ஹோட்டல் சாப்பாடும், பில்லும்
நம்மில்
எத்தனை பேர்கள் ஹோட்டல்களில் சாப்பிடச் சென்றால் அவர்கள் தரும் பில்லை
சோதிக்கிறோம்? அப்படிச் செய்வது கௌரவக் குறைவு என்று நினைப்போம்! தனியாகச்
சென்று சாப்பிட்டாலாவது ஓரளவு பில் சரி பார்ப்போம். அவர்களும் அதில்
பெரும்பாலும் ஒன்றும் திரிசமன் செய்ய மாட்டார்கள். அப்படியும் நம்
முகத்தைப் பார்த்து விட்டால் அப்படிச் செய்பவர்களும் உண்டு. நீங்கள் கவனித்துச் சொன்னால், அப்போதுதான் பார்ப்பவர் போல சர்வரும் வந்து உங்கள் தோளருகே மூச்சு விட்டு நின்று
படித்து விட்டு, ஏதாவது ஓட்டைச் சாக்குச் சொல்லி அதைத் திருத்துவதற்குக்
கொண்டு போவார்கள். இதுவே இரண்டு மூன்று பேர்கள் அல்லது அதற்கும் மேல்
அமர்ந்து சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுப்பவர்கள் எத்தனை பேர்கள் பில் சரி
பார்த்துப் பணம் கொடுக்கிறார்கள்?
எல்லா
ஹோட்டல்களிலும், எல்லா நேரங்களிலும் இப்படி நடக்கும் என்று சொல்ல
முடியாது. ஆனால் பெரிய ஹோட்டல்களில் கூட 'தவறி விட்டது' போல, அதுவும்
கண்டு பிடிக்கப் பட்டால், அடிக்கடி நடப்பது உண்டு. நம்மூர்களில்
நல்லவர்கள் அதிகம்!
இப்படி வசூலாகும் பணம்
யாருக்குப் போகும் என்பதும் புரியவில்லை. ஒரு ஹோட்டலுக்கு அப்படி
சேர்த்துக் கொடுக்க சர்வர்கள் ஒரு லாபமுமின்றி முன்வருவார்களா? மாட்டார்கள் என்றால் இதில் வேறு ஏதோ அண்டர்ஸ்டாண்டிங் இருக்க வேண்டும். இந்த வகையில் எவ்வளவு வசூலாகியது என்பதை எப்படிக் கணக்கெடுப்பார்கள் என்பதும் தெரியவில்லை.
சாதாரணமாக
"கணினி மூலம் ரசீது கொடுக்கும் கடைகளிலேயே விலையைச் சரி பார்த்து வாங்கு"
என்பார் என் நண்பர். கணினி மூலம் தருவதால் எல்லாம் சரியாக இருக்கும்
என்னும் 'உபயோகிப்பாளர் மனோபாவம்' நம்மைக் கட்டுப் படுத்துகிறது என்பார்
அவர்.
நாம்தான் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புபவர்கள்
ஆச்சே.. இது போல கணினி ரசீதில் என்னுடனேயே வந்து இருமுறை குறை
கண்டுபிடித்துச் சரி செய்தும் காட்டி இருக்கிறார் அவர். நான் வாங்காத
இரண்டு பொருட்களுக்கு விலை போடப் பட்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால்
அங்கு வாங்கப் படும் பொருட்களின் விலையை வெளிக் கடைகளில் வாங்கும்
விலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் சொல்வார்.
எல்லாருமே
நம் சகோதரர்கள்தான்! அவர்கள்தான் நம்மை ஏமாற்றுகிறார்கள். இவர்கள்
எல்லோருமே "உங்களுது எங்களுது,..எங்களுது எங்களுது" வகையறாவைச்
சேர்ந்தவர்கள். ஏமாறத் தயாராய் நாம் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களை
எப்படிக் குறை கூற முடியும்?! பாரில் அமர்ந்து குடித்து விட்டு, காசு
கொடுப்பவர்களிடம்தான் ஏமாற்றுவார்கள், போதையில் அவர்களால் சரியாகப் பார்க்க
முடியாது என்று சொல்வார்கள். இங்கு போதை இல்லாமலேயே நாம் ஏமாறுகிறோம்.
இந்தப்
பதிவை எழுத ஆரம்பித்த விஷயத்துக்கு வருகிறேன். சென்னையில் ஒரு புகழ்
பெற்ற ஹோட்டலில் சாப்பிடச் சென்ற ஒருவர் சர்வீஸ் டாக்ஸ், வாட் வரி உடன்
சேவைக் கட்டணம் என்று 48 ரூபாய் ஐம்பது பைசாவுக்குக் கட்டணம் சேர்க்கப்
பட்டிருக்கவும் (அதுவும் இயற்கையாக இருக்க, சில்லரைக் கணக்குடன்தான்
போடுவார்கள்!) டென்ஷனாகி விட்டார். ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டால்
கட்டித்தான் ஆக வேண்டும் என்று கறார், உதாராகச் சொல்லி விட்டார்கள்.
கட்டி
விட்டு என்னைப் போலப் புலம்பாமல், சும்மா பதிவு எழுதிக் கொண்டிருக்காமல்
அவர் நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்று
விட்டார். தீர்ப்பு கிடைத்து விட்டது சரி, பணம் கைக்குக் கிடைத்ததோ
இல்லையோ! சில இடங்களில் நீங்கள்தான் முதல் பரிசு, இரண்டாம் பரிசு
என்றெல்லாம் சொல்லி விடுவார்கள். ஆனால் பணம் கைக்குக் கிடைக்காது... அது
போல!
ஆடம்பர ஹோட்டல்களில்தான் சேவைக் கட்டணம்
வசூலிப்பார்கள். அதுவும் மெனு கார்டில் குறித்திருப்பார்கள்.
வாடிக்கையாளர்களுக்கும் தெரிவித்து விடுவார்கள். அப்படி சேவைக் கட்டணம்
வசூலிக்கப் படும் இடங்களில் சர்வர்களுக்கு டிப்ஸ் தர வேண்டிய தேவை இல்லை.
அதற்குத்தான் அவர்களே வசூலித்து விடுகிறார்கள். அது தெரியாமல், அல்லது
தெரிந்தும் சிலர் டிப்ஸ் தருவது உண்டு. அவர்களை நாம் கணக்கில்
எடுக்கவேண்டாம்.
அதே போல எப்படி, எவ்வளவுச்
சாப்பிட்டாலும் டிப்ஸ் தராமல் வருபவர்களும் உண்டு. தரவேண்டும் என்று
சட்டமா, என்ன? அவர்களையும் நாம் கணக்கில் சேர்க்க வேண்டாம்!
சேவை
வரி மத்திய அரசுக்கும், வாட் வரி மாநில அரசுக்கும் செல்லும். குளிர் சாதன
வசதி கொண்ட ஹோட்டல்களில் மொத்த பில் தொகையில் 40% சேவை வரி
விதிக்கப்படும். வாட் வரி என்பது சாதாரண ஹோட்டல்களில் 2% மற்றும் ஆடம்பர
ஓட்டல்களில் 14.5% வசூலிக்கப் படும்.
இந்தச்
சேவைக் கட்டணம் மட்டும் முழுக்க முழுக்க ஹோட்டல்களுக்குத்தான். இந்த சேவை
வரி, சேவைக் கட்டண வித்தியாசமே நம்மில் பலருக்குத் தெரியாது. அல்லது
எனக்குத் தெரியாது! இனியாவது கனமாய்ச் சாப்பிடுவோம்... ச்சே கவனமாய் பணம்
கொடுப்போம்!
Good one. Thanks for creating awareness. We don't offer tip in AC Halls.
பதிலளிநீக்குநண்பர்களுடன் சாப்பிடச்செல்லும்போது பில்லை சரிபார்க்க எவருமே முன்வருவதில்லை.. கணக்குப்பார்ப்பதாக நட்புகள் நினைத்துவிடுவார்களோ என்று ஒரு தயக்கம்.. கொஞ்சம் தாமதமானாலும் நான் தருகிறேன் என்று சொல்லி பில்லை செட்டில் செய்ய அவர்கள் முன்வந்துவிடுவார்களோ என்ற அவசரம்.. எல்லாம் சேர்ந்து பில்லை சரிபார்க்கவிடாமல் செய்துவிடுகிறது. இந்த விவரங்களை அறிந்தபிறகாவது எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.
பதிலளிநீக்குபொதுவாக பெரிய ஹோட்டல்களில், இங்கு வெளி நாடுகளில் "இன்றும்", மற்றும் நம் தமிழகத்தில் 1980-களில் இது தான் நடை முறை! இப்போ எப்படி என்று தமிழகத்தில் எனக்கு தெரியாது.
பதிலளிநீக்கு---நாம் சாப்பிட உக்காந்ததும் நமக்கு ஆர்டர் எடுத்து K.O.T கொடுத்தால் (சர்வர் K.O.T கிட்செனில் கொடுக்கணும்; K.O.T என்றால் kitchen order ticket); அதன் படி தான் கிட்செனில் இருந்து உணவு வெளிவரும். இங்கு ஊழலுக்கு வாய்ப்பே இல்லை!
Family Business Small Hotel என்றால், எல்லாமே "ஒன்னுக்குள் ஒன்னு என்றாலும்"--ஒரே ஜாதிக்காரன் ஹோட்டல் என்றாலும்" எல்லா ஏமாற்றும் நடக்கும். எல்லா பிராடுகளும் அரங்கேறுவது இந்த மாதிரி ஹோட்டல்களில்:
பெரிய ஹோட்டல்களில் இந்த பிராடு செய்தால்..செய்ய மாட்டர்கள். எங்களை மாதிரி ஆட்கள், அங்கேயே அல்லது தேவையானால் ரூமிற்கு வந்து செக் செய்வோம்...இது வரை ஒரு முறை கூட தவறு நடந்த்து இல்லை.
இந்தியாவில் பார்களில் உள்-கை மூலம் குடிகார பணக்காரப் பாவிகளின் பில்லில் மற்றவர்கள் குடியை ஏற்றுவது உண்டு! பணம் முதலாளிக்கு சரியாக போய் விடும்! மற்றவர்கள் குடி செலவை பார்மேன்கள் ஏற்றுவதால் பாதி பணம் பார் மேனுக்கு கொடுத்தால் போதும்.
___________________
ஒன்றாக வளர்ந்த நண்பர்கள் ஹோட்டலில் பெரிய வேலையில் இருந்தால், அவர்கள் நமக்கு N.C.K.O.T போடுவார்கள்; அப்படி என்றால், Non Chargeable Kitchen Order Ticket! நண்பேன்டா!
இப்படித் தான் நடக்கிறது.....கணினி ரசீது சரியாகத் தான் இருக்கும் என்பது பலரது அபிப்ராயம்.நிதர்சனம் சகோ நன்றி. கவனமாக இருப்போம்.
பதிலளிநீக்குஇப்படியுமா நமது பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
தம +1
இப்படி வசூலாகும் பணம் யாருக்குப் போகும் என்பதும் புரியவில்லை.//
பதிலளிநீக்குThe service tax collected should be going to Govt only. There is no doubt about it. But what is doubtful is whether the hotel maintains an honest list of such daily collections. Unbilled items are legion. Also even when the bills are made up in the computer, it is left to your guess as how the day's total bill collection file gets merged with the receipts of the hotel on daily basis.
In order that service tax collected should be remitted to Govt without fail, Govt should insist that no cash payment be allowed in case of collecting a service tax too.
subbu thatha.
சேவை வரி என்பது நமக்குச் சேவை செய்யும் ஊழியர்களுக்குப் போய்ச் சேருவதில்லை. ஆகவே ஊழியர்களுக்குத் தனியாக டிப்ஸ் தருவதே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் செய்வது! சாப்பிடும் மொத்தத் தொகையில் பத்து சதவீதம் டிப்ஸாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பது பொதுவான ஒன்று. அப்படி யாரும் கொடுப்பதில்லை, அதுவும் இந்தியாவில் கொடுப்பதில்லை. சேவைக்கட்டணம் என்பது நாமாகப் பார்த்துக் கொடுப்பது தான்.
பதிலளிநீக்கு//நம்மில் எத்தனை பேர்கள் ஹோட்டல்களில் சாப்பிடச் சென்றால் அவர்கள் தரும் பில்லை சோதிக்கிறோம்? அப்படிச் செய்வது கௌரவக் குறைவு என்று நினைப்போம்!//
பதிலளிநீக்குஇந்த விஷயத்தில் நம்ம ரங்க்ஸ் கௌரவம், அகௌரவம் என்றெல்லாம் பார்க்கவே மாட்டார். விலைப்பட்டியலோடு ஒத்து வருகிறதா என்று பார்த்து விட்டு என்னையும் ஒரு தரம் பார்க்கச் சொல்லிட்டுத் தான் பணத்தையே எடுப்பார். பெரும்பாலான சமயங்களில் ஊழியர்களுக்கு நாங்களே டிப்ஸ் கொடுத்துடுவோம்.
எந்த முதலாளி சர்வருக்கு டிப்ஸ் தரப் போகிறார் ?செய்றது வியாபாரம் ,இதில் சேவை எங்கே வருகிறது என்றே புரியவில்லை :)
பதிலளிநீக்கு"இனியாவது கனமாய்ச் சாப்பிடுவோம்...
பதிலளிநீக்குச்சே கவனமாய் பணம் கொடுப்போம்!" என்ற
வழிகாட்டலை வரவேற்கிறேன்!
முன்னோரு காலத்தில்ஓட்டலில் சாப்பிடும் போது சர்வரின் முறை கேட்டால் நடந்த அடிதடியில் ஓட்டலில் சாப்பிடுவதையே ஒழித்தாய் விட்டது...அதனால் ஒட்டல் பில் பற்றி தெரியவில்லை..
பதிலளிநீக்குservice Tax has nothing to do with people employed to serve. This is an omnibus tax first introduced by Chidhambaram only . Slowly, the tax umbrella became wider and wider and presently it almost covers everything from your telephone service to hotel service. The amount collected is TAX by Govt and has to be remitted to GOI periodically.
பதிலளிநீக்குI wonder whether a time may come to tax even service rendered by spouses will be under the net.
Necessarily, blogs which write and attract a lot of readers may come under entertainment tax followed by service tax.
Anticipate that day sooner .
subbu thatha.
அருமை
பதிலளிநீக்கு//The amount collected is TAX by Govt and has to be remitted to GOI periodically. //
பதிலளிநீக்கு-- Sury Siva
ஹோட்டல் சேவை வரியெல்லாம் தம்மாத்துண்டு.
அப்பார்ட்மெண்ட் புக்கிக் போன்ற சமாச்சாரங்களில் இந்த சேவை வரி எப்படி நடைமுறை படுத்தப்படுகிறது என்பதெல்லாம் புரியாத புதிர்.
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குநாங்கள் பில்லைச் சரி பார்க்காமல் பணம் கொடுப்பதில்லை.
பதிலளிநீக்குகணக்கு சரிபார்க்காமல் பணம் கொடுப்பதற்கு காரணம் நமது வறட்டுக் கௌரவம்தான் நண்பரே நல்லதொரு பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குகணக்குப் பார்க்காமல் பில் கட்டுவதே கௌரவம் அதுவும் நண்பிகளுடன் இருந்தால் மூச் பலருடன் சேர்ந்து போய்ச் சாப்பிடும்போது ஒவ்வொருவரும் வித விதமாய் ஆர்டர் செய்ய சர்வருக்குச் சந்தேகம் வந்து அதிக்ப் பொருள்களுக்குப் பில் போடும் சாத்தியக் கூறு அதிகம் ..
பதிலளிநீக்குநல்ல பதிவு. நாங்கள் (இருவருமே) கணினி கடைகளில் பெரும்பாலும் பொருட்கள் வாங்குவதில்லை. அப்படியே வாங்கினாலும் கவுண்டர் அருகிலேயே சரிபார்த்து விட்டுத்தான் கொடுப்பது வழக்கம்.
பதிலளிநீக்கு//நம்மில் எத்தனை பேர்கள் ஹோட்டல்களில் சாப்பிடச் சென்றால் அவர்கள் தரும் பில்லை சோதிக்கிறோம்? அப்படிச் செய்வது கௌரவக் குறைவு என்று நினைப்போம்!// நெவர். கௌரவம் எல்லாம் பார்ப்பது இல்லை. சரி பார்த்துவிட்டுத்தான் கொடுப்பது.
அந்த டாக்ஸ் கணக்கு உங்கள் பதிவிலிருந்து புரிந்து கொண்டோம். ஆனால் சர்வீஸ் டாக்ஸ் எல்லாம் சும்மா கண் துடைப்பு. ஹோட்டலுக்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும். சர்வீஸ் செய்பவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை. அது சரி சர்வீஸ் என்றால் என்ன அர்த்தம்..??வியாபாரத்தில் ஹிஹிஹிஹி..
நல்ல விழிப்புணர்வுப் பதிவு!
நன்றி அனன்யா...
பதிலளிநீக்குநன்றி கீதமஞ்சரி..எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இரண்டு மூன்று நாட்டாமைகள் உண்டு. அவர்கள் பில் சரி பார்க்காமல் பணம் தர விட மாட்டார்கள்.
பதிலளிநீக்குநன்றி டாக்டர் ஸார்...(நம்பள்கி)... நீங்கள் சொல்லும் நடைமுறைகள் நட்சத்திர ஓட்டலில் நடக்கும் என்று நினைக்கிறேன். மற்ற ஓட்டல்களில் ஆர்டர் எடுப்பது எல்லாம் ஒருவகை பந்தாதான்! சமயங்களில் நாம் சொல்வது ஒன்று, அவர்கள் கொண்டு வருவது ஒன்று என்று வரும். சங்கீதாவில் சமீபத்தில் அப்படி நிகழ்ந்தது. எந்த ஐட்டத்தை அவர்கள் இல்லை என்று சொன்னார்களோ, அதைக் கொண்டு வந்தார்கள்!
பதிலளிநீக்குநன்றி சகோதரி உமையாள் காயத்ரி.
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குநன்றி சுப்பு தாத்தா. ஒழுங்காய் வசூலாகும் பணம் மத்திய, மாநில அரசுக்குப் போக வேண்டும் சரி, தவறாய் வாங்கப்படும் பணத்துக்கு எப்படிக் கணக்கு வைத்து, எப்படிப் பிரித்துக் கொள்வார்கள் என்று கேட்டிருந்தேன்!
பதிலளிநீக்குநன்றி கீதா சாம்பசிவம் மேடம்... பில் தொகையில் பத்து சதவிகிதமா? என்ன சட்டம்? அவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் இல்லையா?
பதிலளிநீக்குமாமா உஷாரானவர்தான் கீதா சாம்பசிவம் மேடம்.
பதிலளிநீக்குநன்றி பகவான்ஜி... உண்மையோ உண்மை நீங்கள் சொல்வது.. தில்லையகத்து கீதாவும் பின்னர் இதேதான் சொல்லி இருக்கிறார்! "செய்யறது வியாபாரம்... இதில் எங்கே வருது சேவை?" நாம் ஆர்டர் தந்தால் சில ஓட்டல்களில் சேவை வேண்டுமானால் தருவார்கள்!
பதிலளிநீக்குநன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்
பதிலளிநீக்குநன்றி நண்பர் வலிப்போக்கன். ஓட்டலுக்கே போவதில்லையா...? அட!
பதிலளிநீக்குமீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப்பு தாத்தா.
பதிலளிநீக்குநன்றி நண்பர் நாகேந்திர பாரதி.
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் 'தளிர்' சுரேஷ்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி சாந்தி மாரியப்பன்.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள். நன்றி கில்லர்ஜி.
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... உண்மைதான். நன்றி ஜி எம் பி ஸார்.
பதிலளிநீக்குநன்றி துளசி ஜி / கீதா. வியாபாரத்தில் சேவை வரி என்று சொல்லி நம்மை நூடுல்ஸ் ஆக்குகிறார்கள்!
பதிலளிநீக்குஉண்மைதான்... ஹோட்டல்களிலும் மற்ற நிறுவனங்களிலும் தரப்படும் இரசீதுகளை சரிபார்த்தே வாங்கவேண்டும் என்ற தங்கள் கூற்று உண்மையே!
பதிலளிநீக்குஹோட்டல்களில் பில் தருபவர்கள் நமக்கு ஒரு நகல் தருவதில்லையே, ஏன்?
தமிழ்மணம் 2வது ரேங்க்னு போட்டிருக்கே.. பாராட்டுக்கள். முதல் ரேங்க் யாரு?
பதிலளிநீக்கு[[[ஸ்ரீராம். said...நன்றி டாக்டர் ஸார்...(நம்பள்கி)... நீங்கள் சொல்லும் நடைமுறைகள் நட்சத்திர ஓட்டலில் நடக்கும் என்று நினைக்கிறேன். மற்ற ஓட்டல்களில் ஆர்டர் எடுப்பது எல்லாம் ஒருவகை பந்தாதான்! சமயங்களில் நாம் சொல்வது ஒன்று, அவர்கள் கொண்டு வருவது ஒன்று என்று வரும். சங்கீதாவில் சமீபத்தில் அப்படி நிகழ்ந்தது. எந்த ஐட்டத்தை அவர்கள் இல்லை என்று சொன்னார்களோ, அதைக் கொண்டு வந்தார்கள்!]]
பதிலளிநீக்கு----மற்ற ஓட்டல்களில் ஆர்டர் எடுப்பது எல்லாம் ஒருவகை பந்தாதான் என்பது சரியல்ல!
----சங்கீதாவில் சமீபத்தில் அப்படி நிகழ்ந்தது என்கிறீர்களே..அவ்வளவு ஏன் அதை விட "சின்ன ஹோட்டல்களில்" கூட...நாம் கொடுக்கும் ஆர்டரை பில் போடும் ஆளிடம் (கல்லாவில் இருக்கும் ஆள் அல்ல!) சொல்லி ஒரு சீட்டு வாங்கிக் கொண்டு பொய் கிட்செனில் கொடுத்தால் தான் பொருள் வெளியில் வரும். நன்றாக கவனியுங்கள்...சின்ன சின்ன ஹோட்டல்களில் கூட!
1970-களில் மாதிரி..ஒரு சாதா தோசை, ஒரு ரவா தோசை என்று சர்வர்கள் கிட்செனில் இருக்கும் தோசை மாஸ்டர்களிடம் order சொல்வது இப்போ இல்லை.
ticket--சீட்டு இல்லாமல் தோசை வெளியில் வராது! குடும்ப ஹோட்டல், ஒரு ஜாதிக்காரன் ஹோட்டல் என்றால் கதை வேற! ஒன்னுக்குள் ஒன்னு பிராடு தான்!--தமிழன்டா!
நான் ஹோட்டலில் சாப்பிடுவது இல்லை நண்பரே....
பதிலளிநீக்குஆமாம்... நாமெல்லாம் எதையும் பார்ப்பதில்லை...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு அண்ணா.