புதன், 9 மே, 2018

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்! புதன் 180509


அநேகமாக கேள்வி கேட்டவருக்கே மறந்து போயிருக்கும்!  
கீதா சாம்பசிவம்: 

கேஜிஜி சார், இது ரொம்ப அநியாயமா இல்லையோ! வெளியிடும் நேரம் சொல்ல வேண்டாமா? 

ப: சொல்லிடறேன்! இது வெளியிடப்படும் நேரம் : இதோ இப்பதான்! 


முழுக்கப் படிச்சுட்டுக் கருத்துச் சொன்ன ஒரே பதிவு என்ற பெருமையைப் பெறும் இந்தப் பதிவின் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பவர் கேஜிஜி தானே? 

ப: அடேங்கப்பா! என்ன துல்லியம்! 


உங்க அம்மா உங்களுக்குக் கடைசியா அடை எப்போ செய்து கொடுத்தார்? 

ப: 1987 ஜூன் 14 ஹி ஹி அடிச்சு விடுவோம் யாரு செக் செய்யப் போறாங்க! 

இந்த வாரம் கு.கு. வந்திருப்பதால் கேஜிஜி ஒளிஞ்சுண்டிருக்காரோ? 

ப: கு கு வா ! கிக் கிக் கீ! 

அடுத்த வாரத்துக்கான கேள்விகளை எப்போக் கேட்கணும்? 

ப : எப்போ கேட்டாலும் அதுக்கு அப்புறம் வருகிற புதனில் பதில் சொல்லிடறேன்! 

முதல் வாரம் பிடிக்காத பதிவர் காசு சோபனா. அடுத்தவாரம் பிடித்த பதிவரும் அவரே. அப்போ பதில்களும் அவரே தானா?

ப: இல்லை. 

கேஜிஜியும் காசு சோபனாவும் ஒருவரா? 

ப: பலர். 

கேள்வி-பதில்களைப் பார்க்கையில் கேஜிஜி ஒருத்தரால் தான் இப்படி வடைகள், சேச்சே, விடைகள் தரமுடியும்னு தோணுது, உண்மையா, இல்லையா? 

ப: கணிதக் கேள்விகளுக்கு ஒரு ஆசிரியர், விஞ்ஞான / பொறியியல் கேள்விகளுக்கு ஒரு ஆசிரியர், இலக்கிய கேள்விகளுக்கு ஒரு ஆசிரியர், அழகுக் குறிப்புகளுக்கு ஒரு ஆசிரியர், இவை எதுவுமே இல்லாம அல்லது எல்லாம் கலந்த கேள்விகளுக்கு அல்லது குறும்புக் கேள்விகளுக்கு ஒரு ஆசிரியர் என்று வைத்துக்கொண்டோம். ஆனா பாருங்க, கோமதி அரசு மேடம் சொன்னது போல வித்தியாசமான கேள்விகளைத்தான் காணோம்!

மத்தவங்க எல்லாம் ரொம்ப சீரியஸ் டைப்! உண்டா, இல்லையா?

ப: இல்லை. 

ஶ்ரீராம் இப்படி எல்லாம் பதில் சொல்ல மாட்டார், அவர் பாணியே வேறே! அதோட அனுஷ்காவோ, தமன்னாவோ வராமல் அவரால் எந்த பதிலும் சொல்ல முடியாது! சரியா? 

ப: அடக் கடவுளே! ஸ்ரீராம் இதிலெல்லாம் ஹனுமார் மாதிரி. தன் பலம் என்ன என்று அவருக்கே தெரியாது. 


கீதா ரெங்கன்: 

அது சரி துவலை அடைனு சொன்ன அந்த ஆராய்ச்சி ஆசிரியர் யாரோ? 

ப: நான் இல்லை.

//பலம் : கோபமே வராது. பலவீனம்: இரக்க குணம். //

ஆஹா! செம... இது யாருடைய பதிலோ? 

ப: என்னுடைய பதில்தான்! 

துரை செல்வராஜூ : 


அபிநய சரஸ்வதி படம் எங்கே ஐயா!?...

ப: இதோ! 

(செல்வ) ராஜாவின் பார்வை ராணி என் பக்கம்!

(அட! என் படத்தையும் கேட்க, பார்க்க  ஆள் இருக்காரே!)

வல்லி சிம்ஹன் :

பானுமதிக்குள்ள த்ரிஷா,பாவ்னா,தமன்னா,அனுஷ்காவை அமிழ்த்திவிட்டீர்கள். 
பானுமதி மாதிரி இவர்களுக்கு நடிக்க வருமா?

ப: பானுமதி நடிப்பு ஒன்னும் ஆஹா ஓஹோ கிடையாது. மூக்கால பேசி மூக்கால பாட்டுப் பாடியவர். மாறுதலான நகைச்சுவை எழுத்தாளர். 

அதிரா : 

எப்போ பார்த்தாலும் பெண் படத்தையே போட்டுக்கொண்டு:)) ஏன் ஆண்கள் நகம் கடிப்பதில்லையோ? 

ப: ஓ ! கடிப்பாங்களே ! இதோ : 


 யாருடா அந்த அதிரா ? (சும்மா அதிருதில்ல!)


 ......... கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி ! 

இவரு ஆரூஊஊஊஊஊஊ? ஒருவேளை சிவாஸ் றீகல் சிவசம்போ அங்கிளின் ப்ப்ப்பிரதர் ஆக இருப்பாரோ?: 

ப: அட ! ஆமாம்! கரீட்டு! 


அதென்ன நாலு பெண்களில் அனுக்காவுக்கு மட்டும் லிப்ஸ்ரிக்:) பூசி விட்டிருக்கிறீங்க?: 

ப: இல்லை. அவுக உதட்டுல மருதாணி இட்டுகிட்டாங்களாம் ! 


1.நுளம்பு கடிச்சாலும் கோபம் வராதோ?   

   ப: நுளம்புக்கா? எனக்கா? 

எதையாவது பார்த்தவுடன்.. கேட்டவுடன், சிலருக்கு காலில் ஆராவது மிதிச்சிட்டால் கெட்ட கோபம் வரும்.. இப்படி ஏதும் உண்டோ??? 

ப : கோபம் என்பது இயலாமையின் ரூபம். இதை உணர்ந்துகொண்டுவிட்டோம் என்றால், கோபம் நம்மை அண்டாது.

1.கெள அண்ணனின் வாழ்க்கையில் தீராத அல்லது நிறைவேற்ற முடியாமல் போன ஆசை ஏதும் உண்டோ?

ப: ஒவ்வொரு கால கட்டத்தில் சில சில ஆசைகள் இருந்திருக்கலாம்; ஆனால் காலப்போக்கில் அதுவே சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்கிற ஞானோதயமும் ஏற்பட்டிருக்கிறது. 

2. வெளிநாட்டில் இருக்கும் நம்மவர்களைப்பார்த்து கோபம் பொறாமை அல்லது நாமும் போனால் என்ன வெளிநாட்டுக்கு எனும் விருப்பம் ஏற்பட்டதுண்டோ?  


ப: நிச்சயமாக இல்லை. என்னை எந்த வெளிநாடும் கவர்ந்தது இல்லை. 


3. நீங்கள் சைவம் தானே? அப்போ அசைவம் என்றால் எப்படியிருக்கும்.. அது நல்லதோ கெட்டதோ இப்படி ஏதும் சிந்தித்ததுண்டோ?:).

ப: இல்லை. எங்கள் காண்டீனில் பக்கத்தில் உட்கார்ந்து அசைவம் தின்றவர்களுடன் சகஜமாக உரையாடியபடி என் சைவ உணவை சாப்பிடுவேன். அசைவ உணவு விருப்பமும் கிடையாது, அதன் மீது வெறுப்பும் கிடையாது. 
லோகோ பின்ன ருசி! 


. அனுஷ்கா உங்கட வீட்டுக்கு வந்து ஸ்ரீராமின் அட்ரஸ் உம் ஃபோன் நம்பரும் கேட்டால் குடுப்பீங்களோ? 

ப: தரமாட்டேன்! "என் வீட்டு விலாசத்தை எப்புடி கண்டுபிடிச்சியோ அப்படி ஸ்ரீராம் விலாசத்தை கண்டு பிடிச்சுக்கோ போ" என்று சொல்லிவிடுவேன்!  

ஸ்ரீராம் உங்களைப்போலவேதான் இருப்பாரோ இல்லை வித்தியாசமாக இருப்பாரோ? 

 ப: ஆறு வித்தியாசங்கள் உள்ளன.


பானுமதி வெங்கடேஸ்வரன் : 

கண்ணதாசன் கவியரசு, வைரமுத்து கவிப்பேரரசு. இந்த இருவருக்கும் ஈடு கொடுத்த வாலி? 

ப: எனக்குத் தெரிந்து, மூன்று பேரும் மூன்று வித்தியாசமான டிராக். கவிதை என்று பார்த்தால், 
கண்ணதாசன்: Distinction. 
வாலி : First class. 
வைரமுத்து sorry.

நெல்லைத் தமிழன் : 


1. அது எப்படி நம் எல்லோருக்கும் மனைவியின் சமையலைவிட மனதில் அம்மா சமையல் ஒரு படி மேலோங்கியே வாழ்க்கை முழுவதும் இருக்கிறது (மனசைவிட்டு வெளியில் சொல்வது கடினம் என்றபோதும்)

ப: அம்மா சமையலுக்கு சிறுவயது முதலே பழகிட்டோம் என்பது முதல் காரணம். நமக்கு எது பிடிக்கிறது, எது பிடிக்கவில்லை, எது நம் உடம்புக்கு ஒத்துக்கொள்கிறது என்பது போன்ற விஷயங்களை அம்மா நன்கு கவனித்து, அதற்கேற்றாற்போல் செய்வார்கள். என் பள்ளிக்கூட நாட்களில், நான் சாப்பிடும்பொழுது என் அம்மா, நான் என்ன சாப்பிடுவேன், எவ்வளவு சாப்பிடுவேன் என்று அவர்களாகவே சரியாக அனுமானித்து பரிமாறுவார். 

2. அடுத்தவர் மனதில் நினைப்பதை நம்மால் உடனுக்குடன் அறிய முடிந்தால், நம் வாழ்வு எப்படி இருக்கும்? 

ப: ஒன்னும் பிரமாதமா மாறிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு வகையில், அடுத்தவரின் நினைப்புகளை, அவருடைய உடல் மொழியே துல்லியமாக நமக்கு சொல்லிவிடும். 3. முகநூல், இணையம் வழியாக ஏற்பட்ட நண்பர்களை (இருபாலாரும்) அவர்கள் எழுத்து மூலமாகவே அறிவோம். அப்போது அவர்கள் குரல், உருவம், பழகும் விதம் என்று மனது ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும். நேரில் பார்க்கும்போது உங்களுக்கு அது எப்போதும் சரியாக இருந்திருக்கிறதா? (உதாரணமா நீங்கள் கொஞம் ஜாலி டைப், நகைச்சுவையா பேசும்போது தவறு நேர்ந்தாலும் ரொம்ப தப்பா எடுத்துக்க மாட்டீங்க என்ற ஒரு பிம்பம் இருக்கு (இருக்கா?). ஆனால் நேரில் அப்படியே இருக்குமா?)

  ப: கரெக்ட். 

4. ஓய்வு பெற்றவுடன் ஒரு வெறுமை வந்ததா? பகல் முழுவதும் வீட்டில் தொந்தரவு செய்யாத மனுஷன், முழு நாளும், வாரம் முழுவதும் வீட்டிலேயே இருக்கும்போது மனைவிக்கும் அது கொஞ்சம் அன்கம்ஃபர்டபிளா இருந்ததா? அந்த வெறுமையை எப்படி நீங்கள் கடந்தீர்கள்? எப்படி ஆக்டிவாக ஆக்கிக்கொண்டீர்கள்? (இதுக்கு கேஜிஎஸ், கேஜிஒய், கேஜிஜி ஆகியோர் பதில் எழுதலாம்) 

ப: ஓய்வு பெற்றவுடன், ' அப்பாடி!' என்ற நிம்மதி உணர்வுதான் வந்தது. நான் பெற்றது விருப்ப ஓய்வு.  (கே ஜி ஜி ) 

ஓய்வா ! எனக்கா ? நெவர். ( கே ஜீ ) 

It would be wise if after a certain age, perhaps let us say forty or forty-five, or younger still, you retired from the world, before you are too old. What would happen if you did retire not merely to enjoy the fruit of sensate gatherings but retired in order to find yourself, in order to think feel profoundly, to meditate, to discover reality? Perhaps you may save mankind from the sensate, worldly path it is following, with all its brutality, deception and sorrow. Thus there may be a group of people, being disassociated from worldliness, from its identifications and demands, able to guide it, to teach it. Being free from worldliness they will have no authority, no importance and so will not be drawn into its stupidities and calamities. For a man who is not free from authority, from position, is not able to guide, to teach another. A man who is in authority is identified with his position, with his importance, with his work and so is in bondage. To understand the freedom of truth there must be freedom to experience. If such a group came into being then they could produce a new world, a new culture. (Jiddu Krishnamurti)      (கே ஜி ஒய் )
மேலும், 
நான் பல்வேறு ரசனையுள்ள ஆள் என்பதால் ரிடயர் ஆனதும் வெறுமை அறவே இல்லை. உண்மையில் எனக்கு அளிக்கப் பட்ட எக்ஸ்டென்ஷனை பணிவுடன் மறுத்துவிட்டேன்.

இன்றுவரை போர் அடித்து அவதியுற்றதில்லை. கரண்ட் இன்டெரெஸ்ட் ஒன்றிரண்டு இருந்துகொண்டே இருக்கும். (கே ஜி ஒய் ராமன்) 

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் !  


104 கருத்துகள்:

 1. சூபர். காரசாரமா இருந்தது.
  இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை மாலை வணக்கம் வல்லிம்மா...

  பதிலளிநீக்கு
 3. கேஜிஜி சார், இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் வந்து பதிவு போடுவீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 4. ஆனாலும் பதில்கள் எல்லாம் ஜூப்பருங்கோ! ஹெஹெஹெ, வழக்கம் போல் 6 மணீக்கு வந்து பார்க்கப் போறவங்களை நினைச்சுச் சிப்புச் சிப்பா வருது.

  பதிலளிநீக்கு
 5. இந்த "ளாஇ" கலப்பையிலே இப்படி வருதா சுரதாவுக்குப் போய்ச் சரியான ளை போட்டு எடுத்துட்டு வர வேண்டி இருக்கு!

  பதிலளிநீக்கு
 6. ஆ!! இது என்ன இன்று 6 மணிக்கு முன்னர் வந்துவிட்டது!!

  இனிய காலை வணக்கம்!!! கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா கீதாக்கா....அதான் துரை அண்ணாவைக் காணலை...இனிய மாலை வணக்கம் வல்லிம்மா!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. வாங்க கீதாக்கா... காலை வணக்கம். பாதி கஞ்சி / காபியிலேயே வந்துட்டீங்க போலவே...

  பதிலளிநீக்கு
 8. கேஜிஜி சார், இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் வந்து பதிவு போடுவீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

  அதானே நல்லா கேளுங்க கீதாக்கா...நானும் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  கீதா

  பதிலளிநீக்கு
 9. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்...

  பதிலளிநீக்கு
 10. //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

  இந்த கிர்ர்ர்ர்ர்ர் எல்லாம் வெங்கட் பதிவுல போடவேண்டியது... அவர்தான் கிர்க் காட்டு சிங்கத்தைப் பற்றி எழுதி இருக்கார்!

  பதிலளிநீக்கு
 11. //பாதி கஞ்சி / காபியிலேயே வந்துட்டீங்க போலவே...// அதெல்லாம் முடிக்காமக் கணீனியையே எடுக்க மாட்டேன்! மாமா சீக்கிரம் எழுந்தாக் காஃபி சீக்கிரம். இல்லைனா தாமதம்! கஞ்சி எழுந்ததும் போட்டு வைச்சுடுவேன்.

  பதிலளிநீக்கு
 12. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

  பதிலளிநீக்கு
 13. கூட்டத்துல ChivasRegalசிவசம்போவும் கலக்கிட்டாரே... ஸூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
 14. முழுக்கப் படிச்சுட்டுக் கருத்துச் சொன்ன ஒரே பதிவு என்ற பெருமையைப் பெறும் இந்தப் பதிவின் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பவர் கேஜிஜி தானே? //

  பின்னே முழுசும் படிக்காம பதில் சொல்ல முடியுமா என்ன? ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 15. கூட்டத்துல ChivasRegalசிவசம்போவும் கலக்கிட்டாரே... ஸூப்பர் ஜி//

  என்னாது எபி யில் சிவாஸ் ரீகலா?!!!! ஆஆஆஆஆஆஆ என்ன என்ன போய்ப் பார்க்கறேன்....மண்டை காயுது

  கீதா

  பதிலளிநீக்கு
 16. அடக் கடவுளே! ஸ்ரீராம் இதிலெல்லாம் ஹனுமார் மாதிரி. தன் பலம் என்ன என்று அவருக்கே தெரியாது. //

  ஹா ஹா ஹா ஹா சரியான பதில் ஆமாம் அதான் இங்க நாங்க நிறையப்பேர் இருக்கோமே அனுஷ் தமன் புகழ் பாடி அவரை உசுப்பேத்தி சொல்ல ஸாரி ஜொள்ள வைக்க!!! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 17. ஹை துரை அண்ணா இன்று ஹேப்பியோ ஹேப்பி!! அவர் கேட்டிருந்த படம் வந்துவிட்டது!!! அபிநயசரஸ்வதி படம் பார்த்து அபிநயம் பிடித்திருப்பாரே!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 18. அதிரா விடாதீங்கோ நீங்கள் சொன்ன படம் இல்லை இப்படியா நகம் கடிப்பது?!!! அங்கு பாருங்க அவர் குத்தி ரத்தம் வருது!!! நகம் கடிப்பதென்றால் ஸ்டைலாக இருக்க வேண்டாமோ?!! இப்படியா பயமுறுத்தும் படம் போடுவது!! நோ நோ நோ இது அதிராவின் சார்பில் நான் கண்டனம் தெரிவித்து போராட்டம் அதிராவுடன் சேர்ந்து...அதிரா விடாதீங்கோ.....

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
 19. பதில்கள் அமர்க்களம்!விஞ்ஞானம், பொறியியல்,கணிதம் இவையெல்லாம் சீரீயஸ் சமாசாரங்கள் இல்லையோ? அதற்கு நகைச்சுவையாக பதில் கூறி கேள்வி கேட்டவரை பல்ப் வாங்க வைக்க உத்தேசமா?
  அது சரி ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொருத்தர் இன்சார்ஜ் என்றால் அரசுதான் உங்கள் முன்னோடியா?

  பதிலளிநீக்கு
 20. பதிவு வித்தியாசமாக இருந்தது... கலக்கல்...!

  பதிலளிநீக்கு
 21. எதையாவது பார்த்தவுடன்.. கேட்டவுடன், சிலருக்கு காலில் ஆராவது மிதிச்சிட்டால் கெட்ட கோபம் வரும்.. இப்படி ஏதும் உண்டோ???

  ப : கோபம் என்பது இயலாமையின் ரூபம். இதை உணர்ந்துகொண்டுவிட்டோம் என்றால், கோபம் நம்மை அண்டாது.//

  மிக மிக தத்துவார்த்தமான நான் ரசித்த பதில்!!! செம!!

  கீதா

  பதிலளிநீக்கு
 22. நீங்கள் சைவம் தானே? அப்போ அசைவம் என்றால் எப்படியிருக்கும்.. அது நல்லதோ கெட்டதோ இப்படி ஏதும் சிந்தித்ததுண்டோ?:).

  ப: இல்லை. எங்கள் காண்டீனில் பக்கத்தில் உட்கார்ந்து அசைவம் தின்றவர்களுடன் சகஜமாக உரையாடியபடி என் சைவ உணவை சாப்பிடுவேன். அசைவ உணவு விருப்பமும் கிடையாது, அதன் மீது வெறுப்பும் கிடையாது. //

  ஹை!! என்னிடம் கேட்பவர்களிடம் நான் அடிக்கடி சொல்லும் பதில்...என்ன கேண்டீன் என்பது மட்டும் மாறும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 23. . அனுஷ்கா உங்கட வீட்டுக்கு வந்து ஸ்ரீராமின் அட்ரஸ் உம் ஃபோன் நம்பரும் கேட்டால் குடுப்பீங்களோ?

  ப: தரமாட்டேன்! "என் வீட்டு விலாசத்தை எப்புடி கண்டுபிடிச்சியோ அப்படி ஸ்ரீராம் விலாசத்தை கண்டு பிடிச்சுக்கோ போ" என்று சொல்லிவிடுவேன்! //

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....செம செம!!! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரசித்தேன் பதிலை!!!!

  அதிரா........ பல்பு!!! ஹிஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 24. ஸ்ரீராம் உங்களைப்போலவேதான் இருப்பாரோ இல்லை வித்தியாசமாக இருப்பாரோ?

  ப: ஆறு வித்தியாசங்கள் உள்ளன.//

  ஹா ஹா ஹா ஹா....அதிரா உங்களுக்கு ஒரு ரகசியம்....ஸ்ரீராமை பார்த்தது இல்லைதானே!! நீங்க...ஃபோட்டோவில் கூட!! கிட்டத்தட்ட கௌ அண்ணா போலதான் இருப்பார் ஸ்ரீராம்!! ஆறு வித்தியாசம் ரெட்டையருக்கும் உண்டே!! என்ன சொல்லறீங்க அதிரா!!?? சரிதானே...இன்னொரு க்ளூ ஸ்ரீராமோட அம்மா படம் பார்த்திருப்பீங்க...எங்க பதிவுல கூட போட்டிருந்தோம்....அவங்களைப் போலத்தான் இருப்பார் ஸ்ரீராம்...

  அதனால் மக்களுக்கு நான் என்ன சொல்ல வரேன் என்றால் ஸ்ரீராமின் ஃபோட்டோ போடலைனு இனி யாரும் சொல்லப்படாதுனு!! ஹா ஹா ஹா ஹா!!

  கீதா

  பதிலளிநீக்கு
 25. க அ கதா, க பே வைமு, வாலி மூன்று பேரையும் சொன்ன பதில் ஜூப்பர்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 26. 1. அது எப்படி நம் எல்லோருக்கும் மனைவியின் சமையலைவிட மனதில் அம்மா சமையல் ஒரு படி மேலோங்கியே வாழ்க்கை முழுவதும் இருக்கிறது (மனசைவிட்டு வெளியில் சொல்வது கடினம் என்றபோதும்)

  ப: அம்மா சமையலுக்கு சிறுவயது முதலே பழகிட்டோம் என்பது முதல் காரணம். நமக்கு எது பிடிக்கிறது, எது பிடிக்கவில்லை, எது நம் உடம்புக்கு ஒத்துக்கொள்கிறது என்பது போன்ற விஷயங்களை அம்மா நன்கு கவனித்து, அதற்கேற்றாற்போல் செய்வார்கள். என் பள்ளிக்கூட நாட்களில், நான் சாப்பிடும்பொழுது என் அம்மா, நான் என்ன சாப்பிடுவேன், எவ்வளவு சாப்பிடுவேன் என்று அவர்களாகவே சரியாக அனுமானித்து பரிமாறுவார். //

  மனதைக் கவர்ந்த பதில்....கேள்வியும் தான்....நெல்லை எங்கள் வீட்டில் என் மாமியாரின் சமையலை பிள்ளைகள் எல்லோரும் சொல்லுவார்கள். நான் அவரிடம் கற்றது நிறைய....அவரைப் போல் அக்கைமணம் பெற்று வரவைல்லை என்றாலும் கூட...இது ஒரு தொடர்கதை....என் மகன் இப்போது என்னைச் சொல்லுவது போல்!! எங்கள் வீட்டில் பிள்ளைகள் எல்லோரும் மனம் திறந்து சொல்லுவார்கள்...சொல்லவும் முடியும் அவர்கள் அம்மாவின் சமையலைப் புகழ்ந்து!

  கீதா

  பதிலளிநீக்கு
 27. நெல்லை அதே போல என் வீட்டில் நாத்தனார்கள், மற்றும் சகோதரர்களின் மனைவிகளின் சமையலையோ அல்லது சில செயல்களையோ புகழ்ந்து பாராட்டினாலும். எந்தவிதப் பிரச்சனையும் வந்ததில்லை அவர்களிடம் அதைக் கற்கலாமே என்று நினைப்பதுண்டு..

  நெல்லை உங்கள் கேள்வியில் கதையே எழுதலாம். உங்கள் கேள்வியையும், எபி ஆசிரியரின் பதிலையும் பார்த்ததும் என் கதையை முடித்து கே வா போவுக்கு அனுப்பலாம் என்றும் தோன்றுகிறது....இதையும் கோட் செய்து...

  கீதா

  பதிலளிநீக்கு
 28. //நெல்லை அதே போல என் வீட்டில் நாத்தனார்கள், மற்றும் சகோதரர்களின் மனைவிகளின் சமையலையோ அல்லது சில செயல்களையோ புகழ்ந்து பாராட்டினாலும். எந்தவிதப் பிரச்சனையும் வந்ததில்லை அவர்களிடம் அதைக் கற்கலாமே என்று நினைப்பதுண்டு..//இப்போக் கூட இங்கெல்லாம் சொல்ல முடியாது! :)

  பதிலளிநீக்கு
 29. கேஜிஜி சார், நான் முழுக்கப் படிச்சுட்டுக் கருத்துச் சொன்ன ஒரே பதிவு எது? அதைக் கண்டு பிடிச்சீங்களா இல்லையா?

  எல்லாருமே அம்மாக்கள் தானே! அப்போ எல்லோருடைய சமையலும் நல்லாத் தானே இருக்கும்? இந்தக் கண்டு பிடிப்புக்கு உங்கள் பதில் என்ன?

  ஶ்ரீராம்
  தாத்தாவாகிட்டார், நீங்க? வாயே திறக்க மாட்டேங்கறீங்க? தாத்தாவா இல்லையா?

  கேஜிஜி சார், பதிவு எழுதறதை விட இம்மாதிரிக் கேள்விகள்-பதில்கள் சுலபம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 30. இந்தத்திங்கற கிழமைப் பதிவை ஆரம்பிச்சது நீங்க! அப்புறமா எங்கே நீங்க வரதே இல்லை? ஸ்டாக் இல்லையா? இல்லாட்டி உங்க பாஸ்(ஶ்ரீராம் சொல்லும் அர்த்தம்) சமைக்க ஆரம்பிச்சுட்டாங்களா?

  பதிலளிநீக்கு
 31. கோமதி அரசு மேடம் சொன்னது போல வித்தியாசமான கேள்விகளைத்தான் காணோம்!
  மாற்றி யோசிக்க சொன்னதை சொல்கிறீர்களா ?

  இந்த வார கேள்வி பதில்கள் நல்லா இருக்கிறது.
  ஒரு பதிவில் என் அம்மா சமையலை புகழ்ந்த போது ஸ்ரீராம் பெண்களை விட ஆண்கள்தான் அம்மா சமையலை அதிகம் புகழ்ந்து பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று. உண்மைதான் என்று நெல்லைத் தமிழனுக்கு அளித்த
  பதில் சொல்லுது.  பதிலளிநீக்கு
 32. அம்மாவுக்குதான் எல்லாம் தெரியும் என்பதை ஒத்துக் கொள்கிறேன், எது பிடிக்கும், பிடிக்காது, எவ்வளவு சாப்பிடுவார்கள், எதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பது எல்லாம் அம்மாவுக்கு பின் மனைவிக்கும் தெரியும் என்பதை ஒத்துக் கொள்ளவும் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 33. கல்யாணம் ஆகி அம்மா வீட்டுக்கு கணவருடன் போகும் பெண் தன் அம்மாவிடம் அவருக்கு இந்த சமையல் பிடிக்கும்,இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று பெரிய் லிஸ்ட் கொடுப்பாள் .அம்மாதன் பெண்ணிடம் உன் கணவருக்கு என்ன சமையல் பிடிக்கும் என்று கேட்பதற்குள்.

  பதிலளிநீக்கு
 34. நெல்லையின் இரண்டாவது கேள்விக்கான பதிலும் சூப்பர்...

  மூன்றாவது கேள்விக்கான பதில் குழப்புதே!!

  என் அனுபவம்.. சிலர் மட்டுமே வித்தியாசம். சிலர் அப்படியே....

  கீதா

  பதிலளிநீக்கு
 35. அம்மாவுக்குதான் எல்லாம் தெரியும் என்பதை ஒத்துக் கொள்கிறேன், எது பிடிக்கும், பிடிக்காது, எவ்வளவு சாப்பிடுவார்கள், எதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பது எல்லாம் அம்மாவுக்கு பின் மனைவிக்கும் தெரியும் என்பதை ஒத்துக் கொள்ளவும் வேண்டும்.//

  உண்மைதான் மிகவும் சரியே...கோமதிக்கா....இதையும் அடுத்த அக்ருத்தாகச் சொல்ல நினைத்தேன்....தாய்க்குப் பின் தாரம் என்று....அதற்குள் சில வேலைகள் வரவும் டைவேர்ட் ஆகிட்டேன் நான்...ஹா ஹா

  கல்யாணம் ஆகி வரும் போது கணவுக்குப் பிடித்த உணவை மாமியார் எப்படிச் செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள மாமியாரிடமும் சிலது கைப்பக்குவம் கற்க வேண்டுமே...அங்கு தொடங்குகிறது சில பிரச்சனைகள். (மாமியாரின் கைப்பக்குவமும், பிறந்த வீட்டில் அம்மாவின் பக்குவம் செய் முறையில் வித்தியாசம் இருக்கும். என்றாலும் அந்த இடத்தில் பிறந்த வீட்டுப் பெருமையைப் பேசாமல் அடக்கி வாசிக்க வேண்டும். அப்புறம் நல்ல புரிதல் வந்த பிறகு மாமியாரிடம் இப்படியும் செய்து பார்க்கலாமா செய்யலாமா என்று சொல்லலாம்...)
  கைப்பக்குவம் அறிந்ததும், குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகள் உறவையே பிரிக்கும் அள்விலும் ஆகிவிடுகிறது...இதை நான் கிச்சன் பாலிட்டிக்ஸ் என்பேன்.

  அக்கா பெண்களாகிய நாம் மகள், மருமகள், மனைவி, அம்மா அப்புறம் மாமியார்.. என்ற முதல் ரவுன்ட் உறவு பெறுகிறோம்...இதில் நாம் எத்தனைக்கெத்தனை பக்குவமாக நடந்து கொள்கிறோமோ அத்தனைக்கத்தனை உறவும் இனிக்கும். மகிழ்ச்சியும் பெருகும்...சரிதானே கோமதிக்கா!!?

  கீதா

  பதிலளிநீக்கு
 36. ஒரு பதிவில் என் அம்மா சமையலை புகழ்ந்த போது ஸ்ரீராம் பெண்களை விட ஆண்கள்தான் அம்மா சமையலை அதிகம் புகழ்ந்து பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று. உண்மைதான் என்று நெல்லைத் தமிழனுக்கு அளித்த
  பதில் சொல்லுது.//

  ஹா ஹா ஹா அக்கா சரியே!!!

  ....நானும் என் மகனும் பேசிய போது என் அம்மாவின் சமையலை அவன் மிகவும் ரசித்துச் சாப்பிட்டதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்...."அம்மா உனக்குக் கூட உன் அம்மா போல சமைக்க வரலை" என்று சொன்னான்.

  அக்கா நாம் பெரும்பாலும் அம்மாவிடம் கற்பதை விட திருமணம் ஆன பிறகு மாமியாரிடம் கற்பதால் இருக்கும் இல்லையா? அதையே நான் என் மகனிடம் சொன்னேன். மட்டுமல்ல நான் பாட்டிகளிடம் கற்றதுதான் அதிகம். என் அம்மா தனியாகச் சமைக்கத் தொடங்கியது பாட்டிகள் இறந்த பிறகே.
  கூடியவரை என் கஸின்ஸ் என் அம்மா சமையல் பற்றிச் சொல்லுவதிலிருந்தும், என் மகன் சொல்லுவதிலிருந்தும் தெரிந்து கொண்டு செய்ய முயற்சியும் செய்கிறேன்...அதுவும் சமீப காலமாக..

  கீதா

  பதிலளிநீக்கு
 37. @ Thulasidharan V Thillaiakathu said...
  >>> ஹை துரை அண்ணா இன்று ஹேப்பியோ ஹேப்பி!.. அவர் கேட்டிருந்த படம் வந்துவிட்டது!.. அபிநயசரஸ்வதி படம் பார்த்து அபிநயம் பிடித்திருப்பாரே!.. ஹா ஹா ஹா ஹா!..

  கீதா... <<<

  அபிநயம் என்றால் கன்னடத்தில் நடிப்பு என்று அர்த்தமாம்.. எங்கோ படித்தது...

  அபிநய சரஸ்வதியைக் கண்டு
  அபிநயம் பிடித்தால்
  அடுத்த அறைக்காரன்
  அடிதடிக்கு வந்து விடுவான்!...

  ஆகா.. எல்லாம் ஆனா!..
  கவிதை.. கவிதை..

  பதிலளிநீக்கு
 38. ஶ்ரீராம்
  தாத்தாவாகிட்டார்,//

  கீதாக்கா ஸ்ரீராம் மாமாதாத்தாவாகிருக்கார்!! ஹா ஹா ஹா நேரடி தாத்தா ஆகலியே...ஹிஹிஹி...

  கீதா

  பதிலளிநீக்கு
 39. கீதாக்கா நீங்க (பிறக்காத!!!!) குழந்தைப் பாட்டி னா ஸ்ரீராம் (பிறக்காத!!!) குழந்தைத் தாத்தா!! ஹா ஹா ஹா ஹா மீ... பெரிய கண்டுபிடிப்பு!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 40. அபிநயம் என்றால் கன்னடத்தில் நடிப்பு என்று அர்த்தமாம்.. எங்கோ படித்தது...

  அபிநய சரஸ்வதியைக் கண்டு
  அபிநயம் பிடித்தால்
  அடுத்த அறைக்காரன்
  அடிதடிக்கு வந்து விடுவான்!...

  ஆகா.. எல்லாம் ஆனா!..
  கவிதை.. கவிதை..//

  ஹா ஹா ஹா //கவிதை கவிதை!!!//

  துரை அண்ணா ஆரும் அறியாதே, காணாதே அபிநயிக்காமல்லோ!!!!!

  துரை அண்ணா மலையாளத்திலும் அபிநயம் என்றால் நடித்தல் என்றுதான் அர்த்தம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 41. கேள்வி பதில் பகுதியை ரசித்தேன்.

  கொஞம் ஜாலி டைப், நகைச்சுவையா பேசும்போது தவறு நேர்ந்தாலும் ரொம்ப தப்பா எடுத்துக்க மாட்டீங்க என்ற ஒரு பிம்பம் இருக்கு (இருக்கா?). ஆனால் நேரில் அப்படியே இருக்குமா?)

  ப: கரெக்ட். - பதில் சரியா வரலை. அல்லது கேள்வியில் குழப்பமா?

  கேஜீ - யார்? கேஜிஎஸ்ஸா? கேஜிஒய் - யக்ஞராமன் சார். அவர்தான் ஜேகேயை quote பண்ணமுடியும். கேஜிஒய் ராமன் யார்? இங்கு ஸ்ரீராம் மிஸ்ஸிங்.

  நான் மிகவும் மனமகிழ்ந்த பதில்,

  கவிதை என்று பார்த்தால்,
  கண்ணதாசன்: Distinction.
  வாலி : First class.
  வைரமுத்து sorry.

  கண்ணதாசன் விளம்பரமில்லாத ஆனால் சரக்கு மிக்கவர். வாலி, கொஞ்சம் விளம்பர உலகிலும் இருந்தவர். வைரமுத்து விளம்பரம் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டிருப்பவர்.

  பதிலளிநீக்கு
 42. கீதா ரங்கன் - உங்கள் பல பின்னூட்டங்களையும் ரசித்துப் படித்தேன். கீசா மேடத்தின் கேள்விகள்/கமெண்டுகளையும்தான்.

  பதிலளிநீக்கு
 43. கேஜீஜி சார், அவர் மனைவி இருவருமே ஜாலி டைப் தான். கேஜிஎஸ் அவரை ஶ்ரீராம் வீட்டில் பார்த்திருக்கேன். கொஞ்சம் சீரியஸ் டைப்போனு நினைச்சேன். ;))) மத்தவங்க யாரையும் பார்த்ததில்லை. ஶ்ரீராமைத் தான் மூணூ தரம் பார்த்திருந்தும் கடைசியாப் பார்த்தப்போ அடையாளம் தெரியலை. அவர் பாஸை வைச்சுக் கண்டு கொண்டேன். :)))))) அவ்வளவு ஞாபக சக்தி! ;)))))

  பதிலளிநீக்கு
 44. ஹப்பா எத்தனை கேள்விகள் அதற்கு சுவாரஸ்யமான, தத்துவார்த்தமான ஜாலியான பதில்கள்! மிகவும் ரசித்தேன். கேள்விகளை அடுத்த புதன் கேட்கிறேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 45. தமிழில் அபிநயம் எனில் பரதநாட்டியத்தில் அபிநயம் பிடித்து ஆடுவது. அநேகமாய் ஜரோஜா தேவிக்கு அவர் ஆட்டத்தை வைச்சு அபிநய சரஸ்வதினு பட்டம் கொடுத்திருக்கலாம். மீ ரொம்பச்சின்னக் குழந்தை! ஆகவே ஏன் இந்தப் பட்டம் வந்ததுனு தெரியலை! :))))))))))

  பதிலளிநீக்கு
 46. நெல்லை என் பதில்களை ரசித்தேன் என்று சொல்லுவது ஹா ஹா ஹா இருங்க இருங்க எதுக்கு சிரிப்புனு கேக்கறீங்க..

  //ஸ்ரீராம் மாமாதாத்தாவாகிருக்கார்!!// ப்ளஸ் கீதாக்காவும் சொல்லிருக்காங்க ஸ்ரீராம் தாத்தாவாகிட்டார் னு இதுக்குத்தானே!!! ஹா ஹா ஹா ஹா

  ஹப்பா..நாம இன்னும் தாத்தா ஆகலை அப்படினு அனுஷையும், தமனாவையும் நினைத்து.....ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 47. கேஜிஜி சார் அமானுஷ்யத்தை நல்லா அனுபவிச்சு எழுதுவார். இப்போல்லாம் எழுதறதே இல்லை! அமானுஷ்யம் போரடிச்சுடுத்தோ! அவர் எழுதும் அமானுஷ்யத்திலே நமக்கு பயமே வராது! :))))))))) எனக்கு முதலில் அறீமுகம் ஆனதும் கேஜிஜி தான். என்னோட முருகன் பத்தின பதிவுகளீலே கருத்துச் சொல்ல வருவார். அப்புறமாத் தான் ஶ்ரீராம். ஆரம்பத்தில் இருவரும் உறவுனு தெரியாது. எ.பி.க்கு வந்ததே இல்லை. அப்புறமாத் தான் அங்கே போட்டி வைக்கிறாங்கனு தெரிஞ்சு வர ஆரம்பிச்சேன்! பரிசும் கிடைச்சிருக்கு! புத்தகங்கள் மற்றூம் ஒரு தரம் பரிசுத் தொகையும் கூட!

  பதிலளிநீக்கு
 48. //(மாமியாரின் கைப்பக்குவமும், பிறந்த வீட்டில் அம்மாவின் பக்குவம் செய் முறையில் வித்தியாசம் இருக்கும். என்றாலும் அந்த இடத்தில் பிறந்த வீட்டுப் பெருமையைப் பேசாமல் அடக்கி வாசிக்க வேண்டும். அப்புறம் நல்ல புரிதல் வந்த பிறகு மாமியாரிடம் இப்படியும் செய்து பார்க்கலாமா செய்யலாமா என்று சொல்லலாம்...)//

  உண்மைதான் எங்கள் வீட்டில் இப்படி செய்வோம் அப்படி செய்வோம் என்று பெருமை பேசாமல் அடக்கி வாசித்தால் நல்லது தான்.

  கீதா, நானும் மாமியாரிடம் சமையல் கற்றுக் கொண்டேன். அவர்கள் சமையல் முறை, அம்மாவின் சமையல் முறை அப்புறம் நானாக புத்தகங்கள் மூலம் கற்றுக் கொண்டது என்று.
  அப்புறம் அக்கம் பக்கத்தினர் சமையல் முறை என்று. இன்று என்ன சமையல் என்று ஆரம்பித்து அப்படியே சமையல் முறைகள் அலசபடும். இப்போது அக்கம் பக்கத்தினர் கதவுகளை அடைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  //அக்கா பெண்களாகிய நாம் மகள், மருமகள், மனைவி, அம்மா அப்புறம் மாமியார்.. என்ற முதல் ரவுன்ட் உறவு பெறுகிறோம்...இதில் நாம் எத்தனைக்கெத்தனை பக்குவமாக நடந்து கொள்கிறோமோ அத்தனைக்கத்தனை உறவும் இனிக்கும். மகிழ்ச்சியும் பெருகும்...சரிதானே கோமதிக்கா!!? //

  ஆமாம் கீதா, நீங்கள் சொல்வது உண்மை. மருமகளிடம் போனால் அவள் சமையலை புகழ்ந்து எப்படி செய்தாய் என்ன என்ன போட்டாய் என்று மருமகளிடம் கேட்கும் போது அவளுக்கு ஏற்படும் மகிழ்ச்சி !
  எந்த உறவுகளிடமும் குற்றம் குறை காணாமல் இருந்தால் உறவுகள் இனிக்கும் தான்.

  பதிலளிநீக்கு
 49. நெல்லை மிக்க நன்றி ரசித்தமைக்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
 50. @ நெ.த. said...

  >>> நான் மிகவும் மனமகிழ்ந்த பதில்,

  கவிதை என்று பார்த்தால்,
  கண்ணதாசன்: Distinction.
  வாலி : First class.
  வைரமுத்து sorry.

  கண்ணதாசன் - விளம்பரமில்லாத ஆனால் சரக்கு மிக்கவர்.
  வாலி - கொஞ்சம் விளம்பர உலகிலும் இருந்தவர்.
  வைரமுத்து - விளம்பரம் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டிருப்பவர்..<<<

  தங்களது கருத்தினால் மிகவும் மகிழ்ச்சி கொண்டது என் உள்ளம்...

  பதிலளிநீக்கு
 51. @ Thulasidharan V Thillaiakathu said...

  >>> துரை அண்ணா ஆரும் அறியாதே, காணாதே அபிநயிக்காமல்லோ!!!!!

  கீதா.. <<<

  ஆரும் அறியாது ஆருங் காணாது அபிநயிக்கிறது எங்ஙனே!?..
  சாட்சாத் அவள் ஸரஸ்வதி தேவி நோக்கிண்டு இருப்பாளே!..
  அறியா மூடன்..ண்ட அபிநயம் அபச்சாரமல்லோ!?..

  பதிலளிநீக்கு
 52. ஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் இங்கின இண்டைக்கும் கீசாக்கா 1ஸ்ட்டூ உண்டில்லே:))[ஐ நேக்கும் மலையாளமா வருதே:))]..

  ஹையோ கீசாக்கா பழைய பாஸ்பேப்பரையே படிச்சிட்டுப் போய் புதுக் கிளவி வந்திட்டால்:)).. ஹையோ டங்கு ச்லிப் ஆகுதே:) புதுக் கேள்வி வந்திட்டால் தடுமாறும் மாணவி போல.. 6 மணிக்குப் பதிவு போட்டா மட்டும்தேன் கீசாக்கா 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)).

  எதுக்கும் நல்ல பழுத்த நீத்துப் பூஸணிக்காய் வாங்கிட்டுப் போய் ஸ்ரீரங்கப் பெருமாள் சந்நிதியில சிதற அடியுங்கோ கீசாக்கா திருஷ்டி கழியட்டும்ம்ம்ம்ம்:))...

  ஊறுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருக்கும் கொக்குப்போல கிடைக்கும் சான்ஸ்ல ஜம்ப் ஆகிடுறா வல்லிம்மா:))..

  அடுத்தமுறை 4 மணிக்குப் போடுங்கோ கெள அண்ணன்:)).. பார்ப்போம் என்ன ஆவுதென:)) ஹையோ ஹையொ:))... இது காவிரிப் பிரச்சனையை விடப் பெரிசாஆஆஆஆஆஆ இருக்கே ஜாமீஈஈஈஈஈஈ:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

  பதிலளிநீக்கு
 53. /துரை செல்வராஜூ said...

  //கண்ணதாசன் - விளம்பரமில்லாத ஆனால் சரக்கு மிக்கவர்.//

  ஆங்ங்ங் அதிராவைப் போலவேதேன்ன்ன் அடிராட சே..சேஎ.. அதிராட அங்கிளும்:)).

  //அறியா மூடன்..ண்ட அபிநயம் அபச்சாரமல்லோ!?..//

  ஆஞ்ஜி ஆஞ்ஜி... அபச்சாரம் .. அபச்சாரம்ம்ம்:))

  பதிலளிநீக்கு
 54. ///Geetha Sambasivam said...
  கேஜிஜி சார் அமானுஷ்யத்தை நல்லா அனுபவிச்சு எழுதுவார். இப்போல்லாம் எழுதறதே இல்லை! /////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்கா ச்ச்சும்மா இருப்பவரை உசுப்பேத்தி விடாதீங்கோ:))) இப்போ எங்கு பார்த்தாலும் பக்தி மயம்.. புளொக்குக்கு வரவே பிடிக்குதில்லை.. இதில அனுமானுஸ்யமா கர்:)) அவருக்கு கொமெடி நன்கு வருமெல்லோ அப்படிப் போஸ்ட்டுகள் போட ஜொள்ளுங்கோ எனக்கூறி விடைபெறும் நான்..

  கட்டிலுக்குக் கீழ் இருக்கும் அதிரா_()_.

  பதிலளிநீக்கு
 55. //ப: அடக் கடவுளே! ஸ்ரீராம் இதிலெல்லாம் ஹனுமார் மாதிரி.//

  ஆவ்வ்வ்வ்வ் அப்போ ஸ்ரீராம் ராமர் மாதிரி இல்லையோஓஓஓஓ:)) ஹா ஹா ஹா ஹையோ பெயரில மட்டும்தானா இருக்கூஊஊஊஊஊ?:))... இண்டைக்கு வீட்டில டின்னர் இருக்கப்போவதில்லை:).. மாமாவே சொல்லிட்டால் அதுக்கு மேலயும் கிச்சினைத்திறந்து சமைப்பினமோ?:) எதுக்கும் சரவணபவானில ஓசை:).. வாங்கிங்கொண்டு போங்கோ ஸ்ரீராம் நைட்டுக்கு:)).

  யெனக்கொரு [அவ்வ்வ் கில்லர்ஜி பாசையும் வரப்பாக்குதே:)] ஜெல்ப் கெள அண்ணன்ன்ன்.. அவர் அனுமார் எனில்.. ஒரு கையால இலங்கையைத் தூக்கிக்கொண்டு வந்து கொஞ்சம் அதிரா வீட்டு முன் மலையில வைக்கச்சொல்லிச் சொல்ல முடியுமோ?:)) பிளீஸ்ஸ்:)).

  ///
  ப: ஓ ! கடிப்பாங்களே ! இதோ :///
  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) நுளம்பு கடிச்சு ரத்தம் வருது போல:))

  பதிலளிநீக்கு
 56. ///1.நுளம்பு கடிச்சாலும் கோபம் வராதோ?

  ப: நுளம்புக்கா? எனக்கா? //

  ஆவ்வ்வ்வ்வ் இந்தப் பதில் பார்த்து மீ வியக்கேன்ன்ன்:)).. இதுக்குப் பதில் சொன்னவர் எங்கள்புளொக் ரெக்னிக்கல் டிப்பார்மெண்ட்டைக்:) கவனிப்பவராக இருப்பாரோ?:) .. சரி சரி எனக்கெதுக்கு கொசுவம்ஸ்ஸ்:))


  ///ப : கோபம் என்பது இயலாமையின் ரூபம். இதை உணர்ந்துகொண்டுவிட்டோம் என்றால், கோபம் நம்மை அண்டாது.//

  ஓஒ கெள அண்ணன் முற்றும் துறந்த முனிவராகிட்டார்ர். மீ ஞானியாகிட்டேன்ன்ன்:)

  பதிலளிநீக்கு
 57. @ athira said...

  >>> இப்போ எங்கு பார்த்தாலும் பக்தி மயம்..<<<

  பக்தி மயமா!?...

  இன்னைக்கே அபிநய சரஸ்வதி..
  அடுத்தடுத்து நயன், தமன்னா, த்ரிஷா, அனுக்கா
  - இன்னும் எந்தெந்த அக்கா இருக்குதுங்களோ அதுங்கள்...லாம் வரப்போறாங்க...

  இதுல பக்தி எங்ஙன இருந்து வரப் போகுதோ டெரியல்லை...

  தம்பீ!.. இங்கே கவனி..
  அந்த கீர்த்தி ஏன் இன்னும் வரல்லை!?...

  பதிலளிநீக்கு
 58. ///லோகோ பின்ன ருசி! // ஆஆஆஆவ்வ் எல்லோரும் ஈதர் ஆஅயியே:)) கெள அண்ணன் மதராட்டியில் பேசுறார்:))..

  ///ப: தரமாட்டேன்! "என் வீட்டு விலாசத்தை எப்புடி கண்டுபிடிச்சியோ அப்படி ஸ்ரீராம் விலாசத்தை கண்டு பிடிச்சுக்கோ போ" என்று சொல்லிவிடுவேன்!///
  ஹா ஹா ஹா கர்ர்ர்:)) இவ்ளோ பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆண்மையா?:)).. ஸ்ரீராம் பாவம் எல்லோ.. கொஞ்சம் ஜெல்ப் பண்ணலாமேஎ:)).

  //ஸ்ரீராம் உங்களைப்போலவேதான் இருப்பாரோ இல்லை வித்தியாசமாக இருப்பாரோ?

  ப: ஆறு வித்தியாசங்கள் உள்ளன.///

  ஆவ்வ்வ்வ்வ்வ் கீதா ஓடிவாங்கோ அப்போ ஸ்ரீராமுக்கு தலை மொட்டை:)) கீதாவை நான் நம்பமாட்டேன்ன்.. ஆறு வித்தியாசமாமே.. கெளை அண்ணனுக்கு நல்ல தலைமயிர் இருக்கே:)).

  //ப: ஓய்வு பெற்றவுடன், ' அப்பாடி!' என்ற நிம்மதி உணர்வுதான் வந்தது. நான் பெற்றது விருப்ப ஓய்வு. (கே ஜி ஜி ) //

  இது நிஜம்தானே... நானும் ஓய்வு பெற்றோரைப் பார்த்து இப்படித்தான் நினைப்பதுண்டு.

  பதிலளிநீக்கு
 59. கீதா, நானும் மாமியாரிடம் சமையல் கற்றுக் கொண்டேன். அவர்கள் சமையல் முறை, அம்மாவின் சமையல் முறை அப்புறம் நானாக புத்தகங்கள் மூலம் கற்றுக் கொண்டது என்று.
  அப்புறம் அக்கம் பக்கத்தினர் சமையல் முறை என்று. இன்று என்ன சமையல் என்று ஆரம்பித்து அப்படியே சமையல் முறைகள் அலசபடும். //

  ஆமாம் அக்கா நானும் இப்படித்தான் கற்றுக் கொண்டேன்...அம்மாவிடம் மட்டும் அவ்வளவாகக் கற்றுக் கொண்டதில்லை...

  இப்போது அக்கம் பக்கத்தினர் கதவுகளை அடைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.// ஆம் ஆம் அக்கா...இப்போதெல்லாம்...யாரும் யாருடனும் அதிகம் பேசுவதில்லை...

  ஆமாம் கீதா, நீங்கள் சொல்வது உண்மை. மருமகளிடம் போனால் அவள் சமையலை புகழ்ந்து எப்படி செய்தாய் என்ன என்ன போட்டாய் என்று மருமகளிடம் கேட்கும் போது அவளுக்கு ஏற்படும் மகிழ்ச்சி !
  எந்த உறவுகளிடமும் குற்றம் குறை காணாமல் இருந்தால் உறவுகள் இனிக்கும் தான்.//

  ஆம் அக்கா....மிக்க நன்றி கோமதிக்கா...

  கீதா

  பதிலளிநீக்கு
 60. //.அதிரா விடாதீங்கோ.....

  கீதா///

  ஆங்ங்ங் விட மாட்டேன்ன்ன்ன் பூஸோ கொக்கோஓ..:)

  https://fit-cats.com/wp-content/uploads/2016/01/maxresdefault-1024x576.jpg

  பதிலளிநீக்கு
 61. //இதுல பக்தி எங்ஙன இருந்து வரப் போகுதோ டெரியல்லை...

  தம்பீ!.. இங்கே கவனி..
  அந்த கீர்த்தி ஏன் இன்னும் வரல்லை!?...///

  ஹா ஹா ஹா அப்பூடிப் போடுங்கோ துரை அண்ணன்:)).. அப்பூடியே ஜெயம்ரவி அண்ணாவையும் கூட்டியாங்கோ:))

  ////////////////////////
  https://tse2.mm.bing.net/th?id=OIP.xmsGCMuqPVEYrZvX2Sw61wHaLH&pid=15.1&P=0&w=300&h=300

  பதிலளிநீக்கு
 62. வணக்கம் சகோதரரே

  நல்ல கேள்விகள். அதற்கேற்றவாறு ரசிக்கும்படியான அருமையான பதில்கள்.
  ஒவ்வொன்றையும் நிதானமாக படித்து ரசித்தேன். கருத்தில் கூறியிருப்பது போன்று இவ்வார பதிவு கலக்கல்தான். கேள்வி கேட்டவர்களுக்கும், பதில்கள் தந்திருப்பவருக்கும் வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 63. கோமதி அக்கா.. கீதா... றக் மாறிப்போறீங்க:) இது கெள அண்ணனின் திட்டமிட்ட ஜதீஈஈஈஈஈஇ:) ரெயினைத்திருப்புங்கோ.. கேள்விகளை அள்ளி வீசுங்கோ.. சத்து நேரத்தால வாறேஎன்ன்ன்:)).

  //Geetha Sambasivam said...
  ஶ்ரீராமைத் தான் மூணூ தரம் பார்த்திருந்தும் கடைசியாப் பார்த்தப்போ அடையாளம் தெரியலை. அவர் பாஸை வைச்சுக் கண்டு கொண்டேன். :)))))) அவ்வளவு ஞாபக சக்தி! ;)))))//

  கீசாக்கா வயசானால் இதெல்லாம் சகஜம்தானே:)) ஹா ஹா ஹா ஹையோ மீ தேம்ஸ்க்கு ஓடிடுறேன்ன்ன்:)) பாய் பாய்.. ஹையோ இது வேற bye:)

  பதிலளிநீக்கு
 64. ஆவ்வ்வ்வ்வ்வ் கீதா ஓடிவாங்கோ அப்போ ஸ்ரீராமுக்கு தலை மொட்டை:)) கீதாவை நான் நம்பமாட்டேன்ன்.. ஆறு வித்தியாசமாமே.. கெளை அண்ணனுக்கு நல்ல தலைமயிர் இருக்கே:)).//

  ஓடி வந்துட்டேன் வந்துட்டேன்!! அதிரா உங்களுக்கு கெல்ப் பண்ண!! உங்க காதைக் கொடுங்கோ ரகசியம்....ஸ்ரீராமுக்கு மொட்டைத் தலை எல்லாம் இல்ல நல்ல கறுப்பு கர்ல் முடியாக்கும்...கண்ணாடி பார்த்து..தலை சீவும் அளவுக்கு முடி உண்டாக்கும்...ஹா ஹா ஹா ஹா....

  நான் மேலேயும் சொல்லிருக்கேனே பார்க்கலையா அதிரா...

  கீதா

  பதிலளிநீக்கு
 65. ஆரும் அறியாது ஆருங் காணாது அபிநயிக்கிறது எங்ஙனே!?..
  சாட்சாத் அவள் ஸரஸ்வதி தேவி நோக்கிண்டு இருப்பாளே!..
  அறியா மூடன்..ண்ட அபிநயம் அபச்சாரமல்லோ!?..//

  ஹா ஹா ஹா ஹா அண்ணா ஜூப்பர் மலையாளம்!! இந்த அபிநயம் நடன அபிநயம் அதை மலையாளத்தில் ஜொன்னேனாக்கும்.....ஸோ நோ அபச்சாரம்..ஸரஸ்வதி தேவி ரசிப்பாள்!! (எந்த ஸரஸ்வதி தேவினு கேள்வியெல்லாம் கேட்கப்படாது!!)

  கீதா

  பதிலளிநீக்கு
 66. அதிரா சரிதானே கீதாக்காக்கு அடையாளம் தெரியலனு சொல்லுறது அவங்க குயந்தையாக்கும்!!! அதுவும் இன்னும் பிறக்கவே இல்லை ஆனா இங்க கமென்ட் எல்லாம் வரும்!!


  அது சரி அமானுஷ்யம் நா பக்தியா?!!!! அதிரா அமானுஷ்யம்னா சூப்பரா இருக்கும் பேய் பில்லி சூன்யம் என்று....(இப்ப பூஸார் யோசிக்கறார் அட நாம நடு ஜாமத்தில ஜல் ஜல்னு தெம்க்ஸ்கரைல நடக்கறது எல்லாம் எப்படி இங்கு....என்று)

  /////Geetha Sambasivam said...
  கேஜிஜி சார் அமானுஷ்யத்தை நல்லா அனுபவிச்சு எழுதுவார். இப்போல்லாம் எழுதறதே இல்லை! /////
  கீதாக்கா சொன்னது நான் இப்ப இங்க சொன்னது ஹிஹிஹிஹி...அதிரா ஜல் ஜல் ஜல் ஜல்...

  சொல்ல முடியாது... துரை அண்ணன் கதை எழுதினாலும் எழுதிடுவார்...

  கீதா

  பதிலளிநீக்கு
 67. ஒருவரை ஒருவர் கலாயத்தல்கள் அருமை. எனக்கு மட்டும் ஆசையிருந்தும், விருப்பமிருந்தும் இத்திறமை ஏன் இன்னமும் வ(ள)ரவில்லை? இதை வளர்த்துக் கொள்ள எந்த படிப்பு படித்து எந்த பட்டம் விட..சே..பெற வேண்டும்?

  ஐயகோ.. கருத்துகளாக சொல்ல வந்தது கேள்விகளாக மாறி விட்டதே..

  பதிலளிநீக்கு
 68. எங்கள் ப்ளாக் எனக்கு (எனக்கே) கதவைத் திறக்க மறுக்கிறது. சுற்றி வந்து முக நூல் சென்று, அந்த வழி வந்து சுவரேறிக் குதித்திருக்கிறேன். அய்யகோ.. நாளை பதிவு வேற ரெடி பண்ணணுமாக்கும்... நாளையும் இதே கேள்வி பதிலையே தொடர்ந்துடலாமா?

  பதிலளிநீக்கு
 69. // ஒருவரை ஒருவர் கலாயத்தல்கள் அருமை. எனக்கு மட்டும் ஆசையிருந்தும், விருப்பமிருந்தும் இத்திறமை ஏன் இன்னமும் வ(ள)ரவில்லை? இதை வளர்த்துக் கொள்ள எந்த படிப்பு படித்து எந்த பட்டம் விட..சே..பெற வேண்டும்?//

  கவலைப்படேல் கமலா ஹரிஹரன் சகோ.. இதில் பெரிய விஷயம் எதுவுமில்லை. பாருங்க... எனக்கும் அது தெரியாது. நான் அதை வெளியே சொல்றேனா பார்த்தீங்களா?

  பதிலளிநீக்கு
 70. //இதில் பெரிய விஷயம் எதுவுமில்லை. பாருங்க... எனக்கும் அது தெரியாது. நான் அதை வெளியே சொல்றேனா பார்த்தீங்களா?// ஆமால்ல, ஶ்ரீராம் கொஞ்சம் சீரியஸ் டைப்! ;))))))

  பதிலளிநீக்கு
 71. . //சுற்றி வந்து முக நூல் சென்று, அந்த வழி வந்து சுவரேறிக் குதித்திருக்கிறேன். // அதானா இன்னிக்கு எனக்குப் பிரச்னையே வரலை! என்னடாப்பானு பார்த்தேன்! ;))))))

  பதிலளிநீக்கு
 72. கமலா ஹரிஹரன் மேடம், நீங்க எழுதின சமையல் குறிப்பிலே உங்க கற்பனை வளத்தைக் காட்டி இருந்தீங்களே! உங்களுக்கா வராது! அங்கே எல்லாம் சமையல் சாமான்கள், இங்கே மனிதர்கள்னு நினைங்க! தானா வரும்!

  பதிலளிநீக்கு
 73. /கடைசியாப் பார்த்தப்போ அடையாளம் தெரியலை. அவர் பாஸை வைச்சுக் கண்டு கொண்டேன். ://

  கவனிச்சேன். . கீதா அக்கா... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  பதிலளிநீக்கு
 74. //ஜரோஜா தேவிக்கு அவர் ஆட்டத்தை வைச்சு//

  அவர் டான்ஸ் கூட ஆடுவாரா? துரை அண்ணன்தான் சொல்லணும்!

  பதிலளிநீக்கு
 75. //எனக்கு முதலில் அறீமுகம் ஆனதும் கேஜிஜி தான். என்னோட முருகன் பத்தின பதிவுகளீலே கருத்துச் சொல்ல வருவார். அப்புறமாத் தான் ஶ்ரீராம். //

  கீதாக்கா.. இது எனக்கு நியூஸ்.. அப்படியா?

  பதிலளிநீக்கு
 76. எல்லோரும் மலையாளத்தில் கதைக்கறியள்... எனக்கு மலையாளத்தில் தெரிஞ்ச ஒரே வார்த்தை 'இதோ இவிடே வரூ!'!!!

  பதிலளிநீக்கு
 77. //கண்ணதாசன் - விளம்பரமில்லாத ஆனால் சரக்கு மிக்கவர்.//

  வாலியும் அதே அளவு சரக்கடிப்பவர்தானே? சே.. சரக்கு மிக்கவர்தானே?!!

  பதிலளிநீக்கு
 78. // மாமாவே சொல்லிட்டால் அதுக்கு மேலயும் கிச்சினைத்திறந்து சமைப்பினமோ?:) எதுக்கும் சரவணபவானில ஓசை:).. வாங்கிங்கொண்டு போங்கோ ஸ்ரீராம் நைட்டுக்கு:)). //

  நாந்தான் ஹனுமார் மாதிரி ஆச்சே... சுவிஸ் பறந்து வந்து நிஷாந்தி கிச்சனிலேருந்து பார்சல் வாங்கிக்கொண்டு சஞ்சீவி மலை தூக்கறா மாதிரி தூக்கிக்கொண்டு இந்தியா, சென்னை வந்து பாஸுக்கும் கொடுத்து நானும் சாப்பிடுவேன்!

  பதிலளிநீக்கு
 79. //கீசாக்கா வயசானால் இதெல்லாம் சகஜம்தானே:))//

  ஆமாமாமாமாமாமாமாமாமாமாமாமாம்....

  பதிலளிநீக்கு
 80. //அதானா இன்னிக்கு எனக்குப் பிரச்னையே வரலை! என்னடாப்பானு பார்த்தேன்! //


  .க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஸ்பெல்லிங்க்ல பிரச்னை வரும்.. அவ்ளோதானே?

  பதிலளிநீக்கு
 81. அதிரா உங்களுக்கு ஒரு செய்தி. நேற்று வெங்கட்ஜி பதிவில் சொல்லியிருந்தது...நம்மட ஸ்ரீராம் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்று அதுவும் ஹீரோவாக.....ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பழைய படத்தில்....(அந்த நடிகர் பெயரும் ஸ்ரீராம்) ...1955 ல் வெளி வந்த படமாம்..பெயர் முல்லைவனம்..(அப்போ ஸ்ரீராம் பிறந்திருந்தாரா என்றெல்லாம் கேள்வி எல்லாம் கேய்க்கக் கூடாது சொல்ல்ப்புட்டேன்!!ஹிஹிஹி)

  "ஸ்ரீராம் ஒரு படத்தில் நடித்திருக்கிறாரோ என்று செய்தி வெளி வந்து பின்னர் பார்த்தால் அது நம்ம ஸ்ரீராம் இல்லை…நம்ம ஸ்ரீராம் ரொம்பவே யங்கோ யங்கு! என்று வெங்கட்ஜி செய்தி வெளியிட்டிருக்கிறார்……ஹா ஹா ஹா…

  படப் பாடல் எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே. அதுக்கு வெங்கட்ஜி ரதி அக்னி ஹோத்ரி படத்தைப் போட்டிருந்தார். நம்ம ஸ்ரீராம் விடுவாரோ அதுவும் யங்கோ யங்கு!!! பொயிங்கிட்டார்!

  ஸ்ரீராம் வயதைப் பற்றிக் கூடக் கவலை கொள்ளவில்லை அனுஷ்கா படம் ஒன்னு போட்டிருக்கலாம் என்று ...கேட்டிட வெங்கஜி உடனே ஒரு அனுஷ் படத்தையும் ஆட் பண்ணிட்டார்...ஸ்ரீராமுக்கு ஒரே ஹேப்பியோ ஹேப்பி இன்று துரை அண்ணன் போல!!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 82. கேட்க நினைத்த கேள்வியை விட்டு வேறு ஏதோ கேள்வி வந்து குதித்து விட்டது.

  ஒரு பதிவுக்கு வந்து கருத்துகள் எழுதுபவர்கள் அவரின் அடுத்த பதிவுக்கு வந்து கருத்துகள் தரும் போது, சென்ற பதிவுக்கு வந்து போட்ட கருத்துகளுக்கு என்ன பதில் வந்துள்ளது என அறியும் ஆவலில் முந்தைய பதிவை பார்க்க வருவார்களா? இல்லை.. பதிலேதும் தராவிட்டாலும், பரவாயில்லை.. நம் கடமையை முடித்து செல்லலாம் என்ற மனநிலையில், பதிலலித்தோ, இல்லை.. வெறுமனே படித்து விட்டோ அகன்று விடுவார்களா?

  பதிலளிநீக்கு
 83. என் முதல் கேள்விக்கு பதில் இப்பவே வந்து விட்டதே.. நன்றி.. நன்றி
  சகோதரர் ஸ்ரீ ராம் அவர்களும், சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களும், தைரியமளித்து கேள்வி (கு)களத்தில் குதிக்க கற்றுத் தந்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 84. நடிகர் ஸ்ரீராமும் மதுரைதானாம்!!!!! மதுரை ஸ்ரீராம்!!!! ஹா ஹா ஹா

  அதிரா மற்றொரு ரகசியம்....ஸ்ரீராமுக்கு முன்பக்கம் பால்ட் ஹெட் அதான் கீதாவுக்கு அடையாளம் தெரியலை ஹிஹிஹி...இன்னும் சொல்லறேன் வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 85. கீதாக்காவுக்கு என்பது கீதாவுக்கு என்று வந்துவிட்டது ஸாரி.....

  கீத

  பதிலளிநீக்கு
 86. ஸ்ரீராம். said...//சுற்றி வந்து முக நூல் சென்று, அந்த வழி வந்து சுவரேறிக் குதித்திருக்கிறேன்.//

  ஆங்ங்ங் அப்போ கெள அண்ணன் ஜொன்னது கரீட்டூஊஊஊஊஉ 6 வித்தியாசத்தில இதுவும் ஒன்று வால் இருக்கூஊஊஊஊஊ:))
  -------------------------------------

  ///கண்ணாடி பார்த்து..தலை சீவும் அளவுக்கு முடி உண்டாக்கும்...ஹா ஹா ஹா ஹா....

  நான் மேலேயும் சொல்லிருக்கேனே பார்க்கலையா அதிரா...

  கீதா//

  நோஓஓஓஓஓ கீதா நீங்க சென்னையில் இருப்பதால ஓவரா சப்போர்ட் பண்றீங்க நான் கெள அண்ணனைத்தான் நம்புவேன்..
  இப்போ மூஊஊஊணூஊஊஊஊஉ வித்தியாசம் கண்டு பிடிச்சிட்டேன்ன்..
  1. தலைமுடி
  2. குட்டித்தாடி
  2. நீட்டு வால்:) ஹையோ ஸ்ரீராமின் பொஸ் இதைப் படிச்சவோ அவ்ளோதேன் மீயத் தேம்ஸ்ல தள்ளிடப்போறாவேஏஏஏஎ.. பீஸ்ஸ்ஸ் கீதா சேஃப் மீஈஈஈஈஈ:)).

  மற்ற மூணு:) வித்தியாசத்தையும் கீசாக்காட்டயும் கேய்க்க முடியாது அவோக்கு மறதி அதிகம்:))) கர்ர்:)).. என் செக்கைக் கூடக் காணமே:) அவ கோயில் கட்டுறா.. கட்டி முடியத்தான் வருவாவாம் கர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 87. ///அதிரா மற்றொரு ரகசியம்....ஸ்ரீராமுக்கு முன்பக்கம் பால்ட் ஹெட் அதான் கீதாவுக்கு அடையாளம் தெரியலை ஹிஹிஹி...இன்னும் சொல்லறேன் வரேன்

  கீதா///

  ஆவ்வ்வ்வ் மிரட்டிய பின்புதானே கீதாவிடம் இருந்து பல உண்மைகள் வெளிவருதூஊஊஊஊஊஊ:)).. கமோன் கீதா..கமோன்ன்.. அப்புறம்ம்:))

  பதிலளிநீக்கு
 88. கமலா சிஸ்டர்.. கூட்டத்தில குதிக்க விரும்பினால் சில சிலதை தியாகம் செய்யோணும்:) அதுக்கு நீங்க ரெடியாஆஆஆஆஆஆ?:).. அதாவது வந்து மானம் வெய்க்கம் சூடு சுரணை கடமை நேர்மை எருமை:)) இவற்றை எல்லாம் தேம்ஸ்ல வீசிட்டாலே நீங்க களம் இறங்க ரெடியாகிட்டீங்க என அர்த்தம்:)).. எப்பூடி அடிச்சாலும் தாங்கும் சக்தியை வல்லாரை ஊஸ் குடிச்சு வளர்த்துக் கொள்ளுங்கோ:))..

  பல சமயம் ஸ்பீட்டா ஓடியும் தப்ப வேண்டிவரும்.. அதிராவைப் போல:)).. எங்கே ரெடியாஅ?.. வன்.. ரூஊஊஉ த்திறீஈஈஈஈஈஈஈ ஜம்ப்ப்ப்ப்ப்:)).

  பதிலளிநீக்கு
 89. ///Kamala Hariharan said...
  கேட்க நினைத்த கேள்வியை விட்டு வேறு ஏதோ கேள்வி வந்து குதித்து விட்டது.

  ஒரு பதிவுக்கு வந்து கருத்துகள் எழுதுபவர்கள் அவரின் அடுத்த பதிவுக்கு வந்து கருத்துகள் தரும் போது, சென்ற பதிவுக்கு வந்து போட்ட கருத்துகளுக்கு என்ன பதில் வந்துள்ளது என அறியும் ஆவலில் முந்தைய பதிவை பார்க்க வருவார்களா? இல்லை.. பதிலேதும் தராவிட்டாலும், பரவாயில்லை.. நம் கடமையை முடித்து செல்லலாம் என்ற மனநிலையில், பதிலலித்தோ, இல்லை.. வெறுமனே படித்து விட்டோ அகன்று விடுவார்களா? ///

  சூப்பர் கிளவி கேட்டீங்க:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே:)) இதுக்குத்தான் அம்மா ஜொல்லுறா.. வந்து கபேஜ் ஐயும் புரோக்கோலியையும் இண்டைக்கே கார்டினில நடு என:)) கர்:)) நான் ஓடப்போறேன்ன்:))..

  இதுக்கு கெள அண்ணன் பதில் சொல்லுவார் பட் என்னுடைய பதில்...

  நிட்சயம் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள் பதிலை.. அத்தோடு பழய போஸ்ட் எனில் திரும்ப பதில் வராது ஆனாலும் தமக்கு பதில் வந்திருக்கோ என தேடிப்படிப்போம் படிப்பினம் எல்லோரும்.

  எனக்கு பதில் கிடைக்காது எனத் தெரிஞ்சால் அதிகம் எழுத மாட்டேன்ன்.. பதில் கிடைக்கும் எனும் இடங்களில் மட்டுமே என் கும்மி:))

  பதிலளிநீக்கு
 90. /அதிரா சகோதரி. இந்த கேள்வி பதில் பகுதி அனைவரும் பேசி கலாய்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பு எனத் தோன்றுகிறது..

  /சூப்பர் கிளவி கேட்டீங்க:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே:)) இதுக்குத்தான் அம்மா ஜொல்லுறா.. வந்து கபேஜ் ஐயும் புரோக்கோலியையும் இண்டைக்கே கார்டினில நடு என:)) கர்:)) நான் ஓடப்போறேன்ன்:))..//

  ஆகா... வெறும் கபேஜ்க்கே இத்தனை சக்திகள் இருக்குன்னு இன்னைக்குதான் தெரிஞ்சிகிட்டேன்.. அப்புறம் நீங்க மேலே சொன்ன உபாயங்களை எல்லாம் அதிகமா யூஸ் பண்ணனும் போலிருக்கே..பட் ஒன்னு மட்டும் ஈசியா பண்ணலாம்னு தோணுது.. அதான் ஸ்பீடா ஓடி தப்பிக்கிறது. ஐடியாக்கெல்லாம் ரொம்ப நன்றி சகோதரி

  எல்லோரும் பதிலை விரும்பி படிப்பார்கள் என்றுதான் நினைத்தேன். இருப்பினும் ஒரு டவுட். நானும் அப்படித்தான். எல்லோருமே அப்படித்தானாங்கற டவுட் தற்சமயம் தங்கள் பதிலில் தெளிவு பெற்றேன் நன்றி.

  பதிலளிநீக்கு
 91. எங்கள் ப்ளாகில் ஜே.கிருஷ்ணமூர்த்தியா? ஒருமுறை உற்றுப்பார்த்துவிட்டு (!) மிச்சமிருக்கும் காஃபியை மெல்ல உறிஞ்சினேன்.

  யூஜி-யைப் படித்ததுண்டா?

  பதிலளிநீக்கு
 92. கே ஜி ஒய், கே ஜி ஒய் ராமன், கே ஜி யக்ஞராமன் எல்லாம் ஒருவரே். எங்கள் ப்ளாக் மூத்த ஆசிரியர். எங்கள் ப்ளாகில் சில வருடங்களுக்கு முன்பு, ஜெ கே எண்ணங்கள் என்ற தலைப்பில் அவர் பல பதிவுகள் எழுதியுள்ளார்.

  பதிலளிநீக்கு
 93. உதாரணம் : ஜே கே 18 .... சுட்டி : https://engalblog.blogspot.com/2011/08/18.html?m=1 இதை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 94. நான் ரொம்ப தாமதமாகத்தான் எபி-க்குள் இன்று நுழைய நேர்ந்திருக்கிறது. அதற்குள் 93, 103 என 13-ஆவது ஓவரில் ஐபிஎல் ஸ்கோர் போல் பின்னூட்டம் சென்றுகொண்டிருப்பதைக் கண்டு ஒரு மிரட்சி. இன்னிக்கு என்ன விசேஷம்? ஹ்ம்.. நாமும் கும்மிக்குள் புகுந்து..

  //..கவிதை என்று பார்த்தால், கண்ணதாசன்: Distinction. வாலி ... வைரமுத்து ...

  திரைப்பாடல்களை த்தாண்டி கவிதை என்று பார்த்தால் கண்ணதாசனிடம், வாலியிடம் படிக்க கொஞ்சம் இருக்கிறது. ஆனால் வை.முத்து? சரி, இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலைன்னு கேட்கறேன்..


  பதிலளிநீக்கு
 95. @ அதிரா//..ஓஒ கெள அண்ணன் முற்றும் துறந்த முனிவராகிட்டார்ர். மீ ஞானியாகிட்டேன்ன்ன்:)

  ஓஹோ.. முனிவர்கள், ஞானிகள், ரிஷிக்கள், சாது சன்னியாசிகள், சித்தர்கள் போன்றோர் உலவுமிடமா எங்கள் ப்ளாக்? சே, தெரியாமல்போய்விட்டதே! இந்த அனுஷ்காவும் தமன்னாவும் அப்பப்போ வந்து தலையைக் காட்டிக்காட்டிச் செல்வதால் வாசகர் மனதில் சரியான பிம்பம் விழாமல் போய்விட்டதோ ?

  பதிலளிநீக்கு
 96. //.. https://engalblog.blogspot.com/2011/08/18.html?m=1

  சுட்டியில் தொடர்ந்து சென்று பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 97. காரசாரமான விவாதம் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 98. கீதாக்கா உங்கள் கேள்விகள் செமை!!! போன தடவையும் சரி...இந்தத் தடவையும் சரி....பார்ப்போம் அடுத்த வாரம் என்ன பதில் வருதுனு..ஹா ஹா ஹா

  கீதா.

  பதிலளிநீக்கு
 99. Very enjoyable comments! Which emanated from the post of course!! :))

  பதிலளிநீக்கு
 100. பதிவு சூப்பர், கருத்தும் பதில் கருத்தும் சூப்பரோ சூப்பர்.. இன்னா நடக்குது இங்கே கேஜிஜி சார் :)

  பதிலளிநீக்கு
 101. // பதிவு சூப்பர், கருத்தும் பதில் கருத்தும் சூப்பரோ சூப்பர்.. இன்னா நடக்குது இங்கே கேஜிஜி சார் :) //

  அடடே... சென்னையில் மழை வந்து விடும் போலவே....!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!