வியாழன், 2 ஜூன், 2016

உள் பெட்டியிலிருந்து ஒரு மீள் கவிதை, இரவலாக ஒரு ஜோக், இரு பாடல்கள்


அப்பாவிக் காதல்

ஒளிந்து பிடித்து
விளையாடிக் கொண்டிருந்த
அவன், அவள்...
       
விளையாட்டின் நடுவே
அவள் அனுப்பினாள்
வாட்சாப்
அவனுக்கு.. 
     
'நீ என்னை
கண்டு பிடித்தால்
இறுக்கி அணைத்து
ஒரு உம்மா...
   
கண்டு பிடிக்க
முடியவில்லை
என்றால்
அதுவரை ஒளிந்திருப்பேன்










                                                                 தோட்டத்தில்.!'


========================================================= =============

 


யோசனை 
Image result for thinking smiley images

நான் மிகவும் 
விரும்புபவர்களை 
இழந்து விடுவேனோ 
என்று அடிக்கடி
அச்சப் படும் எனக்குள்
இன்னொரு கேள்வி..
என்னையும்
யாராவது இப்படி யோசிப்பார்களோ?

====================================================================



ஒரு ஜோக் - FaceBook லேருந்து...








                                                                                     Image result for doctor and patient smilies images

      ஒரு நாள், காதர் பாயின் இடது கால் நீல நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டார்.

      பரிசோதனை செய்து விட்டு காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி அடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக் கொண்டார்.

     சில நாட்களுக்குப் பிறகு வலது காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார். வலது காலிலும் விஷம் ஏறி விட்டது என்று சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர் சொல்லி விட, நொந்து போன காதர் பாய் அதற்கும் ஒத்துக் கொண்டார்.

     இரு கால்களையும் இழந்து, கட்டை கால்களுடன் நடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.  கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட,  பதற்றத்துடன் மருத்துவரை அணுக, மருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம் எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான உடல் பரிசோதனைகளையும் முடித்த பின் மருத்துவர் சொன்னார்,

     "காதர் பாய், உங்கள் லுங்கி சாயம் போகிறது, மன்னித்து விடுங்கள்"..


================================================================


படித்ததிலிருந்து...

                                                                                        Image result for reading smilies images


      ...அப்போது ஒரு பாட்டுக்கு 200 ரூபாய் கொடுப்பார்கள்.  கதை, வசனம் எழுதினால் 3,000 ரூபாய் கொடுப்பார்கள்.  பிரமாதமாக எழுதுபவர்களுக்கு 10,000 ரூபாய்.  ஏனென்றால், அப்போது எம் ஜி ஆருக்கே 35,000 ரூபாய்தான் சம்பளம்.  சிவாஜி 30,000 ரூபாய் வரை வாங்கினார்.  அந்தச் சமயத்தில் முதல் முறையாக ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் கே.பி சுந்தராம்பாள்....


சினிமா விகடனிலிருந்து...

==========================================================================











பாடல்கள் பகுதி பதிவின் நீளம் கருதி வெட்டப்பட்டது..  -  எங்கள் ப்ளாக் தணிக்கைக்குழு.




26 கருத்துகள்:

  1. நீளம் கருதியா அல்லது 'நீலம் ' கருதியா? #டவுட்டு

    பதிலளிநீக்கு
  2. யாரெல்லாம் இருக்காங்க தணிக்கைக் குழுவிலே! காதர்பாய் நகைச்சுவையை என்னால் ரசிக்க முடியலை! மன்னிக்கவும். என்னதான் டாக்டர் ஜோக்குன்னாலும் பரிசோதனை செய்யாமலேயே விஷம் ஏறிடுச்சுனு சொல்லி இருப்பாரா? காலைத் தான் வெட்டுவாரா? அதுவும் இரண்டு கால்களையும். சோப் போட்டுக் குளித்தால் லுங்கிச் சாயமும் மறைய ஆரம்பிக்கும். அப்போக் கூடவாத் தெரியலை! ம்ஹூம், லாஜிக்கா இருக்கிற நகைச்சுவைக்கே சிரிக்கலாமா வேண்டாமானு யோசிக்கிற ஆள் நான்! எனக்கு இது பிடிக்கலை போங்க! :))))

    பதிலளிநீக்கு
  3. ஜோக் சொன்னா அனுபவிக்கணும்; ஆராயக்கூடாது! குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை; கூர்ந்து பார்த்தால் சிரிப்பும் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. என் பங்குக்கு ஒரு ஜோக். ஒரு மெடிகல் ரெப் மூச்சு விட ரொம்பவே கஷ்டப்பட்டார். பல மருத்துவர்களை அணுகியும் தவிப்பு நிற்கவில்லை. கடைசியாகப் பாட்டி வைத்தியம் என்று ஒரு மூதாட்டியிடம் சென்றார் மூதாட்டி அந்த ரெப்பை மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு அவர் கட்டியிருந்த டையை அவிழ்க்கச் சொனார்/ டை அவிழ்த்தவுடன் மூச்சுத் திணறல் நின்றது.....!

    பதிலளிநீக்கு
  5. ஹாஹாஹா காதர் பாய்க்கு மருத்துவம் செய்த டாக்டரு எந்த ஊருல இருக்காரு... ?
    கதம்பம் நன்று நண்பரே

    பதிலளிநீக்கு
  6. தணிக்கை செய்து விட்டு கேள்வி வேற... விடுங்க கேஜிஜி!

    பதிலளிநீக்கு
  7. வாங்க கீதா மேடம்... ஒலக நாயகன் சொல்வது போல ஜோக்கை அனுபவிக்கணும்... ஆராயக் கூடாது! தணிக்கைக் குழுவில் யார் யாரிருப்பாங்கன்னு சொல்ல மு.......டி....யா....து! ஹிஹிஹி...

    ஜோக் சரி, மற்ற விஷயங்கள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே... கவுஜ, ஸினிமா செய்தி...

    பதிலளிநீக்கு
  8. அடேடே... ஆச்சர்யக்குறி. ஒலக நாயகன் சொன்னதையே கேஜிஜியும் சொல்லியிருக்காரே...!

    பதிலளிநீக்கு
  9. வாங்க ஜி எம் பி ஸார்... நீங்கள் சொன்ன ஜோக்கையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. 'கவிதைள் நன்று' என்று பாராட்டியதற்கும் நன்றி ஜி எம் பி ஸார்.

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் வலைப்பதிவில நுழைந்ததும் தம வாக்குப் பட்டை தெரிகிறது . கருத்திட்டு வெளியிட்ட பின் உங்கள்தமிழ் மண வாக்குப் பட்டை கருத்திட்ட பின்காணாமல் போகிறது.பின்னர் பேக் பட்டன் அழுத்தி முதல்த நிலைக்கு வந்து தம போடுகிறேன். எனது கணினியில் மட்டும் அப்படி இருக்கிறதா தெரியவில்லை .தம 4 ம் அப்படித்தான் போட்டேன் .எனக்கு மட்டும் எனில் கொஞ்சம் ஆராய வேண்டும்

    பதிலளிநீக்கு
  13. கவிதை சூப்பர்! அதுவும் தோட்டத்தில் என்று க்ளூ வேறு!!!!!

    யோசனை ஆஹா நாங்கள் இருவரும் இப்படி யோத்ததுண்டு கேட்டுக் கொண்டதும் உண்டு....

    ஜோக் ரசித்தோம்...காதர் பாய் அந்தோ பரிதாபம்...

    சினிமா விகடனிலிருந்து கேபிஎஸ் சம்பளம் மட்டும் எங்கே வாசித்த நினைவு. மற்றவை இப்போதுதான் அறிந்தோம்....

    கதம்பம் நல்ல மணம்...



    பதிலளிநீக்கு
  14. அப்பாவிக்காதல் ....தோட்டத்தில்:))

    யோசனை நானும் இவ்வாறு நினைப்பதுண்டு.....

    முட்டாள் டாக்டரோ...?

    1 லட்சம் கேட்டதுண்டு...மற்றவை அறியாதது...

    கலவை சூப்பர்

    பதிலளிநீக்கு
  15. ஒளிந்திருப்பேன்...பூச்சி பொட்டு கடிச்சிறாம பார்த்துக்க ,அப்புறம் ,உம்மாவுக்கு பதிலா கிளினிக் போக வேண்டியிருக்கும் :)

    பதிலளிநீக்கு
  16. //உங்கள் வலைப்பதிவில நுழைந்ததும் தம வாக்குப் பட்டை தெரிகிறது . கருத்திட்டு வெளியிட்ட பின் உங்கள்தமிழ் மண வாக்குப் பட்டை கருத்திட்ட பின்காணாமல் போகிறது.பின்னர் பேக் பட்டன் அழுத்தி முதல்த நிலைக்கு வந்து தம போடுகிறேன்//

    முரளிதரன் சொல்வது போல் தான் எனக்கும் இருக்கிறது தமிழ்மண ஓட்டுபட்டை. உங்கள் வலைத்தளத்தில்.

    டாகடர்களை இந்த அளவு முட்டாளாக சித்தரிக்க கூடாது.
    சுந்தாரம்மாள் அவர்கள் நடிக்க அழைக்க மாட்டார்கள் என்று அவ்வளவு பணம் கேட்டார் என்றும் சொல்வார்கள். படதயாரிப்பாளர்(வாசன் அவர்கள்) கொடுத்து விட்டார். அதனால் அவர் நல்ல நடிப்பையும் பாடல்களையும் நம்மால் பார்க்கவும் , கேடகவும் முடிந்தது.

    பதிலளிநீக்கு
  17. கவிதைகள் சுவாரஸ்யம்! முகநூல் ஜோக் ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் சிரிக்கவைத்தது. சினிமா செய்திகளும் ஆச்சர்யம் அளித்தன. சுவையான பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  18. நன்றி முரளி.. நானும் எல்லா தளங்களிலும் தமிழ்மணம் வாக்கு இட்டு விடுவேன். நீங்கள் சொல்வது போல எனக்கு ரமணி ஸார் ப்ளாக்கில் (தீதும் நன்றும் பிறர் தர வாரா) நடக்கும். இன்னும் சில ப்ளாக்குகளில் (துளசிதரன், கரந்தை ஜெயக்குமார்) மொபைல் வழியாக பின்னூட்டம் இடும்போது தம வராது. அந்த நேரங்களில் கணினிக்கு வரும்போது மறக்காமல் சென்று தம வாக்களித்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி துளசி.. கீதா. அந்த "க்" கை ரசித்துப் பின்னூட்டம் போட்டதற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  20. ஹா... ஹா... ஹா... நன்றி பகவான்ஜி.

    பதிலளிநீக்கு
  21. நன்றி கோமதி அரசு மேடம். தமிழ்மணம் நிறையப் படுத்துகிறது. ஆனாலும் நான் விடாமல் நண்பர்கள் அனைவருக்கும் வாக்களித்து விடுவேன். ஹிஹிஹி..

    பதிலளிநீக்கு
  22. நானும் வாக்களித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
    கஷ்டத்தை சொன்னேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!