திங்கள், 14 மே, 2018

"திங்க" க்கிழமை : க்ளூட்டன் ஃப்ரீ குதிரைவாலி வெனிலா கேக் - கீதா ரெங்கன் ரெஸிப்பி




க்ளூட்டன் ஃப்ரீ குதிரைவாலி வெனிலா கேக் 


எபி கிச்சன் நேயர்கள் மற்றும் எல்லா அக்காக்கள், அண்ணன்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் எபி கிச்சன் குழுவின் வணக்கம்! நண்பர்களே நாம பூஸாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எக்ஃப்ரீ ஸ்விஸ் ரோல் செஞ்சு எல்லோருக்கும் கொடுத்து சாப்பிட்டோம் இல்லையா! ஆனா பாருங்க நம்ம ஏஞ்சலுக்கு அது ஒத்துக்காது என்பதால் அவர் அதைச் சாப்பிட முடியைலை. 

அப்போவே நான் நினைத்தேன், ஏற்கனவே சிறுதானியத்துல கேக் செஞ்சுருக்கோமே அதையே அடுத்த எபிசோடுக்கு செஞ்சு ஏஞ்சலுக்கும் கொடுத்து (பூசாரின் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சத்தம்!!!) எல்லாருக்கும் கற்றுக் கொடுத்துவிடலாமே என்று நினைத்துக் கொண்டிருந்த போது என் நாத்தனாரின் அழைப்பு. ரெகுலர் கேக் ஒன்று வேண்டுமென்று அதுவும் அங்கு சென்று செய்ய வேண்டும் என்று.  நான் அவர் வீட்டு கிச்சனை ஆராய்ந்த போது குதிரைவாலி கனைத்தது! நாத்தனாருக்கும், நம்ம ஏஞ்சலுக்கும் அதிலேயே கேக் செய்து உங்க எல்லாருக்கும் சாப்பிடவும் கொடுத்து, கற்றும் கொடுத்துவிடலாம் என்று எடுத்துக் கொண்டுவந்துவிட்டேன்.

சரி இப்ப செய்முறைக்குப் போலாமா? இம்முறையும் செய்து கொண்டே சொல்லிக் கொடுத்துவிடுகிறேன். எல்லாரும் இந்த டேபிளைச் சுற்றி நில்லுங்க! ஆ! இருங்க போன எபிசோட்ல நம்ம பூஸார் 

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா இஞ்ச பாருங்கோ அஞ்சு இடிக்கிறா:) கர்ர்:) மீதான் முன்னால நிற்பேன்ன்:) இடிக்க வேணாம் எனச் சொல்லுங்கோ கீதா:)).. அதாரது என்னைத் தள்ளுறது டோண்ட் டச்சூஊ மீஈஈஈஈஈஇ கர்ர்ர்:)) வர வர ஒரு ரெசுப்பெட்டே:)) கிடைக்குதில்ல நமக்கு இங்கினஎன்று எல்கேஜி பாப்பா போன்று கரைந்திட…..

ஆனா இப்ப பாருங்க, நம்ம பூசார் எங்கிருக்கார்னு ஸ்ரீராம் நெல்லை, மதுரை, கில்லர்ஜி , துரை அண்ணா எல்லாரும் தேடுற நிலைமை! பூஸார் வரவில்லை என்றே நினைச்சுட்டீங்க இல்லையா? ஹா ஹா ஹா..கீழ பாருங்க…….டயட் அண்ட் ஜிம்! நம் பூசாரை எப்படி ஆக்கியிருக்குனு! அவரே சொன்னார் அவரைப் பார்த்தால் அடையாளமே தெரியாது என்று!!!

“தெ ரா கு இல்லை இல்லை தெ ரா பு போலனு சொல்லுங்க”…ஹா ஹா ஹா யாரு அது? அதானே பார்த்தேன் ஸ்ரீராம் குரல்! பாவம் பாருங்க புலியூர் பூஸாநந்தாவாக தவம் எல்லாம் செஞ்சு டயட், ஜிம் அது இதுனு இப்படியா ஆகணும்!! சரி நான் டேபிள் அடிலருந்து கொண்டு வந்து இங்க நிறுத்தறேன். வாங்க பூஸானந்தா வந்து கேக் எல்லாம் சாப்பிட்டு உடம்பை தேத்துங்க! ஓகே! ஷாட் ரெடி….கேமரா ரோலிங்க்….
செய்முறை இதோ..

குதிரை வாலி – ½ கப் (கேக் செய்யப் பயன்படுத்தும் கப்) படத்துல காட்டிருக்கேன் பாருங்க.

மில்க் பௌடர் – 2 பாக்கெட். நம்ப கிச்சன்ல ஹட்ஸன் தான் இருந்துச்சு. நீங்க எந்த ப்ராண்ட் வேணாலும் பயன்படுத்தலாம். (10 ரூ பாக்கெட்)


கார்ன் ஃப்ளார்/ஓட்ஸ் ஃப்ளார்/கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன். இங்கு நான் ஓட்ஸ் ஃப்ளார் (ஓட்ஸை மிக்ஸியில் பௌடர் செய்தது) பயன்படுத்தினேன். க்ளூட்டன் ஃப்ரீ என்பதால்.

பேக்கிங்க் பௌடர் – ½ டீ ஸ்பூன்

பேகிங்க் சோடா – ½ டீ ஸ்பூன்

ஓட்ஸ் பௌடர் கலந்துவிட்டேன் 

வெண்ணை – 2 டேபிள் ஸ்பூன்

படத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் காட்டப்படியிருக்கு. இப்படி இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணை 

சுகர் ஃப்ரீ/அல்லது வெல்லம் – சுகர் ஃப்ரீ என்றால் 1 டீ ஸ்பூன். பொடித்த வெல்லம் மட்டும் என்றால் 3 டேபிள் ஸ்பூன். நான் இரண்டும் எடுத்துக் கொண்டேன் சுகர்ஃப்ரீ 1/2 டீ ஸ்பூன். பொடித்த வெல்லம் 2 டேபிள் ஸ்பூன். வெல்லத்திற்குப் பதில் நாட்டுச் சர்க்கரை அல்லது ப்ரௌன் சுகர் பயன்படுத்தலாம். வெள்ளைச் சீனியும் பயன்படுத்தலாம். 


வெனிலா எஸன்ஸ் – 3/4 டீ ஸ்பூன்


தண்ணீர் – ½ கப் (முதல் படத்தில் உள்ள கப் அளவு)

முதலில் ½ கப் தண்ணீரில் வெல்லப் பொடியை போட்டு ஊற வைச்சுடுங்க. நாட்டுச் சர்க்கரை என்றாலும், ப்ரௌன் சுகர் என்றாலும் தண்ணீரில் போட்டு வைத்துவிடலாம். கரைப்பதற்குச் சௌகரியமாக இருக்கும். குதிரைவாலியை மிக்ஸியில் பொடிச்சுக்கங்க. பௌடர் பண்ணிட்டீங்களா? ரொம்ப னைஸ் மாவா எல்லாம் ஆகாது. ரொம்ப ஃபைன் ரவை மாதிரிதான் பௌடர் பண்ண முடியும்.

பேக்கிங்க் ஓவனை 200 செல்சியஸ் பாயின்டில் வைச்சு, 30 நிமிஷம் செட் பண்ணி ஆன் பண்ணிடுங்க. ப்ரீஹீட் ஒரு 10 நிமிஷம் போட்டும். அதுக்குள்ள பொடித்த குதிரைவாலியுடன் ட்ரையான சாமான் எல்லாம் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாகக் கலந்து வைங்க. இப்ப வெல்லத்தைக் கரைச்சுட்டு வடிகட்டியில் வடிகட்டிவிட்டு அந்தத் தண்ணீரை மாவில் விட்டு மெதுவாக நன்றாகக் கலக்கவும். எக்பீட்டர் இருந்தால் நல்லது. நன்றாகக் கலந்ததும் வேகமாக சுழற்றிக் கலக்கவும். கேக் வகைகள் அனைத்திற்கும் ஒரே பக்கமாகத்தான் சுழற்றிக் கலக்க வேண்டும். மாற்றி மாற்றிக் கலக்கக் கூடாது. கலக்கும் போது வெனிலா எஸன்ஸும் கலந்துக்கோங்க. கேக் கலவை ரெடியாகிவிட்டது. தோசைமாவு பதம்.

கேக் மாவு அரைக்கப்பிற்குத்தான் போட்டதால் சிறிய அறுமுக்கோணம் டின்னை எடுத்துக் கொண்டேன். கேக் கலவை எப்போதுமே நாம் பயன்படுத்தும் டின்னில் பாதி அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான் அது உயர்வதற்கு இடம் இருக்கும். இப்போது க்ரீஸ் செய்த ட்ரேயில் கேக் கலவையை ஊற்றிவிட்டு ஓடிஜி (OTG) ஓவனில் நடு ராக்கில் வைக்க வேண்டும். 

20 நிமிடம் எடுக்கும். அவ்வப்போது செக் செய்ய வேண்டும். ஒரு வேளை 20 நிமிடத்தில் கேக் வேகவில்லை என்றால் கூட 5 நிமிடமோ, 10 நிமிடமோ வைத்துவிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். பாருங்க நமக்கு இங்க 25 நிமிடம் எடுத்திருக்கு.


இதோ கேக் ரெடியாகிவிட்டது. அது ராக்கிலேயே 15 நிமிடங்கள் இருக்கட்டும். பின்னர் அதை எடுத்து வெளியில் வைத்துவிட வேண்டும். கொஞ்சம் சூடு ஆற வேண்டும் பின்னர் ஒரு தட்டில் கவிழ்த்தினால் கேக் தானாகவே வந்துவிடும்.


இதோ வெளியில் எடுத்துத் தட்டிலும் கவிழ்த்தாச்சு. இனி என்ன? கட் செய்து எல்லோருக்கும் கொடுத்துச் சாப்பிட வேண்டும் தான். வாங்க நண்பர்களே, நேயர்களே வந்து கேக் எடுத்துக்கோங்க. பந்திக்கு முந்திக்கோங்க!! ஏஞ்சல் சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க! க்ளூட்டன் ஃப்ரீ!

டிப்ஸ்:

இதில் வெனிலா எஸன்ஸ் கலக்கும் போது கூடவே ஒரு டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர், ஒரு டேபிள் ஸ்பூன் ட்ரிங்கிங்க் சாக்கலேட் கலந்து செய்யலாம். அல்லது ஹெர்ஷே சாக்கோ சிரப், அல்லது அமுல் சாக்கோ சிரப் (இப்போது 10 ரூ சாஷேக்களில் கிடைக்கிறது!) இவற்றைக் கலந்தால் இதில் சர்க்கரை இருப்பதால் நாம் கேக்கில் போடும் சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும். எக் பிரீ கேக்கிற்கு சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் கேக்கின் பதம் அதாவது டெக்ச்சர் நன்றாக வரும். சாக்கோ சேர்ப்பதற்குப் பதில் வெனிலா செய்துவிட்டு அதன் மேல் ஹெர்ஷே அல்லது அமுல் சாக்கோ சாஸ் மேலே கோடு போல போட்டு டிசைன் செய்யலாம். எல்லாம் உங்கள் கற்பனை!

Image result for skinny cat gifImage result for skinny cat under the table gif

இந்தக் கேக்கை செஞ்சு பார்த்துட்டு எங்களுக்குச் சொல்லுங்க உங்கள் கருத்துகளை. மிக்க நன்றி எபி ஆசிரியர்கள் மற்றும் ஏபி ஷோ டைரக்டர் ஸ்ரீராம்! அடுத்த திங்க பதிவு எபிசோடில் சந்திக்கும் வரை அனைவருக்கும் எபி கிச்சன் குழுவினர் நன்றி கூறி விடை பெறுகிறோம்! வணக்கம்!   

97 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, பானுக்கா எல்லோருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஓ! இன்று நம்ம ரெசிப்பியா....மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  4. இன்னிக்கு என்னாச்சு ஸ்ரீராம் யாரையும் காணலை சுவர் ஏறிக்கிட்டுருக்காங்களா? ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இப்பல்லாம் காலைல போட்டியே இல்லை குலாப்ஜாமூர் ஆட் போல ...ஆயிருச்சு ஏனோ...துரை அண்ணா, கீதாக்காவைக் காணலை...பானுக்கா?

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஒரு வழியா சுவர் ஏறி குதிச்சாச்சு...

    அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  7. ///எல்லா அக்காக்களுக்கும்!....///

    அதெப்படி ஜொல்லலாம்?...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

    இன்னும் முக்காலே மூனு வீசம் பேருக்கு பல்லே முளைக்கலே!!....

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

    பதிலளிநீக்கு
  8. ஆஹா நிகழ்ச்சியில் நானுன் ரசித்தேன், ருசித்தேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... ஆ... சுவர் ஏறிக் குதிச்சா வந்தீங்க?

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம். கேக்...? முயற்சி செய்கிறேன். இது போன்ற விஷயங்களை வீடியோ பதிவாக போட முடிந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம்..

    நானும் இன்னைக்கு சகோதரி கீதா ரெங்கன் கேக் செய்முறையை பார்க்கவும், ரசிக்கவும் விரைவிலேயே கிளம்பி வந்து விட்டேன்..

    /குதிரை வாலி கனைத்தது/

    ஹா.ஹா. ஹா. ஹா

    கனைத்த குதிரையை அடக்கி கடிவாளமிட்டு அசர வைக்கும் கேகிற்காக அழைத்து வந்த சகோதரி கீதா ரெங்கனுக்கு முதல் பாராட்டுக்கள.

    அருமையான செயமுறைகள்.. மிக அழகான படங்கள்.. துல்லியமாக நிறுத்தி போட அளவு உபகரணங்கள். ஒவ்வொரு பக்குவத்திலும் அமர்க்களமாக விரிந்த குதிரைவாலி கேக் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. செய்து ருசித்து பார்க்க வேண்டும்.

    எனக்கு இந்த கேக்கெல்லாம் செய்ய தெரியாது சகோதரி. குழந்தைகள் என்றோ ஒரு நாள்.ஆசைப்பட்டால் பேக்கரிதான். நீங்கள் ஒவ்வொரு தடவையும் இந்த மாதிரி கேக்கிலும், வேறு மாதிரி சமையல்களும் அசத்தும் போது வியப்பு வருகிறது. எப்படி இந்த அளவிற்கு இரண்டிலும் நுட்பமாக கற்று தேர்ந்தீர்கள் என.... மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ.

    என்னிடம் ஓவன்வனே இல்லே.. வேறு ஏதாவது மாற்ற உபகரணங்கள் (இட்லி தட்டு) மூலம் கேக் வடிவம் வருகிற மாதிரி செய்ய முடியுமா?

    கடைசி படம் மிகவும் பாவமாக (பூனைக்குட்டி ) இருக்கிறது.இப்படி மெலிந்த உருவத்தில் டேபில் அடியே சுற்றி வருகிறதே.. அதை கொஞ்சம் கேக் நிறைய கொடுத்து மாலை அதிரா வருவதற்குள் கொஞ்சம் அழகான குண்டாக்கி விடுங்கள். ஹா ஹா ஹா ஹா

    பதிவு அருமை. கொஞ்சம் உடம்புக்கு முடியலே. எனினும் உங்கள் கேக்கின் ஈர்க்க பட்டு முதல் வேலையா இங்கே வந்துட்டேன். பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.


    பதிலளிநீக்கு
  12. கேக்கில் என்பது கேக்கின் என்று வந்திருக்கிறது

    வார்த்தை தவறுதல்...

    பதிலளிநீக்கு
  13. சமைத்து வைத்ததை பார்ப்பதற்கே நன்றாக இருக்க வேண்டும் என்பார் என் பாட்டி. அதன்படி கேக்கை புகைப்படத்தில் பார்க்கும் பொழுதே அப்படியே எடுத்து வாயில் போட்டுக் கொள்ளலாம் போல் இருக்கிறது👍👌

    பதிலளிநீக்கு
  14. அதெப்படி ஜொல்லலாம்?...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

    இன்னும் முக்காலே மூனு வீசம் பேருக்கு பல்லே முளைக்கலே!!....

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....//
    ஹா ஹா ஹா ஹா ஹாஹா….ஆமாம் கீதாக்கா….குழந்தை…..ஆனா பல்லு விழுந்தவங்க இருக்காங்க 81 வயது பாட்டி!!! அதை மறந்துட்டீங்களே துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. துரை அண்ணா சுவர் ஏறிக் குதிச்சா வந்தீங்க.....ஸ்ரீராம் பாத்தீங்களா காலைல நான் நினைச்சது சரியா போச்சு.....கீதாக்காவைக் காணலையே குதிக்க முடியலையோ....இல்லை காபி ஆத்த லேட்டாயிடுச்சோ..

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஆஹா நிகழ்ச்சியில் நானுன் ரசித்தேன், ருசித்தேன் நன்றி.//

    கில்லர்ஜி மிக்க நன்றி ரசித்தமைக்கும் ருசித்தமைக்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. Nice, will try//

    மிக்க நன்றி மி கி மா....ட்ரை பண்ணி முடிஞ்சா கருத்து சொல்லுங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம். கேக்...? முயற்சி செய்கிறேன். இது போன்ற விஷயங்களை வீடியோ பதிவாக போட முடிந்தால் நன்றாக இருக்கும்.//

    பானுக்கா வாங்க....முயற்சி செஞ்சு பாருங்க. நானும் நினைத்தேன் பானுக்கா எபியில் வீடியோவாகப் போட்டால் இன்னும் நிக்ழ்ச்சி சிறக்குமே என்று. ஆனால் வீடியோ எடுக்க அதுவும் சரியாக வீடியோ எடுக்க ஆள் வேண்டும். இல்லை என்றால் மொபைலை சரியான கோணத்தில் வைத்து அந்தக் கோணத்திற்குள் நான் செய்ய வேண்டும். இடையில் டிஸ்டர்பன்ஸ் இருக்கக் கூடாது. இருந்தால் வீடியோவை எடிட் பண்ணனும் அது பெரிய பணி...இரண்டு வீடியோக்களை இணைக்க முடியும் ஆனால் வெட்டி ஒட்டுவது இல்லை.

    எடிட்டிங்க் என்பது மிகுந்த வேலை வாங்கும் ஒன்று. 1 1/2 நிமிட படத்திற்கே எடிட்டிங்க் எத்தனை வேண்டியது என்று நான் அறிவேன்.

    ஒன்றுமில்லை ஒரு சின்ன ரெக்கார்டிங்க் தான் செவ்வாய்தோறும் கவிநயாம்மாவுக்குப் பாடி அனுப்புவதை ஆடியோ மட்டும் தான் அதை ரெக்கார்ட் செய்யும் போது சரியாக வரவிலலி என்றால் அழித்துவிட்டு மீண்டும் பாடுவேன்..டிஸ்டர்பன்ஸ் வந்தால் மீண்டும் பாடி ரெக்கார்ட் பண்ணிப் பண்ணி அழித்து பாடி இறுதியில் கண்டிப்பாக 15 டு 20 முறை ஆகியிருக்கும்...வீடியோ இன்னும் வேலை வாங்கும்..

    .என்றாலும் எனக்கு எபியில் அப்படி திங்க பதிவுஅளைப் போட வேண்டும் என்ற எண்னம் உள்ளது. அடுத்தது அப்படி முயற்சி செய்கிறேன். உண்மையைச் சொல்லணும்ன இந்தப் பதிவு கூட அப்படித்தான் வீடியோவாக எடுக்கலாம் என்று முயற்சி செய்து எடுத்து சரியாக வராமல் அப்புறம் படங்கள் என்று சில படங்கள் மிஸ் ஆகிவிட்டது...கலந்த மாவு பதம் போன்றவை மிஸ் ஆகிவிட்டது..ஹிஹிஹி

    முயற்சி தொடரும் ஹா ஹா ஹா ஹா

    மிக்க நன்றி பானுக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  19. அருமை//

    மிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  20. வாங்க கமலா சகோதரி.

    மிக்க நன்றி விரிவான கருத்திற்கும் பாராட்டிற்கும்.

    //இந்த மாதிரி கேக்கிலும், வேறு மாதிரி சமையல்களும் அசத்தும் போது வியப்பு வருகிறது. எப்படி இந்த அளவிற்கு இரண்டிலும் நுட்பமாக கற்று தேர்ந்தீர்கள் என.//

    நுட்பமாகத் தேர்ந்தேனா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் எங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் புதிய ரெசிப்பிக்களை விரும்பிச் சாப்பிடும் இளையவர் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. என் மகன் சிறுவயதாக இருந்த போது. வருடத்தில் வரும் விழாக்களுக்குப் பஞ்சமா என்ன? வீட்டிலும் பிறந்தநாள், காதுகுத்தல், கல்யாணம் சீமந்தம் என்று நிகழ்வுகள் அதிகம் பெரிய குடும்பம் என்பதால். எனவே அப்போது செய்து பார்த்து கற்றவை. மகன் கல்லூரியில் இருந்த போது நண்பர்கள் கூட்டம் அதிகம்.

    இப்போதும் ஒன்று விட்ட நாத்தனார் அடிக்கடி கேட்பார் அதனால் இப்படி யாரேனும் கேட்டால் செய்து கொடுப்பது அல்லாமல் வீட்டில் செய்வது குறைந்துவிட்டது. இப்போது சூழல் மாறிவிட்டது எனவே செய்வது அபூர்வம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. என்னிடம் ஓவன்வனே இல்லே.. வேறு ஏதாவது மாற்ற உபகரணங்கள் (இட்லி தட்டு) மூலம் கேக் வடிவம் வருகிற மாதிரி செய்ய முடியுமா? //

    கமலா சகோதரி, ஓவன் தான் வேண்டும் என்றில்லை. உங்களிடம் பழைய குக்கர் பேன் குறிப்பாக ஹிண்டேலியம்...எவர்சில்வர் ஒத்துவராது. இருந்தால் அதை பயன்படுத்தலாம். பழைய குக்கர் பேனில் அடியில் போடும் தட்டு போட்டு விட்டு குக்கர் பாத்திரம் வட்டப்பாத்திரம் அலுமினியம் இருந்தால் நல்லது இல்லை என்றாலும் பிரச்சனை இல்லை....அதற்குள் பொருந்தும் பாத்திரம் இருந்தால் போதும் அதில் கலந்த மாவை விட்டு, மூடியில் கேஸ்கெட் போடாமல் மூடிவிட வேண்டும். வெயிட்டும் போடக் கூடாது....சிம்மில் முதலில் வைத்து சூடு பண்ணிவிட்டு பின்னர் மாவு ஊற்றிய பாத்திரத்தை உள்ளே வைத்து மூடிவிடலாம். கொஞ்சம் தீயைக் கூட்டி வைக்கலாம் மீடிய்மும் இல்லாமல்..குறைந்தது 40 நிமிடம் ஆகலாம்...வாசனை வரும் போது திறந்து பார்த்து நடுவில் குச்சி ஏதேனும் விட்டுப் பாருங்கள் ஒட்டாமல் வந்தால் கேக் ஆகிவிட்டது என்று அர்த்தம் மேல் பாகம் லைட் ப்ரௌன் நிறத்தில் வரும்.

    சில சமயம் 40 நிமிடம் போறவில்லை என்றால் கூடக் கொஞ்ச வைத்து செக் செய்து ஆஃப் செய்து விட்டு கொஞ்சம் நேரம் சூட்டில் அப்படியே வைத்துவிட்டு பின்னர் மூடியை மட்டும் எடுத்துவிட வேண்டும் அதன் பின்னும் கேக் சற்று ஆறியய் பிறகு ஓரங்களில் கொஞ்சம் இளக்கிக் கொடுத்து தட்டில் கவிழ்க்கலாம்....

    ஸ்டீம் செய்யும் குக்கர் கேக்கும் செய்யலாம். நான் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் செய்து எபி கிச்சனில் போடுகிறோம்....

    மிக்க நன்றி கமலா சகோதரி

    கீதா

    பதிலளிநீக்கு
  22. புதுசு புதுசா வித்தியாசமான ரிசிப்பியாய் வர ஆர்ம்பித்து இருக்கிறது என்ன அதை எல்லாம் படிக்கத்தான் நேரம் இருக்கிறது பார்த்து நாக்கில் எச்சில் வடிக்கவும் முடிகிறது ஆனால் செஞ்சு பார்க்கத்தான் நேரமில்லையே... கமலா மேடம் சொன்ன ரிசிப்பியைத்தான் அடுத்தாக செய்து பார்க்கணும் என்று நினைத்து இருக்கிறேன் கேக்கு செய்வதெல்லாம் என் குழந்தையின் டிபார்ட்மெண்ட்

    பதிலளிநீக்கு
  23. கடைசி படம் மிகவும் பாவமாக (பூனைக்குட்டி ) இருக்கிறது.இப்படி மெலிந்த உருவத்தில் டேபில் அடியே சுற்றி வருகிறதே.. அதை கொஞ்சம் கேக் நிறைய கொடுத்து மாலை அதிரா வருவதற்குள் கொஞ்சம் அழகான குண்டாக்கி விடுங்கள். ஹா ஹா ஹா ஹா //

    ஹா ஹா ஹா ஹா....அதிரா இடையில் தான் மெலிந்து அடையாளமே தெரியாத அளவிற்குப் போயிருக்கேன் என்று சொன்னதால் அவரைக் கலாய்க்க...

    பதிவு அருமை. கொஞ்சம் உடம்புக்கு முடியலே. எனினும் உங்கள் கேக்கின் ஈர்க்க பட்டு முதல் வேலையா இங்கே வந்துட்டேன். பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    உடம்பு முடியாத போதும் இங்கு வந்து வாசித்து விரிவாகக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோதரி. உடமபைப் பார்த்துக்கோங்க. பிரார்த்தனைகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. புதுசு புதுசா வித்தியாசமான ரிசிப்பியாய் வர ஆர்ம்பித்து இருக்கிறது என்ன அதை எல்லாம் படிக்கத்தான் நேரம் இருக்கிறது பார்த்து நாக்கில் எச்சில் வடிக்கவும் முடிகிறது ஆனால் செஞ்சு பார்க்கத்தான் நேரமில்லையே... கமலா மேடம் சொன்ன ரிசிப்பியைத்தான் அடுத்தாக செய்து பார்க்கணும் என்று நினைத்து இருக்கிறேன் கேக்கு செய்வதெல்லாம் என் குழந்தையின் டிபார்ட்மெண்ட்//

    வாங்க மதுரை!! ஹா ஹா ஹா...கேக் உங்கள் மகளூக்கு நேரம் இருக்கும் போது செய்யச் சொல்லி ருசிங்க...இல்லையா இந்தியாவுக்கு வரும் போது அதுவும் சென்னைக்கு வரும் போது...ஓ வந்தால் உங்களை அடையாளம் தெரியாது யாருக்கும்...நீங்கதான் ஆள்மாறாட்டம் பண்ணித்தானே வருவீங்க ஹிஹிஹிஹி கவலைப் படாதீங்க இங்கு வரும் போது ஸ்ரீராமுக்கும் எனக்கும் சொல்லுங்க ரசியமா...கேக் செஞ்சுடலாம்...

    மிக்க நன்றி மதுரை...கமலா சகோதரியின் பிட்லா செஞ்சு பாருங்க...சொல்லுங்க எங்க எபி கிச்சன் கருத்தில்...நான் இனிதான் செய்யணும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  25. செய்முறையில் பொறுமை ரொம்பவும் அவசியம்...!

    பதிலளிநீக்கு
  26. கீதா ரெசிப்பியாஆஆஆஆ... கிச்சினில நிற்க இடமிருக்காதே:) துரை அண்ணனுக்கே பாதிக் கிச்சின் வேணும்:)... இதில நான் வேறு லேட்டாயிட்டனே:)..

    ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் என்னாதூஊஊ குளூட்டன் பிறீயாஆஆ நோஓஒ நேக்கு வாணாம்ம்:).. அப்பூடியே என் செக் இடம் குடுங்கோ:)... ஹா ஹா ஹா..

    கொஞ்சத்தாலதான் வருவேன் கீதா.. இப்போ பிரசண்ட் ரீச்சர்ர்ர்ர்ர் சொல்லிக்கொண்டு ஓடுறேன்ன்ன்:)...

    பதிலளிநீக்கு
  27. துரை அண்ணன் சுவர் ஏறிக் குதிச்சாரோ... ஹையோ சுவர் விழுந்ததைப் பார்த்து நினைச்சேன், சரியாப்போச்சு:)..

    கீசாக்காவைக் காணமே:).. அவவால சுவர் ஏற முடியல்லப்போல... நில்லுங்கோ ஏணி கொண்டு போய்க் கூட்டி வாறேன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  28. நன்றி டிடி கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  29. வாங்க அதிரா...கிச்சன்ல நிக்கறதுக்கு இடம் இருக்கே அதான் பாருங்க யாரு கீழ உருண்டு கொண்டு இருக்கிறது என்று...க்ளூட்டன் ஃப்ரீன உடனே பூஸார் கீழ உருண்டு பெரண்டு நோ நோ நு சொல்லிக் கொண்டு ஹா ஹா ஹா ஹா இப்ப நீங்க அடையாளமே தெரியாத போல ஆகினமாமே...அதான் சைடுல படம் பாருங்கோ...ஹா ஹா ஹா உங்க ப்ரெஸன்ட் ஸ்ரீராம் டைரக்டரின் ரெஜிஸ்டரில் போட்டாச்சு...ஹா ஹா ஹா ஹா தேம்ஸ் நதிக்காரார்களுக்கு என்று தனி டைம் ஃபிக்ஸ் பண்ணி வைச்சுருக்கு..ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  30. துரை அண்ணனுக்கே பாதிக் கிச்சின் வேணும்:)... இதில நான் வேறு லேட்டாயிட்டனே:)..//

    நீங்கதானே இடம் கொடுங்கோனு போன தடவை எல்லோரையும் தள்ளிக் கொண்டு வந்தீர்கள்..ஹா ஹா ஹா ஹா...இம்முறை நீங்க ரொம்ப ஒல்லியாகிவிட்டதால் பிரச்சனை இல்லையாம் துரை அண்ணா சொன்னார்...

    துரை அண்ணா ஒல்லிதானாக்கும்...பாதி எல்லாம் வேண்டா அவருக்கு..

    கீதாக்காவுக்கு ஏணி சரிப்படாது...பாராசூட் கொடுத்துவிட்டிருக்கேன்....அதிரா...ஹா ஹா ஹா ஹா அக்காக்கு இப்பல்லாம் பாராசூட்ல குதிகுதிச்சுப் பழகிப் போச்சு ...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  31. அதிரா நீங்க காலைல எபிக்கு வரணும் என்றால் ஏணி அல்லது பாராசூட் அல்லதுஹெலிகாப்டரில்தான் வந்து இறங்கோணும்..இல்லைனா க்யூவில் நிற்கணும் துண்டு போட்டு வைக்கணுமா சொல்லுங்க.....இப்பலலம் எபி செம க்ராக்கியாகிடுச்சு...கதவு திறக்க...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  32. இந்த செய்முறையில் எங்கள் வீட்டில் முயற்சித்து பார்க்கச்சொல்கிறேன். கடைசியில் உள்ள பூனை வீடியோ-வை பார்த்ததும், குதிரை வாலி கேக் சாப்பிட்டதும் பூனை சந்தோஷ ஆட்டம் போடுகிறதோ என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் சகோதரி

    அன்றைய கூட்டு குடும்ப முறையில் தாங்கள் இருந்து குடும்பத்திலிருக்கும் அனைவருக்கும், அவரவருக்கு பிடித்ததை செய்து கொடுத்து அவர்களின் மனம் நிறைந்த ஒரு தோழியாய்...வாவ்... மிகவும் நன்றாக செயல்பட்டிருக்கிறீர்கள்.
    அதற்கு முதலில் வாழ்த்துகள்.

    எனக்கும் புகுந்த வீட்டில் நிறைய உறவுகள்தான். இரண்டு நாத்தனார்கள்.. மூன்று மச்சினர்கள் என.. ஆனால் அனைவருமே மூத்தவர்கள். என மாமியாருக்கு என்னவர்தான் கடைசி பையர். அதனால் அனைவரிடமும் மரியாதை மிக கலந்த ஒரு பழக்கம். அண்ணா, மன்னி என்றுதான் அழைப்பேன். அனைவரும் நான் செய்யும் பதார்த்தங்களை பாராட்டுவார்கள்.

    எனது வேண்டுகோளுக்கு இணங்க குக்கரில் கேக் செய்யும் முறையை கற்று தந்தமைக்கு, அனைத்தையும் விளக்கமாக கூறியமைக்கு என மனமுவந்த நன்றிகள். கண்டிப்பாக ஒரு சமயம் அந்த பாணியில் செய்து பார்க்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  34. ///மற்றும் எல்லா அக்காக்கள், அண்ணன்கள்,///

    நோஓஓஓஓஓஓ இங்கின மீ மட்டும் தங்கச்சியாக்கும்ம்ம்:) தங்கச்சிக்கும் எனப் போட்டிருக்கோணும்.. மற்றும் “பெரியக்கா” எனவும் போடோணும் அது அஞ்சுவுக்கு..:) இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்ன்ன்:)..

    கீதா கிச்சினில ஹவுஸ் ஃபுல்:) எல்லோரும் இடிச்சுக்கொண்டு நிக்கினம்:) நேக்கு இடமில்லே:)) அதுதான் இன்று ஒரு முடிவோடயேதான் கதைரைக்கு கீழாழ உருளுறேன் ஆராவது கால் உளையுது என கதிரையில் இருக்கட்டும்.. அப்போ பதம் பார்த்திடுறேன்:)) பூஸோ கொக்கோ:) ம்ஹூம்ம்ம்:))..

    பதிலளிநீக்கு
  35. அண்ணா, மன்னி என்றுதான் அழைப்பேன். அனைவரும் நான் செய்யும் பதார்த்தங்களை பாராட்டுவார்கள். //
    கமலா சகோ உங்கள் குடும்பமும் பெரிது என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. கூட்டுக்குடும்பம் என்று முழுவதும் சொல்ல முடியாது. அவ்வப்போது...ஊர் ஊராகச் சென்றதால்...

    கண்டிப்பாகப் பாராட்டியிருப்பார்கள். உங்கள் செய்முறை விளக்கம் எல்லாமே நன்றாக இருக்கிறதே!! படங்கள் சொல்லிவிடுகின்றன!! மீதியை. உங்கள் புகுந்தவிட்டு உறவுகளில், எனது உறவில் கூட ஒரு நம்பரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஹா ஹா ஹா ஹா...அது தவிர ஒன்றுவிட்ட தான் சின்னவர்கள் என்பதால் கற்றதும் செய்ததும்...

    செய்து பாருங்கள் மிக்க நன்றி கமலா சகோதரி.

    கீதா

    பதிலளிநீக்கு
  36. //“தெ ரா கு இல்லை இல்லை தெ ரா பு போலனு சொல்லுங்க”//

    இதென்ன இது இடையில மதராட்டியில பேசுவது கர்ர்ர்ர்ர்ர்:)).. கீதா எல்லோரையும் டமில்ல அயகாப் பேசச் சொல்லுங்கோ.. அதிராவைப்போல:))..

    ///வாங்க பூஸானந்தா வந்து கேக் எல்லாம் சாப்பிட்டு உடம்பை தேத்துங்க! ஓகே! ஷாட் ரெடி….கேமரா ரோலிங்க்….///

    ஹா ஹா ஹா எனக்கு குளூட்டன் ஃபிறீயின் சுவையே பிடிக்காதூஊஊஊஊஊ...:)
    ----------------------

    கீதா குதிரை வாலியைப் பச்சையா அரைச்சு அரித்து எடுத்தனீங்களோ?... எனக்கு முன்பு இது தெரியாது, பின்னர் கீசாக்கா சொல்லக் கேட்டுப் போய்ப் பார்த்தேன் தமிழ்க்கடையில் இருந்துதே.. வாங்கி வந்து வைத்திருக்கிறேன்... இன்னொன்று கப்பின் அளவை சொன்னால் இன்னும் நல்லது கீதா. அதில் போட்டிருக்குமே.

    பதிலளிநீக்கு
  37. நோஓஓஓஓஓஓ இங்கின மீ மட்டும் தங்கச்சியாக்கும்ம்ம்:) தங்கச்சிக்கும் எனப் போட்டிருக்கோணும்.. மற்றும் “பெரியக்கா” எனவும் போடோணும் அது அஞ்சுவுக்கு..:) இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்ன்ன்:)..// ஹலோ அதிரா நன்றாக வாசித்துப் பாருங்கள்!! நீங்கள் அந்தக் குழுவில் இருக்கிறீர்கள்....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  38. ஓ கீழே சொல்லியிருக்கிறீங்க க்.வலியை அரைக்கோணும் என..

    //ரொம்ப னைஸ் மாவா எல்லாம் ஆகாது///

    ஹலோ கீதா முதல்ல ஃபீஸ் ஐ என் எக்கவுண்டில போடுங்கோ:).. மீ உங்களுக்கு டமில் ஜொள்ளித்தரோணும் கர்ர்:)) எனக்கு டமிலில் ஆரும் டப்புப் பண்ணினா புய்க்காதாக்கும்:))[ஹையோ இதை நெ.தமிழன் பார்த்திடக்கூடா ஜாமீஈஈஈ:)] .. அது “நைஸ்”:) ஆக்கும்ம்ம்ம்ம்ம்:))

    பதிலளிநீக்கு
  39. இந்த செய்முறையில் எங்கள் வீட்டில் முயற்சித்து பார்க்கச்சொல்கிறேன். கடைசியில் உள்ள பூனை வீடியோ-வை பார்த்ததும், குதிரை வாலி கேக் சாப்பிட்டதும் பூனை சந்தோஷ ஆட்டம் போடுகிறதோ என நினைத்தேன்.//

    புதிய பதிவர் என்று நினைக்கிறேன். இல்லையா? இதுதான் முதல் தடவையாக இங்கு எபி யில் பார்க்கிறன்...எபிக்கும் புதிது என்றுதான் தோன்றுகிறது. மிக்க மிக்க நன்றி இங்கு வந்து கருத்திட்டமைக்கு.

    செய்து பாருங்கள்.

    ஹா ஹா ஹா முதலில் அப்படியும் கொள்ளலாம்...ஆமாம் குதிரை வாலி சாப்பிட்டதும் குதிரைத் திறன் அதிகமாகி பூஸார் ஒரே ரவுன்ட்ஸ் தான்...பூஸார் ஏற்கனவே ஓட்டத்தில் வல்லவராக்கும்!

    உங்கள் தளம் கண்டேன். தொடர்கிறோம். நன்றாக இருக்கிறது உங்கள் தளம்.

    மிக்க நன்றி மகேஷ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  40. மிக அருமையா வந்திருக்கு கீதா கேக்.. என்னிடம் எல்லாமே இருக்கு.. குளூட்டன் ஃபிறீ இல்லாதது. செய்து பார்த்திடலாம் பார்ப்போம். நல்ல சொஃப்ட்டா வந்திருக்கே நம்ப முடியவில்லை.. சூப்பர் கீதா.

    ///ஹா ஹா ஹா உங்க ப்ரெஸன்ட் ஸ்ரீராம் டைரக்டரின் ரெஜிஸ்டரில் போட்டாச்சு...///
    ஓ எபியின் மூணாவது ஆசிரியருக்கு டிறெக்டர் ஆக புரொமோசனோ?:) இது எப்போ தொடக்கமாக்கும்?:) ஒருவேளை கல்யாணமாகாத தேவியைப் போய்ப் பார்த்ததிலிருந்தோ:) ஹையோ என் வாய் தேன் நேக்கு எடிரி:))..

    ///ஹா ஹா ஹா ஹா தேம்ஸ் நதிக்காரார்களுக்கு என்று தனி டைம் ஃபிக்ஸ் பண்ணி வைச்சுருக்கு..ஹா ஹா ஹா///

    நோஓஓஓஓஓ நான் மட்டும்தான் பிரசண்ட்:) அஞ்சுவுக்கு .... லேட் எனப்போடோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன் இல்லையெனில் ஒரு சுவீட் 16 அருமந்த உசிரொன்று கீதாவின் கேக் சாப்பிட்டு தேம்ஸ் கரையில் டீக்குளிச்சது எனப் பேப்பரில் வரும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))..

    பதிலளிநீக்கு
  41. கீதா கிச்சினில ஹவுஸ் ஃபுல்:) எல்லோரும் இடிச்சுக்கொண்டு நிக்கினம்:) நேக்கு இடமில்லே:)) அதுதான் இன்று ஒரு முடிவோடயேதான் கதைரைக்கு கீழாழ உருளுறேன் ஆராவது கால் உளையுது என கதிரையில் இருக்கட்டும்.. அப்போ பதம் பார்த்திடுறேன்:)) பூஸோ கொக்கோ:) ம்ஹூம்ம்ம்:)).//

    ஹா ஹா ஹா இல்லை இல்லை அங்கே பாருங்கோ மகேஷ் என்பவர் என்ன சொல்லியிருக்கார்னு...

    இடமில்லையா...உங்களை எழுப்பி வாங்கோ ஷோவுக்குனு சொல்லவே நேரம் சரியாகிப் போச்சு....ஒல்லியாக வேண்டியய்துதான் அதுக்காக இப்படியா புலியானூர் பூஸாந்தாவாகி ஞானியாகி யோகியாகி...கடைசியில் இப்படியா......ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  42. //பூஸார் ஏற்கனவே ஓட்டத்தில் வல்லவராக்கும்!//

    ஹையோ புதிய ஆட்கள் எனில் தெளிவாச் சொல்லுங்கோ கீதா என் பெருமைகளை கர்:)) 1500 மீட்டரில் 2வதா வந்தவ எனவும் மறக்காமல் ஜொள்ளிடுங்கோ:))

    பதிலளிநீக்கு
  43. நீங்கள் யோகியாகி ஞானியாகி புரண்டு புரண்டு பூஸார் சுற்றிச் சுற்றி வருகிறார்!! பூஸானந்தாவின் சிஷ்யை ஹா ஹா ஹாஅ

    கீதா

    பதிலளிநீக்கு
  44. இதென்ன இது இடையில மதராட்டியில பேசுவது கர்ர்ர்ர்ர்ர்:)).. கீதா எல்லோரையும் டமில்ல அயகாப் பேசச் சொல்லுங்கோ.. அதிராவைப்போல:))..//

    தமிழ்லதான் தெனாலி ராமன் பூஸார்....அது நான் சொல்லலையாக்கும் ஸ்ரீராம்!! ஹிஹிஹிஹி

    இங்கிலீஷ்?!!! இதைத் தமிழில் அடிப்பதற்கு நைஸ் என்றால் என்ன னைஸ் என்றால் என்ன ஹிஹிஹிஹிஹிஹி...ரெண்டுமே இங்கிலீஷ்??!!!(இது என்ன மொழி? ) தான்...அது சரி தமிழ்? டமில்? டமில் மட்டும் என்னவாம் ஹா ஹா ஹா.... அதனால நெல்லையிடம் மாட்டிக் கொண்டீர்கள் ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  45. முதல்ல ஃபீஸ் ஐ என் எக்கவுண்டில போடுங்கோ:)//

    ஹா ஹாஅ ஹா உங்க அக்கவுண்டில் நான் போடும் முன் உங்கள் டமிலை திருத்தும் உங்கள் செக் அப்புறம் அவ்வப்போது சொல்லும் நெல்லை ஸ்ரீராம் எல்லோருக்கும் முதலில் அக்கவுண்டில் வந்ததா என்று கேட்டுக்கறேன்..ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  46. மிக அருமையா வந்திருக்கு கீதா கேக்.. என்னிடம் எல்லாமே இருக்கு.. குளூட்டன் ஃபிறீ இல்லாதது. செய்து பார்த்திடலாம் பார்ப்போம். நல்ல சொஃப்ட்டா வந்திருக்கே நம்ப முடியவில்லை.. சூப்பர் கீதா.

    நன்றி நன்றி பூசாரே!!! செய்து பாருங்கோ நன்றாகவே வருகிறது.....இன்னும் இதே போன்று பைனாப்பிள் அப்சைட் டௌன் கேக்கும் க்ளூட்டன் ஃப்ரீ செய்தேன்...ஆனால் அன்று படம் எடுக்க முடியலை...அதுவும் நன்றாக வந்தது....

    ///ஹா ஹா ஹா உங்க ப்ரெஸன்ட் ஸ்ரீராம் டைரக்டரின் ரெஜிஸ்டரில் போட்டாச்சு...///
    ஓ எபியின் மூணாவது ஆசிரியருக்கு டிறெக்டர் ஆக புரொமோசனோ?:) இது எப்போ தொடக்கமாக்கும்?:) ஒருவேளை கல்யாணமாகாத தேவியைப் போய்ப் பார்த்ததிலிருந்தோ:) ஹையோ என் வாய் தேன் நேக்கு எடிரி:))..//

    ஹலோ நம்ம கிச்சன் ஷோ தொடங்கியதுமே ஸ்ரீராம் டைரக்டர் என்றுதானே சொல்லுறோம்...ரொம்ப நாளாகிடுச்சு அவர் ப்ரமோஷன் ஆகி!! இப்பத்தான் பாத்தீங்களா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  47. கீதா குதிரை வாலியைப் பச்சையா அரைச்சு அரித்து எடுத்தனீங்களோ?... எனக்கு முன்பு இது தெரியாது, பின்னர் கீசாக்கா சொல்லக் கேட்டுப் போய்ப் பார்த்தேன் தமிழ்க்கடையில் இருந்துதே.. வாங்கி வந்து வைத்திருக்கிறேன்... இன்னொன்று கப்பின் அளவை சொன்னால் இன்னும் நல்லது கீதா. அதில் போட்டிருக்குமே.//

    இதற்குப் பச்சையாகத்தான் அரைத்து எடுத்தேன். பொதுவாகச் செய்வது இப்படித்தான் ஒரே ஒரு முறை கொஞ்சம் வறுத்து எடுத்தும் பௌடர் செய்தும் செய்ததுண்டு ஆனால் நாம் எஸன்ஸ் விடுவதால் வறுப்பதற்கு அத்தனை வித்தியாசம் தெரிவதில்லை.

    குதிரை வாலி என்றில்லை, தினை சாமை வரகு பனிவரகு எதில் வேண்டுமானாலும் இப்படிச் செய்யலாம் அதிரா...எல்லாமே நன்றாக வருகிறது.

    நான் இங்கு படத்தில் காட்டியிருக்கும் கப் தான். இதற்கு முன்னான கேக் பதிவிலும் நான் பயன்படுத்தும் கப் செட் படம் போட்டிருந்தேன்..

    சரி உங்களிடம் மெஷர்மென்ட் கப் செட் இருக்குமே கண்டிப்பாக ஒரு கப், அரை கப், ஒன் பை த்ரீ கப், கால் கப் என்று...அந்த செட்டில் அரை கப் தான் நான் பயன்படுத்தியது. நான் சொல்லும் அளவுகள் இந்தக் கப்புகள்: மற்றும் இந்த செட் ஸ்பூன் அளவுகள் தான்...

    1/2 கப் - 100 ml - 4 அவுன்ஸ்.....இதுதான் நான் இதற்குப் பயன்படுத்தியது அதிரா..ஓகேயா...காட் இட்? இல்லைனா சொல்லுங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  48. ஹையோ புதிய ஆட்கள் எனில் தெளிவாச் சொல்லுங்கோ கீதா என் பெருமைகளை கர்:)) 1500 மீட்டரில் 2வதா வந்தவ எனவும் மறக்காமல் ஜொள்ளிடுங்கோ:))

    ஹா ஹா ஹா ஹா……ஆஹா நான் என்ன நினைச்சேன் என்றால் நீங்கள் அடிக்கடி தேம்ஸில் குதிப்பதும் ஒளியறதுக்கும் ஒடுவீங்களே அந்த ஓட்டம்னு நினைச்சேன் ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  49. அஆவ் !!க்ளூட்டன் ஃப்ரீயா ..அப்போ பூனை எதுக்கு முந்தி நிக்கிறாங்க .கோ பேக் கேட் :) மூவ் எனக்குதான் கீதா செஞ்சிருக்காங்க

    பதிலளிநீக்கு
  50. பார்க்க நல்லா இருக்கு எனக்கு வாசம் இங்கே வரைக்கும் வருதே !! வீட்ல தினை இருக்கு அதிலே செய்யலாமான்னு யோசிக்கறேன் .

    // குதிரைவாலி கனைத்தது!//

    ஹாஹாஆ :) அது ஒண்ணுமில்லை குண்டுப்பூனை குறுக்கே போய் டீஸ் செஞ்சிருக்கும்

    பதிலளிநீக்கு
  51. /// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா இஞ்ச பாருங்கோ அஞ்சு இடிக்கிறா:) கர்ர்:) //

    ம்க்கும் நானே வல்லாரை ஜூஸ் குடிச்சு அந்த மெலீஸ் தண்டு மாதிரி ஆகிட்டேன் நானெங்கே இடிக்கறது அப்டி இடிச்சாலும் எலும்பு குத்தும்

    பதிலளிநீக்கு
  52. // ஏஞ்சல் சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க! க்ளூட்டன் ஃப்ரீ!//

    வாவ் !! சூப்பர் கேக் வாசனை இங்கே வரைக்கும் வருது .இந்த பட்டர் வெனிலா எசென்ஸ் எல்லாம் சேர்க்கும்போதே ஒரு வாசனை வரும் .
    தாங்க்ஸ் கீதா எனக்காக ஸ்பெஷலா செஞ்சதுக்கு .இதோட கொஞ்சம் பவுடர் சேர்க்கலாம்னு தோணுது . செய்து பார்த்து சொல்றேன்

    பதிலளிநீக்கு
  53. / 1500 மீட்டரில் 2வதா வந்தவ எனவும் மறக்காமல் ஜொள்ளிடுங்கோ:)) கூடவே சொல்லுங்க ரெண்டு பேர்மட்டும் ஓடிய ஓட்டத்தில் இரண்டாவதாக வந்தேன் என்பதை நாங்கல்லாம் அவனில்லாமத்தான் கேக் செய்வோம் தெரியாவிட்டால் பார்க்க பூவையின் எண்ணங்கள் அவனில்லாமல் கேக்

    பதிலளிநீக்கு
  54. நன்றி கீதா.. நன்றி.. எல்லாமே பிரிஞ்சிடிச்சூஊஊஊஊ:)..

    என் செக் இங்கின வந்து போனாவோ?:) ஏனெனில் ஒருக்கால் பூகம்பம் வந்ததுபோல என் கதிரை ஆடிச்சுதேஎ:) நல்லவேளை மேசையை இறுக்கிப் பிடிச்சுட்டேன்ன்ன்.. ரீ தா கொஞ்சம் ஊத்துப் பட்டுப்போச்ச்ச்:))..

    அதுசரி எங்கே நெ.த?

    போறவழியில புண்ணியம் கிடைக்கும் ஏகாந்தன் அண்ணனின் கையில இருக்கும் ரிமூட்டை ஆராவது பிடுங்குங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))... ரிவி பார்த்தமா பொழுதைக் கழிச்சமா என இருக்காமல்.. ரிவி பார்த்து பிபி யை ஏத்துறார் கர்ர்ர்ர்ர்:)).. ஹார்ட் முக்கியமெல்லோ:))..

    ஊசிக்குறிப்பு:
    கீதா நான் காலையிலேயே 7000 ஸ்ரெப்ஸ் நடந்து முடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்னா வெயில் தெரியுமோ....:)).. ஆனா அஞ்சுப்பிள்ளை இன்னும் உருண்டே முடியல்ல ஹையோ ஹையோ:))...

    எனக்கு இப்போ பொங்கு ..னிச[மாத்திப் படிக்கோணும் இப்பூடித்தான் ஏகாந்தன் அண்ணன் எழுதுறார்ர்:)) அப்பத்தான் ..னிச அங்கிளின் பார்வை அதிராமேல படாதாம்ம்]]]

    பதிலளிநீக்கு
  55. ///G.M Balasubramaniam said...
    / 1500 மீட்டரில் 2வதா வந்தவ எனவும் மறக்காமல் ஜொள்ளிடுங்கோ:)) கூடவே சொல்லுங்க ரெண்டு பேர்மட்டும் ஓடிய ஓட்டத்தில் இரண்டாவதாக வந்தேன் என்பதை நாங்கல்லாம் அவனில்லாமத்தான் கேக் செய்வோம் தெரியாவிட்டால் பார்க்க பூவையின் எண்ணங்கள் அவனில்லாமல் கேக்///

    ஹா ஹா ஹா ஜி எம் பி ஐயாவாலும் பொறுக்க முடியல்ல அதிரா 1500 மீட்டரில் 2 வதா வந்தேன் என்பதை கர்ர்ர்ர்:))...

    ஜி எம் பி ஐயா/.... ஆளில்லாமலும் கேக் செய்யலாம்:) ஆனால்ல்ல் அவன்[ண்} இன்றி கேக் ஏது?:)) ஹா ஹா ஹா.. ஓ பூவையின் எண்ணத்தில் கேக்கும் போட்டிருக்கிறீங்களோ? போய்ப் பார்க்கிறேன் கொஞ்சத்தால...

    பதிலளிநீக்கு
  56. //புதிய பதிவர் என்று நினைக்கிறேன். இல்லையா? இதுதான் முதல் தடவையாக இங்கு எபி யில் பார்க்கிறன்...எபிக்கும் புதிது என்றுதான் தோன்றுகிறது. மிக்க மிக்க நன்றி இங்கு வந்து கருத்திட்டமைக்கு.

    செய்து பாருங்கள்.

    ஹா ஹா ஹா முதலில் அப்படியும் கொள்ளலாம்...ஆமாம் குதிரை வாலி சாப்பிட்டதும் குதிரைத் திறன் அதிகமாகி பூஸார் ஒரே ரவுன்ட்ஸ் தான்...பூஸார் ஏற்கனவே ஓட்டத்தில் வல்லவராக்கும்!

    உங்கள் தளம் கண்டேன். தொடர்கிறோம். நன்றாக இருக்கிறது உங்கள் தளம்.

    மிக்க நன்றி மகேஷ்.//


    ஆம். புதிய பதிவர் தான். அவ்வப்போது எபி-யை எட்டிப்பார்த்து செல்வேன். இதற்க்கு முன் ஓரிரு முறை கருத்திட்டதாகவும் நினைவு.

    என் தளத்திற்கு வருகை தந்தமைக்கும், பாராட்டிற்கு மிக்க நன்றி. உங்கள் ஆதரவையும், கருத்துகளையும் தொடர்ந்து நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  57. வாங்க ஏஞ்சல்!! வாங்க...வாசம் வந்துருச்சா...பாருங்க உங்களுக்குன்றதுனாலதான் பூசாரை டேபிள் அடில போட்டு வைச்சேன் கடைசில அவர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சத்தம் போட்டு ஒடே அதகளம் அவர் திங்க மாட்டாராம்...க்ளூட்டன் ஃப்ரீயாம்...செக் குக்குச் செஞ்சதுனு .....ஹா ஹா ஹா... அவருக்கு நாம செஞ்ச கேக் மறந்து போச்சு போல...ஆமாம் ஆமாம் இப்போ அவர் ஞானியாகிட்டார்...ஆனா பாருங்க எழுந்து சாப்ப்டிட்டுட்டு சைட்ல போடற ஆட்டத்தை....ஹா ஹா ஹா ஹா

    ஏஞ்சல் தினைல செஞ்சு பாருங்க நல்லா வரும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  58. இதோட கொஞ்சம் பவுடர் சேர்க்கலாம்னு தோணுது . செய்து பார்த்து சொல்றேன்//

    ஏஞ்சல் சீக்ரெட்...பூசார் காதுல விழாம எனக்கு மட்டும் சொல்லுங்க பவுடர் நா என்ன? ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ச்..மெதுவா...சொல்லுங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
  59. ஜி எம் பி ஸார் கருத்திற்கு நன்றி..

    கீதா

    பதிலளிநீக்கு
  60. அதிரா ஜிஎம்பி சார் சொல்லியிருப்பது ஓவன் இல்லாமல் செய்யலாம்னு சொல்லியிருப்பது குக்கரிலும் செய்யலாம் என்பது. நான் கமலா சகோதரிக்குச் சொல்லியிருக்கேன் பாருங்க அந்த மெத்தட் தான். குக்கரில் மணல் போட்டும் அதன் மீது பாத்திரம் வைத்தால் சூடு ஒரே போன்று எல்லா இடத்திலும் பரவும். அப்படியும் செய்யலாம். மணலை முதலில் ப்ரீஹீட் செய்வது போல் சூடு செய்துகொண்டு பாத்திரம் வைக்கணும். மணல் இல்லாமல் செய்வது பற்றி கமலா சகோக்குச் சொல்லியிருக்கேன்..பாருங்க அதிரா துதான்

    கீதா

    பதிலளிநீக்கு
  61. ///ஏஞ்சல் சீக்ரெட்...பூசார் காதுல விழாம எனக்கு மட்டும் சொல்லுங்க பவுடர் நா என்ன? ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ச்..மெதுவா...சொல்லுங்க..

    கீதா///

    ஹா ஹா ஹா என் காதில எதுவும் உளல்ல:)) ஹா ஹா ஹா எறும்புக்குப் போடும் பவுடர் கீதா:)) ஹையோ எல்லோரையும் கொல்லும் ஐடியாப்போல:)) பிறகு, அவ உன்ர செக்:) எல்லோ அப்போ நீயும் நட ஸ்டேசனுக்கு என என்னையும் கூட்டிட்டுப் போகப்போகினமே:)) ஹையோ வைரவா வைரவேல் கன்ஃபோம்ம் என்னைக் கப்பாத்துங்ங்ங்ங்ங்:))

    பதிலளிநீக்கு
  62. மியாவ் நான் உங்க செக் அதனால் நான் செய்றதுக்கெல்லாம் நீங்க தான் பொறுப்பு சிறப்பு கருப்பு

    பதிலளிநீக்கு
  63. @கீதா இந்த எங்கள் பிளாக் நான் almond னு எழுதற கமெண்டை ஸ்வாஹா பண்ணுது :)
    இதோட 3 டைம்ஸ் போட்டேன் பின்னூட்டம் காணோம்

    பதிலளிநீக்கு
  64. எனக்கும் கேக்கும் எட்டாம் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  65. @கீதா // /ஏஞ்சல் சீக்ரெட்...பூசார் காதுல விழாம எனக்கு மட்டும் சொல்லுங்க பவுடர் நா என்ன? ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ச்..மெதுவா...சொல்லுங்க..//

    அது almond பவுடர் :)
    பூனைக்குச்செய்யும்போது மட்டும் ஒரு கை Psyllium, பவுடர் அள்ளி விடுங்க

    பதிலளிநீக்கு
  66. போறவழியில புண்ணியம் கிடைக்கும் ஏகாந்தன் அண்ணனின் கையில இருக்கும் ரிமூட்டை ஆராவது பிடுங்குங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))... ரிவி பார்த்தமா பொழுதைக் கழிச்சமா என இருக்காமல்.. ரிவி பார்த்து பிபி யை ஏத்துறார் கர்ர்ர்ர்ர்:)).. ஹார்ட் முக்கியமெல்லோ:))..//

    ஹா ஹா அதிரா நான் சொல்ல நினைத்தது.....வாங்க வெளியில் கொஞ்சம் என்று.. ஐபிஎல் லில் இருக்கிறார் அவர். அந்தச் செய்தி பேப்பரில் வந்தது ரிவியில் இல்லை....

    //கீதா நான் காலையிலேயே 7000 ஸ்ரெப்ஸ் நடந்து முடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்னா வெயில் தெரியுமோ....:)).. ஆனா அஞ்சுப்பிள்ளை இன்னும் உருண்டே முடியல்ல ஹையோ ஹையோ:))...//

    ஹா ஹா ஹா அதிரா ஏஞ்சல் எப்பவொ ரெப்ஸ் போட்டுவிட்டு இங்கு வந்து கமென்டும் போட்டுவிட்டு சர்சுக்குப் போயாச்சு பிஸி Bee யாக்கும்!! ஹா ஹா ஹா...

    //எனக்கு இப்போ பொங்கு ..னிச[மாத்திப் படிக்கோணும் இப்பூடித்தான் ஏகாந்தன் அண்ணன் எழுதுறார்ர்:)) அப்பத்தான் ..னிச அங்கிளின் பார்வை அதிராமேல படாதாம்ம்]]]//

    அச்சச்சோ!! பார்வை படலைனா அப்போ நீங்க இனிமே பொயிங்க மாட்டீங்களா? !! ஹா ஹா ஹா நீங்க பொயிங்கலைனா தேம்ஸ்குப் போரடிச்சுப் போகும் குதிப்பதற்கு ஆளில்லைனு..

    ஏகாந்தன் அண்ணா சொல்லிருந்தாரே சனி இன்டெர்வ்யூ எல்லாம் எடுப்பார் என்று..நான் அங்க கேட்டிருக்கேன் இண்டர்வியூ எடுப்பார்/// சனி எந்தச் சேனலில் வேலை செய்கிறார்? ஜோதிட சானலிலா? இல்லை சங்கரா திருப்பதி சானலிலா? எதில் இன்டெர்வியூ எடுப்பார் அண்ணா...கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க....என்னையும் எடுப்பாரா என்று...

    அதிரா என்னை இன்டெர்வியூ எடுக்காம விட்டும் விடாமலும் இப்ப உங்களிடம் வந்துவிட்டார்... போல...உங்களை மட்டும் இன்டெர்வியூ எடுத்தால் நான் விட மாட்டேன்..அவரை...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  67. மியாவ் நான் உங்க செக் அதனால் நான் செய்றதுக்கெல்லாம் நீங்க தான் பொறுப்பு சிறப்பு கருப்பு//

    ஹா ஹா ஹா அப்படி போடுங்க ஏஞ்சல்..

    நோட்டட் த பௌடர்..நன்றி நன்றி...நட்ஸ் கூட சேர்க்கலாம் பொடித்தும் எந்தக் கேக்கிலுமே....ஓ உங்க கமென்ட் வரலியா...ஏகாந்தன் அண்னாவுக்கு நான் போட்ட கமென்ட் போகவே இலல்லை...அது வேறு ஒன்னுமில்லை இந்த பூஸாரின் 7.5 வின் வேலை ..ஹா ஹா ஹா ஹா இப்ப பாருங்க அவங்க பொயிங்குவாக ஏன்னா அவங்கள முறைக்கறவர் பொயுங்கற 7.5 ...ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  68. எனக்கும் கேக்கும் எட்டாம் பொருத்தம்.//

    ஏன் ராஜி பிடிக்காதா? இல்லை செய்ய தயக்கமா...ஈசிதான் ராஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
  69. ஆளில்லாமலும் கேக் செய்யலாம் -ஆனால்
    அவன்[ண்} இன்றி கேக் ஏது? //

    அடடா! கிச்சனில் தத்துவ மழை!

    பதிலளிநீக்கு
  70. ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன் லாண்டட் கீதா:).. மச் முடிஞ்சுதோ?:).. பாருங்கோ உங்கட கேக் ஐ விட என் “டத்துவமே”:) அவரை இங்கு அழைச்சு வந்திருக்கு.... அப்போ மீக்கு பொயிங்குதுதேன்ன்ன்ன்ன்:) நான் ..னிச:) அங்கிளைச் சொன்னேன்[ஒரு மருவாதைக்காகத்தான் அங்கிள்.. ப்ப்ப்ப்ப்பயம்மாக்கிடக்கே:))].

    பதிலளிநீக்கு
  71. குதிரைவாலியில் கேக்.
    மிகப் புதிதது. அதுவும் க்லூட்டன் ஃப்ரி.
    மிக அற்புதமாகச் செய்திருக்கிறீர்கள் கீதா.

    பார்க்கவும் நன்றாக இருந்தது .
    வெல்லம் இருப்பதால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் கீதாம்மா.

    பதிலளிநீக்கு
  72. @கீதா: ..ஏகாந்தன் அண்னாவுக்கு நான் போட்ட கமென்ட் போகவே இல்லை.அது வேறு ஒன்னுமில்லை இந்த பூஸாரின் 7.5 வின் வேலை ..//

    ஏஞ்சலின் கமெண்ட் ஸ்வாஹா என்கிறார். நீங்கள் 7.5-ன் வேலை என்கிறீர்கள். தெய்வங்களுக்கு விண்ணுலகில் இப்போதெல்லாம் வேலையே இல்லையோ !
    (அங்கேயும் எழுதியிருக்கிறேன் பதில்)

    பதிலளிநீக்கு
  73. கஷ்டப்பட்டு செய்தவரை யாரும் பொறுப்பாகப் புகழ்வதில்லை.
    நான் செய்கிறேன்: டேபிளுக்குக்கீழே அங்கப்பிரதர்ஷனம் ‘செம’ !

    பதிலளிநீக்கு
  74. ///Angel said...

    அது almond பவுடர் :)
    பூனைக்குச்செய்யும்போது மட்டும் ஒரு கை Psyllium, பவுடர் அள்ளி விடுங்க//

    நோஓஓஓஓஓ நேக்கு உசிரு முக்கியம்ம்ம்:)) நான் செக்கை மாத்தப்போறேன்ன் ஏதோ ஜதி நடக்குதூஊஊஊ:))..

    ///Angel said...
    மியாவ் நான் உங்க செக் அதனால் நான் செய்றதுக்கெல்லாம் நீங்க தான் பொறுப்பு சிறப்பு கருப்பு///

    இதென்ன இது காத்துக் கருப்பு என சிம்பிளா ஜொள்ளிட்டா கர்ர்ர்:)).. நீங்க புழுப்பூச்சி எல்லாம் பிடிச்சு வருவீங்க வோக் போறேன் எனச் சொல்லி:)) பிறகு பத்துப் பூச்சியைக் காணம் 12 புழுவைக் காணம் என என்னையெல்லோ தூக்கி உள்ளே போடப்போகினம் ஹையோ நானில்ல நானில்ல.. மீ ஞானியாகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))..

    பதிலளிநீக்கு
  75. ///அதிரா என்னை இன்டெர்வியூ எடுக்காம விட்டும் விடாமலும் இப்ப உங்களிடம் வந்துவிட்டார்... போல...உங்களை மட்டும் இன்டெர்வியூ எடுத்தால் நான் விட மாட்டேன்..அவரை...ஹா ஹா ஹா

    கீதா///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா அது மீக்கு மட்டும்தேன் இப்போ பொயிங்கு ...னிச:) நடக்குதூஊஊ அதனால என்னைத்தேன் இட்டவியூ எடுக்கப்போறார் ..னிச பகவான்:)) ஹையோ சத்து இருங்கோ பியூட்டிப் பாலருக்குப் போயிட்டு வந்திடுறேன்ன்ன்ன்:)) தேவலோகம் எல்லாம் பார்க்கப்போகினம் என் இண்டவியூவை:)) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
  76. நடுநடுவே என் தலை உருட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும் சரியாக பதில் சொல்ல முடியாத நிலை. இந்நிலை வரும் 23 ஆம் தேதி வரை நீடிக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு
  77. இந்நிலை வரும் 23 ஆம் தேதி வரை நீடிக்கக் கூடும்.//

    வானிலை அறிவிப்பும் வந்துவிட்டதா எபி-யில்!

    பதிலளிநீக்கு
  78. // வானிலை அறிவிப்பும் வந்துவிட்டதா எபி-யில்!//

    வானிலை அறிவிப்பு இல்லை ஸார்... என் நிலை அறிவிப்பு... தணிக்கை!

    பதிலளிநீக்கு
  79. நான் வர முடியவில்லை. உறவினர் வீடு போய் விட்டேன். கேக் இருக்குதா காலி ஆகி விட்டதா?
    சுவையான கேக் செய்யும் முறை சொன்ன விதம் அருமை.
    மருமகள் வித விதமாய் கேக் செய்வாள் , அவளிடம் இந்த குதிரைவாலி கேக் செய்வதை சொல்கிறேன்.
    அதிரா, ஏஞ்சல் இருவரும் வந்து உங்களுடன் உரையாடியது அருமை.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  80. நா ஊறும் கேக் அருமை பார்க்க பார்க்க சாப்பிட தோன்றுகிறது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  81. வல்லிம்மா மிக்க நன்றி கருத்திற்கு, வாழ்த்துகளுக்கு...நன்றாக இருக்க்கும் வல்லிம்மா..

    நேற்று கொஞ்சம் சுறு சுறுப்பாக இருந்த தோழி கணினி டயர்டாகிப் படுத்துவிட்டாள். அப்புறம் அவள் எழுந்துருக்கவில்லை. இதோ இப்போது இன்றைய காலை கொஞ்சம் பரவாயில்லை அவளுக்கு அதான் இப்பதான் உங்க கமென்ட் பார்த்து பதில்..ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  82. நான் வர முடியவில்லை. உறவினர் வீடு போய் விட்டேன். கேக் இருக்குதா காலி ஆகி விட்டதா?//

    ஹா ஹா ஹா வாங்க கோமதிக்கா....எடுத்து வைத்திருக்கிறோம். எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கும் கீதாக்காவுக்கும். கீதாக்காவைக் காணலை. லேட்டாக வருபவர்களுக்கும் எடுத்து வைக்கப்படும்.

    மருமகள் வித விதமாய் கேக் செய்வாள் , அவளிடம் இந்த குதிரைவாலி கேக் செய்வதை சொல்கிறேன்.//

    மிக்க நன்றி கோமதிக்கா. அவர்களும் விதவிதமாகச் செய்வார்களா சூப்பர்...நீங்களும் அவரின் ரெசிப்பி முடிந்தால் போடலாமே அக்கா..

    அதிரா, ஏஞ்சல் இருவரும் வந்து உங்களுடன் உரையாடியது அருமை.//

    ஆமாம் கோமதிக்கா ரொம்ப நாள் கழித்து உரையாடல்...

    மிக்க் நன்றி அக்கா கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  83. மிக்க நன்றி அசோகன் குப்புசாமி சகோ கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  84. அடடா! கிச்சனில் தத்துவ மழை!//

    ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா கிச்சனில்தான் நிறைய தத்த்வங்கள் பிறக்குது!!

    தெய்வங்களுக்கு விண்ணுலகில் இப்போதெல்லாம் வேலையே இல்லையோ !//

    ஹா ஹா ஹா அவை தேம்ஸில் மாட்டிக் கொண்டுவிட்டன..அவர்களுக்கும் 7.5 போல பாவம்....அல்லல் படுகிறார்கள் ..தெரியாதா அண்ணா ஹா ஹா ஹா

    அங்கேயும் எழுதியிருக்கிறேன் பதில்)// ஹை ஜாலி... அப்ப கமென்ட் 7.5 ஐயும் மீறி போயிடுச்சு!! ஹா ஹா ஹா

    கஷ்டப்பட்டு செய்தவரை யாரும் பொறுப்பாகப் புகழ்வதில்லை.
    நான் செய்கிறேன்..டேபிளுக்குக்கீழே அங்கப்பிரதர்ஷனம் ‘செம’ !// ஹா ஹா ஹா ஹா அது என்னனு தெரியுமா கேக் அவங்க செக்குக்கு ஏத்தா மாதிரி செஞ்சுட்டேனாம்....அதான் அப்படி ஒரு சுற்றல் இப்பவே மீ சாப்பிடறா மாதிரினு சொல்லி அப்படியே 7.5 க்கும் சேர்த்து அங்கப் பிரதஷனம் 2 இன் ஒன்....அதிராவா கொக்கா அப்படிமபாங்க...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  85. அதிரா நீங்க ப்யூட்டி பார்லர் போறது எல்லாம் சரிதான் அவங்க போகாமலேயே அழகுனு சொல்லி உங்க ப்ரோக்ராமை பார்க்காம போயிடுவாங்க ஹா ஹா அஹ்ஹ்ஹாஹஹ...பட்டி மன்றம் எல்லாம் வந்துரப் போகுது....ப்யூட்டிபார்லர் போவதால் பூலோகத்து மங்கையர் அழகா இல்லை போகாத தேவலோகத்து மங்கையர் அழகானு...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  86. ஓ! ஸ்ரீராம் பிஸியா அதான் சைலன்ட்!!! புரியுது சரி சரி உங்களைச் சுத்தி புயல் மையம் கொண்டிருக்கு போல...நல்லபடியாகக் க்ரையைக் கடந்துவிடட்டும்....!!

    கீதா

    பதிலளிநீக்கு
  87. சூப்பர் கீதாக்கா..


    அருமையான ரெசிப்பி...விரைவில் செய்து பார்த்திடலாம்...

    பதிலளிநீக்கு
  88. கேக் அழகாகவும்,அருமையாகவும் வந்திருக்கு. பின்னும் விசேஷம் சிறுதானியவகைகள் மற்றவைகளிலும் செய்யலாமென்பது. என் பேத்திகள் எல்லாம் கேக் செய்கிரார்கள். அவர்களுக்குச் சொல்ல வேணும். கூடவே சிறுதானியத்தையும் கையில் கொடுத்து அறிமுகம் செய்யணும். என்ன அழகாக எழுதுகிறாய். ஸந்தோஷமாக இருக்கு. நான் லேட். அன்புடன்

    பதிலளிநீக்கு
  89. ரொம்ப லேட்டா வரும் நிலைமை.

    கேக் செய்முறையும் படங்களும் வெகு அருமை. இதில் டூட்டி ஃப்ரூட்ஸ் எக்கச்சக்கம் போட்டால் ஒருவேளை எனக்குப் பிடிக்கலாம். மற்றபடி நான் கேக் ரசிகனில்லை.

    இருந்தாலும், தில்லையகத்து கீதா ரங்கன்.... உங்க சமையல் திறமை வியக்கவைக்கிறது. பாராட்டுகள்.... அ க் கா... (:-) )

    பதிலளிநீக்கு
  90. அனு மிக்க நன்றி பா செஞ்சு பார்த்துடுங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  91. காமாட்சிமா மிக்க நன்றி மா...அன்பான உங்கள் வரிகளுக்கு. சொல்லுங்கள் மா உங்கள் பேத்திகளுக்கு நன்றாகச் செய்யலாம் சிறு தானியங்களில்...இனிப்பு போன்று சர்க்கரைவியாதிக்காரர்களுக்கு (குறிப்பா நான் தான் ஹிஹிஹிஹி..) சாப்பிடும் வகையில் உப்பு கேக்கும் செய்திருக்கேன். சமீபத்தில் செய்யலை. செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதையும் செய்து இங்கு எபியில் போட்டுடலாம்.

    //என்ன அழகாக "எழுதுகிறாய்". ஸந்தோஷமாக இருக்கு.// அம்மா எல்லோரும் பெரியவர்கள் கூட என்னை நீங்கள் என்று சொல்லும் போது நீங்கள் என்னை இப்படிச் சொல்லியது எனக்கு அப்படியே நெகிழ்ந்துவிட்டேன் அம்மா சத்தியமாய். உரிமையுடன் ஆன வரிகள். என் கண்களில் நீர் காமாட்சிம்மா. இப்படியே எப்போதும் சொல்லுங்கம்மா...என்னை நீ என்று...
    இங்கு வரும் அனைவரும் அன்பைப் பொழிகிறார்கள்! பல சமயங்களில் திக்குமுக்காடிப் போகிறேன் காமாட்சிம்மா...அதுவும் இன்று உங்கள் வரிகள் கண்டு ரொம்பவே!! மிக்க மிக்க நன்றிம்மா....மிக்க நன்றி...

    கீதா

    பதிலளிநீக்கு
  92. கேக் செய்முறையும் படங்களும் வெகு அருமை. இதில் டூட்டி ஃப்ரூட்ஸ் எக்கச்சக்கம் போட்டால் ஒருவேளை எனக்குப் பிடிக்கலாம். மற்றபடி நான் கேக் ரசிகனில்லை.

    ஓ போடலாமே!! ட்யூட்டி ஃப்ரூட்டி நிறைய போடலாம் சூப்பரா இருக்கும். ட்ரை ஃப்ரூட்ஸும் போடலாம் அதுவும் நல்லாருக்கும். அன்று எதுவும் இல்லை அதனால் போடலை...

    இருந்தாலும், தில்லையகத்து கீதா ரங்கன்.... உங்க சமையல் திறமை வியக்கவைக்கிறது. பாராட்டுகள்.... அ க் கா... (:-) )//

    ஹா ஹா ஹா ஹா......ஏதோ ஒரு மாசம் பின்னாடி பொறந்துட்டதுக்காக இப்படியா...இருங்க தம்பி இருங்க....நேரம் வரும்லா...அப்ப பாத்துக்கிடறேன்..

    சரி சரி அதுக்காக இந்த அக்காவை தம்பியா லட்சனமா பாராட்டினதுக்கு நன்றியோ நன்றி...கரீக்டுதான் இதுதான் தம்பிக்கான அழகு!!! ஆனா "சமையல் திறமை" நு சொல்றதுதான் கொஞ்சம் இடிக்குது...அது தம்பியா லட்சனமா அக்கா கை சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லணுமாக்கும்...அப்ப அக்கா சாயம் வெளுக்கும் ஹா ஹா ஹா ஹா..படத்தைப் பார்த்துச் சொல்லப்படாது. கேட்டீகளா தம்பி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  93. உங்கள் sportive பதிலுக்கு பாராட்டுகள் கீதா ரங்கன். நீங்க கொடுக்கற ரெசிப்பிபடி செய்தால் நல்லா ருசியா வருது. உங்க சமையல் படங்களும் யம்மியா இருக்கு.

    பார்த்துக்கிடறேன்- பார்த்துக்கிடுதேன். கேட்டீகளா-கேட்டீயளா அதுபோல் வியக்கேன் என்பதுதான் ஸ்லாங்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!