வியாழன், 14 ஏப்ரல், 2016

வைகையில் 3 கேரக்டர்கள் (தொடர்ச்சி) - 2



                                                               Image result for passengers in a train clip art images

நாங்கள் அமர்ந்திருந்த பக்கம் வெயில் போடு போடெனப் போட்டது.  அந்தப் பக்கம் அந்தத் தொல்லை இல்லை. ஆனாலும் வைகை ரயிலின்  இருக்கைகளில் மூவர்  செல்வது என்பது ஒரு பெரிய கொடுமைதான்.


நாங்கள் ஏறி அமர்ந்தபோது காலியாகக் காணப் பட்டாலும், பின்னர் நிரம்பி வழியத் தொடங்கி விட்ட எங்கள் பெட்டியில் நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு இடது புறம் எதிர் இருக்கையில் ஒரு கணவனும் மனைவியும் அமர்ந்திருந்தனர்.  அவருக்கு 65 வயதிருக்கலாம்.  பேன்ட்ஸ் ஷர்ட் டகின் செய்து அணிந்து தொப்பி அணிந்து அமர்ந்திருந்த அவரின் சட்டையில் SRMU என்று ஒரு பட்டை சேர்த்துத் தைக்கப் பட்டிருந்தது.   ஏற்கெனவே ரயில் நிலையச் சுவர்களில் ரயில்வே சங்க மாநில மாநாடு என்று எல்லாம் போஸ்டர் ஒட்டப்பட்டு 'கன்னையா பேசுகிறார்' என்று இருந்தது.  நான் முதலில் SRM University என்று கூட நினைத்தேன்.  பின்னர் மாமா இல்லை என்று சொன்னார்.

அப்போது புதிதாகப் புகழ் பெற்றிருந்த கனையா குமார் தானோ என்று கூட எனக்குச் சந்தேகம் இருந்தது!  அவருடன் அமர்ந்திருந்த அவர் மனைவி எனக்கு சரியான போட்டியாக இருந்தார்.  சொல்லப் போனால் எனக்கும் அந்த உத்வேகத்தைக் கொடுத்தவர் அவர்தான் என்றும் சொல்லலாம்.  அதாவது ரயில் கிளம்புமுன்னரே ஐஸ்க்ரீமுடன் கணக்கைத் தொடங்கினார்.  புதிதாக ஏதாவது ஒன்று வரும்போது அவர் கணவரின் முழங்கையில் ஒரு இடி இடிப்பார்.  உடனே இவர் இடது கை தானாகவே விற்பனையாளரை நோக்கி எழும்.  கொஞ்ச நேரம் சென்று புதுத் தின்பண்டம் விற்பனைக்கு வரும்போது அந்த அம்மாள் திரும்பி கணவரை ஒரு பார்வை பார்த்தாலே போதும்.. இவர் ஒரு கை அந்த விற்பனையாளரிடமும், மறு கை சட்டைப்பைக்குள் காசு எடுக்கவும் தயாராகி விடும். 
 

              Image result for passengers in a train clip art images                             Image result for vendors in a train  images
 
 
அதில் பாருங்கள்..  அவர் அவற்றை மனைவிக்கு வாங்கித் தந்தாரே தவிர, அவர் ஒன்றையுமே தொடவில்லை.

பெரும்பாலும் வலது கையை தாவாங்கட்டையில் தாங்கி, அவர் பேசாமல் மவுனமாகவேதான் இருந்தார்.  அதாவது ரயில் கிளம்பும் வரை!  பயணச்சீட்டு உறுதி ஆகாத ஒரு பேரிளைஞர் இந்த தம்பதியர்க்கு எதிரில் இருந்த ஒரு காலி இருக்கையில் அமர்வதும், பயணச்சீட்டுப் பரிசோதகர் இங்குமங்கும் தாண்டிச் செல்லும் போதெல்லாம் எழுந்து கதவருகில் நிற்பதுமாக இருந்த நிலையைக் கண்டு நெக்குருகி, பொங்கி (அளவோடுதான்) எழுந்து அவரிடம் பேசுவது போலத் தொடங்கினார். 

அப்புறம் பாருங்கள், யார் யார் எல்லாம் அவர் கண்களோடு தங்கள் கண்களைக் கலக்கிறார்களோ, அவர்களோடு எல்லாம் பேசத்... மன்னிக்கவும், உரையாற்றத் தொடங்கினார்.  அவர் மனைவி உண்ணும் போட்டி நடத்திக் கொண்டிருக்க, இவர் வேறு வகையில் வாய் மூடா போட்டி நடத்திக் கொண்டிருந்தார்.  மைக் ஒன்றுதான் கையில் இல்லை. 

எங்கள் கண்கள் எங்கே அவர் கண்களோடு கலந்து ஆபத்தாகி விடுமோ என்கிற பயத்தில் நாங்கள் அவர் பக்கமே திரும்பாமல் இருந்தோம் - அவர் மனைவி அடுத்து என்ன ஆர்டர் செய்து சாப்பிடுகிறார் என்கிற ஆவலைக் கூடக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 


அவர் என்ன பேசினார் என்று உங்களுக்கு எல்லாம் ஆர்வம் வரும்.  முதலில் எங்களுக்கும் அந்த ஆர்வம் வந்தபோது கவனித்தோம்.  ரயில்வேயின் நடைமுறைகள், சிரமங்கள், தவறுகள் என்று எல்லாவற்றைப் பற்றியும் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
 
 
அவர் மனைவி இவர்களின் எதிரே அமர்ந்திருந்த ஒரு ஒற்றைப் பாட்டியுடன் மட்டும் அவ்வப்போது ஏதோ எங்கள் காதில் விழாத அளவில்) பேசிக் கொண்டிருந்தார். அந்த ஒற்றைப் பாட்டியை அவரின் பேத்தி ரயிலில் ஏற்றி  அமர வைத்துவிட்டு, பாட்டியின் அலைபேசியை வாங்கி சில செட்டிங்க்ஸ் செய்து கொடுத்து விட்டு, "இதை அமுக்கினால், வரும் காலை ரிஸீவ் செய்யலாம் பாட்டி,  இதை மூன்று முறை அமுக்கினால் சபாபதியோட பேசலாம்... எனக்கு டைம் ஆகுது... நான் வர்றேன்"  என்று சொல்லிச் சென்றிருந்தாள்.  அந்தப் பாட்டி இருக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தைச் சாப்பிட்டு விட்டு, அதே நிலையிலேயே இந்த உண்ணும் பெண்மணியுடன் தவணை முறையில் பேசிக் கொண்டிருந்தார்.

கொடைரோடு வரை அந்த ஆண் நண்பரின் உரை ஓயவில்லை.  பிரமித்துப் போனோம்.


ஒரு சிறு எகத்தாளமான புன்னகையுடன்,  அதிகம் குரலை உயர்த்தாமல், ஆனால் எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் பேசிக் கொண்டிருந்தார். 
சாதாரணமாக இப்படிப்பட்ட உரைகள் நிகழ்த்தப் படும்போது,  கூட இன்னும் சிலர் சேர்ந்துகொண்டு ரணகளமாக ஆகும்.  ஏனோ இங்கு அப்படி நிகழவில்லை!  அவர் வயது,  மற்றும் தம்பதி சமேதராக வந்திருந்தது  காரணமாக இருக்கலாம்!

இந்த ஜோடிதான் முதல் கேரக்டர்.
 
 
அடுத்தது ஒரு இளம்பெண்.  ஒரு இளம் பெண்ணை அதிகம் உற்றுப் பார்ப்பது அநாகரிகம் என்று எனக்குத் தெரியும்.  மேலும் என் பாஸ் வேறு அருகில் இருக்கிறார்.  எனவே அவளை (அவரை) சரியாகக் கவனிக்கவில்லை.   ஓரளவு கவனித்தவரை, திருமணமாகாதவள்.  சுமார் இருபத்திரண்டு வயதிருக்கும். ஒல்லியாக இருந்தாள்.  சற்றே ஆரம்பகால திரிஷாவை நினைவு படுத்தும் தோற்றம்.  சற்றுதான்!
 
 
சாதாரணமாகப் பெண்கள் தலையை நடு வகிடு எடுத்து சீவியிருப்பார்கள்.  மிக மிகச் சிலர்தான் இந்தக்  காலத்தில் ஓர வகிடு எடுக்கிறார்கள்.  நான் அப்படிப் பெண்களை சமீபத்தில் பார்க்கவில்லை என்றே சொல்லலாம்.  மேலும் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கும்படி, பெண்களை அதிகமாக நான் உற்றுப் பார்ப்பவன் இல்லை.  அதுவும் அழகான இளம் பெண்களை... அதுவும் பாஸ் அருகில் இருக்கும்போது..
 
 
இந்தப் பெண் முன்னால் தலையை வகிடு எடுக்குமுன்னரே கொஞ்சம் முடிகளை விட்டு வைத்திருந்தாள்.  அவற்றிலிருந்து (நடு)வகிடு எடுக்கும் இடத்தில் முடிக் கற்றையை இரண்டாகப் பிரித்து, நெற்றியின் இரு புறமும் நீண்டிருக்கும்படி செய்திருந்தாள்.  அதை ஸ்டைல் என்று அவள் நினைத்திருக்கலாம்.  கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது.  இந்த அமைப்பின் பின்னே வழக்கம்போல நாடு வகிடும் தலை சீவலும் இருந்தன.  பூ எதுவும் வைக்கவில்லை. 
 
 
சுரிதார் அணிந்திருந்தாள்.  கருப்பு மேல் சட்டை.  பிரவுன் பாட்டம்.  அதை நான் லெகின்ஸ் என்று எண்ணியிருந்தேன். பாஸிடம் கேட்டபோது இல்லை, இது சுரிதார் என்று சொல்லி விட்டார்.  அதனால்தான் உறுதியாக அதைச் சுரிதார் என்கிறேன்.
 
 
கையில் சிறு ஹேண்ட்பேக் வைத்திருந்தாள்.  வேறு சுமை  இல்லை. அது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.
 
 
வரவர வளவள என்று பேச அல்லது எழுதத் தொடங்கி விட்டேன் போல...   கேரக்டரைச் சொல்லவே இத்தனைப் பத்திகள் செலவானால் மிச்சத்தை எப்படி இங்கேயே எழுத?  நீளமாக இருந்தால் நிறையப் பேர்கள் படிக்க மாட்டார்கள்.  நேராக கடைசிப் பத்திக்கு வந்து விடுவார்கள்.  எனவே சுருக்கமாகவே இங்கு நிறுத்தி பின்னர் தொடர்கிறேனே...

.

53 கருத்துகள்:

  1. மூன்று கேரக்டர்கள் ....
    படிக்க ஆர்வத்தை தூண்டுது
    தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  2. "பாஸ்" ஐக் கண்டு அவ்வளவு பயமா?

    பதிலளிநீக்கு
  3. தொடருங்கள் நண்பரே தொடர்கிறேன்
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
  4. பேரிளைஞர். அற்புதமான வார்த்தைப் பிரயோகம்.
    சுவாரசியம்! தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. வளவள
    வளவள
    வளவள
    வளவள
    வளவள
    வளவள

    உங்க கதையைச் சொல்லல்லே !!

    டிரைன் போற சத்தம்.

    அந்தப் பாட்டி உங்க கிட்ட என்னமோ சொல்றாங்களே ! கவனியுங்க..

    ஆமாமா....கேட்கிறேன்.

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    தாங்க்யூ பாட்டி,

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. ரயில் சத்த்தித்திலும் அவர் சதத்தம் பெரிதாக லொட லொட....வள வள ன்னு கேட்டதா....???

    பதிலளிநீக்கு
  7. ரயில் சத்த்தித்திலும் அவர் சதத்தம் பெரிதாக லொட லொட....வள வள ன்னு கேட்டதா....???

    பதிலளிநீக்கு
  8. ரயில் சத்ததித்திலும் அவர் சத்தம் பெரிதாக லொட லொட....வள வள ன்னு கேட்டதா....???

    பதிலளிநீக்கு
  9. ஒருமுறை நவஜீவன் விரைவு வண்டியில் அஹமதாபாதிலிருந்து சென்னை பயணித்தபோது எங்கள் எதிரே இருந்த இரு பயணிகள் இப்படித் தான் ரயிலில்/வெளியில் (அப்போதெல்லாம் நடைமேடையில் பல ஸ்டால்கள் உண்டே) விற்பதை எல்லாம் வாங்கிச்சாப்பிட்டார்கள். சாப்பாடு கொண்டு வரலையாக்கும்னு நினைச்சா அது ஒரு பெரிய டிஃபன் காரியரில் வந்திருந்தது. எனக்கு மயக்கமே வந்துடுச்சு! :)

    பதிலளிநீக்கு
  10. நானெல்லாம் பயணத்துக்கு இரு நாட்கள் முன்னரே வயிற்றில் பார்த்துப் பார்த்து உணவைப் போடுவது வழக்கம். அந்த இருநாட்களிலும் நோ உருளைக்கிழங்கு, மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்தவைனு சாப்பிடறதில்லை. அவ்வளவு ஏன் வீட்டிலே பண்ணவே மாட்டேன். எளிமையான சமையலாத் தான் செய்வேன். இட்லி, தோசை சாப்பிட்டால் கூட சாம்பாரோ, சட்னியோ கொஞ்சம் போல் போட்டுக் கொண்டு தயிரை விட்டுச் சாப்பிட்டுக் கொள்வேன். இல்லைனா என் வயிறு என்னை வண்டியில் சுகமாகப் பிரயாணம் செய்ய விடாது. தொடர் பயணம் என்றால் மாதுளம்பழம், ஆப்பிள்கள் அல்லது மாதுளை, அன்னாசி ஜூஸ் போன்றவை தான் உணவு.:) ரொம்ப விலை உயர்ந்த சாப்பாடுனு நம்மவர் சொல்லுவார். :)

    பதிலளிநீக்கு
  11. இந்த மாதிரித் தொடர்களில் முந்தைய பதிவில் எழுதி இருந்ததையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் பாஸ் அருகில் இருந்தாலும் இளம் பெண்களைக் கணக்கிடுவதில் தவறுவதில்லை.

    பதிலளிநீக்கு
  12. சுவராஸ்யமான பயணம்தான்!
    த ம 7

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே.

    விமர்சித்து தாங்கள் எழுதும் நடை அற்புதமாக அடுத்தது என்னவென்று அறியும் ஆவலை தூண்டி விடுகிறது. என்னைப் பொறுத்த வரை நீளமாக உள்ளதென்று படிக்க பிடிக்காமல் போரடிக்கவில்லை.சில பேருக்கு பயணத்தில் இந்த மாதிரி சுகமான பேச்சுக்களும்,சுவையான பலகாரங்களும் தேவையாய் இருந்து விடுகிறது. என்ன செய்வது? தொடருங்கள்!.தொடரகிறேன்.

    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. ஹாஹா, முக்கியமானதை மறந்துட்டேனே. அந்த எஸ் ஆர் எம்யூக்காரர் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனைச் சேர்ந்தவர். ஆனால் 65 வயசு வரை ரயில்வேயில் வேலை பார்க்க விடறாங்களா? சந்தேகமா இருக்கே! யூனியன் மீட்டிங்கில் பேசிப் பேசிப் பழகின அனுபவம் இங்கேயும் சொற்பொழிவு ஆற்றி இருக்கார். :)

    பதிலளிநீக்கு
  15. ஓரளவு கவனித்தவரை, திருமணமாகாதவள். சுமார் இருபத்திரண்டு வயதிருக்கும். ஒல்லியாக இருந்தாள். சற்றே ஆரம்ப கால திரிஷாவை நினைவு படுத்தும் தோற்றம்.
    ஓரளவு கவனித்தே........ இவ்வளவா ?

    பதிலளிநீக்கு
  16. ரயில் பிரயாணம் நன்றாகத்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை, ரயிலுக்கு அருமையான சாப்பாடு, மிளகாய்ப்பொடி தடவிய ('நல்லெண்ணை கொஞ்சம் அதிகமாக) இட்லி, தேங்காய்த் துகையலுடன் கூடிய புளிப்பில்லாத தயிர் சாதம். இதைத் தவிர, ரயிலில் கொண்டுவரும் வெவ்வேறு ஐட்டம் சாப்பிட ஆசைதான். அதன் தரம்தான் கொஞ்சம் சந்தேகம். கீதா மேடம்... ரயில்லயும்சரி, அங்க அங்க ஸ்டேஷன்ல விற்கறதையும் சரி, சாப்பிட்டுக்கொண்டே பாஸஞ்சர்ல பிரயாணிப்பது எவ்வளவு நன்றாக இருக்கும். இதுக்கெல்லாம் மயக்கம் வரலாமா?

    "ஒரு இளம் பெண்ணை அதிகம் உற்றுப் பார்ப்பது அநாகரிகம் என்று எனக்குத் தெரியும்." - வசனம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் நீங்கள் கொடுத்துள்ள வர்ணனைகளைப் பார்த்தால், அதைத் தவிர வேறு எதுவும் செய்தமாதிரித் தெரியலயே... ரொம்பத் தைரியம்தான். இடுகையைத் தொடர்ந்து எழுதக்கூடாதா? இன்றைய இடுகையைப் பார்ப்பதற்கு முன், பழைய பகுதியையும் ஒருதடவை சென்று பார்த்தேன்.

    எல்லோருக்கும் உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஏற்கனவே இந்தத் தமிழ் வருடம் நிறைய மழை பெய்யும் என்று சொல்லியுள்ளார்கள். அதனால், இப்போதே வடாம் போன்றவற்றைத் தயார்செய்துவைத்துக்கொள்ளுங்கள். கீழ்த்தளத்தில் உள்ளவர்கள் முக்கியச் சான்றிதழ்களையாவது (certificates) உயரமான இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஜோசியம் சொல்லிவிட்டார்களே என்று தண்ணீரை வீணாக்காதீர்கள். வருடக் கடைசியில் அவர்கள், "வெயில் ஜாஸ்தி" என்று எழுதினது தவறுதலாக "மழை ஜாஸ்தி" என்று வந்துவிட்டது என்று சொல்லிவிடப்போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. பேரிளைஞர்...அஹஹஹ்ஹ்ஹ //பெண்களை அதிகமாக நான் உற்றுப் பார்ப்பவன் இல்லை. அதுவும் அழகான இளம் பெண்களை... அதுவும் பாஸ் அருகில் இருக்கும்போது..// ஹஹஹஹஹஹஹ் ஸ்ரீராம் உங்க வர்ணனையைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!! அதிலும் பாஸிடம் சுடிதாரா லெக்கிங்க்ஸா என்ற கன்ஃபர்மேஷன் வேறு ஹஹஹ் ம்ம்ம்பரவால்ல இப்படி லுக் விட்டாத்தானே பதிவு கிடைக்கும்..நீ.....ளம்னா.நாங்கல்லாம் எங்க போறது...நீங்கள் அப்படி எழுதினாலும் நாங்கல்லாம் கடைசிப் பத்திக்குப் போகமாட்டோம்ல.....

    மாங்காப்பச்சடி செஞ்சீங்களா?

    புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. பேரிளைஞர் சொல்லப் பிறந்தவர் ,அவர் மனைவி ,மெள்ளப் பிறந்தவரோ :)

    பதிலளிநீக்கு
  20. பாஸ் பக்கத்தில் இருக்கும்போதே அந்தப் பெண்ணைப் பற்றிய வர்ணனை தூள் பறக்கிறதே! நீங்கள் மட்டும் தனியாக இருந்தால்........? நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கே! 'பாஸ் கொஞ்சம் கவனீங்க...!' (புது வருடத்தில் நம்மால் ஆனது!!!!)

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், உங்கள் பாஸ்-க்கும் சேர்த்து!

    பதிலளிநீக்கு
  21. ஹா ஹா ஹா! லேசாக பார்க்கும் போதே அவர் எப்படி வகிடு எடுத்திருந்தார், முடியை எப்படி விட்டிருந்தார், பூ வைக்கவில்லை, என்ன கலர் டிரெஸ் என்றெல்லாம் தெரிகிறது. நீங்கள் இளம் பெண்களை உற்றுப் பார்ப்பதில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்! உங்களை பாஸ் மிஞ்சி விட்டார். லெக்கின்ஸ் இல்லை சூரிதார் என்று அவர் தானே உறுதிப்படுத்தியிருக்கிறார்?

    பதிலளிநீக்கு
  22. ஹா... ஹா... முதியவர் பேசினதெல்லாம் விட்டுடலாம்.. பக்கத்தில் பாஸ் இருந்தார்... அதிகம் பாக்கலைன்னு ஒரு தொடர்கதை நாயகியை வர்ணிப்பது போல் நாலைந்து பத்தியில் வர்ணித்து விட்டீர்களே... இனி பார்க்க என்ன இருக்கு அண்ணா...

    பதிலளிநீக்கு
  23. சிறந்த பதிவு

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  24. நல்ல அனுபவ விவரிப்பு. கொடைரோடு வரை பேசினார் என்றால்
    தொழிற்சங்கத் தலைவராக இருக்குமோ..நீங்கள் பார்த்த பெண் பழங்கால முடியழகைச் செய்திருக்கிறார். பழைய பாடல்களை,அதுவும் இந்திப் பாடல்களைப் பார்க்கவும். வெகு சுவாரஸ்யம்

    பதிலளிநீக்கு
  25. எங்கள் ப்ளாகிற்கும் வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  26. நன்றி பழனி.கந்தசாமி ஸார். என் பாஸ் இதைப் படித்தால் தாவாங்கட்டையை இடது தோளில் கொண்டு போய் மோதுவார்!!!!

    பதிலளிநீக்கு
  27. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி சுப்பு தாத்தா. சுருக்கமாகவே கருத்தைச் சொல்லி விட்டீர்கள். மாற்றிக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  29. ஆமாம். அந்த அளவு பேசினார்! நன்றி நண்பர் வலிப்போக்கன்.

    பதிலளிநீக்கு
  30. ஹா... ஹா... ஹா... ஆமாம்,சில பேர் அப்படியும் இருக்கி'றோம்' கீதா மேடம்! நானும் பயணத்துக்கு முன் வீட்டில் பார்த்துப்பார்த்துச் சாப்பிடுவேன். அப்போதுதான் ரயிலில் ஒரு கை பார்க்க முடியும். மேலும் சென்று இறங்கும் ஊரிலும் நல்ல ஹோட்டல் இருந்தால் அங்கும் ஒரு கை (வாய்) பார்ப்பதுதான்!

    பதிலளிநீக்கு
  31. நன்றி ஜி எம் பி ஸார். முந்தைய பதிவில் அப்படி ஒன்றும் முக்கியமாக, மிஸ் செய்யக் கூடிய அளவில் எழுதி விடவில்லை. சும்மா வெட்டி அரட்டைதான்!

    பதிலளிநீக்கு
  32. நன்றி நண்பர் செந்தில் குமார்.

    பதிலளிநீக்கு
  33. நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். நீண்ட நாள் கழித்த பின்னான வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. மீள் வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம். ஆமாம், அவர் மஸ்தூர் யூனியன்தான்! ஒய்வுக்குப் பிறகும் மாநாட்டுக்கு வந்து போகிறார் என்று நினைத்தேன்!

    பதிலளிநீக்கு
  35. ஹிஹிஹி...முதல் ஆளாக அந்த விஷயத்தைக் கண்டு பிடித்தீர்கள் நண்பர் கில்லர்ஜி! ஓரளவு பார்த்த வரை அவ்வளவுதான் வர்ணிக்க முடிகிறது!

    பதிலளிநீக்கு
  36. நன்றி நண்பர் நெல்லைத் தமிழன்.இதன் முந்தைய பகுதியில் இட்லி விவரணம் கொடுத்திருக்கிறேன் பாருங்கள். நீங்கள் விவரித்துள்ளபடிதான்! வைகையில் வரும் தின்பண்டங்களின் தரம் இருக்கிறதே... தரம், அது ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. மழையை நினைவு படுத்தாதீர்கள்! பயம் வருகிறது. ஆனால் வெய்யிலும் சும்மா கொளுத்துகிறது. நன்றாய் இருக்கிறது என்று பாராட்டி இருப்பதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  37. நன்றி கீதா! சரியாய்ப் புரிந்து கொண்டீர்கள்! மாங்காப் பச்சடியா? புத்தாண்டுக்கா?

    பதிலளிநீக்கு
  38. சொல்லப் பிறந்தவர் பேரிளைஞர் இல்லை பகவான்ஜி. அவர் முது இளைஞர்! பேரிளைஞர் இவரின் உரைக்கு ஆ"ரம்ப"க் காரணமாயிருந்தவர்!

    பதிலளிநீக்கு
  39. நன்றி ரஞ்சனி மேடம். என் பாஸ் நான் எழுதுவது எதையும் படிப்பதில்லை!

    பதிலளிநீக்கு
  40. ரசனைக்கு நன்றி கலையரசி மேடம்!

    பதிலளிநீக்கு
  41. நன்றி குமார். அப்புறம் நடந்த கதைதான் சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
  42. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

    பதிலளிநீக்கு
  43. உங்க பாஸூம் நம்மளைப் போல தானோ!
    தொடர் வண்டியைத் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  44. ஓய்வு பெற்று விட்டாலும், பல SRMU சங்கத்துக்காரர்கள் பாக்கெட்டில், பழைய உறுப்பினர் அட்டையை வைத்துக் கொள்வார்கள். இதில் சில சவுகரியங்கள் உண்டு..

    // ஒரு இளம் பெண்ணை அதிகம் உற்றுப் பார்ப்பது அநாகரிகம் என்று எனக்குத் தெரியும். மேலும் என் பாஸ் வேறு அருகில் இருக்கிறார். எனவே அவளை (அவரை) சரியாகக் கவனிக்கவில்லை.//

    நீங்கள் இப்படி சொன்னாலும், தலையில் நடு வகிடு உட்பட நன்றாகவே கவனித்து இருக்கிறீர்கள் என்பதை பதிவு சொல்லி விட்டதே. -

    பதிலளிநீக்கு
  45. Anna, rofl. Hilarious post! esp that young girl! Remembered this Sve Shekar Joke from 1000 udhai vangiya aboorva sigaamani.
    Dad: pannaiyaar samsaarathai paathiyaame?
    Sve : naan sathiyamaa paathathey illa paa.. yaaru thazhaiyathazhaiya pattu pudavai kattittu, thalai neriya malligai poo vechuttu periya pottu vechuttu avangala?

    your description about the girl - same blood! anaagareegam, I dont look at young girls... vagidu, hairdo, outfit.. mm.. nadathungo

    btw, who is the Boss? Uncle the Boss? ;-) I think I know him!

    பதிலளிநீக்கு
  46. நன்றி அனன்யா.. என் பாஸ் யாரென்று தெரியாதா? ஐயோ.. என்னால் சத்தமாகக் கூடச் சொல்ல முடியாது.. காதைக் கொஞ்சம் கிட்டே கொண்டு வாருங்க... அதாவது.. அன்னிக்கி உங்க வீட்டுக்கு என்கூட வந்தாங்களே... அவிங்கதான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!