Monday, April 29, 2013

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 4 2013


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால்,...... அது பிரசுரமானால்,................ அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
 
இங்கு ஒரு மாறுதல்.
   

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  
==================================================================== 

மனிதனின் மறுபக்கம் படத்தில் சிவகுமார் 'கடவுள் தோற்றுப் போன இடம் அது. அந்த இடத்தில் நான் ஜெயிக்க விரும்புகிறேன்' என்று பேசுகிறார். 

1) கடவுள் தோற்றுப் போகும் இடம் எது? மனிதன் ஜெயிக்கும் இடம் எது?

2) வாழ்க்கை உங்களை உருவாக்கியதா, நீங்கள் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டீர்களா?

3) சங்கீதம், நாட்டியம் ஆகிய கலைகள் மதம் சார்ந்தே இருக்கின்றனவா? ஆயின், அது நன்மையா, தீமையா?

19 comments:

geethasmbsvm6 said...

1. படம் பார்த்ததில்லை என்பதால் சிவகுமார் இந்த வசனத்தை எந்தச் சூழ்நிலையில் சொல்லுகிறார்னு தெரியலை. ஆனாலும் கடவுளும் தோற்றுப் போகவில்லை; மனிதனும் ஜெயிக்கவில்லை. அவரவர் வேலையை அவரவர் கவனித்துக் கொண்டு போகிறார்கள். இதில் வெற்றி, தோல்விக்கு இடம் இல்லை. பருவ கால மாற்றமெல்லாம் நாம் விரும்பியா வருது? நாம் விரும்பிய வண்ணம் மழையை வரவழைக்க முடியுமா? ஏதோ ஏற்கெனவே இருந்த ஒண்ணு, ரெண்டு கண்டுபிடிப்புகளை வைத்து மனிதன் ஜெயித்துவிட்டான்னு சொல்ல இயலாது. ஹிஹிஹி, பெரிசாப் போயிடும், நிறுத்திக்கிறேன்.

geethasmbsvm6 said...

கூகிளார் ஒரே தகராறு. சரியாப் போகலை பதில் அதனால் ஒண்ணொண்ணா அனுப்பறேன். :))))

வாழ்க்கை நம்மை உருவாக்காது. நம்மைப் பண்படுத்தும். வாழ்க்கையின் ஏற்ற, இறக்கங்கள் மூலம் நம் மனம் விசாலமாகும், பக்குவம் ஏற்படும். நிதானம், விவேகம், எதையும் தாங்கும் வல்லமை போன்றவை தோன்றும்.

geethasmbsvm6 said...

3. எங்க ஸ்கூலில் "பெத்லெஹேம் குறவஞ்சி" நாட்டிய நாடகம் போட்டிருக்கோம். கலை நிகழ்ச்சியாகவே நடத்தி இருக்கோம். ஆகவே கலை மதம் சார்ந்தது அல்ல. எந்த மதத்தையும் அதன் சிறப்பையும் கலைகள் மூலம் வெளிப்படுத்தலாம். கஜலும், கவ்வாலியும் இல்லைனா உருது மொழியின் மஹிமையோ மொகலாயர்களின் கலைச் சிறப்போ தெரிந்திருக்காது. உண்மையான கலைஞன் மதம் சார்ந்து இருக்க மாட்டான். கலை எங்கிருந்து வந்தாலும், அதை ஆதரிப்பான். பகை நாட்டில் இருந்து வந்தாலும் கூட.

geethasmbsvm6 said...

இப்போது சமூகப் பிரக்ஞைகளோடு கூடிய நாட்டியங்கள் வர ஆரம்பித்திருக்கின்றனவே. தெரியும் இல்லையா?

ஸ்ரீராம். said...


முத்தான மூன்று பதில்களுக்கும் இலவச இணைப்பான கேள்விக்கும் நன்றி கீதாம்மா... முதல் வரவுக்கும் நன்றி... கூகிள் +க்கும் நன்றி!

பதில்கள் கீதா மேடம் ட்ரேட் மார்க் பதில்கள். 5 வயதுப் பிஞ்சைக் கொடுமைப் படுத்திய கயவன் விஷயத்தில் கடவுள் தோற்றுப் போகவில்லையா? மனிதன் ஜெயிக்கும் இடங்கள் மனிதம் வாழும் இடங்கள்! இரண்டாவது கேள்வியும் மூன்றாவது கேள்வியும் ஜேகேயினுடையது! :)))

geethasmbsvm6 said...

5 வயசுப் பிஞ்சைக் கடவுளா வந்து கொடுமைப் படுத்தச் சொன்னார்? நாம் செய்யும் குற்றங்களுக்கெல்லாம் கடவுளையே காரணம் காட்டிக் கொண்டிருந்தால் நாம் எப்போது தான் திருந்துவது? மனிதம் ஜெயிக்கும் இடங்கள் என்கிறீர்களே? அந்த மனிதத் தன்மை இல்லாமல் தானே குழந்தையைக் கொடுமைப் படுத்தி இருக்கிறான்1 வக்கிரபுத்தி உள்ளவன் செய்ததற்குக் கடவுள் எங்கே வந்தார்?

நன்மை, தீமை இரண்டையும் கடவுள் காட்டிக் கொடுத்ததில் நாம் தீமையைத் தேர்ந்தெடுத்தால் கடவுள் பொறுப்பாளி ஆக மாட்டார். அந்தக் குற்றவாளிக்கும் ஏதேனும் ஒரு தண்டனை மிகக் கொடிய தண்டனை நிச்சயம் கிடைக்கும்.

நாம் செய்ய வேண்டியது நீதியையும், நேர்மையையும், பெண்களுக்குத் துணையாக இருக்கும் வல்லமையையும் ஆண்களிடம் வளர்க்க வேண்டியதே. இதற்கு நம்ம ஜனாதிபதி இன்றைய தினசரியில் சொல்லி இருக்காப் போல் சின்ன வயசில் இருந்தே நீதி போதனைகளையும், தர்ம நியாயங்களையும் கற்றுக் கொடுப்பதோடு சட்ட நடவடிக்கைகளையும் மிகக் கடுமையாக மாற்ற வேண்டும்.

இதே பெண்கள் பெர்முடாஸ் அணிந்து மேல் நாடுகளில் செல்கையில் எந்த ஆணும் வலிந்து அவளைத் துன்புறுத்துவதில்லை. ஏனெனில் அங்கே சட்டதிட்டங்கள் கடினமானவை. எளிதில் தப்பிக்க இயலாது. இங்கே உளுத்துப் போன சட்டங்களை வைத்துக் கொண்டு என்னத்தைச் செய்யறது?

geethasmbsvm6 said...

நிர்பயா எனப் பெயரிடப் பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி இறந்ததும் ஏதோ ஒரு கம்பெனி(டாட்டா??) விளம்பரத்தில் பெண்களுக்கு ஆண்கள் துணையாக, பாதுகாப்பாக இருப்பது தான் வீரம் என்பது போல் காட்டினார்கள். இம்மாதிரியான விளம்பரங்களுக்கு வரவேற்பு இல்லை போலிருக்கு. இப்போ நிறுத்திட்டாங்க. :((( நீச்சல் உடையுடன் ஷேவிங் விளம்பரத்தில் பெண்ணைக் காட்டினால் தான் விற்கும். :(((((

rajalakshmi paramasivam said...

பதில் தெரியாது என்றால் பெஞ்ச் மேல் நிற்க வைப்பீர்களா?
அப்படியானால் நானே ஏறிக் கொள்கிறேன்.
ரொம்பக் கஷ்டமான கேள்வியாய் இருக்கிறதே,ஆனால் intereting.
பதில் எப்ப சொல்வீர்கள்.

ஸ்ரீராம். said...


பெஞ்ச் மேல எல்லாம் நிற்க வேண்டாம் ராஜலக்ஷ்மி மேடம்...! இந்தக் கேள்விகளுக்கு இதுதான் பதில் என்று எதுவும் கிடையாது. உங்கள் அபிப்ராயங்கள்தான் பதில்! உங்களுக்குத் தோன்றுவதை இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன். இல்லா விட்டாலும் பரவாயில்லை! மற்றவர்கள் எழுதுவதை நாம் படிக்கலாம். :))

கோமதி அரசு said...

கடவுள் தோற்றுப்போகும் இடம் - அன்பு மனிதனின் ஜெயிக்கு இடம் -- அன்பு.

மன்ம போல் வாழ்க்கை.(மனம் போனபடி அல்ல)

சங்க்கீதம் . நாட்டியம் இவை மதம் கடந்தது. எல்லா கலைகளுமே மதத்தை கடந்தவை..

’பசி’பரமசிவம் said...

முதல் கேள்விக்கு மட்டும் என் பதில்.....

“நான் ஏன் தோன்றினேன்?” என்று கடவுள் தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொள்ளும்போது.

கடவுளே தோற்றுப் போறார்னா, மனிதனாவது ஜெயிக்கிறதாவது?!

வல்லிசிம்ஹன் said...

கடவுள் தோற்றதாக ஏது சரித்திரம் ?
அவர் செய்த மனிதன்தான் கோளாறு செய்கிறான்.
தோற்றால் பக்தனிடம்தான் தோற்பார்.
2,
சிலசமயம் வாழ்க்கை தான் என்னை உருவாக்கியது.சிலசமயங்களில் நானும் திசையைத் திருப்பி இருக்கிறேன். அப்புறம் அது நல்லதுக்குத் தானா இன்றுவரை யோசிக்கிறேன்.
3,

மதம் சார்ந்து இசையோ வேறு எந்தக் கலையும்இல்லை.

இசையோ நாட்டியமோ மனிதர்களைச் சுலபத்தில் சென்றடையும். இறைவனையும் அடையும். அவரவருக்கு ஏற்ற இறைவன். அவரவர்க்கு ஏற்ற இசை!!

ஹாரி R. said...

//1) கடவுள் தோற்றுப் போகும் இடம் எது? மனிதன் ஜெயிக்கும் இடம் எது?
கடவுள் எங்கும் தோற்று போவதில்லை.. காரணம் நாம் கடவுளை கடவுளாக அறியவில்லை

2) வாழ்க்கை உங்களை உருவாக்கியதா, நீங்கள் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டீர்களா?
பலருடைய வாழ்க்கை தொகுப்பே ஒவ்வொருவரையும் உருவாக்கும்.. அதோடு பயணித்து நாம் நம் வாழ்க்கையை திறம்பட உருவாக்கினால் நல்லது..

3) சங்கீதம், நாட்டியம் ஆகிய கலைகள் மதம் சார்ந்தே இருக்கின்றனவா? ஆயின், அது நன்மையா, தீமையா?
கண்டிப்பாக இல்லை

Madhavan Srinivasagopalan said...

எல்லா கேள்விகளும் எனக்கு, 'அவுட் ஆஃப் சிலபஸ்....'

:-)

பாஹே said...

1) கடவுள் தோற்றுப் போகுமிடத்தில் மனிதனும், மனிதன் தோற்றுப் போகுமிடத்தில் கடவுளும் ஜெயிக்கிறார்கள்!

2) என் வாழ்க்கையை நான்தான் உருவாக்கிக் கொண்டேன். வாழ்க்கை என்னை உருவாக்கவில்லை.

3) பொதுவாக மதம் அடிப்படையில் வைத்துக் கொண்டால்தான் கலைகளுக்கு அர்த்தம் வருகிறது. கலைகள் மதம் சார்ந்துதான் வளர்கின்றன. இறைமை என்ற உணர்வுதான் அடிப்படை. இதை மனித பலவீனம் என்று கூடச் சொல்லலாம்.

நம்பள்கி said...

philosophical answer for question number 1.

இல்லாத ஒன்று எப்படி தோற்கும்? மனிதனாகப் பிறந்தவன் இறந்து பேரின்பத்தை அடைவதை [ஜெயிப்பதை] யாராலேயும் தடுக்க முடியாது...!

3. கேள்வியில் இந்து மதம் என்று இருந்திருக்கவேண்டும்.

geethasmbsvm6 said...

//1) கடவுள் தோற்றுப் போகுமிடத்தில் மனிதனும், மனிதன் தோற்றுப் போகுமிடத்தில் கடவுளும் ஜெயிக்கிறார்கள்!//

@பாஹே, கடவுள் நம்மைப் போல் யாராலும் தோற்றுவிக்கப்படவில்லை. அதோடு அவர் தோற்றார் ஜெயித்தார் என்பதற்கு நம்மைப் போல் ஊனும், உணர்வும், மனமும், புத்தியும், உள்ள சாதாரண மனிதருமில்லை. எல்லையற்ற சக்தியை நாம் கடவுளாக உருவகப் படுத்துவது நம் வசதிக்காகத் தானே! இதிலே கடவுள் தோற்றார் என்பது எங்கிருந்து வருகிறது? நம்மால் இயற்கையான ஒன்றைக் கூட மீற இயலாது. நம்மால் எதை உருவாக்க முடியும்? எல்லாம் உருவாவது எவ்வாறு? ஏற்கெனவே இருக்கும் ஒன்றைத் தான் நாம் கண்டு பிடித்துக் கொண்டிருக்கோம். புதுசா நாமாக எதைக் கண்டு பிடித்தோம்? ஒரு செடியில் பூவை நம்மால் மலர வைக்க இயலுமா? எல்லாம் அந்த அந்தப் பருவத்தில் தானாகத்தானே நடைபெற்று வருகிறது? பறவைகளுக்குப் பறக்க நாமா கற்றுக் கொடுக்கிறோம்? அல்லது நம் குழந்தைகளுக்கு அந்த அந்தப் பருவங்களில் இந்த இந்த விளையாட்டுக்கள் என்பதை நாம் சொல்லிக் கொடுக்கிறோமா? நான்கு மாதம் ஆன குழந்தை குப்புறத்திக்க முயற்சிப்பது நாம் சொல்லிக் கொடுத்தா?

இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் நம் மாயையே ஜெயிக்கிறது. இந்த வெற்றி, தோல்வி எல்லாம் கடவுளுக்குக் கிடையாது. என்னதான் அவர் ஆட்டுவித்தபடி நாம் ஆடுகிறோம் என்று சொன்னாலும் நடுவில் நாம் நம் இஷ்டப்படி பாதையை மாற்றிக் கொள்கிறோம்.

அப்பாதுரை said...

1. இரண்டுக்கும் ஒரே விடை. எல்லா இடத்திலும்.
2. கொடியசைந்ததும்
3. 18ம் நூற்றாண்டு வரை மதங்களைச் சார்ந்திருந்தது - உலகெங்கும். இறை ஒரு பெரிய கறை என்றாலும் தீமை என்று சொல்ல முடியவில்லை.

ஸ்ரீராம். said...


நன்றி கோமதி அரசு மேடம்...

நன்றி 'பசி பரமசிவம்...

நன்றி வல்லிம்மா...

நன்றி ஹாரி... (நீண்ட நாளைக்குப் பிறகு வருகை...! நன்றி)

நன்றி மாதவன்...

நன்றி பாஹே...

நன்றி நம்பள்கி... முதல் வருகை! மிக்க நன்றி.

மீள்வருகைக்கு நன்றி கீதா மேடம்...

நன்றி அப்பாதுரை.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!