புதன், 16 மே, 2018

கேளுங்க ! சொல்றோம் ! புதன் 180516இந்த வாரம் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் ஆண் : திரு எடியூரப்பா ! 
(படம் கிடைக்கவில்லை! ) 
கீதா சாம்பசிவம் :

கேஜிஜி சார், இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் வந்து பதிவு போடுவீங்க?

ப : இல்லை என்று 'சொல்லிக் கொள்ள' விரும்புகிறேன் 

கேஜிஜி சார், நான் முழுக்கப் படிச்சுட்டுக் கருத்துச் சொன்ன ஒரே பதிவு எது? அதைக் கண்டு பிடிச்சீங்களா இல்லையா?

ப: ஓ , கண்டு பிடிச்சுட்டேன்! 

எல்லாருமே அம்மாக்கள் தானே! அப்போ எல்லோருடைய சமையலும் நல்லாத் தானே இருக்கும்? இந்தக் கண்டு பிடிப்புக்கு உங்கள் பதில் என்ன? 

ப : எல்லோருமே அம்மாதான், சரி! 
மாமியாரும் அம்மாதான், மருமகளும் அம்மாதான்! நாராயண, நாராயண! 

ஶ்ரீராம் தாத்தாவாகிட்டார், நீங்க? வாயே திறக்க மாட்டேங்கறீங்க? தாத்தாவா இல்லையா? 

ப: அப்படிப்பார்த்தால், நான் என் உடன்பிறப்புகளை மட்டும் கணக்கில் கொண்டு,  ஒன்று விட்ட சொந்தங்களை விலக்கிப் பார்த்தால், என்னை சுமார் 30 பேருங்க தாத்தா என்று அழைக்கிறார்கள்! எங்கள் குடும்பம் பெருசு!

கேஜிஜி சார், பதிவு எழுதறதை விட இம்மாதிரிக் கேள்விகள்-பதில்கள் சுலபம் இல்லையா?

ப : பதில்கள் சுலபம்தான்; எல்லாவற்றையும் திரட்டி, உருட்டி இங்கே கொண்டு வருவதுதான் பெரும்பாடு! 

இந்தத்திங்கற கிழமைப் பதிவை ஆரம்பிச்சது நீங்க! அப்புறமா எங்கே நீங்க வரதே இல்லை? ஸ்டாக் இல்லையா? இல்லாட்டி உங்க பாஸ்(ஶ்ரீராம் சொல்லும் அர்த்தம்) சமைக்க ஆரம்பிச்சுட்டாங்களா?

ப: ஆரம்பிச்சது நான்தான். அப்புறம், அந்த பகுதிக்கு, என்னை விட சுவையாக எழுத ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் நான் பின் சீட்டுக்குப் போய் உட்கார்ந்துகொண்டு விட்டேன்! என்னுடைய திருமதிக்கு, சமைக்க இயலாத நிலைமை. 

    கீதா ரெங்கன் : 

 நகம் கடிப்பதென்றால் ஸ்டைலாக இருக்க வேண்டாமோ?

ப: அதேதான்! அதை அதிராவுக்குச் சொல்லுங்க! பானுமதி வெங்கடேஸ்வரன் : 

பொறியியல்,கணிதம் இவையெல்லாம் சீரீயஸ் சமாசாரங்கள் இல்லையோ? அதற்கு நகைச்சுவையாக பதில் கூறி கேள்வி கேட்டவரை பல்ப் வாங்க வைக்க உத்தேசமா?

ப: ( ப: என்று போட்டால் பதில் என்று அர்த்தம்! பல்பு இல்லைங்கோ!) நகைச்சுவை என்றால் கேட்டவரை கலாய்ப்பதோ, அல்லது பல்பு வாங்க வைப்பதோ இல்லை! கேட்டவர், படிப்பவர்கள் என எல்லோருமே மனம் விட்டுச் சிரிக்கவேண்டும். 

ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொருத்தர் இன்சார்ஜ் என்றால் அரசுதான் உங்கள் முன்னோடியா? 

ப: மத்திய அரசா, மாநில அரசா? 

துரை செல்வராஜூ : 

அந்த கீர்த்தி ஏன் இன்னும் வரல்லை!?...

ப: எது வேணுமோ எடுத்துக்குங்க! 
கமலா ஹரிஹரன் : 

ஒருவரை ஒருவர் கலாயத்தல்கள் அருமை. எனக்கு மட்டும் ஆசையிருந்தும், விருப்பமிருந்தும் இத்திறமை ஏன் இன்னமும் வ(ள)ரவில்லை? இதை வளர்த்துக் கொள்ள எந்த படிப்பு படித்து எந்த பட்டம் விட..சே..பெற வேண்டும்?

ப: கலாய்ப்பவர்கள், கலாய்க்கப்படுவதையும் புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருந்தால் போதும். திறமை தானாக வந்துவிடும்!  


ஒரு பதிவுக்கு வந்து கருத்துகள் எழுதுபவர்கள் அவரின் அடுத்த பதிவுக்கு வந்து கருத்துகள் தரும் போது, சென்ற பதிவுக்கு வந்து போட்ட கருத்துகளுக்கு என்ன பதில் வந்துள்ளது என அறியும் ஆவலில் முந்தைய பதிவை பார்க்க வருவார்களா? இல்லை.. பதிலேதும் தராவிட்டாலும், பரவாயில்லை.. நம் கடமையை முடித்து செல்லலாம் என்ற மனநிலையில், பதிலலித்தோ, இல்லை.. வெறுமனே படித்து விட்டோ அகன்று விடுவார்களா? 

ப: நான் ஏதேனும் பதிவில் என் கருத்தைப் பகிர்ந்தால், அந்தக் கருத்துக்கு ஏதேனும் ஆதரவு / எதிர்ப்பு யாராவது எழுதி இருக்கிறார்களா என்று பார்ப்பது உண்டு.  ஸ்ரீராமும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம் :  நான் எல்லா தளத்திலும் பின்னூட்டம் கொடுக்கும்போதே பின்தொடரும் ஆப்ஷனைக் க்ளிக் செய்து விடுவேன்.  அங்கு வரும் மற்ற பின்னூட்டங்களும், பதில்களும் என் மெயிலுக்கு வந்துவிடும்.  சமயங்களில் நண்பர்கள் பெயர் சொல்லாமல் பதில் சொன்னால் இங்கு மெயிலில்  படிக்கும்போது அவர் யாருக்கு பதில் சொல்லி இருக்கிறார் என்று தெரியாது.   அதனால்தான் நண்பர்களை பின்னூட்டங்களுக்கு அவரவர் தளத்தில் பதில் சொல்லும்போது பெயர் சொல்லி பதில் கொடுக்கக் கேட்டுக்கொள்வேன்.  நானும் அப்படியேதான் கொடுப்பேன்.  சமயங்களில் நான் கேட்டிருக்கும் / சொல்லி இருக்கும் சில "சாவி வார்த்தைகளை" ( ! ) வைத்து அது எனக்கான பதில் என்று தெரிந்துகொண்டு விடுவேன்.

சரி, இப்படி வந்தால் நம் மெயில் பொட்டி ரொம்பி இடமில்லாமல் போய்விடுமே...  எனவே படித்ததும் உடனே கிழிச்சுப் போட்டுடுவேன்..  எனக்கு ஞானி அதிரா சொல்லியிருக்காங்களே.. "இதைப் படிச்சதும் கிழிச்சு வீசிடுங்க" ன்னு!

தேனம்மை லக்ஷ்மணன் : 

பதிவு சூப்பர், கருத்தும் பதில் கருத்தும் சூப்பரோ சூப்பர்.. இன்னா நடக்குது இங்கே கேஜிஜி சார் ? 

ப: ஏதோ சுவாரஸ்யமாக அரட்டை அடித்துக்கொண்டு இருக்கிறோம்!

          வாட்ஸ் அப் : பானுமதி வெங்கடேஸ்வரன்: 
பங்களூர்வாசிகளே ஜனநாயக கடமை ஆற்றியாச்சா?  

பெங்களூர்ல ஜனநாயக்க் கடமை காலைல நடைப் பயிற்சி, SLV இல்லை Brahmin cafeல டிபன்தான். (பதில் : நெல்லைத்தமிழன்) 

என் பதில் : ஆத்து ஆத்து என்று ஆற்றி இப்போ ஒரேயடியா ஆறிப் போயிடிச்சு! 

நெல்லைத்தமிழன்: 

எல்லோரும் வெயில் காலத்தில் சென்னையைக் கைவிட்டுடறீங்களே ? 

காய்தல் வேண்டோம் கடுமையாய் வியர்த்து

சாய்தலும் விரும்பிடோம் சராசரி மக்கள் யாம்

உல்லாசவுலா செல்ல உண்டு மகிழ

சல்லீசா பங்களூரு தான் ! 
(பதில் : கே ஜி ஒய் ராமன்)

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஐ.பி.எல்லில் எந்த டீம் நன்றாக ஆடுவதாக கருதுகிறீர்கள்? நான் மைதானத்தில் ஆடுவதை கேட்கவில்லை, 'டன்டனாடன்..' என்று தீபிகாவுடன் ஆடுவதை கேட்கிறேன். 

    


   


   


 ப: ஹைதராபாத் நடனம் நல்லா கீது. ராஜஸ்தான் அசடு வழியுது! சென்னையும் மும்பையும் பாஸ் மார்க். (கே ஜி ஒய் ராமன்)
    
             
தீபிகாதான்!

டீம்னு இல்லை, தோனி, கோலி, நல்லா ஆடறாங்க.  பாக்யராஜ் ஸ்டைலில் ஆடுவது காம்பிர்.  ( அ ர - பா ஸ்ரீ)

தீபிகாவை விட அவங்க அப்பா நல்லா ஆடுவார். ( பதில் :  பா  ர )

  


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்! 

     
     

70 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 2. புதன்கிழமை மட்டும் சுவர் ஏறிக் குதிக்க வேண்டியதில்லை...

  பதிலளிநீக்கு
 3. ஆகா..

  கீர்த்தி - எனக்கே எனக்கா!?...

  பதிலளிநீக்கு
 4. கீர்த்தி...ந்னா புகழ்...

  அந்த அர்த்தத்தில சொன்னேனுங்கோ!...

  பதிலளிநீக்கு
 5. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... ஆங்காங்கே சப்மிட் செய்து வர சற்றே தாமதம்!

  பதிலளிநீக்கு
 6. ஏன் - கீதா R, கீதா S.. ஒருத்தரையும் இன்னும் காணோம்!?...

  இன்னும் காஃபி ஆத்தி முடியலையா!..

  பதிலளிநீக்கு
 7. // புதன்கிழமை மட்டும் சுவர் ஏறிக் குதிக்க வேண்டியதில்லை... //

  நான் இன்னமும் சுவர் ஏறித்தான் குதித்துக் கொண்டிருக்கிறேன்! எங்கே கீதா ரெங்கனை இன்னும் காணோம்?

  பதிலளிநீக்கு
 8. கீதா அக்கா இப்பல்லாம் மெதுவாத்தான் வர்றாங்க... வயசாச்சோல்லியோ....!!

  பதிலளிநீக்கு
 9. இந்த வார நகக்கடி - எடியூரப்பா..

  அருமை... ஆனாலும் இப்படி ஆகி இருக்க வேணாம்...

  பதிலளிநீக்கு
 10. ஸ்ரீராம்..
  நீங்க எந்த அக்காவைச் சொல்றீங்க!!

  பதிலளிநீக்கு
 11. சரி..இருக்கட்டும்..
  வேலையப் பார்க்கப் போவோம்!..

  பதிலளிநீக்கு
 12. // ஸ்ரீராம்..
  நீங்க எந்த அக்காவைச் சொல்றீங்க!! //

  இப்பல்லாம் இந்தக் குழப்பம் வேறயா? எல்லாம் இந்த நெல்லைத்தமிழனால் வந்தது!

  பதிலளிநீக்கு
 13. கீதா ரெங்கன் இப்பதான் கணினித் தோழியை எழுப்பிகிட்டு வந்துகினு கீறாங்க...! கிர் வனத்துல கீறாங்க இப்போ... அவுங்களுக்கு இங்கன பதிவு வந்துடுச்சுன்னு இன்னும் தெரியாது போல!

  பதிலளிநீக்கு
 14. ஆஹா அதுக்குள்ள வந்துருச்சா....டூமச்

  இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, பானுக்கா எல்லோருக்கும்…

  கீதா


  பதிலளிநீக்கு
 15. ஸ்ரீராம் ஆறுமணிக்கினு கிர் வனத்துல இருந்தேன்...

  திஸ் இஸ் நாட் குட்...இனி புதன் என்றால் காலை 4.30 மணிக்கே க்யூ தொடங்கணும் அதுவும் என் தோழியை எழுப்பி சமாதானப் படுத்தி என்று....
  ஹா ஹா ஹா
  கீதா

  பதிலளிநீக்கு
 16. துரை அண்ணா புதன் மட்டும் சுவர் ஏறிக் குதிக்க வேண்டாம் என்றால் மற்ற தினங்கள் 6 மணி என்பதால் போட்டி க்யூ....நிறைய பேர் புதன் புதிர் தான் எப்போதுமே எப்ப வரும் எப்படி வரும்னு தெரியவே தெரியாது ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 17. கீதா அக்கா இப்பல்லாம் மெதுவாத்தான் வர்றாங்க... வயசாச்சோல்லியோ....!!//

  ஹா ஹா ஹா ஹா நோ ஸ்ரீராம் கீதாக்கா இப்பத்தான் பிறந்த குழந்தை..ஸோ மெதுவா தவழ்ந்து வருவாங்க...ஹா ஹா ஹா

  ஹலோ இருக்கற ரெண்டு கீதால நான் தங்கச்சியாக்கும் ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 18. இப்பல்லாம் இந்தக் குழப்பம் வேறயா? எல்லாம் இந்த நெல்லைத்தமிழனால் வந்தது!//

  ஆமாம் ஸ்ரீராம் நெல்லை சும்மாநாலும் ஜஸ்ட் ஒரு மாதம் எனக்குப் பின்னாடி பொறந்தார்னு என்னை அக்கானு விளிக்கிறார்..நான் கீதாக்காவுகு ஜஸ்ட் ஒரு செகன்ட் முன்னாடி பொறந்தேன் அம்புடுத்தான் ஹையோ பின்னாடிநு சொன்னா கீதாக்கா ஓடி வந்துருவாங்க....ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 19. அப்பால வாரேன் கடமை ஆத்திட்டு...

  துரை அண்ணா காபி ஆத்தியாச்சு இனி கடமைதான்..துரை அண்ணா அக்காக்கள்ல தேம்ஸ் ஜல் ஜல் ஜல்லையும் சேர்த்துக்கோங்க மீ நஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 20. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்... பதிவு வெங்கட் நேரத்துக்குதான் வெளியாகி இருக்கிறது இன்று!!!

  துரை ஸார்... பதிவில் ஒரு புதிய பதில் தற்போது இணைக்கப் பட்டிருக்கிறது!!!

  பதிலளிநீக்கு
 21. பதில்கள் ரசனையா இருக்கு.

  இந்தவாரம் நான் வியந்தது, கேஜிஒய் அவர்களின் வெண்பாவட்டெம்ட்தான். கிரேசி மோகன்ன பொதுவா இந்த மாதிரி வெண்பாக்கள் சர்வ சாதாரணமா எழுதுவார். பாராட்டுகள் கேஜிஒய் சார்

  பதிலளிநீக்கு
 22. காலை வணக்கம் பானு அக்கா.. இன்று சென்னைப்பயணம் உண்டா?

  பதிலளிநீக்கு
 23. //..இந்த வாரம் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் ஆண்: திரு எடியூரப்பா (படம் கிடைக்கவில்லை! )//

  எப்படி ஐயா கிடைக்கும்? எடியூரப்பா என்ன அனுஷ்காவா, தமன்னாவா, கீர்த்தியா - அள்ளி அள்ளிப்போட ?

  பதிலளிநீக்கு
 24. கலாய்த்தலை அனைவருமே ஜாலியாக ஏற்றுக் கொள்வதில்தான் கலாய்ப்பவரின் வெற்றி இருக்கிறது.

  பதிவை இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 25. அனைவருக்கும் காலை வணக்கம்.

  சென்ற வார இந்த பதிவுலக கத்துக்குட்டியின் கேள்விகளுக்கும், நல்ல விளக்கமாக பதிலளித்த சகோதரர்களுக்கு, என் பணிவான நன்றிகள். பதில்கள் மிக அருமை.

  பதிவு சம்பந்தபட்ட கேள்வியாக இருக்கட்டுமே என ஒரு அ. கேள்வி கேட்டதற்கு வந்த பொறுமையான பக்குவமான பதில்கள் கண்டு வியக்கிறேன்.

  அனைத்து பதில்களும் அருமை. கேள்வி கேட்டவர்களுக்கும், அதற்குரிய அருமையான பதில்களை தந்தவர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 26. ஏகாந்தன் :
  //..இந்த வாரம் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் ஆண்: திரு எடியூரப்பா (படம் கிடைக்கவில்லை! )//

  எப்படி ஐயா கிடைக்கும்? எடியூரப்பா என்ன அனுஷ்காவா, தமன்னாவா, கீர்த்தியா - அள்ளி அள்ளிப்போட ?

  :-) :) :)))))

  பதிலளிநீக்கு
 27. மாமியாரும் அம்மாதான், மருமகளும் அம்மாதான்! நாராயண, நாராயண! //

  ஹா ஹா ஹா ஹா ஹா (கௌ அண்ணா)நாரதர் முழிக்கிறார்!!!! அங்கியா இங்கையா என்று அதனால் ரெண்டு பேருக்கும் சப்ளாகட்டையைத் தட்டி நா நா என்று ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 28. ஸ்ரீராம் வெங்கட்ஜி பதிவு 5.30 க்கு நு தெரியும் அதான் அங்க மொபைல் வழியா கமெண்டிட்டு கருத்துக்கு அப்பால வாரேனு சொன்னேன்...அதை ஏன் கேக்கறீங்க கணினி தோழிய காலைல 4 மணிலருந்து கிச்சன் வேலையை பார்த்துக் கொண்டே உசுப்பி உசுப்பி எழுப்பி அப்புறம் கரெக்டா 6 மணிக்கு முன்ன எழுந்துவிட்டாள் உடனே அங்க ரெண்டு போட்டுட்டு இங்க வந்தா ஆஹா அல்ரெடி துரை அண்ணா ஆஜர் ஆகி ....புதன் என்று இங்கு வந்தப்புறம்தானே தெரிஞ்சுது ஹா ஹா ஹா ...

  கீதா

  பதிலளிநீக்கு
 29. நகம் கடிப்பதென்றால் ஸ்டைலாக இருக்க வேண்டாமோ?

  ப: அதேதான்! அதை அதிராவுக்குச் சொல்லுங்க! //

  ஹா ஹா ஹா ஹா ஹையோ ஹையோ எங்க போய் ........... விடுங்க அப்படி ஒரு பயங்கரமான படத்தைப் போட்டுட்டு இப்ப அதிராவுக்குச் சொல்லுங்கனு வேற...இதுலருந்து என்ன தெரியுதுனா ஆண்கள் ஸ்டைலாக நகத்தைக் கடிக்க மாட்டார்கள் என்று....சரி இதை அதிராவுக்குச் சொல்லிடறேன் அதிரா நோட் திஸ்.

  கீதா

  பதிலளிநீக்கு
 30. எப்படி ஐயா கிடைக்கும்? எடியூரப்பா என்ன அனுஷ்காவா, தமன்னாவா, கீர்த்தியா - அள்ளி அள்ளிப்போட ? //

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடியலை ஏகாந்தன் அண்ணா...

  கீதா

  பதிலளிநீக்கு
 31. ப: மத்திய அரசா, மாநில அரசா? //

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ என்ன சொல்ல சிரித்துக் கொண்டே இருக்கேன் ஒவ்வொரு பதிலையும் பார்த்து...

  கீதா

  பதிலளிநீக்கு
 32. ப: கலாய்ப்பவர்கள், கலாய்க்கப்படுவதையும் புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருந்தால் போதும். திறமை தானாக வந்துவிடும்! //

  ஆமாம் அதே அதே!

  கமலா சகோ எனக்கும் கலாய்க்க வராது, நகைச் சுவையாக எழுதவும் வராது. ஆனால் நகைச்சுவை மிகமிக ரசிப்பேன்....என் கஸின்ஸ் எல்லாரும் ரொம்ப நகைச்சுவையாளர்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல சமயங்களில் சிரிக்க வேண்டிவரும். அது ஒரு காலம்...என்னை அவர்கள் ரொம்பவே கலாய்ப்பார்கள்...அதை ரசித்து ரசித்துக் கொஞ்சம் ஓகே இப்போ..என்னையே நான் கிண்டல் செய்வதும் உண்டு..நானும் உங்கள் நிலைதான்..ஹிஹிஹிஹி...

  இங்கு எபியில் வரும் எபி ஆசிரியர்கள் முதல் அதிரடி வரை கருத்துகளைப் பார்த்தாலே நீங்கள் தேறி பட்டம் என்ன பிஹெச் டியே வாங்கிடுவீங்க...கலாய்த்தலில்.....ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 33. நானும் இப்போது கமென்ட் பின் தொடரும் ஆப்ஷன் கொடுக்கிறேன்...முதலில் நானும் பெட்டி பொங்கி வழியுமே என்று நினைத்ததுண்டு. இப்போது ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் படித்துக் கிழித்துப் போட்டு விடுவதால் ...பிரச்சனை இல்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
 34. @ கீதா:...எபியில் வரும் எபி ஆசிரியர்கள் முதல்..//

  பின்னே ..? குமுதம், கல்கி, விகடன் ஆசிரியர்களெல்லாமா வருவார்கள் எபி-யில்?

  பதிலளிநீக்கு
 35. நெல்லைத்தமிழன் :
  // பதில்கள் ரசனையா இருக்கு.

  இந்தவாரம் நான் வியந்தது, கேஜிஒய் அவர்களின் வெண்பாவட்டெம்ட்தான். கிரேசி மோகன்ன பொதுவா இந்த மாதிரி வெண்பாக்கள் சர்வ சாதாரணமா எழுதுவார். பாராட்டுகள் கேஜிஒய் சார்//

  கே ஜி ஒய் , எந்தத் தலைப்பிலும் அநாயாசமாக கவிதை / வெண்பா எழுதும் ஆற்றல் பெற்றவர். அம்மி முதல் அணுகுண்டு வரை, ஔவியம் முதல், திரவியம் வரை என்ன தலைப்பு வேண்டுமானாலும் கொடுத்துப் பாருங்கள் அவர் திறமையை! என்னுடைய பதின்ம வயதுகளில் என் படைப்பாற்றலை விஸ்தரித்தவர்களில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.

  பதிலளிநீக்கு
 36. கேள்விகள், பதில்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
 37. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

 38. ///ஸ்ரீராம்.May 16, 2018 at 5:50 AM
  கீதா அக்கா இப்பல்லாம் மெதுவாத்தான் வர்றாங்க... வயசாச்சோல்லியோ....!!////

  ஆஅமா ஆஅமா ஆமா :) இதை நான் படுபயங்கரமா வழிமொழிகிறேன்ன்ன்:)...

  இன்னொரு டவுட்டூஊஉ இப்போ ஸ்ரீராமும் ஸ்லோவாகிட்டாரே:)... என்னவா இருக்கும்?

  நான் சந்தேகம் எதுவும் படல்ல:)...

  . ஹையோ இப்போ நேக்கு ரைம் இல்லே பின்பு வாறேன்ன்ன்:)..

  பதிலளிநீக்கு
 39. பிரேக்கிங் நியூஸ்:).. இது வேற பிரேக்க்க்க்:)

  என் தம்பிக்குக் கல்யாணம் எல்லோரும் வந்திடுங்கோ.. பாருங்கோ கவுண்டவுன் ஆரம்பமாச்சூஊ:))..

  https://www.thesun.co.uk/news/6294295/palace-staff-accused-of-hanging-meghan-markles-dad-out-to-dry-over-royal-wedding-fiasco/

  பதிலளிநீக்கு
 40. கிளவியைக் கேட்டால்ல் ஹையோ ஆரம்பமே டங்கு ச்லிப் ஆகுதே இது அந்த அங்கிளின் வேலையாத்தான் இருக்கும் ஐ மீன் ..னிச:) அங்கிள்..:)

  கேள்வி கேட்டால் ரெண்டு கிழமைக்கு ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிடுவரோ கெள அண்ணன் எனும் பயத்தில போனகிழமை எதுவும் கேட்காமல் விட்டேனா.. அது அவருக்கு ஈசியாப்போச்சூ:) இல்லை எனில் என்ன ஆவியிருக்கும்:))[நம்மளை நாமளேதான் புகழோணும்:) பின்ன அடுத்தவங்களோ வந்து புகழுவாங்க?:))]

  இருப்பினும் கீசாக்காவும் பானுமதி அக்காவும் மின்னி முழக்கியிருக்கினம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).. என்னிடம் ஒரு கிள்வி இருக்கு கெள அண்ணன்.. முதல்ல அவவைக் கேட்கிறேன்ன்.. டயறி எடுத்து நொட் பண்ணிக்கோங்க.. கீழே டொடருது......

  பதிலளிநீக்கு
 41. “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், உங்க பிள்ளை தானே வளரும் என்றார்கள்”. அதைப் படிச்ச காலத்திலிருந்து நான் அப்படித்தான் நடக்கிறேன்.. இது சத்தியம்.. அது எதுவாயினும் சரி:).. பிள்ளையாகட்டும் பொருளாகட்டும் எதுவாயினும் ... பழமொழிகளைப் பின்பற்றும் பழக்கம் சின்னனிலிருந்தே இருக்க்கெனக்கு...

  ஆனா இடையில ஒருவர் இதை மாற்றி எழுதினார்ர்...:)
  “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.. உங்க பிள்ளையை என்ன கோடைக்கானலா வளர்க்கும்” என ஹா ஹா ஹா...

  சரி இப்போ கிளவிக்கு வாறேன்ன்ன்:)) ஐ மீன் கொஸ்ஸன் நெம்பர் வன்:-
  .. இதில முதல் பழமொழியைப் பின்பற்றி... நான் கிடைக்கும் நேரத்தில நண்பர்கள் புளொக்குக்குப் போனா:).. என் பக்கம் வந்து கொமெண்ட் போடுவோருக்குப் பதில் போட நேக்கு நேரமே கிடைக்குதில்லை:)).. ..[பதில் போடாததுக்கு கும்பலா வந்து கும்மிடப்போகினமோ எனும் பயத்தில சிம்பதி கலக்ட் பண்ணுறேனோ:)) ஹா ஹா ஹா]

  அதனால இப்போ மோடி அங்கிளிடம் சொல்லி[வேணுமெண்டால் அதிரா சொன்னா எனச் சொல்லுங்கோ:) நா ஒண்ணும் வாணாம் ஜொள்ளலியே:))] முதல் பழமொழியைத் தூக்கிக் காவேரில போட்டிட்டு 2 வது பயமொயியை சபைக்குக் கொண்டுவரச் சொல்லுவீங்களோ?:))

  கொஸ்ஸன் நம்பெர் 2. ஏன் ஆண்களுக்கு அதிகமா மொட்டை வருது?:))[ புத்தி அதிகம், சிந்திப்பது அதிகம் எனும் விடைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன]:).

  பதிலளிநீக்கு
 42. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
  @ கீதா:...எபியில் வரும் எபி ஆசிரியர்கள் முதல்..//

  பின்னே ..? குமுதம், கல்கி, விகடன் ஆசிரியர்களெல்லாமா வருவார்கள் எபி-யில்?//

  உங்களுக்குத் தெரியாது ஏகாந்தன் அண்ணன்.. உங்களுக்கு மறதி அதிகம்:)).. கதாசிரியர்கள்.. ஆஷாபோஸ்லே போன்ற பாடகர்கள்.. செஃப்[சமையல் வல்லுனர்கள்:)].. கவிஞர்கள்... இப்படிப் பலப்பல பட்டம் வாங்கியோர் எல்லாம்[அது நாந்தேன்] வந்து போகுமிடமாச்சே :)

  பதிலளிநீக்கு
 43. காலை வணக்கம் 🙏. சிவகங்கையில் இருக்கிறேன். தலைநகர் திரும்பிய பிறகு தான் எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 44. அதிரா (ச)வாலை சந்திப்போம் நாங்க.

  பதிலளிநீக்கு
 45. ///நானும் இப்போது கமென்ட் பின் தொடரும் ஆப்ஷன் கொடுக்கிறேன்...முதலில் நானும் பெட்டி பொங்கி வழியுமே என்று நினைத்ததுண்டு.

  கீதா///

  ஆஹா எல்லோரும் நோகாமல் நொங்கெடுக்கினமே:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இதுதான் நேற்று நான் என்பக்கம் கீதாவைக் கூப்பிட்டும் வரல்லியோ கர்ர்:)) நான் மட்டும் தேன்ன் ஓடி ஓடித்த்திறந்து திறந்து பார்க்கும் நிலைமையில் இருக்கிறேன் பிக்கோஸ்ஸ்.. புளொக் மெயில் வேறு நான் ஊஸ் பண்ணும் மெயில் வேறு என்பதால்..:)).

  ////இப்போது ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் படித்துக் கிழித்துப் போட்டு விடுவதால் ...பிரச்சனை இல்லை.///
  நோஓஓஓஓஓஓஓ இது என் “கொப்பிவலதாக்கும்” சூஊஊஊஊஊஊஊஊ பண்ணிடுவேன்ன்ன்ன்ன்ன்ன்:)) ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 46. ஸ்ரீராம் தாத்தாவாகிட்டாரா?! சொல்லவே இல்ல!

  பதிலளிநீக்கு
 47. //kg gouthaman said...
  அதிரா (ச)வாலை சந்திப்போம் நாங்க.//

  ஆவ்வ்வ்வ்வ் ஸ்ரீராமுக்கு வயசாயிடுச்சோ என்னமோ.. வருவதைக் குறைச்சிட்டார்ர்ர்ர்:)) கெள அண்ணன் இளமையாகிக்கொண்டு வருகிறார்ர்:) வருவதைக் கூட்டுறார்ர்ர்ர்ர்:)) ஹையோ நேக்கு ..னிச:) செவிண்ட் பொயிண்ட் ஃபைஃப் பொயிங்குது என ஏகாந்தன் அண்ணன் சொன்னது கரீட்டுத்தான் போல:)) பொயிங்கப்போகினமே எல்லோரும்ம்:))

  பதிலளிநீக்கு
 48. /// எனக்கு ஞானி அதிரா சொல்லியிருக்காங்களே.. "இதைப் படிச்சதும் கிழிச்சு வீசிடுங்க" ன்னு!///

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யான் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது என்னை ஆரு டிசுரேப்பு பண்ணுவது?:) என் செக் எங்கே போயிட்டாவோ இதை எல்லாம் கவனிகாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவ இப்போ ஓவரா ஊர் சுத்துறா:))

  பதிலளிநீக்கு
 49. /////kg gouthaman said...
  அதிரா (ச)வாலை சந்திப்போம் நாங்க.////

  அம்மம்மா அடிக்கடி சொல்லுறவ.. வாலைச் சுருட்டிக்கொண்டிரு பிள்ள என:)) அது சரியாத்தான் இருக்குது:)).

  //ப: கலாய்ப்பவர்கள், கலாய்க்கப்படுவதையும் புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருந்தால் போதும். திறமை தானாக வந்துவிடும்! ///

  கெள அண்ணன் யூ மீன்ன்ன்ன்ன்:)) “நோ வெய்க்கம் நோ ரோய்சம்:)”?? இது எங்கட வீட்டுக் குடும்பப் பயமொயியாச்சே:)).. வீட்டில ஆருக்கும் ரோசம் கொபம் வந்திட்டால்ல், எங்கட குடும்பப் பழமொழியை மறந்திடக்கூடா எனச் சொல்லி சிரிக்கப் பண்ணுவோம்:))

  பதிலளிநீக்கு
 50. //இந்த வாரம் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் ஆண் : திரு எடியூரப்பா !
  (படம் கிடைக்கவில்லை! ) //

  ஸ்ரீராமின் தம்பியாக இருப்பார்போலும்:)) அப்பூடி எனில்தான் படம் கிடைக்காஅது:)) ஒரு வேளை எடியூரப்பாவுக்கும் கெள அண்ணனுக்கும் எட்டு வித்தியாசம் இருக்குமோ?:)

  சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

  பதிலளிநீக்கு
 51. எந்த மாதிரி கேள்விகள் கேட்கணும். உதாரணம் கொடுக்க முடியுமா? எனக்குத் தெரியவில்லை. அதான் கேட்டேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
 52. அந்த நடிகையர் திலகத்தை நம் முன் கொண்டு வந்த இக்கால நடிகையர் திலகத்தின் புகைப்படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 53. / எந்த மாதிரி கேள்விகள் கேட்கணும். உதாரணம் கொடுக்க முடியுமா? எனக்குத் தெரியவில்லை. அதான் கேட்டேன். அன்புடன்/
  A to Z, - n to +n நீங்க என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்க. கடந்த சில புதன் பதிவுகளைப் படித்துப் பாருங்கள். வித்தியாசமான கேள்விகள் வரவேற்கப் படுகின்றன. இந்தப் பதிவிலேயே பின்னூட்டத்தில் கேட்கலாம். அல்லது 9902281582 என்ற வாட்ஸப் நம்பருக்குக் கேள்வி அனுப்பலாம். பதில் கொடுக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 54. அதிரா என் கணினி தோழி அவ்வப்போது என்னோடு சண்டை போட்டுக் கொண்டு சோர்வாகிப் போயிடறா அதான் நேற்று அப்புறம் உங்க ப்ளோக் வர முடியலை...இதோ இன்னிக்கும் சோர்ந்து போய் இப்பத்தானெ ழுந்தா....வரேன் உங்க ப்ளாக் எதுக்குக் கூப்பிட்டீங்கனு பார்த்துட்டு வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 55. //காமாட்சி said...
  எந்த மாதிரி கேள்விகள் கேட்கணும். உதாரணம் கொடுக்க முடியுமா? எனக்குத் தெரியவில்லை. அதான் கேட்டேன். //

  காமாட்ஷி அம்மா நீங்க கேட்டதே ஒரு கொஸ்ஸனாக்கப்பட்டிருக்கும் இப்போ:)) ஹா ஹா ஹா நீங்க கெள அண்ணனின் பாங் பலன்ஸ்:).. சுவிஸ் பாங்ல எவ்ளோ இருக்கு:) .. இப்பூடி எது வேணுமெண்டாலும் தயங்காமல் கேளுங்கோ:)) ஹா ஜ்ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 56. கீதா கணணியை எப்பவும் தோழனாக வச்சிருந்தால் இப்பூடிப் புரொப்பிளம்ஸ்ஸ் வராதோ என்னமோ:))..
  --------------------------------

  கெள அண்ணன்.. கொஸ்ஸன் நெம்ம்ம்பர் த்றீஈஈ:-

  3..எதுக்கெடுத்தாலும் பெண்களைக் குறை சொல்லுவோரை என்ன பண்ணலாம்?:))..

  ஹையோ நான் கில்லர்ஜியைச் சொல்லவில்லை என்பதனை:) எங்கட குயின் அம்மம்மாவின் நீலக்கல் மூக்குத்தி மேல் அடிச்ச்ச்சுச் சத்தியம் பண்றேன்ன்:))..

  நேக்கு செவிண்ட் பொயிண்ட் ஃபிவ் நடப்பது கொன்போம்ம்ம்ம்ம்ம்ம்:))

  பதிலளிநீக்கு
 57. அதிரா ஸ்ரீராமும் கீதாக்காவும் கொஞ்சம் பிசி...அதான்

  கீதா

  பதிலளிநீக்கு
 58. ஏகாந்தன் அண்ணா நீங்க னிஸ நு சொன்னாலும் சொன்னீங்க இப்ப அதிரடி னிஸ னிஸ நு ஒரே னிஸ பாட்டுத்தான்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 59. கீதா கணணியை எப்பவும் தோழனாக வச்சிருந்தால் இப்பூடிப் புரொப்பிளம்ஸ்ஸ் வராதோ என்னமோ:))..
  --------------------------------//

  ஹா ஹா ஹா ஹா..என் கம்ப்யூட்டரை தோழன் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன்...(அதுவும் ராம் -மெமரி முக்கியம் இல்லையா அதனால்) அது ஒரு நேரத்தில் கொஞ்சம் பிரச்சனை ஆனதால் மாற்றி விட்டேன்...ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 60. 1,இன்னமும் bombay என்று எழுதும் வழக்கம் நம் நாட்டில் இருக்கா ?
  அதை மும்பாய் என்று மாற்றியது தெரியும்
  தகவல்கள் பல இன்னும் எனக்கு அப்டேட் ஆகாததால் சந்தேகத்தை தீர்க்க கேட்கிறேன் .

  2,கீர்த்தி சாவித்திரி பார்த்தீர்களா ?
  உங்கள் பார்வையில் ஒரு வரி விமரிசனம்

  3, ஸ்ரீராம் எப்பவுமே ஏன் ஜெய்சங்கர் தாத்தா சிவகுமார் சின்ன தாத்தா படங்களா செலக்ட் செஞ்சி வீடியோ போடறார் ?
  (இப்போல்லாம் மீ வெற்ரி கேர்புல் ..இங்கே ஒருத்தர் சந்தடி வாக்கில் என்னை ஆன்ட்டி ஆக்கிட்டார் :)
  இனிமே பழைய நடிக நடிகையரை நான் தாத்தா பெரிய தாத்தானு தான் சொல்வேன் .

  4, உங்களுக்கு பிடித்த சமீப கால நடிகர்கள் ?


  5, தூக்கத்தில் ட்ரெயினை பிடிக்க ஓடுவது காக்கா தலையை கொத்துவது எலி காலை கடிப்பது போன்ற கனவுகள் வந்ததுண்டா ?

  6, இந்த பொங்கல் பொங்கல் என்கிறார்களே .எதற்கெடுத்தாலும் ஆராயாமல் பொய்ங்கிங் சரியா ?

  7, இதுவரைக்கும் நீங்க வாங்கிய பொருளில் யூஸ்லஸ் பொருள்னு ஏதாச்சும் இருக்கா ?
  அதாவது வாங்கிட்டு வீட்டில் தினசரி அதுக்குன்னே டைம் எடுத்து திட்டுவாங்களா :) உங்க boss
  8, நாளை நமதேன்னு சொல்றாங்க அப்போ இன்று யாருது ?
  9,உங்களுக்கு பூனை பிடிக்குமா ?
  10,pampers பயன்பாடில்லா காலத்தில் ஏதேனும் குட்டி குண்டூஸ் பேபிஸை தூக்கி
  மீண்டும் கோகிலா படத்தில் வரும் வெள்ளி பனியுருகி மடியில் வீழ்ந்து கமல் அங்கிள் போல அசடு வழிந்த அனுபவுமுண்டா ??  பதிலளிநீக்கு
 61. ஸ்வீட் ட்ரீம்ஸ் என்றால் என்ன மீனிங் ?

  பதிலளிநீக்கு
 62. சுவையான கேள்விகள்! நன்றி ஏஞ்சல். விடைகள் கொடுப்போம்.

  பதிலளிநீக்கு
 63. ///Angel said...
  ஸ்வீட் ட்ரீம்ஸ் என்றால் என்ன மீனிங் ?///

  இது ரெம்ம்ம்ம்ப முக்கியம்ம்ம்ம்மாக்கும்ம்..:)) அது நான் பதில் சொல்லிடறேன்ன் அதாவது வந்து சுவீட் 16 ஆட்களுக்கு வரும் கனவாக்கும்ம்ம்ம்ம்:))...

  ஆங்ங்ங் அஞ்சு விடாதீங்கோ.. கிளவி கேட்டே ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே கேள்வி கேட்டே பரிசு வாங்குவோம்ம்:))

  பதிலளிநீக்கு
 64. அடுத்த வாரம் கலக்கல்தான். நிறைய கேள்விகள்.. நிறைய பதில்கள்... , சகோதரி அதிராவும், சகோதரி ஏஞ்சல் அவர்கள இருவரும் பேசி வைத்து கொண்டு "பொறுத்து போதும்.. பொங்கி எழு"வென பொயிங்கி விட்டார்கள்..

  பதிலளிநீக்கு
 65. @Kamala Hariharan //

  இன்னும் நிறைய இருக்கு அடுத்த வாரம் கன்டின்யூ ஆகும் :)

  பதிலளிநீக்கு
 66. கமலா சிஸ்டர்.. உப்பூடி உசுப்பேத்தி விட்டால் மீ இன்னும்.. இருக்கிற அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் கேட்டிடப்போறேன்ன்:)).. ஹையோ என் கையை ஆராவது கயிற்றால கட்டி வையுங்கோ அடுத்த புதன் வரை:))..
  மீ இம்முறை ஒண்ணுமே கேக்கலியே:)).. அஞ்சுவுக்கு விட்டுக் குடுத்தேன்:))

  பதிலளிநீக்கு
 67. அற்புத பதிவுகள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!