செவ்வாய், 6 மே, 2014

தமிழ் சினிமாவின் கதை



                                                                

81 இல் முதற்பதிப்பு கண்ட புத்தகம். மூன்றாவது பதிப்பு ஜூன் 2008.

81 வரை வந்த தமிழ்ப் படங்களைப் பற்றிப் பேசுகிறது புத்தகம். 'அலை ஓசை' நாளிதழில் தொடராக எழுதப்பட்டது. 3 பெரிய தலைப்புகளிலும் (1. பூர்வ கதை, 2. முதல் 25 ஆண்டுகள் - அறிமுகக் கதைகள், 3. 57 முதல் 1981 வரை - விமர்சனத் தரிசனம்) 46 சிறிய தலைப்புகளிலும் பக்கங்கள் விரிகின்றன.
                                                                   

                                                              
எடிசனின் முதல் கண்டுபிடிப்பான கினிட்டோஸ்கோப் தொடங்கி, லூமியர் பிரதர்ஸ் கண்டுபிடித்த'சினிமாட்டோகிராபி' வழியாக சினிமாவின் தொடக்க காலம் தொட்டு ஆராயத் தொடங்குகிறது புத்தகம். 81 ஆம் வருடம் வரை வந்த படங்களைப் பற்றி மட்டும் பேசுகிறது. நாடகம் ஆக்கிரமித்திருந்த இந்தியாவை சினிமா விழுங்கியதைச் சொல்கிறது. 

இந்தப் புத்தகம் படித்ததில் சங்கரதாஸ் சுவாமிகள், ஹொன்னப்ப பாகவதர், நரசிம்மன், செருகளத்தூர் சாமா, பி ஏ பெரிய நாயகி, சின்னப்பா, கிட்டப்பா பாட்லிங் மணி, ரஞ்சன், என்று எல்லாப் பெயர்களும் நன்கு பரிச்சயமாகி விட்டன. 

இந்தியாவுக்கு வந்த முதல் படம் 'இயேசுவின் வாழ்க்கை', சாமிக்கண்ணு வின்சென்ட் (டென்ட் அல்லது டூரிங் திரையரங்குகளின் ஆரம்பர்) அவர்களின் திரையுலகச் சேவை, இந்தியாவின் முதல் திரைப்படம் (பேசாப் படம் - தாதா சாகேப் பால்கேப் தயாரித்தார் - 'அரிச்சந்திரா'), 1922 இல் நடந்து வந்த பார்த்ருஹரி பேசாப் படத்தைப் பார்த்த கிருஷ்ணசாமிப் பாவலர் அதை நாடகமாக்கி நடத்தியது...

1931 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி 'கினிமா' சென்டிரலில் (ஆம்,,, கினிமா செண்டிரலில்தான்) தமிழ், தெலுங்கு பாஷைகளில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம் (மிஸ் டி பி ராஜலக்ஷ்மி நடிக்கும்) "காளிதாஸ்" வெளிவந்தது. 
 
                                                                          
                                                              
காங்கிரஸ் தலைவர் எஸ். சத்யமூர்த்தி 'மனோஹரா' நாடகத்தில் மனோகரனாக நடித்திருக்கிறார். 

1938 களிலிருந்தே நடிக்கவந்த எம் என் நம்பியார், எம் ஆர் ராதா பற்றி,
எம் கே டி பாகவதர் படம் முதல் (அசோக்குமார்) இன்னும் பலரது படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த எம் ஜி ராமச்சந்தர் பற்றி..


         
எம் கே டி பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் சிக்கியது பற்றி..

1931 தொடங்கி ஒவ்வொரு வருடமாகச் சொல்லி, அந்த வருடங்களில் வந்த படங்களின் எண்ணிக்கை, ஓடியது, ஓடாதது, அவற்றில் ஏதாவது சிறப்பு இருந்தால் அவை, என்று 1951 வரை சொல்லிக் கொண்டு வருகிறார் அறந்தை நாராயணன். 


    
அப்புறம் மொத்தப் படங்களின் லிஸ்ட், ஸ்ரீதர், கே பாலசந்தர், எம் ஜி ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் என்று தனித் தனிப் பெயர்களாகக் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்.

படித்ததில் மாதிரிக்கு சிலவற்றை ஏற்கெனவே நான் 'எங்கள் ப்ளாக்'கிலும், முக நூலிலும் பகிர்ந்திருக்கிறேன்! 744 பக்கங்கள். எந்தெந்த புத்தகங்களிலிருந்து தகவல்கள் எடுத்தார் என்பதைக் கடைசி பக்கங்களில் சொல்லியிருக்கிறார். 

ஆதி காலத்திலிருந்தே ஆங்கிலம் முதல் ஹிந்தி வரை எல்லா மொழிகளிருந்தும் உருவி இருக்கிறார்கள் என்று தெரிகிறது! பராசக்தி, என் தங்கை இரண்டும் ஒரே மாதிரி கதை. இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன புத்தகத்தில். 

 
1935 ஆம் வருடத்தில் பாலாமணி என்றொரு நடிகை நடத்திவந்த நாடகமான 'டம்பாச்சாரி' என்ற நாடகத்தில் அந்தக் கம்பெனியின் மானேஜர் சி.எஸ். சாமண்ணா ஐயர் நாவிதர், தவசிப்பிள்ளை, டாபர் மாமா, எஞ்சினியர், தமிழ்ப்புலவர், கோமுட்டி செட்டியார், ஷேக்மீரா லெப்பை, அமீனா, வக்கீல், அப்பர் சாமிகள், சட்டிப்பரதேசி ஆகிய ஒன்றுக்கொன்று வித்தியாசமான 11 வேஷங்களில் நடிப்பாராம். இந்த நாடகத்தில் பெண்களே ஆண்களாகவும் நடிப்பார்களாம். கதாநாயகனாக பாலாமணி அம்மையார். பின்னர் இதுவும் படமாக வந்தது.



சென்சார் வந்த கதை, ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வரத்தொடங்கிய கட்டம்,
சின்னப்பா ராஜபார்ட் போட்ட நாடகங்களில் எம் ஜி ஆர் ஸ்திரீ பார்ட் போட்டிருக்கிறார். சிவாஜியும் நாடகங்களில் ஸ்திரீ பார்ட் போட்டிருக்கிறார்.


  

அம்பிகாபதி, ராஜபக்தி, உத்தமபுத்திரன், போன்ற பல படங்கள் மூண்டு முறைகள் வெவ்வேறு நடிகர்களை வைத்து படமாக்கப் பட்டிருக்கின்றன.

1936இல் வெளி வந்த 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற புத்தகத்தில் அப்போதே பாரதிதாசன் தமிழ் சினிமாவின் அபத்தங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். 
 

   

அதேபோல ஒரு படத்திலேயே இரண்டு கதைகள் முதல் நான்கு தனித்தனிக் கதைகள் வரை வைத்து படமாக்கியிருக்கின்றனர். அதனாலேயே இரண்டு தலைப்புகளும் இருக்கும் படங்களுக்கு!

1937 இல் 'பத்மஜோதி' என்ற படத்தில் கார்ட்டூன் முறைகள் சில நொடிகள் முயற்சித்திருக்கிறார்கள்.
 
கவர்ச்சிக்கு தவமணி தேவி என்று சிலோனிலிருந்து ஒரு நடிகை, மற்றும் கே டி ருக்மிணி... இன்னொரு ருக்மணி பேபி ருக்மணி.. நடிகை லக்ஷ்மியின் அம்மா!

                   
தமிழ் சினிமா உலகின் தரத்தை உயர்த்த முயன்ற முதல் டைரக்டர் கே. சுப்ரமணியம்தான் என்பது தமிழ் சினிமா உலக சரித்திரத்தின் புகழ் மிக்க அத்தியாயமாகும் என்கிறார் அறந்தை. இந்த கே சுப்பிரமணியம் நம் அபஸ்வரம் ராம்ஜியின் தந்தை. 

நடிகை கண்ணாம்பா நொடித்துப் போனதற்கு முக்கியக் காரணம் ஏ வி எம். செட்டியார். அதைப்பற்றிய விவரங்கள் புத்தகத்தில் இருக்கின்றன.

ஜெமினி வாசனின் விளம்பர டெக்னிக், நன்றாக ஓடியும் செலவு செய்த பணத்தோடு ஒப்பிடுகையில் நஷ்டக்கனக்குக் காட்டிய சந்த்ரலேகா படம்...

ஒருவர் மாதிரியே இருக்கும் இன்னொருவரை வைத்து படம் முடித்ததும், ஒருவருக்காக இன்னொருவர் டப்பிங் பேசியதும் 1939 லேயே நடந்துள்ளது. 
 

 
டி ஆர் மகாலிங்கம் சொந்தமாகத் தயாரித்த படங்கள் ஒன்று கூட வசூலைத் தரவில்லை.

இப்படி எத்தனையோ விவரங்கள் புத்தகத்தில்  சுவாரஸ்யமாகப் படிக்க முடிந்தது. சினிமாவில் விருப்பமுள்ளவர்கள் ஒரு முறை படிக்கலாம்!

தமிழ் சினிமாவின் கதை
அறந்தை நாராயணன்,
நியூ சென்சுரி புக் ஹௌஸ் (பி) லிட்.,
விலை 350 ரூபாய்.

19 கருத்துகள்:

  1. என்னது கினிமாவா...? பல தகவல்கள் அறியாத அரிய தொகுப்பு தான்...!

    பதிலளிநீக்கு
  2. முதல்லே இன்னொரு ருக்மிணி குமாரி ருக்மிணினு மாத்துங்க. பேபி ருக்மிணி இல்லை. ஶ்ரீ வள்ளி படத்தில் டி.ஆர்.மஹாலிங்கத்தோட வள்ளியா நடிச்சாங்க அவங்க லக்ஷ்மியோட அம்ம்ம்ம்ம்ம்ம்மா. பாட்டி இல்லை. லக்ஷ்மி பொண்ணு ஐஸ்வர்யாவுக்குத் தான் பாட்டி. :)))))

    பதிலளிநீக்கு
  3. ஹிஹி, அதான்முதல்லே கண்ணிலே பட்டது. பதிவை இனிமேத் தான் வாசிக்கணும். :)))

    பதிலளிநீக்கு
  4. //1935 ஆம் வருடத்தில் 'டம்பாச்சாரி' என்ற நாடகத்தில் நாவிதர், தவசிப்பிள்ளை, டாபர் மாமா, எஞ்சினியர், தமிழ்ப்புலவர், கோமுட்டி செட்டியார், ஷேக்மீரா லெப்பை, அமீனா, வக்கீல், அப்பர் சாமிகள், சட்டிப்பரதேசி ஆகிய ஒன்றுக்கொன்று வித்தியாசமான 11 வேஷங்களில் நடிப்பாராம்.//

    அப்படி நடிச்சவர் யாராக்கும்????

    பதிலளிநீக்கு
  5. டி.ஆர்.மஹாலிங்கம் தென்கரையைச் சேர்ந்தவர். மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலத்துக்கு எதிர்க்கரையில்! தூரத்துச் சொந்தம்(அப்பாவுக்கு) எங்க வீட்டுக் கல்யாணங்களில் தவறாமல் அந்தக்காலத்துப் பழைய அம்பாசடர் காரில் குடும்ப சமேதராக ஆஜராவார். அவர் நடித்துப் பிரபலமான கதாநாயகன் பெயரான சுகுமாரன் என்பதைத் தான் அவர் பிள்ளைக்குப் பெயராக வைத்திருந்தார்.

    பதிலளிநீக்கு
  6. தற்செயலாக வந்து பார்த்தேன். இந்தப் பதிவு அப்டேட்டே ஆகலை! :)

    பதிலளிநீக்கு
  7. யாரானும் ஓ.சி. கொடுத்தால் படிக்கிறேன். :)

    பதிலளிநீக்கு

  8. நன்றி கீதா மேடம்... திருத்தியதோடு இல்லாமல் விட்டுப் போன வரிகளையும் சேர்த்து விட்டேன்.

    ருக்மிணி பேபியாக நடித்த காலம் போலும். புத்தகத்தில் அப்படித்தான் போட்டிருப்பதால் நானும் அப்படியே போட்டேன். 'அம்மா' என்று திருத்தி விட்டேன்.

    டி ஆர் மகாலிங்கத்தின் ஊர் சோழவந்தான்! அவர் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது எங்கள் வீட்டிலிருந்து அவருக்கு சாப்பாடு போயிருக்கிறது. அவருக்கு நான் 'தென்றலோடு உடன்பிறந்தாள்' பாடல் பாடிக்காட்டியிருக்கிறேன்! என் தந்தை அவரின் ரசிகர்!

    பதிலளிநீக்கு
  9. சாரி, சோழவந்தான் அருகிலுள்ள தென்கரை என்பதற்குத் திருமங்கலம் என எழுதி விட்டேன். இங்கே திருமங்கலம் பத்திப் பேச்சு நடந்து கொண்டிருக்கையில் அதையே எழுதிட்டேன். :))) அவர் இனிஷியலில் உள்ள டிக்கு அர்த்தம் தென்கரை என்பதே. இவரைப்பற்றி கு.ஞானசம்பந்தன் கூடக் குறிப்பிட்டிருப்பார். :)))

    பதிலளிநீக்கு
  10. ஹிஹிஹி, உங்க பின்னூட்டத்தையும் இப்போத் தான் பார்த்தேன். தவறைச் சுட்டிக்காட்டியதுக்கு நன்னி ஹை!

    அப்போ நல்லாப் பாடுவீங்கனு சொல்லுங்க. இங்கே வந்தா ஒரு கச்சேரி வைச்சுக்கலாம்

    பதிலளிநீக்கு
  11. 1) என்னது... ஒருவரே நாடகத்தில் 11 வேடம் போட்டு நடித்தாரா...? அசுர சாதனை ஐயா..!
    2) ஒரே மாதிரி கதைகளை படம் ஆக்கறதுங்கறது அந்த நாள்லருந்தே தொடரும் ஒரு விஷயம்ங்கற்து வியப்பு.
    3) ‘அம்பி’ அங்கிளுக்கு முன்னால பாடினீங்களா? எனக்கு நீங்க பாடிக் காட்டலையே... அடுத்த முறை பாக்கறப்ப பாடிக் காட்டணும்... ஐ மீன் வாயால பாடி!
    4) புத்தக அறிமுகம் செமத்தியா பண்ற நீங்க எங்க ‘வாசகர் கூடத்துல‘யும் பங்கெடுத்துக்கணும்னு சின்னதா ஒரு விண்ணப்பம் ஐயா.

    பதிலளிநீக்கு
  12. அம்பி அங்கிள்? டி ஆர் எம்கு அப்படி ஒரு பெயரா? Ganesh... :))))

    பதிலளிநீக்கு
  13. @ஶ்ரீராம், பதினோரு வேடங்களில் நடிச்சவர் பெயரை இன்னும் சொல்லலை! :))))

    பதிலளிநீக்கு
  14. ஆமாம்... ஏ.வி.எம்.நிறுவனத்தில பல படம் பண்ணின டி.ஆர்.எம்மை மெய்யப்பச் செட்டியார் அவர்கள் அப்படித்தான் அழைப்பாராம் ஸ்ரீ.

    பதிலளிநீக்கு
  15. பல தகவல்கள்! இதுவரை நான் அறியாத அரிய தொகுப்ப! நன்றி! நண்பரே!

    பதிலளிநீக்கு
  16. கீதா மேடம்... காலையிலேயே திருத்தி விட்டேன் என்று எழுதி இருக்கிறேனே... பதிவில் சேர்த்திருக்கிறேன் பாருங்க... எப்படியோ விடுபட்டுப் போயிருந்த இரண்டு வரிகளும் அதே பாராவில் இணைத்திருக்கிறேன்!

    நன்றி கணேஷ். அட! நீங்கள் சொல்லியிருக்கும் விவரம் அந்தப் புத்தகத்தில் கூட இல்லை. பாட்டா..... அந்த வயதில் பாடியதற்கும் இப்போது பாடுவதற்கும் வித்யாசம் இருக்கே! வாசகர் கூடத்தில் ... கூடிய சீக்கிரம் எழுதிடுவோம்!

    நன்றி R R மேடம்.

    நன்றி புலவர் ஐயா... பதிவில் விட்டுப் போன இன்னும் சில வரிகளை இங்கு தருகிறேன்! லட்சுமிகாந்தன் கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியே வந்ததும் என் எஸ் கே மார்க்கெட் எப்பவும்போல அல்லது இன்னும் நன்றாகவே ஏறியது. ஆனால் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக எம் கே டி பாகவதருக்கு தொடர் தோல்வி.

    பதிலளிநீக்கு
  17. அப்பாடி எத்தனை தகவல்கள். முடிந்தால் வாங்குகிறேன். ரொம்ப அவசியம் பாருங்க. இருந்தாலும் வம்பு யாரை விட்டது. கண்ணாம்பா நொடிக்க ஏவிஎம் காரணமா.பாவம் நல்ல நடிகையாச்சே. என் எஸ்கே நல்லவர் ,.ஆனாலும் அவர் செழிப்புடன் இருந்து மரணத்தின்போது எம்ஜிஆர் உதவினதாகப் படித்த நினைவு.என்ன ஒரு கலைஞன் அவர்,. மிக நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!