செவ்வாய், 29 மே, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்கைடு
ரிஷபன் 

ரெங்கவிலாச மண்டபத்தின் முன் தான் வழக்கமாய் உட்கார்வது. பிறகுதொண்டரடிப்பொடியாழ்வார் சந்நிதி படிக்கட்டில். 

ராகவன் மட்டுமில்லை. இன்னும் நாலைந்து பேர். வெய்யில் இறங்கி இருக்கும். அது தணிந்ததும் தான் இட மாற்றம்.

நிரந்தர வேலை என்று எதுவுமில்லை. சமையலுக்கா.. பரிமாறவா.. எடுபிடி வேலை எதுவானாலும். அன்றைய தினக்கூலி கையில். செலவுக்கு வைத்துக் கொண்டு மீதியை அம்மாவிடம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் மட்டும் விடாமல் போய் விடுவான். பெயர் கொடுத்து வைத்திருந்தான். அழைப்பு வந்தால் ஓட்டம்.

' எத்தனை நாள் இப்படி அல்லாடுவான்' 

நாச்சியார்ப்பாட்டி விசாரிப்பிற்கு அம்மாவிடம் பதில் இல்லை. 

' ஏண்டி இவனுக்கு நம்ம கமலி வயசாச்சில்ல.. அவளுக்கு ரெண்டு குழந்தை பொறந்தாச்சு.'

அம்மாவிற்கு அந்த நேரம் காது கேட்காது. நல்ல வேளை இவனுக்கு முன் பிறந்த பூமாவைக் கட்டிக் கொடுத்தாச்சு. அந்த மாப்பிள்ளை இவனுக்கு வேலை தருவதாய்ச் சொல்ல.. போய்விட்டு, இரண்டே நாளில் திரும்பி விட்டான். 

' இங்கேயே இருக்கேன்மா'

அவன் அப்பாவைப் போல் நல்ல வளர்த்தி. பின்னாலிருந்து பார்த்தால் அந்த வயதில் அவன் அப்பா இதே போல்தான் இருந்தார்.

அவரும் இவனைப் போல் வேலை இல்லாமல் அலைந்து போய்ச் சேர்ந்தார். 

' டேய் ராகவா.. இன்னிக்கு பெரிய திருமஞ்சனம்.. குடம் எடுக்கணும் வரியா '

போய் விடுவான். செப்புக்குடம் தோளில் வைத்து ஜிங்ஜிங்கென்று அசராமல் வருவான். இவனோடு வந்தவர்கள் நல்ல வேலைக்குப் போய் விட்டார்கள். இப்போது அடுத்த செட் ஆட்கள் வந்தாச்சு.

இன்றும் உட்கார்ந்திருக்கிறான். நேற்றும் வேலை இல்லை. இன்றும் இதுவரை அமையவில்லை. ஆழ்வார் திருநட்சத்திரம் என்று கிடைத்த பிரசாதம் மட்டும்.

ஒற்றையாய் உட்கார்ந்து அலுப்பு. சகாக்களுக்கு ஏதோ வேலை. எவ்வளவு நேரம் தான் வேடிக்கை பார்ப்பது. 

எழப் போனபோது அந்தக் குரல்.

" கோவில் சேவை எத்தனை மணி வரைக்கும் "

அவளுக்கு 30..35 வயதிருக்கலாம். அல்லது குறைவாகக் கூட. முகத்தில் இன்னமும் ஒரு குழந்தைத்தனம்.

" இப்போ நடை சார்த்தியிருப்பாங்க. ஏழு மணிக்கு மேல் தான் "

" நீங்க கைடா '

" என்ன"

" இல்ல.. எனக்குக் கோவில் சுத்திக் காட்டணும். யாராவது தெரிஞ்சா.."

ராகவன் சட்டென்று முடிவெடுத்தான்.

" வாங்க.. "

அவள் குஷியாகி விட்டாள். 

" பொறுமையாப் பார்க்கலாம்.. கொஞ்சம் பார்த்தாக் கூட முழுசா புரியணும் "

ஒவ்வோரிடமாய் நிறுத்தி.. நிறுத்தி விவரித்து அழைத்துப் போனான். விளக்கும்போது தான் அவனுக்கே இவ்வளவு தெரிகிறது என்று ஆச்சர்யம். 

" சக்கரத்தாழ்வார் சந்நிதி.. நேர் எதிர்ல பாருங்க.. பார்த்தசாரதி.. தேர்ல அர்ஜுனனுக்கு உபதேசக் கோலம்.. உற்சவர் கையில் சங்கு சக்கரம் இடம் மாறி இருக்கும் "

" ஓ.. ஏன் அப்படி"

ஆர்வமாய்க் கேட்டாள். பக்கத்தில் உடையவர்.. எதிரில் சேஷராயர் மண்டபம்.. பெரிய பெரிய தூண்கள்.. ஆயிரங்கால் மண்டபம்.. மணல்வெளி.. 

அவளும் அவசரப்படவில்லை. நிதானமாய் ரசித்துப் பார்த்தாள். 

" சந்நிதி இப்போ திறந்திருப்பா.. போலாமா"

" நாளைக்கு நீங்க இருப்பீங்களா.."

" ஏன்.."

" மூலஸ்தானம் எல்லாம் நாளைக்கு வச்சுக்குவோம். இன்னிக்கு வெளிப் பிராகாரம் முழுக்க சுத்திக் காட்டிருங்களேன். ப்ளீஸ்"

வித்தியாசமாய் இருந்தது அவள் கோரிக்கை. அவனுக்கென்ன.. திருச்சுற்றுகள் எல்லாம் அழைத்துப் போனான்.

மணி ஒன்பது. 

கை கூப்பினாள். 

" நாளைக்கு எப்போ வரட்டும் "

" நீங்களே சொல்லுங்க. இன்னிக்குப் பார்த்த அதே இடத்தில் இருக்கேன். "

" ப்ளீஸ்.. மாட்டேன்னு சொல்லாமல் இதை வாங்கிக்குங்க "

ரூபாய் நோட்டுகளைத் திணித்தாள். எதிர்பாராத தொகை.

" வரேன்"

அம்மாவுக்கு ஆச்சர்யம். முழுப் பணமும் ஏனோ அப்படியே கொடுத்து விட்டான்.

" என்னடா இன்னிக்கு"

சிரித்து விட்டு படுத்துக் கொண்டான்.

மறு நாளும் வந்து விட்டாள். 

" இவ்வளவு தகவல் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. "

வெட்கத்துடன் சிரித்தான்.

குடம் எடுப்பதால் அந்த பரிச்சயத்தில் குறுக்கே அழைத்துப் போக முயன்றபோது தடுத்து விட்டாள்.

" க்யூலயே போவோம் "

பேசிக் கொண்டே வரிசையில் நகர்ந்தார்கள். எல்லா சந்நிதிகளிலும் சேவை ஆச்சு.

ரெங்கவிலாச மண்டபத்திற்கு வந்தார்கள்.

" எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. ''

மீண்டும் சில நோட்டுகளை கொடுக்க வந்தாள்.

கை கூப்பினான்.

" நேத்து கொடுத்ததே ஜாஸ்தி.. போதும்.. உங்க திருப்திக்கு ஒரே ஒரு பத்து ரூபா கொடுங்க இப்போ"

அவள் கண்களில் ஆச்சர்யம். அவன் பார்வையில் ஒரு திடம்.. தீர்மானம் பார்த்து கேட்டதைக் கொடுத்தாள். 

போய் விட்டாள். 

ஒரு வாரம் கழித்து இவனுக்கு அழைப்பு வந்தது. வழக்கமாய் ரத்த தானம் செய்யும் க்ளினிக். போனான்.

கொடுத்து விட்டு கிளம்பும் போது அந்த உறவினர் பணம் கொடுக்க வந்தபோது சிரித்துக் கொண்டே மறுத்து விட்டான்.

ரிசப்ஷனில் இருந்தவள் தெரிந்தவள்.

" ராகவன்.. உங்களை ரெண்டு வாரம் முன்னாடி யாரோ விசாரிச்சாங்க.. நீங்க டொனெட் பண்ண ஃபேமிலில ஒருத்தர். ம்ம்.. பேர் கூட ஏதோ சொன்னாங்க.. பணம் வேண்டாம்னு சொன்னதும் மனசுக்குக் கஷ்டமாயிருச்சு.. அவருக்கு ஏதாச்சும் வேலை பார்த்துத் தரலாமான்னு.. உங்களுக்கு இங்கேர்ந்து போக இஷ்டம் இருக்காது.. அவர் ஒரு டைப்புன்னு சொல்லிட்டேன் .. சரி தானே "

" என்ன.. "

" கோவில்ல தான் எப்பவும்.. அவர் அம்மாவை விட்டு போக மாட்டார்னு"

வெளியே வந்த ராகவனுக்கு எல்லாமே புரிந்துதான் விட்டது இப்போது.

76 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…

  கீதா

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. அதான் தலைப்புலையே இருக்கே.. கிர்ர்ர்ர்ன்ன்

   நீக்கு
 3. ஹை ஹை ஹை ஹை நான் தான் இன்னிக்கு ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்....

  ஹப்பா...ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது மாபெரும் சதி! நான் வரச்சே இங்கே யாருமே இல்லை! தி/கீதா எப்படியோ உள்ளே நுழைஞ்சுட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 5. அன்பின் ஸ்ரீராம் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் கீதா ரெங்கன்.

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..

  பதிலளிநீக்கு
 8. மிக அருமை! புரிந்தது ராகவனுக்கு மட்டுமா? நமக்கும் தான்!

  பதிலளிநீக்கு
 9. //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது மாபெரும் சதி! நான் வரச்சே இங்கே யாருமே இல்லை! தி/கீதா எப்படியோ உள்ளே நுழைஞ்சுட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

  அக்கா... அவிங்க ஏற்கெனவே உள்ளாற இருந்தாக....

  பதிலளிநீக்கு
 10. முட்டி மோதி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தவர்களுக்கும்

  ஏணி வைத்து சுவர் ஏறிக் குதித்து எழுந்து வந்தவர்களுக்கும்

  நல்வரவு...

  இப்படிக்கு,
  பொறுமையாக வரிசையில் நின்று சுண்டல் வாங்கித் தின்போர் சங்கம்...

  பதிலளிநீக்கு
 11. // மிக அருமை! புரிந்தது ராகவனுக்கு மட்டுமா? நமக்கும் தான்! //

  நீங்க ரொம்ப ஃபாஸ்ட் ரீடர் அக்கா...

  பதிலளிநீக்கு
 12. இயல்பான நடை நேரே பார்ப்பது போல்!

  பதிலளிநீக்கு
 13. //இப்படிக்கு, பொறுமையாக வரிசையில் நின்று சுண்டல் வாங்கித் தின்போர் சங்கம்...//

  ஹா.. ஹா.. ஹா...

  பதிலளிநீக்கு
 14. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது மாபெரும் சதி! நான் வரச்சே இங்கே யாருமே இல்லை! தி/கீதா எப்படியோ உள்ளே நுழைஞ்சுட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

  ஹா ஹா ஹா ஹா கீதாக்கா அதான் சந்தோஷத்துல.....இவ்வளவு நேரம் திக்கு முக்காடி....ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 15. நானும் உள்ளேயே தான் குடித்தனம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்குத் தெரியாமல் ஏதோ ரூமுக்குள் ஒளிஞ்சுட்டு இருந்திருக்காங்க! இது அநியாயம் இல்லையோ! விசாரணை வேண்டும்!

  பதிலளிநீக்கு
 16. துரை அண்ணா ஹா ஹா ஹா ஹா...

  என்னை விட்டுடாதீங்க...நானும் அந்த லிஸ்ட்லதான் ஏதோ இன்னுக்கு முந்திக்கிட்டேன்....அதுக்காக சுண்டல் தராம போய்டாதீங்க....ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 17. ரிஷபன் அண்ணா கதை...செம....எத்தனையோ விஷயங்கள் புரிந்தது....சுருக்கமாக ஆனால் அனேக விளக்கங்கள். அர்த்தங்கள்....நானும் முயற்சி பண்றேன் பண்றேன்....முடில....

  ரிஷபன் அண்ணா செம கதை....

  கீதா

  பதிலளிநீக்கு
 18. இப்படியும் சிலர்....
  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல்!...

  அப்படியே வாய்க்கு எட்டினாலும்
  விழுங்குதற்கு (அனுபவிக்க) விதி வேண்டுமே....

  பதிலளிநீக்கு
 19. அக்கா... அவிங்க ஏற்கெனவே உள்ளாற இருந்தாக....//

  ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் இப்படி ரகசியத்தைப் போட்டு உடைச்சுட்டீங்களே!!! ஹா ஹா

  நான் 5.15க்கே ஓபன் பண்ணி வைச்சுருவேன் இல்லைனா சில சமயம் திறக்காது. வெங்கட்ஜி தளமே இன்னிக்குச் சுத்தி சுத்தி...ஸ்ரீராம் அங்கு வந்தாரா தெரில இனிதான் பார்க்கணும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 20. /// விஜாரணை வேண்டும்.. கீதாS..///

  ஆரம்பிச்சுட்டாங்கப்பா!....

  பதிலளிநீக்கு
 21. அந்த ரங்கனையும்
  ரங்க விலாசத்தையும்
  விசாரிச்சுண்டு வர்றவாளுக்கு
  விலாவாரியாச் சொல்றதுக்கும்
  ஒரு ராகவன் வேணுமோல்லியோ!....

  பதிலளிநீக்கு
 22. அது சரி...
  கைடு யாரு?...
  ரங்கனா...
  ராகவனா?...

  பதிலளிநீக்கு
 23. அந்தப் பொண் கோவில்பக்கம் திரும்பவும் வருவாளா? பாக்கணும்போல இருக்கு..

  பதிலளிநீக்கு
 24. அருமையான கதை.
  ஏதாவது கொடுக்க நினைத்த பெண் கொடுத்து விட்டார்.
  ராகவன் கதாபாத்திரம் அருமை.

  பதிலளிநீக்கு
 25. என்ன ஒரு அரிய கதை. அரிய மனுஷன். ராகவன். அம்மா பெற்ற ரத்தினம்.
  உலக மஹா புருஷனைச் சந்தித்த மகிழ்ச்சி ரிஷபன் சார்.

  இது போல மனிதர்கள் இருக்கிறார்களா இன்னும்.
  ரங்கனுக்குக் குடம் தண்ணீர் கொண்டுவந்தார் என்றால், காஞ்சிபுரம் ஸ்ரீ ராமானுஜ சேவையே நினைவுக்கு வருகிறது.

  மிக மிக அருமை.
  அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 26. ஜன்னல் வழியே வீசும் காற்று உடலை இதமாக வருடிச் செல்வதைப் போல சுகமான கதை. வாழ்க!

  பதிலளிநீக்கு
 27. நானும் உள்ளேயே தான் குடித்தனம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்குத் தெரியாமல் ஏதோ ரூமுக்குள் ஒளிஞ்சுட்டு இருந்திருக்காங்க! இது அநியாயம் இல்லையோ! விசாரணை வேண்டும்!//

  ஹை கீதாக்கா நீங்களும் உள்ளேயே தான் இருந்தீங்களா....உங்களுக்கும் எனக்கும் ஹைட் அண்ட் சீக்..ஹை நல்லாருக்கே இந்த ஆட்டம் கூட..ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 28. நன்றி செலுத்தும் விதங்களில் இதுவும் ஒன்று.

  பதிலளிநீக்கு
 29. ராகவன் மனதில் மிகவும் உயர்ந்து நிற்கிறான்.....இப்படியான கேரக்டரை நானும் என் கல்லூரிக் காலத்தில் பாட்டியின் ஊரில் கண்டதுண்டு. இப்படித்தான். என்ன வேலை கிடைக்கிறதோ அன்றைய தினப்படி வாழ்வு ஓடும். திருமஞ்சன தீர்த்தம் தோளில் எடுத்து வருவதிலிருந்து சுவாமி வாகனத்தைத் தோளில் ஏந்துவது, மடைப்பள்ளி வேலைகள், வெளியில் சமையல் வேலைக்கு உதவுவது என்று. சிலவற்றிற்குக் காசு வாங்கிக் கொள்வார் சிலதுக்கு வாங்கிக் கொள்ளமாட்டார். முதியோருக்கு உதவுவார். கைபிடித்து அழைத்துச் சென்று கோயில் காட்டுவார். மடப்பள்ளிப் பிரசாதம் வாங்கிக் கொடுப்பார்.

  எனக்குத் தெரிந்து அவர் இதுவரை மணம் முடிக்கவில்லை. அவரும் கோயிலைச் சுற்றிக் காட்டியதுண்டு. கதையில் வரும் பெண் போல வந்தாளா என்று தெரியவில்லை. அவள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?!!!!!!!

  ரத்ததானம் என்று பல பரிமாணங்களில் ராகவன் ஒளிர்கிறான்...இல்லை ஸாரி ஒளிர்கிறார்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 30. ஏகாந்தன் அண்ணா எனக்கும் நீங்கள் சொல்லியிருப்பது போல் தோன்றியது....கொஞ்சம் வேறு விதமாக...அவள் மீண்டும் ராகவனைக் கண்டாளோ? என்று!!!

  கதைக்குள் கதை போல நிறைய அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது...

  பாருங்க நானும் தான் இப்படியான ஒரு கேரக்டரை கல்லூரிக் காலத்தில் கண்டிருக்கிறேன்..ஆனால் ரிஷபன் அண்ணா அதையே கதையின் நாயகனாகக் கொண்டு வந்து மிளிரச் செய்துவிட்டார்!! நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்தாலே நிறைய கிடைக்கும்...ஆனால் அதைக் கதையாகக் கொண்டுவருவது என்பது பெரிய கலை. ரிஷபன் அண்ணாவிற்கு அது வெகு சுலபமாக வருகிறது. ஃப்ளோ!!! மிகவும் ரசித்தேன் அண்ணா...

  கீதா

  பதிலளிநீக்கு
 31. அந்த ரங்கனையும்
  ரங்க விலாசத்தையும்
  விசாரிச்சுண்டு வர்றவாளுக்கு
  விலாவாரியாச் சொல்றதுக்கும்
  ஒரு ராகவன் வேணுமோல்லியோ!....//

  ஆமாம் துரை அண்ணா. ஒரு வேளை ராகவன் அதைத் தொடர்கிறாராக இருக்கலாம்!!! ஆனால் என் கவலை அந்தப் பெண் வந்தாளா? வருவாளா? அவள் வருவாளா?!!!! அவள் வருவாளா!!! ராகவனுக்குக் கைடாக!!!! நடத்திச் செல்ல...( ரிஷபன் அண்ணா....இதுகள் எல்லாம் என்னென்னவோ பேசிக்கறதேனு நினைச்சுடாதீங்க...ஹா ஹா ஹா ஹா ஹா !!!!)

  முடிவிலும் அர்த்தங்கள் ஹிடன்!!! செம...

  கீதா

  பதிலளிநீக்கு
 32. ராகவன் வித்தியாசமான கேரக்டர். ரத்ததானம் செய்யும் எண்ணம் இருப்பதாலும் அதற்கு உதவியோ பணமோ பெற்றுக் கொள்ளாத்தாலும் பணத்தின்பின் செல்லும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. சிலர் வாழ்க்கை இப்படியே இருந்துவிடுகிறது.

  அந்தப் பெண்ணை ஏன் ராகவனுடன் முடிச்சுப் போடுவதுபோல் பலர் நினைக்கணும்? கியூவில்தான் செல்லணும் என்பதில் அவள் மேன்மை தெரிகிறது.

  ரிசப்ஷனிஸ்ட் ராகவனுக்கு உதவி செய்தாளா இல்லை அவனுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பைத் தட்டிவிட்டாளா?

  கோவில் சேவை மிகவும் கடினமானது, இவ்வுலகிற்கான பொருள் கிடைக்காத வேலை. ஆத்ம திருப்தி மிஞ்சும். நிறைய டெடிகேட்ட் கைங்கர்யபர்ர்களைப் பார்க்கும்போது ஆச்சர்யத்திலும் அவர்களது பக்தியிலும் என் தலை தாழும், நாணும்.

  ரிஷபன் சார்.. ஒவ்வொரு தடவையும் வித்தியாசமான கதைச் சூழல். பாராட்டுகள். உங்கள் கதையைப் பலவிதமாக அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும். பொதுவா ஒரு முடிவோடு கதையை முடிக்கறதில்லை. பொயடிக் ஜஸ்டிஸ் கொடுக்கறதில்லை. சாதாரணமா, அவள் ராகவனைப் பார்த்து நாணத்தில் தலை கவிழ்ந்தாள், ரத்த தானத்துக்குச் சென்ற ராகவனிடம் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை நீட்டினார் , பணத்தை வாங்கிய அம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் என்றெல்லாம் முடிக்காகத்தே உங்கள் கதைகளை வித்தியாசப்படுத்துகிறது. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை உற்சாகப்படுத்தி விட்டீர்கள்.
   அன்பு நன்றி

   நீக்கு
 33. வழக்கம் போல்..மிக அருமை...

  எங்கள் கற்பனை இப்பொழுது நீள்கிறது..அப்பெண்ணை கொண்டு...

  பதிலளிநீக்கு
 34. / மிக அருமை! புரிந்தது ராகவனுக்கு மட்டுமா? நமக்கும் தான்! //

  நீங்க ரொம்ப ஃபாஸ்ட் ரீடர் அக்கா...//

  ஆமாம் ஸ்ரீராம் நானும் பல கதைகள்ல பார்ப்பென்..நான் பாதிதான் வந்திருப்பேன் அதுக்குள்ள கீதாக்கா கமென்டே போட்டுருப்பாங்க..

  மீ வெரி ஸ்லோ...எப்பவுமே....அதான் முதல்ல கமென்ட் போட்டுட்டு அப்புறம் இன்னும் நிதானமா வாசித்து...ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒவ்வொரு அர்த்தம்...புலப்படும்...அதுவும் ஒரு சில வரிகள் அப்படியே நிக்க வைச்சுடும்.....

  அக்கா செம ஃபாஸ்ட்!!! கீதாக்கா இது பெரிய விஷயம் தெரியுமா...மூளை நல்லா வேலை செய்யுதுனு அர்த்தம்!!! க்ராஸ்பிங்க்!!! பாராட்டுகள்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 35. ரிஷபன் ஸாரின் கதை வெகு சிறப்பு. அழகான வரிகளில் மனதைத் தொட்ட நல்லதொரு கேரக்டர் ராகவன். இப்படியான மகன் கிடைக்க அந்தத் தாய் கொடுத்துவைத்திருக்க வேண்டும். முடிவு அருமை புரிந்தது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 36. அந்தப் பெண்ணை ஏன் ராகவனுடன் முடிச்சுப் போடுவதுபோல் பலர் நினைக்கணும்? //

  நெல்லை இது முடிச்சுப் போடலை...ஒரு பெண் ஆண் என்றால் அது இப்படித்தான் முடியணும் என்று இல்லைதான்...ஆனால் இப்படி நினைத்துப் பார்ப்பதிலும் தவறு இல்லையே. இதுவும் மென்மையான உணர்வுதான். ராகவன் பாவம் தானே. அவனுக்கும் ஒரு கைடு வந்தால் நல்லதுதானே என்ற எண்ணம். அன்பு என்பது இவ்வுலகில் கிடைப்பதற்கு அரிய விஷயம். அது அந்த ராகவனுக்குக் கிடைத்தால் நல்லதுதானே.

  ஏனென்றால் இப்படியானவர்கள் வாழ்க்கையில் தனிமையில் வாழ்ந்துவிடுகிறார்கள். தவறில்லை கல்யாணம் தான் வாழ்வின் முடிவு என்று இல்லைதான். என்றாலும் கதையை வாசித்த போது அப்படித் தோன்றியதை தவிர்க்க இயலவில்லை. ஓர் எதிர்பார்ப்பு வந்தது. மனிதனுக்கு அதுவும் அவசியம்தானே..ஸ்வாரஸ்யம்தானே...

  கீதா

  பதிலளிநீக்கு
 37. @ கீதா: ..ஏகாந்தன் அண்ணா எனக்கும் நீங்கள் சொல்லியிருப்பது போல் ...//

  நான் என்னத்தைச் சொன்னேன்? ராகவனல்லவா என் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து தன் பின்னூட்டத்தைத் தட்டிவிட்டது !

  பதிலளிநீக்கு
 38. ரசித்துப் பாராட்டிய அனைவருக்கும் என் அன்பின் நன்றி _/|\_

  பதிலளிநீக்கு
 39. //அந்தப் பெண்ணை ஏன் ராகவனுடன் முடிச்சுப் போடுவதுபோல் பலர் நினைக்கணும்? // அப்படி மட்டும் கதையின் முடிவோ அல்லது யூகம் செய்யும்படியோ இருந்திருந்தால் இதன் மேன்மை குறைந்திருக்கும். ராகவன் ராகவனாகவே இருப்பதும், அந்தப் பெண் யாரோ ஒருத்தியாகவே இருப்பதும் தான் கதைக்குப்பெரும் பலம். பொதுவாகவே சிறுகதைகளின் முடிவை நாம் பல விதங்களில் யூகிக்க வேண்டி இருக்கும். பல சமயங்கள் ஒரு முடிவோடு கதைகள் அமைந்தாலும் இப்படியான கதைகள் நம்முள் சிந்தனைகளைத் தோற்றுவித்துக் கிளைக்கதைகளை உண்டாக்கும். ரிஷபன் எப்போதுமே முடிவு "தொக்கி நிற்பது" போலவே எழுதுவார். முன்னர் ஒரு குறுநாவல் மங்கையர் மலரில் எழுதி இருந்தார். அதன் முடிவும் கிட்டத்தட்ட நாம் தான் யூகிக்கணும்! அது போல் அமைந்திருந்தது. வங்கியில் வேலை செய்யும் ஒரு இளம்பெண், சராசரி பிராமணக்குடும்பத்தில் பிறந்தவளைக் கூட வேலை செய்யும் வேற்று ஜாதி ஆண் காதலிக்கிறான். இதற்காகவே அவள் தந்தையை சிநேகம் பண்ணிக் கொண்டு வீட்டுக்கு வந்து போகிறான். ஆரம்பத்தில் தொழிற்சங்கத்தில் ஈடுபாடுடன் கடினமான வார்த்தைப் பிரயோகங்களைக் கையாண்டவன் இவளைப் பார்த்தவுடன் (இருவரில் யாரோ மாற்றல் ஆகி ஒரு வங்கிக்கிளைக்கு வந்திருப்பார்கள்) மென்மையாக மாறி விடுகிறான். வங்கித் தேர்வுகளைப் படித்து முன்னுக்கு வரத் துடிக்கிறான். ஒரு கட்டத்தில் அவளுக்குத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வது தெரிந்து அவள் வீட்டிற்கே வந்து அவள் தந்தையைப் பார்த்துப் பெண் கேட்கிறான். தந்தை ஆரம்பத்தில் மகளைச் சந்தேகப்பட்டாலும் அவன் சென்றபிறகு மகளிடம் பேசியதில் தெளிவு பெறுகிறார். மகள் எல்லாம் தந்தையின் முடிவு என்று விட்டு விட்டு நிச்சலனமாகப் போய் விடுகிறாள். இனி??? அதான் கதையின் முடிவு. இந்த இடத்தில் கதை முடிந்து விடும். முடிவு நாம் தான் யூகிக்க வேண்டும். இதே போல் இன்னொரு குறுநாவலும் வேலை செய்யும் பெண்களின் (இதுவும் வங்கி வேலை செய்யும் பெண் தான்) கஷ்டம் பற்றியும் மாமியார் போன்றோர் வீட்டில் இருந்தாலும் எவ்வித உதவியும் கிடைக்காமல் தனியே போராடுவதையும் பற்றி! அதில் உள்ள சில சந்தேகங்களைக் கேட்டு ரிஷபனுக்கு அப்போது கடிதம் கூட எழுதி இருந்தேன். கல்கிஅலுவலகத்துக்கு! அவங்க அனுப்பினாங்களா என்னனு தெரியலை! :))))) பதில் வரலை. கல்கியிலும் போடலை! நம்மைமாதிரி ஆட்களோடதெல்லாம் கல்கியில் வரணும்னு ஆசைப்பட்டால் முடியுமானு மனதைத் தேற்றிக் கொண்டேன். இது சுமார் பத்து, பதினைந்து வருடங்கள் முன்னர்! :))))) தூள் தூளாகி இருந்த அந்தக் கல்கியின் பக்கங்களை இப்போத் தான் கழிக்க வேண்டி ஆனது! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மங்கையர் மலர் எனக்கு அனுப்பவில்லை. இப்போது தான் நீங்கள் எழுதியதே தெரியும்.

   ஒரு வருடம் கழித்து வரச் சொல்லியிருப்பார்.

   நீக்கு
 40. கதையைப்படிக்கும்போதே கிராமங்களில் இம்மாதிரிப் பார்த்தவர்களின் ஞாபகம் வருகிறது. வசதி இல்லாத குடும்பம்,படிப்பும் இல்லை. ஆனால் ஸமூக ஸேவை உயிர்நாடி. நல்ல ஸுபாவம். வாழ்க்கையில் எப்படி முன்னுக்கு வருவார் என்ற கேள்விக் குறியில் இவர்கள் இருக்கும்போதே, ஏதாவது ஒரு ஸம்பவங்கள் நடந்து நம்ப முடியாத அளவிற்கு உயர் மட்டம் கிடைத்து விடும். அம்மாதிரி ஒருவருக்கு, என்ன பலபேருக்கு நன்மைகளும் நடந்து விடுகிறது. ஒரு ஸம்பவம் எழுதினேன். எழுதும்போதே ஓடிவிட்டது. ஸரி பொதுவாய் எழுதினேன். ரிஷபன் அவர்களின் கதை பலவித முடிவுகளை எட்டிய உண்மைக்கதைகளின் ஞாபகம் வந்தது. அருமையாக சிந்திக்க வைக்கும் கதை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 41. நன்றி கீசா மேடம்... நல்லா விளக்கமா சொல்லியிருக்கீங்க. நான் இங்குதான் ரிஷபன் சார் கதைகளைப் படித்தேன். வாய்ப்புக் கிடைக்கும்போது அவரின் நாவல்களைப் படிக்கிறேன். அவர், கேரக்டர்களையும், உரையாடல்களையும் மட்டும் கொடுத்துட்டு நம்மை அனுமானிக்கவைக்கிறார்.

  ஒரு விதத்தில் அதுவும் நல்லா இருக்கு. ஆனால், ஒருத்தருடைய கேரக்டர் (அவர் பேசும் உரையாடல்களை வைத்து) அல்லது அந்தச் சம்பவம் இதை நோக்கியா என்று கரெக்டா தெரிவதில்லை. அது நம்ம அனுமானத்தை வைத்து என்றாகிவிடுகிறது. இதற்கு முன்பு எழுதிய 'அப்பா மகன் மருத்துவமனை' கதையிலும், அப்பாவை, நல்லவர் என்றும் நாம் அனுமானிக்கலாம், சுயநலவாதி என்றும் அநுமானிக்கலாம். அப்போ அது நமக்கு கொஞ்சம் அதிருப்தியா ஆகிடறது. (இப்படித்தான் என்று உறுதியா தெரியாததுனால) இப்படியா என்று ரிஷபன் சாரைக் கேட்டால், இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று சொல்லிடறார். இது கிட்டத்தட்ட, ஒரு புதிரைக் கொடுத்துட்டு, நம்ம இரண்டு பேரும் இரண்டு விடைகளைச் சொல்லும்போது, நடுவரா கதை ஆசிரியர், இதுதான் என்று சொல்லாமல் இருந்துவிடுவது போன்று. வாழ்க்கையிலும் இப்படித்தான். ஒருவர் சொல்லும் பதிலை வைத்து நாம் ஒன்று புரிந்துகொள்கிறோம். அவர் மனதில் என்ன நினைத்துச் சொன்னார் என்பது கடைசிவரை நமக்குத் தெரியாது. இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். (பெண் அல்லது நண்பர் அல்லது உறவு, நமக்கு இந்தாப்பா ஸ்வீட், உனக்காக வாங்கிவந்தேன் என்று சொல்லும்போது, அது நம்மேல் வைத்துள்ள பாசம் என்று நெகிழ்ச்சிப்படலாம், ஒருவேளை கொடுத்தவர் மனதில், 'இவன் கிடக்கறான்.. டயபெடீஸ் வரட்டும். என்று நினைத்திருந்தால்.....

  அவருடைய 'நாட்', 'உரையாடல்கள்', 'சம்பவம்' ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆகவும் வித்தியாசமான களமாகவும் இருக்கு.

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் சகோதரரே

  ரிஷபன் சகோதரர் எழுதிய கதை மிகவும் அருமையான கதை. கதை நாயகன் ராகவனின் மனதும், அந்தப் பெண்ணின் மனதும் எப்படிப்பட்டது என அனுமானித்து புரிந்து கொள்ள முடிந்தது. மிக அருமை

  பின்னூட்டகங்களில் கூறியுள்ளது போல் கதையின் முடிவு பல கதைகளின் தொடக்கமாக இருக்கிறது. இந்த மாதிரி எழுத தனி திறமை வேண்டும். அனைவருக்கும் வருவதில்லை. கதை என்றுமே மனதில் நிற்கிறது.. இல்லையில்லை.. அமர்ந்தே விட்டது. பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 43. நம் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு நிமிடத்தில் எல்லா விடைகளும் தெரிந்திருப்பதில்லை. எல்லா மனிதர்களும் எப்போதும் ஒன்று போல் இருப்பதில்லை. என் சுவாரசியம் இதைக் கவனிப்பதில்.. பதிவதில்.

  பதிலளிநீக்கு
 44. எனக்கென்னவோ கதை மாதிரியே தெரியலை . யதார்த்தமான ஒரு நிகழ்வாகவே இருந்தது . அருமை சார்

  பதிலளிநீக்கு
 45. அப்படி மட்டும் கதையின் முடிவோ அல்லது யூகம் செய்யும்படியோ இருந்திருந்தால் இதன் மேன்மை குறைந்திருக்கும். ராகவன் ராகவனாகவே இருப்பதும், அந்தப் பெண் யாரோ ஒருத்தியாகவே இருப்பதும் தான் கதைக்குப்பெரும் பலம். பொதுவாகவே சிறுகதைகளின் முடிவை நாம் பல விதங்களில் யூகிக்க வேண்டி இருக்கும். பல சமயங்கள் ஒரு முடிவோடு கதைகள் அமைந்தாலும் இப்படியான கதைகள் நம்முள் சிந்தனைகளைத் தோற்றுவித்துக் கிளைக்கதைகளை உண்டாக்கும். ரிஷபன் எப்போதுமே முடிவு "தொக்கி நிற்பது" போலவே எழுதுவார்.//

  கீதாக்கா மிகவும் சரியே!! ஆனால் பல அனுமானங்களில் இப்படியும் ஒரு அனுமானம் வந்ததென்னவோ உண்மை.....இன்னும் பல அனுமானங்கள் வந்தனதான்....முடிவு நெல்லை சொல்லியிருப்பது போல் அந்த ரத்ததானம் பற்றிச் சொல்லும் பெண் ஏன் ராகவனுக்காக ஏன் அவள் சொல்லணும்? ராகவன் என்ன பதில் சொல்வான் என்பது இல்லாமல் அவளே ஏன் சொன்னாள் என்ற கேள்வியும் வரத்தான் செய்கிறது. ராகவனிடம் விவரம் மட்டும் சொன்னால் போதுமே ராகவன் என்ன டிசைட் பண்ணுறானோ பண்ணிக்கட்டும்....என்பதில்லாமல்...என்று பல அனுமானங்கள்....அதான் கதைக்குள் கதை போல நிறைய அர்த்தங்கள் பொதிந்தவை....

  இன்னும் ரிஷபன் அண்ணாவின் கதைகளையும் நாவல்களையும் வாசிக்க வேண்டும். என் எழுத்தை மேம்படுத்திக் கொள்ள..பாரா பாராவா நான் எழுதுவதை எப்படி ரத்தினச் சுருக்கமாக எழுதுவது அதே சமயம் அதில் உணர்வுகளும் தொக்கி நிற்கணும் என்ற வித்தையைக் கற்கணும்...(கீதாவுக்குக் கொஞ்சம் கஷ்டம்தான் ஹா ஹா ஹா ஹா இருந்தாலும் முயற்சிதான்...)

  கீதா

  பதிலளிநீக்கு
 46. மிகவும் அருமை பாராட்டுக்குரியது

  பதிலளிநீக்கு
 47. @ஏகாந்தன் //நான் என்னத்தைச் சொன்னேன்? ராகவனல்லவா என் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து தன் பின்னூட்டத்தைத் தட்டிவிட்டது ! //

  ஹா ஹா ஹா ஹா ஹா...ஏகாந்தன் அண்ணா இன்று பலரது உள்ளத்திலும் ராகவன் தான்....ஹா ஹா ஹா ரிஷபன் அண்ணாவின் வெற்றி அது!!!

  எனக்கும் என் ஊரில் அப்போது பார்த்த அந்த மனிதர் நினைவுக்கு வந்தார். என் அப்பாவிடம் கேட்க வேண்டும் அவரைப் பற்றி...

  கீதா

  பதிலளிநீக்கு
 48. பெயரில்லா29 மே, 2018 அன்று PM 3:58

  கடைசி வரிகளாக

  "இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் கோயிலில்அதே இடம். ராகவன் சோம்பல் முறித்துக் கொண்டு நாலா பக்கமும் பார்வையைச் சுழற்றினான். ஆ, அங்கே வருவது யார் ? அவளேதான் !"

  இப்படி முடிக்காதது பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
 49. //இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் கோயிலில்அதே இடம். ராகவன் சோம்பல் முறித்துக் கொண்டு நாலா பக்கமும் பார்வையைச் சுழற்றினான். ஆ, அங்கே வருவது யார் ? அவளேதான் !"// இம்மாதிரி முடிவுகள் கொண்ட கதையை ரிஷபனே எழுதி இருக்கார்; இருக்கலாம்.ஆனால் இந்தக் கதையில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத ராகவனை இப்படிச்சொல்ல முடியாது! சொல்லவும் கூடாது! ஆகவே தான் கதை நீங்க சொன்னாப்போல் பாராட்டுக்கு உரியது! இல்லைனா எத்தனையோ கதைகளில் இதுவும் ஒன்று எனக் கடந்து போயிடும்!

  பதிலளிநீக்கு
 50. அருமையான கதையை ஒரு நல்ல மனிதரை கண்முன்னே காட்சிப்படுத்தியதற்கு நன்றி ரிஷபன் சார் .
  இந்த ராகவன் போன்றோர் இன்னும் பலர் இருக்கிறார்கள் தனக்கு தேவையானது இவ்வளவுதான் என்று அவர்கள் தீர்மானிக்கிறாங்களோ இல்லையோ ஆனால் பிறர் இவர்களுக்கு இது போதும் இவர்கள் இப்படி என்று ஒரு முடிவெடுத்து அவர்களை மேலேற வைக்க மாட்டேன்கிறாரங்களோ தெரில .ஆனால் இறைப்பணி அவர்களை கைவிடுவதில்லை .மனதில் கோபுரமாய் உயர்ந்து நிற்கிறார் ராகவன் எனும் சாமிப்பிள்ளை

  பதிலளிநீக்கு
 51. கதைகள் பல விதம் புட்டுப்புட்டு சொல்வது வாசகர்களின் அனுமானத்துக்கு விடுவது தனக்கு தோன்றும்நியாயங்களைக் கதையில் கொண்டுவருவது எட்ஸெட்ரா ஆனால் மனதில் தோன்றுவதை கூறாமலேயே சென்று விடுவதுதான் தள வாசகர்களின் மனப்போக்கு

  பதிலளிநீக்கு
 52. எங்கள் ஆலயத்திலும் ஒருவர் பிரிட்டிஷ்க்காரர் இருக்கிறார் வயது 68 இருக்கும் ..ஒரு நொடிகூட அமைதியாய் இருக்க மாட்டார் ..சர்ச்சில் இருப்பவர்கள் அவர் பெயரை உச்சரிக்காத நேரமில்லை அவர்தான் ஆல் இன் ஆல் .முழு பைபிளும் கரைத்து குடித்தவர் .10 ஆள் செய்யும் வேலை இவர் தலையில் விழும் ஆனால் எப்பவும் சந்தோஷமா இருப்பார் ..ரக்வான்கள் அவரைப்போன்றோர் நல்ல இருக்கட்டும்

  பதிலளிநீக்கு
 53. //ரக்வான்கள்//// ராகவன்கள் என்று படிக்கவும்

  பதிலளிநீக்கு
 54. பிளேனில ஒரு சின்னக் கோளாறு:) அதனால ரைமுக்கு லாண்ட் ஆக முடியாமல் போச்ச்ச்ச்:)).. இருபினும் சுப்பர்மர்கட்டை பூட்ட முன் ஓடி வந்தேன் அவசரமா:))..

  கதை சுவாரஷ்யம்.. வழமைபோல விசித்திரம்... விசித்திரம் மீன்ஸ் எனக்கு புரிவதில்லை.. எப்பவும் கதை படிச்ச பின் குழம்பிப்போய்த்தான் போவேன்:)).. முடிவை சரியாகக் கணக்கெடுக்க முடியவில்லை.. ஆனா ஒரு கதை மட்டும் நினைவுக்கு வந்துது.. இந்த வசனம் பார்த்ததும்...:))

  ///" கோவில்ல தான் எப்பவும்.. அவர் அம்மாவை விட்டு போக மாட்டார்னு"//////

  அதாவது அவர் போக நினைச்சாலும்:)) இப்பூடிச் சொல்லிச் சொல்லியே அவரை எங்கும் வேலைக்குப் போக விடாமல் பண்ணிடுவினம்:))..

  ஒரு வீட்டுக்குப் போனதும் தாய் சொன்னாவாம் என் மகன் சிக்கின் சாபிடுவதில்லை என, ஆனா மகனுக்கு சிக்கின் பிடிக்கும் என்பது அம்மாவுக்குத் தெரியாது:)) அப்போ அம்மாவின் வாக்கைக் காப்பாத்த மன்கனும் ஆமா ஆமா எனக்கு சிக்கின் கறி வேண்டாம் பிடிக்காது என்றாராம் அந்த நினைவுதான் வந்தது இங்கும் ஹா..ஹா..ஹா...

  பதிலளிநீக்கு
 55. எல்லார் மனசையும் கலக்கிவிட்ட ராகவன்.
  கதையான கதா நாயகன். இனிமை. நன்றி ரிஷபன் சார்.

  பதிலளிநீக்கு
 56. நீங்க எல்லோரும் என்னதான் சொன்னாலும் பாராட்டினாலும் ராகவன் பாவம்:)!! அவர் மனதில் என்ன இருக்கோ ? அதை யாரும் கேட்க நினைக்கலியே..,,,, கீசாக்கா கீதா நெ.த எல்லோரும் சுத்த மோசம்:)) அவர் பொதுச்சேவை செய்கிறார், அம்மாவைப் பார்கிறார் என்பதற்காக அப்படியே கை விட்டு விடுவதா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தோஓஓஓஓஓஓஒ மீ புறப்பட்டு விட்டேன் இப்பவே போய் ராகவனின் விருப்பத்தைக் கேட்டுப் பொம்பிளை பார்க்கப்போறேன்:))..

  ஹையோ மீக்கு இன்னும் செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊஊஊஉ நான் ஓடிடுறேன்ன்:))

  பதிலளிநீக்கு
 57. எல்லோருக்கும் நன்றி.
  ஒரு கதை என்னவிதமான பின்னூட்டங்களைத் தூண்டி விடுகிறது.. படிக்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.

  எழுத்தாளனும் ஒரு வாசகன் தான். இந்தக் கதை ஏனிப்படி என்று அவனும் யோசனையில் தான். இவரைப் பற்றித்தான் எழுதி இருக்கிறேன் என்று அடையாளம் காட்டுவது அநாகரிகம் இல்லையா..

  பதிலளிநீக்கு
 58. அடுத்துவரும் பயணத்தில் ரங்கத்தில் ராகவனைத் தேடுவேன்னு நினைக்கிறேன்.

  ரிஷபன் ஸார் கதைக்குச் சொல்ல வேணுமோ? ஆஹா.... ஹைய்யோ!

  பதிலளிநீக்கு
 59. என் எழுத்துலக மானஸீக குருநாதர் திருவாளர். ரிஷபன் அவர்களே, வணக்கம்.

  கதை தங்கள் பாணியில் ....
  தந்தி அடிப்பது போல .......
  ரத்தினச் சுருக்கமாக மிகவும் அருமையாக உள்ளது.

  இதைக் கருவாக வைத்து அவரவர்கள் பாணியில்,
  அவரவர்கள் கற்பனையில்,
  ஆயிரம் ஆயிரம் கதைகள் எழுத
  வாய்ப்பளித்துள்ளதே தங்களின் தனிச்சிறப்பாகும்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 60. என்னைக் கவர்ந்த வரிகள்:

  //ரிசப்ஷனில் இருந்தவள் தெரிந்தவள்.

  " ராகவன்.. உங்களை ரெண்டு வாரம் முன்னாடி யாரோ விசாரிச்சாங்க.. நீங்க டொனெட் பண்ண ஃபேமிலில ஒருத்தர். ம்ம்.. பேர் கூட ஏதோ சொன்னாங்க.. பணம் வேண்டாம்னு சொன்னதும் மனசுக்குக் கஷ்டமாயிருச்சு.. அவருக்கு ஏதாச்சும் வேலை பார்த்துத் தரலாமான்னு.. உங்களுக்கு இங்கேர்ந்து போக இஷ்டம் இருக்காது.. அவர் ஒரு டைப்புன்னு சொல்லிட்டேன் .. சரி தானே "

  " என்ன.. "

  " கோவில்ல தான் எப்பவும்.. அவர் அம்மாவை விட்டு போக மாட்டார்னு"//

  என்னைக் கவிழ்த்துப்போட்டு மிகவும் மகிழ்வித்தது அந்தக் கடைசி வரியான .....

  //வெளியே வந்த ராகவனுக்கு எல்லாமே புரிந்துதான் விட்டது இப்போது.//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ராகவனுக்கு மட்டுமா? எனக்கும்தான். :)))))))

  மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான நல்வாழ்த்துகள்.

  தங்களிடம் தனிப் பிரியமுள்ள
  வீ..........................ஜீ

  பதிலளிநீக்கு
 61. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (1)

  நெ.த. said...
  //ராகவன் வித்தியாசமான கேரக்டர்.//

  மொத்தத்தில், பிழைக்கத் தெரியாதவர் என்கிறீர்களோ !!!!!

  //ரத்ததானம் செய்யும் எண்ணம் இருப்பதாலும் அதற்கு உதவியோ பணமோ பெற்றுக் கொள்ளாத்தாலும் பணத்தின்பின் செல்லும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.//

  நானும் என் வாழ்க்கையில் இருமுறை இரத்ததானம் செய்து இரு உயிர்களைக் காப்பாற்றும் பாக்யம் பெற்றுள்ளேன். நானும் பணமோ, அங்கு மருத்துவ மனையில் தரப்படும் இலவசப்பாலோ, ஒரு நாள் ஸ்பெஷல் கேஷுவல் லீவோ எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது எனக்கு 35 வயது மட்டுமே.

  முதன்முறை என் வயதான தாயார் இதற்கு ஒத்துக்கொள்ளவோ அனுமதி அளிக்கவோ இல்லை. 'தாய் சொல்லைத் தட்டக்கூடாது'தான். இருப்பினும் உயிர் காக்க வேண்டி வந்த அழைப்பினை ஏற்று அன்று நான் கிளம்பி விட்டேன்.

  50 அடி உயரத்திலிருந்து கால் நழுவி கீழே விழுந்து விட்ட ஓர் 13 வயதான பரம ஏழைச் சிறுமி .... கூலி வேலை செய்து பிழைப்பவள் அன்று என்னால் காப்பாற்றப்பட்டதாக ஆஸ்பத்தரி நர்ஸ்களும், டாக்டர்களும் என்னிடம் சொல்லி பாராட்டினார்கள். கடைசிவரை அவளை நான், என் கண்களால் பார்க்க இயலவில்லை. 10 நாட்களுக்குப்பின், நல்லபடியாக டிஸ்சார்ஜ் ஆகி, அவள் சென்றுவிட்டதாக பிறகு என்னிடம் சொன்னார்கள்.

  அடுத்த முறை நான் அழைக்கப்பட்டது எங்கள் அலுவலகத்தில் மிக உயர்ந்த பதவி வகித்த ஒருவரின் மனைவிக்கு, வயிற்றில் மிகப் பெரிய கட்டி. அதை ஆபரேஷன் செய்து நீக்கும் போது என் க்ரூப் இரத்தம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. இந்த முறை அழைப்பு வந்ததும் நான் என் அம்மாவிடம் சொல்லாமலேயே கிளம்பிப் போய் விட்டேன்.

  பிறகு ஒருநாள், எனக்கு முன்பின் பழக்கமில்லாத வேறு துறையைச் சேர்ந்த, அந்த உயர் அதிகாரி என்னை தனியே அழைத்து தன் நன்றிகளைக் கூறினார். அதன்பின் அவர் மேலும் பதவி உயர்வுகள் பெற்று, வேறு ஊரில் உள்ள எங்கள் யூனிட்க்கு, யூனிட் ஹெட் ஆகப் பொறுப்பேற்க புறப்பட்டுச் சென்றுவிட்டார். இப்போது அவரும் ஓய்வு பெற்று விட்டார். தற்சமயம் அவர் பெங்களூரில் செட்டில் ஆகி இருப்பதாகக் கேள்விப் பட்டேன்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 62. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

  //சிலர் வாழ்க்கை இப்படியே இருந்துவிடுகிறது.//

  சிலர் மட்டுமல்ல. ஆங்காங்கே பலர் உள்ளனர், ஸ்வாமீ.

  //அந்தப் பெண்ணை ஏன் ராகவனுடன் முடிச்சுப் போடுவதுபோல் பலர் நினைக்கணும்? கியூவில்தான் செல்லணும் என்பதில் அவள் மேன்மை தெரிகிறது.//

  மேன்மை மட்டுமல்ல ..... அவளின் மென்மையும், உண்மையும், அவசரமில்லாமல் எதையும் நிறுத்தி நிதானமாக அனுபவிக்கணும் என்ற அவளின் தாகமும் எனக்குக் கூடுதலாகத் தெரிகிறது. :))

  //ரிசப்ஷனிஸ்ட் ராகவனுக்கு உதவி செய்தாளா இல்லை அவனுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பைத் தட்டிவிட்டாளா?//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ‘ரிஷபன்’ ஸாரின் கதையினை ரஸித்துப் படிக்கும் விஷயாதிகள் அனைவருக்குமே, இந்த சந்தேகம் வரத்தான் செய்திருக்கும். சபாஷ் !

  //கோவில் சேவை மிகவும் கடினமானது, இவ்வுலகிற்கான பொருள் கிடைக்காத வேலை. ஆத்ம திருப்தி மிஞ்சும். நிறைய டெடிகேட்ட் கைங்கர்யபர்ர்களைப் பார்க்கும்போது ஆச்சர்யத்திலும் அவர்களது பக்தியிலும் என் தலை தாழும், நாணும்.//

  இதையெல்லாம் நாம் ஒரு ஆறுதலுக்காகச் சொல்லி பெருமை பட்டுக்கொள்ளலாம்.

  ’பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது நம் அனைவருக்குமே தெரிந்த மிகவும் ‘பொருள்’ பொதிந்த பேச்சு ஆச்சே !

  //ரிஷபன் சார்.. ஒவ்வொரு தடவையும் வித்தியாசமான கதைச் சூழல். பாராட்டுகள். உங்கள் கதையைப் பலவிதமாக அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும். பொதுவா ஒரு முடிவோடு கதையை முடிக்கறதில்லை. பொயடிக் ஜஸ்டிஸ் கொடுக்கறதில்லை. சாதாரணமா, அவள் ராகவனைப் பார்த்து நாணத்தில் தலை கவிழ்ந்தாள், ரத்த தானத்துக்குச் சென்ற ராகவனிடம் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை நீட்டினார், பணத்தை வாங்கிய அம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் என்றெல்லாம் முடிக்காகத்தே உங்கள் கதைகளை வித்தியாசப்படுத்துகிறது. வாழ்த்துகள்.//

  அதுபோலெல்லாம் சர்வ சாதாரணமாக எழுதி முடிப்பது நம்மைப் போன்ற .... ஸாரி...ஸாரி... என்னைப்போன்ற கத்துக்குட்டி எழுத்தாளர்களின் போக்கு மட்டுமே.

  ஸ்ரீரங்கம் என்ற திவ்ய க்ஷேத்ரம் + அதில் கைங்கர்யம் செய்துள்ளவர்கள் + ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் பற்றி எங்கள் ரிஷபன் ஸார் ஏராளமான மிகத் தரமான கதைகளை எழுதியுள்ளார். காதல் உள்பட அனைத்தும் கலந்திருக்கும் .... அவற்றில்.

  அதில் ஒரு கதை இன்றும் என்னால் மறக்க இயலாததாக உள்ளது ...........

  ஒரு காலத்தில், தன் பால்ய வயதில் பெருமாளுக்கான வஸ்திரங்களை சலவை செய்துகொடுத்துக் கைங்கர்யம் செய்து வந்தவரும், தற்சமயம் மிகவும் வயதானவரும், கண் பார்வையே சுத்தமாக இல்லாதவருமான, ஓர் ஏழை சலவைத் தொழிலாளி பற்றிய கதை.

  அந்த வயதானவரின் கடைசி நாட்களிலும் அவரின் உன்னதமான சேவை, பெருமாளுக்கு மட்டுமன்றி பக்தர்களுக்கும் தேவைப்பட்டது என்பதை ஓர் துப்பறியும் கதைபோலப் படித்து நான் மிகவும் வியந்து போனேன்.

  ரிஷபன் ........... The Greatest Writer ! :)))))

  -=-=-=-=-

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 63. அன்புள்ள கோபு சார்,

  இன்றுதான் தளத்தில் உங்கள் பின்னூட்டத்தைப் படித்தேன்.

  நானும் எம்.எஸ்.ஸி படித்தபோது, ஒரு தடவை, கல்லூரியில் இரத்த தானம் செய்தேன். அதற்கு அவர்கள், 1 ஆரஞ்சு, 4 முட்டை கொடுத்தார்கள். வகுப்பில் நுழையும்போதே, வகுப்பு நண்பர்கள் (15 பேர்தான் உண்டு) எனக்கு முட்டை தா, எனக்குத் தா என்று கேட்டார்கள் (நான் இதெல்லாம் சாப்பிடமாட்டேன் என்பதால்). வயசுக் கோளாறு.. எல்லோரும் எனக்கு எனக்கு என்று கேட்டதும் அவர்கள் முன்னால், 4 முட்டையையும் உடைத்துச் சாப்பிட்டுட்டேன். உங்கள் பின்னூட்டம் இதனை ஞாபகப்படுத்தியது. 5 வருடங்களுக்கு முன்னால் இரத்த தானம் செய்ய முயன்றபோது (பஹ்ரைனில்), எனக்கு சிவப்பு அணுக்கள் குறைவு (ஹீமோகுளோபின்), அதனால் இரத்த தானம் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

  'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பது உண்மைதான். ஆனால் அதையும் மீறி, கோவிலுக்கு சேவை செய்பவர்கள் ஏராளம் என்றே நினைக்கிறேன். சமீபத்தில் புகழ்பெற்ற கோவிலில் வேலை பார்ப்பவர் என்னிடம் சொன்னது... மடைப்பள்ளிக்கு (பிரசாதம் செய்ய) 10,000 ரூ சம்பளத்துக்கு ஆள் தேடினால், அவங்க, வெளிவேலை ஒரு நாள் பார்த்தாலே 1500 ரூ கிடைத்துவிடுகிறது, அதனால் கோவில் சம்பளம் பத்தாது என்று சொல்லி வரதில்லை என்றார். அதையும் மீறி கோவில் கைங்கர்யம் செய்யவேண்டும் என்று எண்ணி வேலை பார்ப்பவர்களைப் பார்த்து நான் வணங்குகிறேன். திருவரங்கத்தில் வைணவ ஆச்சார்யர் என்னிடம் சொன்னது, 'ஒரு குடும்பத்துக்கு ஒரு பையனுக்கு மேல் இருந்தால், அதில் ஒருவனை கோவில், சமய வேலைக்குன்னு விட்டுக்கொடுக்கணும். அதுனால வருமானம் அதிகமா வராது என்று நினைத்தால், தகப்பன், சொத்தில் பெரும்பகுதியை அந்தப் பையனுக்கு எழுதிவைக்கணும். இது சமூகக் கடமை என்று நினைக்கணும்' என்றார். எனக்கு அப்படிச் செய்யும் மனநிலை இல்லை என்றபோதும், அவர் சொல்லியதில் இருந்த சத்தியம் என்னைச் சிந்திக்கத் தூண்டிற்று.

  ஸ்ரீரங்கம் - கைங்கர்யம் செய்துள்ளவர்கள், அரங்கன் கோவிலைச் சுற்றி தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து அரங்கனுக்கு சேவை செய்துள்ளவர்கள் என்று நிறைய நான் படித்திருக்கிறேன். ரிஷபன் சார் அவர்களில் கதையை வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன் (அரங்கத்தைப் பற்றியது அல்லது அந்தச் சூழல் பற்றியது)

  தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி கோபு சார்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!