செவ்வாய், 30 ஜூலை, 2013

மனவரிகள்... 7 2013
எப்போதும்
மறைமுகமாகவே
வெளிப்படுகின்றன
கோபமும் அழுகையும்


 
அடக்க நினைத்தாலும்
மறைக்க
முடிவதில்லை
சந்தோஷத்தையும் சிரிப்பையும்

...
**************************************************************
**************************************************************

கண் மூடிக்
காத்திருக்கிறேன்
கனவுகளுக்காக


 
காதலி மட்டுமல்ல,
கனவுகளும்
காத்திருந்தால்
வருவதேயில்லை

**************************************************************
***************************************************************


ஒற்றைக் குடையோடு
காத்திருக்கிறேன்..
மழைக்காகவும்,
உனக்காகவும்....

*****************************************************************
******************************************************************

Photo: நீர் ஏன்
மலையானது?
மலை ஏன்
சிலையானது?

எதைக் கண்ட அதிர்ச்சியில்
இப்படி உறைந்து
நிற்கின்றன பனிப்பாறைகள்..!24 கருத்துகள்:

 1. மிகவும் ரசித்தேன் கனவுகளையும் பனிப்பாறைகளையும்...!

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப நாளா ஒரு சந்தேகம், அது ஏன் கவிதை, காத்திருத்தல் என்றால் காதலன், காதலியே வராங்க, அப்பா, அம்மாவுக்குக் குழந்தை காத்திருக்காதா? கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் காத்திருக்க மாட்டாங்களா? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! :))))

  பதிலளிநீக்கு
 3. மனவரிகள் எல்லாமே அருமை.
  கீதா கேட்பது சரியே.
  குழந்தை கூட அம்மாவுக்காகக் காத்திருக்கையில் அவள் வர நேரமாவது போலத் தோன்றும்!!!

  பதிலளிநீக்கு
 4. நான்கு கவிதைகளும் நன்றாக இருக்கிறது. பொருத்தமான படங்கள்.

  பதிலளிநீக்கு
 5. மகிழ்ச்சி தந்த மனவரிகள்! அருமை! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 6. //எதைக் கண்ட அதிர்ச்சியில்
  இப்படி உறைந்து
  நிற்கின்றன பனிப்பாறைகள்..!//

  ஸ்ரீராமின் கவிதைகளைக் கண்ட அதிர்ச்சியில் ... என்று ஒருவர் கூறுகிறார்!

  பதிலளிநீக்கு
 7. ஒருவேளை உங்கள் மனவரிகளைப் படித்துவிட்ட அதிர்ச்சியில் உறைந்து விட்டனவோ :-)

  பதிலளிநீக்கு
 8. கோபம், அழுகை
  சந்தோஷம், சிரிப்பு
  கனவு, காதலி
  குடை, மழை
  உறைதல், பனி

  -- இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், ஏதோ ஒரு புள்ளியில் குவிந்து ஒன்று சேருகிற மாதிரித் தோன்றுகிறதே!

  அது கூட இன்னொரு கவிதையோ!

  பதிலளிநீக்கு
 9. கண் மூடிக்
  காத்திருக்கிறேன்
  கனவுகளுக்காக

  காதலி மட்டுமல்ல,
  கனவுகளும்
  காத்திருந்தால்
  வருவதேயில்லை


  ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 10. ஹைக்கூ கவிதைகள் அசத்தல்.
  அதற்கு பக்க வாத்தியமாய் போட்டோக்கள்.

  நன்கு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்... தங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

  லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html

  பதிலளிநீக்கு
 12. எல்லா கவிதைகளும் நன்று. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 13. கவிதையும் உங்களுக்கு நன்றாக வருகிறது, ஸ்ரீராம்!
  மேலும் பல கவிதை எழுதி எங்களை அலற வைக்க - ஸாரி, ஸாரி, அசத்த வாழ்த்துக்கள்!:))

  பதிலளிநீக்கு
 14. மிகவும் ரசித்தேன். அருமை... அருமை... :)
  திரு.திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள் மூலம் தகவல் தெரிந்து.உங்களின் வலைத்தளத்திற்கு நான் முதல் முறையாக வருகிறேன்..
  அன்புடன்: S. முகம்மது நவ்சின் கான்(99likes)

  பதிலளிநீக்கு
 15. பனிப்பாறைகள் அருமை....
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. எல்லாம் எல்லாம் எல்லாமே சூப்பர் !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!