"நானே நானா? - யாரோ தானா?
மெல்ல மெல்ல மாறினேனா?"
ரேடியோ மிர்ச்சியில் பாட்டுக் கேட்டுக் கொண்டே, அரைத் தூக்கத்தில் ஆழ்ந்த ராகவனின் மனம் மெதுவாக என்னென்னவோ யோசனைகளில் வீழ்ந்தது.
இன்னும் ஒரே மாதம்தான். பிறகு என்ன! ஐயா காரில்தான் ஆபீசுக்கு போவார். இந்த பைக் வேண்டவே வேண்டாம். அதுவும் ராமாபுரம் டெலிபோன் எக்ஸ்சேஞ்சுக்கு அருகே நடந்த அந்த கோர விபத்தைப் பார்த்த கணத்திலிருந்து ஒரே யோசனைதான். என்ன 2 பைக் காசு போட்டால் ஒரு கார். மழையில் நனையாமல், வெயிலில் வற்றிப் போகாமல் நினைத்த நேரத்தில் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அவசரத்துக்கு ஒரு செட் உடுப்பு கூட எடுத்து செல்லலாம் ......
அப்பா அம்மா வாங்கித் தருவதாகச் சொன்ன பொம்மையை, உடனேயே கையில் இருப்பது போல பாவனை செய்துகொள்ளும் சிறுவனைப் போல, ராகவன் கையை ஸ்டீரிங் வீல் பிடித்து இப்படியும் அப்படியும் திருப்புவது போல திருப்பிப் பார்த்துக் கொண்டான்!

====================
கார் டெலிவெரி எடுத்துக் கொள்ளலாம், தயார் என்று அலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். பைக்குக்கு விடை கொடுக்கும் நாள் வந்தே விட்டது! 'பைக்கே! இன்றோடு உனக்கு விடுதலை. எனக்கும் உன்னிடமிருந்து விடுதலை! இப்போ வா நாம் இருவரும் டீலர் பாயிண்டுக்குப் போகலாம்!'
அடா டா டா - என்ன அழகான கார்! பள பள என்று சூரிய வெளிச்சத்தில் இப்படி மின்னுகிறதே! பெட்ரோல் வாசனை வருவது போல இருக்குதே! டீலரிடம், "வண்டியில லீகேஜ் எதுனாச்சும் இருக்குமோ? நல்லா செக் பண்ணிட்டீங்களா? ஏதோ பெட்ரோல் வாடை வருதே!"
"சார் என்ன அப்பிடி கேட்டுட்டீங்க! கார் வொர்க் ஷாப்புல பெட்ரோல் வாசனை வராம இருக்குமா? கார்க் கம்பெனிக்காரங்களே எங்களுக்கு ரீஃபில், டாப் அப் செய்ய பெட்ரோல் சப்ளை செய்யுறாங்க. அதோ அங்கே பாருங்க ஒரு மெக்கானிக் பெட்ரோல் கேன் எடுத்துக்கிட்டுப் போறாரு!" என்றார் டீலர்.

"வண்டியை நல்லா கிளீன் பண்ணி, ரிப்பன் கட்டி உங்க வீட்டுக்கு அனுப்பி வெச்சுடறேன் சார்."
"சரி."
================
"சரி."
================
"ரேவதி! சாயங்காலம் சீக்கிரமே வந்துடுவேன். அக்ஷயாவை தயார் பண்ணிட்டு [என்ன ஒரு பாம்பெர்ஸ் மாட்டி விடணும் - அவ்வளவுதானே] நீயும் ரெடியாக இரு. சுப்பு வீட்டுக்குப் போகணும். ஒவ்வொருத்தன் மாதிரியா நாம காரை வைச்சிருக்கோம், என்ன இல்லை நம்ம காரில்? ஏ சி கம்பெனி பிட்டிங்காகவே போட்டாயிற்று. சீட்டுகளுக்கு எல்லாம் நமக்குப் பிடித்த கலரில், கவர் போட்டாச்சு.
ஆட்டோமாடிக் ஆக கண்ணாடி ஏறி இறங்குது, காரை விட்டுக் கீழே இறங்கி - அவ்வளவு ஏன், - கண்ணாடியைக் கூட கீழே இறக்காமல், ஜி பி எஸ் துணையுடன் நீலக் கோட்டைத் தொடர்ந்து போனால் எங்கு வேண்டுமானாலும் போகலாம். அக்ஷயாவுக்கு போர் அடித்தால் டி வி டி பிளேயரில் ஒரு கார்ட்டூன் போட்டு விட்டால் குழந்தை காரிலேயே கன்யாகுமரிக்குப் போனால் கூட எதுவும் கேட்க மாட்டாள். ஸ்ரீராம் காரில் ஒரு ஃபிரிஜ் கூட இருக்கிறதாம் நம் காரில் போட முடியுமா என்று பார்க்க வேண்டும். அப்படியே அந்த மல்டி பின் மொபைல் சார்ஜெர் ஒன்றும் கட்டாயம் போட்டுடணும். ..."
"அப்படியே ஒன்று போடட்டுமா?" என்று ரேவதி குரலில் டீலர் அதட்டிக் கேட்க ....
"கட்டாயம் போட்டுடனும் ...." என்றான் ராகவன்.
"குழைந்தைங்களை அடிக்கவே கூடாது, அடிச்சா அவங்களுடைய கிரியேட்டிவிட்டி ஸ்பாயில் ஆகி விடும் என்று சொல்வீர்கள்; இப்போ நீங்களே இப்படிச் சொல்கிறீர்களே!" ஆச்சரியப்பட்டுப் பேசினாள் ரேவதி.
"என்ன? ஹா? நான் எங்கே இருக்கின்றேன்? என்ன நடக்குது இங்கே? ரேவதி - எந்தக் குழந்தையை அடிக்கப் போகிறாய்? ஏன்?"
"சரிதான் போங்க! ரேடியோ கேட்டுகிட்டே தூங்கிட்டீங்களா? அட ராகவா! உங்களை இல்லீங்க! இந்த அக்ஷயாவைப் பாருங்க! உங்க பைக்குல ஏதோ விஷமம் செய்து, மூஞ்சி எல்லாம் கிரீசைப் பூசிக்கிட்டு வந்து நிக்குது! கை எல்லாம் ஒரே பெட்ரோல் வாடை! இப்போதான் தலை வாரி, ரிப்பன் கட்டி அனுப்பினேன். அதுக்குள்ள, பைக்குல விஷமம் செய்து, ரிப்பன் அவுந்துடுச்சு அதைக் கட்டி விடு என்று வந்து நிக்குது! அதுக்குத்தான் 'அப்படியே ஒன்று போடட்டுமா?' என்று கத்தினேன்!

நல்லதொரு கனவு... விரைவில் நனவாகட்டும்...
பதிலளிநீக்குகார் வாங்கினால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டது சிறப்பு...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
// ஸ்ரீராம் காரில் ஒரு பிரிட்ஜ் கூட இருக்கிறதாம் //
பதிலளிநீக்குகாருக்குள்ள பாலம் எதுக்கு ?
ஓஹோ.. சின்ன புள்ளைங்க கஷ்டப் பட்டு Front seat / Back Seat தாவாம ஈசியா போயிட்டு வர்றதுக்கா ?
Enakku vantha kanavu maathiriye irukke!! :-))
பதிலளிநீக்குஹிஹீஹிஹீஹிஹீ, நானும் மாதவன் ஶ்ரீநிவாசகோபாலன் (எவ்வளவு பெரிய பேருங்க)மாதிரியே நினைச்சேன். பிரிட்ஜெல்லாம் எதுக்குனு. :))))))
பதிலளிநீக்குஎன்னோட டாஷ் போர்டிலே கூகிள் ரீடர் எந்தப் பதிவையும் நீ ஃபாலோ பண்ணலைனு காலையிலே இருந்து சொல்லிட்டு இருக்கு. சதி! பதிவுகளுக்கு நானே போய்ப்பார்க்கணும்னு சதி கூகிளோட சதி!
ஆஹா... கனவா...
பதிலளிநீக்குசீக்கிரம் நிஜத்தில் கார் வாங்கிட வாழ்த்துகள்....
// (எவ்வளவு பெரிய பேருங்க) //
பதிலளிநீக்குMy name -'மாதவன்' சின்னப் பேரு தானுங்கோ..
ஸ்ரீனிவாசகோபாலன் ,எங்கப்பா பேரு.
நான், ஒரு, பேர் சொல்லும் பிள்ளை, அவருக்கு..
காலை கனவு போலத்தான் தெரிகிறது
பதிலளிநீக்குநிச்சயம் பலித்துவிடும்
கனவு நினைவாக வாழ்த்துக்கள்
படங்கள் பதிவுக்கு கூடுதல் சுவாரஸ்யம்
கூட்டிப்போகிறது
மனம் கவர்ந்த பதிவுதொடர வாழ்த்துக்கள்
எனக்கு கனவுல கார் என் மேல ஏறிப் போற மாதிரி வந்து அலறினேன். இங்க கார் மேல ஏறிப் போற மாதிரி ஒருத்தர் கனவு கண்டிருக்கார். கனவு மெய்ப்படட்டும் - அவருக்கு மட்டும்.
பதிலளிநீக்குகனவை முழுசா காண விடுறாங்களா:))?!
பதிலளிநீக்குகாலைல கண்ட கனவு பலிக்குமாம். எதுக்கும் ஃப்ளைட் வாங்கறாப்லயும் அப்படியே உங்க வீட்டுக் கிணத்துல பெட்ரோல் ஊத்தெடுக்கறமாதிரியும் கனவு காணுங்களேன். யார் கண்டா?.. பலிச்சாலும் பலிக்கும் :-))
பதிலளிநீக்கு/ஃப்ளைட் வாங்கறாப்லயும் அப்படியே உங்க வீட்டுக் கிணத்துல பெட்ரோல் ஊத்தெடுக்கறமாதிரியும் கனவு காணுங்களேன்//
பதிலளிநீக்குஅக்கா, நினைச்ச மாதிரியெல்லாம் கனவு காணுறதுக்கு, அதென்ன சத்யம் தியேட்டரா? :-)))
மனசுல நினைக்கறதுதான் கனவா வரும்னு யாராவது அறிவியல் பேசுனா.... மை க்வெஸ்டீன்: நானும்தான் அப்படில்லாம் ‘பெருசா’ நினைச்சுகிட்டு படுக்கிறேன். எங்கே... ‘தொபுக்கடீர்னு’ கீழே விழுற மாதிரி மட்டும்தான் கனவு வருது!! :-(((((