வெள்ளி, 10 ஜனவரி, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140110:: 10 காசு.

உங்களிடம் பத்து நாணயங்களைக் கொடுத்து, அவற்றை, 

# ஐந்து நேர்க் கோடுகளில் அமைக்க வேண்டும்.
# ஒவ்வொரு கோட்டிலும் நான்கு நாணயங்கள் அமைய வேண்டும் 
என்று கூறினால், உங்களால் அமைக்க முடியுமா? 
வெள்ளிக்கிழமை வீடியோ காண்பதற்கு முன்பு இதை முயற்சி செய்து பாருங்கள். 
              
உங்கள் விடை, இந்த வீடியோவில் காணப்படுகின்ற விடைகளிலிருந்து மாறுபட்டிருந்தால், எங்களுக்கும் சொல்லுங்கள். 
                  

16 கருத்துகள்:

 1. பருப்பை ஏன் துணியில முடிச்சு வைக்கணும்னு மொதல்ல சொல்லுங்க.

  பதிலளிநீக்கு
 2. அப்பாதுரை சார் - அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் பதில் சொல்லியிருக்கின்றேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 3. பத்தும் ஐந்து ரூபாய்க் காசா, பத்து ரூபாய்க் காசா? அதை முதல்லே சொல்லுங்க. :))))

  பதிலளிநீக்கு
 4. எனக்கு இப்போத் தான் இந்தப்பதிவே அப்டேட் ஆகி இருக்கு. அதுக்குள்ளே இங்கே 4 பின்னூட்டங்களா?

  பதிலளிநீக்கு
 5. என்ன அக்கிரமம் பாருங்க நான் பின்னூட்டம் போட்டுக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகப் போகுது. ஆனால் உங்க பதிவு வெளியாகி 46 நிமிஷம் தான் கூகிள் சத்தியம் பண்ணிட்டு இருக்கு. :))))))

  பதிலளிநீக்கு
 6. அட?? அப்பு சீரிஸா?? அப்புவுக்கு அனுப்பி வைக்கிறேன். :))) ஒண்ணு ஸ்டார் போட்டுட்டு அதிலே காயினை வைக்கணும். இன்னொண்ணு ஆங்கில ஏ போட்டுட்டு வைக்கணும். நடுவே கோடு வரணும், சரியா?

  பதிலளிநீக்கு
 7. புள்ளிக் கோலமோனு முதல்லே நினைச்சேன். :)

  பதிலளிநீக்கு
 8. ஒன்று வைக்க முடிந்தது
  அடுத்து காணொளிப் பார்த்து தெரிந்து கொண்டேன்
  சுவாரஸ்யமான பகிர்வு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. உங்க பதிவுக்கு யார் ப்லாகுலயோ கமென்ட் போட்டிருக்கேன் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. எந்த ப்ளாக்குன்னு சொன்னீங்கன்னா போய்ப் படிச்சுட்டு முடிஞ்சா அங்கேயே பதில் போட்டுடலாம்.

  பதிலளிநீக்கு
 11. ஸ்டார் போட்டு நாணயம் வைப்பதில் இன்னொரு புதிர் விளையாட்டு. உங்களுக்கு சவுகரியமாக தேர்ந்தெடுத்த மூன்று புள்ளிகள் கொண்ட நேர்க்கோட்டில் அமைந்த வரிசையில் மூன்றாவது புள்ளியில் ஒவ்வொரு நாணயமாக வைக்க வேண்டும். உங்கள் வரிசையில் தொடக்கத்தில் நாணயம் இருக்ககூடாது. ஏற்கனெவே வைத்த ஒரு நாணயத்தின் மீது இன்னொரு நாணயம் வைக்கக்ககூடாது. கடைசி (பத்தாவது) நாணயத்திற்கு மட்டும் விதிவிலக்கு. அதனை கடைசியில் காலியாக இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். யாருமே சொல்லவில்லையென்றால் விடை நாளைக்கு

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!