Wednesday, January 1, 2014

குட்டியானையின் கண்ணீர்.அம்மா...அம்மா...
எழுந்திரிம்மா...
என்னம்மா கண்ணு தொறக்க மாட்டேங்கறே...
எனக்கு உன்னை மட்டும்தானேம்மா தெரியும்?
அப்பா கூட கவனிக்கவே மாட்டாரே மா..
வொயரைத் தொட்டே...
விழுந்துட்டியேம்மா..
இனி நான் யார் கூடம்மா
இருப்பேன்?
கூட்டத்திலே மற்றவர்கள்
என்னை அவர்கள் அருகில்
அண்டக் கூட விடுவார்களா அம்மா...
என்னை எங்கேயும் தொலையாமல்
நீதானம்மா சேர்த்துச் சேர்த்து
அழைத்துப் போவே...
மனுஷக் கூட்டம் வர்றத்துக்குள்ள
வாம்மா போகலாம்
எழுந்திரிம்மா...
எழுந்திரிம்மா...

கூகிள் ப்ளஸ்ஸில் நண்பர்களால் பகிரப்பட்ட படம்.

மனிதர்கள் யானைக் கூட்டத்திலிருந்து தங்களை, தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள ஏற்படுத்திய மின்சார வேலியில் பட்டு உயிரிழந்த தன் தாயைத் தனது தும்பிக்கையால் தடவித் தடவிக் கண்ணீர் உகுத்த குட்டி யானையின் இந்தப் படம் மனதை ரொம்பவே பாதித்தது.

15 comments:

கோமதி அரசு said...

அம்மா...அம்மா...
எழுந்திரிம்மா...
என்னம்மா கண்ணு தொறக்க மாட்டேங்கறே...
எனக்கு உன்னை மட்டும்தானேம்மா தெரியும்?
அப்பா கூட கவனிக்கவே மாட்டாரே மா..//

மனது மிகவும் கஷ்டப்படது.
குட்டியானை இப்படித்தான் சொல்லி இருக்கும் உண்மை.
அருமையாக எழுதி இருக்கிறிரீகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

கலங்க வைத்தது...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் வருத்தமாக உள்ளது. ;( பாவம் அந்தக்குட்டி யானை. ;(

Geetha Sambasivam said...

குட்டி ஆனை பாவம். :((( ரொம்ப வருத்தமா இருக்கு. ஏற்கெனவே இங்கே ஶ்ரீரங்கத்து ஆண்டாளம்மாவைக் கவனிச்சு வந்த ஶ்ரீதரை வேலையை விட்டு நீக்கிட்டாங்க. புத்துணர்வு முகாமுக்குப் போயிருக்கும் ஆண்டாளம்மாவைத் திரும்ப ஶ்ரீரங்கம் அழைத்து வருவதில் பிரச்னை இருக்கும்னு சொல்றாங்க. அதுவே மனசைக் குடையறச்சே இது வேறே வருத்தமான செய்தி. :(((((

ராஜி said...

படமே மனசை கனக்க செய்யுது.

ADHI VENKAT said...

அம்மா இல்லன்னா மிகவும் கொடுமை தான்...:((( பாவம் அந்த குட்டி யானை...

வெங்கட் நாகராஜ் said...

அடடா.... ரொம்பவே கஷ்டமாக இருக்கு..... :(

Anonymous said...

வணக்கம்
ஐயா.

கவிதை மனதை கலக்கியது.. தாய் இல்லாத அருமை தங்களில் கவிதையில் தெரிகிறது...
வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

rajalakshmi paramasivam said...

யானையின் இடத்தில் நாம் போய் உட்கார்ந்து கொலவ்துமில்லாமல் யானைமேல் குறையும் சொல்லி அவைகளை துரத்துகிறேன் என்று பரலோகம் அனுப்பி வைக்கிறோம்.
உங்கள் கவிதை கண்ணில் நீர் வரவழைத்தது.

ராமலக்ஷ்மி said...

கலங்க வைக்கும் காட்சி. அவர்களது வாழ்விடத்தை ஆக்ரமித்துக் கொண்டே செல்வதோடு, அவற்றை விரட்ட எடுக்கும் நடவடிக்கைகள் பெரும் கொடுமை. இது எங்கெங்கும் தொடருகிறது:(.

சே. குமார் said...

கலங்க வைத்தது....

இளமதி said...

ஐயோ.. பரிதாபம்..:(

கொடுமையானது!

Kamatchi said...

குட்டி யானையின் கண்களில்தான் எவ்வளவு துயரம். உங்கள் வசன நடை
அதைவிடத் துயரம்.

Geetha M said...

MANAM KALANKUKIRATHU

Pattabi Raman said...

எங்களின் பக்தி எப்படிப்பட்டது தெரியுமா?
எல்லாம் வெளி வேஷம்

பாம்பை சிலை வைத்துக் கும்பிடுவோம்.
பாம்ம்பு புத்துக்கு பாலும் முட்டையும் வைப்போம். நாய்கள் சாப்பிட
பாம்ப்பின் மேல் படுத்திருக்கும் நாராயணனை வணங்குவோம்
பாம்பை கழுத்தில் சூடியிருக்கும் சிவனையும், தலைமேல் குடை பிடிக்கும் கருமாரியையும் வணங்குவோம்.
ஆனால் பாம்பைக் கண்டால் அடித்துக் கொன்று அதை எரித்து அதன் சாம்பலுக்கு பாலும் ஊற்ற தயங்கமாட்டோம்.

யானை தலையைக் கொண்ட பிள்ளையாரைக் தெய்வமாகக் கொண்டாடுவோம். ஆனால் நிஜ யானையை ஊருக்குள் வந்தால் அடித்து விரட்டுவோம்.
அதுதான் எங்களின் கடவுள் பக்தி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!