Friday, April 26, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130426

 
    

12 comments:

வல்லிசிம்ஹன் said...

மதுரைக்கேப் போய்விட்டேன். ரொம்ப அழகு. என்ன பாட்டு. என்ன தெய்வீகம்,நூறு பதிவு போட்டாலும் இந்த ஒரு வீடியோவுக்கு இணையாகாது.இந்த பக்தியைச் சுத்தபக்தியைத்தான் பார்த்து உணர்ந்து எத்தனை நாளாச்சு. என்னால் எழுதக்கூட முடியவில்லை.தங்கநிலாவாம் தங்கச்சி கல்யாணத்துக்கு வராரே அழகர்.
அற்புதமான வரிகள்.எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள் கௌதமன்? இது போல வீடியோவை நான் பார்த்ததே இல்லை.பிறந்துவந்த இடத்தின் மகிமை நன்றாக உணரவைத்தீர்கள். கூப்பும் கைகள் எங்கு பார்த்தாலும். அற்புதம் அற்புதம்.நன்றி.

Geetha Sambasivam said...

பல்லக்கு ஆடும் ஆட்டமும், குலவை சத்தமும், அழகர் வராரு பாட்டும், என்னோட சிறு வயது நினைவுகளுக்கே கொண்டு போய் விட்டன. இப்போவும் இந்த வேடமணிந்த பக்தர்கள் வராங்களானு தெரியலை. அழகன் முகத்தில் தான் என்ன ஒரு ஆனந்தம்! பித்துப் பிடித்த ஜனங்கள் கூத்தாடுவதில் வியப்பென்ன! எத்தனை கலாசார மாற்றங்கள் இங்கே படை எடுத்து வந்தாலும் இதை வெல்ல முடியாது. நொந்திருந்த மனதுக்கு ஒரு ஆறுதல்.

Geetha Sambasivam said...

அந்த நாமம் போட்ட நீண்ட விசிறிகளின் காத்துக்காகவே அதுக்கு முன்னாடி போய் நிற்போம்.ஆயிரம் பொன் சப்பரம் எங்கே? என் கண்ணில் தான் படவில்லையா?

Geetha Sambasivam said...

பொட்டுக்கடலையும், நாட்டுச்சர்க்கரையும் வைத்துக் கற்பூர தீபாராதனை காட்டிவிட்டு அந்த வாசனையுடன் கூடிய அந்தப் ப்ரசாதத்தின் சுவை இன்னமும் நாக்கில் நிற்கிறது. எதை எல்லாம் இழந்திருக்கேன்னு நினைச்சால் கொஞ்சம் வருத்தமாயும் இருக்கு. :(

Geetha Sambasivam said...

ஆஹா, அந்த ஜவ்வு மிட்டாய். கைக்கடியாரம் போல் செய்து கையில் ஒட்ட வைத்துக்கொண்ட நாட்கள்!

கோமதி அரசு said...

அழகர் திருவிழா கண் குளிர கண்டேன்.
என் அம்மா, தம்பி, தங்கைகளுடன் ஓடி ஓடி அந்த மண்டபம் இந்த மண்டபம் என்று போய் அழகரைப் பார்த்த நினைவுகள் வருகிறது. நடந்து போகும் போது எதிர் வரும் பக்தர்களிடம் அழகர் இப்போது எங்கு இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டே நடப்போம்.
ஆற்றில் இறங்கி போகும் போது அங்கு உறவினர்கள் , நண்பர்கள் நீர் மோர் பந்தல் வைத்து இருப்பார்கள் அவசியம் வந்து மோர் அருந்தி செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்வார்கள்.
பூ பந்தல் ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் அருகிலும், அழகர் எதிர் சேவை தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகிலும் இருந்து பார்ப்போம். அப்போது வாணவேடிக்கை வெகு நேரம் நடக்கும் பார்க்கவே மிக அழகாய் இருக்கும்.
கிராமத்து ஜனங்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து அழகர் பின்னாலேயே போவார்கள்.
ரப்பர் தண்ணீர் பை ஒரு தோளிலும் பெரிய தீ பந்த சுருள் ஒரு தோளிலும் தலையில் ஜரிகை தொப்பி வைத்து அழகாய் ஆடி எல்லோர் மேலேயும் தண்ணீர் பீச்சி அடிப்பார்கள்.
இவ்வொருவர் வீட்டிலும் உறவினர், நண்பர்கள் என்று கூட்டம் நிரம்பி வழியும்.
உங்கள் காணொளியும், அழகர் பாட்டும் மிக அருமை.அடுத்தவருடம் மீனாட்சி கோவில் திருவிழா, அழகர் திருவிழா இரண்டையும் முழுமையாக பார்க்க இறைவன் அருள் செய்ய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வருகிறார்கள் கீதா. நேற்றுப் பார்த்தேன். விரதம் இருந்து வேடம் போடவேண்டும். இந்த உற்சாகத்தை அனுபவிக்கக் கொடுத்துவைக்கவில்லை.
பதிட்டாம்படி கருப்பு கதவு திறந்ததைப் பார்த்தீர்களா.
அவர்கள் அழகர் கருணையின் மீதில் என்ன ஆட்டம் ஆடுகிறார்கள்.


எத்தனையோ நினைவுகளைக் கிளறிவிட்டது இந்த வீடியோ.


அன்பு கோமதி உங்களுக்கு இந்தப் பாக்கியம் கட்டாயம் வாய்க்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த முறை செல்ல முடியவில்லை... வீட்டில் அனைவரும் சென்றார்கள்...

ஏக்கத்தை தீர்த்து வைத்த அருமையான காணொளி... பாட்டு சூப்பர்... நன்றிகள் பல...

sury Siva said...

அற்புதமான காட்சி.
1961 1962 லே மதுரையிலே இருந்தாலும் வைகை நதிக்கரையின் எங்கள் அலுவலகம்
இருந்தாலும் இந்த நிகழ்வினை பார்க்கவில்லை எனவே நினைக்கிறேன்.

காணக்கண்கோடி வேண்டும்.

நிற்க.
உங்களது நேற்றைய பதிவு.
அதற்கான விடை.
டி.என்.டே என எனக்கு நன்றே தெரியும் என்றாலும்
டி.என்.ஏ. பரிசோதனை நாம் அனைவருமே ஏன் செய்துகொள்ளவேண்டும் என‌
ஒரு கட்டுரையை கூகிள் ப்ள்ஸ்ஸிலே நான் இட்டிருந்தாலும்
நேற்றைய தேதியின் முக்கியத்துவம் சந்திரகிரகணமாக இருக்கலாம்
அதுவும் உங்கள் படம் ராகு பகவானை மனதில் கொண்டு வந்ததும்
காரணமாக இருந்தது.
உங்களது ஃபைனல் ஆன்சர்
இரண்டுமே எனது இரு வலைப்பதிவுகளின் கருத்துக்களை
மேலும் உறுதிப்படுத்தின.

பர்செப்ஷன்ஸ் ஆர் பௌன்டு டு பி டிஃபரன்ட்.

தாங்க்ஸ் ஃபார் ஷேரிங்க் திஸ் வொன்டர்ஃபுல் வீடியோ.

சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha.blogspot.in

kg gouthaman said...

//நேற்றைய தேதியின் முக்கியத்துவம் சந்திரகிரகணமாக இருக்கலாம்
அதுவும் உங்கள் படம் ராகு பகவானை மனதில் கொண்டு வந்ததும்
காரணமாக இருந்தது. //

அட! இப்படி ஒரு சம்பந்தம் இருக்கா! ஆச்சரியமா இருக்கு! நன்றி சுப்பு தாத்தா !

Ranjani Narayanan said...

அழகர் ஆற்றில் இறங்குவதை இதுவரை பார்த்ததில்லை. இந்த வீடியோ என் குறையைப் போக்கிற்று. என்ன அழகான பாடல்! என்ன ஒரு உணர்ச்சி மயம்!
போறார் அழகர் என்னும் வரிகள் மனதில் ஏக்கத்தையே உண்டு பண்ணிவிட்டது.

மதுரை வாழ் மக்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள்.

நன்றி எங்கள் ப்ளாக்!

வல்லிசிம்ஹன் said...

அதனால்தான் குழந்தை பிறக்கவேண்டும்
என்பதற்காக ராகு Kஷேத்ரங்களுக்குப்
பரிகாரம் செய்வார்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!