நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
21.4.26
23.11.23
நிஜ சுஜாதா பற்றி எழுத்தாளர் சுஜாதா
உங்களுக்கெல்லாம் தெரியும், நீங்கள் ஓலா, ஊபர், ரேபிடோ புக் செய்த உடன் அவர்கள் பெயருடன் வண்டி எண் உங்களுக்கு தகவலாய் வரும்.
27.2.20
உறவில் விரிசல் - சுஜாதா மறைந்த தினம்
மனத்தாங்கல் ஏற்பட்ட நண்பனுடனேயே நான் பேசியதைச் சொன்னேன். உறவுகளுக்குள் எனக்கு பேசாமல் இருக்கும் அளவு - அதுவும் வருடக்கணக்கில் - சண்டை வந்தது இல்லை.
27.9.19
26.9.19
29.8.19
28.3.19
28.2.19
மொபைல் பையில், பை வண்டியில், வண்டி?
புதுமணத்தம்பதிகள் முன்னே புடவை, வேஷ்டி சரசரக்க நடக்க, மற்றவர்கள் குழுக்குழுவாக தங்களுக்குள் உரையாடியபடியே தொடர்ந்தார்கள்.
25.10.18
26.4.18
அத்திரிமாக்கும் அத்து மீறலும்!
என் மகன் ஒரு சம்பவம் சொன்னான். அவன் நண்பன் ஒரு 'ஸ்பீச்' கொடுக்கத் தயார் செய்திருந்தானாம். நிகழ்ச்சி, காலை என்பதற்கு பதிலாக மாலை என்று மாறியதாம். விருந்தினர் பெயரிலும் இரண்டு மாறுதல்கள் இருந்ததாம். 'அதை மாற்றிப் படி' என்றால், 'ஐயோ... இதுவரை மனப்பாடம் செய்து வைத்தது எல்லாம் மறந்து விட்டதே... இதை மாற்றினேன் என்றால் எல்லாவற்றையும் மறந்து மாற்றி விடுவேன்" என்றானாம்...
13.1.16
ரசித்தவை, ருசித்தவை :: சுஜாதா வர்ணனைகள்..
ஆனால் அதுவும் கஷ்டமான கேள்வியல்ல. ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றை எளிதாகச் சொல்லி விடலாம்!
1) சரண்யா போனை வைத்தாள். அவள் திலீப்புக்கு சம உயரம் இருப்பாள். பூசின தேகம். முதல் பிரசவத்திலேயே மாமியாகி விடுவாள் என எச்சரித்தது. எடையையும் இடையையும் கவனிக்கவில்லை என்றால் பருத்து விடுவாள். ஆனால் குழந்தை முகம். அவளுக்கு நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஏன், எலி, அணில்கள் எல்லாம் பிடிக்கும். கர்னாடக சங்கீதம் கேட்பாள். லூயி கரால் படிப்பாள்.
2) உள்ளே நுழைந்த பெண்ணுக்கு வயது பத்தொன்பதுக்கு மேல் ஒரு செகண்ட் கூட இருக்காது என்று தோன்றியது. கரிய கூந்தல், கரிய கண்கள், உடலின் சாத்தியங்களை மழுப்பியிருந்த கரிய பளபளப்பு உடைகள். அதன் மார்புப் பகுதியில் எம்ப்ராய்டரி போட்டு, வசந்த்தின் இதயத் துடிப்பை கதிகலக்க சற்றே திறந்திருந்தது. பிரதான மூக்கில் குத்தி ஒரே ஒரு சிறிய வைரம் பளிச்சிட்டது. தூக்கலான மூக்குக்குத் தோதாக இருந்தது.
3) "மே ஐ கமின்?" என்றாள்.
"யெஸ்" என்றேன். நைலான் சாகரமாக உள்ளே நுழைந்தாள். அவள் அணிந்திருந்த புடைவையை நான் விரும்பினேன். நான் மட்டும் தொடர் நாவலின் ஹீரோ சேகராக இருந்தால் அவளைக் கண்ட உடன் காதல் கொண்டிருப்பேன். அழகி. மூக்கு நுனியில் ஒரு சிறு வளைவு ஒரே குறை. யூனிவர்ஸிட்டி படிப்பினால் உதட்டோரத்தில் ஒர் அலட்சியம். நல்ல வளர்த்தி. நல்ல வளர்ப்பினால் பொருத்தமான உடை, பொய்யில்லாத வளப்பம். புன்னகைக்காக சுப்ரீம் கோர்ட் வரை வாதாடலாம். மனித வாழ்க்கைக்கு அத்தம், காரணம் ஏற்படுத்தும் புன்னகை.
4) எனக்காக அந்த மாது காத்திருந்தாள். "நீங்கள் பத்து நிமிஷம் லேட்" என்றாள். நான் கதவைத் திறந்து என் தாமதத்தைப் புன்னகையால் மறைத்தேன். பின் குறிப்பாக "ஸாரி" என்றேன். அம்மாள் வெண்மை சாகரமாக இருந்தாள். அவளுக்கு வயது நாற்பத்தி எட்டு இருக்கலாம். லேசாக மீசை இருந்தது. கண்களில் கண்ணாடி வட்டங்கள். தலையில் நரை என்பதே இல்லை. விஸ்தாரமாக இருந்தாள்.
5) நான் கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போகிறவன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெண் என் முன் எப்படி வந்து உட்காருவாள்? அப்படி வந்து உட்காந்தாள் மாயா. தரை நோக்கி வந்தாள். ஒரு தடவை நிமிர்ந்து கரம் குவித்து, போர்த்திக் கொண்டு உட்கார்ந்தாள். தன் கை நகங்களைப் பார்த்துக் கொண்டாள். எளிய ஸாரி அணிந்திருந்தாள். கழுத்தில் காதில் நகைகள் இல்லை. திருவள்ளுவரின் 'மனைமாட்சி' என்கிற அதிகாரத்திலிருந்து நேரே நடந்து வந்தவள் போலிருந்தாள்.
6) "என்ன ரத்னா?" என்று குரல் கேட்டுத் திரும்பினேன். சரஸ்வதி! ஆம். அவள்தான் சரஸ்வதியாய் இருக்க வேண்டும். அம்மாடி! ஒரு இந்தியப் பெண்ணுக்கு இத்தகைய அதிக உயரம், வளர்த்தி, அடர்த்தி! உடைகளை மீறி வழிந்து கொண்டிருந்தாள் சரஸ்வதி. நல்ல உயர்தரப் பட்டுப்புடைவை அணிந்து கொண்டு சிக்கனமாக தலையை முடிந்து கொண்டு, நெற்றியில் ஒன்றுமில்லாமல்... நாற்பது வயதிருக்கும். இன்னும் அழகு தேங்கியிருக்கும் சரஸ்வதி. காயத்ரியின் வருணனை கச்சிதமாகப் பொருந்துகிறது.
27.11.10
சொல்ல முடியுதா பாருங்க...
பிரபல எழுத்தாளர்கள் எழுதிய எத்தனையோ கதைகளைப் படித்திருப்போம். கதைகள், எழுத்தாளர்களை மறக்க முடியாதது போலவே கதா பாத்திரங்களையும் மறக்க முடியாது. பெர்ரி மேசன், சி ஐ டி சந்துரு துப்பறியும் சாம்பு, சங்கர்லால், இன்ஸ்பெக்டர் வகாப், கணேஷ் - வசந்த், போன்ற கேரக்டர்களை மறக்க முடியாது. படைத்த எழுத்தாளர்களையும் சொல்லி விடுவீர்கள். கீழே உள்ளவற்றைப் படித்து, யார் எழுதியது, எந்தக் கதை என்று நினைவு படுத்த முடிகிறதா என்று பாருங்களேன்....
!) அரை ப்ளேடு அருணாசலம், பீமா ராவ், ரசகுண்டு.... இந்த துணைக் கேரக்டர்களும் மிக பிரபலமானவர்களே...உங்களுக்குத் தெரியாததா...!யார் எழுத்தாளர்?
2) "அச்சமே கீழ்களது ஆசாரம்" என்று அடிக்கடி சொல்லும், அதுவும் மாதவியிடம் சொல்லும் கோபக்கார நாடகாசிரியர் - கதா நாயகன் - முத்துக் குமரன்...அவனது பினாங்கு நண்பன் மற்றும் ஸ்பான்சர் கோபால்..எந்தக் கதையில்? யார் எழுதியது?
3) சுஜாதா கதைகளிலிருந்து ஒன்றிரண்டு கேள்விகள்..
(அ).ஒரு குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லும் போது குண்டு வெடித்து குற்றம் நிகழ்வது போல இரண்டு கதைகள் (எனக்குத் தெரிந்து!)... என்னென்ன?
(ஆ) சென்னையையே கலக்கிய அந்த மாபெரும் குற்றவாளியை, கொலைகாரனை கணேஷ் வசந்த் பிடித்தும் கூட 'நீ ஒன்றுமே செய்யவில்லை' என்று சொல்லி விட்டு விடுகிறார்கள். வசந்த்தே கூட எதிர் பாராத திருப்பம் அது... எந்தக் கதையில்?
(இ) சுஜாதா சினிமாவுக்காகவே எழுதிய முதல் கதை எது? அவரது எந்தக் கதை படமாக்கப் பட்ட விதத்தின் அதிருப்தியில் 'இவைகளை திரைப் படமாக எடுக்க யாரும் கேட்க முடியாது' என்று என்னென்ன கதைகள் எழுதினர்?!! அதில் ஒரு கதையில் வரும் வசனம் "ஆச்சாரியாருக்கு வடை வாங்கிக் கொடுத்தால் நம்ம கட்சிக்கு வந்துடுவார்"
4) இப்போது பாலகுமாரன் பற்றி சில புதிர்கள்...! தெரு விளக்கு என்று எழுதாமல் மிக அழகான கவித்துவமான தலைப்பு. என்னது?
(ஆ) தரிசனம் திரைப் படத்தில் டி எம் எஸ் - ஈஸ்வரி பாடிய பாடலின் ஆரம்ப வரிகளில் ஒன்று, என்ன தவம் செய்தேன் படத்தில் எஸ் பி பி சுசீலா பாடிய அழகா...ன பாடலின் ஆரம்ப வரிகளில் ஒன்று என தலைப்பு.
(இ) தொடர்கதைகளில் எழுத்தாளர்கள் உபயோகப் படுத்தும் வரியில் ஒரு கதைத் தலைப்பு ..!
5) மணியனின் கதை. மறக்க முடியாத தலைப்பு. . மாயாவின் அழகிய ஓவியங்களுடன் விகடனில் வந்தது.. உமா, ஆனந்தன் கதா நாயகி, நாயகன். சந்தர்ப்பத்தால் பிரிந்த காதலர்கள், குழந்தை பெற்ற பிறகு இணையும் கதை.
6) பெயர் இல்லாமல் அல்லது சொல்லாமல் இடையில் புள்ளி வைத்த (!) இரண்டு மூன்று எழுத்துக்கள் மட்டுமே கொண்ட எழுத்தாளர்கள்.
7) பிரபல எழுத்தாளர் ராஜேந்திரகுமார் இந்தக் கதையில் தான் முதன் முதலில் அவரது அடையாள வார்த்தையான "ஙே" உபயோகப் படுத்தினார்.
8) ராஜாஜி, மகரிஷி, புஷ்பா தங்கதுரை எழுதிய எந்த நாவல்கள் படமாகி உள்ளன?
9) இதயச்சந்திரன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, ப்ரம்மானந்தர்...எந்தக் கதை மாந்தர்கள்?
10) பல வருடங்களாக தமக்குச் சமையல்காரனாக இருந்தவரையே கைது செய்யச் சொல்லும் சங்கர்லால், வீட்டில் உள்ள கிழவியின் முகத்திரையை அகற்ற.... உள்ளே அழகிய இந்திராவின் முகம்..... எந்தக் கதையில்...யார் எழுதியது?
இந்தக் கால எழுத்தாளர்கள் என்று யாரையும் சேர்க்கவில்லை. இப்போது கேட்டிருப்பதும் எப்போதோ படித்ததை நினைவில் வைத்துதான்.. பொழுது போக வேண்டுமில்ல!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










