வெள்ளி, 25 மே, 2018

வெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன? பூ முகம் சிவந்தா போகும்?



     குறுந்தொகைப் பாடல் ஒன்றை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள் / படித்திருப்பீர்கள்.  அதற்கு பொருளும் அறிவீர்கள். 


`யாயும் ஞாயும் யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் 
யானும் நீயும் எவ்வழி அறிதும் 
செம்புலப் பெயல்நீர் போல 
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’. 

     இதை அடிப்படையாக வைத்து கவிஞர் மீரா (மீ ராசேந்திரன்) ஒரு பாடல் எழுதியிருப்பதையும் படித்து ரசித்திருப்பீர்கள்.  இதை எழுத்தாளர் சுஜாதா 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் சிலாகித்தபோதுதான் நான் முதலில் அறிந்தேன்.


உனக்கும் எனக்கும்
ஒரே ஊர் -
வாசுதேவ நல்லூர் ...
நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட,..
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக் காரர்கள்...
மைத்துனன் மார்கள்.
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.  

     அதே போல அடுத்த பாடல்...

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே  

     கண்ணதாசன் எழுதிய "தோள் கண்டேன்...  தோளே கண்டேன்..." பாடலைக் கேட்கும்போது  அனைவருக்கும் மேலே சொல்லி இருக்கும்  கம்பராமாயணப் பாடல் நினைவுக்கு வரலாம்.


     முதலில் சொல்லி இருக்கும் "யாயும் ஞாயும் யாராகியரோ" என்னும் குறுந்தொகைப் பாடலையும், 

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்  
தான்நோக்கி மெல்ல நகும்.

     என்னும் திருக்குறளையும் இணைத்து தமிழ்த் திரையிசையில் கண்ணதாசன் எழுதி இருக்கும் பாடல்தான் இன்றைய முதல் வெள்ளித் திரைப்பாடல்.

     நேற்று வரை நீ யாரோ நான் யாரோ ...    வாழ்க்கைப் படகு படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்.  



     வாழ்க்கைப்படகு இனிய பாடல்கள் நிறைந்த படம்.  பி சுசீலாம்மா குரலில் "உன்னைத்தான் நானறிவேன், மன்னவனை யாரறிவார்", "சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ", ஆயிரம் பெண்மை மலரட்டுமே" போன்ற இனிய பாடல்கள் இடம்பெற்ற படம்.




     எஸ் எஸ் வாசன் அவர்கள் தயாரிப்பில் 1965 இல் வெளிவந்த படம்.  கண்ணதாசன் பாடலுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை.  எஸ் எஸ் வாசன் முதலில் இதை 'ஜிந்தகி' என்கிற பெயரில் 1964 இல் ஹிந்தியில் எடுத்திருந்த படத்தை அடுத்த வருடம் தமிழில் எடுத்தார்.  ஹிந்தியில் ராஜேந்திரகுமார், வைஜயந்திமாலா.  தமிழில் ஜெமினி கணேசன், தேவிகா.



     இன்று பகிரும் பாடல்கள் "நேற்று வரை நீ யாரோ.. நான் யாரோ" மற்றும் "சின்னச் சின்ன கண்ண்னுக்கு"    

     பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களின் இனிய குரலில் அமைந்த பாடல்கள்.  ஜெமினிக்கு மிகவும் பொருத்தமான குரல் என்று முதலில் இவர் குரலைத்தான் சொல்லலாம்.  அப்புறம்தான் ஏ எம் ராஜா.


நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ...  
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ...
காணும்வரை நீ எங்கே நான் எங்கே 
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே 

உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே 
உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே  
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே 
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே 

நேரிலே பார்த்தால் என்ன? நிலவென்ன தேய்ந்தா போகும்?
புன்னகை புரிந்தாலென்ன?  பூமுகம் சிவந்தா போகும்?

பாவை உன் முகத்தைக் கண்டேன் தாமரை மலரைக் கண்டேன் 
பாவை உன் முகத்தைக் கண்டேன் தாமரை மலரைக் கண்டேன் 
கோவை போல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன் 

வந்ததே கனவோ என்று வாடினேன் தனியே நின்று  
வண்டுபோல் வந்தாய் இன்று மயங்கினேன் உன்னைக் கண்டு 






மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாய் மருகுகிறான் நாயகன்.  உண்மை நிலையை நிரூபிக்க முடியாத நிலை நாயகிக்கு.  தனக்குப் பிறந்த குழந்தை என்று அறியாமலேயே நாயகன்  மயங்கிப் பாடுகிறான்...




சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ 
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா 

பால் மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன் 
பட்டாடைத் தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன் 
அந்நாளை நினைக்கையில் என் வயது மாறுதடா 
உன்னுடன் ஆடிவர உள்ளமே தாவுதடா 
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா...

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா 
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா  
ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி 
கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வமொழி 
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா 


பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா 
நன்றிகெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா  
பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா 
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா 





     முதலில் காட்சியுடன் பாடல் இணைத்திருந்தேன்.  ஒலி சரியாக இல்லாததால் காட்சி இல்லாமல் இந்தக் காணொளியை இணைத்திருக்கிறேன்.

     ஆஷாபோஸ்லே அதிரா...   பாடல்கள் பகிரப்படுவதை வைத்து ஒருவரின் வயது கணக்கிடப்படும் என்னும் கருத்தில் எனக்கு சம்மதமில்லை!!  எனக்கும் கில்லர்ஜிக்கும், ஏன், துரை செல்வராஜூ ஸாருக்கும் கூட எம் கே டி பாடல்கள் பிடிக்கும்.  அதை வைத்து எங்களுக்கு வயதாகி விட்டது என்று சொல்ல முடியுமா?!  ஹி..  ஹி..  ஹி...

81 கருத்துகள்:

  1. ஹெஹெஹெஹெஹெ மீ ஃபர்ஷ்டோ ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!

    பதிலளிநீக்கு
  2. அப்பாடி, இப்போத் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு! பின்னே! யாருமே இல்லாம தன்னந்தனியாவா ஏறிக் குதிக்கிறது? துணை வேண்டாமோ! :))))))

    பதிலளிநீக்கு
  3. ஆ அதுக்குள்ள அக்கா துரை அண்ணா....

    இனிய காலை வணக்கம் ...ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா..
    அக்கா சுவர்...நேரடியாவா
    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம் கீதாS/கீதாR மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் கீதா அக்கா... எதற்கு "அட"?

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  8. /தொடரணும்!//

    கீதா அக்கா... தொடருங்க... தொடருங்க...

    //இனி படிக்கணும்//

    படிக்கணும், கேட்கணும்...!!

    //ஹெஹெஹெஹெஹெ மீ ஃபர்ஷ்டோ ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!//

    ஆமாம் ஆமாம்.

    பதிலளிநீக்கு
  9. // எல்லாம் டிகிரி காஃபி குடிச்ச சுறுசுறுப்பு....//

    துரை ஸார்... காபி குடிச்ச கையோட ரெண்டு பாட்டையும் கேட்டுட்டுட்டா நல்லது.

    பதிலளிநீக்கு
  10. கோவை இதழ்.. ஆகா!..
    குங்குமச் சிமிழ்.. ஓஹோ!...

    இப்போதான் காஃபி குடிச்சேன்!...

    பதிலளிநீக்கு
  11. ஹாஹா, இந்தப் படம்பார்த்தது நல்லா நினைவில் இருக்கு. அம்மா ஜெமினி ஸ்டுடியோஸ் படங்கள் என்றாலே பார்க்க ஆசைப்படுவார். ஆனால் அப்பாவிடம் இருந்து அனுமதி கிடைப்பது ரொம்பக் கஷ்டம். மதுரை தானப்பமுதலி அக்ரஹாரத்தில் இருந்த ஜெமினி நாயுடு தாத்தா (அம்மாவின் அப்பா)வின் நண்பர். தாத்தா ஒரு நாள் அம்மாவைப் பார்க்க வந்தப்போ அம்மா தன் ஆசையைச் சொல்ல அவரும் ஜெமினி நாயுடுவிடம் சொல்லிப் பாஸ் வாங்கித் தருவதாய்ச் சொன்னார். ஆனால் அப்பா அப்படியும் போக அனுமதிக்கணுமே! அதனால் தான் சினிமா பார்ப்பதில்லை என்னும் விஷயத்தையும் மீறித் தாத்தா எங்க வீட்டுக்கு எங்க கடைசிச் சித்தி மற்றும் மாமா பெண்ணோடு வந்து எங்கள் நால்வரையும் (நான், அம்மா, அண்ணா, தம்பி) அழைத்துச் சென்றார். சினிமா எடுக்கப்பட்டிருந்த விதம் அவருக்கு ஆச்சரியம் ஊட்டியது! டூயட் பாடலை எல்லாம் பார்த்து ஏம்மா இப்படி எல்லாம் நடந்துக்கறாங்க என்று கேட்டு வேதனைப் பட்டார். ஜெமினி மனைவியை ஒதுக்கி வைச்சப்போ முட்டாள்ப் பையன் எனத் திட்டினார். நல்லா நினைவில் இருக்கும் படம் இது, ஏனெனில் அந்த வருஷம் நான் பத்தாம் வகுப்புப் போயிருந்தேன். அடுத்த வருஷம் எஸ் எஸ் எல்சி, அப்பா அப்போதிலிருந்தே என்னைப் படிக்காததுக்குத் திட்டியதோடு அல்லாமல் படிக்காமல் சினிமாவுக்கு எல்லாம் போகிறானு ஸ்கூலில் வந்து டீச்சர்களிடம் சொன்னார். ஆனால் நான் மதிப்பெண்கள் பெற்றதால் அதை யாரும் சட்டை செய்யவில்லை. அப்போல்லாம் டீச்சர்கள் எனில் இம்மாதிரிச் சொல்லிக் குழந்தைகளைக் கண்டிக்கும்படி ஆசிரியப் பெருமக்களிடம் பெற்றோர் சொல்வது உண்டு! இப்போது? :(((( ஒரு சினிமா எத்தகைய நினைவுகளைத் தூண்டி விட்டிருக்கிறது! :)))))

    பதிலளிநீக்கு
  12. ஏ.. சாமீ..
    காலை...ல வந்தமா...
    சொரிமுத்து ஐயனாரக் கும்புட்டமா..ந்னு
    இல்லாம -

    கோவை இதழ், குங்குமச் சிமிழ்...ந்னு..
    கும்மாளமா!?...

    ஒன்னும் புரியலை... போங்கோள்!..

    பதிலளிநீக்கு
  13. //எதற்கு "அட"?// போஷ்ட்ட்ட்டு வந்ததையே கவனிக்கலை! திடீர்னு கவனிச்சதும் அங்கே கூட்டம் கூடி இருக்கப் போகுதே என்று
    "அட!" என்றேன். வந்து பார்த்தால் ஹிஹிஹி, யாரும் வரலை நல்லவேளையா!

    பதிலளிநீக்கு
  14. //அக்கா சுவர்...நேரடியாவா// தி/கீதா, காலங்கார்த்தாலே வந்தால் நேரே உள்ளே நுழையலாம். அப்புறமாத் தான் கஷ்டம்! :)

    பதிலளிநீக்கு
  15. கேட்கும்போதெல்லாம்
    மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற
    மதுர கீதங்கள்...

    மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  16. இப்படியே
    இதழ், சிமிழ்..ந்னு ரசித்து விட்டு

    அப்புறமா -

    வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும்
    கதம்ப வனக் குயிலே!...

    - ந்னு ஒரு கும்பிடு போட்டு விட்டால்
    அம்பாள் சிரித்துக் கொள்ள மாட்டாளா!...

    பதிலளிநீக்கு
  17. வெங்கட் பதிவுக்கு இங்கிருந்து போக முடியலை! ஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
  18. கீதா அக்கா... உங்கள் நினைவுகளைத் தூண்டி விட்டது மகிழ்ச்சி. சினிமா சம்பந்தமாக, பாடல் பதிவில் உங்களிடமிருந்து நீண்ட பதில் வந்தது சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  19. //கோவை இதழ்.. ஆகா!.. குங்குமச் சிமிழ்..//

    துரை ஸார்.. இதற்கும் 'காபி இப்போதான் குடிச்சேன்' என்பதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?!!!

    சொரிமுத்து அய்யனாரைத் தரிசித்து வந்து விட்டேனே...!

    மதுர கீதங்களாய் பாடல்களை ரசித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வெங்கட் தளம் எனக்கும் கொஞ்சநாட்கள் முன் படுத்தியது. இன்று நான் எங்கள் தளத்திலிருந்துதான் அங்கு சென்றேன் கீதா அக்கா.

    பதிலளிநீக்கு
  21. படம் பார்க்கவில்லை. ஆனால் அருமையான பாடல்கள்.
    உணர்ச்சிமிகு நடிப்பு. சுசீலா ,ஸ்ரீனிவாஸ் குரல்.
    அதுவும் சின்னச் சின்னக் கண்ணன் பாடல் அருமையோ அருமை. என் சின்னத்
    தம்பி அப்படியே சொல்லிக் காட்டுவான். அடச் சிரிக்கிறீயே ந்னு தன் மருமானுடன் கொஞ்சுவான்.

    மிகமிக நன்றி ஸ்ரீராம். அப்படியே அந்த நாட்களுக்குப் போய்விட்டேன்.
    வாழ்க்கைப் படகு கிடைத்தால் பார்க்கிறேன்.



    பதிலளிநீக்கு
  22. அனைத்து பாடல்களும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  23. படமும் பாடலும் நன்றாக இருக்கும்.
    அனைத்து பாடலும் பிடிக்கும் இந்த படத்தில்.
    பகிர்ந்த பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன், நன்றி.

    பதிலளிநீக்கு
  24. இரண்டு பாடல்களும் மிகவும் ரசிக்கக்கூடிய பாடல்கள். இந்த வாரம், அதிசயமாக எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

    ஶ்ரீராம்... உங்க சந்தேகத்தைப் பார்த்தால், திண்டுக்கல் தனபாலுக்கு 2000 வயசுன்னு சொல்லுவாங்க போலிருக்கு. அவர்தான் அருமையா குறள்களுக்கு விளக்கம் கொடுப்பார்.

    ஆமாம்... உங்களுக்கு மிகவும் பிடித்த மூன்று எம்.கே.டி பாடல்கள் எவை? எனக்கு அம்பா மனம் கனிந்து பாடல் மிகவும் பிடிக்கும். இது தவிர அவரின் பல பாடல்கள் என் ஃபேவரைட். (கிருஷ்ணா முகுந்தா, தீனகருணாகரனே, ஞானக்கண் ஒன்று, ராஜன் மகராஜன், நாட்டியக் கலையே, உனைக் கண்டு மயங்காத போன்ற பல)

    பதிலளிநீக்கு
  25. பாடல்கள் ரொம்ப பிடித்த பாடல்கள்....படம் பார்த்ததில்லை....விவரங்கள் பதிவில் அறிந்து கொண்டேன்

    சங்கப் பாடலின் அர்த்தத்தில் எளியோரான என்னைத் போன்றவர்கள் புரிந்து கொள்ளும்படியான சுஜாதா கோட் செய்த கவிதை.அருமை...ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஆஷாபோஸ்லே அதிரா... பாடல்கள் பகிரப்படுவதை வைத்து ஒருவரின் வயது கணக்கிடப்படும் என்னும் கருத்தில் எனக்கு சம்மதமில்லை!! எனக்கும் கில்லர்ஜிக்கும், ஏன், துரை செல்வராஜூ ஸாருக்கும் கூட எம் கே டி பாடல்கள் பிடிக்கும். அதை வைத்து எங்களுக்கு வயதாகி விட்டது என்று சொல்ல முடியுமா?! ஹி.. ஹி.. ஹி...//

    ஹாஹாஹா. ஹூஹூஹூஹூ ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ....இதை இதை நான் றோம்ம்மம்மம்மம்மம்ப ரசித்தேன்... ஸ்ரீராம்...அதாவது பதிவு வரிகளில்....உருண்டு பெற ண்டு சிரிச்சேன்...மனக்கண்ணில்...ஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. இந்த பாடல் லேட்டஸ்ட்...!

    நான் கொஞ்சம் பார்த்தால் - எங்கேயோ பார்ப்பாள்...
    பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்...
    என்னை பார்த்து சிரிப்பாள்... நான் பார்த்தால் மறைப்பாள் ..
    மெய்யாக பொய்யாக தான் நடிப்பாள்...
    பெண் நெஞ்சம் புதிர் அதை போல எப்போதும்
    யாரும் யாரும் அறிந்ததே இல்லை...
    ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
    பெண்கள் மதிப்பதே இல்லை...
    மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்...
    மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்...
    என்னை ஏதோ செய்தாள்...!

    யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் - முன்னாலே
    இவள் எந்தன் பாதி என்று கண்டேன் - தன்னாலே...

    படம் (பாஸ் என்கிற பாஸ்கரன்)

    பதிலளிநீக்கு
  28. நன்றி நண்பர் டி என் முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  29. உண்மையைச் சொல்லனும்னா நானும் இதைப் படம் பார்த்ததில்லை வல்லிம்மா.. பாடல்கள்தான் எப்போதும். இந்தப் பாடல் மூலம் உங்கள் தம்பி நினைவு வந்தது நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க நெல்லை...

    //இந்த வாரம், அதிசயமாக எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.//

    என்ன ஆச்சர்யம்.. உங்கள் சந்தோஷத்தில் எனக்கும் மகிழ்ச்சி. எம் கே டி பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "உன்னையே அன்புடன்..." அப்புறம் என் ஜீவப்ரியே ஷ்யாமளா.." "வள்ளலைப் பாடும் வாயால்", "சிவபெருமான் கிருபை வேண்டும்", உனை அல்லால் ஒரு துரும்பசையுமோ" (சிந்து பைரவியின் 'மரிமரி நின்னே...' இதே ராகம்), உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ" போன்றவை. என்னுடைய பல கர்னாடக சங்கீதப் பாடல்களின் ராகம் கண்டுபிடிக்க இவர் பாடல்கள்தான் ஸ்டார் பாடல்கள் எனக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு, ‘உன்னையே அன்போடு” “ஜீவப்ப்ரியே@ கேட்ட சாபகம்இல்லை. மற்ற மூன்றும் என் விருப்பத் தேர்வு.

      என்ஆரம்ப வேலை காலத்தில் கணிணி ஏசி ரூமில் (மேட்டூரில்) இரவு “அம்பா மனம் கனிந்து’ பாடலை சத்தமாகப் பாடிக்கொண்டே program develop பண்ணுவேன். அவள் அருளால் வாழவு சிறந்தது.

      நீக்கு
  31. வாங்க கீதா... மீராவின் பாடலையும் ரசித்திருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  32. அடடே... வாங்க தனபாலன்.. இந்த வரிகளைத் தழுவி இருக்கும் புதிய பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. கேட்டுப்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. துரை ஸார்... அடைக்கு சட்னியை விட வெல்லம் நல்லாயிருக்கும்....!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //துரை ஸார்... அடைக்கு சட்னியை விட வெல்லம் நல்லாயிருக்கும்..//— அட.. மறுபடியும் முதல்லேர்ந்தா

      நீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    இந்த வாரம் பகிர்ந்த இரண்டு பாடல்களுமே சூப்பர் பாடல்கள். இரண்டையுமே அடிக்கடி கேட்பேன். பி. பி. ஸ்ரீநிவாஸ் குரல் எனக்கு மிகவம் பிடித்தமான குரல். இசையுடன் அவரது குரல் எப்போது இசைந்து விடும். இந்தப்படம் இன்னமும் பார்த்ததில்லை. ஆனால் இதிலுள்ள பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன்.

    கொஞ்சம் மனசு சரியில்லாத போது இவர் பாடிய மயக்கமா, கலக்கமா அந்த பாடலை கேட்டால், மனதிற்கு இதமாக இருக்கும். அதுவும் ஜெமினி கணேசன் நடித்ததுதான்.

    நீங்கள் கூறியுள்ளது போல் ஜெமினிக்கு இவர் குரல்தான் சோகப் பாட்டானாலும், டூயட் பாட்டானாலும் ரொம்பவே ஒத்து வரும்.

    இரண்டு பாட்டுகளும் மிக அருமை. மீண்டும் கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  35. //காலையிலேயே அட!...
    சட்னியக் காணோம்!?...// நம்மூரில் எல்லாம் அடைன்னா அவியல் தான்! கல்யாணம் ஆன புதுசுலே பண்ணிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன். இப்போ! அடை பண்ணினால் ஏன் அவியல் பண்ணலைனு கேள்வி! :))))) காலம் செய்த கோலம்!

    பதிலளிநீக்கு
  36. காலைலேருந்து மின்சாரம் இல்லை. இப்போத் தான் வந்திருக்கு. ஆனால் இருட்டிட்டு வரதைப் பார்த்தால் மறுபடி போகுமோனு தோணுது! :))))

    பதிலளிநீக்கு
  37. @ Geetha Sambasivam said...

    >>> இப்போ! அடை பண்ணினால் ஏன் அவியல் பண்ணலைனு கேள்வி!
    :))))) காலம் செய்த கோலம்..<<<

    ஆகா!...

    பதிலளிநீக்கு
  38. @ ஸ்ரீராம். said...

    >>> அடைக்கு சட்னியை விட வெல்லம் நல்லாயிருக்கும்.... <<<

    இட்லிக்கும் தோசைக்கும் சர்க்கரைப் பாகு மிக மிக நன்றாக இருக்கும்!..

    இது சர்க்கரையைக் காய்ச்சிய பாகு அல்ல!..

    கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் போது திரளும் பாகு...
    சர்க்கரை வெல்லம் இவற்றுக்கு முந்தைய நிலை...

    ஆகா... அப்படியெல்லாம் மகிழ்ச்சியில் விளைந்த நாட்கள் இனியும் வரக்கூடுமோ!..

    பதிலளிநீக்கு
  39. நேற்றுவரை நீயாரோ.. பாடல் சூப்பர்... பலதடவைகள் கேட்டதுண்டு...

    சின்னச் சின்னக் கண்ணன் அதைவிடச் சூப்பர்.
    //பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
    பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா
    நன்றிகெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா ///

    நான் அதிகம் விரும்பி ரசிக்கும் வரிகள்...

    பதிலளிநீக்கு
  40. ///ஆஷாபோஸ்லே அதிரா... பாடல்கள் பகிரப்படுவதை வைத்து ஒருவரின் வயது கணக்கிடப்படும் என்னும் கருத்தில் எனக்கு சம்மதமில்லை!! எனக்கும் கில்லர்ஜிக்கும், ஏன், துரை செல்வராஜூ ஸாருக்கும் கூட எம் கே டி பாடல்கள் பிடிக்கும். அதை வைத்து எங்களுக்கு வயதாகி விட்டது என்று சொல்ல முடியுமா?! ஹி.. ஹி.. ஹி...///

    ஹா ஹா ஹா “பனைமரத்தில தேள் கொட்ட:) தென்னை மரத்தில நெறி ஏறிக் கொண்டதாமே:))”.. கிளவியை.. சே..சே.. எதுக்கு இப்போ நடுவில டங்கு ஸ்லிப் ஆகுதூஊஊஊ:)) கேள்வியைக் கேட்கும்போதே ஸ்ரீராமுக்கு பிடிச்ச கேள்வியா இருக்குமே என நினைச்சேன்ன்ன் ஹா ஹா ஹா... அதுசரி எதுக்கு தனிய வரப் பயத்தில:) கில்லர்ஜி துரை அண்ணன் எல்லோரையும் துணைக்கு கூட்டி வந்திருக்கிறீங்க?:)) நெல்லைத்தமிழனை விட்டிட்டீங்களே:) ஒருவேளை அவர் ஜி எம் பி ஐயாவின் ஜோடியோ?:)) ஹா ஹா ஹா எனக்கு தேம்ஸ்ல நிறைய வேலை இருக்கூஊஊஊஊஊ மீ ரன்னிங்:))

    பதிலளிநீக்கு
  41. //ஹாஹாஹா. ஹூஹூஹூஹூ ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ....இதை இதை நான் றோம்ம்மம்மம்மம்மம்ப ரசித்தேன்... ஸ்ரீராம்...அதாவது பதிவு வரிகளில்....உருண்டு பெற ண்டு சிரிச்சேன்...மனக்கண்ணில்...ஹாஹாஹா...

    கீதா//

    ஆவ்வ்வ்வ்வ் கீதா உருண்டு பிரளும்போது அடிகிடி படேல்லையோ?:)) ஹா ஹா ஹாஅ...

    பதிலளிநீக்கு
  42. ஸ்ரீராம்.. இப்போ உங்கட வயசில எங்களுக்கு சந்தேகம் மட்டும்தேன் இருக்கு:)).. ஆனா இந்தச் சாட்டை வைத்துத் தொடர்ந்து ஆதிகால.. டிஎம்கே பாடல்களாப் போட்டுக் கொண்டிருந்தீங்களென்றால்:)) சந்தேகம் போய் கொம்ஃபோம் ஆக்கிடுவோம்ம்:)) ஹா ஹா ஹா... ஜாக்ர்ர்ர்ர்ர்ர்ர்தை[ஹையோ இது எனக்குச் சொன்னேன்ன்ன்:)]

    பதிலளிநீக்கு
  43. https://youtu.be/3_o-OBfwZA8
    சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ

    பதிலளிநீக்கு
  44. https://youtu.be/ZXAZdxB8EZY

    உன்னைத்தான் நானறிவேன், மன்னவனை யாரறிவார்",

    பதிலளிநீக்கு
  45. நெல்லை...

    ​உன்னையே அன்புடன் - https://www.youtube.com/watch?v=TLIDlZpC_rM

    என் ஜீவபிரியே ஷ்யாமளா - https://www.youtube.com/watch?v=nDS7FyjZjB0

    மனம் கனிந்தே - https://www.youtube.com/watch?v=nQ68ADjKGgs (இது ரதிபேத்தைப் ப்ரியா ராகம். இதே ராகத்தில் எம் கே டியே இன்னொரு பாடல் பாடியிருப்பதாய் நினைவு. கே ஜெ யேசுதாஸ் இந்த ராகத்தில் "நலம் தருவாய் என் தாயே மீனாட்சி" என்றொரு பாடல் பாடியிருப்பார். "ஜகத்ஜனனி" என்றொரு பாடலும் உண்டு இதே ராகத்தில்.​

    பதிலளிநீக்கு
  46. நன்றி பட்டாபி ராமன் ஸார்.

    பதிலளிநீக்கு
  47. நன்றி கமலா ஹரிஹரன் சகோதரி.

    பதிலளிநீக்கு
  48. //கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் போது திரளும் பாகு... சர்க்கரை வெல்லம் இவற்றுக்கு முந்தைய நிலை..//

    சாப்பிட்டதே இல்லை துரை ஸார்.

    பதிலளிநீக்கு
  49. அதிரா...

    நான் கூட அந்த வரிகளை முன்பு ஸ்பெஷலாய் ரசித்துக் கொண்டிருந்தேன். இப்போது பொதுவாய்ப் பாடலை ரசிக்கிறேன். அந்த வரிகளில் ஒரு தப்பு, போலித்தனம் இருப்பதாய் சமயங்களில் தோன்றும்.

    கில்லர்ஜி துரை அண்ணன் எல்லோரையும் துணைக்கு கூப்பிட்டும் அவர்கள் ஏனென்றே கேட்கவில்லை அதிரா...

    //டிஎம்கே பாடல்களாப் //

    ஹா... ஹா... ஹா... அது எம் கே டி பாடல்கள்!

    பதிலளிநீக்கு
  50. சாம்பாருக்கு பொருத்தமான குரல் பி.பி.ஸ்ரீனிவாஸ்தான்.
    நான் ரசிக்கும் ஸூப்பர் பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க கீதா... மீராவின் பாடலையும் ரசித்திருப்பீர்கள்.//

    ஆமாம் ஸ்ரீராம் மொபைலில் அப்போது அடித்த போது அந்த முழுப் பெயரும் அடிக்க வரலை..மீராவும் அடிக்க வரலை...ஸ்பேஸ் விட்டு விட்டு அடிக்க திரும்ப ஸ்பேஸ் சேர்த்த போது மீரா காணாமல் போக ஸோ பெயர் போடாமல் போட்டேன் அப்ப.

    இப்ப கணினியில் உங்க எபி வந்துருச்சே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  52. //டிஎம்கே பாடல்களாப் //

    ஸ்ரீராம் எப்ப எப்ப எப்பருந்து இது!!!! அதிரா நீங்க ஸ்ரீராமை இப்படி வம்பில் மாட்டிவிட்டுட்டீங்களே!!! கருப்பும் செவப்புமா....ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  53. அதிரா எம்கேடி பாடல் கேட்டுருப்பீங்களே!! ரொம்ப நல்ல வித்தியாசமான குரல்...செமையா இருக்கும் அவர் பாடல்கள்...ரொம்பப் பிடிக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  54. ஸ்ரீராம் எஸ்ஸு...அடைக்கு வெல்லம் நல்லாருக்கும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  55. இது ரதிபேத்தைப் ப்ரியா ராகம்.//

    ஸ்ரீராம் இதைப் பார்த்து நெல்லை பயந்துடப் போறார்!!! ஹா ஹா ஹா ஹா டைப்போ எப்படி எல்லாம் நம்மை காலை வாருது பாருங்க ....ரதிபதிப்ரியா

    கீதா

    பதிலளிநீக்கு

  56. // ஸ்ரீராம் இதைப் பார்த்து நெல்லை பயந்துடப் போறார்!!! ஹா ஹா ஹா ஹா டைப்போ எப்படி எல்லாம் நம்மை காலை வாருது பாருங்க ....ரதிபதிப்ரியா//

    ஹா... ஹா... ஹா... இப்போதான் கவனிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  57. அருமையான பாடல்கள் ரசித்தேன். பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  58. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  59. ஜெமினிக்கு மிகவும் பந்தமாக பொருந்தும் குரல் பி.பி.எஸ்ஸின் குரல்தான்.
    அது சரி இப்போது எங்கே பார்த்தாலும் ஜெமினி, சாவித்திரி செய்திகளாகவே காதில் விழுகிறதே? நடிகையர் திலகம் பாதிப்போ?

    பதிலளிநீக்கு
  60. ///
    //டிஎம்கே பாடல்களாப் //

    ஹா... ஹா... ஹா... அது எம் கே டி பாடல்கள்!//

    ஹா ஹா ஹா அது ஸ்ரீராம் மேலே உங்கள் போஸ்ட்டில் பாடமாக்கிக்கொண்டு கீழே கொமெண்ட் பொக்ஸ் வரும்போது எழுத்தெல்லாம் இடம் மாறிவிட்டது:)..

    பதிலளிநீக்கு
  61. //அது சரி இப்போது எங்கே பார்த்தாலும் ஜெமினி, சாவித்திரி செய்திகளாகவே காதில் விழுகிறதே? //

    இந்தப் பதிவில் சாவித்ரிக்கு இடமில்லையே பானு அக்கா...!​ பி பி எஸ் பாடல்கள் அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  62. // கீழே கொமெண்ட் பொக்ஸ் வரும்போது எழுத்தெல்லாம் இடம் மாறிவிட்டது:).//

    ஹா... ஹா... ஹா.. அசங்காம எடுத்துட்டு வரணும் அதிரா!

    பதிலளிநீக்கு
  63. அருமையான பாடல்கள். பல முறை கேட்டதுண்டே அப்போது. அதன் பின் இப்போதுதான் கேட்கிறேன் ஸ்ரீராம் ஜி. மிக்க நன்றி பகிர்விற்கு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  64. நான் தான் லேட்டுனு நினைச்சேன்!

    பதிலளிநீக்கு
  65. கவிஞர் மீராவின் கவிதை வரிகளை கட்டுரையில் சேர்த்த தற்கு என் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!