செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

அலேக் அனுபவங்கள் 08:: இண்டர்வியூ

           
நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியாக இருந்தபொழுதும், அசோக் லேலண்டில் இஞ்சினீரிங் அப்ரெண்டிஸ் ஆகச் சேருவதற்கு முன் நடந்த நேர்காணலில், என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன, அவற்றிற்கு நான் என்னென்ன பதில்கள் கூறினேன் என்பதெல்லாம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளன. 
           
இண்டர்வியூ செய்தவர்கள் மூன்று பேர். அவர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துள்ளேன். ஆனாலும், அவர்களை, வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றேன். அவர்களைத் தெரிந்தவர்கள், பலர் இருக்கின்றார்கள் என்பதால். அவர்களின் புனைபெயர்கள், நந்தா, சென், சாரி என்று வைத்துக் கொள்கிறேன். நந்தா - பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளர். சென் - இஞ்சினீரிங் பிரிவின் அதிகாரி, சாரி -  இயந்திரப் பிரிவின் அதிகாரி. (இந்தத் தகவல்கள், இன்டர்வியூவின் பொழுது எனக்குத் தெரியாது, அப்ரெண்டிஸ் ஆக சேர்ந்த பிறகு தெரிந்து கொண்டேன்.) 
======================  
            
நந்தா: "வாப்பா, உட்கார். உன் பெயர் என்ன?"
நான்: "நன்றி சார். (உட்கார்ந்துகொண்டு) என் பெயர் கே ஜி கௌதமன்."
நந்தா: "உன் பெயரில் உள்ள கே எதைக் குறிக்கின்றது? கான்பூரிலிருந்து வருகின்றாயா? "
நான்: "இல்லை சார்! என் பெயரில் உள்ள கே, என்னுடைய சொந்த ஊராகிய கல்யாணமகாதேவியைக் குறிக்கின்றது. "
நந்தா: "ஜி?"
நான்: "என் அப்பா பெயராகிய, கோபாலனைக் குறிக்கின்றது." 
நந்தா: "அப்புறம்?"
நான்: "மீதியுள்ள கௌதமன் என் சொந்தப் பெயர்! "
சாரி: "உங்கள் சர்டிபிகேட்டுகளை இப்படிக் கொடுங்கள். " 
கொடுத்தேன். 
என்னுடைய ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டுகளை நந்தா பார்வையிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், 
       
சென் : "டிப்ளமோ பாஸ் செய்ததிலிருந்து இதுவரையில் என்ன செய்துகொண்டிருந்தாய்?"
நான்: "சும்மாதான் இருந்தேன் சார்!"
சென்: "ஆர் கே டிப்பார்ட்மெண்ட் வேலையா?"
நான்: "அப்படி என்றால்?"
சென்: "ரைஸ் கில்லிங் டிப்பார்ட்மெண்ட் வேலையா ...!!!" 
          
வாய் விட்டுச் சிரித்தேன். என் சிரிப்பில் மற்றவர்களும் கலந்துகொண்டார்கள். (காம்பெடிஷன் சக்சஸ் ரிவ்யூ புத்தகத்தில், அன்றைய தேதி வரை ஐ ஏ எஸ் இண்டர்வியூக்கள் பற்றி, பல கட்டுரைகள் படித்திருந்தேன். நேர் காணலில் அவர்கள் சொல்லாமல் நாம் உட்காரக் கூடாது என்பதில் ஆரம்பித்து, தொட்டால் சுணங்கியாக இருக்கக் கூடாது, இண்டர்வியூ செய்பவருடன் விவாதம் / வீண்வாதம் செய்யக் கூடாது, தெரியாதவற்றை, தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளக்கூடாது என்று பல உபயோககரமான தகவல்கள் அந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து வைத்திருந்தேன்.)   
            
சாரி, சென் இருவரும்: "அட! எழுபத்தொரு சதவிகித மார்க்குகளா! சரி, நீ இந்த மார்க்குகளுக்குத் தகுதி உடையவன்தானா என்று சோதித்துப் பார்த்துவிடுகின்றோம்!" 
நான்: சிரித்தபடி, "ஷ்யூர் சார்!"
சாரி: "நாங்கள் உன்னை, எந்த சப்ஜெக்டில் கேள்வி கேட்கலாம்?"
நான்: "மெக்கானிக்கல் இஞ்சினீரிங் ..."
சாரி, சென் இருவரும்: "அது மிக மிக பெரிய ஏரியா - வேறு ஏதாவது அதிலிருந்து சிறிய பகுதி - உன்னுடைய ஸ்பெஷல் ஏரியா ஏதாவது கூறு?"
நான்: "என்னை நீங்கள், என்னுடைய தேர்வு (எலெக்டிவ் ) சப்ஜெக்ட் ஆகிய மெஷின்ஷாப் டெக்னாலஜியில் கேள்விகள் கேட்கலாம்!" 
     
சாரி: "ஓ அப்படியா? What is the formula for Tool life?"
Me: "V * T whole power n = C (constant)."
Chari: "What is V, what is T?" 
Me: " V is the cutting speed, T is the tool life, n and C are constants found by experiments depending upon the tool material, work piece and feed rate."
Chari: "Very good. Can you draw the sketch of centre-less grinder?" 
Me: "Internal or external sir?"
Chari: "Again, very good!. Draw external centre-less grinder."
Me: "I can draw only a schematic diagram - a rough sketch"
Chari: "That is enough for us." என்று சொல்லி, ஒரு பென்சிலையும், நோட்டுப் புத்தகத்தையும் என் கைகளில் கொடுத்தார். 
நான் கீழ்க் கண்டது போல ஒரு படம் வரைந்தேன். 
சாரி: "எல்லாம் சரி, ஆனால், வொர்க் சப்போர்ட் சரியில்லை. வொர்க் பீஸ் முனையில் வி ஷேப் இருக்கவேண்டும்."
நான்: "ஆம். நீங்கள் சொல்வதுதான் சரி."
சாரி: "அதனால் என்ன - பரவாயில்லை!" 
என்னுடைய எழுத்துத் தேர்வு மார்க்குகள், அவர்களிடமிருந்த ஒரு கோப்பில் இருந்தன. அதை மூவரும் பார்த்துவிட்டு, திருப்தியாக தலையை ஆட்டிக் கொண்டனர். 
                
நந்தா: "என்ன விளையாட்டு தெரியும்?" 
நான்: " நான் .... என்று ஆரம்பிப்பதற்குள், அவரே மீண்டும், "பம்பரம் விடுவியா? பட்டம் விடுவாயா" கில்லி?" என்றார். எல்லோரும் சிரித்தார்கள். 
நான் ஒருவாறு சிரித்துச் சமாளித்து, "நான் சதுரங்கம் ஆடுவேன்" என்றேன். சாரி மீண்டும் 'வெரி குட்' என்றார்!  
சென்: " செஸ் போர்டுல மொத்தம் எவ்வளவு கட்டங்கள்?" 
நான்: "அறுபத்துநான்கு" 
சாரி: "வாட் ஈஸ் கிராண்ட் ஸ்லாம்?" 
               
அதுவரையில் அந்த சொற்றொடரை நான் கேள்விப் பட்டதே இல்லை. அது செஸ் சம்பந்தப்பட்டதா அல்லது வேறு விளையாட்டுகள் சம்பந்தப் பட்டதா என்று கூடத் தெரியாது. (பிறகு என்னுடைய அப்பா, சீட்டாட்டத்தில் பிரிட்ஜ் ஆட்டத்திலும் கிராண்ட் ஸ்லாம் உண்டு, டென்னிஸ் விளையாட்டிலும் உண்டு என்று கூறினார்.) 
மீண்டும் சமாளித்து, "எனக்கு செஸ் விளையாட்டில் பெரிய வார்த்தைகள் எதுவும் தெரியாது, விளையாடத் தெரியும், விளையாடுவது உண்டு - அவ்வளவுதான்" என்றேன். 
                 
சென் அதற்குள், "பொது அறிவு இருக்கின்றதா என்பதையும் சோதிக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறார்களப்பா ..." என்று சொல்லியபடி, " வேர் ஈஸ் அவர் ப்ரைம் மினிஸ்டர் நவ்?" என்று கேட்டார்.    
அதற்குள் நந்தா குறுக்கிட்டு, "இருங்க முதலில் நம் பிரதமமந்திரி யார் என்று அவரைக் கேளுங்கள். அது தெரிகின்றதா என்று பார்ப்போம்" என்றார்.   
நான்: "நம்முடைய பிரதமர், திருமதி இந்திராகாந்தி அவர்கள்."
நந்தா: "ஏன்? நேரு இல்லையா? அவருக்கு என்ன ஆச்சு?" 
நான்: "திரு ஜவகர்லால் நேரு ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு மே மாதம் இருபத்தேழாம் தேதி புதன்கிழமை - காலமானார். அவருக்குப் பிறகு, திரு லால்பஹதூர் சாஸ்திரி  அவர்கள் பிரதமரானார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் ஆண்டிலிருந்து, இன்றுவரை திருமதி இந்திராகாந்தி அவர்கள் நம் பிரதமராக இருக்கின்றார்." 
சென்: "அது சரி, அவர் இப்போ எங்கே இருக்கின்றார்?"
நான்: "அவர் புது டெல்லியில்தான் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்."
சென்: "நீ அப்படி நினைக்கவில்லை என்றால், எங்கே இருப்பார்?"
நான்: "அப்பொழுதும் புதுடில்லியில்தான் இருப்பார்!"   
                
சென்: "நல்லா குழப்புறேப்பா நீ ... சரி இன்றைய ஹிந்து பேப்பரில் என்ன தலைப்புச் செய்தி?"  
நான்: "Thousands of people die in Orissa due to floods" 
சென் (யோசனை செய்து பார்த்துவிட்டு,) 'கரெக்ட்' என்றார். 
எல்லோரும்: "எங்களை ஏதாவது கேட்க விரும்புகின்றாயா?" 
நான்: "ஒன்றும் இல்லை சார்."
நந்தா : அப்போ நீ செல்லலாம் - உன் சர்டிபிகேட்டுகளை எடுத்துச் செல்."
நான் : நன்றி சார். 
            

25 கருத்துகள்:

  1. interesting interview. mechanical engineering part mattum enakku theriyatha subject. Paiyarukku puriyum. :)))))

    பதிலளிநீக்கு
  2. நாம போன இண்டர்வியூவில் எல்லாம் இப்படியெல்லாம் கேட்டதில்லை. அநேகமா க்ரூப் டிஸ்கஷன் மாதிரி இருந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  3. இப்படி எல்லாம் கேட்டு இருந்தா நானும் எதாவது கம்பனியில் சேர்ந்து இருப்பேன்....

    பதிலளிநீக்கு
  4. வாழ்க்கையில் அட்டெண்ட் செய்த ஒரே இண்டர்வியூ போல! அதான் வரிக்கு வரி நினைவில் இருக்கிறது. :-)))

    //ரைஸ் கில்லிங் டிப்பார்ட்மெண்ட்//
    வி.ஓ. வேலை தெரியும், அதென்ன ரைஸ் கில்லிங்??

    பதிலளிநீக்கு
  5. வி.ஓ. வேலை தெரியும், அதென்ன ரைஸ் கில்லிங்??/


    வீட்டிலே வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்து சாப்பிடறது.:)))))

    பதிலளிநீக்கு
  6. சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாவும் இருந்தது...
    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப சுலபமான இண்டர்வ்யூவா இருக்குதே? (இதைவிட சுலபம்னா தில்லுமுல்லு விசு இண்டர்வ்யூ தான்)

    வி.ஓ என்றால் என்ன ஹுஸைனம்மா?

    பதிலளிநீக்கு
  8. இந்த புட்பால் க்ரிகெட் ஹாக்கி இதெல்லாம் விளையாட்டா தெரியலீங்களா? அட் லீஸ்ட் மரக்குரங்கு? என்னங்க இது சதுரங்கமா? சரி.. grand slamனா என்னான்னு பிறகு தெரிஞ்சுக்கிட்டீங்களா?

    நீங்க யாரையாவது இண்டர்வ்யூல இது போல கேட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  9. //வி.ஓ என்றால் என்ன//

    எனக்கேத் தெரிஞ்சிருக்க ஒரு விஷயம், இன்னொருத்தருக்கு தெரியலயேங்கிற ஒரு (அல்ப) சந்தோஷத்துடன் பதிலளிக்கிறேன்:

    வி.ஓ. - வெட்டி ஆப்பிஸர்!! :-)))))))

    பதிலளிநீக்கு
  10. நன்றிங்க..
    ஹிஹி.. வருசக்கணக்கா இந்த வேலை பாத்தும் பேர் என்னானு தெரியாம போயிடுச்சு பாருங்க.

    பதிலளிநீக்கு
  11. ரசிக்கும்படி இருந்தது உங்கள் இண்டர்வியூ..

    உண்மையிலேயே ஞாபகம் வெச்சி எழுதினதா.. இல்ல.. கொஞ்ச நஞ்சமிருந்த பீச வெச்சி பிட்டு போட்டு தேத்துநீங்களா ?

    வேறொன்னுமில்ல நாலு வருஷத்துக்கு முன்னால நா அட்டென்ட் செஞ்ச ப்ரமோஷன் இண்டர்வியூ கேள்விகளே எனக்கு மறந்துடும்னு இண்டர்வியூ அன்னைக்கு ராத்ரியே தூங்காம மூணு மணி வரைக்கும் ஒவ்வொரு கேள்வியா ஞாபகப் படுத்தி எழுதி வெச்சிருக்கேன்.. அதான் அப்படி கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. கருத்து தெரிவித்த நண்பர்கள் எல்லோருக்கும்
    முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும்
    இந்த வேளையில் ......
    கொஞ்சம் இருங்க சோடா குடிச்சுட்டு தொடர்கின்றேன் ...

    பதிலளிநீக்கு
  13. கீ சா மேடம் எனக்கென்னவோ அந்தக் காலத்தில் க்ரூப் டிஸ்கஷன்கள்
    இருந்தமாதிரி ஞாபகம் இல்லை - அந்தக் காலத்தில், நான் பங்கேற்ற
    பத்துக்கு மேற்பட்ட இன்டர்வியூக்கள், எழுத்துத் தேர்வு + நேர்காணல்
    என்றுதான் இருந்தன.

    பதிலளிநீக்கு
  14. //ராம்ஜி_யாஹூ said...
    good sir//

    அலேக் அனுபவங்கள் பதிவுகளில் மட்டும்தான் கருத்துரைகள்
    அவ்வப்போது எழுதுகின்றீர்கள். மற்ற பதிவுகளையும் படித்து,
    கருத்துரைத்தால், இன்னும் அதிக சந்தோஷம் அடைவோம்! நன்றி.

    பதிலளிநீக்கு
  15. கோவை நேரம் !!

    என்னுடைய நேரம் நன்றாக இருந்ததால்தான்,
    நீங்க அந்த இண்டர்வியூவுக்கு வரவில்லை என்று நினைக்கின்றேன்.
    இல்லையேல், என்னை விட்டு, உங்களை வேலைக்கு எடுத்திருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
  16. ஹுஸைனம்மா said...
    வாழ்க்கையில் அட்டெண்ட் செய்த ஒரே இண்டர்வியூ போல! அதான் வரிக்கு வரி நினைவில் இருக்கிறது. :-)))

    இப்படி எல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது!

    பதிலளிநீக்கு
  17. அப்பாதுரை சார்!
    மரக்குரங்கு விளையாட்டா?
    கேள்விப் பட்டது கூட இல்லை.
    கிராண்ட் ஸ்லாம் பற்றி என்னுடைய அப்பா, எனக்கு எழுதியிருந்த
    பதில் கடிதத்தில் எழுதியிருந்தார். (அதை பதிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன்)
    நான் அந்தக் காலத்தில் வீட்டுப் பறவை - வெளியே விளையாடுபவர்களை,
    ஒரு பார்வையாளனாக மட்டும் இருந்து பார்த்து ரசித்திருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  18. மாதவன் - நான் ஞாபகசக்தியிலே புலி
    அதனால இந்தப் பதிவில் எதுவும் கரடி விடவில்லை!
    பிரமோஷன் இன்டர்வியூவுக்குப் போகும்பொழுது,
    இனிமேல் சட்டைப் பையில், ஒரு
    டி-சானிக் அல்லது சோனி - அல்லது
    டிரான்சென்ட் எம் பி த்ரீ ரிக்கார்டரை - வாய்ஸ் ரெகார்டிங்
    மோட்ல வெச்சிகிட்டு attend பண்ணுங்க - மிகவும்
    பயனுள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  19. haha Ultimate.... enjoyed...:)

    //தில்லுமுல்லு விசு இண்டர்வ்யூ தான்)//

    வரலாற்றுப்பிழை.... அது விசு இல்ல சார் தே.சீனிவாசன் :)

    பதிலளிநீக்கு
  20. உண்மையிலேயே வியக்க வைக்கும் ஞாபக சக்தி ஸார் உங்களுக்கு...

    பதிலளிநீக்கு
  21. நானும் toyota tsusho இல எழுத்து தேர்வு கிளியர் செய்துவிட்டு நேர்முக தேர்வுக்கு காத்து இருக்கிறேன் ... இதேபோல் இண்டர்வியு இருந்தால் நன்றாக இருக்கும் ... timing post for me...:Q

    பதிலளிநீக்கு
  22. இந்த இன்டர்வியூ மிகவும் சுலபமானது போன்று தோற்றமளிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

    ஒன்று, அந்தக் காலத்தில், எழுத்துத் தேர்வு மிகவும் ஆழமான, அகலமான ஒன்றாக இருந்தது. கணிதம், விஞ்ஞானம், ஆங்கில அறிவு, புத்திகூர்மை இவற்றோடு, சம்பந்தப்பட்ட பாட விஷயத்திலும் (எனக்கு பொறியியல்) கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களை மட்டும்தான் அடுத்த நிலையான நேர்காணலுக்கு அழைத்தார்கள். எனவே, இந்த நேர்காணல், எழுதியவர் இவர்தானா, ஆள் பார்ப்பதற்கு எப்படி இருக்கின்றார், எப்படி பழகுகின்றார், சர்டிபிகேட்டுகள் உண்மையானவைதானா - என்பதை எல்லாம் (மட்டும்) தெரிந்துகொள்ளத்தான்.

    இரண்டு, இதில் எனக்கு பாடம் சம்பந்தமாக வந்த கேள்விகள் எதேச்சையாக வாய்த்த கேள்விகள். ஆனால், அந்தக் காலத்தில், டிப்ளமா படித்த ஒருவர், படித்துப் பாஸ் செய்த ஆறு மாதங்கள் கழித்து, டெய்லர்'ஸ் டூல் லைப் பார்முலாவை, கேட்ட மாத்திரத்தில் கூறுவது என்பது அசாதாரணமான ஒன்று. மெஷின்ஷாப் டெக்னாலஜி பாடத்தில் எவ்வளவோ மெஷின்கள், மெக்கானிசம் பற்றி எல்லாம் உண்டு - அதில், கட்டிங் டூல்ஸ் - மற்றும் அதன் வடிவமைப்பு பற்றிய அத்தியாயத்தில், அதிகம் கவனிக்கப் படாத ஒரு விஷயம், இந்த டூல் லைப் பார்முலா. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற வகையில், இந்த பதில், அவர்களுக்கு அமைந்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!