திங்கள், 28 மே, 2018

"திங்க"க்கிழமை : சாமை பாயசம்..- துரை செல்வராஜூ ரெஸிப்பி
சாமை பாயசம்..
துரை செல்வராஜூ 
==============


அக்கா... அக்காவ்!...

அடடே.. தாமரை!.. வாம்மா!.. வா!...

என்னக்கா.. ஏலக்காய் வாசனை வருது!?...

ஆமம்மா!.. அத்தான் சாமைப் பாயசம் செய்யச் சொன்னாங்க!...
நான் செஞ்சிக்கிட்டுருக்கேன்!..

என்னது.. சாமையா?...

ஆமாம்.. சாமை தான்!...

அதை அவிச்சு குதிரைக்கில்ல கொடுப்பாங்க!...

குதிரைக்குக் கொடுக்கிறது கொள்ளு!... இது சாமை!..
சிறு தானிய வரிசையில சிறப்பானது..ம்மா இது!..

அப்படி என்ன சிறப்பு!?... அரிசி, கோதுமைய விட!?...

நம்ம ஊரு அரிசி, தினை, சாமை, வரகு, கேழ்வரகு இதுங்களோட பெருமைக்கெல்லாம்
கோதுமை ஈடு கொடுக்க முடியுமா!...

என்னக்கா... இப்படிச் சொல்றீங்க!...

நிஜந்தான்....டா செல்லம்!...
சாமையை தொடர்ந்து சாப்பிட்டா..நீரிழிவு வராம செய்றதோட -
வந்துட்டா ஒரு கட்டுக்குள்ள வைக்குது....

அரிசியை விடவும் அதிகமா நார்ச்சத்து இருக்கிறதால
ஜீரண சக்தி பெருகுது... வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாது...

எல்லாத்தையும் விட வேறொரு நல்லதும் செய்யுது!...

அது என்னக்கா!...

அதை அப்புறம் சொல்றேன்.. இப்போ சாமை பாயசம் சாப்பிட்டுப் பாரு!...

அக்கா... வாசமே ஆளத் தூக்குதே!.. எப்படிக்கா.. செஞ்சீங்க!?..
விவரமா சொல்லுங்க எழுதிக்கிறேன்!...

சாமை 2 கப் (150 கிராம்), சேமியா 1 கப் (75 கிராம்) - இது பங்களாதேஷ் சேமியா..
சேமியாவுக்கு அங்கே ஷெமாய்..ன்னு பேரு!..
இனிப்பு இல்லாத சோன்பப்டி மாதிரி இருக்கும்!..

பங்களா தேஷ் சேமியாவா!?.. அதெப்படி கிடைச்சது?..

அண்ணாச்சி ஊர்ல இருந்து வந்தப்போ கொடுத்தாங்க!.. சரி.. நீ எழுதிக்க!..

வெல்லம் 150 கிராம்,
தண்ணீர் அரை லிட்டர்... தேங்காய்ப் பால் 100 மில்லி,
வெண்ணெய் 10 கிராம், கொஞ்சம் ஏலக்காய், திராட்சை,
பாதாம் பருப்பு இல்லேன்னா முந்திரி...அவ்வளவு தானா அக்கா!...

ஆமாம் தாமரை... இப்போ எப்படி செய்றது...ன்னு பார்ப்போமா!..

ஓ!..

சாமையை ரெண்டு தரம் அலசி இந்த மாதிரி வடிகட்டியால வடிகட்டி
அஞ்சு நிமிஷம் ஊற விடணும்....
வடிகட்டி எதுக்கு அக்கா!..

கையால கழுவி எடுக்கிறப்ப வழிஞ்சு ஓடிப்போகும்.. கைக்குப் பிடிபடாது..

ம்ம்.. சொல்லுங்க!..

இந்த அஞ்சு நிமிஷத்துக்குள்ள
வெல்லத்தை கொஞ்சம் தூளா உடைச்சுக்கணும்..
ஏலக்காயை நசுக்கிக்கணும்...

இப்போ தண்ணி நல்லா தழைச்சிருக்கும்... சாமையை சிந்தாம சிதறாம கொதிக்கிற
தண்ணியில போட்டு ஒரு தரம் கிளறி விட்டுட்டு
இன்னொரு அடுப்பில பத்து கிராம் வெண்ணெயைப் போட்டு
அது உருகுனதும் பாதாம் திராட்சையைப் போட்டு வதக்கிக்கணும்...

இப்போ சாமை கொதிச்சு வரும்.. இந்த நேரத்தில சேமியாவைப் போட்டு
தேங்காய்ப்பாலை ஊற்றி மறுபடியும் ஒரு தரம் கிளறி விடணும்...

அடிக்கடி கிளற வேண்டாமா அக்கா!...

தேவையில்லை... தண்ணி தாராளமா இல்லேன்னா
இன்னொரு குவளை சுடு தண்ணி ஊத்திக்கலாம்!...

தளதள...ன்னு கொதித்து வர்றப்போ - சாமை வெந்திருக்கும்..
கடைசியா ஏலக்காய் வதக்கி வைச்சிருக்கிற பாதாம் திராட்சை
இதெல்லாத்தையும் போட்டு கிளறி பாத்திரத்தை மூடி
அடுப்பை அணைத்து விட்டால் முடிந்தது வேலை...

பத்து நிமிஷம் கழித்து அழகா எடுத்து சாப்பிட வேண்டியது தான்!...

அக்கா... அக்கா!.. எவ்வளவு சுலபமா இருக்கு..
இத்தனை நாள் தெரியாம போச்சே!..

அதுசரி... சாமையைப் பத்தி என்னமோ
கடைசியா சொல்றேன்னு சொன்னீங்களே!.. என்ன அது?..

அதுவா!... வாலிபப் பசங்களுக்கு தாது விருத்தியாகும்..
பொண்ணுங்களுக்கு இரத்த சோகை வராது.. கர்ப்பப்பை பலப்படும்!...

இதையெல்லாம் மறந்ததால தான்
செயற்கை கருவூட்டல் மையம் - எங்கே இருக்கு..ன்னு கிளம்பியிருக்காங்க!..

இவ்வளவும் உங்களுக்கு எப்படிக்கா தெரியும்!?..

எல்லாம் உங்க அத்தான் கத்துக் கொடுத்தது தான்!...

நல்ல அத்தான்... நல்ல அக்கா!...

சரி.. சாமை பாயசம் எப்படி இருந்தது!.. அதைச் சொல்லலையே!...

இதைத்தான் Blog ல போடப் போறீங்களே..
அவங்க சொல்லுவாங்க!..
நான் வரட்டுமா அக்கா!..

சரிம்மா.. கவனமா போய்ட்டு வா!...
ஃஃஃ

அன்பின் நண்பர்களே...

இப்போது முதல் தித்திக்கத் தித்திக்க
திங்கட்பதிவுகளில் நானும் உங்களுடன்!..

ஜாம்பவான்களுக்கு மத்தியில் அல்ல..
சும்மா ஒரு ஓரத்தில்!..

அன்பின் ஸ்ரீராம் அவர்களுடைய அழைப்பின் பேரில் -
சாமைப் பாயசம் கொண்டு வந்திருக்கின்றேன்...

அவ்வப்போது என்னளவிற்கு நானாக செய்வது இது...

மேலே குறித்த பொருட்களுடன்
தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக -
Instant Coconut Milk Powder 100 கிராம் பயன்படுத்தி உள்ளேன்..
தேங்காய் வாங்கி - பால் பிழிந்தெடுப்பதெல்லாம் சற்றே சிரமம்...

சாமை சரியாக ஊறவில்லை என்றால்
மேலும் தண்ணீர் வாங்கும்..
கவனத்தில் கொள்ளவும்...

பாத்திரத்தில் பாயசம் கொதிக்கும் நிலையை
எடுக்க மறந்து போனேன்...

சமையலறையில் பொதுவான அடுப்பு..
சற்றே கசடுகளுடன் இருக்கும்...
தவறாகக் கொள்ள வேண்டாம்..

நேரம் கிடைக்கும்போது
சாமை பாயசம் செய்து பாருங்கள்...

நமக்கு நல்லது செய்யும் தானியம் சாமை...

சாமையை வாழ வைப்போம்..
நம்மையும் சாமை வாழவைக்கும்..

உங்கள் கருத்துரைகளை எதிர்நோக்கி
என்றென்றும் அன்புடன்...

123 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஆஹா!! கீதாக்கா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  நான் ஓடோடி வந்தா நீங்க முந்திக்கிட்டீங்க!!! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 3. யாரும் வரலையே! அப்புறமா நான் தான் லேட்டுனு ஆயிடும். :)

  பதிலளிநீக்கு
 4. அன்பின் ஸ்ரீராம் கீதாR/கீதாS மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 5. ஹாஹாஹாஹா! நாங்க யாரு! விடுவோமா? :))))))

  பதிலளிநீக்கு
 6. ஹை துரை அண்ணாவோட ரெசிப்பி!!! கலக்கல் போல!! ஆரோக்கிய சமையலாத்தான் இருக்கும் போல இருக்கு!! ஜூப்பர்!! வரேன் வரேன்...கொஞ்சம் எடுத்து வைங்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. ஆகா...

  சாமை பாயசத்துக்கு இவ்ளோ அடிதடியா!...

  பதிலளிநீக்கு
 8. காலை வணக்கம் கீதா ரெங்கன்.

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

  பதிலளிநீக்கு
 10. ஹை! சாமைப்பாயாஸம்...துரை அண்ணா குதிரைவாலி, தினை, எல்லா சிறு தானிய பாயாசமும் சூப்பரா இருக்கும்...முழு குறிப்பும் படிச்சுட்டு வாரேன்...செம டேஸ்டியா இருக்கு துரை அண்ணா!! கொஞ்சம் எடுத்துக் கொண்டுவிட்டேன்...மீதி இருந்தா வைச்சுருங்க....வரேன்...கண்ணழகியும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கேக்கறா ஆனா அவளுக்குக் கொடுக்கக் கூடாதே!!

  கீதா

  பதிலளிநீக்கு
 11. சமையல் குறிப்பிலும் கலக்க வந்திருக்கும் துரை ஸார் இனிப்புடன் ஆரம்பிக்கிறார்.. இனி அவரின் அதிரடியும் தொடரும்...

  பதிலளிநீக்கு
 12. ஹாஹாஹாஹா! நாங்க யாரு! விடுவோமா? :))))))//

  அதானே கீதாக்கா குயந்தையா கொக்கா!!! ஹா ஹா ஹா ஹா

  துரை அண்ணா ஆமா இன்னிக்கு ஒரே அடிதடிதான் பாருங்க..பந்திக்கு முந்திக்கறதாத்தான் இருக்கும் இங்கு நிறைய ஸ்வீட் விரும்பிகள் இருக்காங்களே!!! நெல்லை வந்தா....ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 13. இன்னைக்கு வைகாசி விசாகம்...
  திருமுருகன் திரு அவதாரம் செய்த நாள்..

  சாமை பாயசம் அருந்திவிட்டு
  பொடிநடையாக முருக தரிசனம்!..

  உடம்புக்கு நல்லது...
  மனதிற்கும் நல்லது...

  பதிலளிநீக்கு
 14. முருக தரிசனம் முடிந்தது. மீண்டும் பிரசாதம் போல பாயாசம் சுவைக்க, ஆயாசமில்லாமல் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து சீனா போகணும்!

  பதிலளிநீக்கு
 15. //தளதள...ன்னு கொதித்து வர்றப்போ - சாமை வெந்திருக்கும்..
  கடைசியா ஏலக்காய் வதக்கி வைச்சிருக்கிற பாதாம் திராட்சை
  இதெல்லாத்தையும் போட்டு கிளறி பாத்திரத்தை மூடி
  அடுப்பை அணைத்து விட்டால் முடிந்தது வேலை...// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வெல்லம் போடவே இல்லை. எனக்குத் தித்திப்பு நிறைய வேணுமே! வெல்லம் சேர்த்துக் கொடுங்க! இல்லைனா சாப்பிட மாட்டேன்! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! மீ குழந்தை, பிறந்து 5 நாளாகுது. தித்திப்பாக் கொடுக்க வேண்டாமோ! :))))))))

  பதிலளிநீக்கு
 16. அருமையான காலை வணக்கம் அனைவருக்கும்.
  சாமைப் பாயசம் கேட்கவே இனிக்கிறது. அதுவும் அண்ணாச்சியின் மனைவி சொல்கிறார் என்றால் கேட்கத்தான் வேண்டும்.
  சர்க்கரை நோய்க்குத் தடை போடுமா .மிக நல்ல செய்தி.
  செய்து சொல்லி இருக்கும் விளக்கம் மனசுக்கு வெகு இதம்.
  இது வரை சாப்பிட்டதில்லை.
  இங்கே கிடைத்தால் வாங்கி செய்கிறேன்.
  சாமையில் உப்பு பலகாரம் செய்யலாம என்று பார்க்கணும். மிக மிக நன்றி துரை செல்வராஜு. முதல் சமையல் வருகைக்கு வாழ்த்துகள். மிக நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 17. படங்கள் எல்லாம் மிக அருமையா எடுக்கறீங்க/ நல்லா வந்திருக்கு!

  பதிலளிநீக்கு
 18. சாமையில் கிச்சடி, அரிசி உப்புமா மாதிரி, பாசிப்பருப்புச் சேர்த்து பொங்கல், எலுமிச்சை சாமை, புளிக்காய்ச்சல் கலந்த சாமைனு எல்லாம் பண்ணலாம் ரேவதி! அதோடு சாமையோடு கொஞ்சம் புழுங்கலரிசி அல்லது பச்சரிசி கலந்து உளுந்து வெந்தயம் போட்டு ஊற வைச்சு அரைச்சு தோசை வார்க்கலாம். குழி ஆப்பம் பண்ணலாம். அடை செய்யலாம். நான் எல்லா சிறு தானியங்களிலும் செய்து பார்த்திருக்கேன். நன்றாகவே இருக்கு. கம்பு என்றால் மட்டும் எட்டு மணி நேரம் ஊற வைக்கணும்.

  பதிலளிநீக்கு
 19. வெள்ளைச் சோளமும் ஊறணும். :))))

  பதிலளிநீக்கு
 20. காலை வணக்கம் 🙏

  திங்க கிழமையில் துரை செல்வராஜூ அவர்களது கைவண்ணத்தில் சாமை பாயசம். படிக்கும்போதே சுவை நாவில்..,.

  பதிலளிநீக்கு
 21. வைகாசி விசாகத்திற்கு அருமையான சாமை பாயசம்.
  செய்முறை சொன்னவிதம் அருமை.
  சமையல் குறிப்புகள் கொடுப்பதிலும் திறமை .
  வாழ்க வளமுடன்.
  வைகாசி விசாகம் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. அன்பின் ஜி
  பாயாசத்தின் பலனை விவரித்தது அருமை.

  உணவின் அருமை அடுத்த தலைமுறைக்கு அறியாது போகும்.

  பதிலளிநீக்கு
 23. /// வெல்லம் போடவே இல்லை...
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... ///

  /// கீதா S....///

  அக்கா அப்பவே சேமியாவோட சேர்த்து வெல்லம் போட்டுட்டாங்க...

  அவங்களோட கைப்பக்குவத்தைப் பார்த்துக்கிட்டே இருந்தேனா....

  ஜொல்ல மறந்துட்டேன்....

  அம்பிகாபதி பாடுன பாட்டை அவசரகுடுக்கை அமராவதி தப்பா சொன்ன மாதிரி...

  இருந்தாலும் -
  நக்கீரரோட இருக்கை காலியாக இல்லை..
  சரியாத்தான் பொறுப்பை ஒப்படைச்சிருக்கார்... மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 24. //இருந்தாலும் -
  நக்கீரரோட இருக்கை காலியாக இல்லை..
  சரியாத்தான் பொறுப்பை ஒப்படைச்சிருக்கார்... மகிழ்ச்சி.. நன்றி..// அதானே! வெல்லம் இல்லைனா எப்படிச் சாப்பிடறதாம்? :) புரிதலுக்கு நன்றி துரை சார். _/\_

  பதிலளிநீக்கு
 25. காலை வணக்கம். ஹெல்தி ரெசிபி.. வருகிறேன்

  பதிலளிநீக்கு
 26. சாமையில் கிச்சடி, அரிசி உப்புமா மாதிரி, பாசிப்பருப்புச் சேர்த்து பொங்கல், எலுமிச்சை சாமை, புளிக்காய்ச்சல் கலந்த சாமைனு எல்லாம் பண்ணலாம் ரேவதி! அதோடு சாமையோடு கொஞ்சம் புழுங்கலரிசி அல்லது பச்சரிசி கலந்து உளுந்து வெந்தயம் போட்டு ஊற வைச்சு அரைச்சு தோசை வார்க்கலாம். குழி ஆப்பம் பண்ணலாம். அடை செய்யலாம். நான் எல்லா சிறு தானியங்களிலும் செய்து பார்த்திருக்கேன். நன்றாகவே இருக்கு. கம்பு என்றால் மட்டும் எட்டு மணி நேரம் ஊற வைக்கணும்.//

  அதே அதே கீதாக்காவை டிட்டோ செய்யறேன்....இந்த கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
 27. வைகாசி விசாகப் பாயாசம்!!! அப்படித்தானே துரை அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 28. நான் இன்னும் க்ரான்ட் கென்யோன் போகலை...தேம்ஸ்லருந்து இன்னும் டிக்கெட் கிடைகலை அமெரிக்காவுக்கு ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 29. கீதாக்கா ஒரு வேளை இப்பல்லாம் காபி தனியா சர்க்கரை தனியா வைக்கிறாங்கல்லியா அது போல வெல்லப் பாகு (பாகு நாட் வெல்லம் கரைசல்!!) வைச்சு தனியா வைச்சுட்டு அவங்கவங்க தித்திப்புக்கேற்ப வெந்து, பருப்பு திராட்சை நெய்யோடு சேர்ந்து அலங்காரமா ஒய்யாரமா இருக்கற சாமைல கலந்து சாப்பிட்டுக்கோங்கனு இருக்கும்...!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 30. வைகாசி விசாகப் பாயாசமா!....

  // கீதாR //

  தற்செயலாக இப்படி அமைந்து விட்டது...

  பதிலளிநீக்கு
 31. இதுவரை அறியாதது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 32. துரை அண்ணா சூப்பர்!!படங்கள் விள்க்கங்கள்!!!

  இப்படி நீங்கள் ச்ல்லியிருப்பது போல் தேங்காய்ப்பால் சேர்த்து கேரளத்து ஸ்டைலில் செய்வதுண்டு. ..ஆனால் சேமியா சேர்த்ததில்லை...தனியாகவே செய்ததுண்டு. தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டதில்லை. மூன்றாம் பாலில் சாமையை (அல்லது சிறுதானியம் எதுவானாலும்) வேகவைத்து அதிலேயே வெல்லக் கரைசல் சேர்த்து நன்றாகக் கொதித்துப் பச்சை வாசனை போனதும் கொதிக்க வைத்து பாகு வாசனை போல வந்ததும் இரண்டாம் பால் கலந்து லைட்டாகக் கொதிக்கத் தொடங்கியதும் இறக்கி வைத்து ஒரு 5 நிமிடம் கழித்து முதல் பாலைச் சேர்த்து...அலங்காரம் பண்ணி...

  ..இன்னொரு மெத்தட் என்னனா சாமையை (சிறு தானியம் எதுவானாலும்) லைட்டா வறுத்துவிட்டு பாலில் வேக வைத்து எடுத்துக் கொண்டு, வெல்லம் தனியாகக் கரையவிட்டு வடிகட்டிப் பாகு போல நன்றாகக் கொதிக்க வைத்துக் கடைசியில் பாலில் வெந்த சாமையுடன் கலந்து என்று....இல்லை என்றால் சாமை வெந்ததும் வெல்லக் கரைசல் விட்டு கொதித்து பாஉ வாசனை வந்ததும் இறக்கி வைத்து கொஞ்சம் நன்றாகக் கொதிக்க வைத்து கொஞ்சம் கெட்டியான பாலையோ அல்லது மில்க் மெய்டையோ சேர்த்தால் அதுவும் நன்றாக இருக்கும்....

  தேங்காய்ப்பால், பால் மில்க்மெய்ட் எதுவும் சேர்க்காமல் செய்யும் பாயாசமும் சுவையா இருக்கும். சிறு தானியத்துடன் கொஞ்சம்பாசிப்பருப்பை வறுத்துப்போட்டுச் செய்தாலும் சுவை நன்றாக இருக்கும். இப்படி நம் கற்பனைக்கேற்ப புகுந்து விளையாட வேண்டியதுதான்...

  உங்கள் முறையையும் நோட் செய்து கொண்டேண் அண்ணா. அடுத்த முறை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் போது செய்துட வேண்டியதுதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 33. வைகாசி விசாகப் பாயாசமா!....

  // கீதாR //

  தற்செயலாக இப்படி அமைந்து விட்டது...//

  சூப்பரோ சூப்பர் அண்ணா! தற்செயலாக அமைந்ததும் நல்லதுதானே!! நாங்கள் எல்லாம் சுவைக்க முடிந்ததே. நேற்று இரவு முருகன் வந்தார் வீட்டிற்கு!!

  கீதா

  பதிலளிநீக்கு
 34. தேங்காய்ப்பால் சேர்த்து கேரளத்து ஸ்டைலில்....

  // கீதா //

  சமையல் என்பதே பெரும் கடல்...

  அவரவர் கைப்பக்குவம்...

  தேங்காய்ப்பால் சேர்ப்பது வெல்லப்பாகு சேர்ப்பது என சிறப்பான செய்முறை தந்து விட்டீர்கள்..

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 35. துரை செல்வராஜு சார்... சாமைப் பாயசம் பிரமாதம். அவசரத்துல வெல்லத்தைச் சேர்க்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். பாகிஸ்தானி சேமியா இல்லாம இன்னும் நல்லா இருக்கும்.

  எனக்கு எல்லா பாயச வெரைட்டியும் செய்து எங்கள் பிளாக்குக்கு அனுப்பணும்னு ஆரம்பித்தேன். பாதியிலேயே நிற்கிறது.

  பதிலளிநீக்கு
 36. எல்லா பாயச வெரைட்டியும் செய்து...

  // நெ.த.//

  தொடரட்டும் தங்கள் பணி...
  வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 37. சாமைப்பாயஸம் படங்களுடன் ருசியாக வந்திருக்கிறது. எல்லாம் ஸரி. இந்த சிறுதானியங்களுக்கெல்லாம் இங்லீஷ் பெயர் போட்டு விடுங்கள். சாமை,குதிரைவாலி,தினை,வரகு இவைகள் சாதாரணமாகத் தெரிவதில்லை. நான் சென்னையிலிருந்து தருவித்துதான் கஞ்சி மாவில் சேர்க்கிறேன். மற்றவைகள் கிடைக்கிறது. பேச்சு வழக்கில் அழகாக எழுதியுள்ளீர்கள். பாயஸம் என்று வைக்கும்போது கற்கண்டு,பனைவெல்லம் என்று விதவிதமாக இனிப்புக்களைச் சேர்த்தும் செய்யலாம். ரஸிக்கவும்,சாப்பிடவும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் செய்யவும் ஆர்வம் வரும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 38. அன்பின் காமாட்சி அம்மா அவர்களுக்கு வணக்கம்...

  தங்களது இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

  பதிலளிநீக்கு
 39. ஆஆஆஆஆஆ இன்று கடற்கரை நித்திரைப் புகழ் துரை அண்ணன் ரெசிப்பியோ.. அதுவும் சாமையில் ஆகா... இனிப்பான காலைப்பொழுதாக விடிகிறதே...

  ///ஆமம்மா!.. அத்தான் சாமைப் பாயசம் செய்யச் சொன்னாங்க!...///

  //அண்ணாச்சி ஊர்ல இருந்து வந்தப்போ கொடுத்தாங்க!.. சரி.. நீ எழுதிக்க!..///

  எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈ:)) அத்தான் எப்பூடி அண்ணாச்சி ஆனாஆஆஆஆஆஆஆர்ர்ர்?:)... என்னை ஆரும் பேய்க் காட்டவே முடியாதூஊஊஊஊ:))

  பதிலளிநீக்கு
 40. //எல்லாத்தையும் விட வேறொரு நல்லதும் செய்யுது!...

  அது என்னக்கா!...

  அதை அப்புறம் சொல்றேன்.. //
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*234567

  பதிலளிநீக்கு
 41. //நல்ல அத்தான்... நல்ல அக்கா!...//

  தமிழ்நாட்டில மாமா எனத்தானே சொல்லுவினம்.. நாங்கதானே அத்தான் என்போம்.. இது புதுசா இருக்கே அத்தான் முறை அங்கு:)).

  பதிலளிநீக்கு
 42. //சரி.. சாமை பாயசம் எப்படி இருந்தது!.. அதைச் சொல்லலையே!...

  இதைத்தான் Blog ல போடப் போறீங்களே..
  அவங்க சொல்லுவாங்க!..//

  ஹா ஹா ஹா சூப்பரா இருக்கு துரை அண்ணன்.. சாமை விரைவில் வெந்திடுமோ?.. இந்தக் குதிரைவாலி வரகு எல்லாம் நிறைய ரைம் ஆகுதே அவிய... இப்போ நான் அனைத்தையும் கலந்து முளைக்கவிட்டு ஸ்..ரீம்ம்ம் பண்ணி பின்பு தாழிச்சுப் போட்டேன்ன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கலப்புத் தானியம் முளைக்கட்டி என்னா யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஆனா நான் மட்டும் தான் சாப்பிடுறேன்ன் ஹா ஹாஅ ஹா:))

  பதிலளிநீக்கு
 43. //தமிழ்நாட்டில மாமா எனத்தானே சொல்லுவினம்.. நாங்கதானே அத்தான் என்போம்.. இது புதுசா இருக்கே அத்தான் முறை அங்கு:)).// இரண்டும் உண்டு. காரைக்குடி பக்கத்திலே அதிகம் அத்தான், அல்லது அயித்தான் என்பார்கள். மாமா என்றும் சொல்வது உண்டு.

  பதிலளிநீக்கு
 44. //தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக -
  Instant Coconut Milk Powder 100 கிராம் பயன்படுத்தி உள்ளேன்..//

  இதைத்தான் படத்திலே பார்த்துக் குழம்பிப்போய் அதுபற்றிச் சொல்லவே இல்லையே என கீழே தேடிக் களைச்சு இப்போ கண்டு பிடிச்சிட்டேன்ன் பூஸோ கொக்கோ:))..

  படங்கள் மிகத் தெளிவாக விளக்கம் அதைவிடத் தெளிவாக யூப்பராக இருக்கு..

  பதிலளிநீக்கு
 45. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

  சாமை பாயசம் அருமையான முறையில் செய்து காண்பித்துள்ளீர்கள். ஒரு கதை மாதிரி உரையாடல்களுடன், அருமையான செய்முறைகளையும் செய்து காண்பித்துக் கொண்டே, இனிப்பான பாயாசமும் எங்களுக்கு பகிர்ந்துள்ளீர்கள். அதன் மருத்துவ குணங்களையும் கடைசியில் சுட்டி காண்பித்திருப்பது வெகு சிறப்பு.
  நானும் சில பாயாசங்கள் தேங்காய் பால் சேர்த்து செய்திருக்கிறேன். தேங்காய் பால் சேரும் போது பாயாசத்தின் சுவை நன்றாக இருக்கும். படங்களும் நன்றாக இருந்தன. இன்னமும் சமையலில் நிறைய விதங்களை அறிமுகபடுத்துங்கள். அருமை
  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 46. //இரண்டும் உண்டு. காரைக்குடி பக்கத்திலே அதிகம் அத்தான், அல்லது அயித்தான் என்பார்கள். மாமா என்றும் சொல்வது உண்டு.//

  ஓஒ கீசாக்கா கம்பி மேலயோ?:)) ஹையோ பிறந்து அஞ்சேஏஏஏஏஏஏ நாளான கொயந்தையை எப்பூடி விட்டினம் கம்பிமேலே:)).. ஹா ஹா ஹா.. ஓ அப்படியா கீசாக்கா.. இப்போ நினைவு வருகிறது.. பழைய பிளக் அண்ட் வைட் படங்களில் அத்தான் எனத்தான் அழைப்பினம் அது கணவரை மனைவி அழைப்பது..

  பதிலளிநீக்கு
 47. நெல்லைத்தமிழனைக் காணமே.. சமையல் ரெசிப்பியை அதுவும் இனிப்பை மிஸ் பண்ண மாட்டார்ர்.. ஒருவேளை ஆகாயத்தில இருக்கிறாரோ இப்ப. ஐ மீன் பிளேனிலே ஊருக்கு.....

  பதிலளிநீக்கு
 48. ஹெஹெஹெ, ஜிஎம்பி சாரோட பதிவுக்குப் போக முடியலை. முகநூல் வழியாப் போகலாம்னா அவர் அங்கே லிங்க் கொடுப்பதில்லை! நெ.த. அங்கே சொல்லி இருந்தீங்களே, கீசா மேடமும் கமென்டுக்குப் பதில் சொல்ல நேரம் ஆகும்னு! போய்ப் பாருங்க! சிறுகீரைக்கு உடனடியாகப் பதில் கொடுத்திருக்கேன். நீங்க தான் பார்க்கலை! :)))))

  பதிலளிநீக்கு
 49. அதிரடி, கணவரை மனைவியும் "அத்தான்" என அழைப்பார். மனைவியின் தங்கைமார்களும் "அத்தான்" என்பார்கள். கணவரின் அம்மாவை "அத்தை" என்பார்கள். அப்பாவை "மாமா" என்பார்கள்.

  பதிலளிநீக்கு
 50. சாமை பாயாசம் செய்முறை புதுசு

  பதிலளிநீக்கு
 51. அழகான உரையாடல் தாமரையும் அக்காவும்!!! வித்தியாசமாக திங்க பதிவு!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 52. @ Geetha Sambasivam said...
  appaada...

  இன்னைக்கு ஏணி வெச்சு ஏறலைனாலும்
  தமிழ்..ல சொல்லியிருக்கலாம்..ல!..

  முதல் வருகைக்கு மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 53. /
  அத்தான் எப்பூடி அண்ணாச்சி ஆனாஆஆஆஆஆஆஆர்ர்ர்?:)... என்னை ஆரும் பேய்க் காட்டவே முடியாதூஊஊஊஊ:))

  May 28, 2018 at 2:21 PM//
  இங்கே நறநறநற என்று பல்லை கடிக்கின்றேன் மியாவ் ..
  அது பொண்ணுங்க பேசும்போது தங்கள் கணவரை மற்ற பெண்களுக்கு அண்ணா என்றே அடைமொழி சொல்லி உரையாடுவார் ..

  பதிலளிநீக்கு
 54. @ Thulasidharan V Thillaiakathu said...

  நான் ஓடோடி வந்தா நீங்க முந்திக்கிட்டீங்க!!! ஹா ஹா ஹா
  கீதா <<<<

  இன்னைக்கு அவ்விடத்தில பொழுது விடியறதுக்கு முன்னாலேயே கோழி கூவி விட்டது...

  பதிலளிநீக்கு
 55. @ Geetha Sambasivam said...
  யாரும் வரலையே! அப்புறமா நான் தான் லேட்டுனு ஆயிடும். :)

  வர்றது லேட்டு ஆனா தான் விசாரணைக் கமிசன் கேட்பீர்களே!..

  பதிலளிநீக்கு
 56. துரை அண்ணா சாமை பாயசம் அருமையா இருக்கு .இந்த பாகிஸ்தானி பங்களா சேமியா ஒரேஒருமுறை வாங்கி சுவை பிடிக்கல .நீளமா ஈர்குச்சி மாதிரி இருக்கும் வறட்டு வரட்டுன்னு .

  நான் சாமையில் தோசை செஞ்சிருக்கேன் கஞ்சி செஞ்சிருக்கேன் பாயசம் செஞ்சதில்லை .எங்க வீட்ல இருக்கவங்களுக்கு செஞ்சி தரணும் விளக்கமா ரெசிப்பி தந்திருக்கிங்க .நன்றி

  பதிலளிநீக்கு
 57. @ Thulasidharan V Thillaiakathu said...
  வரேன் வரேன்...கொஞ்சம் எடுத்து வைங்க!!

  கீதா..<<<

  சீக்கிரமாக வந்ததற்கு மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 58. @ Thulasidharan V Thillaiakathu said...
  கண்ணழகியும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கேக்கறா ஆனா அவளுக்குக் கொடுக்கக் கூடாதே!!...

  கீதா..<<<

  ஏன் அப்படி?...கண்ணழகியப் பார்க்க வைத்துக் கொண்டு சாப்பிட்டால் வயிற்றை வலிக்காதோ!..

  பதிலளிநீக்கு
 59. @ ஸ்ரீராம். said...
  சமையல் குறிப்பிலும் கலக்க வந்திருக்கும் துரை ஸார் இனிப்புடன் ஆரம்பிக்கிறார்.. இனி அவரின் அதிரடியும் தொடரும்...<<<<

  ஸ்ரீராம்..
  எல்லாவற்றுக்கும் தங்களது நல்லாதரவு தான் காரணம்!.. மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 60. @ Thulasidharan V Thillaiakathu said...

  ஹாஹாஹாஹா! நாங்க யாரு! விடுவோமா? :)))
  அதானே... கீதாக்கா குயந்தையா கொக்கா!!! ஹா ஹா ஹா ஹா..

  கீதா.. <<<

  அவங்களை யாரு இப்போ கொயந்தை இல்லைன்னு சொன்னது!?..

  பதிலளிநீக்கு
 61. @ வல்லிசிம்ஹன் said...

  முதல் சமையல் வருகைக்கு வாழ்த்துகள்..<<<

  தங்களது வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 62. @ Geetha Sambasivam said...

  >>> படங்கள் எல்லாம் மிக அருமையா எடுக்கறீங்க/ நல்லா வந்திருக்கு!..<<<

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 63. @Geetha Sambasivam said...

  >>> சாமையில் கிச்சடி, அரிசி உப்புமா மாதிரி, பாசிப்பருப்புச் சேர்த்து பொங்கல், எலுமிச்சை சாமை, புளிக்காய்ச்சல் கலந்த சாமைனு எல்லாம் பண்ணலாம் <<<

  தகவல் குறிப்புகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 64. @ வெங்கட் நாகராஜ் said...
  >>> சாமை பாயசம். படிக்கும்போதே சுவை நாவில்..<<<

  அன்பின் வெங்கட் .. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி..

  பதிலளிநீக்கு
 65. @ கோமதி அரசு said...
  >>> வாழ்க வளமுடன்.
  வைகாசி விசாகம் வாழ்த்துக்கள்..<<<

  தங்களன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 66. @ KILLERGEE Devakottai said...

  >>> உணவின் அருமை அடுத்த தலைமுறைக்கு அறியாது போகும்..<<<

  அன்பின் ஜி...
  அமெரிக்காவில் பழைய சோற்றை பாட்டிலில் அடைத்து விற்கிறானாம்...
  அது தமிழ்நாட்டுக்கும் வரும்.. பிட்ஸா வாங்கித் தின்கிற தமிழன் அதையும் வாங்கித் தின்பான்...

  தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 67. @ Bhanumathy Venkateswaran said...
  >>> ஹெல்தி ரெசிபி.. வருகிறேன்..<<<

  தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....

  பதிலளிநீக்கு
 68. @ Ramani S said...
  >>> பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.. <<<

  தங்களன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

  பதிலளிநீக்கு
 69. @ திண்டுக்கல் தனபாலன் said...
  >>> ஆகா...<<<

  அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 70. @ athira said...
  ஆஆஆஆஆஆ இன்று கடற்கரை நித்திரைப் புகழ் துரை அண்ணன் ரெசிப்பியோ.. அதுவும் சாமையில் ஆகா... இனிப்பான காலைப்பொழுதாக விடிகிறதே...

  ///ஆமம்மா!.. அத்தான் சாமைப் பாயசம் செய்யச் சொன்னாங்க!...///

  //அண்ணாச்சி ஊர்ல இருந்து வந்தப்போ கொடுத்தாங்க!.. சரி.. நீ எழுதிக்க!..///

  எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈ:)) அத்தான் எப்பூடி அண்ணாச்சி ஆனாஆஆஆஆஆஆஆர்ர்ர்?:)... என்னை ஆரும் பேய்க் காட்டவே முடியாதூஊஊஊஊ:))

  இதுக்குத் தான் தஞ்சையம்பதிக்கு வந்து ஒழுங்கா வாசிக்கோணும்..ங்கறது..

  அக்கா - தமிழ்ச்செல்வி..
  ஒன்று விட்ட தங்கை - தாமரைச்செல்வி...

  அக்கா வீட்டுக்கு தாமரைச்செல்வி அடிக்கடி வருவா... ரெண்டு பேரும் பல விசயம் பேசுவாங்க..
  அக்கா பேசுறப்போ - அத்தான்..ன்னு சொல்றது அவளோட வீட்டுக்காரரை...

  இந்தப் பதிவில -
  அக்கா தன்னோட அண்ணனைத் தான் அண்ணாச்சி அப்படினு சொல்றா!...

  அண்ணாச்சி குவைத்..ல இருந்து ஊருக்கு வந்தப்போ -
  பங்களாதேஷ் சேமியா வாங்கி வந்து தங்கச்சிக்கு கொடுத்திருக்கார்..

  அதான் விஷயம்!.. இப்போ புரிஞ்சதா இல்லையா!..

  கலகலப்பான வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

  அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

  பதிலளிநீக்கு
 71. @ athira said...
  //எல்லாத்தையும் விட வேறொரு நல்லதும் செய்யுது!...
  அது என்னக்கா!...
  அதை அப்புறம் சொல்றேன்.. //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*234567

  அதான் அக்கா கடைசியில சொல்லியிருக்காளே!.. அப்புறம் எதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!?..

  பதிலளிநீக்கு
 72. @ athira said...
  //நல்ல அத்தான்... நல்ல அக்கா!...//

  தமிழ்நாட்டில மாமா எனத்தானே சொல்லுவினம்.. நாங்கதானே அத்தான் என்போம்.. இது புதுசா இருக்கே அத்தான் முறை அங்கு:))

  மாமா..ங்கறது மரியாதை!... பகல்ல கொஞ்சம் தூரமா நின்னு பேசறது...
  அத்தான்..ங்கறது - பிரியம்!... உரிமையோட தலை கோதி விட்டவாறே கொஞ்சறது...

  பதிலளிநீக்கு
 73. //ந்தப் பதிவில -
  அக்கா தன்னோட அண்ணனைத் தான் அண்ணாச்சி அப்படினு சொல்றா!...

  அண்ணாச்சி குவைத்..ல இருந்து ஊருக்கு வந்தப்போ -
  பங்களாதேஷ் சேமியா வாங்கி வந்து தங்கச்சிக்கு கொடுத்திருக்கார்..//


  ஓஹோ நாமதான் குழம்பிட்டமோ .எதுக்கும் பூனை கண்ணில் படாம ஒளிஞ்சிருப்போம் கைவேற இப்போதான் சரியாகிட்டு வருது

  பதிலளிநீக்கு
 74. @ athira said...

  >>> சாமை விரைவில் வெந்திடுமோ?.. <<<

  ஐந்து நிமிடம் ஊறினால் போதும் .. நன்றாக வெந்திடும்..


  >>> இப்போ நான் அனைத்தையும் கலந்து முளைக்கவிட்டு ஸ்..ரீம்ம்ம் பண்ணி பின்பு தாளிச்சுப் போட்டேன்ன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கலப்புத் தானியம் முளைக்கட்டி என்னா யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்.. <<<

  இதுவும் நல்ல செய்முறைதான்...

  >>> ஆனா நான் மட்டும் தான் சாப்பிடுறேன்.. <<<

  இல்லத்தரசி என்றால் குடும்பத்திற்கே தூண் அல்லவா!...
  சாப்பிடுங்கோள்.. நன்றாகச் சாப்பிடுங்கோள்..

  பதிலளிநீக்கு
 75. @ Geetha Sambasivam said...
  //தமிழ்நாட்டில மாமா எனத்தானே சொல்லுவினம்.. நாங்கதானே அத்தான் என்போம்.. இது புதுசா இருக்கே அத்தான் முறை அங்கு:)).//

  >>> இரண்டும் உண்டு. காரைக்குடி பக்கத்திலே அதிகம் அத்தான், அல்லது அயித்தான் என்பார்கள். மாமா என்றும் சொல்வது உண்டு.. <<<

  தங்களது விளக்கத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 76. @ athira said...

  //தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக -
  Instant Coconut Milk Powder 100 கிராம் பயன்படுத்தி உள்ளேன்..//

  இதைத்தான் படத்திலே பார்த்துக் குழம்பிப்போய் அதுபற்றிச் சொல்லவே இல்லையே என கீழே தேடிக் களைச்சு இப்போ கண்டு பிடிச்சிட்டேன்ன் பூஸோ கொக்கோ:))..

  படங்கள் மிகத் தெளிவாக விளக்கம் அதைவிடத் தெளிவாக யூப்பராக இருக்கு...

  தேங்காய்ப் பால் மாவின் அட்டைப் பெட்டிப் படத்தையும் போட்டிருக்கலாம்..
  அடுத்தமுறை கபனத்தில் கொள்கிறேன்...

  அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

  பதிலளிநீக்கு
 77. @ Kamala Hariharan said...

  >>> படங்களும் நன்றாக இருந்தன.
  இன்னமும் சமையலில் நிறைய அறிமுகப்படுத்துங்கள். அருமை..<<<

  இயன்றவரை செய்கின்றேன்.. எல்லாம் தாங்கள் அளிக்கும் உற்சாகம் தான்..
  அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 78. @ athira said...
  //இரண்டும் உண்டு. காரைக்குடி பக்கத்திலே அதிகம் அத்தான், அல்லது அயித்தான் என்பார்கள். மாமா என்றும் சொல்வது உண்டு.//

  >>> ஓஒ கீசாக்கா கம்பி மேலயோ?:)) ஹையோ பிறந்து அஞ்சேஏஏஏஏஏஏ நாளான கொயந்தையை எப்பூடி விட்டினம் கம்பிமேலே:)).. ஹா ஹா ஹா.. ஓ அப்படியா கீசாக்கா.. இப்போ நினைவு வருகிறது.. பழைய பிளக் அண்ட் வைட் படங்களில் அத்தான் எனத்தான் அழைப்பினம் அது கணவரை மனைவி அழைப்பது..<<<

  பூ.. என்றும் ஜொல்லலாம்.. புய்ப்பம்..ன்னும் ஜொல்லலாம்..
  மலர்..ண்டும் ஜொல்லலாம்!...

  இது எப்டி.. இருக்கு!?..

  பதிலளிநீக்கு
 79. @ athira said...
  >>> நெல்லைத்தமிழனைக் காணமே..<<<

  காலையிலயே வந்து விட்டார்களே.. காணவில்லையா!?..

  பதிலளிநீக்கு
 80. தமிழ்நாட்டில மாமா எனத்தானே சொல்லுவினம்.. நாங்கதானே அத்தான் என்போம்.. இது புதுசா இருக்கே அத்தான் முறை அங்கு:)).//

  அதிரா ரெண்டுமே உண்டே...தமிழ்ப்படங்கள்ல பாத்திருப்பீங்களே...மாமா....மாமோய்!!! அப்புறம் அயித்தான்னும் சொல்வதுண்டே...அத்தான் என்னத்தான் - கண்ணதாசன் தாத்தாவோட ஸாரி எனக்கு, கீதாக்கா எல்லாருக்கும் அவர் எள்ளுத்தாத்தா!!!!! அவருடைய பாடல் கேட்டுருப்பீங்களே!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 81. @ Geetha Sambasivam said...

  >>> ஹெஹெஹெ, ஜிஎம்பி சாரோட பதிவுக்குப் போக முடியலை. முகநூல் வழியாப் போகலாம்னா அவர் அங்கே லிங்க் கொடுப்பதில்லை!..<<<

  கொழந்தே!.. ஒரு பக்கமா ஒக்காந்து வெளையாடும்மா!...

  (சும்மா!.. )

  பதிலளிநீக்கு
 82. அதிரா எல்லா தானியங்களும் ஈசியாக வெந்திடுமே....ஒரு துரை அண்ணா சொல்லியிருப்பது போல் ஐந்து நிமிடம் ஊற வைத்தாலே....நான் இங்கு அப்படித்தான் செய்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 83. @ Geetha Sambasivam said...

  >>> அதிரடி...
  கணவரை மனைவியும் "அத்தான்" என அழைப்பார். மனைவியின் தங்கைமார்களும் "அத்தான்" என்பார்கள். கணவரின் அம்மாவை "அத்தை" என்பார்கள். அப்பாவை "மாமா" என்பார்கள்...

  மனைவி - அத்தான் என்று அழைப்பதை விட
  மனைவியின் தங்கைமார்கள் - அத்தான்!.. - என்றழைப்பதே மதுரமாக இருக்கும்!...

  ஆகா!.. அதில் தான் எவ்வளவு பாசம்.. நேசம்!..

  பதிலளிநீக்கு
 84. //கொழந்தே!.. ஒரு பக்கமா ஒக்காந்து வெளையாடும்மா// கொஞ்ச நேரம் முன்னே பார்த்தப்போ டாஷ்போர்டில் இருந்து ரீடிங் லிஸ்ட் போனால் யாரோட பதிவும் தெரியலை! ஹெஹெஹெஹெ, சரினு முகநூலில் சொன்னால் கூடவே ஶ்ரீராம், துளசி இருவரும் துணைக்கு வந்தாங்க. ஆக மொத்தம் கூகிள் எங்க மூணு பேரையும் குறி வைச்சு விளையாட்டுக் காட்டுது டோய்! கண்ணாமூச்சி ரே ரே ரே! :)))))))

  பதிலளிநீக்கு
 85. திதிப்பு வகைகள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் பாயாசம் எல்லாம் மிகவும் பிடிக்கும். இப்போது இனிப்பு எடுப்பது குறைவு என்றாலும். நன்றாக இருக்கிறாது படங்களும் செய் முறை விளக்கமும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 86. அதிரா(க்கா) - நெல்லைத்தமிழனைக் காணமே.. - தேடியதுக்கு நன்றி (உங்கள் இடுகையில் எனக்கு பதில் போடலையே-முந்தைய இடுகையில்) ... கொடுத்த காசுக்கு 5 மணி நேரம்தான் பிரயாணம் என்று சொல்லி, இந்த ஊரில் இறக்கிவிட்டுட்டுப்போயிட்டாங்க. சொந்த ஊருக்கு வந்து சில நாட்கள் ஆகின்றன. தேடியதுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 87. @ Thulasidharan V Thillaiakathu said...

  >>>...அத்தான் என்னத்தான் - கண்ணதாசன்!...
  கீதா.. <<<

  அத்தான் என்னத்தான்!.. = அத்தான்.. என் அத்தான்!...
  அத்தான் என்னத்தான்!.. = அத்தான் என்ன அத்தான்?...

  ஆகா... சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி!..

  ஒரு வரிக்குள் வாழ்க்கையின் இனிமையை வைத்த கவியரசரையா
  எள்ளுத் தாத்தா.. கொள்ளுத் தாத்தா!.. என்கிறீர்கள்..

  அவர் என்னுடைய வயசாக்கும்!..

  உங்களுக்கு என்ன வயசு?..

  24!..

  பதிலளிநீக்கு
 88. ஓஹோ. மில்லட்டா. சரி சரி. இங்கேயும் புழங்குவதுதான்.

  தோசைதான் மிகப் பிடித்தம். மிக நன்றி. துரை செல்வராஜு.

  பதிலளிநீக்கு
 89. கொஞ்ச நேரம் முன்னே பார்த்தப்போ டாஷ்போர்டில் இருந்து ரீடிங் லிஸ்ட் போனால் யாரோட பதிவும் தெரியலை! //

  கீதாக்கா எனக்கும் டேஷ் போர்ட் காட்ட மாட்டேங்குது. நானும் அந்த லிஸ்டில்... ஆனா நான் முகநூலிலும் இல்லை. ஸோ எங்க மெயில் பொட்டிக்குள்ள வந்தாத்தான் தெரியும். அப்படித்தான் அதிராவோடது தெரிஞ்சுச்சு....என்னவோ தெரில சீக்கிரமே அதிராவோடது வந்துருச்சு. கோமதிக்காவோடது சும்மா போய்ப் பார்த்தேன் க்ரான்ட் கேன்யோன் போட்டுருக்காங்களானு அன்னிக்கு முதல் பாகம் போட்டுருந்தாங்க. அப்படிப் பார்த்தப்ப வந்துருந்துச்சு.

  இப்பல்லாம் நான் அவங்கவங்க தளத்துக்கே நேரா போய் பார்க்கறேன். சில சமயம் லேட்டாயிடும் எப்ப பதிவு போடுவாங்கனு தெரியாததால. உங்க பதிவும் அப்படித்தான் கீதாக்கா...பொட்டிக்கும் வராது அந்த ஆப்ஷன் இல்லை. துரை அண்ணாக்கும் ஆப்ஷன் இல்லை. ஸோ நேரா தளத்துக்குப் போய் பார்க்கறது..

  சில சமயம் எங்கள் தளத்துல சைட்ல தளங்கள் எல்லாம் இருக்கும் இல்லையா அது அப்டேட் ஆனது தெரிஞ்சுச்சுனா போய்ப் பார்க்க முடியும். ஆனா எங்க ப்ளாக் நான் ஓபன் பண்ணினாத்தானே தெரியும்.

  இப்ப எனக்குத் தெரிஞ்சு கரீக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்டா வரது எபி, வெங்கட்ஜி, கில்லர்ஜி பதிவுகள் டைம், போடுறது எல்லாம் தெரிஞ்சு போச்சு, அடுத்து துரை அண்ணாவும் இப்ப ஓரளவு அடுத்தடுத்துனு தெரிஞ்சு போச்சு....கூகுள் பளஸ் காமிக்கும் சில பதிவுகளை....அப்படி அவங்க பதிவுக்குப் போறது..வல்லிம்மா பதிவு பெட்டிக்கு வந்துரும்......இப்படித்தான்

  கீதா

  பதிலளிநீக்கு
 90. தி/கீதா, உங்க பதிவுகளுக்கு நான் மெயில் ஆப்ஷன் கொடுத்திருப்பதால் எனக்கு உங்க பதிவுகள் வந்துடும். ஜிஎம்பிசாரோடதும் அப்படித் தான் வந்துட்டு இருந்தது. இப்போல்லாம் அவர் மெயில் கொடுக்கிறதில்லையா இல்லைனா வரதில்லையானு தெரியலை! போக முடியலை. கோமதி அரசு பதிவுக்கும் காலைலே இருந்து முயற்சித்து இப்போத் தான் போயிட்டு வந்தேன். :) எ.பி. காலை ஆறு மணிக்குள் எனில் நேரே உள்ளே வரலாம். அதுக்கப்புறம் கதவடைப்புச் செய்யறாங்க! :)))))

  பதிலளிநீக்கு
 91. நெத ஹையோ ஹையோ என்ன சொல்ல என்னத்த சொல்ல.....அதிராவை அக்கா ஆ!! ஆ!! ஆ!! !! ஒரே சந்தோஷம்...இன்னிக்கு அதிரப் போகுது!!! விழா எடுத்துடலாம்!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 92. ஒரு வரிக்குள் வாழ்க்கையின் இனிமையை வைத்த கவியரசரையா
  எள்ளுத் தாத்தா.. கொள்ளுத் தாத்தா!.. என்கிறீர்கள்..

  அவர் என்னுடைய வயசாக்கும்!..

  உங்களுக்கு என்ன வயசு?..

  24!..//

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா... !! ரசித்தேன் துரை அண்ணா. ஆம் கவியரசர் இளைஞர்தான்...அப்படியே சைக்கிள் காப்ல ஹை ஹை ஹை...!!!!!! ஹா ஹா ஹா ஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 93. கீதாக்கா அதான் மெயில் ஆப்ஷன் கொடுத்துறக்கறது வந்துரும்....பெட்டிக்கு எனக்கும் ஜி எம்பி ஸாரோடது வருவதில்லை பெட்டிக்கு....

  எனக்கு இன்று எல்லோருடைய பதிவும் திறந்துச்சு.

  எபி கதவடைப்பா!! ஆ ஆ ஆ !! எனக்குக் காலைல மட்டும்தான் சிரமம் அதுவும் வெரி ரேர் எபி திறந்துடும்....அப்புறம் எப்பவுமே திறந்துதான் இருக்கு கதவு...

  மொத்தத்துல ஒன்னும் புரியலை ப்ளாகர் என்னமோ பண்ணுது..ஜதியீயீயீயீயி...

  இன்னும் கொஞ்ச வருஷத்துல வலைத்தளமே போயிரும் நு ம் வேற சொல்லிக்கறாங்க....ஸோ யாராவது பதிவுகளைத் தொகுத்து புக் போட நினைச்சா எல்லாரும் இபுக்கா போட்டுருங்க...தளம் இருக்குமா தெரியாதுனும் பேச்சு அடிபடுது...

  ஒன்னும் புரியலை .....முருகா!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 94. @ Thulasidharan V Thillaiakathu said...

  >>> ஐந்து நிமிடம் ஊற வைத்தாலே.... போதும்..<<<
  கீதா ///

  சிறு தானியங்களைக் கொண்டு வேறு சில உணவு வகை செய்யும் போது இந்த கால அளவே அதிகம்...

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 95. @ நெ.த. said...
  >>> அதிரா(க்கா) - நெல்லைத்தமிழனைக் காணமே.. - தேடியதுக்கு நன்றி..<<<

  இன்னும் அதிரா(க்கா)வுக்கு மயக்கம் தெளியலையாம்!...

  பதிலளிநீக்கு
 96. @ Thulasidharan V Thillaiakathu said...

  >>> திதிப்பு வகைகள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் பாயாசம் எல்லாம் மிகவும் பிடிக்கும். இப்போது இனிப்பு எடுப்பது குறைவு என்றாலும். நன்றாக இருக்கிறது படங்களும் செய் முறை விளக்கமும்.

  துளசிதரன்..<<<

  வருக.. வருக...

  தித்திப்பு குறைவாக எடுப்பது நல்லது தான் என்றாலும்
  வெல்லம் கருப்பட்டி போன்றவை உடலுக்கு நன்மை செய்பவை...

  அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

  பதிலளிநீக்கு
 97. @ வல்லிசிம்ஹன் said...

  >>> ஓஹோ. மில்லட்டா. சரி சரி. இங்கேயும் புழங்குவதுதான்.
  தோசைதான் மிகப் பிடித்தம். மிக நன்றி...<<<

  தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 98. @ காமாட்சி said...

  >>> சாமைப்பாயஸம் படங்களுடன் ருசியாக வந்திருக்கிறது. எல்லாம் ஸரி.
  இந்த சிறுதானியங்களுக்கெல்லாம் இங்லீஷ் பெயர் போட்டு விடுங்கள்.. <<<

  இந்த சாமை Little Millet எனப்படுகின்றது...

  பதிலளிநீக்கு
 99. @ Geetha Sambasivam said...

  மற்றும்

  @ Thulasidharan V Thillaiakathu said...

  //கீதா//

  ரெண்டு பேரும் தொழில் நுட்பமா ஏதோ பேசிக்கிறாங்க...ஆனா,
  நமக்கு ஒன்னும் புரியலைங்கோ!...

  பதிலளிநீக்கு
 100. @ Angel said...

  //இந்தப் பதிவில -
  அக்கா தன்னோட அண்ணனைத் தான் அண்ணாச்சி அப்படினு சொல்றா!...

  ஓஹோ நாமதான் குழம்பிட்டமோ. எதுக்கும் பூனை கண்ணில் படாம ஒளிஞ்சிருப்போம் கைவேற இப்போதான் சரியாகிட்டு வருது..<<<

  நீங்க குழந்தை மாதிரி.. எதுக்கும் உசாரா இருந்துக்குங்க!...

  பதிலளிநீக்கு
 101. கொழந்தே!.. ஒரு பக்கமா ஒக்காந்து வெளையாடும்மா!...//

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா ஹையோ சிரிச்சு முடில சிரிச்சு முடில...உங்க கமெண்டையும்....கீதாக்காவையும் நினைச்சு நினைச்சு சிரிக்கறேன்..

  வாங்க கீதாக்கா நானும் குயந்தைதான்... விளையாடலாம்...வாங்க...ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 102. //Angel said...
  /
  அத்தான் எப்பூடி அண்ணாச்சி ஆனாஆஆஆஆஆஆஆர்ர்ர்?:)... என்னை ஆரும் பேய்க் காட்டவே முடியாதூஊஊஊஊ:))

  May 28, 2018 at 2:21 PM//
  இங்கே நறநறநற என்று பல்லை கடிக்கின்றேன் மியாவ் ..
  அது பொண்ணுங்க பேசும்போது தங்கள் கணவரை மற்ற பெண்களுக்கு அண்ணா என்றே அடைமொழி சொல்லி உரையாடுவார் .///

  அப்போ எதுக்கு கேர்ள்ஸ் அண்ணா என அன்பா அழைச்சால் போய்ஸ்.. நெஞ்சு வலிக்குது என்கிறார்களே கர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 103. //மாமா..ங்கறது மரியாதை!... பகல்ல கொஞ்சம் தூரமா நின்னு பேசறது...
  அத்தான்..ங்கறது - பிரியம்!... உரிமையோட தலை கோதி விட்டவாறே கொஞ்சறது..//

  துரை அண்ணன்.. நான் இந்த மாமா.. இந்த அத்தானைச் சொல்லல்லே:) அது வேஏஏஏஏஏற.. இது வேஏஏர:)).. நான் சொன்னது அக்காவின் கணவரை தமிழ் நாட்டில் மாமா எனத்தானே அழைப்பார்கள்.. இலங்கையில் நாம்.. அத்தான் அல்லது மச்சான் என்போம்.. மாமா கிடையாது.

  பதிலளிநீக்கு
 104. //ஓஹோ நாமதான் குழம்பிட்டமோ .எதுக்கும் பூனை கண்ணில் படாம ஒளிஞ்சிருப்போம் கைவேற இப்போதான் சரியாகிட்டு வருது//

  அஞ்சு இங்கின வந்தாவோ?:) ஊஞ்சலாடி முடிஞ்சுதோ?:))

  பதிலளிநீக்கு
 105. அஞ்சு தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 106. //துரை செல்வராஜூ said...
  @ athira said...
  >>> நெல்லைத்தமிழனைக் காணமே..<<<

  காலையிலயே வந்து விட்டார்களே.. காணவில்லையா!?..///

  காலையில் என் கண்ணுக்குத் தெரியவே இல்லை:) காரணம் அவர் அடக்கி வாசிச்சிருக்கிறார் இன்று:)).

  //அதிரா எல்லா தானியங்களும் ஈசியாக வெந்திடுமே....ஒரு துரை அண்ணா சொல்லியிருப்பது போல் ஐந்து நிமிடம் ஊற வைத்தாலே....நான் இங்கு அப்படித்தான் செய்கிறேன்.

  கீதா//

  இல்ல கீதா.. நம்மூர் வெயிலுக்குத்தான் அப்படிப் போலும்.. இங்கு கம்பு, கொள்ளு கடலை எல்லாம் 2,3 நாட்கள் ஊறவிட்டே அவிக்கிறேன்.. முளைக்கட்டுவதாயின் 4,5 நாட்கள்கூட எடுக்குது கர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 107. //மனைவி - அத்தான் என்று அழைப்பதை விட
  மனைவியின் தங்கைமார்கள் - அத்தான்!.. - என்றழைப்பதே மதுரமாக இருக்கும்!...

  ஆகா!.. அதில் தான் எவ்வளவு பாசம்.. நேசம்!///

  ஹா ஹா ஹா துரை அண்ணன் அத்தையின் கடசி மகளைத்தான் முடித்திருக்கிறார் போலும்:)) குட்டி மச்சாள் ஆட்கள் இல்லைப்போல:)) அயித்தான் எனக் கூப்பிட ஹையோ ஹையோ...:)).. ஆனா நெல்லைத்தமிழனுக்கு இருக்காம்.. ஸ்ரீராமுக்கு இல்லையாம் ஹா ஹா ஹா மீ எஸ்கேப்பூஊஊஊஊஊஊஊ.. இங்கே கடும் வெயில் அதனால தான் எனக்கு என்னமோ அடிக்கடி இப்பூடி ஆகுதூஊஊஊஊஊஊ:))

  பதிலளிநீக்கு
 108. ///நெ.த. said...
  அதிரா(க்கா) -////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனியும் இந்த உசிர் உடம்பில இருக்கெமெண்டோ நினைகிறீங்க:)) மீ தேம்ஸ் இல அதுவும் கால்ல கல்லைக் கட்டிக்கொண்டே ஜம்ப் ஆகிறேன்ன்:))... நெல்லைத்தமிழன் என்னை ...க்கா:)) போட்டாலும் பறவாயில்லை.. அஞ்சு ஆன்ரியை ஒருதடவை கூப்பிடுங்கோவன்:)) ஹையோ ஹையோ:))..

  //(உங்கள் இடுகையில் எனக்கு பதில் போடலையே-முந்தைய இடுகையில்) ...//
  அப்படியா? தேடித்தேடிப் போட்டு முடிச்ச பின்புதானே புயுப் போஸ்ட் போட்டேன்.. சத்து இருங்கோ மறுபடியும் தேடுறேன் எப்பூடி மிஸ் ஆச்சோ:)) எல்லாத்துக்கும் உங்க அஞ்சு ஆன்ரிதான் காரணம்.. விரல்ல பூனை கடிச்சுதெண்டு ஊரெல்லாம் ஓலமிட்டு மீ பயந்திட்டேன்ன்..

  எனக்கு கையில புலி கடிச்சதைக்கூட அருக்கும் ஜொள்ளாமல் விட்டேன்ன்.. இது ஒரு பூஸ் க்கே இப்பூடி:)).

  //சொந்த ஊருக்கு வந்து சில நாட்கள் ஆகின்றன. தேடியதுக்கு நன்றி.//
  ஓ அப்படியா? கீசாக்கா பக்கம் இப்போதான் ஃபோன் கனெக்‌ஷன் கட் பண்னினேன்.. வீடு விடப்போறோம் எனச் சொன்னதைப் படிச்சென்ன்.. பறந்ததை நீங்க ஜொள்ளவே இல்ல:)).. சந்தோசம் ...

  பதிலளிநீக்கு
 109. //Thulasidharan V Thillaiakathu said...
  நெத ஹையோ ஹையோ என்ன சொல்ல என்னத்த சொல்ல.....அதிராவை அக்கா ஆ!! ஆ!! ஆ!! !! ஒரே சந்தோஷம்...இன்னிக்கு அதிரப் போகுது!!! விழா எடுத்துடலாம்!! ஹா ஹா ஹா ஹா

  கீதா///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விசயம் புரியாம ஓவரா துள்ளப்பிடாது:)).. அவர் அக்கா என்று டிரெக்டாப் போடல்ல:)) அது பிராக்கெட்டில போடது அஞ்சு அக்கா எங்கே காணமே என:)).. ஹையோ வைரவேல் குடுக்காததாலதான் வைரவர் நம்மள ஜோதிக்கிறாரோ.. எப்பூடியாவது கால்ல கையில விழுந்தாவது ஆடித்தள்ளுபடியில டுப்பிளிக்கேட் வைரம் வாங்கியாவது வைரவேல் போட்டிடுவேன் வைரவா:)) மீயைக் காப்பாத்துங்ங்ங்ங்:))...

  அது இப்போ [நெல்லைத்தமிழன்] அண்ணிக்குப் பக்கத்தில போயிட்டார் எனும் தெகிரியம் அவருக்கு:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 110. //ஸ்ரீராம். said...
  அஞ்சு தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.//

  என்னாது தயிர் ஜாதமோ?:) வட்சப் ல மெசேஜ் போட்டிட்டாவோ உங்களுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆஆஆஆஆஅ புரிஞ்சு போச்சூ.. இதோ இனி அங்கினதான் ஜம்பிங்ங்ங்ங்:))

  பதிலளிநீக்கு
 111. ///ஒன்னும் புரியலை .....முருகா!!!

  கீதா//

  ஹலோ கீதா.. எந்த முருகன் எனத் தெளிவாச் சொல்லிக் கூப்பிடுங்கோ:)) பிக்கோஸ் அங்கின பல முருகன்ஸ்:) என்னோட ஆட்கள்:) அவிங்க உங்களுக்கு ஜெல்ப் பண்ண மாட்டினம்ம்ம்ம்ம்:))
  ----------------------------

  பதிலளிநீக்கு
 112. //துரை செல்வராஜூ said...
  @ Angel said...

  //இந்தப் பதிவில -
  அக்கா தன்னோட அண்ணனைத் தான் அண்ணாச்சி அப்படினு சொல்றா!...

  ஓஹோ நாமதான் குழம்பிட்டமோ. எதுக்கும் பூனை கண்ணில் படாம ஒளிஞ்சிருப்போம் கைவேற இப்போதான் சரியாகிட்டு வருது..<<<

  நீங்க குழந்தை மாதிரி.. எதுக்கும் உசாரா இருந்துக்குங்க!...///

  விடுங்கோ விடுங்கோ.. என் கையை விடுங்கோ.. ஆரும் தடுக்காதீங்கோ.. விடுங்கோ.. மீ டீக்குளிக்கிறேன்ன்ன்ன் சந்தனக் கட்டைகளா அடுக்குங்கோ.. ஹையோ மச மச எண்டு பார்த்துக் கொண்டிருக்காமல் பயர் எஞ்சினுக்கு அடியுங்கோவன்.:)) ஒரு சுவீட் 16 டீக்குளிக்கப்போகுதூஊஊஊஊ:)).. முடியல்ல ஜாமீஈஈஈஈஈ ஆதாரத்தோடு என் பக்கத்தில ஊஞ்சல் படம் போட்டுக் காட்டிய பின்பும் அஞ்சுவைப் பார்த்துக் கொயந்தை எண்டால்ல்ல்ல்.. எல்லோருக்கும் இனிப் பூதக் கண்ணாடி வாங்கிக் குடுக்கோணும் தேம்ஸ் ஐக் குத்தகைக்கு விட்டாவது:))

  பதிலளிநீக்கு
 113. @ அதிரா: ..போய்ஸ்.. நெஞ்சு வலிக்குது என்கிறார்களே கர்ர்ர்:))//

  நெஞ்சிருப்போருக்குத்தான் நெஞ்சு வலிக்கும்..

  பதிலளிநீக்கு
 114. @மியாவ் துரை அண்ணா எப்பவும் உண்மையை மட்டுமே சொல்வார் :)

  பதிலளிநீக்கு
 115. ///நெஞ்சிருப்போருக்குத்தான் நெஞ்சு வலிக்கும்..///

  ஆஆஆஆஆஆஆஆஆஆ இண்டைக்கு என்னால எதையுமெ தாங்க முடியலியே ஜாமீஈஈஈஈஈஈஈஈஈ:))..
  -------------------------------

  //@மியாவ் துரை அண்ணா எப்பவும் உண்மையை மட்டுமே சொல்வார் :)//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இல்ல இடைக்கிடை இப்படி உளறுவதும் உண்டாம் என நேக்குக் கலா அண்ணி ஜொன்னா:))

  பதிலளிநீக்கு
 116. வரகு, சாமை, தினை ஆகியன கண்ணிற்கு எட்டாத சொத்து.
  சாமை இல் பாயாசம் அருமை
  அருமை

  பதிலளிநீக்கு
 117. @ eevalingam Yarlpavanan Kasirajalingam said...
  >>> சாமையில் பாயாசம் அருமை..<<<

  அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 118. @ eevalingam Yarlpavanan Kasirajalingam said...
  >>> சாமையில் பாயாசம் அருமை..<<<

  அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!