புதன், 31 ஜூலை, 2013

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 7 2013


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால்,...... அது பிரசுரமானால்,................ அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 

இங்கு ஒரு மாறுதல்.
   

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  
====================================================================

1) ராமர்பிள்ளை மறுபடி மூலிகை பெட்ரோலுடன் வருகிறார். மூலிகை பெட்ரோல் இல்லை,மாற்று எரிசக்தி என்கிறார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மற்றும் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்கள் ஆதரவுடன் தொழிற்சாலை அமைத்து, பெரிய அளவில் தயார் செய்யப் போகிறாராம்.  ஆகஸ்ட்டில் லிட்டர் 5 ரூபாய், வரியுடன் 7  ரூபாய் என்று பெட்ரோல் விற்கப் போகிறாராம். இது நேற்று செய்தி. எந்த அளவு இது சாத்தியமாகும் என்று நினைக்கிறீர்கள்?

2) உறவுகளில் உயர்ந்த உறவு எது?


3) ஆரோக்கியத்தை, டயட்டை விடுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகை எது?!

23 கருத்துகள்:

 1. 3. உடனடி பதில்

  பார்டர் பரோட்டா
  சரவணபவன் க்ளோப் ஜாமுன் ( எங்க அலுவலகத்தில் உள்ள மலிவு விலை சரவண பவனில், ஆனால் மலிவு விலையே காசை பதம் பார்த்துவிடும்)
  என் அம்மா தயாரிப்பில் இரண்டாம் நாள் மிஞ்சும் மீன் குழம்பு

  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்லாம்லாம்லாம்லாம்லாம்லாம்லாம் :-)

  பதிலளிநீக்கு
 2. மாமன் வந்து இட்லி கொடுத்தால் கசக்குமா என்னா..?

  ஆமாம் மாமன் யாரு...?

  பதிலளிநீக்கு
 3. சாத்தியம் இல்லை... ஆனாலும் பார்த்துவிடுவோம் என்னதான் செய்கிறார் என.....

  தாயிற் சிறந்த கோவிலுமில்லை.....

  உணவில் - எனக்கு எந்தக் கட்டுப்பாடுமில்லை. அனைத்து சைவ உணவுகளும் பிடிக்கும்.....

  பதிலளிநீக்கு
 4. 1.எதாவது நடக்கற காரியமா சொல்லுங்க சார்.
  2.தாயைத் தவிர வேறெந்த உறவையும் சொல்ல முடியவில்லை.
  3.அது ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்குங்க...எதைச் சொல்ல...பொதுவாகவே எல்லா வகை உணவுகளுமே பிடிக்கும்...நான் சாப்பிட்டு பிடிக்காமல் போன ஒரே அயிட்டம் பீட்ஸா...

  பதிலளிநீக்கு
 5. வாய்ப்பில்லை
  அப்பா அம்மா உறவு
  சைவம் அனைத்தும்

  பதிலளிநீக்கு
 6. 1. சும்மா திரும்பவும் உடான்சு.

  2. உறவுகளில் இரண்டு உண்டு. ஒன்று இயல்பானது. அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, இவை எல்லாம். . natural relationship என்பர். இதில் நமது சாய்ஸ் எதுவுமே இல்லை. நமது குழந்தைகள் உட்பட இந்த இயல்பு உறவில் அமைகிறது.

  இரண்டாவது acquired relationship நாமாக வலிந்து ஏற்றுக்கொண்ட உறவு. .

  அன்னை உறவு இயற்கை. இயல்பாய் இருப்பது. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

  இல்லாளோ நம்மை நம்பி வந்தவள். அன்பும் அறனும் கூடிய அந்த இல்வாழ்க்கை தரும் உறவு . அதில் தான் நமது மன சுத்தம் விளங்கும்.
  இது ஒரு ம்யுசுவலி பெநேபிஷியல் ரெலேஷன்ஷிப் ஆக இருந்தாலும்
  மனதின் ஆகார விகாரங்கள் அதிகம் தெரியக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

  ஆக, இல்லாளுடன் உறவு தான் மேன்மை ஆனது. தாயன்புடன் இதை ஒப்பிட்டு பார்க்க இயலாது. அது வேறு வகை.

  3. எது பிடித்த உணவு ? உங்கள் வீட்டுக்கு வந்தால் தருவீர்களா ? சொல்லுங்கள். 1 ந்தேதி இரவு சென்னைக்கு வருகிறேன். ஏர்போர்ட்டிலிருந்து நேராக உங்கள் வீட்டிற்கு இரவு 1 மணிக்கு வந்து கதவை தட்டுவேன் பரவாயில்லையா ?

  சூடான இட்லி, மெதுவடை, டிக்ரி காபி.

  சுப்பு தாத்தா
  www.subbuthatha.blogspot.com
  www.vazhvuneri.blogspot.com

  பதிலளிநீக்கு
 7. எப்பவாச்சும் ஊதார் விடும் ராமர்... ஜொலித்தால் சந்தோஷமே....

  அம்மாவும் தாயைப் போல நமக்காக வாழும் மனைவியும்...

  பழைய சோறும் தயிரும் அப்படியே சின்ன வெங்காயமும் கொஞ்சம் ஊறுகாயும்.... அடிச்சிக்க முடியாது... அடிச்சிக்க முடியாது...

  பதிலளிநீக்கு
 8. ராமர் பிள்ளையின் மாற்று எரி சக்தி கிடைத்தால் சந்தோஷமே!

  உறவுகளில் உன்னதமானது கணவன் மனைவி உறவு தான்.

  எனக்கு மைஸூர் பாகு என்றால் மிகவும் பிடிக்கும் . ஸ்ரீ கிருஷ்ணா விலிருந்து அதிகம் வேண்டாம் ஒரு 5 கிலோ பார்சல் அனுப்பி விடுங்கள் அது போதும்.

  பதிலளிநீக்கு
 9. ராமர்பிள்ளை மாற்று எரிசக்தி கொண்டு வருவது சாத்தியமோ சாத்தியமில்லையோ வந்தால் நல்லதுதான்.

  உறவுகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. எல்லா உறவுகளும் உயர்ந்ததுதான். குழந்தையாக இருக்கும் போது குழந்தையிடம் உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டால் சில குழந்தை அம்மா என்று சொல்லும். சில் குழந்தை அம்மா, அப்பா இரண்டுபேரும் என்று சொல்லும்.
  திருமணமானபின் கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் உயர்ந்த உறவுதான் அதற்காக அவர் அவர் அம்மா, அப்பா உயர்ந்தவர்கள் இல்லை என்று அர்த்தம் இல்லை.அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகளும் வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்து வரும் உயர்ந்த உறவுகள் தான்.
  அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்கள் நம் குழந்தைகள் எல்லாம்
  சூரி சார் சொல்வது போல் நாம் விரும்பி அமைத்துக் கொண்டது இல்லை.இயல்பாய் அமைந்தது. உறவுகளில் சண்டை வந்தால் நாம் இனி நாம் ஒரே தாய் வயிற்றில் பிறப்போமா! இருக்கும் வரை ஒற்றுமையாக மகிழவாய் இருந்தால் என்ன என்று கேட்பார்கள்.

  பிடித்த உணவு என்று சிறுவயதில் கேட்டு இருந்தால் ஐஸ்கிரீம், கேக் என்று சொல்லி இருப்பேன். இப்போது குழந்தைகளுக்கு, பேரக்குழந்தைகளுக்கு பிடித்த உணவு எது என்றால் சொல்ல தெரியும் எனக்கு என்றால் கொஞ்சம் கஷ்டம். தோசை அதுவும் நல்ல முறுகல் தோசை பிடிக்கும்.  பதிலளிநீக்கு
 10. 1. அப்படி வந்தால் ஊருக்கும் உலகிற்கும் நல்லது தான்.
  2. மன(ண)உறவு.
  3. ஆட்டுக்கறி பிரியாணி, சிக்கன் தந்துர்ரி, தயிர் பச்சடி.

  பதிலளிநீக்கு
 11. 1. கஷ்டம்தான்!
  2. எதிர்பார்ப்பற்ற எந்த உறவும்
  3. இப்போதைக்கு ஃப்ரைட் ரைஸ்

  பதிலளிநீக்கு
 12. என்ன பாஸ் கேள்விலாம் கேட்டுகிட்டு....ஸ்கூல் பக்கமே ஒதுங்கினது இல்ல...

  பதிலளிநீக்கு
 13. 1.ஆமாம் ராமர் பிள்ளை இன்னும் உயிரோட இருக்கிறாரா?

  2.இல்லாளின் உறவே நிலையானது.

  3.குழைந்த சாதமும் தக்காளி ரசமும். 80 வயசில எல்லோரும் இதைத்தான் விரும்புவார்கள்.

  பதிலளிநீக்கு
 14. சுப்புத்தாத்தா... கலக்கிட்டீங்க! :))

  பதிலளிநீக்கு
 15. ஹிஹிஹி, ராமர் பிள்ளை பத்தி எந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கு??? ம்ம்ம்ம்???? இது எந்த அளவுக்கு நம்பகம்??? தெரியலை!


  2, நான் சொல்லநினைச்ச பதிலை சூரிசார், கோமதி அரசு, அருணா செல்வம் போன்றோர் சொல்லிட்டாங்க. இந்த உறவில் யாரும் குறுக்கிடவும் முடியாது. யாருக்கும் உரிமையும் இல்லை. :)))))

  3. இதுக்கும் நான் சொல்ல நினைச்ச பதிலை பழனி.கந்தசாமி சொல்லி இருக்கார். ஹிஹிஹி, ஆனால் 80 வயசிலே விரும்புவாங்கனு சொல்றதை மட்டும் அழிச்சுடுங்க. சின்னக் குழந்தைங்க கூட இதான் சாப்பிடும். மீ த ஒன் அன்ட் ஒன்லி சின்னக் குழந்தை இன் தி வெப் வேர்ல்ட்! :))))))))))

  பதிலளிநீக்கு
 16. 1 )தெரியாது

  2)சுயநலமில்லா நல்ல உறவு !

  3 )பிட்டு + முட்டைப்பொரியல் + இடிச்ச தேங்காய்ச் சம்பல் !

  பதிலளிநீக்கு
 17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. It is curious Ramar Pillai is still in the scene, which makes us wonder he might have something to prove after all. Good if he triumphs.

  Spouse.

  Adai, vatral kuzhambu, bajji.

  பதிலளிநீக்கு
 19. ராமர் பிள்ளை வெற்றி பெறட்டும். அப்புறம் பார்க்கலாம்.

  கணவன் மனைவி உறவுதான்.

  அம்மா இல்லாமல் நாமில்லை.அம்மா காட்டிக் கொடுத்தவர்தானே கணவர்.

  நல்லநெய் விட்டு முறுகலா மணக்க மணக்க,தேங்காய்ச் சட்டினி,சின்ன வெங்காய சம்பார்
  யாராவது செய்து கொடுத்தால் ராஜ்யத்தில் பாதி கொடுக்க ரெடி.

  பதிலளிநீக்கு
 20. 1. மூலிகைப் பெட்ரோல்? நல்ல ஜோக்!
  2. எப்போதும் கைவிடாத கைபிடித்தவர் தான்!
  3. இட்லி, மிளகாய்பொடி,இதயம் நல்லெண்ணெய் (விலை தான் விழி பிதுங்குகிறது!) ஆவி பறக்கும் எங்க ஊர் கோத்தாஸ் காபி!

  பதிலளிநீக்கு
 21. branded nameஉள்ள எண்ணெய்களெல்லாம் ஒட்டிக்கு இரட்டிப்பு விலை தான். நல்ல ஆயில் மில்லிலே அக்மார்க் நல்லெண்ணெய் வாங்கலாம். இங்கே தமிழ்நாட்டில் கிடைக்கும். பெண்களூரில் எப்படியோ தெரியாது. வடமாநிலங்களில் இன்னமும் மாடு சுற்றி வந்து ஆட்டும் செக்குகள் உள்ளன. நாங்க அங்கே போய்த் தான் வாங்கி வருவோம். விலையும் மலிவு. ரிஃபைன்ட் இல்லாத நல்ல சுத்தமான எண்ணெய் வாசனையோடு கிடைக்கும். ரிஃபைன்ட் எண்ணெய்களோ உடல் நலத்திற்குக் கேடு என்பதால் வாங்குவதே இல்லை. தே. எண்ணெய் கூட இங்கே ஶ்ரீரங்கத்தில் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 22. மஹாராஷ்ட்ராவில் கரும்புச் சாறு கூட மாடுகள் ஆட்டும் செக்கில் தான் ஆட்டித் தருவார்கள். அந்தச் சாறின் சுவையே தனி! சனி ஷிங்கனாப்பூர்ப் பக்கம் போனால் நிறையக் கரும்புச்சாறு ஆட்டும் மாடுகளைக் காணலாம். :)))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!