பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள்.
இங்கு ஒரு மாறுதல்.
இங்கு எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்.......
1) இவன் மனதை தாமரைப்பூவோடும் அவள் மனதை முல்லை மொட்டோடும்
ஒப்பிடும் தலைவன், தலைவி மணப் பெண்ணாக ஒரு காலம் வரும் என்று
காத்திருக்கும்போது தலைவி, ஊரில் இருக்கும் வேறு ஒரு பெண்ணைத் தேடிக் கொள்ளச்
சொல்கிறாள். ஒருகணம் தவறாகி பல யுகம் தவிக்கும் சோதனைக் களமான அவள் ரகசியச்
சுரங்கமாம் நாடக அரங்கமாம் யாருடைய முகத்தைப் பார்த்தாலும் சந்தேகத்தில்
தவிப்பாளாம்! கண்டுபிடிக்க வேண்டியது ரெண்டு பாடல்கள்!
2) தற்போதைய இந்தியாவை நினைக்கும்போது நல்ல வகை / கெட்ட வகை ஏதோ ஒரு வகையில் 'சட்'டென நினைவுக்கு வரும் முதல் ஐந்து பேர்?
3) அந்தக்
காலம் முதல் நிறைய சினிமா பார்த்திருப்போம். சமீபத்தில் பார்த்த படங்களை
மறந்து விடுங்கள். எப்போதோ பார்த்த சினிமாவில் இன்றும் மனதில் நிற்கும்
இரண்டு சிறந்த, அல்லது மனம் கவர்ந்த வசனங்கள்........
இப்படி தீடிரென்று கேட்டா எப்படி...? யோசித்து அப்பறம் சொல்றேனே...
பதிலளிநீக்குஎனக்குப் பிடித்த பாடல்.... (கண்ணொளி)
நன்றி...
1. கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ! - கிழிக்கே போகும் ரயில்.
பதிலளிநீக்குமௌனத்தில் விளையாடும் மனசாட்சியே! - நூல் வேலி.
2. வேண்டாம் என்று ஓதிக்கிவிட்டேன்
3.சுத்த போரான கேள்வி, இதையும் வேண்டாம் என்று ஓதிக்கிவிட்டேன்
முதல் கேள்வி பதில் சொல்லத் தெரியவில்லை
பதிலளிநீக்குஇரண்டு
நரேந்திர மோடி
மன்மோகன் சிங்
ஜெயலலிதா
அத்வானி
அப்துல் கலாம்
மூன்று
தில்லுமுல்லு
அன்பே சிவம்
பாட்டைக் கேட்டு ரசிச்சேன்.பதில் சொல்லத் தெரியல !
பதிலளிநீக்குமுதல் கேள்வி: கக்கு மாணிக்கம் சரியா பதில் சொல்லிட்டார் என நினைக்கிறேன்
பதிலளிநீக்குஇரண்டாம் கேள்வி: மன்மோகன், சோனியா, நரேந்திர மோடி, அன்னா ஹசாரே., ப. சிதம்பரம்
மூன்று: பராசக்தி சில வசனங்கள்/
மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி
நன்றி திண்டுக்கல் தனபாலன்
பதிலளிநீக்குநன்றி கக்கு-மாணிக்கம்
நன்றி சீனு
நன்றி ஹேமா
நன்றி மோகன்குமார்
3,அந்த நாள் பட வசனங்கள் .சிவாஜி,பண்டரி பாய் செய்யும் தர்க்கம்.
பதிலளிநீக்கு2வாஜ்பேயி,மதுதண்டவதே,கலாம்
1,கோவில் மணி ஓசைதன்னைக் கேட்டதாரோ:)
டிக் டிக் டிக்.
முதல் கேள்விக்குப் பதில் ஜூட்
பதிலளிநீக்குஇரண்டாம் கேள்விக்கு ராஜ ராஜ சோழன்,
ஹரிஹர புக்கர்கள்
திருமலை நாயக்க மன்னர்
சரியா? :))))
மூணாவது கேள்விக்கு பதில் ஈசி
வானம் பொழிகிறது; பூமி விளைகிறது; உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைரைரைரைத்துக் கொடுத்தாயா? மானம் கெட்டவனே!" டயலாகைத் தான் உடனே எடுத்துவிடணுமாக்கும். :P:P:P:P
சிவாஜி குரல்லேயே சொல்லிப் பார்த்துக்குங்கப்பா எல்லாரும்.