார்கள் பெருகின.  மாதவனே ஒன்பது மணிக்கு விளக்குகள் எரியவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார்.


'நான் அப்பவே சொன்னேன்  இந்த கம்பெனியில் வாங்கினால் 'நேர்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே' என்கிற மாதிரி அவர்கள் பில் பாஸ் செய்யும் வரை வேலை செய்யும். அப்புறம் நாம் அவர்கள் பின்னே ஓடி ஓடி கால் முழங்கால் வரை தேய்வதுதான்  மிச்சம்  'நீங்கள் அப்பவே இன்னும் இரண்டு கம்பெனியில் விசாரித்திருக்கலாம்' என்ற பாண்டுரங்கனுக்கு பதில் சொல்லாமல் நகர்ந்த மாதவனை சாரதாவின் குரல் தயங்கச் செய்தது. 

" நீ லீவு போட்டு விட்டு கல்யாணத்துக்கு தான் போவியோ வேறெங்கேயோ போவியோ எனக்குத் தெரியாது ஆனால் இந்த முறை முன் பணம் எதுவும் கிடையாது  போன தடவை கூட நான் வாங்கிக் கொள்ளச் சொன்னதாக ஐயாவிடம் முன்பணம் வாங்கிப் போயிட்டே...."சரி, இப்பொழுது உள்ளே போனால் நாமும் ரொம்ப இன்வால்வ் ஆகிவிடலாம் என்று எண்ணி,  மாடியில் ஒரு முறை போய் எல்லாம் எப்படி இருக்கு என்று பார்த்து விட்டு வரலாம் என்று படியில் காலை வைத்தவுடன் பாண்டுவும் வந்து சேர்ந்து கொண்டார்.

Switchboard : Back side of electronic equipment with cables

"சார் நான் என்ன சொல்றேன்னா இப்போ எல்லாம் கம்பெனிகள் ஆப்டர் சேல்ஸ் சர்வீஸில் தான் லாபமே பார்க்கறா. இருந்தாலும் நம்பளும் ஒரு வாரமா வாங்க வந்து பாருங்க என்று கூப்பிட்டால், பாட்டரியை செக் பண்ணுங்க, எல்லா விளக்குகளையும் அணைத்து வையுங்க என்று நமக்கு உபதேசம் செய்கிறார்களே ஒழிய வந்து பார்ப்பதாக இல்லை."

' அட இங்கே பாருங்க சார். ஒயர் ஒண்ணு விட்டுப் போயிருக்கிற மாதிரி இருக்கு' என்று அதை திரும்பி எடுத்து ஒரு காலியாக இருந்த சிவப்பு 'பிளக்'கில் செருகினார்.


அன்று மாலை வீட்டுக்கு வந்தவர் வெளியில் வந்து நின்று எல்லா விளக்குகளும் எரிகின்றனவா என்று பார்த்தவர் பாண்டுரங்கனைப் பார்த்ததும் "கங்க்ராட்ஸ் பாண்டு, நீங்க பண்ணின ரிப்பேர் வேலை செய்யுது பாருங்க ! "  என்றதும் பாண்டு சற்று வெட்கப் பட்டுக்கொண்டு [மாதவன் மாதிரியா என்று கேட்காதீர்கள் - மாதவன் எதிரில் மாதவன் மாதிரி வெட்கப் பட்டால் அப்புறம் மாதவன் என்ன நினைத்துக் கொள்வார் ? ] உள்ளே போய் விட்டார்.

ஞாயிற்றுக் கிழமை. குடியிருப்போர் சங்க மீட்டிங்.  எல்லோரும் ஒரு மனதாக இன்னும் கொஞ்ச நாள் கருவிகள் எப்படி வேலை செய்கின்றன என்று பார்த்து விட்டுப் பின் வேறு கருவிகள் வாங்குவது பற்றி யோசிக்கலாம் என்றதும் பாண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட மாதிரி தோன்றியது மாதவனுக்கு.  ஒருக்கால் அவரே கழட்டிவிட்டு புகார்கள் வரத்தொடங்கியதும் சரி பண்ணிய மாதிரி காட்டி விட்டாரோ என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தார்.

Dark Building : night life (insomnia)

சொல்லி வைத்த மாதிரி திங்களன்று முன்னிரவிலேயே விளக்குகள் அணைந்து விட்டன.


சரி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்து விட்டு காலையில் மாடிக்குப் போனவரை பாண்டுவின் குரல் வரவேற்றது. 'சமயத்தில் கூடு கட்ட குச்சி தேடும் காக்காய்  ஒயர்களை எல்லாம் இழுத்து பழுது பண்ணிவிடும் அந்த மாதிரி ஏதாவது இருக்கா என்று பார்க்கத்தான் வந்தேன் எல்லாம் சரியாக இருக்கிறது என்று தோன்றுகிறது' என்றார்.   

கீழே வந்தவரை பார்த்து சாரதா 'எங்கே போயிட்டீங்க ? மணி அண்ணா வீட்டு கிரஹப் பிரவேசத்துக்குப் போகணும் சீக்கிரம் ரெடி ஆகுங்க' என்றாள்.. மாதவனுக்கு பாண்டு பற்றி ஏதோ யோசனையில் இருந்தோம் என்பது தான் நினைவிருந்ததே தவிர, சாரதாவின் பின் சீட் உத்தரவுகளுக்கு ஈடு கொடுத்து வண்டி ஓட்டியதில் மற்றெல்லாம் மறந்தே போனது.

Car And The Driver : Driver's hands on a steering wheel of a retro car during riding on an empty asphalt road Stock Photo

வீட்டுக்குப் போனதும் இந்த மணியைக் கேட்க வேண்டும் இவர் வீடு கட்டியிருப்பது தமிழ் நாட்டில்தானா இல்லை வேறு மாநிலத்திலா என்று!  'ஹைவே'யை விட்டு வந்து ரொம்ப தூரமும் நேரமும் ஆயிருந்தாலும் மணியின் வீடு தென்படாததால் சரியான வழியில் தான் வந்திருக்கிறோமா இல்லையா என்று ஆத்ம சந்தேகங்கள் எல்லாம் வரத் தொடங்கின  ஒரு வழியாக சாப்பாட்டுக்கு முன் [ரொம்ப முக்கியம் - வழியில் ஒரு டீக்கடை கூட இல்லை !] போய் சேர்ந்தாயிற்று.  எல்லாம் ஒரே நிசப்தமாக இருப்பது போல் தோன்ற மின்வெட்டு காரணமாக இந்தக் கிராமம் இந்த நேரத்தில் இப்படி அமைதியாக இருப்பதைப் பார்த்துதான் நான் இங்கே வீடு கட்ட நினைத்தேன் என்ற மணி 'உங்கள் காலனியில் சூரிய சக்தியில் விளக்குகள் எரிகிறதாமே, சாரதா சொன்னாள்' என்று கேட்கவும், 'ஆமாம் ஆனால் கொஞ்ச நாட்களாய் அது சரியாக வேலை செய்ய வில்லை.  பிறகு சரியான பின் வந்து பாருங்களேன்' என்றார்.  

'அண்ணா!  போன வாரம் முழுக்க அது வேலை செய்யவில்லை என்று எல்லோரும் இவரைப் பிய்த்து எடுத்து விட்டார்கள். அது தான் இப்படி இழுக்கிறார் ' என்று சாரதா சொல்ல, அன்றைக்குப் பாண்டு ரிப்பேர் செய்த பின் ஓரிரு நாள் மட்டும் வேலை செய்த விளக்குகள் ஏன் மீண்டும் இயங்காமல் போயின என்பது தெரிகிற வரை யாருக்கும் இந்தக் கருவிகளை சிபாரிசு செய்வதில்லை என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார்.

அன்று மாலை வீடு திரும்பும் பொழுது விளக்குகள் எல்லாம் சற்றுப் பிரகாசமாகவே இருந்த மாதிரி தோன்றியது.

Building In Night : City street at night Stock Photo
கதவு அருகில் போகும் பொழுதே யாரோ நின்று கொண்டிருப்பது தெரிந்தது - முனியம்மா தான்!  பேரன் டெங்கு மாதிரி ஜுரத்தில் ஆஸ்பத்திரியில் இருப்பதால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு வரமுடியாது என்று சொன்னதுடன் முடியாது என்று சொல்லாமல் கொஞ்சம் முன்பணம் கொடுக்கும்படியும் மன்றாட சாரதாவுக்கு இல்லை என்று சொல்ல மனது வரவில்லை [வெள்ளிக்கிழமை மாலை - இல்லை என்று சொல்ல மாட்டோம் என்ற தைரியத்தில் கேட்கிறாளோ ? ] கையில் கிடைத்ததைக் கொடுத்தாள்.

சனிக்கிழமை கருவிகள் சப்ளை செய்தவர்கள்.வந்து பார்த்து விட்டு "இங்கே பாருங்க சார், ஒரொரு பேனலில் இருந்தும் பதினாறு வோல்ட் - எட்டு ஆம்பியர் ஷார்ட் சர்க்யூட் கரண்ட் என்று எல்லாமும் சரியாக இருக்கிறது  பாட்டரியும் சார்ஜ் ஆகி இருக்கிறது  விளக்கெல்லாமும் கூட வந்த உடனேயே செக் பண்ணிட்டோம்" என்று ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள் 

அடுத்த புதன் கிழமையிலிருந்து மீண்டும் புகார்கள் மேலும் புகார்கள், மென்மேலும் புகார்கள்....! மாதவன் புகார்களுக்குள் புதைந்தே போனார்.  வியாழனன்று மீண்டும் கம்பெனிக்கு ஃபோன் செய்து உடனே வரச் சொன்னார்.  'கியாரண்டீ இருக்கு என்பதால் நீங்க அடிக்கடி கூப்பிடுகிறீர்களா என்ன ? ' என்று மறு முனையில் கேட்டவரை நோகடிக்கிற மாதிரி என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர் ஃபோனை வைத்து விட்டார்.

Switchboard : Call center operator with headset

பதினைந்து நிமிடங்களில் வாசலில் மணியடித்துக் கூப்பிட்டவர், சிவப்பாக உயரமாக இருந்தார். தன்னை சௌந்தரராஜன் என்று அறிமுகம் செய்து கொண்டு, 'ஆபீசுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன், இங்கே நாங்கள் சப்ளை செய்த கருவிகளில் ஏதோ கோளாறு வந்து வந்து போகிறது என்று சொன்னார்கள் .  சில சமயம் நாம் எப்பொழுதும் பார்க்கும் நேரங்களில் தெரிந்து கொள்வதை விட திடீரென்று செக் செய்தால் நிறையத் தெரிய வரும் ' என்று சொல்லிக் கொண்டே போனவர், ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்ட அதிலிருக்கும் பெயரிலிருந்து தான் அவர் அந்த சூரிய சக்தி கம்பெனியை சேர்ந்தவர் என்கிற உண்மை புலப்பட்டது மாதவனுக்கு.

Switchboard : A man doctor consultant with a laptop on a white background.

மாடிக்கு மாதவனைத் தொடர்ந்து வந்த சௌந்தரராஜன் திடீரென்று விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.  என்ன என்று புரியாவிட்டாலும் சிரிப்பு மாதவனுக்கும் தொற்றிக் கொண்டது. மாடியை கவனமாகப் பார்த்தவர் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார்.

Laughing : portrait of young man laughing in suit and sunglasses against a blue sky background  Laughing : A happy cartoon toddler laughing and pointing.

சிரிப்பின் காரணம் இந்த நேரத்துக்கு உங்களுக்குத் தெரிந்து உங்களையும் சிரிப்பு தொற்றியிருக்க வேண்டுமே ?

15 கருத்துகள்:

 1. hihihihihihi
  சிரிச்சாச்சு, சொல்லுங்க இப்போக் காரணத்தை! :))))))

  பதிலளிநீக்கு
 2. பேனல் மேலே துணி/வத்தல் காய போட்டிருந்தாங்களோ??

  பதிலளிநீக்கு
 3. ஹுசைனம்மா, நான் நினைச்சதும் அதே, அதே, சேம் பிஞ்ச், ஆனால் சொன்னால் அசட்டுத்தனமா இருக்குமோனு யோசிச்சேன். நம்மளை மாதிரி நிறையப் பேர் இருக்காங்கனு தெரிஞ்சு எவ்வளவு சந்தோஷமா இருக்கு! நன்னி ஹை! :)))))))

  பதிலளிநீக்கு
 4. எங்கள் ப்ளாகுக்கு இருக்க கெட்ட பழக்கமே இதான் :)) சஸ்பென்ஸ், கேள்வி எல்லாம் கேட்டு யோசிக்க வச்சு அப்புறம் தான் முடிவு சொல்வாங்க :)

  பதிலளிநீக்கு
 5. என்னப்பா காரணம் சும்மா சொல்லுங்கப்பு!

  பதிலளிநீக்கு
 6. 'Sooriyan inru vidumurai'nnu board ezhuthi vachirunthatho? :-))
  Ethenum ups-inverter companyin vilambara banner solar panel-i maraiththirinthatho?
  Mudiyala... Sollidunga!

  பதிலளிநீக்கு
 7. எங்கள் ப்ளாக்24 ஜூலை, 2012 அன்று PM 9:49

  கீதா சாம்பசிவம், ஹுஸைனம்மா, ஹேமா, மோகன் குமார், வெங்கட், middleclassmadhavi,

  நன்றி நண்பர்களே..... ஹுஸைனம்மா சொன்னதும், கீதா மேடம் நினைத்ததும்தான் சரியான விடை. பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 8. பேனல்ல துணி காயப் போட்டது தப்பில்லை..
  அந்தத் துணியெல்லாம் சீ-த்ரூ வா(ட்ரான்ஸ்பரன்ட் ) இல்லாததுதான் தப்பு..
  ---- நான் அந்த மாதவனில்ல ..
  யோசிப்பேனாக்கும்..

  பதிலளிநீக்கு
 9. /யோசிக்க வச்சு அப்புறம் தான் முடிவு சொல்வாங்க/

  தாமதமாக வந்ததால் யோசிக்கும் வேலை இல்லாமல் முடிவு உடனே தெரிந்து விட்டதே:). ஹுஸைனம்மாவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. //ஆனால் சொன்னால் அசட்டுத்தனமா இருக்குமோனு யோசிச்சேன்.//
  @கீதா மேடம், இது “எங்கள்” ப்ளாக் - ஐ மீன், நம்ம ப்ளாக். இங்கெல்லாம் தப்பான பதிலேயானாலும் சொல்ல யோசிக்கக்கூடாது!!

  //நம்மளை மாதிரி நிறையப் பேர் இருக்காங்கனு தெரிஞ்சு எவ்வளவு சந்தோஷமா இருக்கு!//
  அவ்வ்வ்... என்னையும் ‘அசடு’ன்னு சொல்றீங்களோ?? (எப்படிக் கண்டுபிடிச்சீங்க?) :-)))))))))))))

  பதிலளிநீக்கு
 11. /நம்மளை மாதிரி நிறையப் பேர் இருக்காங்கனு தெரிஞ்சு எவ்வளவு சந்தோஷமா இருக்கு!//
  அவ்வ்வ்... என்னையும் ‘அசடு’ன்னு சொல்றீங்களோ?? (எப்படிக் கண்டுபிடிச்சீங்க?) :-)))))))))))))//

  ஹிஹிஹி, சொல்லணுமா, ரெண்டாவது பின்னூட்டத்திலே சொல்லிடலாமானு யோசிச்சுட்டு இருக்கையிலே உங்க பின்னூட்டம் வந்தது. அப்பாடா, னு இருந்தது. :)))))))

  பதிலளிநீக்கு
 12. எங்கள் ப்ளாக்25 ஜூலை, 2012 அன்று PM 1:57

  நன்றி மாதவன்.... நீங்கள் எப்போதுமே வித்தியாசமாக யோசிப்பவர்!

  நன்றி ராமலக்ஷ்மி

  நம்ம ப்ளாக் என்ற உரிமையில் நெகிழ வைத்த ஹுஸைனம்மாவின் மீள்வருகைக்கும், கீதா மேடத்தின் மீள் வருகைக்கும் எங்கள் நன்றி...நன்றி...நன்றி...

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  பதிலளிநீக்கு
 14. நல்லாவே சிரிக்கிறார்.

  இதற்கு முனிம்மா கதைன்னு பேரு வச்சதற்கு என்ன காரணமோ.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!