இளமையின் நினைவுகள் எத்தனையோ வகைகளில் நினைவு கூரப்படும்! இதோ அதில் ஒரு வகை! ஒரு தினமணி ஞாயிறு மலரில் இந்தப் பாடலை பார்த்ததும் அடுத்தடுத்த வரிகள் மனதில் தோன்ற, இது அந்தக் காலத்தில் "மனப்பாடப் பாட்டு" என்பது நினைவுக்கு வந்தது.
இதே போல முன்னர் "கையில் ஊமன் கண்ணில் காக்கும்" பாடலும் இளமை நினைவை இசைத்தது நினைவுக்கு வருகிறது!
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களிஇயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க் கடந்த நின்ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே.
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களிஇயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க் கடந்த நின்ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே.
- வெண்ணிக்குயத்தியார்.
====================================================================
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’
சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’
விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’
ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம்.
ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’.
சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’.
தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’.
இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் எம்.ஜி.ஆர்.
இந்து(தமிழ்)விலிருந்து திருடியது!
======================================================================
எல்லோரும் சொல்வதுதான்
அதை நீ
காதல் என்கிறாய்..
காதல் என்கிறாய்..
நான்
கவிதை என்கிறேன்..
கவிதை என்கிறேன்..
பொய்யை
எந்தப் பெயரில்
அழைத்தாலென்ன!
எந்தப் பெயரில்
அழைத்தாலென்ன!
கவிதைக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
பொய் அழகுதான்!
காதலுக்கும்
பொய் அழகுதான்!
எனக்கு நடிகர் எம்.ஜி ஆர் மிகப் பிடிக்கும். சோகம் இருக்காது. ஒரு அழுகை அம்மா சீன் உறுதி. மற்றதெல்லாம் பாடல்கள் தான். நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, பெரும்பாலான தமிழக மக்கள் எதிர்பார்த்தபடியே, இன்று (19.05.2016) தமிழகத்தில் மீண்டும் மகத்தான வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியிருக்கும் வேளையில், இந்தப்பதிவினை இங்கு பார்க்க மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. :)
பதிலளிநீக்கு//காதலுக்கும் பொய் அழகு தான்..//
பதிலளிநீக்குஅது சார் சொன்னது?.. காதலிக்க நேரமில்லாத ஆசாமியா?..
ஜோடி விரல் சேர்த்து இதயச் சின்னம் தான் காதல் என்று என்ன அழகாய் பொய் சொல்கிறார்கள, பாருங்கள்!..
கவிதையை ரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குகாதல் என்கிறாய்..
பதிலளிநீக்குகவிதை என்கிறேன்..
எந்தப் பெயரில்
அழைத்தாலென்ன!
காதலுக்கும்
பொய் அழகுதான்!
வரிகள் அழகு நண்பரே...
செய்யுளின் அர்த்தம் நினைவுக்கு வரவில்லையா ,ஜி :)
பதிலளிநீக்குவெண்ணிக்குயத்தியார் பாடலை நானும் இளம் வயதில் படித்திருக்கிறேன். இங்கே பதிவில் எழுதி ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!!
பதிலளிநீக்குபாடப் புத்தகத்தில் வெண்ணிக் குயத்தியார் இயற்றிய சங்கப் பாடலை படித்த நினைவு இருக்கிறது.
பதிலளிநீக்குவெண்ணிக்குயத்தியார் சிறுவயதில் பாடநூலில் படித்த நினைவுகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
தம +1
இப்பொழுது தான் பார்த்தேன்.
பதிலளிநீக்கு'அது சார் சொன்னது?' என்பதை 'அது யார் சொன்னது?' என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.
கவிதை, புரட்சி தலைவர் செய்திகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குவண்ணமிகு தகவல்களும் சங்க இலக்கியமும் ரசிக்க வைத்தன!
பதிலளிநீக்குஎந்தக் கவிதையும் படித்த நினைவில்லை. பழைய பாடல்களைப் பதிவிடும் போதுபதவுரை பொழிப்புரையும் தர வேண்டும் வாசகர்கள் பலருக்கும் என்னைப்போல் எழுதப்படிக்க மட்டுமே தெரியும்
பதிலளிநீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குசிறந்த பதிவு
அருமை.....
பதிலளிநீக்கு