Saturday, January 25, 2014

கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்1) வயதைப் பொருட்படுத்தாது வாசிப்பை நேசிப்போரை உருவாக்கும் 75 வயது சண்முகவேல்.
 


 


3) கார்ப்பரேட் கம்பெனியில் நல்ல ஊதியத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, இன்றைய குழந்தைகள் இணையத்தளம், கணினி விளையாட்டு என்று மூழ்கியிருக்கும் குழந்தைகளைப் புத்தகங்கள் பக்கம் திருப்பவேண்டி, மடிப்பாக்கத்தில் 'ரீடர்ஸ் க்ளப்' என்று தொடங்கியிருக்கும் (www.readersclub.co.in) படிப்படியாகத் தொடங்கி இன்று 10,000 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கியிருப்பது பெரிசில்லை, அவைகளை கேட்பவர்கள் வீட்டுக்கெக் கொண்டு சென்று கொடுத்து விட்டு வருவதும், படித்த உடன் திரும்ப தானே நேரில் சென்று வாங்கியும் வருகிறார் திரு. சேதுராமன். கட்டணம் குழந்தைகளுக்கு 60 ரூபாய், பெரியவர்களுக்கு 75 ரூபாய். [19/1 கல்கியில் படித்தது]
 


4) விளம்பரத்தை விரும்பாத உதவி.  என்ன பெயர்?13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேடப்பட்டி கிராமம் என்பதை வன்மையாக...............

...........மகிழ்ச்சி அடைகிறேன்...! ஹிஹி...

எங்கள் வீட்டிலிருந்து சிறிது தூரம்...!

அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுக்கு நன்றி...

ராமலக்ஷ்மி said...

புத்தகத் தாத்தாவின் சேவை மகத்தானது. கட்டணம் உண்டென்றாலும் ரீடர்ஸ் க்ளப் புத்தகங்களின் பக்கம் சமுதாயத்தைத் திருப்புகிறது.

2. சுத்திதான் போடணும்.

4. நல்ல மனிதர். பத்திரமாகக் கொண்டு சேர்த்த வகையில் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவராகிறார் என்றாலும் சற்று யோசனையோடு உடனடியாகக் காவல் உதவி மையத்துக்கே அழைத்துச் சென்றிருந்தால் பெற்றோரின் தொடர்பு எண் கிடைத்திருக்க வாய்ப்பு இருக்கிறதே. பெற்றோருக்கு அந்த ஒரு இரவு ஒரு யுகமாக அல்லவா கடந்திருக்கும்.

Bagawanjee KA said...

#சாதி, மதம், பணப் பாகுபாடுக்கு எதிரா ஒரு புரட்சியைப் பண்ணணும்கிற வெறி#
இவர் சட்டை மட்டுமல்ல ,எண்ணமும் சிவப்புதான் ,இப்படிப்பட்ட அபூர்வ மனிதர்அய்யா சண்முகவேல் மதுரையில் இல்லேயேஎன ஏங்கவைத்து விட்டார் !

இராஜராஜேஸ்வரி said...

பாஸிட்டிவ் செய்திகளுக்குப் பாராட்டுக்கள்..!

ராஜி said...

மனதுக்கு இதமளிக்கும் பாசிட்டிவ் செய்திகளின் பகிர்வுக்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான செய்திகள்....

தொடர்ந்து நல்ல செய்திகளை தேடிப்பிடித்து பகிரும் உங்களுக்கு எனது நன்றி.

Geetha Sambasivam said...

சிறப்பான செய்திகள். புத்தகத்தாத்தா நீடூழி வாழணும்.

இப்போல்லாம் வீட்டுக்குப் புத்தகங்கள் கொண்டு வந்து கொடுக்கிறதே அபூர்வமாயிடுச்சு. முன்னாலெல்லாம் லென்டிங் லைப்ரரினு இருந்தது. இப்போல்லாம் யாரும் அப்படி நடத்திப் பார்க்கலை. :( மடிப்பாக்கம் செய்தியைப் படிச்சா அங்கே போயிடணும்போல இருந்தது. :))))

ADHI VENKAT said...

அனைத்து செய்திகளும் சிறப்பானவை...

புத்தக தாத்தா நல்லாயிருக்கணும்..

Pattabi Raman said...

படிப்பதில் இருக்கும் சுகம் எதிலும் கிடையாது.நம்முடைய மனம் அந்த புத்தகத்தில் உள்ள வரிகளின் இடையே அந்த பாத்திரங்களுடன்
கலந்துவிடும். நல்ல எழுத்தாளர்களின் படைப்புகள் கிடைத்தால்

நம் கவனத்தை திசை திருப்பும்
விளம்பர இடைவெளி கிடையாது

அதனால் மனம் ஒன்றி படிக்கலாம், அழலாம், சிரிக்கலாம், மகிழலாம். மோன நிலைக்கு சென்றுவிடலாம் . எந்தவித முயற்சியும் செய்யாமல்.

நல்ல புத்தகங்களே நல்ல நண்பர்கள், நல்ல வழிகாட்டிகள்.

குழந்தைகளை புத்தகங்களை படிக்க ஊக்குவிக்கவேண்டும் பெற்றோர்கள். அதற்கென
30 நிமிடமாவது ஒதுக்கி படிக்க அவர்களை பயிற்றுவிக்க வேண்டும். அதில் அவர்களுக்கு நாட்டம் ஏற்பட்டுவிடில் பிறகு அவர்களே அதைத் தொடருவார்கள்.

s suresh said...

அனைத்தும் அருமையான செய்திகள்! நன்றி!

rajalakshmi paramasivam said...

சிகப்பு சட்டைத் தாத்தா செய்யும் உபகாரம் மிகப்பெரியது. அவருக்குப் பாராட்டுக்கள்.
நிஜமாகவே வேடப்பட்டி கிராமத்திற்கு திருஷ்டி சுத்திப் போடனும் .
மதனல்லினக்கத்திற்கு இந்தியாவிற்கே எடுத்துக்காடாய் விளங்குகிறதே!
readers club செய்யும் சேவைக்கு இணையேது.
குழந்தையை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்த இஸ்லாமிய சகோதரருக்கு விஜயலட்சுமி குத்ம்பத்தார் என்றென்றும் கடமைபட்டிருக்கிரார்கள்.

பாசிடிவ் செய்திகள் மனதை குளிர்வித்தன.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல செய்திகள்.
காணாமல் போன பெண்ணை தேடி சென்று ஒப்படைத்த நபர் பாராட்டுக்குரியவர்.

G.M Balasubramaniam said...


எதிர்மறை சிந்தனைகளையே வாசித்துப் பழகி விட்ட என் போன்றவர்களுக்கு உங்கள் பாஸிடிவ் செதிகள் உற்சாகமூட்டுபவை. வாழ்த்துக்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!