செவ்வாய், 15 மே, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.


அன்பு ஸ்ரீராம்,


படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார்,  ஈரத்துண்டு, கை கூப்புதல் எல்லாம் எனக்கு சோகமாகத் தெரிந்தன. அவர் சூரியனைக் கூடத் துதித்திருக்கலாம் 

அன்புடன் அம்மா 

இதோ கதை....  


  கணேச சர்மா 
ரேவதி நரசிம்மன்


ஈரோடுக்குக் கிளம்பணும்னு தவிப்பு பெரியவர் சர்மாவுக்கு.

கணேச சர்மா. மகன் வீட்டில் திருச்சியில் இருக்கிறார்.

அவருக்குச் செய்ய வேண்டிய கர்மா ஒன்று ஈரோடு, பெருந்துறையில்
காத்திருந்தது.

64 வயதில் மிக ஆரோக்கியமாகவே இருந்தார்.  நல்ல பழக்க வழக்கங்கள். கட்டுப்பாடான சாப்பாடு.  தேகப் பயிற்சி எல்லாம் இன்னும் கை கொடுத்தன.

தன்னுடைய 26 வயதில் இணைந்த மனைவி  கோமளாவும் வைதீக ஆச்சார முறைகளைக் கைவிடாதவள்.  திருமணத்தின் போது கணேசனின் காதைக் கடித்தவள் அக்கா விலாசினி.

'இந்த உழக்கை எப்படிடா ஆண்டு குழந்தை பெறப் போகிறாய்?   மரப்பாச்சி போல இருக்காளே' என்றதும் அக்காவை முறைத்த நினைவு இப்போது வந்தது.

பெண் பார்க்க வந்த போது, அரியமங்கலம் கிராமத்தில்
சிட்டுப் போலத் திரிந்தவள் 17 வயது கோமளா. அம்மா அப்பா இல்லாமல்
பாட்டியின் கவனிப்பில் செழிப்பாக வளர்ந்தவள் தான்.  உயரம் தான் குறைவு.

 அவள் ,ஒரு நொடியில் அவரைப் பார்த்துத் தலை குனிந்து கொண்டாள்.
இவர்தான் அந்த முக அழகைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.  சின்ன முகத்தில் அரக்குக் குங்குமம்.  வைர மூக்குத்தி, சிகப்புக்கல் பதித்த தோடு, கழுத்தில் இறுகப் பிடித்த கெம்பு அட்டிகை.  சத்தமில்லாத வளையல்கள்.  சற்றே தூக்கிக் கட்டி இருந்த புடவைக்குக் கீழ் தெரிந்த வெள்ளைப் பாதங்களும் கொலுசும் அவர் மனதில் அப்படியே பதிந்தன.
 அந்த வயதில், அவர்  PWD OFFICER ஆக இருந்தார்.


பெண் உள்ளே போன பிறகு தாத்தா பாட்டி , கணேசனின் அம்மா அப்பாவைப் பார்த்தார்கள்.  'கொஞ்சம் குள்ளமோடா கணேசா?' என்றாள்  அம்மா.

'லக்ஷணமா இருக்கா' என்றார் அப்பா.

கணேசன் தலை நிமிர்ந்து 'சீக்கிரம் திருமணம் முடிக்க வேண்டும்
அப்பா. எனக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் வருகிறது' 
என்றபடி எழுந்து விட்டான்.

ஒரே கண்ணோட்டத்தில்  கூடத்துக் கதவின் பின் நின்ற கோமளாவையும்
பார்த்து 'நான் வருகிறேன்' என்று சொல்லி அவன் வெளியே சென்றான்.
உள்ளே பேச்சு வார்த்தை நடந்து முடிந்ததும் பெற்றோரும் அத்தையும்
வெளியே வந்தார்கள்.

அவர்கள் வாயைத்  திறப்பதற்கு முன்பே, 'உங்களை அலட்சியப் படுத்தி ஒன்றும் செய்யவில்லை அப்பா.  எனக்கு இந்தப் பெண் தான் சரி.   என் இஷ்டத்துக்கு மதிப்புக் கொடுங்கள்' என்றான்.

தை மாதம் பார்த்த பெண்ணைப் பங்குனியில் மணம் முடித்தான் கணேசன்.  வழிபட வேண்டிய திருத்தலங்களுக்கெல்லாம் சென்று விட்டு
சென்னையில் பார்த்து வைத்திருந்த வீட்டுக்குக் குடி வைக்க
அவன் பெற்றோர்கள் வந்தார்கள்.   கோமளாவை அவர்களுக்கும் பிடித்துவிட்டது.  அவள் சீர் செனத்தியோடு வந்ததும் பிடித்தது.

 அந்தச் சின்ன வீடு, செழித்தது கோமளாவின் கை வண்ணத்தில்.  திரைச்சீலைகள், தையல் மெஷின்  மூலம் செய்த எம்ப்ராய்டரி குஷன்கள் என்று வீடே 'பளபளா' என்றிருந்தது.

அடுத்து வந்த பத்து வருடங்களில் ஐந்து குழந்தைகள்.  இரண்டு பெண்களும் மூன்று ஆண்களுமாக.

உதவிக்கு பாட்டி தாத்தா  வந்தார்கள்.  மாப்பிள்ளையின் அன்பும் ஆதரவும் அவர்களுக்கு அபரிமிதமாகக் கிடைத்தன. கணேசனின் உத்தியோகம் உயர்ந்தது.  கைகளில் பணம் சேர்ந்ததும் அவர் கொடுத்து வைப்பது கோமளாவிடம் தான்.

அடுத்த பத்து வருடங்களில் பிள்ளைகள் வளர்ந்து கல்லூரி சேர்ந்தனர்.  பெண்களுக்கு வேண்டும் என்கிற பாத்திர பண்டங்கள்,நகைகள் எல்லாம்  கோமளவின் முயற்சி.  அவருக்கு ஒரு கவலை இல்லாமல் வாழ்க்கை ஓடியது.

அடுத்த பத்து வருடங்களில் திருமணங்களும் முடிந்தன.

அத்தனையும் கோமளாவின் சாமர்த்தியம்.

திருச்சியில் புது வீடும் கட்டி கிரஹப்  பிரவேசம் நடத்தினார்கள்.  பெண்கள்,அவர்களின் பிரசவங்கள் எல்லாவற்றையும் 
அலுக்காமல் செய்து கொண்டாடினாள்.  முதல் மகனுடன் திருச்சியில்  குடும்பம் தொடர்ந்தது.

யாரையும் கடிந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டாள்.  அவரது   அறுபதாவது வயதில் ரிட்டையரான கையோடு ஷஷ்டி அப்த பூர்த்தி ஆனது.

குடும்ப வழக்கப்படி அனைவரும் திருப்பதி சென்று   வந்தவளுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி .

பொறுக்க முடியாத நிலையில் ஆஸ்ப்பிட்டலுக்குப் போக வேண்டி வந்தது.   டாக்டர் கொடுத்த இன்ஜெக்ஷனில் கொஞ்சம் தூங்கினாள்.  கணேசனைப் பயம் சூழ்ந்தது.  

ஒரு விதத்திலும் முகம் சுளிக்காதவள், இப்படி த் தவித்துப் போகிறாளே என்ற யோசனையில் இரவு கழிந்தது...

இரண்டு நாட்கள் பூரண பரிசோதனை செய்ததில் வயிற்றில் டியூமர் இருப்பது தெரிந்தது.  அடுத்தது பயாப்சி.  அவர்கள் நினைத்திராத வகையில் தீர்ப்பு.  புற்று நோய்.  இரண்டாவது ஸ்டேஜ்.  கீமோ  உதவலாம். போகப் போகத்தெரியும்.


கோமளம் இதை எல்லாம்   கண்டு அதைரியப் படவில்லை.  

'வியாதி வரும், போகும். எல்லாம் சரியாகிடும் பாருங்கள்' என்று வீடு திரும்பிவிட்டாள்.  

உடம்பு இளைத்தது.  இருந்தும் தன வழக்கமான வேலைகளை செய்து 
கொண்டிருந்தாள்.   முடியாதபோது படுத்துக் கொள்வாள்.


இரண்டு வருடங்கள் போராடினாள்.   சிரிப்பு மாறத முகத்தோடு,
மிகவும் முடியாத நிலையில் தன்னிடம் இருந்த நகைகள், சிறந்த பட்டுப் புடவைகளை மனதார பெண்களுக்கும் மருமகள்களுக்கும் பிரித்துக் கொடுத்தாள்.   அதே பச்சைப் புடவை, சிகப்பு ரவிக்கையுடன்
 துளிக்கூடக் கறுக்காத தலைமுடி காற்றிலாடிக் கணேச  சர்மாவைக்
கலக்கத்தில் ஆழ்த்த, மருமகள்  வாயில் ஊற்றிய கங்கை ஜலம் கடைவாயில் வழிய,  இறைவனை நோக்கிப் பயணித்து விட்டாள்.

ஒரே ஒரு ஆசை அவள் பட்டது, இந்த ஈரோடு பெருந்துறைக் குளியல்.
குடும்பம் ,குடும்பம் என்று யந்திரமாக, மகிழ்ச்சியான யந்திரமாகச் செயல்பட்டாலும்,  அவள் ஆசைப் பட்டது இந்தக் குளியலுக்கும், திருக்கடவூர் அபிராமி தரிசனத்துக்கும் தான்.

நிறைவேற்ற முடியாமல் எது தன்னைத் தடுத்தது என்று யோசித்துப் பார்த்தார் சர்மா.   ஒரு நிமிடத்தில்  நினைத்து, அடுத்த நிமிடத்தில் எல்லோரும் எங்கே எல்லாமோ போகிறார்களே...  தனக்கு ஏன் அவள் தாபம் புரியவில்லை?

அவள் ஏன் என்னை வற்புறுத்தவில்லை?  ஏன் இப்படி அடங்கிப்
போனாள்?  இன்னோரு ஜன்மம் அவளைப் போலக் கிடைக்குமா? 
நாற்பது வருட வாழ்வில், ஒரு  நாள் கூட அலுத்தது கிடையாது.
ஒரு மனஸ்தாபம்  கிடையாது.

எனக்காகத் தன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்தாளே...   குள்ள உருவமானத் தன்னைக் கம்பீர புருஷன் வரித்ததாலா?   குழந்தைச் செல்வங்களும், மாடும் மனையும் கிடைத்ததாலா?

இப்போது இந்தக் கலசத்தில் அடங்கி விட்டாளே...    இனியாவது அவள் இந்தக் காவிரித் திரிவேணியில் சங்கமிக்கட்டும் என்று புதல்வர்களின்  உதவியோடு கண்ணில் பொங்கும் பிரவாகத்தோடு
"போய் வா கோமளி,  அடுத்த ஜன்மம் உனக்கும் எனக்கும் உண்டு.  அனைத்துப் புண்ணியத் தலங்களுக்கும் போவோம்" என்று நா குழறச் சொல்லியபடி படித்துறையில் அமர்ந்தார்.

மனமாரப் பழைய நினைவுகளில்  மூழ்கக் கைகளால் கண்களை மூடிக் கொண்டார்.  கால்களை மெல்லத் தடவியபடி காவிரி ஓடினாள், தன்னுடன் கலந்த கோமளாவை ஆதரவாகத் தாங்கியபடி.




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

71 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, பானுக்கா எல்லோருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஹை அந்தப் படத்திற்கான கதை வல்லிம்மாவா வாவ்!! வரேன் நிதானமா படிக்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம் ரொம்ப பிஸியாக டென்ஷனில் இருப்பதால் கமென்ட்ஸ் இல்லை.....போர் தான்...அவரும் சீக்கிரம் புயலில் இருந்து விடுபட்டு இங்கு வரணும்!!! 23 வரை இருக்காமே...!!! ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. காவிரி ஓடிக்கொண்டே இருக்கிறாள்....

    அவளுள் தான்
    எத்தனை எத்தனை கதைகள்.. கவிதைகள்!...

    எல்லாம் அறிந்தவள் அவள் ஒருத்தியே...

    காவிரியின் அலைகளைப் போல
    கதையின் வரிகள் நெஞ்சில் மோதுகின்றன....

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  8. துரை செல்வராஜூ ஸார்.. கதை படிச்சுடீங்க போல.. இந்தப் படத்துக்கு உங்களிடமிருந்து ஒரு கதை எதிர் பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
  9. கீதா.. ஆமாம்... கொஞ்சம் சுணக்கம் தெரியும் என் பதில்களில். ஆனால் கொஞ்சமாவது தலைகாட்டுவேன். தணிக்கைக் (கஷ்ட)காலம்!

    பதிலளிநீக்கு
  10. இப்போதெல்லாம் நம் இடுகைகளை மறுபடியும் தமிழ்மணத்தில் இணைக்க வேண்டியதாய் இருக்கிறது. அப்போதுதான் கண்ணில் தெரிகிறது. முகநூலில் கொடுத்து, பிளஸ்சில் கொடுத்து என்று விளம்பர வேலைகளை எல்லாம் உடித்துக் கொண்டுவர, சற்றே தாமதமாகி விட்டது!

    பதிலளிநீக்கு
  11. ஆஹா என்பது ஹா ஹா ஹா சேர்ந்துருச்சு ஆஹா வர வேண்டிய இடத்தில் காப்பி பேஸ்ட் பண்ணும் போது...

    நேற்றே நினைத்தேன் ஸ்ரீராம் என்னடா ஆளைக் காணலையே என்று....காலையில் உங்கள் கமென்ட் இல்லை கீதாக்காவை காணலை...பானுக்கா....போர் இல்லையா துரை அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  13. பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
    காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
    மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
    சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

    பதிலளிநீக்கு
  14. DD, பொருத்தமான பாடல் வரிகள்...

    பதிலளிநீக்கு
  15. எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. அனைவரும் பொறுத்து அருளணும்.
    மிக நன்றி ஸ்ரீராம்.
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  16. ஓரிரு எழுத்துப்பிழைகள் இருந்தன. சரி செய்திருக்கிறேன் பாருங்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  17. மனம் பரிதவித்து விட்டது அதில் கடைசிபடம் பொருத்தமாக இருந்ததால்...

    பதிலளிநீக்கு
  18. அன்பு துரை செல்வராஜு, வாழ்க்கையும் காவிரி போல
    ஓடித்தான் முடிகிறது. வளப்பம் சில நாள் வாட்டம் சில நாள்.

    இனியாவது பெரியவருக்கு நிம்மதி கிடைக்க வேண்டும்.
    மிக அழகான பின்னூட்டத்துக்கு நன்றி மா.

    பதிலளிநீக்கு
  19. அருமையான கதை.
    அமைதியான நீரோட்டம் போல் கதை.
    //காவிரி ஓடினாள், தன்னுடன் கலந்த கோமளாவை ஆதரவாகத் தாங்கியபடி.//
    கண்ணில் நீர் துளிர்த்து விட்டது. இந்த வரிகளை படிக்கும் போது .
    வாழ்த்துக்கள் அக்கா.


    பதிலளிநீக்கு
  20. நல்வரவு தனபாலன். ஓ அவர்கள் காதல் கொண்டுதான் இருந்தார்கள்.
    மேம்போக்காகப் பார்த்தால் புரியாத வாழ்க்கை ஓட்டம்.

    சேர்ந்து போவதில்லை என்பதே நிஜம்.
    சேர்ந்து வாழ விட்டுக் கொடுத்தல் தான் அவசியம்.

    பதிலளிநீக்கு
  21. மிக நன்றி தேவகோட்டையாருக்கு.
    அந்தப் பெரியவர் படம் வருத்துகிறது. இனி வரும் கதைகள் வேறு பார்வையிலும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  22. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  23. அன்பு கோமதி,
    இப்போதைய கணவன் மனைவியாவது
    தங்கள் விருப்பு ,விருப்பமில்லாதவைகளைப்
    பேசி நல் வாழ்வு பெற வேண்டும். கோமளாவுக்கும் குறைவில்லை. பெரிய மனுஷியாகப் போய்விட்டாள்.
    அன்பு பின்னூட்டதுக்கு மிக நன்றி. வாழ்க வளமுடன் மா.

    பதிலளிநீக்கு
  24. நன்றி ஸ்ரீராம். எழுத்துப் பிழை அழகைக் கெடுக்கிறது இல்லையாம்மா.

    பதிலளிநீக்கு
  25. ரொம்ப ரொம்ப அருமையான கதை...வல்லி ம்மா

    அது ஏனோ தெரியவில்லை இந்த மாதரி மிதமான கதைகளே எனக்கு மிக பிடிக்கிறது அம்மா..

    ரொம்ப வருத்தங்களோ..திருப்பு முனைகள் உள்ள வைகளை விட இவையே மனதில் இருக்கிறது...


    உங்களின் ஒவ்வொரு வரியும் அழகு...படிக்க படிக்க காட்சிகள் மனதில்...


    கோமளம் மனதில் நிறைகிறார்..

    பதிலளிநீக்கு
  26. வல்லிம்மா கலக்கிட்டீங்க! மனதையும் கதையிலும்!!! என்ன அருமையான அந்த ஆற்றைப் போல ஒரு கதை! அந்தக் கடைசி வரிகள் செம!! வாவ்! மிக மிக மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது கதையும் படமும். ரொம்பவே பொருத்தம். உங்களிடம் கற்க நிறைய இருக்கிறது வல்லிம்மா...ரொம்ப ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. "போய் வா கோமளி, அடுத்த ஜன்மம் உனக்கும் எனக்கும் உண்டு. அனைத்துப் புண்ணியத் தலங்களுக்கும் போவோம்" என்று நா குழறச் சொல்லியபடி படித்துறையில் அமர்ந்தார்.//

    என்ன பொருத்தம் என்ன பொருத்தம்!! கதையை அப்படியே நகர்த்தி கரெக்டாக இந்தப் படத்திற்கு மிக ப் பொருத்தமாக அந்தப் படத்தில் உள்ள பெரியவரின் உணர்விற்கேற்ப பொருந்தி முடிந்திருக்கிறது...அப்படியே வியந்தேன் வல்லிம்மா...இந்த இடத்திலும் இதோ இந்த அடுத்த வரியிலும்

    மனமாரப் பழைய நினைவுகளில் மூழ்கக் கைகளால் கண்களை மூடிக் கொண்டார். கால்களை மெல்லத் தடவியபடி காவிரி ஓடினாள், தன்னுடன் கலந்த கோமளாவை ஆதரவாகத் தாங்கியபடி.//

    இந்த வரி இந்த வரி...இதுதான் அப்படியே என்னை வியந்து ஸ்தம்பிக்க வைத்தது. செம செம....வல்லிம்மா ரொம்பவே ரசித்தேன்....ஓ என்ன சொல்ல சொல்லத் தகுந்த வார்த்தைகள் வரவில்லை அப்படியே இந்த் கடைசி வரிகள் முழுக் கதையின் உணர்வுகளையும் தாங்கி நிற்கிறது! படத்தில் உள்ள அந்தப் பெரியவர் கணேச சர்மா என்றே தோன்றிவிட்டது...வல்லிம்மா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. எழுத்துப் பிழை அழகைக் கெடுக்கிறது இல்லையாம்மா.//

    வல்லிம்மா அதெல்லாம் கண்ணில் படவே இல்லை மனதி அந்தக் கணேச சர்மாவும் ஒழக்கும் தான் தெரிந்தார்கள்...கதையில் ஒன்றும் போது எழுத்துப் பிழை எல்லாம் படுவதில்லை...அம்மா..

    (என்னை எங்கள் வீட்டில் நெருங்கிய உறவினர்கள் ஒழக்கு என்றும் நாலடியார் என்றும் தான் சொல்லிக் கலாய்ப்பார்கள்...ஃப்ரென்ட்லியாகத்தான்...!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  29. டிடி அருமையான பாடல் வரிகள். ஸ்ரீராம் மற்றும் டிடி இன்னும் பல திரைப்படப் பாடல்களில் கில்லாடிகளா இருக்கீங்கப்பா...சூப்பர்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. மிகவும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  31. கொடுத்து வைத்தவள் கோமளா. நீர் ஓட்டம்போல வேகமாக வாழ்ந்து நீரோடு கலந்துவிட்டாள். நிறைவான வாழ்க்கை. அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  32. மிக அழகிய அமைதியான கதை வல்லிம்மா... நீங்கள் கதை எழுதியதைப் பார்த்து எனக்கும் இப்படத்துக்கு கதை எழுதோணும் என ஆசை வருது.. அன்று ஸ்ரீராம் படம் போட்டபோது எழுத நினைத்து மறந்திட்டேன்ன்ன்..

    நல்ல நிஜமான கதைபோல கற்பனை.. அருமை.

    பதிலளிநீக்கு
  33. //ஸ்ரீராம் ரொம்ப பிஸியாக டென்ஷனில் இருப்பதால் கமென்ட்ஸ் இல்லை.....போர் தான்..//

    என்ன கீதா? ஸ்ரீராம் போருக்குப் போறாரோ?:) அதுதான் அனுமார் ஆகிட்டார் என கெள அண்ணன் சொன்னாரா? ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீக்கு செவிண்ட் பொயின் ஃபைவ் நடக்குதெல்லோ:)..

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் சகோதரி

    படத்திற்கேற்ற அருமையான கதையை எழுதியுள்ளீர்கள். கதைக்கேற்றவாறு படமும் முன்பாகவே வடிவம் பெற்று காத்திருந்ததோ என எண்ணவும் வைத்தது.. அருமை.

    நெஞ்சில் சுமந்தவளை நீரில் இறக்கி விடும் போது அவருக்குள் எழுந்த சோகம், படிக்கும் நம் மனதை விட்டு இறக்கி வைக்க முடியாத பாரமாக அழுத்துகிறது..
    கோமளா மிகவும் கொடுத்து வைத்தவள்..
    கதையின் நெகிழ்வில் கடைசியில் கண்களை கலங்க வைத்து விட்டீர்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  35. அஞ்சுவுக்கு ஓர் நற்செய்தி.. டும் டும் டும்.. அஞ்சுவின் சித்தப்பாவின் தம்பி:)... பிக்பொஸ் 2 க்கு வருகிறாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. அவர்தான் பவர்ஸ்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கிள்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  36. வல்லிம்மா கதை மிக மிக அருமையாக இருக்கிறது. ஒரு ஸாஃப்ட் கதை. ஒவ்வொரு வரியும் நல்லதையே சொல்லிச் செல்கிறது அருமை. மகனின் ஆசைக்குக் கூட மதிப்பு கொடுக்கும் பெற்றோர். முடிவு மனதைத் தொட்டது. அந்த வரிகள் மிகவும் வலிமை வாய்ந்த வரிகள் கதைக்கும் படத்திற்கும் வலுமை சேர்ப்பது அவை! மிகப் பொருத்தமான கதை அம்மா. ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  37. என்ன கீதா? ஸ்ரீராம் போருக்குப் போறாரோ?:) அதுதான் அனுமார் ஆகிட்டார் என கெள அண்ணன் சொன்னாரா? ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீக்கு செவிண்ட் பொயின் ஃபைவ் நடக்குதெல்லோ:)..//

    ஹா ஹா ஹா bore என்று சொன்னது இதுதான் அப்பப்ப இங்கிலீசில் சொல்லனும் போல சில வார்த்தைகளை...ஹா ஹா ஹா...இல்லை நேற்று சொல்லிருந்தாரே ஏகாந்தன் அண்ணாவுக்கு...ஆனால் அப்பப்ப வரார் கமென்ட் கொஞ்சம் போடறார் ஓடிப் போயிடுவார்....ஸ்ரீராம் ரொம்ப நல்ல பையனாக்கும்...அதிரா நோட் திஸ் "பையன்" ....அவர் போர் எல்லாம் பண்ண மாட்டார்....வெள்ளைக் கொடிதான் எப்போதும்...அவர் வீட்டு மொட்டை மாடியில் உங்கள் ஓலைப் பெட்டி பொற்கிழியை வைக்கும் போது பாத்திருப்பீங்களே அந்த முருங்கி மரத்தில் பறந்திட்டுருக்குமே!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  38. அஞ்சுவுக்கு ஓர் நற்செய்தி.. டும் டும் டும்.. அஞ்சுவின் சித்தப்பாவின் தம்பி:)... பிக்பொஸ் 2 க்கு வருகிறாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. அவர்தான் பவர்ஸ்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கிள்:)) ஹா ஹா ஹா..//

    ஆ!! ஆ!! ஆ!! பிக்பாஸ் 2 வா....அதுல பவர் ஸ்டாரா...அவரும் உங்களுக்கு அங்கிளா...ஆஆஆஆஆஆஆ அதிரா!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    கீதா

    பதிலளிநீக்கு
  39. எளிய நடையில் அழகிய கதை. கீதா ரங்கனின் கருத்தோடு இரண்டு விஷயங்களில் ஒத்துப் போகிறேன். ஒன்று அந்த படத்தில் இருப்பது கணேச சர்மாதான் என்று தோன்றுகிறது. இரண்டு, கதையோடு ஒன்றும் பொழுது எழுத்துப் பிழைகள் கண்ணில் படவே இல்லை. வாழ்த்துக்கள் அக்கா! தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  40. எளிய நடை. ஒன்றிப்போய்விட முடிந்தது. மிகவும் பிடித்திருந்தது. படத்துக்கேற்ற கதை. திறமைசாலியான வல்லிம்மாவுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  41. எனக்கும் ஆர்வத்தோடு கதை எழுதணும்னுதான் எண்ணம். இப்போதிருக்கும் நிலைமையில் ஒன்றிலும் மனம் ஒன்றவில்லை. விரைவில் எழுதணும்.

    பதிலளிநீக்கு
  42. ஆவ் இன்னிக்கு வல்லிம்மா கதையா .முதலில் வல்லிம்மாக்கு ஒரு air hug .லவ் யூ வல்லிம்மா .உங்களை பார்க்கும்போது அப்டியே உற்சாகம் ஹாப்பினஸ் எனக்கு .

    இருங்க கதை படிச்சிட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  43. /சின்ன முகத்தில் அரக்குக் குங்குமம். வைர மூக்குத்தி, சிகப்புக்கல் பதித்த தோடு, கழுத்தில் இறுகப் பிடித்த கெம்பு அட்டிகை. சத்தமில்லாத வளையல்கள். சற்றே தூக்கிக் கட்டி இருந்த புடவைக்குக் கீழ் தெரிந்த வெள்ளைப் பாதங்களும் கொலுசும் அவர் மனதில் அப்படியே பதிந்தன //

    வாவ் அழகான வர்ணனை வல்லிம்மா .கற்பனையில் அப்படியே கோமளி பழைய நடிகை ஜமுனா போல் தோன்றினார் .

    பதிலளிநீக்கு
  44. மனமாரப் பழைய நினைவுகளில் மூழ்கக் கைகளால் கண்களை மூடிக் கொண்டார். கால்களை மெல்லத் தடவியபடி காவிரி ஓடினாள், தன்னுடன் கலந்த கோமளாவை ஆதரவாகத் தாங்கியபடி.//
    மிகவும் மனதை கவர்ந்த வரிகள் ..
    அழகான கதை .படத்தை பார்த்தபோதே மனசுக்கு என்னமோ பண்ணியது பெரியவர் மனதில் என்ன கலக்கமோ கவலையோன்னு .

    உயரம் பற்றிலாம் காது கடிக்கிறது நம்மூரில்தான் .இங்கே எங்க சர்ச்சில் போன மாதம் 50 வது வெட்டிங் டே கொண்டாடினவங்க இப்படித்தான் கணவர் ஆறரை அடி மனைவி 4 தான் .
    வாழ்க்கையில் சந்தோசமா உயர்ந்தோருக்கு உயரம் பொருட்டில்லை கணேஷ ஷர்மா கோமளா நல்ல உதாரணம் .

    பதிலளிநீக்கு
  45. @மியாவ் ..// அஞ்சுவின் சித்தப்பாவின் தம்பி:)//
    சிம்பிளா உங்க தம்பின்னே எழுதியிருக்கலாம் :)

    நான் இனிமே பிக் பாசெல்ல்லாம் பாக்க மாட்டேன் :) அரவிந்த்சாமி ஹோஸ்ட் பண்ணா பார்க்க சான்ஸ் 5%இருக்கு :)
    நான் முக்கிய பணியா இருக்கேன்

    பதிலளிநீக்கு
  46. @Anuradha Premkumarஅன்பு அனும்மா, நம் வாழ்க்கையில் திருப்பங்கள் தான்
    வந்து கொண்டிருக்கின்றன. இது சாதாரணக் குடும்பக் கதை.
    கதைக்கான படத்துக்கு சரியான கருவாக இது தோன்றியது.

    கதையை நீட்டவும் விருப்பம் இல்லை. எனக்குத் தெரிந்த சுந்தரம் மாமா
    அப்பாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.
    சம்சார சாகரத்தில் அவளை அழுத்திட்டேன்னு,.
    அந்த மாமி இருக்கார். அவர் இறைவனடி சேர்ந்து விட்டார்.
    இப்படியும் அப்படியுமா தான் வாழ்வு. நமக்கு முந்தைய தலைமுறை
    பெண்களுக்கே பொறுமை
    மிக ஜாஸ்தி. இப்பவும் பல பேர் அப்படி இருக்கிறார்கள். நன்றி மா. நீங்கள் அன்புடன் இட்ட கருத்துக்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  47. @Thulasidharan,Geetha R.அன்பு கீதாமா, எப்படி இத்தனை அக்கறை எடுத்து எழுதுகிறீர்களொ
    எனக்கு வியப்பு குறையவே இல்லை. நீங்கள் நல்ல கதை எழுதலாம்.

    என்னை அவரது சோகம் ரொம்பப் பாதித்தது.

    பல கணவன்மார்களுக்குப் பெண்டாட்டி ,அவசியமான
    அருமையான ஒரு குடும்ப நபர். வாழ்வே இயந்திரமாக ஆகிவிடுகிறது.

    என் பெற்றோரும் கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால் அம்மா வார்த்தைக்கு ஏகப்பட்ட மதிப்பு தருவார் அப்பா. உலகம் முழுவதும் தம்பதிகள் எத்தனையோ விதம்.
    சிரமப்பட்டு வாயைத் திறக்காமல் இருந்த ஆண்களையும் கண்டிருக்கிறேன்.

    ஒரு துளி அன்பு போதும். வாழ்வு இனிமையாகும்.
    ஒரு சாதாரண எழுத்துக்கு மகுடம் சூட்டி விட்டீர்கள்.

    என்றும் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  48. @ அதிரா - //கற்பனையில் அப்படியே கோமளி பழைய நடிகை ஜமுனா போல் தோன்றினார் .// - ஏஞ்சலின் ஆன்டி எழுதியிருக்கிற இந்த நடிகைலாம் யாரு? கேட்டுச் சொல்லுங்க. இப்படிக்கு உங்களை விட 1 வயசு குறைவான தம்பி...

    பதிலளிநீக்கு
  49. @மியாவ் ..// அஞ்சுவின் சித்தப்பாவின் தம்பி:)//
    சிம்பிளா உங்க தம்பின்னே எழுதியிருக்கலாம் :)//

    அப்படிப் போடுங்க ஏஞ்சல் இது இதுக்குத்தான் பூஸாரின் வாலைப் பிடிக்க ஏஞ்சல் வரணும்ன்றது....
    ஹையோ ஹையோ இருங்க அடுத்து நெல்லை வேற //இப்படிக்கு உங்களை விட 1 வயசு குறைவான தம்பி...//

    ஹையோ ஹையோ எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை...ஆனா நெல்லை ஏஞ்சலின் ஆண்டி நு சொல்லிட்டீங்க இப்ப அதிரா பொயிங்கிடுவாங்க...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  50. @Asokan Kuppusami,
    கதையைப் படித்துக் கருத்தும் சொன்னதற்கு
    மிக நன்றி மா.வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  51. அன்பு காமாட்சி மா. உண்மையா கொடுத்துவைத்தவள் தான்.
    இருந்தால் சிரமப்பட்டிருப்பாள்.
    அந்த வலியைத் தாங்க முடியுமா.
    உலகம் முழுக்க எத்தனை பெண்மணிகள். அருமையாகப் பதில் எழுதி இருக்கிறீர்கள்.
    மனம் நிறை நன்றி மா.நன்றாக இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  52. அன்பு அனுராதா வெங்கடேஸ்வரன்,
    உங்களுடன் சேர்த்து எனக்குத் தான் எத்தனை சகோதரிகளை பகவான் கொடுக்கிறார்.

    இந்தப் படத்தை எடுத்தவர் யாரோ. உயிருள்ள படம்.

    எத்தனையோ இன்ப துன்பங்களைக் கடந்து வருகிறோம். என் வயாது வரும்போது வருத்தங்களை விட்டு நல்லதைப் போதியலாம் என்றே தோன்றுகிறது. அருமையாகப்
    பாராட்டி இருக்கிறீர்கள். உங்கள் அனைவரின் பெருந்தனமையும் என்னை நெகிழ வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  53. அன்பு முரளி@ நெல்லைத்தமிழன்,
    மனம் வசப்படும்போது எழுதுங்கள்.
    ஏற்கனவே உளைச்சல் படும்போது இந்த
    பாரம் வேண்டாம். ரிலாக்ஸ் மா.
    எப்பொழுதும் நலமாக இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  54. @ அதிரா - //கற்பனையில் அப்படியே கோமளி பழைய நடிகை ஜமுனா போல் தோன்றினார் .// - ஏஞ்சலின் ஆன்டி எழுதியிருக்கிற இந்த நடிகைலாம் யாரு? கேட்டுச் சொல்லுங்க. இப்படிக்கு உங்களை விட 1 வயசு குறைவான தம்பி.haahahahahahahahahahah

    பதிலளிநீக்கு
  55. அன்பு @அதிரா, உங்களுக்கும் இந்தக் கதை பிடித்தது எனக்கு ரொம்ப
    மகிழ்ச்சி. கொஞ்சம் ஓல்ட் ஃபாஷன் தான்.

    அதையும் நல்ல முறையில் பெருமைப் படுத்தி இருக்கிறிர்கள் மனம் நிறை வாழ்த்துகள்.
    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  56. பானுமதி வெங்கடேஸ்வரன், அனுராதா வெங்கடேஸ்வரன் ஆகி விட்டாரோ?

    பதிலளிநீக்கு
  57. அவ்வ்வ் @நெல்லைத்தமிழன் :)))

    கர்ர்ர்ர்ர்ர் :) நேத்து கீதா ரெங்கனை அக்கானு விளிச்சப்போவே மயக்கம் வந்து இப்போ ஆன்ட்டியா நானா அவ்வ்வ் :)
    நீங்க இங்கே யூகே இல்ல ஐரோப்பா வந்துருங்க பேர்சொல்லியே கூப்டுக்கலாம் நான் கூட 88 வயது உங்க அக்காவை பேர் சொல்லித்தான் கூப்பிடறேன்

    ஆமா நீங்க ஒரு வயசு இளைய தம்பின்னா உங்களுக்கு 87 ???

    பதிலளிநீக்கு
  58. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  59. ஆனா நெல்லைத்தமிழன் நீங்க வல்லிம்மாவையும் சிரிக்க வைச்ச்சிட்டீங்க ஹாஹா உண்மையில் ரசித்தேன் பின்னூட்டத்தை

    பதிலளிநீக்கு
  60. என் கணவரை ஒரு பஞ்சாபி ஸ்டூடன்ட் அங்கிள்னு கூப்பிட்டதை கேட்டு எங்க மகள் அவரை அங்கிள் அங்கிள்னு கேலி செய்வா .நல்லவேளை அவளுக்கு தமிழ் வாசிக்க தெரியாது :)

    பதிலளிநீக்கு
  61. ஒரு பத்து நிமிஷம் வடாம் காயப்போட்டு அப்புறம் வாக்கிங் போயிட்டு வரதுக்குள்ள எவ்ளோ கலாட்டா இங்கே :)
    சாமீ கடவுளே அந்த குண்டுபூனையை மட்டும் இன்னிக்கு இந்த பக்கம் அனுப்பிறாதிங்க :)

    பதிலளிநீக்கு
  62. அன்பு ஏஞ்சல். லவ் யு டூ கண்ணம்மா.
    மகள் எப்படி இருக்கிறார். நீங்களும் அதிராவும் போடும் செல்ல
    சண்டை வெகு அழகு.

    வாழ்வில் நம்மைப் புரிந்த கணவர்கள் என்று பார்த்தால்
    சமமாகத்தான் இருக்கும். அதே போலப் புரியாத மனைவிகளையும் பார்த்திருக்கிறேன்.

    உயரம் பற்றி சொல்லணும்னால் என் சிறிய மாமனார்,மாமியார்.
    அவர் ஆறடி நாலு அங்குலம்,. மாமியார் 5 கூட இருக்க மாட்டார்.
    திவ்யமான தம்பதி, எட்டு வயதில் புக்ககம் வந்தவர்.

    எல்லாம் தெய்வம் செய்த தீர்ப்பு.
    ரசித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு அத்தனை நன்றியும். அஞ்சு மா வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  63. அச்சோ, பானும்மா ஸாரி கண்ண.
    எப்பவும் குழப்பம். பானுமதி வெங்கடேஸ்வரன்,
    அனுராதா பிரெம்குமார். 50 தவை எழுதி மனப்பாடம் செய்யரேன்.

    பதிலளிநீக்கு
  64. அன்பு @கமலா ஹரிஹரன்.

    மிக அழகான அலசல். இந்தப் படம் பேசுகிறது.
    இன்னும் கூட எழுதலாம். தள்ளவில்லை.
    நீங்கள் எல்லாம் எழுதுங்கள்.
    நான் படிக்கிறேன். அன்பு கமலா நன்றி மா.

    பதிலளிநீக்கு
  65. ஆற்றங்கரை கணேச சர்மாவைக் கொஞ்சம் flash-back-ல் தள்ளி, விறுவிறுவென சொல்லிக் காட்டிவிட்டீர்கள் கதையை! அந்தக்கால கோமளா உங்கள் வார்த்தைகளில் அழகு.

    பதிலளிநீக்கு
  66. அன்பு ஏகாந்தன், நாம் வாழ்வு முழுவதும் இது போல எத்தனை தம்பதிகளைப் பார்த்திருப்போம்.
    ஆண்களைக் குறை சொல்ல முடியாது.
    பாவம் அவரும் சம்பாதித்தார். குடும்பம் பேணினார்.
    சம்சார வலியில் வீழ்ந்த பின் மூச்சுவிடவும் நேரம் இல்லை.
    எல்லாம் அந்த சோகப் படிமமாக அவரை உட்கார வைத்துவிட்டது.
    நானும் என் கணவருமே திட்டம் போட்டு வைத்திருந்தோம்.

    நடந்தது வேறு. ஏற்றுக் கொண்டு நகர வேண்டியதுதான் மா.

    பதிலளிநீக்கு
  67. நல்ல நீரோடை ஓட்டம் போல கதை செல்கிறது. அப்படியேகணேச சர்ஆவோடு பயணிக்கவைத்து கடைசிப் பத்திகளில் கண்ணீர் வரவைத்துவிட்டீர்கள் வல்இ நரசிம்ம்ன்...பாராட்டுகள்.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!