ஞாயிறு, 8 ஜூலை, 2018

ஞாயிறு 180708 : குடந்தை காட்டேஜில் ஓரிரவு...!
குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல குடந்தை சென்றபோது நாங்கள் தங்கியிருந்த காட்டேஜ் இருந்தத்தெரு.  நம்ம ஊர்ல இது மாதிரித் தெருக்களை பார்த்தால் படமெடுக்க மாட்டோம்.  வெளியூர் என்றதும் என்னவோ ஒரு ஆசை படம் எடுக்கத் தோன்றி விடுகிறது!
நாச்சியார் கோவிலுக்குள் சென்றபோது உள்ளே நுழையும்போது ஒரு இடத்தில் இருந்த மேடையில் புறாக்களுக்கு உணவு படைக்கப்பட்டிருந்தது. என் மகன் அவற்றைப் படம் எடுக்க நின்றதும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு எங்களையே பார்த்தது!  போஸ் கொடுக்கிறது என்றுஅர்த்தம் இல்லை.  எச்சரிக்கை உணர்வு...இன்னும் கவனமாகக் குனிந்து...அதன் அருகே இன்னொன்றும் ஜோடியாய்..அட...  சாப்பிடுங்கப்பா..   நாங்க ஒண்ணும் பங்குக்கு வரலை!  குடந்தையில் நாங்கள் தங்கியிருந்த காட்டேஜ்.  ஏழு பேர் தங்கினோம்.  குளிர்சாதன வசதியுடன், இரண்டு பெட்ரூம், நடுவில் நீளமான ஹால், ஒரு சமையலறை.  கோவில்களுக்கு வந்து வெளியில்  சாப்பிட மாட்டேன் என்று சொல்பவர்கள் அவர்களே சமைத்துக்கொள்ள சௌகர்யம்.  அவர்களே மேலே ரெஸ்டாரண்ட்டும் வைத்திருக்கிறார்கள்.  இவர்களிடம் இரண்டு பெட்ரூம், சிங்கிள் பெட்ரூம் என்று வைத்திருக்கிறார்கள்.  கட்டணம் ஸஹாயமாக இருந்தது.  இடம் வசதியாக இருந்தது.  இணைய இணைப்பு வசதி உண்டு.  தொலைக்காட்சி உண்டு.இந்த தாராசுரம் மணியை நான்கு வருடங்களுக்கு முன்னால் வேறு கோணத்தில் எடுத்திருந்தேன்.  இப்போது இப்படி...!நான்கு வருடங்களுக்கு முன் எடுத்த அதே படம் / இடம்!திருநாகேஸ்வரம் சூரிய புஷ்கரணி..  "டப்புனு படம் எடுத்துக்கிட்டு போயிகிட்டே இருக்கியே...  சரியாவே வந்திருக்காது" என்றான் மகன்.  பரவாயில்லை, நன்றாகவே வந்திருக்கிறது! (ஆனால் அவன் இதைச் சொன்னது திருவாலஞ்சுழி கோவில் குளத்தில்தான்)எங்கள் திருமணம் நடந்த ஒப்பிலியப்பன் கோவில் திருக்குளம் மண்டப வாசல்கள் வழியே தெரிகிறது.  அதற்குப்பின் திருநாகேஸ்வரத்துக்கும், ஒப்பிலியப்பன் கோவிலுக்கும் இப்போதுதான் போகிறோம்!  அந்த போர்டில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க  முடிகிறதோ?  திருமணஞ்சேரிக்குப் போகும் நேரம் தாண்டிவிட, மாலை வரை காத்திருக்க வேண்டியிருந்த சமயத்தில் குத்தாலத்தில் 'தில்லை உணவகம்' என்ற இடத்தில் சாப்பிட்டோம்.  தக்காளி, சாதம், வெஜிடேபிள் பிரியாணி, பரோட்டா தான் இருப்பதாகச் சொன்னார் கடைக்காரர்.  ப்ளஸ் தயிர் சாதம்.  சாத வகையறாக்கள் கேட்டால் ஒரு கப் சாதத்தை இலையில் கவிழ்த்தி, அதன்மேல் ஒரு வத்தலை சொருகிக் கொண்டு வந்தார் பரிமாறுபவர்.  ஒன் பை டூ என்று சொன்னால் அந்த வத்தலை சரிபாகமாக இரண்டாக்கி இரண்டு தட்டுகளில் போட்டார்.  பாஸுக்கு சிரிச்சு மாளலை!  ருசி  ரொம்பச் சுமார்.  வேறு வழியில்லை.  திருமணஞ்சேரி போகும் வழியில் சாப்பிட வேறு நல்ல ஹோட்டல் கிடைக்கவில்லை.  சமையலறையிலிருந்து பதார்த்தங்களைக் கொண்டு வந்து வைக்கும் தடுப்பான இடத்தின் சுவரோடு பதித்திருந்த அலமாரியின் கீழ்ப்படியில் நாய் செல்லம் ஒன்று படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.  

அந்த ஹோட்டலின் பின்புறம் இது!  சமையல் நடக்கும் இடம்!மதியம் இரண்டு மணி வாக்கில் திருமணஞ்சேரி.  உள்ளே சென்று பார்த்தால் கூட்டம் கூட்டமாகக் காத்திருந்தார்கள்.  இதில் அடித்துப் பிடித்து எப்படி உள்ளே சென்று இடம் பிடிப்பது என்கிற கவலை வந்தது.  ஏனெனில் காலாகாலத்தில் இந்த வேண்டுதலை நிறைவேற்றி விட்டு இரவு பனிரெண்டு மணிக்குள் சென்னையை அடையவேண்டும்.  பனிரெண்டு மணியைத் தாண்டினால் பேக்கேஜில் இன்னொரு 250 கிலோமீட்டர் சேர்ந்து விடும்!  

கோவில் அலுவலகத்தில் கேட்டபோது ஏஜெண்ட்களை நம்பாதீர்கள் என்றனர்.  ஆனாலும் அவர்களும் "நெய் விளக்கு" ஒன்பது இருக்கும் செட் வாங்கிக்கொண்டு உள்ளே செல்லச் சொன்னார்கள்.  உண்மையில் அந்த விளக்குகள் தேவையே இல்லை!  அங்கே எங்களோடு கோவில் வந்தவர்கள் "விளக்கு வாங்காதீங்க...   கொள்ளை... அது நெய்யும் இல்லை, டால்டா" என்றனர்.  ஏஜென்ட்கள் ராஜ்ஜியம் உள்ளே ஜரூராகவே இருந்தது.

ஆனால் நாங்கள் முன்னால் நின்று ஒரு இடம்பிடித்து விட்டோம்.  மகன் வெளியில் நின்று அர்ச்சனைச் சீட்டு வாங்கி வந்து விட, உள்ளே விளக்கேற்றி வைத்துவிட்டு சன்னதியில் ஜோடியாய் இடம் பிடித்து விட்டோம்.

பாஸுக்குத் திருமணமாக வேண்டி அவர் அப்பா சுமார் முப்பது வருடங்களுக்கு முன் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை.  அதை இப்போதுதான் நிறைவேற்றினோம்.   வந்திருந்த ஜோடிகளில் சீனியர் மோஸ்ட் நாங்கள்தான்!

எங்கள் இடதுபுறம் திருமணம் நடக்கவேண்டி பையன்களும், வலது புறம் இளம் பெண்களும் அமர்ந்திருந்தனர்.

அர்ச்சகர் மைக்கில் என்ன அவர் செய்வார், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்.

பழைய மாலையை வாங்கிக்கொண்டு அர்ச்சனைப்பையில் தரப்பட்டிருக்கும் பையில் இருந்த புதிய மாலைகளை பூஜையில் வைத்து அர்ச்சனை செய்து ஜோடிகள் கையில் தந்து மாற்றிக்கொள்ளச் சொன்னார்கள்.  பின்னர் தாம்பூலப்பை போல கொடுத்து வரிசையில் எங்களை வெளியே அனுப்பும்போது சீர்வரிசைக் கூடை போல பெரிய கூடை ஒன்றை அருகில் வைத்து, "தட்சணை போட்டுப் போங்கோ" என்றனர் ஒவ்வொருவரிடமும்.  கூடையில் பணம் நிரம்பிக் கொண்டிருந்தது.  நானும் "தட்சிணை" போட்டேன் - என்னை அறியாமல்.

பிரகாரம் சுற்றி, வெளியில் வந்து வெளியில் வீற்றிருந்த பிள்ளையார் முன் ஒருதேங்காயைச் சிதறி, மீண்டும் உள்ளே வந்து கொடிமரத்தின் அருகே நமஸ்கரித்துக் கிளம்பினோம்.  வைத்திருந்த மாலையை மறுநாள் வீட்டில் காலை நீராடி, ஸ்வாமிக்குமுன் மாலை மாற்றிக்கொண்டபின் மாலைகளை நீர்நிலை ஏதாவதொன்றில் சேர்த்துவிடவேண்டும்.  விட்டோம்!
110 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்…..பனியில் நனைந்த மலர்களைப் போல் அழகாக மலர்ந்திருக்கிறது புதியநாள்.!!
  “உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி”
  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். இன்றும் ஒரு நல்ல தகவலோடு வந்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. இனிய காலை வணக்கம் கீதா அக்கா.

  பதிலளிநீக்கு
 5. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..

  பதிலளிநீக்கு
 6. வித்தியாசமான அழகான படங்கள் இதோ ஒவ்வொன்னா வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 7. // அடேங்கப்பா!... //

  இதுவும்,

  // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் //

  இதுவும்

  எதற்கு என்று இந்தச் சிறுவனுக்குப் புரியவில்லையே.....!!!

  பதிலளிநீக்கு
 8. கிராமத்துத் தெரு அழகு! இப்படித்தான் எங்க ஊர்த் தெரு இருக்கும் படத்தில் அற்றத்தில் நடுவில் ஒரு வீடு இருப்பது போல் எங்கள் தெருவில் நம்மாழ்வாரின் தாயாரின் வீடு இப்போது பஜனமடம் என்ற பெயரில் இருக்கும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 9. நல்ல அழகான விவரங்கள். படங்கள் அருமை! குலதெய்வம் எந்த ஊர்? காட்டேஜ் இருப்பது எந்தத் தெரு?

  பதிலளிநீக்கு
 10. பாஸோடு மாலை மாத்தின ஃபோட்டோவை இங்கே போடாட்டியும் தனியாய்ப் பகிர்ந்திருக்கலாமோ? :)

  பதிலளிநீக்கு
 11. எதற்கு என்று இந்தச் சிறுவனுக்குப் புரியவில்லையே.....!!!//

  ஹா ஹா ஹா ஹா பாட்டி அதிரா ஷுட் நோட் திஸ்!!! ஹா ஹா

  ஸ்ரீராம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்குனா கீதாக்கா இன்று சீக்கிரமே காபி ஆத்தியும் முதல்ல வரமுடியலைனு இருக்கும்....

  இதுவும் தான் இந்தக் குழந்தைக்கும் (நாந்தேன்)
  புரியலை ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 12. கீதா....

  // ஸ்ரீராம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்குனா கீதாக்கா இன்று சீக்கிரமே காபி ஆத்தியும் முதல்ல வரமுடியலைனு இருக்கும்....//

  இருக்கும்.... இருக்கும்....

  //இதுவும் தான் இந்தக் குழந்தைக்கும் (நாந்தேன்)
  புரியலை//

  ஹா... ஹா... ஹா....

  பதிலளிநீக்கு
 13. ஹோம்ஸ்டே ரொம்ம்ம்ம்ம்ம்பவே சகாயவிலையா இருக்கே...சூப்பரா இருக்கு..நல்ல வசதிகளுடன் அதுவும்...செமை.....அதுவும் கிச்சனுடன் வாவ்!! 7 பேர்....சூப்பர்...ஓ!! போடலாம் போல!!!

  புறா ரொம்ப சென்சிட்டிவ் இல்லையா அதான் ஃபோட்டோ எடுக்கப் போனதும் அது எச்சரிக்கையோடு.....இவங்க எதுக்கு வந்திருக்காங்கனு ...தலைப்பு நல்லாருக்கு...ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
 14. வாங்க கீதா.... பட்டணத்தின் பரபரப்புகளுக்கு நடுவே இதுமாதிரித் தெருக்கள் நமக்கு அபூர்வம்தான்!

  பதிலளிநீக்கு
 15. கீதாக்கா.... பாராட்டுக்கு நன்றி. குலதெய்வம் சேங்காலிபுரம் அருகே மழுவசேரி. இந்தத் தொகுப்பில் அந்தப்படங்கள் இணைக்கப்படவில்லை. காட்டேஜ் விவரங்கள் இணைக்கப்பட்டிருக்கும் படத்திலேயே இருக்கின்றன பாருங்கள். பாபுராஜபுரம்.

  பதிலளிநீக்கு
 16. இந்த தாராசுரம் மணியை நான்கு வருடங்களுக்கு முன்னால் வேறு கோணத்தில் எடுத்திருந்தேன். இப்போது இப்படி...!//

  நினைவு இருக்கு என்று நினைக்கிறேன்...ஏன்னா உங்க பதிவுகளைப் பார்க்கத் தொடங்கிய புதிது. அப்போதும் கோயில் போன விவரங்கள் கட்டுரை வந்திருந்தது. அப்போது படத்தில் கூட ஒருவர் இருந்த படம் இருந்தது. அப்போ அது நீங்களா இருக்குமோனு தோணிச்சு....ஆனா அப்ப உங்களை நேரில் பார்த்திருக்கவில்லையே அதனால தெரியலை....ஆனா நீங்க இல்லைனு நினைக்கிறேன்....அதில் இருந்தவரும்......சரி சரி இதுக்கு மேல வேண்டாம்...ஹா ஹா ஹா ஹா தேம்ஸ்காரங்களுக்கு மண்டை குடையட்டும்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 17. ஹை அந்த 4 வருடத்துக்கு முந்தைய படம் வந்திருச்சு நினைவுக்கும் வந்துருச்சு....ஹா ஹா ஹா
  சரி அப்புறம் வரேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
 18. இரண்டு பேர்களுக்கு மேல் ஒரு ஆளுக்கு 250 ரூபாய் சார்ஜ் போடுவார்களாம். ஆனால் நாங்கள் உள்ளூர் நண்பர் ஒருவர் அறிமுகத்துடன் சென்றதால் எங்களுக்கு சகாயம். அந்த உள்ளூர் நண்பர் என் அண்ணனின் முகநூல் நட்பு. மகாபெரியவர் பக்தர். இன்னம்பூர்க்காரர்.

  நான் முகநூல், பிளாக்கில் இவற்றைப் போடுவேன் என்றதும் மகிழ்ந்தார் அவர். அங்கு தங்கப்போகிறவர்கள் எங்களைச் சொன்னால் புரிந்து கொள்வார். அதை அவரே சொன்னார்.

  பதிலளிநீக்கு
 19. // அப்போது படத்தில் கூட ஒருவர் இருந்த படம் இருந்தது. அப்போ அது நீங்களா இருக்குமோனு தோணிச்சு...//

  நானே படம் க்ளிக்கி நானே அதில் எப்படி? ரெட்டை வேஷமா என்ன!!!

  பதிலளிநீக்கு
 20. யாத்திரை விடயங்களும், படங்களும் ரசனையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 21. அனைவருக்கும் காலை வணக்கம்

  பதிலளிநீக்கு
 22. மணி எடுக்கப்பட்ட கோணம் மாறும் போது படத்தில் எத்தனை வித்தியாசங்கள்...அந்த மணிதானா அந்த இடம் தானா என்று வியப்படைய வைக்கிறது
  இதில் ஒரு தத்துவமும் இருக்கோ...

  ஒரு நிகழ்வு. அதை அனுபவித்த அதனால் தாக்கப்பட்ட ஒவ்வொருவரின் பார்வையின் கோணத்தில் நிகழ்வே வித்தியாசப்பட்டு விடுவது போல்.....

  நான் ஞானி அதிரா இல்லையே ஹிஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 23. // அப்போது படத்தில் கூட ஒருவர் இருந்த படம் இருந்தது. அப்போ அது நீங்களா இருக்குமோனு தோணிச்சு...//

  நானே படம் க்ளிக்கி நானே அதில் எப்படி? ரெட்டை வேஷமா என்ன!!!//

  ஹா ஹா ஹா ஹா ஹலோ அப்ப உங்களை தெரியாதுங்கோ...!!!! ஜஸ்ட் ப்ளாக் மட்டுமே!!

  கீதா

  பதிலளிநீக்கு
 24. குழந்தைகளுடன் நிறைய பேர் திருமணஞ்சேரியில் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து இருக்கிறேன். நீங்கள் வளர்ந்த குழந்தைகளுடன் சென்று வந்து விட்டீர்கள்.
  (பேரன், பேத்தி வருவதற்குமுன் போய் வந்து விட்டீர்கள்)

  தங்கும் விடுதியை குறித்துக் கொண்டேன்.குடந்தை தெரு படம், நாச்சியார் கோயில் புறாக்கள் படம், தாராசுரம் மணி, வலஞ்சுழி குளம் எல்லாம் அழகு.

  //அந்த போர்டில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முடிகிறதோ? //
  பக்லிராப் பொய்கை என்று படிக்க முடிகிறது பெரிது செய்து படித்தால்.
  கீழே உள்ளது அகோரபுஷ்கரணியா?

  பதிலளிநீக்கு
 25. சமையல் நடக்கும் இடத்தை பார்க்க போக கூடாது ஓட்டலில்

  பதிலளிநீக்கு
 26. // அடேங்கப்பா..//

  முப்பது வருஷத்துக்கு அப்புறமாக...

  அதற்குத்தான் அது!...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 27. இரண்டு பேர்களுக்கு மேல் ஒரு ஆளுக்கு 250 ரூபாய் சார்ஜ் போடுவார்களாம். ஆனால் நாங்கள் உள்ளூர் நண்பர் ஒருவர் அறிமுகத்துடன் சென்றதால் எங்களுக்கு சகாயம். அந்த உள்ளூர் நண்பர் என் அண்ணனின் முகநூல் நட்பு. மகாபெரியவர் பக்தர். இன்னம்பூர்க்காரர்.

  நான் முகநூல், பிளாக்கில் இவற்றைப் போடுவேன் என்றதும் மகிழ்ந்தார் அவர். அங்கு தங்கப்போகிறவர்கள் எங்களைச் சொன்னால் புரிந்து கொள்வார். அதை அவரே சொன்னார்.//

  குறித்து வைத்துக் கொண்டுவிட்டேன் ஸ்ரீராம். 250 என்றாலும் கூட பரவாயில்லை. நல்ல வசதிகளுடன் இருக்கே....அதுவும் கிச்சன் வசதியுடனும்...என்பதுதான் கூடுதல் சிறப்பாகத் தோன்றியது. ஆனா இப்படி வெளிநாடு போல இங்கும் வரத் தொடங்கிவிட்டதுதான். வெளிநாட்டில் சிறிய மினிமம் கிச்சன் வசதியுடன் தங்குமிடம் இருக்கிறதுதான்....

  இப்படிக் கோயில் தலங்களில் இருக்கும் மாமா மாமிகள் தங்கள் வீட்டின் ஒரு போர்ஷனை தங்குவதற்குக் கொடுத்து சாப்பாடும் கொடுக்கிறார்கள். அதில் அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை என்றும் கேள்விப்பட்டேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 28. வலஞ்சுழி விநாயகர் கோயில் குளம் அட்டகாசமா இருக்கு. படம் நல்லாவே வந்திருக்கு ஸ்ரீராம். செமையா இருக்கு!! ரசித்தேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
 29. ஸ்ரீராம் ஒப்பிலியப்பன் கோயில் மண்டபம் வழி குளம் தெரியும் அந்தப் படம் அட்டகாசம்....ரொம்ம்ம்பவே அழகா இருக்கு...எழுத்துகள் படிக்க முடியலை கெஸ் பண்ணுகிறேன்....முயற்சி...

  கீதா

  பதிலளிநீக்கு
 30. கல்யாணத்துக்கு அப்புறம் இப்பதான் போறீங்களா...ஆஹா!!! அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நு பாடினீங்களா ரெண்டு பேரும்!! ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 31. காலை வணக்கம்.

  படங்கள் அழகு.

  குடந்தைக்கும் அதன் சுற்றுப் புறக் கோவில்களுக்கும் செல்ல எண்ணமுண்டு. பார்க்கலாம் எப்போது வாய்க்கிறது என....

  தங்குமிடம் தகவல்கள் நன்று. பயன்படும்.

  பதிலளிநீக்கு
 32. படங்களும், விவரமும் சிறப்பு.
  மகனுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டுமே என்ற எண்ணம் உங்கள் திருமண வேண்டுதலை நிறைவேற்ற செய்து விட்டதோ?

  பதிலளிநீக்கு
 33. ரெசார்ட் பற்றிய தகவலுக்கு நன்றி.
  தாராசுரம் கோவில் மணியை இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப்பில் எடுத்திருக்கலாமோ?
  தாராசுரம் கோவிலில் யானை பிரசவிக்கும் சிற்பம் இருக்குமாமே? உங்கள் கண்ணில் பட்டதா?

  பதிலளிநீக்கு
 34. முப்பது வருடங்களாக அந்த பழைய மாலையை பத்திரமாக பாதுகாத்து வந்தீர்களா??!!

  பதிலளிநீக்கு
 35. திருவலஞ்சுழி என்பதில் ஏன் திருவை வெட்டி விட்டீர்கள்?

  பதிலளிநீக்கு
 36. ரொம்ப வாரங்களுக்குப் பிறகு இன்டெரெஸ்டிங் ஞாயிறு பதிவு.

  குடந்தை தங்குமிடம் பற்றிய செய்தி உபயோகமானது. கிராமச் சூழ்நிலையில் தெருக்கள் பார்த்து பல வருடங்களாகிவிட்டது.

  ஒப்பிலியப்பன் கோவில் பகலிராப் பொய்கை (அப்படித்தான் படித்தேன்) அழகு. யானையின் படம் அடுத்த ஞாயிறிலா? கும்பகோணம் தேர் படமும், சாப்பிட்ட இடங்கள் பற்றியும் எதிர்பார்க்கலாமா?

  பதிலளிநீக்கு
 37. ஒவ்வொருவருடமும்.// ஒவ்வொருவரிடமும்?? இல்லையோ..ஸ்ரீராம்?

  கீதா

  பதிலளிநீக்கு
 38. கும்பகோணம் முதல் திருமணஞ்சேரி வரை. கும்பகோணம் நான் பிறந்த ஊர் என்ற நிலையில் தொடர்பு. பிற அனைத்து ஊர்களுக்கும், கோயில்களுக்கும் சென்றுள்ளேன். சமூக நிகழ்வுகளை புகைப்படம் எடுக்கும் அழகு அருமை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 39. பகலிராப்பொய்கை...இப்பத்தான் படத்தை டவுன்லோட் பண்ணியதை பெரிசு படுத்திப் பார்த்தேன்...அதுக்கும் கீழே இருப்பது தெரியலை....

  கீதா

  பதிலளிநீக்கு
 40. கீதா ரங்கன் - ஐயோ ஐயோ.. அக்கா அக்கா.. தெரியலையா? 😂//

  ஹா ஹா ஹா ஹா என்ன க்கா க்கா? க்கும் க்கும்!!! ....என்ன தெரியலையா??!!

  கீதா

  பதிலளிநீக்கு
 41. நீங்கதான் பொய்கையின் பெயர் தெரியலைன்னு சொன்னீங்களே.... கடைசில கண்டுபிடிச்சுட்டீங்க (நான், நீங்க மொபைலில்தான் பார்ப்பீர்கள் என்பதை மறந்துவிட்டேன்)

  பதிலளிநீக்கு
 42. எனக்கும் உள்ளூரில் படமெடுக்க ஒருமாதிரி இருக்கும். என் பிள்ளைகளை படமெடுக்க சொன்னால் அலுத்துக்குவாங்க.

  நாங்க திருமணஞ்சேரி இருமுறை போய் இருக்கேன். அப்போலாம் கோவில் காலியா இருந்துச்சு. ஆனா, வேண்டுதல் எதும் இல்லாம போனோம்.

  பதிலளிநீக்கு
 43. பழைய மாலையை வாங்கிக்கொண்டு//

  ஆஹா!! உங்கள் மண மாலை இத்தனை வருஷமா வீட்டில் இருந்ததா? ஒரு ஃபோட்டோ போட்டுருக்கலாம்ல?

  திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் கோயிலிலும் அப்படித்தான் சொல்லப்பட்டது. அங்கு நிறைய கல்யாணம் நடக்க வேண்டி வந்தவர்களிடம் அந்த அர்ச்சகர் சொல்லிக் கொண்டிருந்தார்.

  கீதா

  பதிலளிநீக்கு
 44. நீங்கதான் பொய்கையின் பெயர் தெரியலைன்னு சொன்னீங்களே.... கடைசில கண்டுபிடிச்சுட்டீங்க (நான், நீங்க மொபைலில்தான் பார்ப்பீர்கள் என்பதை மறந்துவிட்டேன்)//

  நெல்லை நான் வீட்டிலிருந்தால் மொபைலில் வாசிப்பதில்லை. அதெல்லாம் பயணத்துல இருந்தாதான்..இல்லைனா நெட், கரன்ட் இல்லைனாதான்.....மத்தபடி.வீட்டில் இருந்தா ஒன்லி இன் கம்ப்யூட்டர்.....அதான் டவுன்லோட் பண்ணி வைச்சுட்டு பெரிசு பண்ணிப் பார்த்தேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 45. நிறைய கோயில்களில் இந்த நெய் விளக்கு பிஸினஸ் ஏமாத்து வேலைதான் ஸ்ரீராம்.

  சீர்வரிசைக் கூடை போல பெரிய கூடை ஒன்றை அருகில் வைத்து, "தட்சணை போட்டுப் போங்கோ" // ம்ம்ம்ம் என்ன சொல்ல....கமர்ஷியல்...

  மறுநாள் ஸ்வாமி முன் மாலை மாற்றிக் கொண்டு..//

  அட! மீண்டும் ஒரு கல்யாண நிகழ்வு! கல்யாண சமையல் சாதம் !!! உண்டோ? பாருங்க எல்லாம் சொன்னீங்க எங்களுக்கு ஒரு விருந்தும் வைச்சுருக்கலாம்ல இங்க..!!! ஒரு ஹனிமூன் ட்ரிப் தேம்ஸ்கு போட்டுருங்க.....உங்க வீட்டு மொட்டை மாடிலதான் நிறைய இருக்கே!!! ஸ்பான்ஸர்ஷிப் பூஸார்!!.ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 46. இன்றும் ஒரு நல்ல தகவலோடு வந்திருக்கிறீர்கள்.//

  ஓ!! வளெர நந்நி கேட்டோ! ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 47. //காட்டேஜ் விவரங்கள் இணைக்கப்பட்டிருக்கும் படத்திலேயே இருக்கின்றன பாருங்கள். பாபுராஜபுரம்.// எங்கே! எழுத்துகள் படிக்க முடியலை! :( கண்ணாடி போட்டுண்டும்! :))))

  அது சரி, காலம்பரக் கேட்க வேண்டிய கேள்வியை இப்போக் கேட்கிறேன். மாலை இத்தனை வருஷமா பத்திரமா இருந்ததா? நாங்க திருமணஞ்சேரி சுவாமியைப் பார்க்கப் போயிருக்கோம். மாப்பிள்ளை சாமி அருகே அம்பிகை நிற்கும் ஒயிலுடன் கூடிய அழகு! காணக் காணக்கண்கொள்ளாக் காட்சி! பக்கத்திலேயே உள்ள திருவேள்விக்குடியும் போனீங்களா? அங்கே தான் திருக்கல்யாணத்துக்கான வேள்விகள் நடந்ததாய்ச் சொல்வார்கள். கல்யாணம் இங்கே!

  பதிலளிநீக்கு
 48. எங்க வீட்டிலே நாத்தனார், நாத்தனார் பெண் ஆகியோருக்கெல்லாம் போயிருக்காங்க! நாங்க தரிசனத்துக்காகவே போனோம்,அதுவும் சில ஆண்டுகள் முன்னர் தான்! இதே போல் மதுரைக்கருகே திருவேடகம் கோயிலிலும் மாலை மாற்றுவார்கள். அங்குள்ள சப்தகன்னிகளுக்கு வேண்டிக் கொள்வார்கள். அது ஒரு பழமையான கோயில் என்பதோடு மாடக் கோயில்களிலும் ஒன்று. இருபது ஆண்டுகள் முன்னர் போனது. அப்போல்லாம் காமிராவும் இல்லை. எழுத்தாளியாயும் இல்லை! படம் எடுக்கலை. திருமணஞ்சேரி போனப்போவும் காமிரா இல்லை! செல்லும் இல்லை! :))))

  பதிலளிநீக்கு
 49. /// எழுத்தாளியாயும் இல்லை!..///

  !?.....//இப்போ 2005 லேருந்து தானே எழுத்தாளி! :))) அந்தக்கோயில் 20 வருஷம் முன்னால் போனது! :))))

  பதிலளிநீக்கு
 50. ஞாயிறு ஒளிமழையில்... கொஞ்சம் குளிக்க வந்தேன்ன்ன்:)..

  வெளியூர்ப் படம் சூப்பரோ சூப்பரா மிக அமைதியா, இன்னொன்று எவ்ளோ நீட்டா இருக்கு ரோட்டோரமெல்லாம் அழகா கூட்டி வச்சிருக்கினம்.

  பதிலளிநீக்கு
 51. ஹா ஹா ஹா மணிப்புறாக்கள் மிரண்டு மிரண்டு பார்க்கிறார்கள்... பழைய மாலையுடன் வந்திருக்கும் புதுமணத்தம்பதிகளை:)).

  குடந்தைக் கொட்டேஜ் பார்க்க நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 52. அந்த மணிக் கட்டிடம், கருங்கற்களால் கட்டப்பட்டவைபோல இருக்கே.. அருமையான வேலைப்பாடுகள்.

  ///சரியாவே வந்திருக்காது" என்றான் மகன். பரவாயில்லை, நன்றாகவே வந்திருக்கிறது!///

  ஹா ஹா ஹா நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.. சிலசமயம் நல்லாவே இருக்காது என நினைப்பதே மிக அருமையானதாக இருந்துவிடுவதும் உண்டு... மிக அழகாக வந்திருக்கு..

  கோயிலின் உள்ளேயே சிலர் நித்திரை கொள்கின்றனரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 53. //July 8, 2018 at 10:18 AM
  Thulasidharan V Thillaiakathu said...
  கீதா ரங்கன் - ஐயோ ஐயோ.. அக்கா அக்கா.. தெரியலையா? 😂//

  ஹா ஹா ஹா ஹா என்ன க்கா க்கா? க்கும் க்கும்!!! ....என்ன தெரியலையா??!!

  கீதா

  July 8, 2018 at 10:19 AM
  நெ.த. said...
  நீங்கதான் பொய்கையின் பெயர் தெரியலைன்னு சொன்னீங்களே.... கடைசில கண்டுபிடிச்சுட்டீங்க (நான், நீங்க மொபைலில்தான் பார்ப்பீர்கள் என்பதை மறந்துவிட்டேன்)///

  ஆவ்வ்வ்வ்வ் நெல்லைத்தமிழன்:) வாபஸ் வாங்கிடாதீங்க.. சொல்ல வந்ததைச் சொல்லிட்டு அப்படியே விட்டிடுங்கோ மிகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன் ஹா ஹா ஹா.....

  கீதாவை அக்கா எனும் போதினிலே..
  இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..
  அஞ்சுவை ஆன்ரி எனும் போதினிலே..
  சந்தோசம் தாண்டவமாடுது நெஞ்சினிலே..:))

  ஹாஅ ஹா ஹாஆஆஆஆஆஆஆ:))

  பதிலளிநீக்கு
 54. @ கீதா: //..என்ன க்கா.. க்கா? //

  வடை கீழே விழுந்திருக்கும் !

  பதிலளிநீக்கு
 55. @ அதிரா: //..புறாக்கள் மிரண்டு மிரண்டு பார்க்கிறார்கள். பழைய மாலையுடன் வந்திருக்கும் புதுமணத்தம்பதிகளை:))//

  புதுமாலையுடன் வந்த பழையமணத் தம்பதிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தால், இப்படி மிரண்டிருக்காதோ அந்த தம்பதிப் புறாக்கள்?

  பதிலளிநீக்கு
 56. குடந்தை என்றால் கும்பகோணம்தானே நாங்கள் பலமுறை சென்று வந்திருக்கிறோம்நாச்சியார் கோவில் தாராசுரம் திருமணஞ்சேரி ஒப்பிலியப்பன் கோவில் திரு நாகேஸ்வரமென்று சொல்லிக் கொண்டே போகலாம் புறக்களை படம் எடுத்திருக்கவில்லை நாச்சியார் கோவிலில் கல் கருடன் விசேஷம்

  பதிலளிநீக்கு
 57. // யாத்திரை விடயங்களும், படங்களும் ரசனையாக இருந்தது. //

  நன்றி கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு 58. மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்ட மணியின் படங்களை ரசித்ததற்கு நன்றி கீதா.. (மணி என்பது யார் என்று கேட்கக் கூடாது!)

  // ஹா ஹலோ அப்ப உங்களை தெரியாதுங்கோ...!!!! ஜஸ்ட் ப்ளாக் மட்டுமே!!//

  அப்பவும் அதே கேள்வி நிற்கிறதே கீதா...!!!! ஹா.. ஹா.. ஹா...

  பதிலளிநீக்கு
 59. வாங்க கோமதி அக்கா..

  நிறையபேர் காரியமானதும் கடவுளை (பிரார்த்தனையை) மறந்துதான் விடுகிறார்கள் போல! அப்புறம் தங்கள் பிள்ளைகள் கல்யாணம் வரும்போதுதான் அருமையை உணர்கிறார்களோ என்னவோ... என்னைப்போல!

  பகலிராப் பொய்கை - அஹோராத்ர புஷ்கரணி என்று எழுதி இருக்கிறது அக்கா.

  பதிலளிநீக்கு
 60. கோமதி அக்கா..

  // சமையல் நடக்கும் இடத்தை பார்க்க போக கூடாது ஓட்டலில் //

  உண்மை... உண்மை.. ஆனால் என்ன செய்ய... அங்கேதான் 'ரெஸ்ட் ரூம்' இருந்தது!

  பதிலளிநீக்கு
 61. துரை செல்வராஜூ ஸார்..

  // முப்பது வருஷத்துக்கு அப்புறமாக...//

  ஓ... புரிந்தது!

  பதிலளிநீக்கு
 62. கீதா..

  நீங்கள் சொல்லி இருக்கும் மாமா மாமி ஒரு போர்ஷனை வாடகைக்கு விடும் வழக்கம் இங்கு குடந்தையில் இருக்கிறதா தெரியவில்லை.

  கோவில் குளம் படம் நல்லா வந்திருக்கா? இருங்க... என் பையன் கிட்ட சொல்றேன்.

  பதிலளிநீக்கு
 63. கீதா...

  // எழுத்துகள் படிக்க முடியலை //

  ஒப்பிலியப்பன் கோவில் படம் எந்நாளும் கோமதி அக்காவாலும் படிக்க முடிந்திருக்கிறது கீதா...!

  ஆமாம் கல்யாணத்துக்கு அப்புறம் இப்போதான். என் மாமியார்தான் ரொம்ப நாளா அங்கே போகணும்னு கேட்டுக்கொண்டே இருந்தார்கள். மாமியார் ஹேப்பி அண்ணாச்சி...

  பதிலளிநீக்கு
 64. மாலை வணக்கம் வெங்கட்!

  ரசித்ததற்கு நன்றி. தப்பித்தவறி அங்கு தங்கப்போனால் என் பெயரைச் சொல்லுங்கள். நானும் ஒரு வியாபாரம் அவருக்கு கொடுத்தேன் என்றிருக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 65. வாங்க பானு அக்கா...

  // மகனுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டுமே என்ற எண்ணம் உங்கள் திருமண வேண்டுதலை நிறைவேற்ற செய்து விட்டதோ? //

  இல்லை. வேறு விஷயமாக அங்கு சென்றோம். எங்கள் குலதெய்வம் கோவில் சென்று 21 ஆண்டுகள் ஆனது முக்கியக் காரணம். அருகில்தான் இத்தலங்கள்.

  பதிலளிநீக்கு
 66. பானுக்கா...

  தாராசுரம் கோவில் மணியை நன்றாகவே க்ளோசப்பில் எடுத்து (பழைய படம்) போட்டிருக்கிறேனே... இன்னும் க்ளோஸப்பிலா? தாராசுரம் சென்றமுறை நின்று நிதானமாகப் பார்த்து விட்டதால் இம்முறை !விசிட்தான். ஸ்ரீ வாஞ்சியத்தில் அர்ச்சனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் நெருக்கிக் கொண்டிருந்தது.

  // முப்பது வருடங்களாக அந்த பழைய மாலையை பத்திரமாக பாதுகாத்து வந்தீர்களா??!! //

  26 வருடங்கள்! எல்லாம் பாஸ் அருள்! பக்திமாள்! பாஸின் அப்பா பிரார்த்தனை செய்துதான் 30 வருடங்கள்!

  பதிலளிநீக்கு
 67. பானு அக்கா...

  // திருவலஞ்சுழி என்பதில் ஏன் திருவை வெட்டி விட்டீர்கள்? //

  கவனக்குறைவு. அவசரம்... மன்னிக்கவும்!

  பதிலளிநீக்கு
 68. வாங்க நெல்லைத்தமிழன்..

  நீங்கள் ரசிப்பீர்கள் என்று நினைத்தேன். நன்றி. பூமாதேவியின் படத்தை இந்த வாரமே சேர்த்திருக்கலாம். விட்டுப்போய்விட்டது!

  ஆம், அது பகலிராப் பொய்கைதான்.

  கும்பகோணம் தேர் படம் எடுக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 69. கீதா...

  // ஒவ்வொருவருடமும்.// ஒவ்வொருவரிடமும்?? இல்லையோ..ஸ்ரீராம்?//

  எந்த இடத்தில் அப்படி வந்திருக்கிறது? பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 70. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.

  பதிலளிநீக்கு
 71. வாங்க ராஜி... உள்ளூரில் படம் எடுக்க ஒரு மாதிரி இருக்கும் சரிதான். மட்டுமில்லாமல், இப்படி ஒரு கிராமத்து சூழ்நிலையில் தெருக்களும் இருந்தால் எடுத்து விடலாம்.

  பதிலளிநீக்கு
 72. கீதா...

  // உங்கள் மண மாலை இத்தனை வருஷமா வீட்டில் இருந்ததா? //

  பின்னே? பாஸ் அதை எல்லாம் பத்திரமாக வைத்திருந்தார்.

  வாடிப்போய், சருகாக, சின்னதாக...

  திருவிடந்தை சென்றதில்லை.

  பதிலளிநீக்கு
 73. கீதா...

  // உங்கள் மண மாலை இத்தனை வருஷமா வீட்டில் இருந்ததா? //

  பின்னே? பாஸ் அதை எல்லாம் பத்திரமாக வைத்திருந்தார். வாடிப்போய், சருகாக, சின்னதாக...திருவிடந்தை சென்றதில்லை.

  பதிலளிநீக்கு
 74. கீதா..

  இந்த நெய் / டால்டா விளக்கு அங்கு தேவையே இல்லை. அலுவலகத்திலும் அந்த விற்பனையை ப்ரமோட் செய்கிறார்கள்!

  // மீண்டும் ஒரு கல்யாண நிகழ்வு! கல்யாண சமையல் சாதம் !!! உண்டோ?//

  ஊ ஹூம்... திருக்கண்ணமுது மட்டும்!!!

  பதிலளிநீக்கு
 75. கீதாக்கா...

  //பக்கத்திலேயே உள்ள திருவேள்விக்குடியும் போனீங்களா? அங்கே தான் திருக்கல்யாணத்துக்கான வேள்விகள் நடந்ததாய்ச் சொல்வார்கள். //

  இல்லக்கா... நாங்கள் மிகுந்த குறுகிய நேரப்பயணமாக அமைத்துக் கொண்டதால் சிலபல இடங்கள் பார்க்க முடியவில்லை. பார்த்த இடங்களையும் ஓட்டமும் நடையுமாக முடித்தோம். திருவலஞ்சுழி கோவிலை எப்படி நிதானமாக, நின்று பார்க்க வேண்டும்? அதையே ஃபாஸ்ட் ஃபார்வேர்டில்தான் பார்த்தோம்!!

  பதிலளிநீக்கு
 76. கீதாக்கா..

  //இதே போல் மதுரைக்கருகே திருவேடகம் கோயிலிலும் மாலை மாற்றுவார்கள். //

  மதுரை மீனாட்சி கோவிலிலேயே கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் இந்த வேண்டுதல் உண்டு.

  பதிலளிநீக்கு
 77. // எழுத்தாளியாயும் இல்லை!..///

  !?..... //

  துரை செல்வராஜூ ஸார்.. அவங்க ப்ளாக் ஆரம்பிக்குமுன் சென்று வந்ததாய்ச் சொல்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 78. வாங்க அதிரா... பொருத்தமா வார்ததை அமைச்சுப் பாடறீங்க! அந்தத் தெருவாசிகள் அவங்கவங்க வீட்டு வாசலை நீட்டா வச்சுக்கிட்டா போதுமே... தெருவே க்ளீன்!

  பதிலளிநீக்கு
 79. மணிப்புறாக்கள் கோவில் வேற கோவில் அதிரா... அவைகளுக்கு இந்த விஷயம் தெரியாது என்பது மட்டுமில்லை, இந்தப் படத்தை டுத்தது என் பெரியவன். அவன் டி எஸ் எல் ஆரில்!

  பதிலளிநீக்கு
 80. அதிரா..

  // குடந்தைக் கொட்டேஜ் பார்க்க நல்லா இருக்கு.//

  ஆம், வசதியாக இருந்தது.

  // கோயிலின் உள்ளேயே சிலர் நித்திரை கொள்கின்றனரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) //

  பின்னே? அதற்குத்தானே வந்திருக்கிறார்கள்? கனவில் கடவுளைக்காண முயற்சிக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 81. அதிரா..

  தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்றவை கட்டிடக்கலையின் உச்சம். அருமையான வேலைப்பாடுகளுடன் உள்ளே சென்றால் வெளியே வரவே மனசே இருக்காது!

  பாரதி உல்டா கவிதையில் கீதாவை ஓட்டியிருக்கிறீர்கள்! அவர் இதற்கெல்லாம் அலட்டிக்கவே மாட்டாராக்கும்!

  பதிலளிநீக்கு
 82. ஏகாந்தன் ஸார்.. பதிவைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் கமெண்ட்டுக்குக் கமெண்ட் மட்டும் போட்டு ஏமாற்றி விட்டீர்களே...!!!

  பதிலளிநீக்கு
 83. வாங்க ஜி எம் பி ஸார்...

  //நாச்சியார் கோவிலில் கல் கருடன் விசேஷம்//

  ஆமாம். நன்றி ஸார்.

  பதிலளிநீக்கு
 84. காக்கைக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 85. காக்கையா? எங்கே?

  :))

  நன்றி அசோகன் குப்புசாமி ஸார்!

  பதிலளிநீக்கு
 86. @Sriram:

  படங்கள் ஆல்ரைட். குறிப்பாக தூண் சிற்பங்கள், விநாயகர் தெப்பக்குளம் போன்றவை.
  என் கல்யாணமும் தம்பிகள், தங்கை திருமணமெல்லாம் நடந்த கோவில் ஒப்பிலியப்பன் கோவில். கல் கருடனைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். என் கல்லூரி நண்பன் ஒருவன் நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவன். மேடைகளில் முழங்குவான் அப்போதே. காலேஜ் லைப்ரரியில் உட்கார்ந்து தான் பேசப்போகும் விஷயம் அடங்கிய பேப்பரைப் படித்துப்பார்க்கச் சொல்வான். என்னைக் காரசாரமாக வசனம் எழுதச்சொல்லிப் படித்து சந்தோஷப்படுவான். தொடர்பிலில்லை என்பது வருத்தம்.

  பதிலளிநீக்கு
 87. நன்றி ஏகாந்தன் ஸார். நம் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று தெரிகிறது!

  எனக்கு இதில் சிறு மகிழ்ச்சி, எனக்கு இரண்டும் மகன்கள். இரண்டு பேருமே திருவோண நட்சத்திரம். (இப்போது இருவருக்குமே ஏழரை நடக்கிறது!)

  பதிலளிநீக்கு
 88. //ஏகாந்தன் Aekaanthan ! said...
  @ அதிரா: //..புறாக்கள் மிரண்டு மிரண்டு பார்க்கிறார்கள். பழைய மாலையுடன் வந்திருக்கும் புதுமணத்தம்பதிகளை:))//

  புதுமாலையுடன் வந்த பழையமணத் தம்பதிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தால், இப்படி மிரண்டிருக்காதோ அந்த தம்பதிப் புறாக்கள்?//

  இல்ல ஏ அண்ணன்:)..
  “புது மாலையுடன் வந்த பழைய காதலர்கள்”..
  இப்பூடி ஜொள்ளிருந்தால் மிரண்டிருக்காது அந்த லிவிங் ரு கெதர் புறாத்தம்பதிகள் ஹா ஹா ஹா ஹையோ ஸ்ரீராம் கீழே குனிந்து எதையோ தேடுறார்.. மீ ரன்னிங்ங்ங்:))

  பதிலளிநீக்கு
 89. சொல்ல மறந்திட்டேன், தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு ஸ்ரீராம்...

  பதிலளிநீக்கு
 90. // இப்பூடி ஜொள்ளிருந்தால் மிரண்டிருக்காது அந்த லிவிங் ரு கெதர் புறாத்தம்பதிகள் //

  அங்கிருந்த இன்னும் நானகைந்து புறாக்களை நாங்கள் சேர்த்துப் படமெடுக்க முடியாததால் எடுக்கவில்லை என்பதால் உங்கள் கண்ணில் அவை தென்படவில்லை என்பதால் நீங்கள் இந்த மாதிரி கமெண்ட்ஸ் போடுகிறீர்கள் என்பதால்...

  // சொல்ல மறந்திட்டேன், தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு ஸ்ரீராம்... //

  சொல்லி விடுகிறேன். நன்றி, அவன் சார்பில் அதிரா.

  பதிலளிநீக்கு
 91. ஸ்ரீராம்ஜி உங்களுக்குத் திருமணமான கோயில், தகவல்கள் அருமை. அந்த மாலை எப்படி இத்தனை வருடங்கள் எப்படி இருந்தது? இப்படி எல்லாம் கூட வேண்டுதல்கள் உண்டு என்பதை இப்போதுதான் அறிகிறேன்.

  தாராசுரக் கோயில் ஐராவதேசுவரர் கோயில்தானே? சோழமன்னரால் கட்டப்பட்டது அல்லவா? ரொம்ப அருமையான கோயில் பெரிய கோயில் சிற்பக்கலையும் கட்டிடக் கலையும் மிளிரும் கோயில். நான் பல வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன். அருமையான கோயில். அற்புதமான கோயில். பார்த்துக் கொண்டே இருக்கலாம். நீங்கள் போட்டிருக்கும் படங்களைப் பார்த்தால் அதாகத்தான் தெரிகிறது. நான் அப்போது தஞ்சை, கும்பகோணம் திருநாகேஸ்வரம் எல்லாம் நடந்தே சென்றேன் எல்லா கோயில்களுக்கும். ஒரே ஒரு மாற்று வேட்டி சட்டை. கிடைத்ததை உண்டு...நடந்து சென்ற அனுபவம் இனி எனக்கு அப்படியான ஒன்று கிடைக்குமா தெரியவில்லை. கிடைத்தாலும் நடந்து செல்ல இயலுமா? இறைவனின் அருள் கிடைத்தால் நடக்கலாம்.

  படங்கள் எல்லாமே மிக அழகாக வந்திருக்கின்றன. திருமலா ஹோம்ஸ்டே பற்றிய தகவல்களுக்கு நன்றி. பயனுள்ள தகவல். குறித்துக் கொண்டேன்.

  கோயில்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். வித்தியாசமான ஞாயிறு பதிவு

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 92. இஒது என்ன புதுசா இருக்கு.....ஸ்ரீராம்...நான் எம்புட்டு பெரிசு பெரிசா கமென்ட் போட்டுருக்கேன் ஒன்னுமே சொல்லாத ப்ளாகர் இப்ப துளசியோட கமென்டை போட்டா இப்பூடி காட்டி போட மாட்டேங்குது கமென்ட்டை

  Your HTML cannot be accepted: Must be at most 4,096 characters இப்படித்தான் காட்டிக் கொண்டே இருந்தது எத்தனை வகை முயற்சிகள் செய்தும்.

  ஹப்பா இப்பத்தான் ஒழுங்கா வருது துளசியின் கமென்ட் போட்டுட்டேன்

  கீதா


  பதிலளிநீக்கு
 93. அதிரா ஹா ஹா ஹா ஹா ஹா எனக்குப் பாட்டா!!!! பாடுங்க பாடுங்க....ஜுஜூபி மேட்டர்!!! நாங்க எம்பூட்டு பாத்துருக்கோம்!!!! ஹா ஹா ஹா.....

  கீதா

  பதிலளிநீக்கு
 94. ஸ்ரீராம் பாஸுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்!!! இத்தனை வருஷமா மாலையை சருகானாலும் பூச்சு வராம கட்டிக் காத்ததுக்கு!!

  கீதா

  பதிலளிநீக்கு
 95. நன்றி துளஸிஜி...

  திருமணஞ்சேரியில் பிரார்த்தித்துக்கொண்டால் சக்ஸஸ் ரேட் அதிகம் என்று சொல்கிறார்கள்!!

  ஆம், நீங்கள் சொல்லும் கோவிலேதான் அது. 2014 இல் சென்று வந்த பிறகு இப்போது மறுபடியும்! அப்போது நிறைய படங்கள் பகிர்ந்துள்ளேன்.

  பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 96. தெரியவில்லை கீதா.. நான் போட்ட பதில் பின்னூட்டங்கள் தகராறு செய்யாமல் பிரசுரமாகின!!

  பதிலளிநீக்கு
 97. அப்புறம் அனைவருக்கும் ஒரு தகவல்.

  மன்னிப்புடன் ஒரு திருத்தம்.

  அது திருவலஞ்சுழி தெப்பக்குளம் அல்ல. திருநாகேஸ்வரம் குளம். கோவிலுக்குள் செல்லும் முன் வெளியேயே இருப்பது. சூரிய புஷ்காரனி என்று பெயர்.

  பதிலளிநீக்கு
 98. கீதா...

  // ஸ்ரீராம் பாஸுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்!!! இத்தனை வருஷமா மாலையை சருகானாலும் பூச்சு வராம கட்டிக் காத்ததுக்கு!! //

  பாராட்டுகளைச் சொல்லிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 99. பழைய மாலையை வாங்கிக்கொண்டு அர்ச்சனைப்பையில் தரப்பட்டிருக்கும் பையில் இருந்த புதிய மாலைகளை பூஜையில் வைத்து அர்ச்சனை செய்து ஜோடிகள் கையில் தந்து மாற்றிக்கொள்ளச் சொன்னார்கள். பின்னர் தாம்பூலப்பை போல கொடுத்து வரிசையில் எங்களை வெளியே அனுப்பும்போது சீர்வரிசைக் கூடை போல பெரிய கூடை ஒன்றை அருகில் வைத்து, "தட்சணை போட்டுப் போங்கோ" என்றனர் ஒவ்வொருவருடமும்.//

  ஸ்ரீராம் நான் சொன்னது இந்த பாராவில்.....கடைசி வார்த்தை....

  கீதா

  பதிலளிநீக்கு
 100. // ஸ்ரீராம் நான் சொன்னது இந்த பாராவில்.....கடைசி வார்த்தை.../

  நன்றி கீதா... மாற்றி விட்டு கீழ்கண்ட வரிகளைச் சேர்த்துள்ளேன்!

  "கூடையில் பணம் நிரம்பிக் கொண்டிருந்தது. நானும் "தட்சிணை" போட்டேன் - என்னை அறியாமல். "

  பதிலளிநீக்கு
 101. @ஸ்ரீராம்: //..இரண்டு பேருமே திருவோண நட்சத்திரம். //

  உங்களையும் சேர்த்து 3 திருவோணமா உங்கள் குடும்பத்தில்! ஜமாய்ங்க!

  பதிலளிநீக்கு
 102. ////ஸ்ரீராம் பாஸுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்!!! இத்தனை வருஷமா மாலையை சருகானாலும் பூச்சு வராம கட்டிக் காத்ததுக்கு!!

  கீதா////
  ஹையோ கீதா, ஶ்ரீராமின் பொஸ்... ஶ்ரீராமையே இவ்ளோ வருடமா பத்திரமாப் பாதுகாக்கிறா... அப்போ அந்த மாலையைப் பாதுகாப்பதென்பது அவ்ளோ பெரிய விசயமோ... என நான் கேக்கல்லே... தேம்ஸ் கரையில ஆரோ கேட்டிச்சினம் நான் அவங்கட பெயரைக் கேக்கல்லே:)... எனக்கிண்டைக்கு காலம் சரியில்லைப்போல இருக்கே முருகா:)..

  பதிலளிநீக்கு
 103. குடந்தைப் பகுதிகளுக்குச் சென்று வந்த பயணத் தகவல்கள் பயனுள்ளது. புகைப்படங்கள் அழகு. காட்டேஜ் செய்திகள் பலருக்கும் பயன்படும். நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!