நான், திரிபுரா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்த போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, சுகமய் சென்குப்தா என்பவர் முதல்வராக இருந்தார். நீண்ட பளபளக்கும் வெண்மையான தாடியுடன், சாட்சாத் வசிஷ்ட மகரிஷி மாதிரி தோற்றமளித்தாலும், சிந்தனை, சொல், செயலில் சகுனியின் சுபாவத்தை கொண்டவர் அவர். எனக்கும், அவருக்கும் கண்டதும் மோதல்.
அவர் ஒரு சந்தேகப் பேர்வழி என்பதாலும், அவரைக் கேட்காமல், இந்திராவால் அனுப்பப்பட்டவன் நான் என்பதாலும், என்னை, இந்திராவின் ஒற்றன் என்றே நினைத்து விட்டார். அவருடைய காரியதரிசியிடம், 'முதல்வர் டில்லி போக, ஏதாவது திட்டம் போட்டிருக்கிறாரா?' என்று கேட்டால் கூட, அவரை கண்காணிக்கிறேன் என்று நினைத்து விடுவார்.
ஒருமுறை நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, அவர் வாலிப வயதில், பல நாடகங்களில் நடித்திருப்பதாகவும், ராமாயண நாடகத்தில், ராமராக நடிப்பது தான், அவருடைய ஸ்பெஷல் வேடம், என்றும் கூறினார்.
'அப்படியானால், அப்போது உங்களுக்கு தாடி இருந்திருக்காதே...' என்றேன்.
'தாடி இருந்தால் என்ன... நான் தாடியோடு தான், ராமனாக நடித்தேன்...' என்று, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். 'தாடியோடா, சீதையை கல்யாணம் செய்து கொண்டீர்கள்...' என்றேன் திகைப்புடன்.
'ஆமாம்...' என்று சொல்லி, 'வால்மீகி ராமாயணத்தில், எந்த இடத்தில், ராமர் மழுங்கச் சிரைத்துக் கொண்டு இருந்தார் என்று சொல்லியிருக்கிறது... ஒரு சுலோகம் காட்டு பார்ப்போம்! அதுவும் தவிர, அந்தக் காலத்தில் பிளேடு, ரேசர் எல்லாம் இருந்ததா... பாவம் அவர், காட்டில் யாரிடம் எப்படி தாடியை மழித்துக் கொண்டிருப்பார்...' என்றார்.
'ஆமாம்...' என்று சொல்லி, 'வால்மீகி ராமாயணத்தில், எந்த இடத்தில், ராமர் மழுங்கச் சிரைத்துக் கொண்டு இருந்தார் என்று சொல்லியிருக்கிறது... ஒரு சுலோகம் காட்டு பார்ப்போம்! அதுவும் தவிர, அந்தக் காலத்தில் பிளேடு, ரேசர் எல்லாம் இருந்ததா... பாவம் அவர், காட்டில் யாரிடம் எப்படி தாடியை மழித்துக் கொண்டிருப்பார்...' என்றார்.
இந்த உரையாடலுக்கு பின், கடந்த, 35 ஆண்டுகளில், முடிந்த வரை, வால்மீகி ராமாயணத்தை படித்துப் பார்த்ததிலும், அதில் புலமை உள்ளவர்களைக் கேட்டறிந்து கொண்டதிலும், ராமர் முகம், ரவிவர்மா படங்களிலோ, மெகா சீரியலிலோ பார்த்த மாதிரி, வெல்வெட்டு போல் இருந்திருக்க வேண்டுமென்பதற்கு, ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.
‑— ப.ஸ்ரீ.ராகவன் ஐ.ஏ.எஸ்., எழுதிய, 'நேரு முதல் நேற்று வரை' நூலிலிருந்து.
தினமலர் திண்ணை பகுதியிலிருந்து... :
=========================================================================================================
ஜீவி ஸார் எங்கள் பதிவுகளைப் படிக்கிறாரா என்று தெரியவில்லை. பின்னூட்டம் எதுவும் வருவதில்லை. எனினும் அவர் பார்ப்பார் என்கிற நம்பிக்கையில் அவருக்காக இது!
===========================================================================================================
முதலில் கீதா அக்கா தளத்தில் அவர் போட்டிருந்த அன்னையர் தினம் பற்றிய பதிவில் பின்னூட்டமாகப் போட எழுதி, ஆனால் அங்கு போடாமல், பின்னர் முகநூலில் பகிர்ந்ததை, இங்கும் பகிர்கிறேன். அன்னையர் தினக் கவிதை! இப்படித்தான் அவ்வப்போது எனக்கு கொனஷ்டையாகத் தோன்றும்.
அம்மா படம் வைத்து விட்டேன்.
அன்னையர் தினம் கொண்டாடி விட்டேன்.
நாளை என்ன தினம்?
நல்லதாய் புது ஃபோட்டோ
அதற்கும் ஒன்று தேடவேண்டும்.
அன்னைக்கும் தந்தைக்கும்தான் தினமா"
எனக்கெல்லாம் இல்லையா?
ஒதுக்கீடு கேட்கிறாள்
ஒன்றுவிட்ட அத்தை.
வாரிசில்லையாம் அவளுக்கு
*************************
இது நான்கு வருடங்களுக்கு முன்பு!
================================================================================================================
எங்கள் வீட்டு மல்லி மலர்கிறது!
ஒரு (சில) மல்லிகை மொட்டு...
மழைத்துளி பட்டு...
இன்னும் காத்திருந்து...
பூக்கக் காத்திருந்து...
சில்லெனப் பூத்தது இதழ் விட்டு...
அதன் பொன்னெழில் பட்டு...
தன் மனம் கெட்டு.. கொஞ்சிட வந்தது குளிர்காற்று...
========================================================================================================
அதில் அவர் சொல்லும்போது அவருக்குப் பிடித்த அவரின் படைப்பு பற்றிக் கேள்வி வந்தது. 'எல்லோரும் கேட்கும் கேள்வி.. ஆனால் கேட்கக் கூடாத கேள்வி என்று சொல்லி அவர் தனது படைப்புகளில் ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னது உடையார். அப்புறம் கங்கை கொண்ட சோழன். அப்புறம் மூன்றாவதாக 'இது போதும்' என்கிற ஆன்மீகப் படைப்பு' என்றார்.
அமண்குடியியில் கண்ணெதிரே ஓலை படித்துக் கொண்டிருந்த ஒரு 90 வயது அந்தணர் இவர்களைக் கண்டது "சே.." என்று சொல்லியபடி எழுந்து சென்று சுவரில் மறைந்தார் என்று யோகி ராம்சுரத்குமார்மேல் சத்தியம் செய்து சொன்னார். 'பாலகுமாரன் பொய் சொல்ல மாட்டான்' என்றார்.
ஆன்மிகம் என்றால் பக்தி, மதம் சம்பந்தப்பட்டதல்ல, செம்மையான என்று பொருள் என்றார்.
ஆரம்ப காலங்களில் அவரின் அத்யந்த வாசகனாய் இருந்த நான் நடுவில் நகர்ந்து சென்றிருந்தேன். அவரின் பிற்கால படைப்புகளில் தேர்ந்தெடுத்து வாசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனோ எனக்கு உடையாரை ஒன்றரை பாகங்களுக்கு மேல் படிக்க ஓடவில்லை. அவர் சொல்லி இருக்கும் 'இது போதும்' படிக்க வேண்டும். வசீகர எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். மறையும் வரை அவர் எழுதிக் கொண்டிருந்தார் என்பது விசேஷம்.
==========================================================================================================
அப்போதைய தேர்தல்...
==============================================================================================================
இன்னொரு அரசியல்!
நேதாஜியா? நேருவா? நேதாஜி என்று சொல்லிவிட்டு நேருஜி படம் இருக்கே என்று தோன்றுமல்லவா... அதற்காக அங்கு வந்த கமெண்ட்ஸ் கீழே....!
============================================================================================================
வாழ்க.ம்
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குஎங்கே கீதா ரெங்கனைக் காணோம்? "தோழி" காலை வாரி விட்டாள் போலும்...!!
பதிலளிநீக்குநல்லா இருக்கு! அப்புறமா வரேன்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா...
பதிலளிநீக்குபதிவில் தொகுக்கப்பட்டிருக்கும் பல விஷயங்களும் அருமை...
பதிலளிநீக்குமல்லிகைப் பூக்கள் அழகின் தோரணம்..
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் 🙏. நல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குகாலை வணக்கம் வெங்கட்.
பதிலளிநீக்குநன்றி.
ராமர் மட்டுமல்ல அனைத்து கடவுள்களுமே ஷேவிங் செய்திருக்க வாய்ப்பு இல்ஸை.
பதிலளிநீக்குஇதனைக் குறித்து ஒரு பதிவு எழுதி வைத்து இருக்கிறேன்.
பாலகுமாரருக்கு எமது அஞ்சலிகள்
பூக்கள் அழகோவியங்கள்
நன்றி கில்லர்ஜி.
பதிலளிநீக்குராமனைப் பார்த்ததும், 1990களின் இறுதியில், களப்பணியின்போது முதன்முதலாக (தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் மங்கலம் என்னுமிடத்தில்)நான் கண்டுபிடித்த மீசையுடன் புத்தர் உள்ள நினைவிற்கு வந்தது.
பதிலளிநீக்குவியாழன் கதம்பம் நன்றாக இருந்தது. முகநூல் காப்பி பேஸ்ட் தவிர்க்கலாம்.
பதிலளிநீக்குகீசா மேடம் மங்கையர் பதிவில் உங்கள் பின்னூட்டத்துக்கு மறுபொழி எழுதி அதை வெளியிடும்போது கணினிப் பிரச்சனை.
நேதாஜி மட்டுமல்ல பிரபாகரன் இயக்கத்துக்காகச் சேர்த்த பல நூறு கோடிகளும் இயக்கத் தலைவர்களால் ஸ்வாஹா ஆகிவிட்டது எனப் படித்திருக்கிறேன்.
பாலகுமாரனின் உடையார் ஒரு வழியாகப் படித்திருக்கிறேன். நல்லாத்தான் இருந்தது. ஆயிரம் வருடங்களுக்குள் அடையாளம் தெரியாதபடி தமிழனின் பேர் வைக்கும் பழக்கம் மாறிவிட்டதே.
மல்லிகை மொட்டு பாடல் தலைப்பு அருமை. அது மல்லிகைதானோ? உங்கள் வழக்கப்படி மீரா ஜாஸ்மின் படம் எதிர்பார்த்தேன். சைவப் பூனையாகிவிட்டீர்களே.
கேஜிஜியின் முகதூல் பதில் அவர் குறும்புத்தனத்தைக் காட்டியது.
அழகான பூக்கள்...
பதிலளிநீக்குகவிதைகள் அட..!
உருவமில்லாத ஒன்றுக்கு உருவத்தைக் கற்பித்தபின், முகத்தைத் தடவிப்பார்த்து அது வெல்வெட் போல இல்லை, ஒருவேளை பாலியெஸ்டராக, காட்டனாக, சணலாகக்கூட இருக்குமோ என்று சொல்வது, மேற்கொண்டு ஆராய்வது அறிவீனம்.ராகவன் ஏதோ தெரியாமல் ஐஏஎஸ் பாஸ் பண்ணிவிட்டு, தட்டுத்தடுமாறி உயர் அதிகாரியாகிவிட்டார். அந்த ராகவனுக்கு தாடியிருந்ததா, மீசையிருந்ததா, கானகத்தில் சலூன் இருந்ததா என்று மண்டையை உடைத்துக்கொண்டு 35 வருடம் ஓட்டியிருக்கிறார் இந்த பிரஹஸ்பதி, பாவம். ஆன்மீகம் ரொம்பதூரம் ஐஏஎஸ் ராகவனுக்கு. Spirituality, unfortunately, is not his cup of tea ! இவர் எழுதியதை தினமலர் போன்ற அரைவேக்காடுகள் வெளியிடலாம். அதனைப் படித்து நாம் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியதில்லை.
பதிலளிநீக்குவியாழன் கதம்பம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதினமலர் திண்ணை பகிர்வு, பாரதி பகிர்வு உங்கள் கவிதைகள் எல்லாம் அருமை.
மல்லிகை மொட்டு பாடலை பகிர்ந்து விட்டீர்கள் , மல்லிகைப்பூ அழகு.
பாலகுமாரன் கதைகள்மூலம் என்றும் வாழ்வார்.
நானும் இடையில் அவர் கதைகளை படிக்கவில்லை.
சிவனின் படத்துக்குத் தாடி மீசை வச்சதும் இல்லாமல்.. அதை ராமர் படம் எனச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள்ள்ள்ள்ள்.. பிக்கோஸ் சிவனை நேக்கு ரெம்ம்ம்ம்ம்பப் பிடிக்குமாக்கும்.
பதிலளிநீக்குநானும் பலதடவை நினைத்ததுண்டு.. அதெப்படிக் கடவுள்கள் எல்லோருமே மிக அழகாக இருக்கிறார்களே.. கண்ணென்ன மூக்கென்ன வாய் என்ன. இடுப்பென்ன இப்படி அழகோ அழகு... ஆனா மனிதர்களை மட்டும் ஏன் அப்படி இப்படி உருவாக்கி விட்டிருக்க்கிறார்கள் என... கற்பனை உருவம் எனத் தெரியும்.. ஆனாலும்.. அப்போ கதைகள்கூடக் கற்பனையா? அல்லது கதைகளைப் படித்துத்தான் கடவுள்களை வரைந்தார்களோ.. எதுவும் புரியல்ல..
அன்னைக்கும் தந்தைக்கும் இடையில்.. அத்தை எதுக்கு வந்தாவோ?:) அதுவும் ஒன்றுவிட்ட அத்தை ஹா ஹா ஹா:)
பதிலளிநீக்குஎதுக்கு ஆங்கிலேயரைத்திட்டுறீங்க கர்ர்ர்ர்:)). நமக்கு ஆச்சி எனில் நம் பெற்றோருக்கு அவ அன்னைதானே.. அப்போ எதுக்கு ஆச்சிகள் தினம் ஹையோ ஹையோ..
நீங்க என்னமோ சொல்ல வாறீங்க ஸ்ரீராம்:) ஆனா எனக்குத்தான் புரியுதில்ல:)) ஹா ஹா ஹா..
கில்லர்ஜி- ஷேவிங் செய்துருக்க வாய்ப்பில்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? தி.தனபால் அவர்கள் வந்திருந்தால் பதிலளித்திருப்பார்
பதிலளிநீக்கு2000 ஆண்டுக்கு முன்பு வள்ளுவர், மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று சொல்லியுள்ளாரே. டாந்லெட் இல்லாத்தால் 1000 வருடங்களுக்கு முன்பு யாரும் உடல் சுத்தி செய்திருக்க வாய்ப்பில்லை என்பீர்கள் போல. கீசா மேடத்தையும் காணவில்லையே தகுந்த பதில் கூற. ஹாஹாஹா
நண்பர் நெல்லை....
நீக்குமனிதகுல நாகரீகத்துக்குப் பிறகு உபகரணங்களை உருவாக்கி மனிதர்கள் மழித்திருக்கலாம். தி.வ.வரும் மனிதர்தானே...
ஆனால் இறைவன் உலகம் படைக்கப்பட்ட கோடானகோடி ஆண்டுகளுக்கு முன்பே இருக்கிறார்கள்.
////எங்கள் வீட்டு மல்லி மலர்கிறது! //
பதிலளிநீக்குஆஆ மல்லியில் மல்லிகைப் பூவா? நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன்:))
இல்ல இல்ல மொட்டுக்களைக் காட்டி எம்மைப் பேய்க்காட்டிப் பூவை மாத்திட்டார் யுவர் ஆனர்ர்ர்:)).. 7 மொட்டுக்களை தொடராப் படமெடுத்து முடிவில ஒரு பூ இருப்பதை படமெடுத்டிட்டார்ர்ர்.. மிகுதி மொட்டுக்கள் அருகில் இல்லையே:)).. சரி அது போகட்டும்...
இப்படி மல்லிகை நான் பார்த்த நினைவு இல்லையே... மிக அழகாக இருக்கு அடுக்கடுக்காய்.. இதழ் நுனி கூராக இருக்கே.. நான் பார்த்தது இதழின் நுனி வட்டமாக எல்லோ இருக்கும்... மரத்துக்குக் கீழே பூக்கள் கொட்டியிருக்குமெல்லோ அதையும் படம் எடுத்துப் போட்டிருக்கலாம் அதுவும் கொள்ளை அழகெல்லோ.
இங்கு நான் ஊசி மல்லி நட்டு விட்டிருக்கிறேன்ன்.. 4 வருடமாகிறது.. தண்டு மட்டுமே வளருது.. இலைகள் வரும் .இப்பவும் குருத்துக்கள் வருது ஆனா குளிர் அதிகமென்பதால் பெரிதாக இலைகள் வளருவதில்லை..:(
ஊசி மல்லி என்பது.. ஒரேஞ் தண்டில் ஒற்றை அடுக்காக இருக்கும் மல்லிகைப்பூ..
"பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே ,பார்த்திங்கு யாரும் இல்லையே.." என்னும் கவிஞரின் வரிகளை பொய்யாக்கி விட்டதே உங்கள் புகைப் படங்கள்.
பதிலளிநீக்குஅன்னையர் தின கவிதையை முக நூலில் படித்தேன். பகிரப்பட்டதோ என்று நினைத்தேன், உங்களுடையதா? இரண்டுமே பிரமாதம்!
நேதாஜியைப் பற்றிய தகவல் புதிது. நேதாஜி காங்கிரசை விட்டு வெளியேற காரணம் நேரு அல்ல காந்தி மகான்.
ராமருக்கு தாடி இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? யத் பாவம் தத் பவதி! என்பார்கள். நாம் தாடியோடு கற்பனை செய்தால் தாடியோடும், தாடியில்லாமல் கற்பனை செய்தால் அப்படியும் காட்சி அளித்து விட்டு போகப் போகிறார்.
ராமானந்த சாகரின் மஹாபாரதம் சக்கை போடு போட்டு முடிந்த பிறகு, வேறு யாரோ தயாரித்த மஹாபாரதம் ஒன்றை ஒரு முறை பார்க்க நேர்ந்தது. அதில் பாண்டவர்கள் இப்படித்தான் தாடி, மீசையோடு, வன வாசிகளைப் போல மிருகங்களின் தோலை ஆடையாக அணிந்து கட்சி அளித்தார்கள்.
பாலகுமாரன் அவர்கள் பற்றி சமீபத்தில்தான் அறிந்தேன்.. அவர் எப்படிக் கதாசிரியர் ஆனார் என ஒரு மேடைப்பேச்சில் ஒளிவுமறைவின்றிச் சொன்னார்ர்... கேட்க நன்றாக இருந்தது.. ஆனா இவ்ளோ விரைவில் மறைந்திடுவார் என எதிர்பார்க்கவில்லை நான்.
பதிலளிநீக்குஆத்மா சாந்தியடையட்டும்..
----------------------
அப்போதைய தேர்தலுக்காக நீங்க எழுதிய தீபாவளி வெடி நன்றாக இருக்கு....
விசாளக்கிழமையில் அனுக்கா வருவா என நினைச்சால் அரசியலைக் கூட்டி வந்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
நெ.த:
பதிலளிநீக்கு//சைவப் பூனையாகிவிட்டீர்களே.//
ஹா ஹா ஹா பூனையில் சைவம் கிடையாது:))
@அதிரா: ஹா ஹா ஹா பூனையில் சைவம் கிடையாது:)) //
பதிலளிநீக்குஅப்படியா? ’ஒன்றே வயிறு, ஒரு வகையே சாப்பாடு’ என்கிற தத்துவத்தைக் கடைப்பிடிக்கிறதோ !
///அப்படியா? ’ஒன்றே வயிறு, ஒரு வகையே சாப்பாடு’ என்கிற தத்துவத்தைக் கடைப்பிடிக்கிறதோ !
பதிலளிநீக்கு//
ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன் .. வைரமுத்து அங்கிள் ஜொன்ன அடுத்த வசனத்தையும் ஜொள்ளட்டோ?:)) இல்ல வாணாம் மீ ரொம்ப நல்ல பொண்ணு :))
பொத்தி வைச்ச மல்லிகை மொட்டைப் பார்க்க ஓடோடி வந்துவிட்டேன் என் தோழியை எழுப்போ எழுப்பு என்று எழுப்பி....கில்லர்ஜிக்கு ஆஜர் ஒன்றை வைத்துவிட்டு மகன் கூப்பிட அவனுடன் அளவளாவிட்டு ..
பதிலளிநீக்குஎல்லோருக்கும் மதிய வணக்கம்....
மல்லிகையே மல்லிகையே என்று பாடலாம் போல அத்தனை அழகு மொட்டும் மல்லியும்....வாவ்!!! முதலில் கண்ணில் பட்டது அதுதான்..இதோ வரேன் ஒவ்வொன்றாய்
கீதா
@அதிரா - ஹா ஹா ஹா பூனையில் சைவம் கிடையாது:))
பதிலளிநீக்குஎன்ன நீங்க.... தாய்லாந்தில்(?) புத்த துறவிகள், புலிகள் காப்பகத்தில், எல்லாப் புலிகளையும் சைவப் புலிகளாக வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் (தயிர் சாதம், வடு மாங்காய்?). இதுல பூனைல சைவப் பூனை இல்லைனு சொல்றீங்களே. காலம் காலமாக பூனைக்குப் பால் மட்டும்தானே கொடுத்து வளர்த்துக்கொண்டிருந்தார்கள்.
பாலக்குமாரன் ஐயா இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குஎங்க வீட்டிலும் இந்த மல்லிச்செடி இருக்கு.
அன்னையர் தினம் பத்திய பகிர்வு நல்லா இருந்துச்சு..
கூகுளில் தாடி மீசையோடு சிவனை பார்த்திருக்கேன். ஆனா, ராமரை பார்த்ததில்லை. அவர் கேட்டதும் சரிதான்,
எங்கே கீதா ரெங்கனைக் காணோம்? "தோழி" காலை வாரி விட்டாள் போலும்...!!//
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்....ரொம்பவே..
இப்போதும் பல வேலைகள்.....அதில் தோழியையம் கண்டு சோர்ந்தால் மூடி விட்டு திறந்து திறந்தால் அவள் ஃபார்முக்கு வரவே 20, 25 நிமிடம் எடுக்கிறாள்....ஹா ஹா ஹா
கீதா
சாட்சாத் வசிஷ்ட மகரிஷி மாதிரி தோற்றமளித்தாலும்//
பதிலளிநீக்குஆஹா! நேரில் பார்த்திருப்பாரோ?!
கடவுளர் உருவங்கள் மனிதர்களால் கற்பனையில் வரையப்பட்டவை என்றே தோன்றுகிறது. நம் மனதில் ஒன்றை நினைத்துத்தானே ஒருமுகப்படுத்துவது அதனால் மனதில் கொள்ள என்பதால்…அப்படி வந்திருக்கலாம்……..முகம் அறியா வலை உறவுகளை நாம் அவர்கள் எழுத்துகளைப் படித்து ஒரு உருவம் கற்பனை பண்ணி வைக்கிறோம் இல்லையா…
ஆதியும் அந்தமும் இல்லா அந்த மாபெரும் சக்தியை நம்மால் வரைந்திட முடியுமோ! அணுவிலும் அணுவான அந்த சக்தியை அவரவர் மனதில் அந்த சக்தி எப்படித் தோன்றுகிறதோ அப்படியே……அந்த சக்தியை, அந்த சக்தியின் அன்பை நாம் ஒவ்வொரு செயலிலும், அசைவிலும் உணரலாம். உருவங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். என்று நினைப்பதுண்டு.
கீதா
அன்னைக்கும் தந்தைக்கும்தான் தினமா"
பதிலளிநீக்குஎனக்கெல்லாம் இல்லையா?
ஒதுக்கீடு கேட்கிறாள்
அதானே!!! இந்த வரிகள் சிரிப்பை வரவழைத்தது…அதானே என்று..சபாஷ் சரியான போட்டி என்று
வாரிசில்லையாம் அவளுக்கு
ஆனால் இறுதி வரி மனதை நெகிழ்த்திவிட்டன…ரொம்பவே…..
கவிதை அருமை ஸ்ரீராம் ரொம்பப் பிடித்தது.
கீதா
அடுத்த கவிதையும் மனதை என்னவோ செய்துவிட்டது…ஸ்ரீராம் அருமையான வரிகள்….ரசித்தேன் மனதின் ஒரு ஓரத்தில் ஈரக் கசிவுடன்…
பதிலளிநீக்குகீதா
பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு பூத்தது அதே மொட்டா? ஆச்சரியமா இருக்கே மொட்டு மற்ற மல்லி போல இருக்கு!! படத்தில்….புத்த பூ என்ன அழகு வாவ் ஏதோ வெண்ணையை ஷேப் செய்து வைத்தது போல அத்தனை அழகு!!! மழு மழு என்று தெரிகிறது……
பதிலளிநீக்குஅதற்குத் தலைப்பு செம செம!!! கவித்துவம்!! //தன் மனம் கெட்டு கொஞ்சிட வந்தது குளிர்க்காற்று!!// அட அட அட! அதன் அழகில் மயங்கி என்ன வழவழப்போ என்று தடவிப் பார்த்திட வந்திருக்குமோ!!!!
நான் மொட்டாய் அழகா விரிந்ததும் அழகா?
நீ எப்படியானாலும் அழகுதான் மலரே…!!!
கீதா
பாலகுமாரன் அவர்களுக்கு எங்கள் அஞ்சலிகளும்.
பதிலளிநீக்குவாசிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். வாசித்ததில்லை. ஓரிரண்டு பகுதிகள் இரும்புக் குதிரைகளில் வாசித்த நினைவு ஆனால் அதுவும் சரியாக நினைவில்லை.
கீதா
தேர்தல் பட்டாசு அழகாகத்தான் வெடித்திருக்கிறீர்கள். ஆனால் சத்தமில்லாமல் அமைதியாய்!!!
பதிலளிநீக்கு5 வருடத் தேர்தல்களும் ஆட்சியும் பட்டாசு போலத்தான் தீபாவளி புஸ்வானமாய் மாறி மக்களை ஏமாற்றித்தான் விடுகிறது!!
மோடி தாடி, லேடி டாடி
ஹா ஹா ஹா ஹா
கீதா
நேத்தாஜி தகவல் புதிதாக இருக்கிறதே!! எனக்குத் தெரிந்து ….வாசித்த வரையில் நேதாஜிக்கும் காந்திக்கும் கருத்து வேறுபாடு வந்துதானே நேதாஜி வெளியேறினார் காங்கிரஸிலிருந்து?
பதிலளிநீக்குஇதற்கு கௌ அண்ணாவின் கமென்ட் ஹா ஹா ஹா ஹா
கீதா
சைவப் பூனையும் சைவ பைரவர்களும் உண்டு.....நாம் என்ன உணவு கொடுத்து வளர்க்கிறோமோ அப்படி....
பதிலளிநீக்குஆனால் பூனையும் சரி நாயும் சரி அவர்களது உணவுப் பழக்கத்தை மனிதர்கள் நாம் தான் மாற்றுகிறோம்...நாம் மட்டும் நமக்குப் பிடித்ததைத்தான் சாப்பிடுகிறோம்...பைரவர்களுக்கு இருக்கும் கெனைன் டீத் என்பதே அவர்களுடைய உணவை உண்பதற்காக அமைக்கப்பட்டது அது போலத்தான் பூனைகளுக்கும்....
கீதா
எனக்கு வரும் சந்தேகம் நாமே படைத்த கடவுளர்களுக்கு வடிவம் கொடுப்ப்ழதும் நாம்தானே இப்போதைய தொடர்களில் அனுமான் இன்னும்பிற வானரங்கள் கூம்பிய வாயோடும் வாலோடும் காண்பிக்கிறர்கள் ஆனால்பெண்வானரங்களை அழகிய முகத்தோடு வாலில்லாமல் காட்டுகிறார்களே
பதிலளிநீக்குஸ்ரீராம் ஜி உங்களின் கவிதைகள் மிக மிக நன்றாக இருக்கின்றன. ரசித்தேன். முதல் கவிதையை அந்த ஒன்றுவிட்ட அத்தையின் கோரிக்கையை முகநூலில் வாசித்தேன். அடுத்த கவிதையும் அருமை. பாட்டியும் கேட்கிறார். உண்மைதான். பல கட்சிகள் பெருந்தலைவர்களுக்கு அந்தந்த தினங்களில் மட்டும் மாலை போட்டு மரியாதை செலுத்துவது போல ஆகிவிட்டது.
பதிலளிநீக்குஇரண்டுமே மனதைத் தொட்டக் கவிதைகள்.
எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு அஞ்சலிகள்.
பூக்கள் மிக மிக அழகாக இருக்கின்றன. மொட்டும் தான்.
நேத்தாஜி பற்றிய தகவல் புதியதாக இருக்கிறதே.
எல்லா கட்சிகளுமே பட்டாசுதானோ அதைத்தான் சிம்பாலிக்காக வெற்றி பெற்றதும் வெடிக்கிறார்கள் போலும். குறிப்பாகத் தமிழகத்தில். எங்கள் ஊரிலும் உண்டுதான் ஆனால் நான் இருந்த போது இருந்த தமிழகத்தை விட இப்போது ரொம்ப மோசமானது போல் இருந்தாலும் தமிழகத்தின் மீதான அன்பு எனக்கு எப்போதுமே உண்டு. பிறந்தகம்!
முதல் படம் சிவன் போன்று உள்ளது. என் இஷ்ட தெய்வமாச்சே!! ஆனால் செய்தி சொல்லுவது வேறு. இறைவன் அவரவர் மனதிற்கு எப்படித் தோன்றுகிறாரோ அப்படியே. அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்..
அனைத்தும் நன்றாக இருந்தன.
துளசிதரன்
ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் கீதா.. நா ஒண்ணு ஜொள்ளட்டுமோ?:) பப்பீஸ் ஐ சைவப் பப்பீஸ் ஆக வளர்த்திடலாம்.. ஆனா பூஸ்களை உங்களால கொன்றோல் பண்ணவே முடியாதே:)).. நீங்க பால் குடுத்தாலும் தயிர் குடுத்தாலும் அவிங்க எலி பிரியாணி:)) அணில் பாயாசம்:) குருவி ரொட்டி பிடிச்சு உண்பினமெல்லோ:)).. அதுக்கும் விடாமல் கூண்டில் அடைச்சு வளர்த்தால் மட்டுமே சாத்தியம்...கனடா ஒட்டாவா பார்ளிமெண்ட்டில் ஒரு பகுதி பூனை வளர்ப்பு ஏரியாவா இருக்கூ.. அடைத்து வளர்க்கினம்.. ஒரு குட்டி ஏரியாவில்ல்.. :)) அப்போ ஜொள்ளுங்கோ சைவப்பூஸ் எப்பூடி வரும்?:)
பதிலளிநீக்குடும் டும் டும் நாட்டு மக்களுக்கோர் செய்தி:)).. அதிராக்கு செவின் பொயிண்ட் ஃபைவ்.. ..னிச:) பொயிங்குது என்பது கரீட்டாப்போச்ச்ச்சூஊ:)) ஒரு கிழமைக்கு என் வாலை இழுக்க ஆள் இல்லை மீ தைரியமா உலாவலாம்:))
பதிலளிநீக்குஎன்ன நடந்ததுன்னா:)) நைட் 12 மணிக்கு வீட்டுப் பின் கார்டினில் மியாஸ்ஸ்ஸ் சத்தம் பலமாக் கேட்டிருக்கு:)).. அந்த நேரம் என் செக்குக்கு என்ன வேலை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ அதிராவோ:) பிரபுவோ:) தெரியல்லியே என கதவைத் திறந்திட்டு ஓடியிருக்கிறா... ஓடினதுதான் ஓடினா ச்ச்சும்மா ஓடியிருக்கலாமெல்லோ:)) கையில தண்ணிக் கிளாஸ் ஐ எடுத்துக் கொண்டு ஓடிய இடத்தில கதவில மோதி கிளாஸ் உடைஞ்சு[ஹையோ பாவம் கிளாஸ்:)].. கை விரல்ல குத்தி.. ரத்தம் பெருகி... எமேஜென்சிக்குப் போய்.. பிளாஸ்டர் பண்ணி விடியத்தான் வந்திருக்கிறா வீட்டுக்கு.
இங்கு எமேஜென்சி போனால் வெயிட்டிங் ரைம் மினிமம் 3 அவேர்ஸ் எடுக்கும்.. உயிர்போகும் ஆட்களுக்கே முதலிடம்... அதனால இப்போ கொம்பியூட்டர் ரைப் பண்ண முடியாமல் பெட் ரெஸ்ட்ல இருகிறாவாம் :)).. அவ வாறேன் எண்டாலும் மீ விடமாட்டேன்ன்:), ஹையோ கை ஆட்டிடக்கூடா ரெஸ்ட் பண்ணுங்கோ என வெருட்டி விட்டிடுவேன்ன் ஹா ஹா ஹா:)) இல்லை எனில் என் வாலுக்கு எல்லோ ஆபத்து:))..
சரி சரி அஞ்சு விரைவில நலமாகி வாங்கோ.. என் செக்கை காணல்லியே என, இங்கு தேடாட்டிலும் மனதில நினைப்பீங்களெல்லோ அதனால தகவல் சொன்னேன்...
@ athira said...
பதிலளிநீக்கு>>> அதனால இப்போ கொம்பியூட்டர் ரைப் பண்ண முடியாமல்
பெட் ரெஸ்ட்ல இருகிறாவாம்...<<<
>>> அதனால தகவல் சொன்னேன்..<<<
இதெல்லாம் சும்மா.. லுலுலுவாஆஆ.. தானே!...
சிவனுக்கும் ராமனுக்கும் தோழமை நிறைய. பல வட இந்தியப் படங்களில் சிவ பக்தராக ராமர் காட்டப் படுவார்.. யாராவது நேரில் த்யாகராஜர் மாதிரி பார்த்திருந்தால் நமக்குத் தெரியும்
பதிலளிநீக்குஅத்தைக்கு என் நமஸ்காரம். அத்தைகளுக்கு ஒரு டே வைத்துக்கொள்ளலாம். நான் ஐந்தாவது அத்தையாக இருந்துகொள்கிறேன்.
மல்லிகை மொ
ட்டு பாட்டும் படமும் மிக அருமை நன்றி ஸ்ரீராம்.
ஸ்ரீ பாலகுமாரன் அவர்கள் எழுதிய, இரும்புக் குதிரைகள், தாயுமானவனுக்கு அப்புறம் படிக்கவில்லை. என் ஈர்ப்பு குறைந்துவிட்டது.
மிகவும் நன்று பாராட்டுகள் படங்கள் ஆழகு
பதிலளிநீக்கு..ஒரு 90 வயது அந்தணர் இவர்களைக் கண்டது "சே.." //
பதிலளிநீக்குஇவர்களைக் கண்டதும் என வந்திருக்கவேண்டுமோ?
@அதிரா:.. நைட் 12 மணிக்கு வீட்டுப் பின் கார்டினில் மியாஸ்ஸ்ஸ் சத்தம் பலமாக் கேட்டிருக்கு:))//
பதிலளிநீக்குஅசைவப்பூஸ்கள்தான் என்று பிபிசி சொல்லியிருக்கு ..
//ஸ்ரீ பாலகுமாரன் அவர்கள் எழுதிய, இரும்புக் குதிரைகள், தாயுமானவனுக்கு அப்புறம் படிக்கவில்லை. என் ஈர்ப்பு குறைந்துவிட்டது.// அதே, அதே, வல்லி, அரைத்த மாவையே அரைத்தால்? ஆனால் அவருக்கும் ரசிகர்கள் அதிகம் தான். ஆகவே நான் சொல்லிக்கிறது இல்லை! :)))))))
பதிலளிநீக்கு//நான் கண்டுபிடித்த மீசையுடன் புத்தர் உள்ள நினைவிற்கு வந்தது.//
பதிலளிநீக்குவாங்க முனைவர் ஐயா... மீசை புத்தர் மனதில் பொருந்த மாட்டேன் என்கிறார் இல்லை?
நேத்திக்குப் பகல் முழுவதும் மின்சாரம் இல்லை. 3 மணி அளவில் ரங்குவைப் பார்க்கப் போயிட்டேன். வந்து எதையும் படிக்க முடியலை. ராத்திரி பானுமதி கேட்டப்போத் தான் நினைவே வந்தது! :))))))
பதிலளிநீக்குவாங்க நெல்லை. ரசிப்பதற்கு நன்றி.
பதிலளிநீக்கு//முகநூல் காப்பி பேஸ்ட் தவிர்க்கலாம்.//
அப்படியா சொல்றீங்க? ம்.... பார்க்கிறேன். பொருந்த மாட்டேன் என்கிறது? கதம்பம் போல இருக்கும் என்று நினைத்தேன். மற்ற நண்பர்களின் கருத்தையும் அறியலாமா?
//நேதாஜி மட்டுமல்ல பிரபாகரன் இயக்கத்துக்காகச் சேர்த்த ...//
ஐயா.. நேதாஜி எங்கே? பிரபாகரன் எங்கே?!! :))))
அப்படிப் பார்த்தல் சமீபத்தில் மறைந்த அரசியல் பிரபலத்தின் மற்றும் அவரது அரசியல் குருவின் பங்கங்களும் அப்படித்தானே? இது நேதாஜி என்பதால் செய்தியானது!
//மீசை புத்தர் மனதில் பொருந்த மாட்டேன் என்கிறார் இல்லை?// நானும் பார்த்திருக்கேன். ஆனால் புத்தர் தானா என்பதில் சந்தேகம்!
பதிலளிநீக்குவாங்க டிடி. நன்றி
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார். நீங்கள் ராகவன் ஐ ஏ எஸ் அவர்களை உங்கள் பணி மூலமாக அறிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தினமலர் திண்ணைப்பகுதி சற்றே சுவாரஸ்யமானது. அதில் இதுபோன்ற பகுதிகள் சிறு துணுக்குகளாக வெளிவரும்.
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. பாராட்டுகளுக்கு நன்றி. நீங்களும் பாலகுமாரன் பிற்பட்ட காலங்களில் அதிகம் படித்ததில்லையா?
பதிலளிநீக்குஅதிரா... ராமர் படத்துக்கு மீசை தாடியோட படம் எங்கேயாவது கிடைக்குமா? நம் மனா அளவுகளில் தாடி மீசை வைத்திருப்பதைவிட, மொழுமொழுவென இருந்தால்தான் நல்லவர் என்று மனதில் பதியும். (டிஸ்கி : இது கொனஷ்டையான கருத்து அல்ல) அதனால் அப்படித்தான் கிடைக்கும். வடநாட்டில் சிவனுக்கு மீசை உண்டு (என்று நினைக்கிறேன்)
பதிலளிநீக்குஅதிரா.. ஆங்கிலேயரைத் திட்டவில்லை. அவர்கள் அவர்களின் சௌகர்யத்துக்கு அவரவர்களுக்கு ஒரு தினம் ஒதுக்கிக் கொண்டாடுகிறார்கள். நாம் அதைக் காபி செய்துவிட்டு, அவர்களைப்போல் அல்லாமல் மற்ற நாட்களில் அவர்களைத் திண்ணைக்கு அனுப்பி விடுகிறோம்! அம்மா பற்றிய, அதே தலைப்பில் என்னுடைய முதல் சிறுகதை கூட இந்த சிந்தனையின் விளைவாக வந்ததுதான்! (அதில் மருமகள் நல்லவர். மகன் கொஞ்சம்....)
பதிலளிநீக்கு//நீங்க என்னமோ சொல்ல வாறீங்க ஸ்ரீராம்:) ஆனா எனக்குத்தான் புரியுதில்ல://
ஆஹா.. அப்படி ஏமாற்றி விட்டேனா? அப்போ நல்ல கவிதைதான் போல!
பதிலளிநீக்கு//ஆஆ மல்லியில் மல்லிகைப் பூவா? நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன்:)) இல்ல இல்ல மொட்டுக்களைக் காட்டி எம்மைப் பேய்க்காட்டிப் பூவை மாத்திட்டார் //
இல்லை அதிரா.. அந்தச் செடியின் பூதான் அது. கொத்துக் கொத்ததாகப் பூத்துக் குலுங்குவதில்லை. ஒரு நாளைக்கு பத்துப் பூக்கள் கிடைத்தால் பெரிது.
அதிரா.. பாலகுமாரன் கதைகள் நீங்கள் படித்ததில்லை என்றால் நிச்சயம் நம்பிப் படிக்கலாம். நிறைய நிறைய நல்ல படைப்புகள் தந்திருக்கிறார்.
பதிலளிநீக்கு//பூனையை சைவம் கிடையாது?//
ஆமாம். எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த குட்டிப்பூனை தயிர் சாதத்தைக் கண்டு தெறித்து ஓடி விட்டதே....
அதிரா
பதிலளிநீக்கு//ஆஆ மல்லியில் மல்லிகைப் பூவா? நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன்:)) இல்ல இல்ல மொட்டுக்களைக் காட்டி எம்மைப் பேய்க்காட்டிப் பூவை மாத்திட்டார் //
இல்லை அதிரா.. அந்தச் செடியின் பூதான் அது. கொத்துக் கொத்ததாகப் பூத்துக் குலுங்குவதில்லை. ஒரு நாளைக்கு பத்துப் பூக்கள் கிடைத்தால் பெரிது.
அதிரா.. பாலகுமாரன் கதைகள் நீங்கள் படித்ததில்லை என்றால் நிச்சயம் நம்பிப் படிக்கலாம். நிறைய நிறைய நல்ல படைப்புகள் தந்திருக்கிறார்.
பதிலளிநீக்கு//பூனையை சைவம் கிடையாது?//
ஆமாம். எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த குட்டிப்பூனை தயிர் சாதத்தைக் கண்டு தெறித்து ஓடி விட்டதே....
நெல்லை..
பதிலளிநீக்கு//2000 ஆண்டுக்கு முன்பு வள்ளுவர், மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று சொல்லியுள்ளாரே.//
ஆம். எனக்கும் இதில் உடன்பாடு. அப்படி எல்லாம் சிரைக்கக் (வார்த்தைப் பிரயோகத்துக்கு மன்னிக்கவும். அர்த்தத்தை மட்டும் பார்க்கவும்) கூடத் தெரியாதவர்களாக நம் முன்னோர்களை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அறிவியலிலும், கட்டுமானத்துறையிலும் இன்றைய நம்மைவிட பல படிகள் முன்னேதான் இருந்திருக்கிறார்கள் முன்னோர்.
வாங்க பானு அக்கா.. ஆம் இரண்டு "கவிதை"களுமே நான் எழுதியதுதான். சத்தியமாக மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை!!
பதிலளிநீக்கு:)))
//கவிஞரின் வரிகளை பொய்யாக்கி விட்டதே உங்கள் புகைப் படங்கள்.//
அவை அதே பூக்களை வெவ்வேறு நாட்களில் எடுத்தது. நம் வீட்டு வாசலில் படியேறும் இடத்தில் இருக்கும் செடி!
//யத் பாவம் தத் பவதி! என்பார்கள். //
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
வாங்க கீதா ரெங்கன். வருக... தோழியைக் கண்டித்து 'வையு'ங்கள்!
பதிலளிநீக்கு//அணுவிலும் அணுவான அந்த சக்தியை அவரவர் மனதில் அந்த சக்தி எப்படித் தோன்றுகிறதோ அப்படியே……//
சரியாகச் சொன்னீர்கள் கீதா.
இரு கவிதைகளையும் ரசித்ததற்கு நன்றி கீதா.
பதிலளிநீக்கு//தன் மனம் கெட்டு கொஞ்சிட வந்தது குளிர்க்காற்று!!// அட அட அட! அதன் அழகில் மயங்கி என்ன வழவழப்போ என்று தடவிப் பார்த்திட வந்திருக்குமோ!!!!//
கீதா... இது பழைய எஸ் பி பாலசுப்ரமணியம் பாட்டு. ரங்கராட்டினம் திரைப்படப் பாடல். என் வரிகள் அல்ல.
வாங்க ராஜி.. ராமனுக்கு தாடி மீசை நாம் வரைந்து பார்த்தால்தான் உண்டு!
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார்... நீங்கள் சொல்வது சரி. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்,
பதிலளிநீக்குவாங்க துளஸிஜி.. பாராட்டுகளுக்கு நன்றி. முதல் படம் சிவனாகத்தான் இருக்க வேண்டும். சும்மா தாடி மீசை வைத்து ஒரு கடவுள் படம் எடுத்துக் போட்டேன். இலலாவிட்டால் பரசுராமராய் இருக்கலாம்!
பதிலளிநீக்குஅதிரா.. அடடா... ஏஞ்சலுக்கு அடிபட்டிருக்கிறதா? என்னவாம்?
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா...
பதிலளிநீக்கு//யாராவது நேரில் த்யாகராஜர் மாதிரி பார்த்திருந்தால் நமக்குத் தெரியும் //
அதுதானே?
//அத்தைக்கு என் நமஸ்காரம். அத்தைகளுக்கு ஒரு டே வைத்துக்கொள்ளலாம். நான் ஐந்தாவது அத்தையாக இருந்துகொள்கிறேன்.//
ஹா... ஹா... ஹா...
//மல்லிகை மொ ட்டு பாட்டும் படமும் மிக அருமை//
பதிலளிநீக்குஅந்தப் பாட்டு கேட்டிருக்கீங்கதானே?
நன்றி வல்லிம்மா.
நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குஏகாந்தன் ஸார்..
பதிலளிநீக்கு//ஒரு 90 வயது அந்தணர் இவர்களைக் கண்டது "சே.." // இவர்களைக் கண்டதும் என வந்திருக்கவேண்டுமோ?//
ஆமாம் ஸார்... பிழை. பொறுத்துக்க கொள்ளவும்.
கீதா அக்கா... பிற்பாடு வந்த சில ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். "இது போதும்" முக்கியமாக. கங்கை கொண்ட சோழன் எப்படி இருக்குன்னு பார்க்கணும் பானு அக்கா கிட்ட இருக்கான்னு கேட்கணும்.
பதிலளிநீக்கு?/வாசித்த வரையில் நேதாஜிக்கும் காந்திக்கும் கருத்து வேறுபாடு வந்துதானே நேதாஜி வெளியேறினார் காங்கிரஸிலிருந்து? // தி/கீதா, பட்டாபிசீதாராமையாவை முன் வைத்து காந்தி அவரை ஒதுக்கியதுக்குக் காரணமே நேரு தான்! நேதாஜிக்குக் கிடைத்த வரவேற்பும், மக்கள் ஆதரவும் நேருவைப் பொறாமை கொள்ள வைத்தது. :( இது தான் உண்மை. காந்தி சுதந்திரத்துக்குப் பின்னரும் தன் நேரு ஆதரவைத் தொடர்ந்தார், படேலைப் பிரதமர் பதவியிலிருந்து/அதற்கான போட்டியிலிருந்து விலகச் செய்ததின் மூலம்! பொதுவான ஆதரவு படேலுக்கே இருந்தது. நேரு அவருக்குக் கீழ் தான் இருக்க முடியாது என்றார். காந்தி ஏன் எப்போதுமே நேருவை ஆதரித்தார் என்பதற்கான காரணம் தான் புரியலை! :)
பதிலளிநீக்குhttp://sivamgss.blogspot.in/2007/04/blog-post_22.html#comment-form
பதிலளிநீக்குhttp://sivamgss.blogspot.in/2007/04/blog-post_24.html
http://sivamgss.blogspot.in/2007/04/blog-post_25.html
ஸ்ரீராம் - // வடநாட்டில் சிவனுக்கு மீசை உண்டு // - திருவல்லிக்கேணி மூலவர் வெங்கட கிருஷ்ணனுக்கு மீசை உண்டு.
பதிலளிநீக்குகில்லர்ஜி & ஸ்ரீராம் - இறைவன் திரு உருவங்களை உருவாக்குவது மனிதர்கள்தானே. எது அழகு என்ற பதத்தில் வருகிறதோ, குணங்களைச் சொல்கிறதோ, அதற்கேற்றவாறு உருவங்கள் வனையப்படுகின்றன. பொதுவா நாம, மீசை, தாடி இல்லாமல் இருந்தால் நல்லவன் என்றும், பாந்தமாக டிரஸ் பண்ணியிருந்தால் நல்ல குடும்பப் பெண் என்றும் மனதளவில் நினைப்பதுபோல், அதற்கேற்றவாறு இறைவன் திரு உருவங்களைச் செய்திருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
கீசா மேடம் - //காந்தி அவரை ஒதுக்கியதுக்குக் காரணமே நேரு தான்!// - குடும்பத் தலைவனுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். ஒருவன் கொஞ்சம் செயல்வீரர், இன்னொருவர் மித வாதி. இந்தியாவுக்கு நல்லது மிதவாதத் தனம் என்பது தலைவரின் முடிவு. அதனால் காந்தி எப்போதும் நேருவை ஆதரித்தார். வேறு காரணம் எதுவும் இல்லை. அதனால்தான் பட்டேலையும் கொஞ்சம் குறைவாகவே காந்தி வைத்திருந்தார். (உலக விஷயத்தைப் பற்றிப் பேசும்போது யாரது உள்ளூர் விஷயத்தை இழுப்பது--கருணானிதி, அழகிரி, ஸ்டாலின் என்று.. இங்கு அரசியல் பேசப்படாது.ஆமாம் சொல்லிட்டேன்)
பதிலளிநீக்கு//இந்தியாவுக்கு நல்லது மிதவாதத் தனம் என்பது தலைவரின் முடிவு. அதனால் காந்தி எப்போதும் நேருவை ஆதரித்தார். வேறு காரணம் எதுவும் இல்லை. // அதெல்லாம் இல்லை, போஸ் வந்துவிட்டால் தாங்கள் இருவரும் பின்னுக்குத் தள்ளப் படுவோம் என்பதை காந்தி, நேரு இருவரும்புரிந்து கொண்டதே தான் காரணம். :((((((
பதிலளிநீக்குநெட் படுத்தல், அதோடு கணினியும் சேர்ந்து விட்டது! லாப்டாப்பில் சார்ஜ் வேறே இல்லை! இன்னும் எந்தப் பதிவுக்கும் போகவே இல்லை! அப்புறமாத் தான் வரணும்! :(
பதிலளிநீக்குsome of the blogs do not open with google chrome including this now WHEN I open with fire fox Iam not able to comment in tamil
பதிலளிநீக்கு