புதன், 15 மே, 2013

மக்கள் டிவி - தமிழ்ப் பாடம் - நன்னன் - வெட்டி அரட்டை


மக்கள் தொலைக்காட்சியில் வரும் பல நல்ல நிகழ்ச்சிகளில் காலை ஆறரை மணி முதல் ஏழு மணி வரை வரும் 'அன்னை மொழி அறிவோம்' நிகழ்ச்சியும் ஒன்று. 

                                           

பேராசிரியர் மா. நன்னன்.

சென்னைத் தொலைகாட்சியின் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சியிலேயே இவர் நடத்தும் தமிழ்ப் பாடம் பிரபலம், சுவாரஸ்யம். ஏதோ எதிரில் நின்று பாடம் நடத்துவது போல 'ம்...பக்கத்துல பார்த்து எழுதக் கூடாது' என்பார். 'ம்...எச்சல் தொட்டு சிலேட்டை அழிக்கக் கூடாது' என்பார்.

இப்போது தமிழ்ப் புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு வரிகளுக்கிடையில் தப்பு கண்டு பிடிக்கிறார். என்ன புத்தகம் என்று கேமிரா காட்டுவதில்லை. பெரிய எழுத்தாளர்கள், பெரிய செய்தித்தாள் என்றெல்லாம் சாடுவார். 

                                               
  
நான் முதலில் இந்நிகழ்ச்சி சனி ஞாயிறுகளில் மட்டும் காலை ஆறரை மணிக்கு என்று ஒளிபரப்பபடுகிறது என்று நினைத்தேன். இப்போதுதான் வாரம் முழுவதும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்று தெரிகிறது!

தண்டவாளங்களுக்கு நடுவில் வரும் 14 ஸ்லீப்பர் கட்டைகளை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று ஆங்கிலத்தில் வந்திருந்த செய்தியை தமிழ்ப்'படுத்திய' நிருபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே தூங்கிக் கொண்டிருந்த 14 பேர்களை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று மொழி பெயர்த்தாராம்! 

                                                    

'சமீபத்திய பிரச்னைகளால் இந்தக் கூட்டணி உடையாது' என்று வந்திருந்த செய்தியை எடுத்துக் கொண்டார். இதில் என்ன பிழை? உடையாது என்று வரக் கூடாது. பிரியாது, கலையாது என்று சொல்லலாம். ஆங்கிலத்தை அப்படியே தமிழ்ப் படுத்த முயற்சிப்பதால் வரும் வினை இது என்றார். இந்தக் குறிப்பிட்ட வார்த்தை இப்போது எல்லோராலும் உபயோகப்படுத்தப்படும் வார்த்தையாகி விட்டது, எல்லோரும் தவறாகத்தான் உபயோகிக்கிறார்கள் என்றார்.


'இப்படித் தப்புத் தப்பா தமிழை, தமிழன்னையைக் கொலை செய்துட்டு, நன்னன் கத்தறான்னா என்ன செய்யறது?' என்று கேட்கிறார்!


தப்புத்தப்பாய் எழுதும் தமிழ் செய்தித்தாள் அதிபர்களையும் தமிழ் எழுத்தாளர்களையும் "பண்ணையார்களே" என்று அழைக்கிறார்!


"கேடு வரும் பின்னே...

மதி கெட்டு வரும் முன்னே.."

தப்புத் தப்பாய் எழுதித் தமிழைக் கொலை செய்பவர்கள் குறித்து அவர் சொல்வது இது.


"Local system உள்ள கச்சிதமான washing machine from siemens"  தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழர்களிடம் வாங்கச் சொல்லிக் கெஞ்சும், கெஞ்சி வியாபாரம் செய்பவர் இது மாதிரி தமிழைக் கொலை செய்கிறார்.... தமிழர்களே சொரணை இல்லையா? என்று கேட்கிறார்.

                                          
 
"ஆங்கிலத்துக்கோ, சமஸ்கிருதத்துக்கோ நான் எதிரி இல்லை. எனக்கும் ஆங்கிலம் தெரியும். வெளி இடங்களுக்குச் செல்லும்போது எனக்கும் ஆங்கிலம் உதவுகிறது. ஷேக்ஸ்பியர் போன்ற நாடக மேதைகளும் பல்வேறு இலக்கியங்களும் ஆங்கிலைத்திலும், சமஸ்கிருதத்திலும் இருக்கின்றன. ஆனால் அதற்காக அந்த மொழிகள் என் தமிழ்மொழியை அழிக்க விட மாட்டேன். பாம்பை அடிப்பது போல அடிக்க வேண்டும்" என்கிறார்.

அவர் சொல்லும் சில தவறுகள்...

                                            
 
"யார் ஒருவன், ஒருநாள், ஒரு விஷயத்தை..." என்று தொடங்கும் சொல்லில் யார் என்று வந்தால் ஒருவர் என்று வரவேண்டும்.. மரியாதையாகக் கூப்பீடு இங்க வாடா என்பது போல இருக்கிறது என்கிறார்.

ஆனால் இவரும் 'அண்ணன்மார்களே, தம்பிமார்களே, தமிழ்ப் பண்ணையார்களேஎன்று அன்போடும் மரியாதையோடும் அழைத்து 'சொரணை இல்லையா' என்று கேட்கிறார்!

                                                
 
வட இந்தியா, தென் இந்தியா... எத்தனை இந்தியாக்கள் ஐயா.... இந்தியாவின் வடபகுதி, தென்பகுதி என்று சொல்லுங்கள்' என்று சொல்லிக் கொடுக்கிறார்.

சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

'ஒரே பக்தர் திருப்பதி உண்டியலில் 5 கோடி ரூபாய் போட்டார்' இதில் 'ஏ'காரம் எங்கு வர வேண்டும்?


இங்கு திருத்தம் சொல்லும்போது நாத்திக வாதம் செய்யத் தவறவில்லை!


" மேலை நாட்டில் சிவாஜி மட்டும் பிறந்திருந்தால் எவ்வளவோ மரியாதைகள் கிடைத்திருக்கும்" என்ற சொல்லில் மட்டும் என்ற வார்த்தை எங்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். நமக்கு அது அவர் அந்த வரியை வாசிக்கும்போதே தெரிந்துவிடுகிறது. ஆனால் இது மாதிரித் தவறுகள் அச்சில் வந்துள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துகளிலேயே வந்துள்ளன என்கிறார்.


இதை எழுதும்போது கூட 'ஏ' காரமும், 'உம்' விகுதியும் ஒழுங்காகத்தான் சேர்த்துள்ளேனா என்று சந்தேகம் வருகிறது!

அப்புறம் அவர் சொன்ன விஷயம் ஒன்று...

சரி.... (உதாரணத்துக்கு) காந்தி இறந்த நாளை அனுசரிப்போமா, கொண்டாடுவோமா?

                                                    
 
"அனுசரிக்கப்படுகிறது என்று சொல்வது சரிதான் என்றாலும், உங்கள் பார்வைக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன், யோசனையை முன்வைக்கிறேன்.. ஒருவர் சொந்தக்காரராய் இருந்தாலும் பிரபலமானவராய் இருந்தாலும் மறைந்து விட்டார் என்று நினைக்கும்போது சோகமாகத்தான் இருக்கும். துக்கமாகத்தான் இருக்கும். ஆனால், நாள் செல்லச் செல்ல, அந்த துக்கம் மறைந்து விடுகிறது, மறந்து விடுகிறது. ஓராண்டுக்குப் பின், ஈராண்டுகளுக்குப்பின் அவர்களது நினைவுநாள் வரும்போது அவர்களின் நினைவுகளை அவர்களோடு நாம் கழித்த சந்தோஷப் பொழுதுகளை நினைத்து, நினைத்து சந்தோஷம்தானே படுவோம்? கொண்டாடப்படுகிறது என்று சொல்வதில் என்ன தவறு? இதைத் தீர்ப்பாக நான் சொல்லவில்லை, யோசனையாக முன்வைக்கிறேன்" என்றார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


சிவாஜி பற்றி நன்னன் பேசும்போது அறிவுஜீவியும் உடனிருந்தார்.

                                                  
 
அவர் மட்டும் அங்கு பிறந்திருந்தால் வாழ்ந்து மடிந்திருப்பார். அவ்வளவுதான்" என்று சொல்லும்பொழுது, இரண்டு தடவை நாற்காலியில் முன்னே சாய்ந்து கூர்ந்து கவனித்தார் அறிவு ஜீவி.
சரி இவர் சரியான சிவாஜி ரசிகர். எந்த ஒரு துரும்பையும் விடமாட்டார் என்றெண்ணி கிண்டலாக " என்ன நம் நடிகர் திலகத்தைப் பற்றி பேச்சு வந்தவுடன் ஒன்றி விட்டீர்கள் போல இருக்கே ?" என்றேன். 

                                         
 
அவர், "ஒன்றுவதாவது ஒன்றாவது? பேராசிரியர் கையை ஆட்டிப் பேசும்பொழுது கவனித்தீர்களா,  கீழ் நாடு மேல் நாடு என்று சொல்லும் பொழுது கீழேயும் மேலேயும் கையைக் காட்டிப் பேசினார். பேரசிரியர், அதுவும் நன்னன் அவர்களுக்கே இப்படி ஒரு மொழிக் குழப்பம் என்றால் நம் மாதிரி பேதைகளுக்கு ...?" என்று கூறி அவர் வழக்கம் போல இரண்டு முறை  முகவாயை சற்றே உயர்த்தித தலையை ஆட்டிச் சிரித்தார். 

ஹா..ஹா..ஹா.. அவர் தப்புக் கண்டுபிடிக்கும்போது நாம் தப்புக் கண்டுபிடிக்காமல் விடுவோமா....!

32 கருத்துகள்:

  1. இவ்வளவு உன்னிப்பாக கவனித்தமைக்கு வாழ்த்துக்கள்... (வேறு என்ன தர முடியும்... ஹிஹி)

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார். நீங்கள் பகிர்ந்த விதம் அதைவிட சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  3. சுவாரசியமாகத்தான் இருக்கிறது.இனி நானும் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. // ஆனால் அதற்காக அந்த மொழிகள் என் தமிழ்மொழியை அழிக்க விட மாட்டேன். பாம்பை அடிப்பது போல அடிக்க வேண்டும்" என்கிறார். //

    it's pity, that he feels, that 'one language' can be destroyed by 'another'

    I am proud to say that I know Tamil, English, Hindi..

    More languages one knows, better he is placed.

    // பாம்பை அடிப்பது போல அடிக்க வேண்டும்//

    "One doesn't not have any right to destroy any language".. it's applicable to him also.. I mean he has no right even to say like this.

    //தண்டவாளங்களுக்கு நடுவில் வரும் 14 ஸ்லீப்பர் கட்டைகளை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று ஆங்கிலத்தில் வந்திருந்த செய்தியை தமிழ்ப்'படுத்திய' //

    What a pity.. Nannan failed to blame the 'point' that the translator does not know 'English' well.. rather it seems that he blames that he didn't translate that to Tamil rightly.



    பதிலளிநீக்கு
  5. சரியான மதிப்பீடு. எனக்கு அவரிடம் பெரிய மதிப்பு உண்டு,.
    மக்கள் தொலைக்காட்சியில் பசுமை பேணல் காட்சியை எங்கள் வீட்டில் பார்ப்பார். படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோவில்:)

    பதிலளிநீக்கு
  6. வட இந்தியா தென்னிந்தியா என்பது பிரிவினை அல்ல. அப்படிப் பார்த்தால் வட பகுதி தென்பகுதி என்பதும் பிரிவினை தான்.

    பதிலளிநீக்கு
  7. //பாம்பை அடிப்பது போல அடிக்க வேண்டும்// I do not agree with this either. But, most everything else, I do agree.

    Calling them Southern India/Northern India make more sense than South India/North India. This has been discussed a lot elsewhere. South Korea/North Korea are two different countries; Southern Italy is still a part of Italy.

    பதிலளிநீக்கு
  8. madhavan comment படித்தபிறகே நானும் கவனித்தேன்.

    நன்னன் நன்றாக உளறுவார் போலிருக்கிறது. கஞ்சா கிஞ்சா அடித்துவிட்டு வந்திருப்பாரோ? மொழியை அடிக்க வேண்டுமா? என்ன உளறல்!

    பதிலளிநீக்கு
  9. தென்னிந்தியாவும் southern india என்பதன் சரியான தமிழே. south korea north korea (south/north america) போன்றவை முறையான எல்லைக்கோடுகள் வைத்துப் பிரிக்கப்பட்டவை. southern south americaவை எப்படிச் சொல்வது? northern north americaவை எப்படி அழைப்பது? (canada என்று சொன்னீங்க, பிச்சுருவேன் பிச்சு :).

    ஏதோ நன்னன் உளறுகிறார் என்பதற்காக நாம் ஏற்கவேண்டுமா என்ன? இருக்குற எத்தனையோ தமிழ் திருத்த வாய்ப்புக்களை விட்டு இதைப் பிடித்துக் கொண்டவருக்கு.. பூனை கிடைத்திருக்கிறது போல.

    பதிலளிநீக்கு
  10. south korea என்பதும் southern korea என்பதும் ஒன்றே. இங்கே இரண்டும் இரண்டு நாடுகள் என்பது தற்செயல் - முறைப்படுத்தப்பட்டத் தற்செயல். இதை வைத்து நன்னன் உளறலை நியாயப்படுத்துவது சரியா கெபி? அல்லது உங்கள் commentஐ நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா? North Korea பிரிகையில் south koreaவுக்கு வேறு பெயர்களும் பரிசீலனையில் இருந்தன.

    பதிலளிநீக்கு
  11. நன்னன் மாதிரி ஆட்கள் நிறைய பாம்படிப்பதால் தான் தமிழ் இன்றைக்குச் செழித்து வளர்ந்திருக்கிறது. அதுவும் சென்ற முப்பது ஆண்டுகளில் நன்னன் நிறைய பாம்புகளை அடித்துக் கொன்றிருப்பார் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  12. நல்லவேளையா, நன்னன் அம்பத்தூரில் எங்க வீட்டைப் பார்க்கலை! பாவம் சுப்புக்குட்டிங்க, பிழைச்சுப் போகட்டும். எங்க குழுமத்துத் தனித் தமிழ் ஆர்வலர்களை விட இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஹிஹிஹி, அவங்க எல்லாம் குழம்பி குடிப்பாங்க. கொட்டை வடிநீர் குடிப்பாங்க, பனிக்குழைவு சாப்பிடுவாங்க. போந்தடை சாப்பிடுவாங்க. :)))))

    எல்லாம் ஜோரா ஒரு தரம்கையத் தட்டிட்டு மண்டையைப் பிச்சுக்குங்கப்பா! மெதுவா வாரோம்! :))))))

    பதிலளிநீக்கு
  13. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின் தொடரலை ஏற்கலை! ஏற்கெனவே அப்டேட்டே ஆகிறதில்லை. இது வேறேயா?


    அது சரி சொல்ல வந்த விஷயம் என்னன்னா, நம்ம நக்கீரர் இ.கொ. இருக்கிறச்சே நன்னன் எல்லாம் எதுக்குன்னேன்?? அதுவும் காலங்கார்த்தாலே யாராக்கும் உட்கார முடியும்??? :)))))

    பதிலளிநீக்கு
  14. பிடிவாதமா பின் தொடரும் ஆப்ஷனுக்கு வேலை செய்ய மாட்டேங்குதே, இது என்ன சதி??? :))))

    பதிலளிநீக்கு
  15. எவர் என்று தொடங்கினால் ஒருவர் என்று தொடர வேண்டும். யார் என்பதைத் தொடரும் ஒருவர் ஒருவன் இரண்டும் சரி. நன்னனுக்கு யாருனா தமிழ் சொல்லிக் கொடுங்கப்பா.

    பதிலளிநீக்கு
  16. South/Southern difference and other arguments for Durai's response: http://english.stackexchange.com/questions/29274/south-vs-southern-difference

    Also, in the examples you gave, please keep in mind - Italy, Korea, India are countries; America is a continent. As in Southern Africa vs. South Africa vs. African South.

    என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில்.

    பதிலளிநீக்கு
  17. அனுசரித்தலும் கொண்டாடுதலும் வெவ்வேறு. அனுசரித்துக் கொண்டாடலாம். கொண்டாடி அனுசரிக்கலாம். அன்னையர் தினத்தை சிலர் அனுசரிக்கலாம்; சிலர் கொண்டாடலாம்; சிலர் இரண்டும் செய்யலாம்.

    என்னுடைய தமிழாசான் கிட்டே நன்னன் சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  18. சுட்டிக்கு நன்றி கெபி. அதைப் படிச்சதும் என் கேள்வி இன்னும் சரியாத் தோணுது. continent பிடிக்கலியா? சரி, southern south koreaவை எப்படி அழைப்பது? சுட்டியில ஒருத்தர் கொடுத்திருக்கும் The South என்று என்னைப் போல் யாரோ கொடுத்த விளக்கெண்ணெய் விளக்கம் வேண்டாமே? Orbitலிருந்து the south என்பது southern hemisphereஐக் குறிக்கும்). North Poleன் மையத்தில் நின்றால் எல்லாமே The South தான்.

    south and southern என்பதன் proper usage is subjective. there is no prescribed grammatical appropriateness in either usage. southern part என்று ஒவ்வொரு முறையும் சொல்லவேண்டாமே என்பதற்காக directional south பயன்பாடு. context sensitive usageல் தவறு சரி என்று கிடையாது. மொழியின் அழகே இப்படிப்பட்ட பயன்பாட்டில் வெளிப்படுகிறது.

    இது போன்றவற்றைப் பிடித்துக் கொள்கிறோம். i had my grub, i had my meal போன்றவற்றை விட்டுவிடுகிறோம்.

    என் சிற்றறிவுக்கும் எட்டாத வரையில் :)

    பதிலளிநீக்கு
  19. south africa is the same as african south - directional usage. south africa is different from african south - territorial usage.

    எது இலக்கண வழு அமைதி என்பது பயன்பாட்டைப் பொறுத்து அமைகிறது.

    பதிலளிநீக்கு
  20. நீங்கள் சொன்னது போல் நன்னன்அவர்கள் சென்னைத் தொலைகாட்சியில் தமிழ் கற்றுக் கொடுப்பதை நானும் கேட்டு ரசித்து இருக்கிறேன்.
    அவர் எதிரில் ஆள் இருப்பது போல பேசுவது நன்றாக இருக்கும்.
    மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன் ஆனால் கேட்கவில்லை.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. தமிழகத்திற்கு எதிரான ப.ம.கவின் சாதி அரசியலுக்கும் அப்பால் மக்கள் தொலைக்காட்சி பல நல்லவைகளை பகிர்கிறது.அவற்றில் நன்னன் அவர்களின் தமிழ் கற்றுத்தரும் நிகழ்ச்சியும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  22. பின்னூட்டங்கள் நன்னனை அடிச்சு ஆடுகிற மாதிரி தெரிகிறதே:)

    நன்னன் தமிழ் நிகழ்ச்சிகளை (பொறுமையோடு)பார்த்து விட்டு பின்னூட்டம் போடுவது நல்லது.தமிழ் இல்லாத ஊருக்கு இலுப்பை பூ மாதிரியாவது இருப்பதை வரவேற்போம்.

    இறப்பின் நினைவுகளை நாள் கழித்து கொண்டாடலாமென்ற நன்னனின் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை.

    பதிலளிநீக்கு
  23. திரு நன்னன் அவர்களின் தமிழ் பற்று எல்லோரும் அறிந்ததே. மிகச் சிறந்த அறிஞர்.

    நானும் அவரது தமிழ் பாடங்களை டிடியில் வந்த போது பார்த்திருக்கிறேன்.

    அவரைப் பற்றிய இந்தப் பதிவிற்கான பின்னூட்டங்கள் வருத்தத்தை கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. நன்னனின் கருத்துக்களை உளறலென்று சொல்ல எண்ணினேன் - அந்த முயற்சியில் வெளிப்பட்டிருக்கும் என் பண்பாட்டுக் குறைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  25. சுவாரசியமான நிகழ்ச்சிக்கு அதிக சுவாரசியமான விமர்சனம்!!

    பதிலளிநீக்கு
  26. @கீதா சாம்பசிவம்!மறுபடியும் பதிவுக்கு வந்ததில் உங்கள் பின்னூட்டம் கண்ணை உறுத்தியது.குழம்பி போன்ற சொற்களை பயன்படுத்தும் முயற்சியும் முதலில் தமிழில் எழுத்து அளவு அடுத்து ஆங்கிலத்தில் எழுத்து அளவு போன்ற திட்டங்கள் முன்பு தி.மு.க காசு சம்பாதிக்கனும் கொள்கைக்கு முன்பு தமிழகத்தில் பரிசோதனை செய்த விசயம்.தமிழ்க்குடி மகனுக்கும் கலைஞருக்கும் சரிப்பட்டு வரலையோ அல்லது தமிழ்க்குடி மகனின் தமிழ் கலைஞருக்கு சரிப்பட்டு வரலையோ மொழியாக்க முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.

    சொல் நா பழக்கம் மட்டுமே.நீங்கள் குறிப்பிட்ட சொற்கள் புழக்கத்தில் இல்லாமல் போனதால் வித்தியாசமாக தெரிகிறதென நினைக்கின்றேன்.

    மெட்ராஸ் தமிழ் படா பேஜாருப்பா இவன் சொல்லிப்பாருங்க!தேனாம்பேட்டையில் நின்று கொண்டு பேசுவது மாதிரியே இருக்கும்:)

    பதிலளிநீக்கு
  27. சென்னை தொலைக்காட்சியில் பேராசிரியர் நன்னனின் நிகழ்ச்சிகள் பார்த்துள்ளேன்! மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை! சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  28. @ராஜநடராஜன், சென்னையிலேயே பெருவாரியான ஆண்டுகளைக் கழித்திருந்தாலும் சென்னைத் தமிழ் இன்னமும் எனக்குப் புரியாது, சொல்லிப் பார்க்கும் அளவுக்கு வரவும் வராது! நன்றி ஆலோசனைக்கு! :))))))

    பதிலளிநீக்கு
  29. எப்படியிந்தப்பதிவினைப்படியாதொழிந்துபோனேனெக் கவலையிலேயேன்ன்னையுமறந்திருக்குமந்தவேளையிலே அப்பப்பா.. அந்த அப்பாதுரை சார் பின்னூட்டங்களையும் சுவைத்துக்கொண்டே மென்றுகொண்டே அடடா, இன்னும் இரண்டு பின்னூட்டங்கள் கூட போட்டிருக்ககூடாதா என நினைத்த அந்த வேளையிலே

    என்றோ 1979 அல்லது 1980 ல் மாயவரத்தில் அதுதான் இன்று மயிலாடுதுறை எனக்குறிப்பிடப்படும் ஒரு திருமண நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.

    அந்த கல்யாண மண்டபம் மிகவும் பெரியது. ஒரு கல்லூரி வளாகம் என நினைக்கிறேன். அங்கு என் நண்பரின் மகள் திருமணத்திற்கு ஆயிரம் பேருக்கு மேல் வந்திருந்து காலை உணவருந்தி திருமண மேடையிலே மண மகன், மண மகள் அமர்ந்து, அவர்கள் வாழ்விலே ஒன்று படும் நிகழ்ச்சியைத் துவங்குமுகத்தான் வருகை புரிந்த பற்பல பேச்சாளர்களிடையே முதன்மையான பேச்சாளராக அவர் வந்தார்..

    பேச வந்த இரு நிமிடங்களுக்கும் குறைவாகவே திருமண நிகழ்ச்சியின் மேடை அமைப்புகளைப்பற்றியும் அந்த அமைப்பு ஒரு திருமணத்திற்குத் தேவையா என்பது பற்றியும் துவங்கினார். இரு பெரிய மிகவும் பெரிய குத்துவிளக்குகளில் ஐந்து முகங்கள் கொண்ட தீபங்கள் சுடர் விட்டுக்கொண்டு இருந்தன. இந்த நிகழ்ச்சி முடியும் வரை இதில் நல்ல எண்ணை வீணாகிக்கொண்டிருக்கிறது. இது தேவைதானா திருமணத்திற்கு என்று சொன்னவர், தொடர்ந்து, இல்லங்களில் தினந்தோறும் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதால் எத்தனை எண்னை செலவாகிறது, அது மாதத்திற்கு எத்தனை செலவு, ஆண்டுக்கு எத்தனை செலவு, எனக்குறிப்பிட்டு விளக்கினார். இதை மிச்சப்படுத்தினால் என்னென்ன அத்தியாவசியமான செலவுகள் செய்ய இயலும் எனவும் பட்டியலிட்டார். ஒரு குடும்பம் தன் வாழ் நாட்களில் கிட்டத்தட்ட ரூ 50000 இந்த மாலை நேர விளக்கெரிக்கும் என்ணையிலே செலவிடுகிறதே என வருத்தப்பட்டார்.

    contd...

    பதிலளிநீக்கு
  30. அடுத்து, மணமகள் மணமகன் கழுத்திலே மாலை அணியும்பொழுது பார்வையாளர்கள் அரிசியையும், மஞ்சளையும் கலந்து அவர்கள் தலையிலே போட்டு எத்தனை எத்தனை படி அரிசியை வீணாக்குகிறார்கள். அவர்களை வாழ்த்த அவர்கள் தலையிலே அரிசியைப் போடவேண்டுமென, விழா நடக்குமிடம் எல்லாம் அரிசியை வாறி இறைப்பது நியாயமா எனக்கேட்டார். இது போன்று எல்லா குடும்பங்களும் இனி அரிசி அட்சதை வாழ்த்துச்செய்தியாக நினையாது சேகரித்தால் தமிழ் நாட்டில் ஒரு வருடத்திற்கு எத்தனை டன் அரிசி மிச்சப்படும் என்று கணக்குச் சொன்னார

    மேடைக்குப் பின்புறத்தில் திருப்பதி வெங்கடாசலபதி பத்மாவதி தாயார் படம் மிகப்பெரிய படம் மாட்டி இருந்தது.
    அந்த படத்திற்கு மிகப்பெரிய மாலைகள் சூட்டப்பட்டிருந்தது.

    ஒரு திருமணத்திற்கு இந்தப்படங்கள் தேவையா என்றார்.

    ஒரு வழியாக விழாவுக்கு வந்திருந்த அனைவரின் உள்ளத்தையும் கவரும் வகையில் பேசி முடித்தபின்
    தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தார்.

    அடுத்து வரும் நபர் மேடை மைக்குக்கு செல்லுமுன்பே , மாலை மாற்றும் வைபவம் என்று சொல்லப்பட்டது.

    மணமகன், மணமகள் மிகுந்த கரகோஷத்திற்கிடையே மாலை மாற்றிக்கொண்டனர்.

    அடுத்த கணமே கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர், தத்தம் கைகளிலிருந்து பூக்களையும், மலர்களையும், மஞ்சள் அட்சதைகளையும் பலர் அங்கிருந்தே மணமக்கள் தலையில் தூவினர். பற்பலர் மேடைக்குச்
    சென்று அவர்கள் தலையிலே அட்சதையைப்போட்டு ஆசிகள் வழ்ங்கினர்.

    அந்த விழா மண்டபம் முழுவதுமே பூக்களும் அட்சதைகளாலும் பரவி இருந்தது.

    அந்த திருமண வளாகமே அடுத்த நிமிடம் காலியாகி விருந்து நடக்கும் இடம் நோக்கி விரைந்தது. ( என்னையும் சேர்த்து தான் ) . சுவையிலும் சரி, பரிமாறுவதிலும் சரி, அது போன்ற விருந்து இனி கிடைக்குமா என்று இருந்தது.
    அவர்கள் கொடுத்த தாம்பூலப்பை இன்னும் அழகாக இருந்தது.

    நிகழ்ச்சி நடந்து கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு வருடங்களானாலும் அந்தப்பேச்சும் அந்தச் சாப்பாடும் அந்த விருந்தினரை என் நண்பர் உளமாற உபசரித்த நேர்த்தியும் என்னால் மறக்க முடியவில்லை.

    அதெல்லாம் சரி. அந்த பேச்சாளர் யார் எனக்கேட்கிறீர்களா ?

    சுப்பு தாத்தா.



    பதிலளிநீக்கு
  31. அதெல்லாம் சரி. அந்த பேச்சாளர் யார் எனக்கேட்கிறீர்களா ?

    ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  32. அந்த பேச்சை நான் குறிப்பிட்டதன் காரணம் . அந்த பேச்சாளரின்
    தமிழ் அழகு. சொல் அழகு. அச் சொற்களை கோர்வையாக பேசியது அழகு.

    கருத்துக்கள் மாறுபடலாம். மாறுபடும். ஆயினும் மொழி மாறிடின்
    சிதைந்திடின் அது மொழியின் முழுமைக்கு குந்தகம் விளைவிக்கும் நாளடைவில் அந்த மொழி மக்களிடையே முற்றிலும் மறைந்தே போகும்.

    வடமொழி சம்ஸ்க்ருதம் பண்டிதர்களால் மட்டுமே இலக்கண சுத்தமாக பேசப்பட்டு வந்தது. அது மக்கள் மத்தியில் சிதைந்தபோது பாலி ஆனது. பாலியில் இலக்கணம் செய்யப்பட்டது. இலக்கியம் உருவானது. அதைக் கட்டிபிடித்து ஒரு இலக்கண கூட்டுக்குள்ளே வைக்க துவங்குகையில் மறுபடியும் மக்கள் மத்தியில் ப்ராக்ருதம் உருவானது. அதே நிலைக்கு ப்ராக்ருதம் போனது. விருஜ பாஷை உருவானது. வ்ருஜ பாஷையும் சிதைந்தது முகலாய மன்னர்கள் ஆட்சியின் போது. பாரசி மொழி கலப்பில் ஒரு பக்கம் கடி போலி ( இன்றைய இந்தி ) இன்னொரு பக்கம் உருதுவும் உண்டாயின

    இது மொழி வரலாறு.. சம்ஸ்க்ருதம் இப்பொழுது ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு எல்லைக்குள் மட்டும் பேசப்படுகிறது அங்கு நான் சென்று இருந்தேன். அவர்கள் சம்ஸ்க்ருதம் பொதுவாக பேசுகிறார்கள் என்றாலும் இன்றைய கன்னட மொழியையும் கலந்து தான் பேசுகிறார்கள். இது தவிர்கமுடியாதது.

    தமிழ் ஒன்று தான் . ஆனால் நமது நாட்டில் இருக்கும் 25 மாவட்டங்களில் வழக்கு தமிழ் வேறாகி விட்டதே.

    தூயமாக, துல்லியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு நிலை.

    வாழ்வில் இன்பம் வேண்டும். அது தனக்கு எப்படி பொருந்துமோ அப்படி அதன் ஆரங்களை, நீட்டுவது மற்ற ஒரு வகை. அது போலவே மொழியை தனக்கு விருப்பம் போல் சிதைத்து இதுதான் இலக்கியம் என்று பிற்கால சந்ததியர் குழப்பச் செய்வது .

    நிர்வாணங்கள் நடுவிலே கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். என்பர்

    அதைச் சொல்லத்தான் மேற்கூறிய பின்னூட்டம் .
    அவரது தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைச் சாடுவது
    எனக்கு எள் அளவும் சம்மதம் இல்லை.

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!