செவ்வாய், 21 ஜனவரி, 2014

மனவரிகள் 01 14

                   
      
எல்லாப் புன்னகையிலும் கொஞ்சம் சோகம் இருக்கிறது
எல்லாச் சோகங்களிலும் லேசான சுகம் இருக்கிறது
எல்லா மன்னிப்புகளிலும் கொஞ்சம் கோபம் மீதமிருக்கிறது
ஏன், எல்லாக் கோபங்களிலும் கொஞ்சம் பாசம் கூட இருக்கிறது.
எல்லா உறவுகளிலும் கொஞ்சம் போலி இருக்கிறது.
எல்லாப் பாசங்களிலும் கொஞ்சம் வேஷம் இருக்கிறது.


{}{}{}{}}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}



சூரியன் சென்றதில்
மேக ஆடை
மறைவிலிருந்து
வெட்கம் துறந்து
வெளிவருகிறாள்
நிலாப்பெண்!

{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}


யாருமே இல்லாத
சாத்வீகமான
சொர்க்கத்தை விட
சந்தடி மிகுந்த
நரகம் மேலோ...
பழகிப் போகும்
நரகங்கள்!

{}{}{}{}{}}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

இட்டார் பெரியோர்
இடாதார்
இழந்தார் சுவை!

இட்டார் பெரியோர்

சுட்டார் காக்கை!
.........
.........
........
வடாம்!
  
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
       


13 கருத்துகள்:

  1. காமெடிக் கவிதை அருமை ஸ்ரீராம் சார்!

    பதிலளிநீக்கு
  2. பெண் மிகவும் பிடித்திருந்தது - நிலாப் பெண்...!

    வடாம் சூப்பர்...!

    பதிலளிநீக்கு
  3. பழகிப் போகும் நரகங்கள்.. கவர்ந்தது... அருமை..

    பதிலளிநீக்கு
  4. பழகிப் போகும் நரகங்கள்!ரசிக்கவைத்தது..!

    பதிலளிநீக்கு
  5. எங்களுக்கு பழகிப் போச்சு நரகம்!

    நல்ல கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  6. நேத்தே போட்டுட்டீங்களா? எனக்கு அப்டேட்டே ஆகலை! :)))) கடைசிக் காக்காக் கவிதை அருமை. வடாமாத் தான் இருக்கணுமா?

    பதிலளிநீக்கு
  7. நிலா பெண், சுட்டார் காக்கை அருமை.

    பதிலளிநீக்கு
  8. நிலா பெண், சுட்டார் காக்கை அருமை.

    பதிலளிநீக்கு
  9. நிலா பெண், சுட்டார் காக்கை அருமை.

    பதிலளிநீக்கு
  10. அனைத்தும் அருமை.

    முதலாவது.. ஒவ்வொரு வரியிலும் உண்மை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. முதலாவது எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்ச்ச்ச்ச்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!