ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

ஞாயிறு 199:: தனிமை

                         
         
தனிமை பற்றி கவிதை எழுதுங்க. கருத்துரையாய்ப் பதியுங்க! 
          
பாட முடிந்தால், பாடி எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புங்க. நம்ம ஏரியாவுல வெளியிடுவோம். 
                        

15 கருத்துகள்:

 1. இனிது இனிது ஏகாந்தம் இனிது! என்று நிற்கிறதோ!
  தனித்திரு , விழித்திரு என்று விவேகனாந்தர் சொன்னதை கடைபிடிக்கிறதோ!
  எம்பெருமானே, உன்னை உணர்ந்து உன்னுடன் இணங்கியிருப்பதற்கு ஏகாந்தம் ஒன்றே இடமாகும் என்று இறைவனை நினைந்து நிற்கிறதோ!
  நல்ல படம். ஏகாந்தமாய் இருக்க நல்ல சூழல்.

  பதிலளிநீக்கு


 2. வணக்கம்!

  தனிமை கொடுமை! தளிர்க்கொடியே நீ..வந்து
  இனிமை கொடுப்பாய் இணைந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னோட கமென்ட், வல்லியோட கமென்டெல்லாம் வரலை. என்ன ஆச்சு எல்லாம்?

  பதிலளிநீக்கு
 4. ஆனால் ஜி+இலே வந்திருக்கு! :)))) வேண்டாத சோதனையெல்லாம் செய்தால் இப்படித்தான். எனக்கும் வந்து கேட்டது, +இலேயும் பின்னூட்டங்களைக் காட்டுவேன்னு ஆசை காட்டியது. நான் மயங்கவே இல்லையே! அப்புறமா வா, பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன். :))))))))

  பதிலளிநீக்கு
 5. கொக்கே கொக்கே, பூப்போடு

  காக்கா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா,

  கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா,

  கொக்கே கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வா

  பதிலளிநீக்கு


 6. // ஏகாந்தமாய் இருக்க நல்ல சூழல்.//

  ஆகா... என்ன ஒரு இடம்...
  வாகா அமைஞ்சிருக்கே
  பாகான என் இடபாகத்தவளை
  பாங்காய் நான் கூட்டிப்போணும்.

  கோ அப்படின்னு மனசுக்குள்ளே ஒரு ஆர்டர் போட்டுகினு
  என் ஊட்டுக்குள்ளே
  போனா....


  இருட்டிலே கண்ணும் தெரியலே
  இல்லக்கிழத்தியும் தெரியலே .
  கரண்டு கட்.

  ஒரு சத்தம் போட்டேன்.


  ஏ கிழவி ! எழுந்திரு...
  எம்புட்டு நேரம் நீ
  இருட்டிலே அடஞ்சிருப்பே !

  ஊட்டி கொடைக்கானல்னு
  ஊர் அறிஞ்சு சுத்திவர
  மனசிருந்த போதெல்லாம்
  காசில்லை. நேரம் இல்லை.

  இங்கன பாரு.
  எழுபது முடிஞ்சா என்ன ?
  ஏந்திருச்சு உடன் வாயேன்.
  ஏகப்பட்ட பேரு இங்க
  வேகமாய் வருவாக அதுக்கு முன்னே

  ஏப்ரல் வெயிலிலே
  ஏகாந்த நிழலினிலே
  ஆகாய வீதியிலே
  ஒதுக்குப்புறமாய் அமர்ந்து
  ஓடும் மேகங்களை நாம்
  ஓரக்கண்ணால் ரசித்திடுவோம் .

  கிழவி: (பதிலுக்கு கத்துகிறாள். ஸாரி, பாடுகிறாள்)

  தனிமையிலே இனிமை காண முடியுமா
  நடு இரவினிலே சூரியனும் தோன்றுமா....

  கிழவன் கண் முழித்து கிழவியைப் பார்த்து:
  என்ன என்ன ?

  கிழவி. "

  என்ன
  என்னங்க இது..!!
  நடு ராத்திரிலே
  நாலு வரி கவிதை பாடறீக..

  இந்தாங்க...துண்டு...
  எதுக்கு ?
  துடைச்சுக்குங்க..
  கனவுலேயும்
  ரொம்ப வழியுறீங்க...

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  பதிலளிநீக்கு
 7. மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
  செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
  மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
  செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

  கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
  கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
  நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை!

  =================
  மரம் இருந்தால் நிழல் இருக்கும் தனிமை இல்லை,
  மந்திரி இருந்தால் ஊழல் இருக்கும் தனிமை இல்லை!
  கொடி இருந்தால் மலர் இருக்கும் தனிமை இல்லை,
  பொடி இருந்தால் தும்மல் இருக்கும் தனிமை இல்லை!
  நாம் காணும் உலகில் என்றும் தனிமை இல்லை!

  பதிலளிநீக்கு
 8. /எல் கே said...
  ஏற்கனவே எழுதியது அனுப்பலாமா/
  தாராளமா அனுப்பலாம் எல் கே சார்!

  பதிலளிநீக்கு
 9. பொக்கிஷம்..

  உன்னை நீ அறிய உனக்கு வேண்டும்..
  உன் தவறை நீ உணர உனக்கு வேண்டும்..
  தனிமை எனும் பொக்கிஷம்..

  பதிலளிநீக்கு
 10. தனிமை இனிமை
  மனம் நிறையும் போது
  நினைவுகள் இசைக்கும்
  தனிமை கொடுமை
  மனம் வலிக்கும் போது
  நினைவுகள் தவிக்கும்

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்...
  அழகிய காட்சிப்படம். இங்கு முன்பும் ஒருமுறை கருத்துப்பதிவு செய்ய வந்திருந்தேன். இன்று தோழி ஏஞ்சலின் - http://kaagidhapookal.blogspot.de/- இங்கு கவிதைப்பகிர்வு செய்யும்படி கேட்டுக்கொள்ள வந்தேன். மிக்க நன்றி அஞ்சு(ஏஞ்சலின்).

  தோப்பான எழில்சோலை தேடுவாரற்று
  காப்பாருமில்லாமல் காவலும்தொலைந்து
  கூப்பாடுபோட்டு கூவிடும் குரல்தேய்ந்து
  நீர்ப்போடு நிலைதளர்ந்து நிர்மூலமாகியதே...

  வாய்ப்பிற்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 12. நல்ல படம்....

  ரசித்தேன் - சூழலையும், கவிதைகளையும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!