சனி, 12 மே, 2018

விஸ்வா ஜெயம் சஹானா

1)  "...... இந்நிலையில், அந்த கால்வாயில் குட்டி நாய் ஒன்று தவறி விழுந்து, வெளியேற முடியாமல் தவித்தது. இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர், மிலிந்த் ராஜ், 27, நாய்க்குட்டியை காப்பாற்ற நினைத்தார். அதற்கு, தன் பரிசோதனை கூடத்தில் உருவாக்கிய, 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்த எண்ணினார்...."


2)  மனிதாபிமான ஓட்டுநர். மணியான குணம்.


3)  எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேசனில் உள்ள இலவச வை-பையின் உதவியால், அங்கு சுமை தூக்கும் கூலியாக உள்ள ஸ்ரீநாத், கேரள அரசு நடத்தும் சிவில் தேர்வில் வெற்றியடைந்து விரைவில் பணியில் அமர உள்ளார்.4)  அரசு மருத்துவமனை என்றாலே, சுத்தம், சுகாதாரம் அப்படி இப்படி தான் இருக்கும் என முகம் சுளிக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின், புற்றுநோய் சிகிச்சை பிரிவு, சுத்தம், சுகாதாரத்தில் சிறந்து விளங்குகிறது.


காரணம், ஏழை, எளிய நோயாளிகள் புழங்கக்கூடிய கழிப்பறைகளை சுத்தம் செய்யும் மகத்தான பணியை, இலவசமாக செய்து வருகிறது, 'விஸ்வா ஜெயம்' என்ற தொண்டு நிறுவனம்.


5)   இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டில், 3 சென்சார் கருவிகள் உள்ளன.

இதிலுள்ள, 'பொசிஷன்' சென்சாரால், ஹெல்மெட் போட்டால் தான், வண்டி, 'ஸ்டார்ட்' ஆகும்.
'ஆல்கஹால்' சென்சார், குடித்து விட்டு வண்டி ஓட்டினால், தானாகவே வண்டியை நிறுத்தி விடும்.
மூன்றாவதாக உள்ள, 'வைப்ரேஷன்' சென்சார், நாம் எங்கேயாவது விழுந்து விட்டால், சறுக்கி செல்வதை தவிர்க்க, உடனே வண்டியை நிறுத்தி விடும்.
மேலும், இதில் நம் நெருங்கிய நண்பர் மற்றும் உறவினரின் எண்களை கொடுத்து வைத்தால், உடனே, 'விபத்துக்குள்ளானவர் ஆபத்தில் இருக்கிறார்' என்ற தகவலை, இருப்பிடத்தோடு, சம்பந்தப்பட்டோருக்கு தெரிவிக்கும்.
ஜி.பி.எஸ்., நேவிகேஷன் ஆப், 'நீங்கள் செல்ல வேண்டிய இடம் வந்து விட்டது' அல்லது 'அருகில் வந்து விட்டீர்கள்' என்று வழிகாட்டும்.

கண்டுபிடித்த மாணவி சஹானா.


6) ".....................  'ஏன் படிக்கவில்லை' என கேட்கும் ஆசிரியையாக இருப்பதை விட, அவர்கள் பாடம் படிக்காததற்கான, வீட்டுச் சூழலை, புரிந்துணர்வோடு அணுக முடிவெடுத்தேன். எழுத்துகள் அற்ற, ஒலி வடிவம் மட்டும் இருக்கும் அவர்களின், 'வக்ரி போலி' மொழியை, அவர்களிடம் கற்று, அந்த மொழியிலேயே பாடம் நடத்த ஆரம்பித்தேன்.
இப்போது அந்த குழந்தைகள் எழுதுவது, வாசிப்பது மட்டுமின்றி, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' அளவுக்கு முன்னேறி இருக்கின்றனர்."............

நாடோடி மொழியில் பாடம் சொல்லித் தரும், கடலுார் மாவட்டம், பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியை, கீதா.42 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம்.ஸ்ரீராம் துரை அண்ணா..எல்லோருக்கும்...கணினி படுத்தல்....பின்னர் வரேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 4. இளங்காலைப் பொழுதில்
  இனிய தகவல்கள்...

  நல்ல மனங்கள் வாழ்க என்றென்றும்...

  பதிலளிநீக்கு
 5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

  பதிலளிநீக்கு
 6. சஹானா பிரமிக்க வைத்து விட்டார் வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 7. அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.
  சஹானாவின் கண்டுபிடிப்பு அவசியமானது.
  வாழ்த்துக்கள்.

  நல்லது செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  நாய்குட்டியை காப்பாற்றியது நல்ல செயல்.

  பதிலளிநீக்கு
 8. Enna kanjathanam? Ellaar periyum thalaippula poda vendiyadhu thaane?:)
  Thanks for +be news!!

  பதிலளிநீக்கு
 9. இன்று காலை முதல் கணினியை இயக்கக் கஷ்டப்பட்டு ஹப்பாடா இப்பத்தான் ஒழுங்கா வந்துச்சு...நேற்றே ஏகாந்தன் அண்ணாவின் பதிவு வந்ததைப் பார்த்தும் கமென்ட் போட முடியலை..அங்கு போட்டுட்டு...வந்தாச்சு..

  செல்லம் வாவ்! என்ன ஆச்சரியம் ஸ்ரீராம் இந்த ட்ரோன் பத்தி இன்று விடிய காலையில் ஃப்யூட்சர் டெக்னாலஜி என்று ட்ரோன் எப்படி எல்லாம் எதிர்காலத்தில் இருக்கும் என்று வந்தது ஒரு காணொளி. இந்தியாவில் நம் இளைஞர் ஒருவர் அந்த டெக்நாலஜியை ஒரு செல்லத்தைக் காப்பாற்றப் பயன்படுத்தியிருக்கார் என்பது மிக மிக சந்தோஷமான செய்தி. அதுவும் ஒத்துழைத்துள்ளதே! பாவம் பாருங்க வெளியில் வந்ததும் ப்ளாஸ்டிக் எல்லாம் வாமிட் செய்திருக்கு...ஹும் நம்ம ஊர் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு எப்பத்தான் வருமோ...

  கீதா

  பதிலளிநீக்கு
 10. அந்த நாய்க்குட்டி காப்பாற்றப்பட்ட செய்தியில் - ஜெய்ஹிந்த்புரம் என்பவர் எழுதியுள்ள கருத்தைக் கவனியுங்கள்...

  பதிலளிநீக்கு
 11. நாய்க்குட்டியைக் காப்பாற்றிய இளைஞர் மிலிந்திற்குப் பாராட்டுகள். அதுவும் தான் உருவாக்கிய ட்ரோன் பயன்படுத்திக் காப்பாற்றியதற்கும். - துளசிதரர்ன்.

  நீட் தேர்வுக்கு உதவிய அந்த ஓட்டுநர் மணிக்கும் பாராட்டுகள். 35 கி மீட்டரை 35 நிமிடத்தில்! பறந்திருப்பாரோ?!! பாவம் அந்த மாணவி. அந்த டென்ஷனை உணர முடிகிறது.
  (என் மகன் சரவண விநாயக்கும் இம்முறை நீட் தேர்வு எழுதி அதில் மதிப்பெண்கள் பெறவில்லை எனவே மீண்டும் இந்த வருடம் பயிற்சி எடுத்துக் கொண்டு அடுத்த வருடம் எழுதலாம் என்ற முடிவு..அதனால் பாவம் இந்த டென்ஷனை நானும் புரிந்து கொள்ள முடிந்தது. - துளசிதரன்)

  பதிலளிநீக்கு
 12. டெக்-ஹெல்மெட்: சஹானா செய்திருக்கிறார். கண்டுபிடிப்பின் அடிப்படை பாராட்டப்படவேண்டியதெனினும், இது ஒரு உபயோகிப்பாளர் பண்டமாகப் போய்ச்சேருமா, commercially viable-தானா என்று நிறைய இருக்கிறது.

  சும்மா பார்த்துக்கொண்டு, ’ச்சூ’ கொட்டிக்கொண்டு நிற்காமல், விறுவிறு என்று ஓட்டிச்சென்று ஹால்டிக்கெட்டுடன் திருப்பிக்கொண்டுவந்துவிட்டாரே மாணவியை. இவரல்லவோ ‘செயல் தலைவர்’!

  இஞ்ஜினீயராக வாய்ப்புகிடைத்தும் ஆசிரியை வேலைதான் நமக்கு சரி என்று சரியான முடிவெடுத்தவர். சும்மா ‘பிள்ளைங்க பள்ளிக்கூடமே வரமாட்டேங்குது..வந்தாத்தானே சொல்லித்தரலாம்’-னு பொழுதுபோக்கி சம்பளம் வாங்கித் திரியாமல், என்ன காரணம் என ஆராய்ந்து, பரிசுகள் கொடுத்து, நாடோடிமொழிகற்று அத்தைய ஏழைக் குழந்தைகட்கு முனைப்பாகக் கல்விகற்பிக்கும் ஆசிரியை.

  பெயர் என்ன சொன்னீர்கள்? கீதா. என்னவோ தெரியவில்லை - இந்தப் பெயரிலேயே ஒரு முனைப்பு, ஒரு திறன் இருப்பதாகக்கத்தான் தோன்றுகிறது..!

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீராம் எனக்கு ஒரே ஒரு டவுட்டு வந்தது இதைக் கேட்டு இங்கு எழுதும் முன் கணினி தொல்லைப் படுத்த போய்விட்டேன்...அந்த செல்லத்தின் ஃபோட்டோவில் நான் மீண்டும் அதை நோக்கிய போது எனக்கு பல கேள்விகள் எழுந்தது. வேர்டில் எழுதி வைத்தேன்..இப்போது காப்பி பண்ணி போடுகிறேன்...

  ஒன்று : செல்லத்தின் உடலில் அழுக்குத் தண்ணியே காணலையே....கால்களிலேனும் அந்த அழுக்கு
  ஒட்டியிருக்க வேண்டுமே....

  இரண்டு: ஆழம் கூடுதல் 20 அடி என்று செய்தி சொல்லுகிறது....குட்டி நாய் என்று வேறு சொல்கிறது. செய்தி. கண்டிப்பாக மூழிகியிருக்கும். சரி மூழ்கவில்லை தப்பிக்க நினைத்தது தவித்துக் கொண்டிருந்தது என்று நினைத்தாலும் செல்லம் ஏற்கனவே பயத்துடன் இருந்திருக்கும். அப்போது இப்படியான ஒன்று தன் அருகில் வருகிறது என்றால் அது இன்னும் விலகி விலகிப் போயிருக்குமே....

  வாய்க்காலில் கரையும் இல்லை. அதனால் அதன் உடலில் அழுக்கு இல்லை என்று காரணம் சொல்லவும்...ரொம்பவே கேள்விகளை எழுப்புகிறது இந்தச் செய்தி....டவுட்டு டவுட்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
 14. அந்த நாய்க்குட்டி காப்பாற்றப்பட்ட செய்தியில் - ஜெய்ஹிந்த்புரம் என்பவர் எழுதியுள்ள கருத்தைக் கவனியுங்கள்...//

  எங்கு எழுதியிருக்கிறார் துரை அண்ணா? அந்தச் செய்தி வெளியாகியிருக்கும் பக்கத்திலோ? ஓ ஓகே.....போய்ப்பார்க்கிறேன்.....என் கணினி சரியாக எதையும் காட்ட மாட்டேன் என்கிறது. பாதி செய்திகள் தான் வருகிறது. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நேரம் கழித்துத்தான் முழு பேஜும் வருது...ஹா ஹா ஹா வயசாகிப் போச்சு என் கணினிக்கு அதனால் மெமரி ப்ராப்ளம்...வயாகிடுச்சுனு என்னால் ஓரம் கட்ட முடியுமா? என்னாலும் முடியவில்லை பாவம் அது...கூடியவரை நன்றாகப் பராமரிக்கணும் அதனை என்ற உத்வேகம். என் மகன் பயன்படுத்தி என்னிடம் கொடுத்துவிட்டான்...எத்தனை வருடங்கள் உழைக்கிறது!!

  கீதா

  பதிலளிநீக்கு
 15. துரை அண்ணா அந்தச் செய்தியில் ஜெய்ஜிந்த்புரம் கருத்தை வாசித்தேன்....அவர் சொல்லியிருப்பது சரிதான் என்றுதான் எண்ண வைக்கிறது...இல்லையா அண்ணா?

  கீதா

  பதிலளிநீக்கு
 16. துரை அண்ணா அந்தச் செல்லம் காப்பாற்றப்பட்ட வீடியோவும் இருக்கிறதாமே வைரலாய் அப்போ அதைப் பார்த்தால் தெரியும் என்று நினைக்கிறேன். வீடியோவையும் பார்க்க வேண்டும்...அப்போது உண்மை தெரிந்துவிடுமே...எனக்கும் கேள்விகள் எழுந்தது....வீடியோ வைரல் என்ற செய்தியும் அந்தச் செய்தியில் இருக்கு. பார்ப்போம் எனக்குக் கிடைத்தால் இங்கு சுட்டியைப் பகிர்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 17. மாணவி சஹானா உட்பட அனைவருக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 18. விஸ்வா ஜெயம் தொண்டுநிறுவனத்திற்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  ஆசிரியை கீதாவின் செயல் மிக மிக போற்றுதற்கும் பாராட்டிற்கும் உரியது...அதுவும் நாடோடிகளின் மொழியான வக்ரி போலியைக் கற்று கற்பித்து அவர்களையும் மேடைப் பேச்சுகளில் கலக்க வைக்கும் ஆசிரியைக்கு மனமார்னத் பாராட்டுகள். (துளசி: இதுவும் முகநூலில் உங்கள் பக்கத்தில் வாசித்த நினைவு...)

  துளசி: ஹெல்மெட் கண்டுபிடிப்பு சஹானா வைப் பற்றி முகநூலிலும் வாசித்தேன். நல்ல கண்டுபிடிப்பு..

  கீதா: அப்போ அந்த ஹெல்மெட் ரொம்ப காஸ்ட்லியாகுமே எல்லோராலும் வாங்க முடியுமா? என்றாலும் சஹானாவை வாழ்த்துவோம் அவரது கண்டுபிடிப்பு அருமை.

  பதிலளிநீக்கு
 19. கீதா ரங்கன் - நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ட்ரோனை டெஸ்ட் செய்ய நாய்க்குட்டியை 20 அடி ஆழத்தில் இறக்க முயற்சிக்கிறார் என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே..

  பதிலளிநீக்கு
 20. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.

  அரசு மருத்துவமனை சுத்தமாக வைத்துக்கொள்ள மாதத்துக்கு லட்சக்கணக்கில் செலவாகிறது. இதை அரசு கொடுத்தால் என்ன? அரசு மருத்துவமனைகள் சுத்தமானால், தனியாருக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் காரணமா?

  பதிலளிநீக்கு
 21. துரை அண்ணா அந்தக் குட்டிச் செல்லம் சாக்கடைத் தண்ணீரில் விழுந்திருக்கவில்லை...அதில் கிடந்த மரக்கிளைகள் குப்பையின் மீது இருந்ததாகத் தெரிகிறது வீடியோவில் அப்படித்தான் தெரிகிறது. நிறைய வீடியோக்கள் இருக்கிறது. ரொம்ப அழகாக அந்த ட்ரோன் தூக்கி வருகிறது செல்லம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்வ்ப க்யூட்டாக அழகாக இருக்கிறது...இந்தியன் எக்ஸ்ப்ரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் எல்லாவற்றிலும் செய்தி உள்ளது. வீடியோக்களும் நிறைய உள்ளன...ஒரு சுட்டி இதோ..

  https://www.youtube.com/watch?v=ivOZlHVxLMg

  கீதா

  பதிலளிநீக்கு
 22. கீதா ரங்கன் - நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ட்ரோனை டெஸ்ட் செய்ய நாய்க்குட்டியை 20 அடி ஆழத்தில் இறக்க முயற்சிக்கிறார் என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே.//

  நெல்லை அந்தச் செய்தியில் சொல்லியதைப் பார்த்த போது அப்படித்தான் எண்ண வைத்தது. முதலில் வீடியோ கிடைக்கவில்லை. அப்புறம் அந்த இளைஞரின் பெயர் அடித்து ட்ரோன் என்றதும் பல வீடியோக்கள் கிடைத்தன.

  செய்தி எழுதியவர்கள் இப்படி கீதா லூசு பல கேள்விகளை எழுப்பும் என்று எண்ணி விரிவாகக் கொடுத்திருக்கலாமோ....ஹிஹிஹிஹிஹி

  எல்லா வீடியோக்களும் தூக்கிவருவதை அதுவும் பாதியில் வருவதை மட்டுமே காட்டுகின்றன. பப்பி எங்கிருந்தது.....எப்படி அந்தக் கருவையைப் பொருத்தினார்கள் என்பதெல்லாம் இல்லை....எனவே கீதாவின் டவுட்டு தொடருது...இருந்தாலும் அந்த ரோபோட்டிக்ஸ் இளைஞரைப் பாராட்டுவோம்...இப்படியான ட்ரோன் ஒன்றை உருவாக்கியதற்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
 23. கருவை - கருவியை என்று வந்திருக்க வேண்டும்....தவறாகிவிட்டது...

  கீதா

  பதிலளிநீக்கு
 24. கீதா ரங்கன் - //இப்படி கீதா லூசு பல கேள்விகளை எழுப்பும் என்று எண்ணி விரிவாகக் கொடுத்திருக்கலாமோ....ஹிஹிஹிஹிஹி// - தன்னைத் தானே குறைத்துக்கொள்ளும்படி எழுதாதீர்கள். சந்தேகம் வருவது இயற்கைதானே.. நீங்கள் பல்துறை வித்தகர், அதிலும் சமையலில்... வாவ்..வாவ்.. திறமை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 25. பெயர் என்ன சொன்னீர்கள்? கீதா. என்னவோ தெரியவில்லை - இந்தப் பெயரிலேயே ஒரு முனைப்பு, ஒரு திறன் இருப்பதாகக்கத்தான் தோன்றுகிறது..!//

  ஏகாந்தன் அண்ணா.....ஹா ஹா ஹா ஹா....முதலில் ஹை நானும் கீதாதானே நு கொஞ்சம் பிங்கியாயிட்டேன்!! அட நம்ம கீதாக்கா !!! என்று தொன்றியது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 26. @ஸ்ரீராம்/கீதா: எனது போக்ரான் பதிவிற்கான பதிலுக்கு பதிலெழுதியிருக்கிறேன். நேரமிருப்பின், கணிணி ஸ்ட்ரைக்/தர்னா செய்யாதிருப்பின், போய்ப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் சகோதரரே

  அத்தனை பேருமே பாராட்டப்படக் கூடியவர்கள்.

  உயிரின் அருமையை உணர்ந்து குட்டி விமானம் மூலம் அந்த நாய்க்குட்டியை காப்பாற்றிய மிலிந்த் ராஜ் அவர்களின் செயல் கண்டிப்பாக பாராட்டுக்குரியது.

  பரீட்சை எழுத உதவிய ஓட்டுனர் மணி அவர்களும், சுமை தூக்கும் தொழிலாளியாகவே தான் இருந்து விடக்கூடாதென்று, விடாமுயற்சியுடன் படித்து அரசாங்க வேலை பார்க்கும் ஸ்ரீ நாத்தும் மிகவும் பாராக்குரியவர்கள்.

  அனைவரையும் மனதாற போற்றுவோம்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 28. அனைவரும் போற்ற தகுந்தவர்கள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 29. தன்னைத் தானே குறைத்துக்கொள்ளும்படி எழுதாதீர்கள். //

  ஓகே நெல்லை இனி எழுதவில்லை...ஆனால் அது என்னையும் அறியாமல் வந்துவிடும்...அளவிற்குப் பழக்கமாகிவிட்டது சிறு வயது முதல் இப்போது வரை..ஹா ஹா ஹா ஹா. மிக்க நன்றி நெல்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
 30. அதிலும் சமையலில்... வாவ்..வாவ்.. திறமை. பாராட்டுகள்.//

  ஆஹா!! ஹா ஹா ஹா ஹா.. என்ன நெல்லை எப்ப நீங்க என் சமையலை சாப்பிட்டுருக்கீங்க இன்னும் நேர்ல கூட பார்த்ததில்லை...சும்மா நான் திங்கல போடறதப் பார்த்து ஏமாந்துடப்டாதாக்கும் கேட்டேளா நெல்லை!!! அதெல்லாம் சும்மா வெறுதேயாக்கும்... ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 31. @ஸ்ரீராம்/கீதா: எனது போக்ரான் பதிவிற்கான பதிலுக்கு பதிலெழுதியிருக்கிறேன். நேரமிருப்பின், கணிணி ஸ்ட்ரைக்/தர்னா செய்யாதிருப்பின், போய்ப் பாருங்கள்.//

  ஓ! பார்த்தாச்சு ஏகாந்தன் அண்ணா நான் போட்ட கமென்ட் வந்துச்சோ இல்லையோனு பார்க்க போனேன்....பார்த்துட்டேன்...பதிலும் கொடுத்துவிட்டேன்..ஸ்ரீராமுக்குக் கொடுத்ததையும் பார்த்தேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 32. @கீதா: ...முதலில் ஹை நானும் கீதாதானே நு கொஞ்சம் பிங்கியாயிட்டேன்!! அட நம்ம கீதாக்கா என்று தோன்றியது! //

  பிங்கியானதில் பிரச்னையில்லை! உங்களிருவரையும்தான் குறிப்பிட்டேன்.

  பதிலளிநீக்கு
 33. //@கீதா: ...முதலில் ஹை நானும் கீதாதானே நு கொஞ்சம் பிங்கியாயிட்டேன்!! அட நம்ம கீதாக்கா என்று தோன்றியது! //

  பிங்கியானதில் பிரச்னையில்லை! உங்களிருவரையும்தான் குறிப்பிட்டேன்.// விவிசி, விவிசி, சகலவல்லியோடு என்னை ஒப்பிடலாமா! :))))

  பதிலளிநீக்கு
 34. நேத்து முகநூலில் குட்டிச்செல்லத்தைப் பார்த்ததுமே மனசில் தோணியது தான் தி/கீதா சொல்லி இருப்பதும்! என்றாலும் நாம் மட்டும் குறை சொன்னால் சரியா இருக்காதுனு பேசாமல் இருந்தேன். இப்போ கீதாவின் ஆராய்ச்சியைப் பார்க்கையில்! :)))) சகானாவுக்குப் பாராட்டுகள். நாடோடி கீதாவையும் ஏற்கெனவே படிச்சிருக்கேன்.

  பதிலளிநீக்கு
 35. எல்லோர் செயலும் போற்றுதலுக்குரியது. குறிப்பாக, "இருட்டை பற்றி குறை சொல்லாதே, ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி வை" என்பதற்கு ஏற்ப செயல்படும் ஆசிரியை கீதாவும், விஸ்வா ஜெயம் தொண்டு நிறுவனமும் கருத்தை கவருகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 36. பிங்கியானதில் பிரச்னையில்லை! உங்களிருவரையும்தான் குறிப்பிட்டேன்.//

  ஆஹா! இன்று நெல்லை, நீங்கள் நு ஒரே பாராட்டு அதானா இன்று இங்கு வீட்டில் எனக்கு மட்டும் குளிர்ந்த காற்று....ஹா ஹா ஹா ஹா....நந்நி நந்நி உங்கள் இருவருக்கும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 37. நாம் மட்டும் குறை சொன்னால் சரியா இருக்காதுனு பேசாமல் இருந்தேன். //

  கீதாக்கா ஹைஃபைவ்!!! நானும் முதலில் யோசித்தேன் தான். அப்புறம் தான் இங்கு சொல்லி வைப்போம்னு சொன்னா துரை அண்ணா வேறு சொல்லியிருந்தார் மீண்டும் அந்தக் கருத்தை வாசித்து...வீடியோ எல்லாம் பார்த்து...வந்த எண்ணங்கள் தான்..

  கீதா

  பதிலளிநீக்கு
 38. வணக்கம் சகோதரரே

  ஸ்மார்ட் ஹெல்மெட்டை கண்டுபிடித்த ஸகானாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படியெல்லாம் உபயோகமாக ஒன்றை கண்டுபிடித்த அவரது திறமைக்கு ஒரு சபாஷ்.

  கழிவறைகளை சுத்தம் செய்து சாதனை படைக்கும் விஷ்வா ஜெயம் தொண்டு நிறுவனத்திற்கும், குழந்தைகளை படிப்பறிவில் திறமையான முறையில் கொண்டு வந்து தொண்டு செய்யும் ஆசிரியைக்கும் வாழ்த்துக்கள்.

  அப்போதே பாதிதான் படிக்க முடிந்தது. மீதியை படித்து இப்போதுதான் கருத்திட்டு முடிந்தது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 39. அனைத்து நல்ல நடப்புகளுக்கும் நன்றி.
  இரண்டு கீதாவுமே பரிவு மிக்கவர்கள்.
  பல வகையான துறையில் வல்லமை படைத்தவர்கள். பாசிடிவ்
  செய்தியில் இவர்களையும் குறிப்பிட வேண்டும்.
  நம் கோமதியும் இதில் சேர்த்தி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!