ஞாயிறு, 1 ஜூலை, 2018

ஞாயிறு 180701 : வடை கொண்டு வந்த காகம்

 குன்றத்தூர் முருகன் கோவில்.  பக்கவாட்டுத்தோற்றம்.மாங்காடு அருள்மிகு கந்தபுரீஸ்வரர்.மாங்காடு அருள்மிகு நகைமுகவல்லி மலரக் காத்திருக்கிறேன்...1.  நான் என்ன பூ சொல்லுங்கள்!2.  என்னையும் கண்டுபிடியுங்கள்.  இலையை வைத்துச் சொல்வது எளிதுதான்! 


 3.  வாட்ஸாப்பில் குழுவில் கண்டுபிடித்தவர்கள் விடைகூறவேண்டாம்!  இது என்ன பூ?வடை கொண்டு வந்த காகம்...... படமெடுக்க அருகில் நெருங்கியதும்....


வடையை வாயில் இன்னும் இறுகப் பற்றியது!


பயண ஆசையைத் தூண்டும் படம்...என்ன கும்பகோணமோ...என்ன டிகிரியோ....  என்ன காஃபியோ....!வறண்ட ஆறு..  மனிதனின் மனம் போல..!  மணலைக் கூடக் காணோம்..  மண் தரைதான் தெரிகிறது...


குடந்தைப் பயணத்தில் கடைகளின் இடையில் சட்டெனத் தெரிந்த ஒரு கட்டிடம்!  மசூதியோ?


சிவப்பு சட்னி வராட்டா சாப்பிடமாட்டேன்...


சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு செல்லம், காரை நிறுத்தி நண்பரை அங்கு இறக்கி விட்டதும் குரைத்துக் கொண்டே சென்று உள்ளே மறைந்து, சற்று நேரம் கழித்து எட்டிப்பார்த்து நிலைமையை ஆராய்ந்தபோது....!  இரவு நேரம்.

160 கருத்துகள்:

 1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மயிரிழையில் முந்திட்டாங்கப்பா!

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம் ,கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

  பதிலளிநீக்கு
 3. படங்கள் நன்று. இருப்புப்பாதை பயணம் செய்யத் தூண்டுகிறது!

  பதிலளிநீக்கு
 4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷம்...

  பதிலளிநீக்கு
 5. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 6. வடை, தோசை, காஃபி -

  காலை டிபனுக்கு ஆச்சு!...

  பதிலளிநீக்கு
 7. பயண நினைவுகளை, பயண ஆசையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது (இருப்புப்) பாதைகளின் படங்கள். நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 8. மெது வடை, மசால் வடை, கீரை வடை, ஆம வடை, தவள வடை, தயிர் வடை...

  இது என்ன காக்கா வடையா!...

  பதிலளிநீக்கு
 9. /காக்காய் வாழ்க..//

  அந்தக் காக்கை வாய் வைத்த வாடையைச் சாப்பிடவேண்டாம் என்றுதான்...

  //தோசை, காஃபி - காலை டிபனுக்கு ஆச்சு!...//

  இதை வைத்தேன்!!!!

  நன்றி துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 10. //இது என்ன காக்கா வடையா!...//

  ஆமாம். பாட்டு பாடச் சொன்னேன்.. பறந்துபோய் விட்டது!

  பதிலளிநீக்கு
 11. அப்புறமா வரலாம்னு இருந்தேன். தோசை இழுத்துவிட்டது. அது சரி, வாட்சப்பில் எப்போப் பூக்களைப் பத்திக் கேட்டிருந்தீங்க? நான் பார்க்கவே இல்லையே? என்னிக்கு? இப்போக் கூடப் பார்த்தேன். எதுவும் இல்லை. போகட்டும். எந்த ஓட்டல்? மங்களாம்பிகா? சகிக்காது. இப்போ முன்னே இருந்தவங்க யாரும் இல்லை. மாறியாச்சு. சும்மாப் பித்தளைத் தம்பளரில் காஃபி கொடுத்தால் கும்பகோணம் டிகிரி காஃபி நு நினைப்புப் போல. செல்லம் யாரோ வளர்க்கிறாங்க போல! அதுக்கு ஒண்ணுமே கொடுக்கலையா?

  பதிலளிநீக்கு
 12. //அது சரி, வாட்சப்பில் எப்போப் பூக்களைப் பத்திக் கேட்டிருந்தீங்க? நான் பார்க்கவே இல்லையே? என்னிக்கு? இப்போக் கூடப் பார்த்தேன். எதுவும் இல்லை//

  ரொம்ப முன்னாடி கீதா அக்கா...

  பதிலளிநீக்கு
 13. //கடுகு ஸாரின் எழுத்துகளை கல்கியில் படித்திருக்கிறேன். தினமணி கதிரில் எழுதினாரா தெரியாது. தொத்சு போன்ற கேரக்டர்கள் வரும் தொடர் நகைச்சுவை எழுதி படித்திருக்கிறேன். கமலா என்றொரு கேர்கடற் அந்தத் தொடரில் உண்டு என்று ஞாபகம்.// மாத்திப் போட்டிருக்கீங்க! :))) ஆனாலும் பதில்!

  பதிலளிநீக்கு
 14. தின்மணி கதிர் இப்போக் கல்கி வரதை விடக் கொஞ்சம் பெரிய அளவிலே வந்து கொண்டிருந்தது. அதன் பக்கங்களில் எதிர் எதிராகக் காரக்டருக்குப் படங்கள் வரைந்திருப்பார் கோபுலு அவர்கள். ச்ரீவேணுகோபாலன் அதிகம் எழுதியதும் தினமணி கதிரிலே தான். நீ, நான், நிலா, உருகி உருகிப் படிச்சிருக்கேன், மாமாக்களோடு கதையை விவாதித்து முடிவு எப்படி இருக்கும்னு எல்லாம் பேசிப்போம்.

  பதிலளிநீக்கு
 15. //போகட்டும். எந்த ஓட்டல்? மங்களாம்பிகா? //

  ஆமாம். அந்த வார விகடனில் அவர்களை பற்றி புகழ்ந்து வேறு எழுதியிருந்தார்கள்

  //சும்மாப் பித்தளைத் தம்பளரில் காஃபி கொடுத்தால் கும்பகோணம் டிகிரி காஃபி நு நினைப்புப் போல//

  பித்தளை டம்ளரில் கொடுத்தால் பில்டர் காபி என்று நினைத்து விடுவார்கள் என்று நினைக்கிறார்களோ என்னவோ... ஸஹிக்கதான் இல்லை! உண்மையில் டிகிரி காபி என்ற ஒன்றே எல்லை என்று சொன்னார்கள். அது பம்மாத்தாம்!

  பதிலளிநீக்கு
 16. ஹிஹிஹி, எடுத்தாச்சா? நானும் எடுக்கவா? இருக்கட்டுமா?

  பதிலளிநீக்கு
 17. எல்லோருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 18. // மாத்திப் போட்டிருக்கீங்க! :))) ஆனாலும் பதில்!//

  ஆமாம்... பானு அக்காவின் பதிவைப் படித்துக்கொண்டிருக்கும்போதே ஆறு மணி ஆகி விட்டது. ஜன்னல் மாறியிருந்தாலும் பதில் கொடுக்கும்போது மாறி நுழைத்துவிட்டேன்!!

  //எதிர் எதிராகக் காரக்டருக்குப் படங்கள் வரைந்திருப்பார் கோபுலு//

  பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. டிகிரி என்பது சரியாகச் சொல்லணும்னா பாலின் தரம். பாலைத் தான் எந்த அளவு நீர் கலந்திருப்பாங்க என்பதைப் பார்ப்பார்கள். சுத்தமான பாலில் தயாரித்த காஃபிக்கு அந்த நாட்களில் பால் டிகிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதைக் குறிக்க டிகிரி காஃபி என்று சொல்லி இருக்காங்க. அது என்னமோ வேறே அர்த்தத்தில் நிலைத்து விட்டது.

  பதிலளிநீக்கு
 20. //ஹிஹிஹி, எடுத்தாச்சா? நானும் எடுக்கவா? இருக்கட்டுமா?//

  இருக்கட்டும் கா... அதிரடி (வந்தால்) கர்ர்ர்ர்ர்ர் சொல்ல நல்ல வாய்ப்பு!

  பதிலளிநீக்கு
 21. //டிகிரி என்பது சரியாகச் சொல்லணும்னா பாலின் தரம். பாலைத் தான் எந்த அளவு நீர் கலந்திருப்பாங்க என்பதைப் பார்ப்பார்கள்//

  ஆம், தெரியும். ஆனால் எந்த ஊருக்குப் போனாலும், அல்லது ஊர் செல்லும் பாதைகளிலும் கும்பகோணம் டிகிரிக் காபிக் கடைகள் பெருகி விட்டன! சில இடங்களில் மாயவரம் காபி!

  சென்னையில் ஒரு இடத்தில் கும்பகோணம் டிகிரிக்கு காபித்தூள் விற்றார்கள்!!

  பதிலளிநீக்கு
 22. //கடுகு ஸாரின் எழுத்துகளை கல்கியில் படித்திருக்கிறேன். தினமணி கதிரில் எழுதினாரா தெரியாது. ////எதிர் எதிராகக் காரக்டருக்குப் படங்கள் வரைந்திருப்பார் கோபுலு//

  பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))))

  பதிலளிநீக்கு
 23. // பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))))//

  அது தஞ்சைக் காலங்கள் அக்கா... சரியாய் நினைவில் இல்லை. ஆனால் அவர் கல்கியிலும் எழுதி இருக்கார். இல்லையா?

  பதிலளிநீக்கு
 24. ம்ம்ம்ம்ம் கல்கியில் அதிகம் பார்க்கலை. குமுதம், கதிரில் அதிகம் பார்த்திருக்கேன். :))))) கும்பகோணம் காஃபிப் பொடி எல்லா இடங்களிலும் விற்றுப் பார்த்திருக்கேன். இங்கேயும் கொடுக்கிறாங்க!

  பதிலளிநீக்கு
 25. கீதா ரெங்கனைக் காணோமே.... இணையம் போயிடுச்சோ...

  பதிலளிநீக்கு
 26. 1) முருங்கைப்பூ
  2) கத்தரி அல்லது சுண்டைப் பூ.

  பதிலளிநீக்கு
 27. கரெக்ட் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 28. காலை தரிசனங்கள் நன்று
  காகம் கொண்டு வந்த வடை யாருக்கு ?

  பதிலளிநீக்கு
 29. பதமாக ரவா தோசையா? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு. ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு ஆச்சு.
  எனக்கு முருங்கைப் பூ மட்டுமே தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 30. பதமாக ரவா தோசையா? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு. ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு ஆச்சு.
  எனக்கு முருங்கைப் பூ மட்டுமே தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 31. @ ஸ்ரீராம்: உண்மையில் டிகிரி காபி என்ற ஒன்றே இல்லை என்று சொன்னார்கள். அது பம்மாத்தாம்! //

  வாலிழந்த நரியைப்போய்க் கேட்டால், ‘உண்மையில் வால் என்பதாக ஒன்று இல்லவே இல்லை. வால் இருப்பதாக மற்ற நரிகள் காட்டுவதெல்லாம் வெறும் பம்மாத்து!’ என்றே சொல்லும்!

  அதேபோல், பல்போன கிழவியிடம்போய், வெண்பல்வரிசையின் அழகைப்பற்றிப் பேசப்படாது. ஏனெனில், அவர்கள் பதில் சொல்ல ஆரம்பித்தால்...

  பதிலளிநீக்கு
 32. @ கீதா சாம்பசிவம்: தின்மணி கதிர் இப்போக் கல்கி வரதை விடக் கொஞ்சம் பெரிய அளவிலே வந்து கொண்டிருந்தது.//

  சாவி ஆசிரியராயிருந்த அந்த தினமணி கதிர் சைஸில் அந்தக்கால ஆங்கில வார இதழான ‘The Illustrated Weekly of India'-வைப்போல இருக்கும். மட்டுமல்லாமல், அதன் வெள்ளைவெளேர் நியூஸ்ப்ரிண்ட், விஸ்தாரமான ஜெயராஜ், கோபுலு படங்கள், ஸ்ரீவேணுகோபாலன், சுஜாதா கதைகள், விந்தனின் ’ஓ! மனிதா! தொடர்’(அதற்கு கோபுலுவின் கோட்டோவியம்) என்று ஒவ்வொரு வாரமும் எப்போதடா வரும் என ஏங்கவைத்தது தினமணிகதிர்.

  அது ஒரு காலம். இனி வரவே வராத காலம்..

  பதிலளிநீக்கு
 33. காகத்துக்கும் உங்களைக் கண்டால் பயமா? வடை போச்சே ஹா கெக் கெக் கே (எல்லாம் கில்லர்ஜி எஃபெக்ட்)

  பதிலளிநீக்கு
 34. >>> ஸ்ரீராம்: உண்மையில் டிகிரி காபி என்ற ஒன்றே இல்லை என்று சொன்னார்கள்...<<<

  அதற்குப் பதிலாக -
  அன்பின் ஏகாந்தன் அவர்கள் சொல்லியிருப்பது சரி...

  டிகிரி காபி என்றால் என்ன என்று தெரியாதவர்கள்..
  டிகிரி காஃபியின் மகத்துவத்தை அறியாதவர்கள்..

  அது கறந்த பாலில் போடப்படுவது...
  கறவைப் பசுக்களே இல்லாத நிலையில் -
  டிகிரி காஃபியைப் பற்றி யாருக்குத் தெரியும்!..

  அதையெல்லாம் விட -
  கும்பகோணம் டிகிரி காபி - என்று ஊரெல்லாம்...

  அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை...

  மண்வாசனை.. எனக்கு தஞ்சாவூர் டிகிரி காஃபி தான் பிடிக்கும்...

  இன்னும் தஞ்சாவூருக்குள் -
  எல்லையம்மன்கோயில் தெரு, ஐயங்கடைத் தெரு, தெற்கு ராஜவீதி - இங்கெல்லாம் காந்பி குடித்துப் பாருங்கள்..

  ரெண்டு கடைக்கு முன்னாலேயே - அதன் வாசம் வாங்க.. வாங்க..ன்னு கூப்பிடும்!..

  பதிலளிநீக்கு
 35. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  1. நான் என்ன பூ சொல்லுங்கள்!//
  செம்பருத்தி பூ தான் மொட்டு படம் நீங்கள் கொடுத்து இருப்பது.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் சகோதரரே

  காலை வேளையில் கோவில், இறைவன் தரிசனம் நன்றாக இருந்தது படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.

  பூக்கள் படங்கள் அனைத்தும் அழகாக இருந்தது. முருங்கை மலர் மட்டுமே அடையாளம் காட்டியது.

  மலர காத்திருக்கிறேன் என தாழ்மையுடன் விண்ணப்பித்த மலர் மிக அழகு.
  பறவையை போலிருந்த மலர் அழகாக உள்ளது.

  வடையுடன் இருந்த காகம் பழைய கதையை நினைவூட்டியது. நரியை காணவில்லையே? ஓ.. நரிதான் தங்கள் புகைப்படக்கருவியோ... நல்ல வேளை கருவியில் படங்கள் விழுந்தது. வடை காகத்தின் வாயிலிருந்து விழவில்லை... பாவம் காகம் இப்போதேனும் ஏமாறாமல் பசியாறட்டும். ஹா ஹா

  ரயில் பயணங்கள் என்னை விரைவூட்டுகிறது.

  வரண்ட ஆறு கற்பனை வற்றாத நல்ல உவமானம்.

  காபியுடன் டிபன் அருமையாய் உள்ளதே.. நமக்கு மட்டும் ஒன்றும் தராமல் செல்கிறார்களே என சிந்திக்கிறதோ செல்லம்.

  அனைத்தும் அருமை. மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 37. இரண்டு முருங்கைப் பூ, மூன்று கத்திரி, நாலூ , சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 38. >> குடந்தைப் பயணத்தில் கடைகளின் இடையில் சட்டெனத் தெரிந்த ஒருகட்டிடம்! மசூதியோ?.<<

  தேர்முட்டி, தேரடி, தேரடி மண்டபம் - என்றெல்லாம் சொல்வழக்கு...

  மூலைகளில் நந்தி எல்லாம் இருக்க - எதற்கு சந்தேகம்!?...

  பதிலளிநீக்கு
 39. வடை கொண்டு வந்த காகமா? கொண்டு வந்தால் கொடுக்க வேண்டாமோ?
  வடையை நீங்கள் கொடுத்தீர்களோ?
  வடை கொத்தி வாயில் வைத்து இருக்கும் காகம் காலில் பிடித்துக் கொண்டு கொத்தி சாப்பிடாமல் பொறுமையாக வாயில் வைத்துக் கொண்டு இருப்பது நரியின் வரவை எதிர்பார்த்தோ! அதற்கு பழிப்பு காட்டி விட்டு சாப்பிட போகிறதோ?

  பதிலளிநீக்கு
 40. >>> எல்லையம்மன்கோயில் தெரு, ஐயங்கடைத் தெரு, தெற்கு ராஜவீதி - இங்கெல்லாம் காந்பி குடித்துப் பாருங்கள்..<<<

  /// இங்கெல்லாம் காஃபி குடித்துப் பாருங்கள்../// - என்றிருக்க வேண்டும்!..

  அச்சுப் பிழை.. அன்புடன் பொறுத்துக் கொள்ளவும்..

  பதிலளிநீக்கு
 41. //தேர்முட்டி, தேரடி, தேரடி மண்டபம் - என்றெல்லாம் சொல்வழக்கு...

  மூலைகளில் நந்தி எல்லாம் இருக்க - எதற்கு சந்தேகம்!?...//

  நான் அடுத்து சொல்ல நினைத்தேன் சகோ துரைசெல்வராஜூ அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 42. சமதரையாக இருக்கும் வரண்ட ஆறு மனதுக்கு வருத்தம் தருகிறது.

  என்ன கும்பகோணமோ...என்ன டிகிரியோ.... என்ன காஃபியோ....!//

  பித்தளை டபரா, டம்ளாரில் கொடுத்தால் டிகிரி காப்பி . என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 43. //சிவப்பு சட்னி வராட்டா சாப்பிடமாட்டேன்...//

  சிவப்பு சட்னி அரைத்து வருவதற்குள் தோசை ஆறிவிடாதோ?

  பதிலளிநீக்கு
 44. நண்பரின் வருகையை எதிர்பார்த்து சாலையில் நின்றதோ செல்லம்.
  அவருடன் மகிழ்வாய் உள்ளே போய் மீண்டும் நீங்கள் இருக்கிறீர்களா என்று
  ஆராய வருகிறதா? அதுவரை நீங்கள் வெளியில் இருந்தீர்களா?

  பதிலளிநீக்கு
 45. //என்னையும் கண்டுபிடியுங்கள். இலையை வைத்துச் சொல்வது எளிதுதான்!//
  சுண்டைக்காய் பூ

  பதிலளிநீக்கு

 46. @ துரை செல்வராஜூ : ..தஞ்சாவூருக்குள் - எல்லையம்மன்கோயில் தெரு, ஐயங்கடைத் தெரு, தெற்கு ராஜவீதி - இங்கெல்லாம் காந்பி குடித்துப் பாருங்கள். ரெண்டு கடைக்கு முன்னாலேயே - அதன் வாசம் வாங்க.. வாங்க..ன்னு கூப்பிடும்!//

  ஓ! குறிச்சுவைச்சுண்டாச்சு. ஆற அமர உட்கார்ந்து வாசனையை அனுபவிக்கலாம். பின் மெல்லக் குடிக்கலாம். ஆனால் தஞ்சாவூர் போவதெப்போது? 40 வருஷங்களுக்கு முன் அடிச்ச விசிட், புதுக்கோட்டை-கந்தர்வகோட்டை-தஞ்சாவூர் என ரூட் ..

  பதிலளிநீக்கு
 47. காலம்பரயே சொல்லி இருக்கணும். இன்னிக்கு வெளியே போக வேண்டி இருந்ததால் சீக்கிரம் வேலை ஆகணும்னு போயிட்டேன். அது மசூதியாக இருக்க வாய்ப்பே இல்லையே! எப்படி சந்தேகம் வந்த்து உங்களுக்கு? ரிஷபம் உட்கார்ந்து கொண்டிருக்கே, அதன் குரல் கூடக் கேட்கலையா?

  பதிலளிநீக்கு
 48. இந்தக் காக்கா, நரிக்கதை பாட்டி வடை சுட்டது, இதில் உள்ள நீதியின் மூலம் அந்தக் காலத்தில் நாமெல்லாம் வளர்ந்தோம். இப்போதெல்லாம் இந்தக் கதைகளை எந்தப் பாட்டியும் சொல்லுவாங்கனு தெரியலை! :(

  கும்பகோணத்தில் நிறைய இடங்களில் காஃபி குடிச்சுப் பார்த்தாச்சு! எங்கேயும் சகிக்கலை. அதே மதுரையில் காஃபி நல்லா இருக்கு. இன்னும் உள்ளே மேற்குப் பக்கம் தேனீப் பக்கம் போனால் புல் மேயும்பசுக்களின் பாலினால் போட்ட டீ, காஃபி கிடைக்கும். ஒரு முறை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வாங்கிய காஃபியின் சுவை இன்னமும் நாக்கில். இங்கே நாங்க கறந்த பால் தான் வாங்கறோம். அதென்னமோ பாக்கெட் பாலே பிடிக்கிறதில்லை. :(

  பதிலளிநீக்கு
 49. அதான் கத்திரிக்காய் காய்ச்சுத் தொங்குதே! அப்புறமா என்ன பூனு என்ன கேள்வி? :)))) இன்னிக்கு முருங்கைக்கீரைப் பருப்புசிலி தான்!

  3 ஆவது பட்டுப்பட்டுனு உடைக்கலாம்னு நினைக்கிறேன் . இது அடிக்கடி பார்த்த/பார்க்கும் பூத் தான். பெயர் தான் உள்ளே இருந்து வரலை! நினைவைத் தோண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 50. @ Geetha Sambasivam said...

  >>> எப்படி சந்தேகம் வந்த்து உங்களுக்கு?..(அதானே!..)
  ரிஷபம் உட்கார்ந்துண்டிருக்கே,..(மூக்குக் கண்ணாடிய மறந்துட்டீங்களா!?..)
  அதன் குரல் கூடக் கேட்கலையா?..( Head Phone போட்டுக்கிட்டு பாட்டு கேட்டதாக்கும்!?..)<<<

  வெயில்..ல படுத்துக் கிடக்கு.. பசி தாகமா இருக்கலாம்..
  ம்மா.. ந்னு குரல் கேட்ட நீங்க - காதைப் புடிச்சி இழுத்துண்டு வந்து
  பச்சரிசிக் கஞ்சி வைச்சிருக்கலாமே!..

  இதுக்குத் தாங்க.. அந்தந்தப் பதிவுக்கு அவங்கவங்க வரணும்..ன்னு சொல்றது!...

  பதிலளிநீக்கு
 51. @ Geetha Sambasivam said...

  >> கும்பகோணத்தில் நிறைய இடங்களில் காஃபி குடிச்சுப் பார்த்தாச்சு! எங்கேயும் சகிக்கலை.. <<

  அதே!.. அதே!... அதே!..

  பதிலளிநீக்கு
 52. ரவா தோசை மாதிரி இல்லையே, மாவு தோசை மாதிரித் தான் தெரியுது! ஸ்பெஷல் சாதாவோ?

  பதிலளிநீக்கு
 53. @ Geetha Sambasivam said...

  >>> அதான் கத்திரிக்காய் காய்ச்சுத் தொங்குதே! அப்புறமா என்ன பூனு என்ன கேள்வி? :)))) <<<

  எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?.. - அப்புடின்னு கேக்கறதில்லையா!..
  அந்தமாதிரி தான்!...

  பதிலளிநீக்கு
 54. கும்பகோணத்தில் "சாதா" "ஸ்பெஷல்"னு எல்லாம் சொல்லிப்பார்க்கலை. ஒரு மாவு னு தான் சொல்வாங்க!

  பதிலளிநீக்கு
 55. ஹிஹிஹி! துரை சகோதரரே! //இதுக்குத் தாங்க.. அந்தந்தப் பதிவுக்கு அவங்கவங்க வரணும்..ன்னு சொல்றது!...// காலம்பரேயே அதை எல்லாம் பார்த்துட்டேன், விரிவா எழுத முடியாமல் போயிட்டேன். :))))))

  //எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?.. - அப்புடின்னு கேக்கறதில்லையா!..
  அந்தமாதிரி தான்!.// ஹெஹெஹெ, அதுவும் அப்படியா? சரி தான். அந்தக் கடைசிப் பூ பெயர் மனசிலே இருக்கு! வெளிவரப் போராடிட்டு இருக்கு! :( அடிக்கடி பார்த்த ஒன்று! அவரைப் பூவோ! ம்ம்ம்ம்ம்? காய் பார்த்தால் அவரை மாதிரித் தெரியுது. ஆனால் தண்டு! ???????

  பதிலளிநீக்கு
 56. @ Geetha Sambasivam said...

  >>> ஸ்பெஷல் சாதாவோ?.. <<<

  அப்போ சிவப்பு சட்னி வந்த மாதிரி தான்!...

  இனிமேல் -
  இட்லி, தோசை,ஹோட்டல் காஃபி - இதுங்களோட படங்களை ஸ்ரீராம் போடுவார்..ன்னு நினைக்கிறீங்க!?...

  பதிலளிநீக்கு
 57. அந்த பித்தளை டவரா கூட பளிச்..சுன்னு இல்லையே!..

  ஹோட்டல்..ல்ல புளிக்கு பஞ்சம் போல இருக்கு!..

  பதிலளிநீக்கு
 58. ’வடை கொண்டு வந்த காகம்’ என்ற தலைப்பைப் பார்த்தவுடன், பரவாயில்லையே ‘வடை, காகத்தைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டதா!’ என்று நினைத்துப் படத்தைப் பார்த்தால் எல்லாம் பழசு!

  பதிலளிநீக்கு
 59. அந்தத் தோசை ஸ்பெஷல் சாதாவோ... சாதா ஸ்பெஷலோ!..

  இப்போ நம்ம ஊர் ஓட்டல்கள்..ல ஒரு நாகரிகம் தொத்திண்டு இருக்கு...

  இட்லியோ தோசையோ - சாம்பாரை மட்டும் ஊத்திட்டுப் போய்டுவன்...

  அந்த டேபிள்..லயே இருக்கிற -
  சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை சட்னி வகையறாக்கள நாம தான் எடுத்துப் போட்டுக்கோணும்..

  இதில என்ன விவகாரம்..ன்னா -
  சாப்பிடும்போது இடக்கையால எந்த உணவுப் பொருளையும் எடுத்து வெச்சிக்கப்படாது...
  பிரம்மச்சாரிகளத் தவிர மத்தவா தானே பரிமாறிக்கப்படாது...
  கூடிச் சாப்பிடும்போது உண்ணும் கையாலேயே எடுத்து இட்டுக் கொள்வது தோஷம்..
  அதுவும் நாகரிகமாக இருக்காது...

  இப்படியெல்லாமிருக்கு.. ஆனாலும்,
  இப்படித் திறந்து கிடக்கும் சட்னிக் கிண்ணங்களின் முன்பாக
  வேற்று மனிதர்கள் - சளச்சள.. என்று பேசிக் கொண்டிருக்கும்போது
  ஏன்டா... இங்கே வந்தோம்!.. என்றாகி விடுகின்றது...

  நிறைய ஹோட்டல்கள்.. இந்த மாதிரி ஆரம்பிச்சுட்டாங்க!..

  இதப் பத்தி அன்பின் கீதா சாம்பசிவம் - நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்...

  தவிர, கணவன் மனைவி எதிரெதிரே இருந்து சாப்பிடும்போது
  வலக்கையால் எடுத்து போட்டுக் கொண்டால் தோஷம் ஏதும் இல்லை - என்கிறார் ஒரு முனிவர்..

  அப்படியே தோஷம் ஆனாலும் அதற்குப் பரிகாரம் இருக்குதாம்!..

  பதிலளிநீக்கு
 60. //தவிர, கணவன் மனைவி எதிரெதிரே இருந்து சாப்பிடும்போது
  வலக்கையால் எடுத்து போட்டுக் கொண்டால் தோஷம் ஏதும் இல்லை - என்கிறார் ஒரு முனிவர்..// எச்சல் பண்ணி விட்டால் பின்னர் வலக்கையால் எப்படி எடுப்பது? முன்னர் சில வருடங்கள் முன்னர், "எச்சலும் பத்தும்!" என்றொரு கட்டுரை ஆரம்பித்தேன். அது என்னமோ திடீர்னு தொடர முடியலை! :))) எங்க வீட்டில் என் மாமியார் நான் மட்டும் தனியாகச் சாப்பிட்டாலும் இடக்கையால் போட்டுக்கக் கூடாது என்பார். அதுக்கப்புறமா மாமனாரோ அல்லது வேறு யாரேனுமோ, மாமியாரா சாப்பிட்டால் அது தோஷம், சேஷம் ஆகி விடும் என்பார். ஆகவே தட்டில் மொத்தமாகச் சாதத்தைப் போட்டுக்கணும். அல்லது ஒரு பேசினில் தேவையான சாத்த்தை எடுத்து வைச்சுக்கணும். குழம்பு, ரசம்,மோர், ஊறுகாய் (முன்னாடியே போட்டுக்கணும்) காய்கள் எல்லாத்தையும் தேவையான அளவு சின்னக் கிண்ணங்களில் (சரவணபவன் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பில்லை) வைத்துக் கொண்டு சாப்பிடணும். ஏதேனும் தேவை எனில் எழுந்து போய்க் கையை அலம்பிக் கொண்டு வந்து போட்டுக்கணும். இப்படியே சுமார் 20, 30 வருடங்கள் ஓடி இருக்கு! :)))))

  பதிலளிநீக்கு
 61. இப்போ இருப்பது ரெண்டே பேர் என்பதால் மதியச் சாப்பாடு மட்டும் சேர்ந்து உட்கார்ந்துப்போம். முதலில் நான் கொஞ்சம் பரிமாறிவிட்டுக்குழம்பு ஊற்றினப்புறமா நானும் உட்கார்ந்துப்பேன். அவருக்கு வேண்டியதை அவர் போட்டுப்பார். எனக்கு வேண்டியதை நான் போட்டுப்பேன்.காலை ஆகாரம், இரவு ஆகாரம் தனித்தனி தான்! :))) அவர் சாப்பிட்டதும் நான் எனக்குப் பண்ணிச் சாப்பிடுவேன்.

  பதிலளிநீக்கு
 62. //ஸ்ரீராம். said...
  //ஹிஹிஹி, எடுத்தாச்சா? நானும் எடுக்கவா? இருக்கட்டுமா?//

  இருக்கட்டும் கா... அதிரடி (வந்தால்) கர்ர்ர்ர்ர்ர் சொல்ல நல்ல வாய்ப்பு!///

  இது கண்ணில பட்டுதா.. அதுதான் அவசரமா உள்ளே ஜம்ப் பண்ணினேன்ன்ன்ன்ன்... இது என்ன நடந்துது என எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகோணும்ம்ம்ம்ம்ம்ம்ம்.. கீசாக்கா ஜொள்ளுங்கோ..

  பிக்கோஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ரீராமோடு மீ கோபம்:), கோபமெண்டால் பேசக்கூடாது சிரிக்கக்கூடாது என அம்மம்மா சொல்லித் தந்திருக்கிறா எனக்கு:)..

  பதிலளிநீக்கு
 63. அதிரடி, அதெல்லாம் ஜொள்ள மாட்டேன்!

  பதிலளிநீக்கு
 64. // : வடை கொண்டு வந்த காகம்//

  ஆவ்வ்வ்வ் குடுத்து வச்சிருக்கிறீங்க.. உங்களிடம் வரும் காகம் வடை எடுத்து வருது.. எங்களிடம் வருவது எதையாவது தூக்கிக்கொண்டு போக எல்லோ வருது:) ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 65. குற்றத்தூர் முருகனும் ஸ்ரீராமோடு கோபம் போல.. முகத்தோற்றம் தெரியல்ல.. பக்கம் மட்டும்தான் காட்டுறார் கர்ர்:)).

  ///Geetha Sambasivam said...
  அதிரடி, அதெல்லாம் ஜொள்ள மாட்டேன்!//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீசாக்கா ஜொள்ளுங்கோ பிளீஸ்ஸ்.. மீ அவரோடு கோபம் அப்போ பேசக்குடாதாம்:))

  பதிலளிநீக்கு
 66. //Geetha Sambasivam said...
  காலை ஆகாரம், இரவு ஆகாரம் தனித்தனி தான்! :))) அவர் சாப்பிட்டதும் நான் எனக்குப் பண்ணிச் சாப்பிடுவேன்.//

  புரிஞ்சு போச்சூஊஊஊஊஊஊ நேகு எல்லாமே பிரிஞ்சுபோச்சூஊஊஊஊஊஉ.. மாமாவை நல்லாத்தான் பேய்க்காட்டுறா கீசாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  அதாவது லஞ் எனில் ரைஸ் அண்ட் கறி தானே, காலை மாலை எனில் இட்லி அப்பம் ஓசை இடியப்பம் புட்டு என்பதால, தனக்கு ஸ்பெஷலா ஓவர் நெய் ஊத்தி.. நிறைய சட்னி வச்சு.. ஏதாவது பொரிச்சு சேர்த்து சாப்பிடுறா போல விட மாட்டேன்ன் நேக்கு நீடி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))

  பதிலளிநீக்கு
 67. ///மாங்காடு அருள்மிகு கந்தபுரீஸ்வரர்.//

  கந்தபுரீஸ்வரர் எனச் சிவலிங்கத்தைச் சொல்றீங்களோ? இப்படிப் பெயர் இப்போதான் அறிகிறேன்ன்.. கந்த என வந்தானே அது தெய்வானை அண்ட் வள்ளி அக்கா ஹஸ்தானே?:) எல்லாம் புதுமையா இருக்கெனக்கு:)

  //மாங்காடு அருள்மிகு நகைமுகவல்லி //
  ஓ இவர்கள்தான் அங்கு வீற்றிருக்கினமோ.. இரண்டும் அழகிய பெயர்கள்..

  பதிலளிநீக்கு
 68. இருப்பு பாதை அபாரமாக உள்ளது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 69. //
  மலரக் காத்திருக்கிறேன்...//

  இவரைப் பார்த்தால் அப்பூடித்தெரியல்லியே.. மலர்ந்து திரும்ப சுருங்குபவர்போல இருக்கே.. மலரும்போது மொட்டு இறுக்கமாக இருக்கும்.. பின்னேரம் மூடும்போது தளர்வாக இருக்கும்... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) ஓவராப் பேசினால் அம்மம்மா ஏசுவா:))..

  முருங்கிப்பூவுக்கு இலைப்படமும் போட்டு எல் கே ஜி பிள்ளைகளாக்கிட்டீங்க எங்களை.. பாருங்கோ துரை அண்ணன் இதில பாஸ்.. இனி அவர் ஊக்கேஜி போகலாம்:).

  2வது கத்தரிப்பூ என நினைச்சேன்.. ஆனா கத்தரிப்பூ பேப்பிளாகவும் இருக்குமெல்லோ.. அதனால நைஸ் ஆ விடைகளை ஒட்டுப்படிச்சேன்ன்:) கோமதி அக்கா சொல்லிட்டா சுண்டைக்காய்ப்பூ.. யேஸ்ஸ்ஸ்ஸ் எங்கள் வீட்டைச் சுற்றி சுண்டைங்காய் மரம் பரவியிருக்காம் ஊரில்.. வத்தல் போட்டு அடிக்கடி எனக்குப் பார்சலில் வரும்:) இப்பவும் வச்சிருக்கிறேனே..

  பதிலளிநீக்கு
 70. பேப்பிள் எள்ளுப்பூப்போல இருக்கு இதை என் பக்கத்திலும் குறிப்பிட்டு ஒரு போஸ்ட் ரெடி பண்ணிட்டேஎன்ன்ன்ன்ன் வந்து கொண்டிருக்கு டும் டும் டும்ம்ம்ம்ம்:)).

  ஆனா எள்ளுப்பூ வெள்ளை எல்லோ? ஒரே கொயப்பமா இருக்கெனக்கு:)

  பதிலளிநீக்கு
 71. படத்தைப் பார்த்தால் எனக்கென்னமோ காக்காப்பிள்ளை வடையிஅக் கொண்டு வந்தமாதிரித் தெரியல்ல:)).. ஸ்ரீராமின் கையிலிருந்த வடையைப் பறிச்சுக்கொண்டு ஓடிப்போய்.. முடிஞ்சால் திரும்ப பறியுங்கோ பார்க்கலாம் எனச் சொல்லுவதுபோல இருக்கூஊஊஊஊஊஊஊஊஊ:) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது.. காகப்பிள்ளையின் முகத்தில நக்கலா ஒரு ஸ்மைல் தெரியுதூஊஊஊஊ ஹா ஹா ஹா.

  அதுசரி அந்த வேப்பம்மரத்தைப் பார்க்க ஆசையா இருக்கு.. இந்தியாவில் எங்கு பார்த்தாலும் வேம்பாகவே இருக்குதே.. அப்போ எதுக்கு வெயில் வெக்கை என எல்லோரும் அழுகினம்?.. நான் வேம்பைக் கண்ணால கண்டு பல வருசமாச்சு.

  கனடா ஒட்டாவா சிவன் கோயிலுக்குள் சாடியில் வேம்பு வளர்த்தார்கள் பெரிசா வந்திருந்துது, ஆனா இம்முறை அதைக் காணம்.. கேட்க மறந்திட்டேன்.

  பதிலளிநீக்கு
 72. அதிரடி, அது சுண்டைக்காயா? சரி தான்! கண்ணாடி போட்டுக்காமல் பார்த்தா இப்படித் தான் தெரியும். வயசாச்சு இல்ல! அந்தப் பூவுக்கு அடியில் கத்திரி காய்த்துத் தொங்குவது தெரியலையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 73. அன்பின் கீதா சாம்பசிவம் அவர்களது பதிலுரைக்கு மனமார்ந்த நன்றி...

  பதிலளிநீக்கு
 74. //பயண ஆசையைத் தூண்டும் படம்...//

  எனக்குப் பயணம் என்பதே வெறுத்துப் போச்ச்ச்ச்:)).. ரெயின் தண்டவாளமும் அந்தப் பச்சைப்பசேலும் பார்க்க அந்த நிழலில் போயிருந்து புதினம் பார்க்கோணும் எனும் ஆசைதான் வருது:).

  அந்த டிக்கிரி டக்கிரி கோப்பியின் கலர் எனக்குப் பிடிக்கல்ல.. இன்னும் கொஞ்சம் டார்க்கா இருக்கோணும்:).

  ஓ ஆறு வறண்டு மணல் தெரியுதோ? நம்பி நடக்கலாமோ? திடீரெனப் பெருக்கெடுத்து வந்திடாது?

  //ஒரு கட்டிடம்! மசூதியோ?//

  நோர்த் இண்டியன்ஸ் கோயில் போலவும் இருக்கே..

  பதிலளிநீக்கு
 75. //தனக்கு ஸ்பெஷலா ஓவர் நெய் ஊத்தி.. நிறைய சட்னி வச்சு.. ஏதாவது பொரிச்சு சேர்த்து சாப்பிடுறா போல விட மாட்டேன்ன் நேக்கு நீடி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))/// ஹிஹிஹி, காலம்பர ரெண்டு பேருக்குமே கஞ்சி தான் உப்புப் போட்டு மோர் விட்டு! தொட்டுக்க ஏதானும் ஊறுகாய்! :))) மதியம் தினம் தினம் சாம்பார், குழம்பு பண்ணுவதில்லை. அப்போ அப்போக் கலந்த சாதம்! ஹிஹி, ராத்திரிக்கு நீங்க ஜொன்னது உண்மை தான். சப்பாத்திக்கு அவருக்கு நெய் தடவக் கூடாது. எனக்குத் தடவிப்பேன். அதே போல் வெங்காயச் சட்னி அவருக்குப் பிடிக்காது! எனக்குப் பிடிக்கும். தனியா அரைச்சு வைச்சுப்பேன்! இடியாப்பம் பண்ணுவதில்லை. சேவை தான்! அது மொத்தமாக் கலந்து வைச்சுடுவேன். தேங்காய், எலுமிச்சை, புளி, தயிர் சேவைகள் என! இப்போ என்னான்றீங்க?

  பதிலளிநீக்கு
 76. ///சிவப்பு சட்னி வராட்டா சாப்பிடமாட்டேன்...///

  யேஸ்ஸ் யேச்ச் சாப்பிடவேபுடாது உண்ணாவிரதம் இருக்கோணும்:))..

  ----------------------------
  எங்கள் பிசிக்ஸ் மாஸ்டர் ஒருதடவை சொன்னார்:).. வகுப்பில் ஒரு பிள்ளை ஏதோ சொன்னதைச் செய்யாமல் அடம் பிடிச்சா.. அப்போ அந்த மாஸ்டர் ரொம்ம்ம்ம்ம்ம்ப சொவ்ட்டானவர் எதுக்கும் சிரித்துக்கொண்டே இருப்பார்.. அப்போ அவர் அப்பிள்ளைக்கு சொன்னார்..

  எங்கள் வீட்டில் ஒரு குட்டி இருக்கு[அவரின் மகள்] அவவுக்கு இப்போ ரெண்டு வயசு, எதையாவது கேட்பா, நாம் குடுக்கவில்லையாயின் உடனே கீழே விழுந்து அழுது அடம்பிடிப்பா.. அப்போ அந்த ரெண்டு வயசுப் பிள்ளைக்கு அவ்ளோ பிடிவாதம் எனில்.. உங்களுக்கு இவ்ளோ பிடிவாதம் இருப்பது தப்பில்லையம்மா என்றார்:)) ஹா ஹா ஹா.. அந்த நினைவு வந்திட்டுது:))

  பதிலளிநீக்கு
 77. // ஓ ஆறு வறண்டு மணல் தெரியுதோ? நம்பி நடக்கலாமோ? திடீரெனப் பெருக்கெடுத்து வந்திடாது?// அது காவிரி ஆறு! எங்கே! தண்ணி விட்டால் தானே பெருக்கெடுத்து ஓடறதுக்கு! அதோட மணல் அள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளிட்டே இருக்காங்களே! இங்கே கல்லணையில் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை ஊருக்குப் போனப்போப்பார்த்தால் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் வரிசை கட்டி ஆற்றுக்குள்! ஆற்றை நினைத்துக் கண்ணீரேவருது! இதிலே தண்ணீர் எங்கே நிற்கும்? நின்றாலும் மேடு, பள்ளம் தெரியாமல் மக்கள் மாட்டிக்க வாய்ப்பு இருக்கு! :( கொஞ்சம் கூட மனதில் உறுத்தலே இல்லாமல் மணல் அள்ளறாங்க! :((

  பதிலளிநீக்கு
 78. நடுச்சாமத்திலே..
  நடுச்சாலியிலே.. நின்ற
  நடுவயதுச் செல்லத்தை
  நடுவராக நின்று
  நடுக்கேட்டுக்குள் அனுப்பிய

  ஸ்ரீராமின் வீரம் பார்த்து மீ வியக்கேன்ன்ன்ன்ன்ன்:)).. ஹையோ ரைம் ஆச்சேஏஏஏஏஏஏ மீ ரன்னிங்ங்ங்ங்:))

  பதிலளிநீக்கு
 79. //Geetha Sambasivam said...
  அதிரடி, அது சுண்டைக்காயா? சரி தான்! கண்ணாடி போட்டுக்காமல் பார்த்தா இப்படித் தான் தெரியும். வயசாச்சு இல்ல! அந்தப் பூவுக்கு அடியில் கத்திரி காய்த்துத் தொங்குவது தெரியலையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

  கத்தரியில காயா? அதுவும் காய்ச்சுத்தொங்குதோ? எங்கே கீசாக்கா? என் கண்ணுக்கு தெரியுதே இல்லையே.. மீ அர்ச்சுனன் பற:)ம்பறை:) ஆக்கூம் என் கண்ணுக்கு கேட்ட கேள்வி மட்டுமே தெரியும்.. அதனால பூ மட்டுமே தெரியுதூஊஊஊஊஊ.. இன்னொரு படம் போடச்சொல்லுங்கோ ஸ்ரீராமை:), நான் கேட்க மாட்டேன்ன் கோபமெனில் கேட்கக்கூடா என அம்மம்மா ஜொள்ளித்தந்திருக்கிறா:)

  பதிலளிநீக்கு
 80. ///ராத்திரிக்கு நீங்க ஜொன்னது உண்மை தான். சப்பாத்திக்கு அவருக்கு நெய் தடவக் கூடாது. எனக்குத் தடவிப்பேன். அதே போல் வெங்காயச் சட்னி அவருக்குப் பிடிக்காது! எனக்குப் பிடிக்கும். தனியா அரைச்சு வைச்சுப்பேன்! இடியாப்பம் பண்ணுவதில்லை. சேவை தான்! அது மொத்தமாக் கலந்து வைச்சுடுவேன். தேங்காய், எலுமிச்சை, புளி, தயிர் சேவைகள் என! இப்போ என்னான்றீங்க?///

  ஆஅங்ங்ங் எப்பூடி கண்டு பிடிச்சேனே?:)) ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 81. //துரை செல்வராஜூ said...
  1) முருங்கைப்பூ
  2) கத்தரி அல்லது சுண்டைப் பூ.

  July 1, 2018 at 6:44 AM
  ஸ்ரீராம். said...
  கரெக்ட் துரை செல்வராஜூ ஸார்.//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  எது கரெக்ட்டூஊஊஊ கத்தரியா சுண்டங்காய்ப்பூவோ?:)

  பதிலளிநீக்கு
 82. அதிரடி, கண்ணாடியைத் துடைச்சுப் போட்டுக்கொண்டு படத்தைப் பெரிசு பண்ணிப்பாருங்க. கடைசியில் இரண்டு காய்களும் வலப்பக்கம் ஒரு காயில் தலைப்பக்கமும் தெரியும்!

  பதிலளிநீக்கு
 83. காகத்தின் வாயில் வடை இருந்தபோது எடுத்த சமயோசிதப் படம் நன்று

  பதிலளிநீக்கு
 84. துரை செல்வராஜு சார், கீதா சாம்பசிவம் மேடம் - //தவிர, கணவன் மனைவி எதிரெதிரே இருந்து சாப்பிடும்போது
  வலக்கையால் எடுத்து போட்டுக் கொண்டால் தோஷம் ஏதும் இல்லை - என்கிறார் ஒரு முனிவர்..

  அப்படியே தோஷம் ஆனாலும் அதற்குப் பரிகாரம் இருக்குதாம்!..//

  காலத்துக்கு ஏற்றபடி இதெல்லாம் மாறும், மாறணும்னு நினைக்கிறேன். சாஸ்திரப்படி, மேசையில் உண்ணக்கூடாது, ஆண்கள் சாப்பிட்டபின்புதான் பெண்கள் சாப்பிடணும், அதிலும் (எங்கள் வழக்கப்படி) எல்லோரும் (ஆண்கள்) ஒரே சமயத்தில் சாப்பிட ஆரம்பிக்கணும், விலக்கானவர்கள் அந்த ஏரியாவிலேயே இருக்கமாட்டார்கள், பிறர் (அதாவது நம்மோடு உட்கார்ந்து சாப்பிடாதவர்கள்) நாம் சாப்பிடும்போது இருக்கக்கூடாது (அதாவது நீங்க வீட்டுக்கு வர்றீங்க, எங்களோட சாப்பிடப்போவதில்லை, நாங்கள் சாப்பிடணும், அப்போது நீங்கள் எங்கள் கண் முன்னால் இருக்கக்கூடாது), இதுபோன்று பல வழக்கங்கள் (சாஸ்திரங்கள்) இருக்கின்றன.

  காலம் மாறும்போது இவையும் மாறும். அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும், பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  இது என் கருத்து. (உதாரணமா, கடல் கடந்தவர்களுக்கு கோவிலில் தீர்த்தம் கொடுக்கக்கூடாது, கருவறைக்கு அடுத்த அறை வரை, சட்டை அணியக்கூடாது போன்று பல வழக்கங்கள் கால மாற்றத்தால் மாறியிருக்கின்றன)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த..

   தாங்கள் சொல்வது உண்மையே..
   மாறத்தான் வேண்டும்...

   நீக்கு
 85. கீதா மேடம் - எங்க வீட்டில், எனக்குப் பிடிக்காதவைகளும் செய்வார்கள், ஆர்டரும் செய்வார்கள் (வெண்டைக்காய் புளிக்கூட்டு, துவரம்பருப்பு போட்ட மஞ்சள் சாதம், பசங்க ஆர்டர் செய்யற பீட்சா, வடா பாவ் போன்று). நான் சாப்பிடாவிட்டாலும் ஒரு துளி எனக்குத் தரவேண்டும். நானும் அதுபோலவே.

  பதிலளிநீக்கு
 86. பொதுவாப் புளிக் கூட்டே இங்கே அதிகம் செய்ய முடியாது. அதிலும் வெண்டைக்காய்ப் புளிக்கூட்டு! வாய்ப்பே இல்லை. ஆனாலும் எங்க அப்பாவுக்குப் பிடிக்கும் என்பதால் அங்கே அம்மா அடிக்கடி பண்ணுவாங்க. இதோட மோர்க்குழம்பும். ஆனால் எனக்குப் பிடிச்சது கத்திரிக்காய்ப் புளிக்கூட்டும், மோர்க்குழம்பும்! அது இரண்டும் இருந்தால் சொர்க்கம் பக்கத்தில்! முந்தாநாள் கொஞ்சமாகச் செய்தேன். ரங்க்ஸின் அனுமதி வாங்கித் தான், கூடவே காரட் சாலட் செய்ததால் அவர் கொஞ்சம் போல் கூட்டு போட்டுக் கொண்டார். பொதுவாக எந்தக் கூட்டானாலும் இங்கே சட்டுனு செய்துட முடியாது! கூட்டு என்றாலே அலர்ஜி! :))))) எனக்குக் கூட்டு இருந்தால் குழம்பு வேண்டாம். மோர் சாதத்துக்கு ஊறுகாய் வேண்டாம். :))) அவர் கிழக்குனா நான் மேற்கு! :)))))

  பதிலளிநீக்கு
 87. துவரம்பருப்புப் போட்ட மஞ்சப் பொங்கல் எங்க பக்கம் பார்த்தது தான். இங்கே அது பத்தியே தெரியாது. அங்கே எல்லாம் மாசிச் செவ்வாய்க்குக் காலையிலேயே செய்து தாளகக் குழம்புடன், வத்தல் வடாம் பொரிச்சு (குஞ்சு வடாம் என எங்க பக்கம் சொல்வோம்) கன்னிப் பெண்களுக்குக் (பத்து வயதுக்குக் கீழே உள்ள பெண் குழந்தைகள்)கொடுப்பாங்க! என் அம்மா இருந்தவரைக்கும் எங்க பெண்ணுக்கு வாரா வாரம் காலம்பர ஏழு மணிக்கு எல்லாம் சுடச் சுடப் பண்ணிக் கொண்டு வந்துடுவாங்க! அவ ஸ்கூலுக்கு ஏழரைக்குக் கிளம்பணும். டிஃபன் டப்பாவில் வைச்சுக் கொடுப்பேன்.

  பதிலளிநீக்கு
 88. ஆர்டர் எல்லாம் செய்து எதுவும் வாங்கியதில்லை. அம்பேரிக்காவில் பெண் வீட்டில் அது போல் ஆர்டர் செய்வார்கள். ஆனாலும் மாப்பிள்ளை தான் போய் வாங்கி வருவார். பையர் வீட்டில் பையர் ஓட்டலுக்கே கூட்டிப் போவார் இல்லைனா அவர் மட்டும் போய் வாங்கி வருவார். பிட்சா கூட அவங்க போய்த் தான் வாங்கி வருவாங்க! ஆர்டர் செய்து வரவழைத்துப் பார்க்கலை! எனக்குப் பிட்சா அவ்வளவு ஒண்ணும் பிடிக்காது!

  பதிலளிநீக்கு
 89. இப்போ கோமதி அரசு ஃபேஸ்புக்கில் போட்டிருக்கும் பூவோட 4 ஆவதா இருக்கும் இந்தப் பூவும் ஒத்துப் போகுது. அதனால் இது எருக்கம்பூவோ? அது தான் சரினு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 90. காகம் கொண்டு வந்த வடை காகத்துக்குதான் கில்லர்ஜி!! எங்கே பாடச் சொல்லி விடுவேனோ என்று பறந்துபோய் விட்டது.

  பதிலளிநீக்கு
 91. பானு அக்கா.. அது சாதா தோசை. ரவா தோசை இல்லைன்னுட்டான் பாவி! முருங்கைப்பூ கரெக்ட்!

  பதிலளிநீக்கு
 92. வாங்க ஏகாந்தன் ஸார்.. கவர்பால் காலத்தில் டிகிரிக்கு காபிக்கு எங்கே போவது? தி ஜானகிராமன் இருந்தால் அரற்றுவார்!

  பதிலளிநீக்கு
 93. காகத்துக்கு யாரைக்கண்டாலும் பயம் நெல்லைத்தமிழன். வராது வந்த வடையை கேட்டு விடுவார்களோ என்ற பயம்!

  பதிலளிநீக்கு
 94. வாங்க துரை செல்வராஜூ ஸார்.. என் தஞ்சைக்காளான்களில் நான் கறந்த பால் வாங்கியதில்லை. 'டிப்போ பால்'தான்! ஐயங்கடைத்தரு பக்கம் எல்லாம் எப்போவாவதுதான் வருவோம். வாராவாரம் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவிலுக்கு வருவோம். அப்பா ஒரு தாயத்து கட்டி இருந்தார். அதைக் கழற்றிக் கொடுப்பார். துர்க்கை அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்து வாங்கி வருவோம்! கடையில் காபி சாப்பிடும் அனுபவம் அப்போது குறைவு!

  பதிலளிநீக்கு
 95. வாங்க கோமதி அக்கா.. நான் கேட்காத 1 கேள்விக்கு பதில் சொல்லி இருக்கீங்க!!

  பதிலளிநீக்கு
 96. வாங்க கமலாக்கா.. ஒரு பூவை மட்டுமே சொன்னாலும் விடை சரிதான். வடை காகம் கமெண்ட்டுக்கு சிரித்தேன்!

  பதிலளிநீக்கு
 97. கோமதி அக்கா... கேள்வி நம்பர் தப்பா சொல்லி இருக்கீங்க. ஒன்று முருங்கைப்பூ. இரண்டாவது சுண்டைக்காய். மூன்றாவது உங்களுக்கே தெரியும்!

  பதிலளிநீக்கு
 98. துரை செல்வராஜூ ஸார்..

  //மூலைகளில் நந்தி எல்லாம் இருக்க - எதற்கு சந்தேகம்!?...//

  இதுவேற இருக்கா? என் கண்ணில் படவில்லை பாருங்க...

  பதிலளிநீக்கு
 99. / வடையை நீங்கள் கொடுத்தீர்களோ? //

  இல்லை கோமதி அக்கா... எங்கிருந்தோ களவாடி வந்திருந்தது!

  //பித்தளை டபரா, டம்ளாரில் கொடுத்தால் டிகிரி காப்பி . என்று நினைத்துக் கொள்கிறார்கள்.//

  அதைச் சொல்லுங்கள்!

  பதிலளிநீக்கு
 100. கோமதி அக்கா..

  //சிவப்பு சட்னி அரைத்து வருவதற்குள் தோசை ஆறிவிடாதோ?//

  கடையில் என் கண்ணில் காட்டாமல் வைத்திருந்தார்கள்!

  பதிலளிநீக்கு
 101. கோமதி அக்கா..

  // அதுவரை நீங்கள் வெளியில் இருந்தீர்களா?//

  நண்பருக்கும் சம்பந்தமில்லாத செல்லம் அது. வண்டி நின்றதும் சட்டென பயந்து உள்ளே ஓடிவிட்டது. மீண்டும் லேசாக வீரம் தலை தூக்கவும் வந்து எட்டிப்பார்க்கிறது! என் கேமிராவிலும் சிக்கிக் கொண்டது!
  சுண்டைக்காய் பூ - சரியான விடை!

  பதிலளிநீக்கு
 102. கீதாக்கா..

  //எப்படி சந்தேகம் வந்த்து உங்களுக்கு? ரிஷபம் உட்கார்ந்து கொண்டிருக்கே, அதன் குரல் கூடக் கேட்கலையா?//

  இல்லையே... கவனிக்கலையே...

  //இப்போதெல்லாம் இந்தக் கதைகளை எந்தப் பாட்டியும் சொல்லுவாங்கனு தெரியலை//

  இப்போ நிறைய மாடர்ன் வெர்ஷன்லாம் வந்தாச்சு தெரியாதா?!!

  பதிலளிநீக்கு
 103. கீதா அக்கா..

  //அதான் கத்திரிக்காய் காய்ச்சுத் தொங்குதே! அப்புறமா என்ன பூனு என்ன கேள்வி?//

  இல்லக்கா.. அது சுண்டை. கத்தரி எல்லாம் இல்லை!

  //3 ஆவது பட்டுப்பட்டுனு உடைக்கலாம்னு நினைக்கிறேன் //

  இனி யார் வேண்டுமானாலும் உடைக்கலாம்!

  பதிலளிநீக்கு
 104. கீதா அக்கா..

  //ரவா தோசை மாதிரி இல்லையே, மாவு தோசை மாதிரித் தான் தெரியுது! ஸ்பெஷல் சாதாவோ?//

  அதே... அதே...

  //ஒரு மாவு னு தான் சொல்வாங்க!

  ஒரு சாதா தோசைன்னு சொன்னேன். புரிஞ்சுக்கிட்டாங்க!

  பதிலளிநீக்கு
 105. //எஃபெக்ட் இங்கே வந்துடுச்சா ?

  நெல்லையை சொல்றீங்களா கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு
 106. துரை செல்வராஜூ ஸார்..

  // இதுக்குத் தாங்க.. அந்தந்தப் பதிவுக்கு அவங்கவங்க வரணும்..ன்னு சொல்றது!...//

  அதானே? ஆனாலும் எல்லாப் பதிவுக்கும் எல்லாரும் வந்தா எல்லா உண்மையும் வெளிவந்துடும்!

  பதிலளிநீக்கு
 107. //அந்த பித்தளை டவரா கூட பளிச்..சுன்னு இல்லையே!.. ஹோட்டல்..ல்ல புளிக்கு பஞ்சம் போல இருக்கு!..//

  துரை ஸார்.. \நானும் நினைத்தேன்!

  //சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை சட்னி வகையறாக்கள நாம தான் எடுத்துப் போட்டுக்கோணும்..//

  எனக்கும் பிடிக்காத நாகரீகம் இது. மேலும் நீங்கள் சொல்லும் சாத்திரங்களை இப்போது பெரும்பாலும் யாரும் கடைப்பிடிப்பதில்லை. முடியவும் முடியாது!

  பதிலளிநீக்கு
 108. கீதாக்கா நீங்கள் சொல்லி இருக்கும் சாத்திரங்கள் (சம்பிரதாயங்கள்) எதையும் கடைப்பிடிக்க முடையவில்லையே என்று பாஸ் ரொம்ப ஃபீல் பண்ணுவார்! இப்பல்லாம் பழகி விட்டது. நான் அதெல்லாம் அப்பாவும், இப்பவும், எப்பவும் பார்ப்பதில்லை! ஹா.. ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 109. வாங்க அதிரா...

  //பிக்கோஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ரீராமோடு மீ கோபம்:), கோபமெண்டால் பேசக்கூடாது சிரிக்கக்கூடாது//

  ஏன்? என்னாச்சு? நன் ஒண்ணும் பண்ணலியே...

  //உங்களிடம் வரும் காகம் வடை எடுத்து வருது..//

  விடுமுறை நாட்களில் அங்கு அமர்ந்து புத்தகம் படிக்கும்போது முன்பெல்லாம் காகங்களுக்கு ஏதாவது போட்டு வழக்கம். இப்போ எல்லாம் போடுவதில்லை.

  பதிலளிநீக்கு
 110. அதிரா...

  குன்றத்தூர் முறைகனை நான் படம் எடுக்கவில்லை. பக்கவாட்டில் அழகாக இருந்தது. அந்தப் படத்தை எடுத்தேன்.

  //கந்தபுரீஸ்வரர் எனச் சிவலிங்கத்தைச் சொல்றீங்களோ?//

  ஈஸ்வரர் என்று வருகிறதே...

  பதிலளிநீக்கு
 111. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்...

  பதிலளிநீக்கு
 112. //இவரைப் பார்த்தால் அப்பூடித்தெரியல்லியே.. மலர்ந்து திரும்ப சுருங்குபவர்போல இருக்கே.. மலரும்போது மொட்டு இறுக்கமாக இருக்கும்.. //

  அதிரா... மலர்ந்த மலரை 99.99% நாங்கள் செடியில் விட்டு வைப்பதில்லை. எனவே இது மலராக காத்திருக்கும் மொட்டே!

  //பாருங்கோ துரை அண்ணன் இதில பாஸ்.. இனி அவர் ஊக்கேஜி போகலாம்:).//

  ஹா.. ஹா.. ஹா..

  //ஆனா எள்ளுப்பூ வெள்ளை எல்லோ?//

  எள்ளுப்பூ இல்லை.

  பதிலளிநீக்கு
 113. /காகப்பிள்ளையின் முகத்தில நக்கலா ஒரு ஸ்மைல் தெரியுதூஊஊஊஊ ஹா ஹா ஹா.//

  காகப்பிள்ளை... ஹா ஹா ஹா.. ரசித்தேன் இந்த வார்த்தையை.

  //நான் வேம்பைக் கண்ணால கண்டு பல வருசமாச்சு.//

  எங்கள் வீட்டின் பின்புறம் பெரிய அரசமரம். இரண்டு பக்கங்களில் வேப்பமரம்! எங்கள் காம்பவுண்டில் நிறைய வேம்பும், புளிய மரங்களும் உண்டு!

  பதிலளிநீக்கு
 114. அதிரா..

  //அந்த டிக்கிரி டக்கிரி கோப்பியின் கலர் எனக்குப் பிடிக்கல்ல.. இன்னும் கொஞ்சம் டார்க்கா இருக்கோணும்:).//

  ஆம்... எனக்கும் இன்னும் கொஞ்சம் டார்க்கா இருக்கணும். சிக்கிரி கம்மியாய் போட்டாலும் கலர் வராது. ஆனால் காஃபி ஸ்ட்ராங்கா இருக்கும்!

  //நம்பி நடக்கலாமோ? திடீரெனப் பெருக்கெடுத்து வந்திடாது?//

  ஆஹா... அப்படி வந்து விட்டால் அதுதான் திருநாள்.

  அந்த சர்வர் ரொம்ப டென்ஷனாவே இருந்தார். எனவே நான் அமைதியாக அந்த சி ச வரும்வரை அவர் எங்கே எல்லாம் போறாரோ, அங்கே எல்லாம் பார்த்தபடி உண்ணாமல் காத்திருந்தேன்!

  பதிலளிநீக்கு
 115. கீதாக்கா..

  //ஆனால் இம்முறை ஊருக்குப் போனப்போப்பார்த்தால் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் வரிசை கட்டி ஆற்றுக்குள்! ஆற்றை நினைத்துக் கண்ணீரேவருது!//

  கொடுமை. பணம் பணம் என்று அலைகிறார்கள். எதிர்த்துக் கேட்பவர்களை "அவர்கள்" கொல்லவும் தயங்குவதில்லை.

  பதிலளிநீக்கு
 116. ஞானி அதிரா திடீரென கவிதாயினி ஆகி கவிமழை பொழிந்திருக்கிறாரே... நானும் வியக்கேன்!

  பதிலளிநீக்கு
 117. அதிரா...

  //இன்னொரு படம் போடச்சொல்லுங்கோ ஸ்ரீராமை:), நான் கேட்க மாட்டேன்ன் கோபமெனில் கேட்கக்கூடா என அம்மம்மா ஜொள்ளித்தந்திருக்கிறா:)//

  இன்னொரு படம் இனி எங்கே போட? யார் பார்க்க? அது சுண்டைச் செடிதான்! அது சரி, ஸ்ரீராம் மேல் உங்களுக்கு என்ன கோபமோ? ஒரே சஸ்பென்ஸா இருக்கே... அதற்கும் வெள்ளிப் பதிவுக்கு நீங்கள் வராததற்கு சம்பந்தம் உண்டா? பரமசிவன் கழுத்து பாம்பு கேள்வி கேட்கிறது!

  //எது கரெக்ட்டூஊஊஊ கத்தரியா சுண்டங்காய்ப்பூவோ?:)//

  சண்டைதான். ச்சே... சுண்டைதான்!

  பதிலளிநீக்கு
 118. கீதாக்கா..

  //அதிரடி, கண்ணாடியைத் துடைச்சுப் போட்டுக்கொண்டு படத்தைப் பெரிசு பண்ணிப்பாருங்க. கடைசியில் இரண்டு காய்களும் வலப்பக்கம் ஒரு காயில் தலைப்பக்கமும் தெரியும்!//

  அக்கா.. உ பு சி அனுமதி உண்டா?

  பதிலளிநீக்கு
 119. பாராட்டுக்கு நன்றி ஜி எம் பி ஸார்.

  பதிலளிநீக்கு
 120. நெல்லைத்தமிழன்..

  //அப்போது நீங்கள் எங்கள் கண் முன்னால் இருக்கக்கூடாது), இதுபோன்று பல வழக்கங்கள் (சாஸ்திரங்கள்) இருக்கின்றன. //

  கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் வீடுகளில் தனித்தனியாக அமர்ந்து சாப்பிடுபவர்களை பார்த்து சொல்லவும் செய்வார்கள்!

  //எங்க வீட்டில், எனக்குப் பிடிக்காதவைகளும் செய்வார்கள்//

  பெரும்பாலும் எங்கள் வீட்டில் அப்படிதான்!

  //ஆர்டரும் செய்வார்கள் //

  நாங்கள் அடிக்கடி செய்வோம் (நானும் என் மகன்களும்). வித்தியாசமான சுவைகளைத் தடி அலை அலை என்று அலைவோம்!

  பதிலளிநீக்கு
 121. புளிக்கூட்டு எனக்குப் பிடிப்பதில்லை கீதாக்கா.. ஆனால் என் பாஸுக்குப் பிடிக்கும். பிட்சா வருஷத்துக்கொருமுறை சாப்பிடப் பிடிக்கும்!

  அது எருக்கம்பூ இல்லை அக்கா. அது... வாட்ஸாப்பில் பார்த்தவர்கள் இப்போது விடையைச் சொல்லலாம்!!!!

  பதிலளிநீக்கு
 122. //..குற்றத்தூர் முருகனும் ஸ்ரீராமோடு கோபம் போல.//

  குற்றத்தூர் ஆகிவிட்டதே குன்றத்தூர், டமிள் ‘டி’-யின் கைவரிசையில்.. ஈஸ்வரா..

  பதிலளிநீக்கு
 123. சாதா தோசை உண்டு, ஸ்பெஷல் தோசை உண்டு. அது என்ன ஸ்பெஷல் சாதா? ஆனால் என் கணவர் ஸ்பெஷல் சாதா என்றுதான் ஆர்டர் கொடுப்பார். நாங்கள் மூன்று பேரும் ரகசியமாக சிரித்துக் கொள்வோம். ஒரு முறை மஸ்கட் சரவணபவனில் இவர் ஸ்பெஷல் சாதா என்று கேட்க, அங்கிருந்த சர்வர் அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்க, என் கணவருக்கும், சர்வருக்கும் ஒரே ஆர்க்யூமெண்ட் ஆகி சூப்பர்வைசர் வந்து இவர் புதுசு, ஒன்றும் தெரியாது என்று சமாதானம் செய்தார்.

  பதிலளிநீக்கு
 124. ///ஸ்ரீராம். said...
  வாங்க அதிரா...

  ஏன்? என்னாச்சு? நன் ஒண்ணும் பண்ணலியே...///

  ஹா ஹா ஹா பண்ணாததால் தான் கோபமாக்கும்..க்கும்..க்கும்:)- இது எக்கோ:))

  ஆஆஆஆவ்வ்வ்வ்வ் அபோ ஸ்ரீராமுக்குத் தெரிஞ்சிருக்கு:) நான் இதுக்கெல்லாம் வராமல் விட மாட்டேன், இப்போ ஹொலிடே என்பதால் அன்று வீட்டில் இல்லை, ஈவினிங் வந்தால், எனக்குத்தெரியாத டிரெக்டர்.. சிங்கர் என பெரியவங்க:)).. எல்லோரும்:) என்னமோ பேசியிருப்பதைப் பார்த்து ஒண்ணுமே பிரியாமல் ஓடிட்ட்டேன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 125. //ஏகாந்தன் Aekaanthan ! said...
  //..குற்றத்தூர் முருகனும் ஸ்ரீராமோடு கோபம் போல.//

  குற்றத்தூர் ஆகிவிட்டதே குன்றத்தூர், டமிள் ‘டி’-யின் கைவரிசையில்.. ஈஸ்வரா..//

  ஹா ஹா ஹா அந்தக் காகப்பிள்ளையார் வடையைக் கொத்தியதைப்போல ஒளிச்சிருந்து கொத்துறாரே ஏ அண்ணன்:)).. நான் நினைச்சு எழுதாமல் அது தானாக அமிஞ்சுபோச்சே ஹா ஹா ஹா ச் றீராமும் அதைக் கவனிக்கவில்லை:)

  பதிலளிநீக்கு
 126. கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு வாட்ஸ்ஆப்பில் மாயவரத்தை சுற்றியுள்ள பெரும்பான்மையான கிராமங்களில் ஹிந்து கோவில்கள் மசூதிகளாக மாறி வருகின்றன என்று ஒரு செய்தி வலம் வந்து. அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 127. கீசாக்கா அது கத்தரிக்காய் இல்லை சுண்டங்காயாம் எல்லோ.. நான் உங்களை நெம்ம்ம்ம்பி:) கத்தரிக்காயைத்தேடிக் கொண்டிருந்தேன் கர்:))

  பதிலளிநீக்கு
 128. கும்பகோணம் அருகே நீங்கள் மசூதியா என்று கேட்டுள்ளது தேர் மண்டபம் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 129. எல்லோரும் தூங்கப் போகும் நேரம் நான் வந்தாச்சு.
  காகம் வடை தான் சூப்பர்.
  நதி பாவம் யரைப் பிடிக்கப் போகிறதோ.
  ஆறின தோசை எல்லாம் சாப்பிட வேண்டாம்.
  காப்பி அதுவும் கும்பகோணக்காப்பி என்றால் ஓடும் அளவுக்கு வயிற்றைக் கெடுத்தது. அதற்கு அந்தப் பித்தளைத் தம்ளரும் காரணமாக இருக்கலாம்.

  துரை சார் சொல்லும் தஞ்சாவூர்க் காப்பி சாப்பிட வேண்டும். பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 130. //சாதா தோசை உண்டு, ஸ்பெஷல் தோசை உண்டு. அது என்ன ஸ்பெஷல் சாதா? //

  வழக்கத்தில் உண்டு பானு அக்கா... ஸ்பெஷல் நெய் ரோஸ்ட் அல்ல, ஸ்பெஷல் ரவா அல்ல, ஸ்பெஷல் மசாலா தோசை அல்ல.. ஸ்பெஷல் சாதா! கல்தோசை சாப்பிட்டிருக்கிறீர்களோ? ஊத்தப்பத்துக்கு தம்பி மாதிரி இருக்கும்!

  பதிலளிநீக்கு
 131. அதிரா...

  // அபோ ஸ்ரீராமுக்குத் தெரிஞ்சிருக்கு:) //

  அப்போ அதானா? அது நான் சும்மா சொன்னதாக்கும்... தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு பாடல் லிஸ்ட்டே வரிசையில் காத்திருக்கிறதாக்கும்!

  பதிலளிநீக்கு
 132. //சிங்கர் என பெரியவங்க:)).. எல்லோரும்:) என்னமோ பேசியிருப்பதைப் பார்த்து ஒண்ணுமே பிரியாமல் ஓடிட்ட்டேன்ன்ன்:))//

  ஹா... ஹா... ஹா.. நம்பிட்டேன்!

  //ச் றீராமும் அதைக் கவனிக்கவில்லை:)//

  கவனிக்காமல் இல்லை. கவனிச்சேன். போனாப்போகட்டும்னு விட்டுட்டேன்.

  :)))

  பதிலளிநீக்கு
 133. பானு அக்கா..

  //கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு வாட்ஸ்ஆப்பில் மாயவரத்தை சுற்றியுள்ள பெரும்பான்மையான கிராமங்களில் ஹிந்து கோவில்கள் மசூதிகளாக மாறி வருகின்றன என்று ஒரு செய்தி வலம் வந்து. அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.//

  நான் கேள்விப்பட்டதில்லை.

  பதிலளிநீக்கு
 134. // தேர் மண்டபம் என்று நினைக்கிறேன்.//

  இருக்கலாம் ஜம்புலிங்கம் ஸார். நன்றி.

  பதிலளிநீக்கு
 135. வாங்க வல்லிம்மா..

  //அதற்கு அந்தப் பித்தளைத் தம்ளரும் காரணமாக இருக்கலாம்.//

  இருக்கலாம். நதி விதியைத்தான் பிடிக்கப்போகிறது! காகம் வடை இடித்திருப்பதற்கு நன்றி. ஆனால் இதை நான் அந்த காகத்திடம் சொல்லப் போவதில்லை!!!

  பதிலளிநீக்கு
 136. வல்லிம்மா..

  // காகம் வடை இடித்திருப்பதற்கு நன்றி.//

  கூகுள் புண்ணியத்துல தப்பா டைப் பண்ணிட்டேன். 'பிடித்திருப்பதற்கு' என்று வந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்!

  பதிலளிநீக்கு
 137. மாங்காடு அருள்மிகு கந்தபுரீஸ்வரர். மாங்காடு அம்மன், குன்றத்தூர் முருகன் தரிசனம் கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 138. எல்லா படங்களும் அழகு ஆனா கதவுக்குள் நிற்கும் செல்லமும் :) வடைய எடுத்து செல்லும் காக்கா குழந்தையும் ரொம்ப கியூட் :)
  அந்த பூ ??

  பதிலளிநீக்கு
 139. நல்ல தொகுப்பு. முதல் வெள்ளைப் பூக்கள் முருங்கை.

  மற்றன தெரியவில்லை.

  தலைப்புப் படங்கள் அருமை. மசால் வடை போலிருக்கிறது:).

  பதிலளிநீக்கு
 140. வாங்க ஏஞ்சல்... இரண்டு உயிரினங்களையும் ரசித்ததற்கு நன்றி. அந்தப் பூ கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி என்று சொல்லப்படும் செடியின் பூ!

  பதிலளிநீக்கு
 141. நன்றி ராமலக்ஷ்மி. மற்றவை சுண்டைப்பூ, ஓமவல்லிப்பூ.

  பதிலளிநீக்கு
 142. சென்னையிலும் சில பகுதிகளில் கறந்த பால் கிடைக்கும். அம்பத்தூரில் நாங்க இருந்தவரை வாங்கிக் கொண்டிருந்தோம். எருமைப்பாலும் கிடைக்கும். பசும்பாலும் கிடைக்கும். இப்போத் தெரியலை! ஆனால் மாடுகள் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 143. கும்பகோணத்தில் அந்த மண்டபம் இருக்கும் இடம் மகாமகக் குளக்கரையா என ரங்க்ஸ் கேட்டார். அவருக்கும் நினைவில் வரலை அந்தக் கட்டிடம் என்னனு! ஆனால் மகாமகக் குளக்கரையில் உள்ள ஓர் மண்டபமாய் இருக்கலாம் என்றார்.

  பதிலளிநீக்கு
 144. // கும்பகோணத்தில் அந்த மண்டபம் இருக்கும் இடம் மகாமகக் குளக்கரையா என ரங்க்ஸ் கேட்டார்.//

  இல்லக்கா... ஊருக்கு வெளியே..

  // சென்னையிலும் சில பகுதிகளில் கறந்த பால் கிடைக்கும்.//

  எங்கள் ஏரியாவிலேயே கிடைக்கிறது. நேயமும் அலைச்சலும் ஒத்துவரவில்லை!

  பதிலளிநீக்கு
 145. இன்னிக்கு என்ன சமையல்? :))) யார் சமையல்?:))))) தி/கீதாவுக்கு என்ன ஆச்சு? காணவே இல்லையே? :(

  பதிலளிநீக்கு
 146. செல்லம் செம க்யூட்!!! கொண்டு விட்டவர் அடுத்து என்ன செய்யப் போகிறார்னு பாக்குது போல...ஏதாவது கிடைக்குமானு?

  ரயில் பாதை செம...பார்த்ததும் ஆசைதான். பயணம் மிகவும் பிடிக்கும். அதுவும் ரயிலில் பயணிக்க ரொம்பவே பிடிக்கும். அதுவும் ஜன்னல் கிடைத்தால் ஆஹா ஆஹா....ஆனா என்ன பாத்ரூம் தான் செம டெரர்...அதை நினைச்சாத்தான் ரயில் பயணம் ஹையோனு ஆகுது....

  மலர்ந்து மலராத பாதி மலர் எப்ப விரியும்னு அந்தக் கிண்ணம் போன்ற இலையில் ஒரு சின்ன வண்டு மெதுவா போக வெயிட்டிங்க் போல!!! படம் அழகு!! கடலை மடிக்கும் கோன் போல அழகு!!

  முருங்கைப் பூ, சுண்டைக்காய் பூ. மற்றது வாட்சப்பில் விடை வந்ததால் சொல்லக் கூடாதோ...இப்பத்தான் ஞாயிறு முடிந்து திங்கள் வந்துருச்சே...ஸோ சொல்லிடலாம்ல...கற்பூரவல்லி/ஓமவல்லி...

  ஸ்ரீராம் நீங்க ஒரு பாட்டு பாடியிருந்தா காகம் வடையை தொப்புனு போட்டிருக்குமோ!!!!!!! படங்கள் செம அழகு...என்னம்மா இறுகப் பிடிச்சிருக்கு...பழைய காக்கா இல்லை போல..வெரி ஸ்மார்ட் காக்கா சிட்டி காக்கா....பொழைக்கத் தெரிஞ்ச காக்கா...ஹா ஹா ஹா

  ஆறுகள் பல வற்றியிருப்பதும், வாய்க்கால்கள் ஓடைகளாக மாறியிருப்பதும் மனதிற்கு மிகவும் வேதனை தரும் விஷயங்கள்.

  குன்றத்தூர், மாங்காடு இரண்டுமே நிறைய தரிசனம் செய்திருக்கேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 147. டிகிரி காப்பி ஒரு சில கும்பகோணம் டிகிரி காப்பி கடைகளில் குடிக்க ஒகேயாக இருக்கு. ஆனால் பல கடைகளில் இல்லை. இப்படி பித்தளை டம்ப்ளர் டபராவில் கொடுத்தால் டிகிரி காப்பி னு பேரு வைச்சுட்டாங்க...இல்லைனா பாரம்பரியம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 148. டிகிரி காப்பி? இதைப் பற்றி அத்தனை தெரியாது. அதிகம் காப்பி பழக்கம் இல்லாததால். எப்போதேனும் நான் தமிழ்நாடு வரும் போது காபி அருந்துவது வழக்கம். இது பற்றி தெரியலை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

  இந்தக் காக்கா வடை படங்கள் நல்லாருக்கு. பாட்டி யாரேனும் வடை சுடுகிறார்களோ அருகில்?
  பரவாயில்லையே அதுவரை கரையாமல் இருந்திருக்கிறதே....

  செம்பருத்தி மொட்டு அழகு. முருங்கைப் பூ தெரிந்தது.

  இரு கோவில்களுமே சென்றதில்லை. குன்றத்தூர் என்றதும் குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது.

  அதுமசூதி மாதிரித் தெரியவில்லையே (இருவரின் கருத்தும்....)

  தோசை ஈர்க்கிறது நான் எப்போது ஹோட்டல் சென்றாலும் டிஃபன் என்றால் தோசைதான் ஆர்டர் செய்வேன்.

  (கீதா: ஹையோ ஸ்ரீராம் எனக்கும் ரெட் சட்னி ரொம்பப் பிடிக்கும்....ஆனா பக்கத்துல ஏதோ சிவப்பா கிண்ணத்துல தெரிய்தே அப்புறம் என்ன அடம்...ஹா ஹா ஹா ஹா)

  கேரளத்தில் இப்படி வறண்ட ஆற்றைப் பார்க்க முடியாது. பரதப்புழா தான் பாலக்காடு சைட் என்பதால் வறண்டு போக வாய்ப்பு அதிகம் என்றாலும் கூட வெயில் காலத்தில் கூட கொஞ்சமேனும் தண்ணீர் ஓடும். குளிக்கும் அளவு.

  இங்கு ஒரு ஆறு இப்படி வறண்டு போயிருப்பதைப் பார்க்கும் போது மனது கஷ்டமாகத்தான் இருக்கிறது.


  துளசிதரன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!