திங்கள், 30 ஜூலை, 2018

திங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
இங்க வந்தப்பிறகுநான்தான் காய்கறிகள் வாங்கிவருவேன்அதுவும் மறுநாளுக்குத் தேவையானது மட்டும்தான் வாங்குவேன்எத்தனையோவருடம் விமானத்தில் வரும் காய்கறிகளை வாங்கிஅதை குளிர்சாதனப் பெட்டியில் இட்டு அன்றைய வாரத்துக்கான உணவைச் செய்தவனுக்கு,புதிய காய்கறிகளைப் பார்ப்பதே மிக்க மகிழ்ச்சியா இருக்குபக்கத்திலேயே கடை இருக்கும்போது எதற்கு நிறைய காய்கறிகளை வாங்கிகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கணும்?

நான் வெண்டைக்காயை அழுத்திப் பார்த்து வாங்குவதைப் பார்த்த அங்கு வேலை பார்க்கும் பெண்மணிநுனியை உடைச்சுப் பார்த்து வாங்குங்கஎன்றாள்நான்நுனியை உடைத்தால் மற்றவர்கள் எப்படி வாங்குவாங்கஅப்படிச் செய்யலாமா என்றேன்அதுக்குஇங்ககாய்கறிபழங்களைஏஜெண்டுகள்தான் சப்ளை பண்றாங்கஅன்றன்றைக்கு வாடியதுகெட்டுப்போனவைகளை இரவேஏஜெண்டு திரும்ப்பப் பெற்றுக்கொள்வார்.அதுனால எங்களுக்கு நஷ்டம் இல்லைசும்மா உடைத்துப் பார்த்தே வாங்குங்க என்றார்.

அன்றைக்குஅப்போதான் பறங்கிக்காயை கட் செய்து வைத்துக்கொண்டிருந்தார்அதைப் பார்த்ததும்எனக்குத்தான் பிடிக்காதுபசங்களாவதுசாப்பிடட்டும் என்று வாங்கிவந்தேன்அதை வைத்துஎன் மனைவிதயிர்ப்பச்சிடி செய்தாள்ரொம்ப ரிலக்டன்டாத்தான் நான் தட்டில்போட்டுக்கொண்டேன்.  துவையல் சாதத்திற்கு மிக நன்றாக இருந்ததுஇந்த வார திங்கள் பதிவாகஅதனை எங்கள் பிளாக்குக்கு அனுப்பினேன்.

செய்முறை

இதுல பெருசா அளவுலாம் கிடையாதுதேவையான பொருட்கள்,  பறங்கிக்காய்,  2-3 பச்சை மிளகாய், 3 மேசைக்கரண்டி தேங்காய் துருவல்கடுகுதிருவமாறதேவையான அளவு தயிர்கொஞ்சம் உப்புகொத்தமல்லித் தழை அலங்கரிக்க.  

முதலில் பறங்கிக்காய் தோலை எடுத்துவிட்டுநன்கு திருவிக்கொள்ளுங்கள்.

இதை கொஞ்சம் வேகவைத்துக்கொள்ளணும்அதுக்காக எங்க வீட்டில் அவனில் வேகவைக்கும் சாதனம் இருக்குஅதுல கீழ கொஞ்சம் தண்ணீர்விட்டுவிட்டுமேல் தட்டில் திருவின பறங்கிக்காய் கொட்டிமூடிவிட்டுஅவனில் 4 நிமிடங்கள் வைத்தால் தேவையான அளவு வெந்துவிடும்.

பச்சை மிளகாய்தேங்காயை மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் வெந்த பறங்கிக்காய்தயிர்பச்சைமிளகாய்/தேங்காய் அரைத்த கலவைதேவையான உப்பு போட்டு கலந்துகொள்ளவும்.

சிறிது எண்ணெயில் கடுகை திருவமாறிஇதனுடன் சேர்க்கவும்.

கொத்தமல்லித் தழையை இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.

அவ்ளோதான்பறங்கிக்காய் தயிர் பச்சிடி ரெடி.
சித்த மருத்துவம்பறங்கிக்காயின் மருத்துவப் பயன்களைச் சொல்லுதுபித்தத்தை நீக்கும்நல்ல பசியை உண்டாக்கும்உடம்பு சூடாகிவிட்டால்,பறங்கிக்காய் சாப்பிட குளிர்ச்சியடையும் என்றெல்லாம் சொல்லுது.  இதுநாள் வரை நான்பறங்கி அல்வாபறங்கிக்காயை உபயோகப்படுத்தி,வெல்லம் சேர்த்துச் செய்யும் கறியைத் தவிர வேறு எதற்கும் உபயோகப்படுத்தியதில்லைஹோட்டல்களில்பறங்கிக்காய் விலை குறைவுஎன்பதாலும்பருப்பின் அளவைக் குறைத்து பறங்கிக்காயை அதிகரிப்பதால் சாம்பார் பருப்பு போட்டதுபோல் தெரியும் என்றுஉபயோகப்படுத்துவார்கள்.  ஆனால் இந்த பறங்கிக்காய் பச்சிடியை நான் விரும்பிச் சாப்பிட்டேன்.

சப்பாத்திக்கேசைட் டிஷ் ஆகஇந்தப் பச்சிடியை உபயோகப்படுத்தலாமோ?

நீங்களும் செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.


அன்புடன்

நெல்லைத்தமிழன்

167 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம் கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
 2. நெல்லை அவங்க பரங்கிக்காய் தயிர் பச்சடி செஞ்சிருக்காங்க...

  சும்மாவே தின்னுடலாம் போல இருக்கு..

  எங்கேப்பா போனீங்க... எல்லாரும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இருக்கேன்...☺️

   நீக்கு
  2. // சும்மாவே தின்னுடலாம் போல இருக்கு..
   எங்கேப்பா போனீங்க... எல்லாரும்!... //

   ஹா... ஹா... ஹா.. தயிர்ப் பகடி பெரும்பாலும் தனியாகத்தான் சாப்பிட முடியும்!

   நீக்கு
  3. துரை செல்வராஜு சார்... என்ன இருந்தாலும் பறங்கிக்காய் அல்வா மாதிரி வராது.

   நீக்கு
  4. துரை அண்ணே நான் இப்பத்தான் வர முடிஞ்சுச்சு...ஸாரி அண்ணா இனிமே திங்க வாவது வந்துடறேன் நாம எல்லாம் சேர்ந்து உக்காந்து சாப்பிடலாம்...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் 💐💐💐💐💐👍

  பதிலளிநீக்கு
 4. அருமையா இருக்கு...

  அம்மா பூசணியில் இது மாதரி செய்வாங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூசனி பச்சிடியும் பறங்கிப் பச்சிடியும் இருவேறு சுவை அனுராதா ப்ரேம்குமார்.

   நீக்கு
  2. பரங்கியில் செஞ்சு பார்க்கலாம் அடுத்த முறை...

   நீக்கு
 5. ஆஹா பரங்கிக்காயில் பச்சடி... அதுவும் தேங்காய் போட்டு! பார்க்க நல்லா இருக்கு. Its Different too! ட்ரை பண்ணலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பறங்கிக்காய் பச்சிடி பேச்சலர்ஸ் ஈசியா செய்யலாம். நன்றி வெங்கட்.

   நீக்கு
 6. பறங்கிக் காய் ஓலன் தான் இன்னிக்குச் செய்யப் போறேன். ரொம்ப நாளாச்சு. சுமார் 3, 4 நாட்கள் கழிச்சு நேத்தித் தான் நான் சமைக்க ஆரம்பிச்சேன். இன்னிக்குப் பறங்கிக்காய் ஓலன் செய்யணும்னு ஆசை வந்திருக்கு. :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா அக்கா... ஓலன் என்பது அவியல் மாதிரி இல்லையோ?

   நீக்கு
  2. @ஸ்ரீராம், ஓலனுக்குத் தேங்காய்ப் பால் விடணும். தயிர் இல்லை.

   நீக்கு
  3. கீசா மேடம்.... அவருக்கு ஓகேவான்னு கேட்டுட்டீங்களோ? ஹாஹாஹா

   Back to normal என்பதறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு
  4. ஓலனுக்கு மிளகு கிடையாதோ? அது எரிசேரிக்கோ?

   நீக்கு
  5. ஓலன் ரொம்பவே காரம் கம்மியானது. வயித்தை ஒண்ணும் பண்ணாது! பச்சைமிளகாய் மட்டும் ஒன்றோ பாதியோ அவரவர் விருப்பம் போல் போடலாம்.

   நீக்கு
  6. எரிசேரி சிலர் பறங்கிக்காயிலும் பண்ணறாங்க தான். ஆனால் எனக்கு, வாழைக்காய், சேனைக்கிழங்கு ரெண்டிலே பண்ணினால் தான் பிடிக்கும். இரண்டையும் சேர்த்துப் போட்டும் பண்ணுவேன். எரிசேரிக்கு மி.வத்தல், மிளகு இரண்டும்! வறுக்காமல் போடணும். இப்போல்லாம் மி.பொடி, மிளகு பொடி போடறாங்க! அது அவ்வளவு ருசியாத் தெரியலை!

   நீக்கு
  7. யெஸ் ஓலன் செம சாஃப்ட் ரெசிப்பி. தேங்காய்ப்பால் வயிற்றுக்கு ஒன்னும் பண்ணாது கீதாக்கா சொல்லியிருப்பது போல். செம டேஸ்டியா இருக்கும். நெல்லை எரிசேரிக்குத்தான் மிளகு...

   அக்கா நான் பொடித்துத்தான் போடுவேன். மத்தன் எரிசேரியும் செய்வதுண்டு கேரளத்து எரிசேரி போல் அதாவது மத்தன்/பரங்கிக்காய் ப்ளஸ் பெரும்பயறு கேரளத்து ஸ்டைல். வாழை சேனை போட்டு எங்கள் வீட்டில் செய்வது பாலக்காட்டு ஸ்டைல்...

   கீதா

   நீக்கு
  8. கீதா ரங்கன்..... நீங்க எந்த ஊர்க்காரங்கன்னு எப்போதும் என்னைக் குழப்பறீங்க. இப்போல்லாம் ஓலன் பண்ணறீங்களா?

   நீக்கு
 7. இந்தப்பச்சடி, துவையல் சாதம் மட்டுமில்லாமல், மிளகு குழம்பு, பொடி சாதங்கள், வத்தக்குழம்பு ஆகியவற்றோடும் ஒத்துப் போகும். என் புக்ககத்தில் அடிக்கடி செய்வது இது. ஆனால் வேக வைக்காமல் துருவி நன்கு வதக்கிடுவோம். இதையே வெல்லம் போட்டும் செய்வது உண்டு. கிட்டத்தட்ட மாங்காய்ப் பச்சடி போல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளம் பறங்கிக் கொட்டையை இளங்கொட்டை என்போம். அதில் பால் கூட்டு அருமையாக இருக்கும். அடைக்கும் துருவியோ பொடியாக நறுக்கியோ சேர்ப்பது உண்டு. எங்க வீட்டில் பறங்கிக்கொட்டை அடை அடிக்கடி இருக்கும்.

   நீக்கு
  2. ஆமாம் கீசா மேடம். மசாலா அல்லது கொஞ்சம் காரம் இருக்கற எல்லாக் கலவை சாத்த்துக்கும் இது நல்லா வரும்

   நீக்கு
  3. //
   Geetha Sambasivam30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 10:13
   இளம் பறங்கிக் கொட்டையை இளங்கொட்டை என்போம். அதில் பால் கூட்டு அருமையாக இருக்கும். அடைக்கும் துருவியோ பொடியாக நறுக்கியோ சேர்ப்பது உண்டு. எங்க வீட்டில் பறங்கிக்கொட்டை அடை அடிக்கடி இருக்கும்.///

   மீ ஃபுல்லாஆஆஆஆஆஆஆ அரிச்சுப் போனேன்ன்.. இப்படிக் கேள்விப்பட்டதே இல்லை...

   நீக்கு
  4. //http://sivamgss.blogspot.com/2018/03/blog-post_19.html// இங்கே போய்ப் பாருங்க அதிரடி, ஞானி, உங்க கமென்டும் அதிலே இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதிலே வல்லாரை யூஸ் வேறே குடிச்சாறது! :P :P :P :P :P

   நீக்கு
 8. சமீபத்தில் எனது கல்லூரித் தோழி, வீட்டில் பறித்த பரங்கிக்காய்களை வைத்து என்ன செய்வது என்று கேட்ட போது, இரண்டு ரெசிப்பிகள் அனுப்பி வைத்தேன்.

  பரங்கிக்காய் பாசயம் மற்றும் பரங்கிக்காய் தொக்கு!

  http://kovai2delhi.blogspot.com/2011/08/blog-post_13.html

  http://kovai2delhi.blogspot.com/2011/05/blog-post_25.html

  இப்ப இந்த லிங்க்-உம் அனுப்பி வைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட்ஜி பரங்கிக்காயில் நிறைய செய்யலாம். வெஸ்டர்ன் ஸ்டைலில் பம்ப்கின் பட்டர் என்று (வெண்ணை எலலம் சேர்க்கவே வேண்டாம் அது ஏன் பட்ட என்றால் பரங்கியை நல்லா மையா அரைச்சு செய்யறது...ஸ்வீட் ப்ரெட் எல்லாத்துக்கும் நல்லாருக்கும்...)

   கீதா

   நீக்கு
  2. அங்கேயும் போய்ப் பார்த்தேன். ஒரே வித்தியாசம் நான் கொஞ்சம் பாதாம், முந்திரி, பிஸ்தாவை ஊற வைச்சு அரைத்துச் சேர்ப்பேன். :))) காரட்டில் கூட இப்படிப் பாயசம் பண்ணுவது உண்டு.

   நீக்கு
  3. தொக்கும் பார்த்தேன். இதுவரை தொக்குப்பண்ணியதில்லை. அதையும் பார்த்துடுவோம். :))))

   நீக்கு
 9. பறங்கிக்காயில் அல்வாவும் செய்யலாம், வெங்கட். பிஸ்தா எசென்ஸ் சேர்த்துச் செய்தால் அருமையா இருக்கும். ராஜஸ்தான், குஜராத்தில் வீட்டில் காய்க்கும் காய்களைக் கொடுத்தது போக மிச்சத்தை இப்படிச் செய்வோம். சர்க்கரை போடாத கோவா கொஞ்சம் சேர்க்கணும். நான் நல்ல பாலைச் சுண்ட வைச்சுச் சேர்த்துடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். பறங்கி அல்வாவை நினைவுபடுத்திவிட்டீர்கள்.

   நீக்கு
  2. பறங்கிக்காய் அல்வா கடைல விற்பதில்லையே. அது ஏன்?

   நீக்கு
  3. தெரியலை! பொதுவாச் சென்னையில் பறங்கி காயாக எங்கே கிடைக்குது? மஞ்சள் பழம் தானே!

   நீக்கு
 10. ஆதியின் ரெசிபியும் போய்ப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பறங்கிக்காய் அல்வாக்கு அப்புறமா இந்த பச்சடி சூப்பர் ஆக இருக்கு. மைல்ட் அண்ட் ஷார்ப்.
   வண்ணமும் சேர்ந்து பார்க்கவே நன்றாக இருக்கு.
   மனம் நிறை வாழ்த்துகள் நெல்லைத் தமிழன். இன்று இன்று பறங்கிக்காய் வத்தக் குழம்பு.

   நீக்கு
  2. பார்த்தீங்களா வல்லிம்மா... நெல்லைக் காரங்களுக்குத்தான், பறங்கி அல்வா ரொம்பப்பிடிக்கும். அழகா வெல்லத்தில் செய்யறதை விட்டுட்டு வடவர்கள்மாதிரி கோவா சேர்ப்பது எனக்குப் பிடிக்காது. ஆனா பசங்க அதைத்தான் விரும்பறால்க.

   நீக்கு
  3. //நெல்லைக் காரங்களுக்குத்தான், பறங்கி அல்வா ரொம்பப்பிடிக்கும்./// grrrrrrrrrrrrrrrrrrrr

   நீக்கு
  4. கீசா மேடம்... நீங்களும் எங்க ஊர்தான். (ஒரு காலத்துல). அப்புறம்தானே திருநெல்வேலி ஜில்லா என்றே ஒன்று வந்தது. (ஆமாம்.... நாமெல்லாம் நெல்லை, மதுரை, தஞ்சை என்று சொல்லிக்கொள்கிறோமே தவிர, இருப்பது சம்பந்தமில்லா ஊர்களில் என்று உங்களுக்கு எப்போவேனும் தோன்றியிருக்கா? அதிலும் சென்னைவாசிகள் பெரும்பாலும்-6க்கு 1ன்னு சொல்றாங்க, வெளியூர்ல இருந்து வந்தவங்களாம். எனக்கு நெல்லை சென்றபோது, மனதளவுல அது தனி உணர்வு. அது மத்தவங்களுக்குத் தெரியாது, புரியாது. உங்களுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன் (நெல்லையில் அல்ல... கோபு ஐயங்கார் கடைத்தெரு ஹா ஹா ஹா)

   நீக்கு
  5. அதெல்லாம் இல்லை. எங்க ஊரு மதுரை! எப்போவுமே தனியாக்கும்! என்ன நினைச்சீங்க எங்க ஊரை? :)))))) எனக்கு இங்கே திருச்சியில்/ஶ்ரீரங்கத்தில் என்னமோ வித்தியாசமே தெரியலை! மனதில் இந்த ஊர் வாசம் பதிந்து போய் மணக்கிறது! ஆனாலும் மதுரைன்னா!!!!!!!!!!!!!!!!! :))))))))

   நீக்கு
  6. நான்லாம் சட்டுனு ஒத்துக்கமாட்டேன். நான் மதுரைல படித்தபோது, (நாகமலை), காலேஜ் ஹவுசுக்கு வார இறுதியில் வந்து பட்டர் நான்+சைட் டிஷ், 4 அல்லது 7 ரூபாய்னு ஞாபகம், சாப்பிட்டுட்டுப் போவேன். ரொம்ப அருமையா இருக்கும். மதுரைக்கு நான் இப்போ போனால், எங்கு சாப்பிடலாம், என்ன என்னவற்றை மிஸ் செய்யக்கூடாது (சாப்பிடுபவற்றில்) என்று சொல்லுங்க பார்க்கலாம்.

   நீக்கு
  7. மதுரையில் இப்போச் சாப்பாடு எங்கே நல்லா இருக்கும்னு தெரியலை! ஏனெனில் நாங்க போயிட்டு உடனே திரும்பிடுவோம். கோபு ஐயங்காரிடம் டிஃபன் மட்டும் சாப்பிட்டுப்போம். ஆனால் அனைவரும் தானப்பமுதலி அக்ரஹாரத்தில் மாடர்ன் ரெஸ்டாரன்டில் சாப்பாடு நல்லா இருக்கும்னு சொல்றாங்க! முயற்சி செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க! நானும் போனால் சாப்பிட்டுக்கலாமே! :)))) மற்றபடி முன்னிருந்த சமையல் செட் ஏதும் இப்போது இல்லை என்பதால் எது மிஸ் செய்யக் கூடாது என்பது தெரியலை! முன்னெல்லாம் நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க்கடையில் (மேலகோபுர வாசலில்) மத்தியானம் 11 மணியிலிருந்து ஒரு மணிக்குள்ளாக உருளைக்கிழங்கு மசாலா கிடைக்கும். அந்த மசாலாவுக்கு ஈடு, இணை இல்லை. தையல் இலையில் சுற்றி வைத்து நாலணாவுக்கு விற்றபோதில் இருந்து வாங்கி இருக்கோம். இப்போப் பத்து ரூபாய்னு நினைக்கிறேன். அந்த ருசி இல்லை. (அந்தக் கடைக்காரர் எங்களுக்கு நெருங்கிய சொந்தம் தான். இப்போ இருப்பது மூன்றாம் தலைமுறை. அவங்களுக்கு அடையாளம் தெரியறதில்லை!)

   நீக்கு
  8. //உருளைக்கிழங்கு மசாலா கிடைக்கும்// - அப்போ அங்க போகும்போது, பூரி இல்லைனா சப்பாத்தியை கையோடு கொண்டுபோகணுமா? ஸ்ரீராம் ஏதோ, முந்திரி அல்வா, சுந்தரி அல்வான்னு ஏதோ சொன்னாரே. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?

   நீக்கு
  9. உ.கி.மசாலாவை நாங்க அப்படியே சாப்பிடுவோம்! :) அந்தக் காலத்தில் இருந்தே! ஶ்ரீராம் சொல்லும் கடை எல்லாம் தெரியலை. முன்னாலே மேலகோபுர வாசலிலே அனுமந்தராயன் தெருவுக்கு எதிரே டெல்லிவாலா இருந்தது. இரண்டு வருடங்கள் முன்னர் மதுரை போனப்போ அங்கே சப்பாத்தி நல்லா இருக்கும்னு சொல்லி ரங்க்ஸோட அங்கே போனால் ஙே! முன்னர் இருந்த கடையாவே இல்லை! அப்புறமா வெளியே வந்து மேலமாசி வீதி முருகன் இட்லிக்கடையில் வேண்டாவெறுப்பாச் சாப்பிட்டோம். அங்கே இருந்து அதான் பக்கம்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி ஜெயக்குமார் சார். ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கிறேனோ?

   நீக்கு
 12. பரங்கிகாயில் பச்சடி செய்தது இல்லை...நாங்கள் பரங்கிகாயை வத்த குழம்பு வைக்க பயன்படுத்து வோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செங்கோட்டை துரை... நான் இதுவரை வத்தக்குழம்பில் பரங்கி சேர்த்து சாப்பிட்டதில்லை.

   நீக்கு
  2. மாமியார் பண்ணுவார். எங்க வீடுகளில் வற்றல் போட்டால் தான் வத்தக்குழம்பு என்பதால் இதைப் பறங்கிக்காய் வெறும் குழம்பு என்போம். கூடவே மொச்சை, கொண்டைக்கடலை போன்றவை வறுத்துச் சேர்த்துத் தேங்காயும் பல்லுப் பல்லாகக் கீறிச் சேர்த்துப் பண்ணுவார். ஆனால் இவருக்கு என்னமோ பிடிக்கிறதில்லை. ஒரு தரம் சொல்லாமல் செய்துடணும்னு இருக்கேன். :)))))

   நீக்கு
  3. //செங்கோட்டை துரை...//

   இது எப்போ இந்த அசம்பாவிதம் அரங்கேறியது செங்கோட்டையில்?:) சொல்லவேயில்ல:))

   நீக்கு
  4. அதிரா... அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் துரை, பிறப்பால் திருநெல்வேலிக்கார்ர்தான் (செங்கோட்டை). அப்புறம் மதுரைக் காரராக கன்வெர்ட் ஆயிட்டாரு....

   நீக்கு
 13. அனைவருக்கும் காலை வணக்கம்

  பதிலளிநீக்கு
 14. பரங்கி காய் விதையில் உள்ள பருப்பு ஏழைகளின் பாதாம். ஆனால் யாரும் அதை உணருவதில்லை.அதன் மகிமை தெரியாமல் குப்பையில் வீசிவிடுவது அறியாமையின் உச்ச கட்டம். நான் ஏற்கெனவே அந்த பருப்பை கொண்டு பர்பி செய்து என்வலையில் பதிவிட்டிருந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பட்டாபிராமன். உப்பு தடவிக் காயவிட்ட பூசனி விதைகள், அரேபியர்களின் விருப்ப உணவு. நாம உப்புக்கடலையைக் கொரிப்பதுபோல் அவங்க, பூசனி விதையை உடைத்துச் சாப்பிடுவாங்க.

   பர்பி செய்யற அளவு, யாரு விதைகளை உடைத்துக் கொடுத்தது? அந்தப் பொறுமைசாலி வாழ்க

   நீக்கு
  2. சின்ன வயசில் இந்தப் பருப்பு நிறையச் சாப்பிட்டிருக்கேன்.

   நீக்கு
  3. பரங்கிக்காய் விதைகள் நன்றாக உணர்ந்தவுடன் சிறு கட்டையால் தட்டினால் இரண்டாக பிளக்கும். பருப்புகளை பிரித்து எடுத்து முந்திரி, பாதாம் அல்வா செய்வதுபோல் செய்யவேண்டும். பொறுமை இல்லாதவர்களுக்கு pumpkin seeds onlinine மூலம் அல்லது பெரிய அங்காடிகளில் வாங்கி பயன்படுத்தலாம் .

   நீக்கு
  4. மீள் வருகைக்கு நன்றி பட்டாபி. பரங்கி விதை உடைப்பது கடினம்.

   நான் முதல்முறையில் பாதாம் தோல் உரிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். இத்தனைக்கும் நான் இருந்த ஊரில் தோல் எடுத்ததும் விலை மலிவாக் கிடைக்கும்

   நீக்கு
  5. பட்டாபி to be read as பட்டாபிராமன் சார். இப்போதான் இதைக் கவனித்தேன். மொபைலில் மறுமொழி எழுதறேன்.

   நீக்கு
  6. நானும் இந்த விதைகளை ஒருபோதும் எறிவதில்லை, எனக்கு ரொம்பப் பிடிக்கும், அப்படியே காய வைத்து எடுத்து சாப்பிடுவேன்.

   நெ.தமிழன், அல்மண்ட் ஐ தண்ணியில் ஊற விட்டுப்போட்டு தோலை உரித்துச் சாப்பிடுங்கோ.. உரிப்பதும் ஈசி, சுவையும் பல மடங்கு அதிகம்.. அப்படியே பால் குடிப்பதுபோல இருக்கும் சாப்பிட. பச்சையாக எனில் சாப்பிடக் கஸ்டம் ரேஸ்ட். நான் ஒருவருக்கு 5/6 என எண்ணி எடுத்து ஒரு கப்பில் போட்டு தண்ணி ஊத்தி விட்டிடுவேன், அடுத்தநாள் உரித்துக் குடுப்பேன். பச்சையாகக் கொடுத்தால் சாப்பிட மாட்டினம், அத்தோடு 5/6 க்கு மேல் சாப்பிடவும் கூடாதாம் ஒரு நாளைக்கு.

   நீக்கு
  7. //பரங்கி விதை உடைப்பது கடினம்.//

   உடைக்கோணும் எண்டில்லை, அப்படியே சாப்பிடுவேன் நான்:))

   நீக்கு
  8. ஞானி அதிராவுக்கு நான் கிச்சன் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கு.

   ஆல்மன்டை கொதிக்கிற வெந்நீரில் 20 நிமிஷம் ஊறவிட்டு அப்புறம் தோலை உரிக்கணும். நான் ஒரு நாள் குளிர்நீரில் ஊறப்போட்டும் தோலை உரிக்கமுடியலை. (என் பையனுக்கு பாதாம் பர்ஃபி செய்ய முயன்றபோது)

   நீக்கு
  9. பாதாமை ராத்திரியே நாங்கல்லாம் ஊற வைப்போம். காலை பிதுக்கினாலே போதும். அழகா உரிஞ்சு வரும். யு.எஸ்ஸிலும் அப்படிப் பண்ணி இருக்கோம். இங்கேயும்! ப்ளாஞ்சிங் செய்யத் தான் கொதிநீரில் போட்டு உடனே எடுப்போம். அது பாதாம் பவுடர் தயாரிக்க, பாதாம் பால் தயாரிக்க என்று செய்கையில்

   நீக்கு
 15. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.
  பரங்கி காய் தயிர் பச்சடி செய்முறை படங்கள் அழகு.
  நான் துருவி வதக்கி தயிரில் ஆறியவுடன் போட்டு விடுவேன்.

  நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம். வருகைக்கு நன்றி

   நீக்கு
 16. புகைப்படங்களே ஆசையை தூண்டுகின்றன...

  வெண்டைக்காயின் நுணியை மடக்கிப்பார்த்து வாங்குவதுபோல், தக்காளியை பிதுக்கிப்பார்த்து வாங்க முடியுமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தக்காளிய..//

   தலைவா!..

   எல்லாரும்
   கொம்பு மேல நின்னாங்கன்னா..

   நீங்க மட்டும் கொடி மேல
   நிக்கிறீங்களே!...

   புல்லரிக்குது போங்க!...

   வாழ்க உங்கள் தொண்டு!..

   நீக்கு
  2. கில்லர்ஜி... வெண்டைக்காயை நுனி உடைத்து யாரும் வாங்கவிடுவதில்லை. பெரும்பாலும் சின்ன வெங்காயத்தைக்கூட பொறுக்க விடுவதில்லை. இதுல தக்காளியைப் பிதுக்கி வாங்கணுமா? சரிதான்.

   நீக்கு
  3. கில்லர்ஜி... நீங்க சொல்றதைப் பார்த்தால், ஆண்களுக்கு கல்லைத்தூக்கணும், மாட்டை அடக்கணும் என்பதுபோல் பெண்களுக்கும் திருமணத்துக்கு தேர்ந்தெடுக்க ஏதேனும் மெதட் சொல்வீங்க போலிருக்கு

   நீக்கு
  4. நெ.த. அவர்கள்.... என்னை சிக்கலில் இழுத்துவிடும் திட்டமா ?

   நீக்கு
 17. ஆரோக்கியமான உணவு, செய்முறை விளக்கம் அருமை

  பதிலளிநீக்கு
 18. நாங்கள் துருவலை வதக்கிப்போட்டு பச்சடி செய்வோம். காரஸாரமான துவையல்,பொடிபோட்டுச் சாப்பிடும்போது இடையே ஸாவதானமானருசி காம்பினேஷன் ஆகிறது. பறங்கிக்காய் ஸாம்பார், பொங்கிஇடும்போது பொங்கல் சாதத்துடன் கட்டாயமிருக்கும். கல்யாணம்,பூணூல், மற்றும் விசேஷங்களுக்கு முன் இந்தச் சம்பிரதாயம் உண்டு. பறங்கிக்காய் ஸூப் பச்சை மக்கா சோளத்துடன் அரைத்துச் செய்வதும் இப்போது பரவி வருகிறது. அழகாக, ருசியாகச் செய்து கொடுத்த திருமதி நெல்லைத் தமிழனிற்கு பாராட்டுகள். நான் எதிலும் நேபாளத்தைப் பற்றி நினைவு கூறுவேனே! அந்த வகையில் அவர்கள் மிளகாய் வற்றலையும்,வெந்தயத்தையும் தாளித்துக் கொட்டிதான் பறங்கிக்காய் கறி செய்வார்கள். அந்த வகையும் தனி ருசி. நம்ம தமிழ்நாட்டு வழக்கம்தான் நம்முடைய வழி. பறங்கிக்காயின் உட்புற குடலையும் விடாது துவையல் அரைப்பவர்கள் உண்டு. புளிவிட்ட வெல்லப் பச்சடி. கீதா எழுதாதது இதுவானா உண்டா? அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க காமாட்சி அம்மா. உங்களுக்குத் தெரியாத சமையல் விஷயம் உண்டா? சூப், பச்சை மக்காச் சோளத்துடன் அரைப்பது எல்லாம் நான் அறியாத்து.

   பொதுவா பஞ்சத்துல உபயோகமாகிற காய் இதுன்னு நினைக்கிறேன். உபயோகப் படுத்தாமல் அப்படியே கூரையில் தொங்கிக் கொண்டிருந்தால் சாமியாருக்கு குடுவையாகவும் உபயோகப்படும். ஹாஹாஹா

   வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. இப்போத் தான் வெஜிடபுள் சூப் என்னும் பெயரில் பல ஓட்டல்களிலும் இது கொடுக்கிறாங்க! :)))) ஒரு முறை குடிச்சிருக்கேன். :)

   நீக்கு
 19. பரங்கிக்காயும் பூசணியும் வேறா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூசனி - வெண் பூசனி, சாம்பல் பூசனி, தடியங்காய் எல்லாம் ஒண்ணுதான். திருஷ்டிக்கு உடைக்கும் பூசனி இது. தண்ணீர்ச் சத்து அதிகம் உள்ள பூசனி இது.

   பரங்கிக்காய்- மலையாளத்தில் மத்தன், சர்க்கரைப் பூசனி, மஞ்சள் பூசனி - எல்லாம் ஒரே வகைப் பூசனி.

   நீக்கு
  2. நல்லவேளை அனானி நாதான்னு கண்டுபிடிக்கலை

   நீக்கு
  3. நீங்கதான்னு கண்டுபிடிச்சதுனாலதான் உடனே பதில் எழுதினேன் :)

   நீக்கு
  4. அவ்வ்வ்வ்வ் :)) எப்படி எப்படி நான் ஸ்மைலி கூட போடல்லையே :) ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட விடாம டைப்பினேனே :)

   நீக்கு
 20. பச்சடி நல்ல இருக்கு நெல்லைத்தமிழன் .இங்கே Egypt பூசணி பார்க்க சுரைக்காய் ஷேப்பில் இருக்கும் அதிலும் செய்யலாமா ? அது ஸ்கின் தடிமனான இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா செஞ்சு பாருங்க. நல்லாத்தான் இருக்கும். ஆமாம்... அங்க குளிர்ல, பச்சிடில்லாம் நல்லா இருக்குமா?

   நீக்கு
  2. குளிரோ வெயிலோ :) எனக்கு கிரீக் யோகர்ட் இல்லாம நாள் கடக்காது :)
   இதோ இதே ரெசிப்பியை இன்னிக்கு இந்த ஊர் காய் வைச்சி செய்யப்போறேன் :)
   பறங்கிக்காய்க்கு பதில் வேற :) செஞ்சிட்டு சொல்றேன்

   நீக்கு
  3. வீகன் ரெசிப்பீஸ் ஸ்டார்ட் செஞ்சேன் அதில் அரிசி அளவை குறைச்சு கூட்டு பச்சடிலாம் நிறைய சாப்பிடுவேன்

   நீக்கு
 21. எங்க வீட்ல அம்மா பூசணி சாம்பாருக்கும் அப்புறம் காரக்குழம்பு /வற்றக்குழம்புக்கும் சமைப்பாங்க நெய்யூற்றி சாப்பிட்டா செம ருசி .
  பச்சை தோலுடன் இருப்பது பரங்கி என்று நானே ஆராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா சமையலை மிஸ் பண்ணாதவர் எவர்? அதிலும் பெண்கள். அவங்கதான் பிறந்த வீட்டில் அனேகமா ஒரு வேலையும் செய்யாம கால் மேல கால் போட்டுக்கிட்டு ஜாலியா சாப்பிடலாம்

   நீக்கு
  2. //அவங்கதான் பிறந்த வீட்டில் அனேகமா ஒரு வேலையும் செய்யாம கால் மேல கால் போட்டுக்கிட்டு ஜாலியா சாப்பிடலாம் //

   கர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஏன் ஆண்கள் மட்டும் என்னவாம் அவங்க காலுக்கு கீழ கால் போட்டோ ஜாலியில்லாமல் சாப்பிடுவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எந்த வீட்டிலும் ஆண்பிள்ளைகளுக்குத்தான் மரியாதை அதிகம்:)).. ஒரு வேலை செய்ய வந்தாலும் விட மாட்டினம் கர்ர்ர்:)) ஹா ஹா ஹா

   நீக்கு
  3. என்னத்தைதான் தமிழைப் புரிஞ்சிக்கிறீங்களோ அதிரா. பெண்கள் பிறந்த வீட்டில்தான் ஜாலியா கால்மேல கால் போட்டுக்கிட்டு சாப்பிடலாம். ஆண்கள்,எப்போதும் கால் மேல கால்போட்டு சாப்பிடுவாங்க, ஏன் உப்பு குறைவு, இன்னைக்கு ஏன் இதைப் பண்ணலை, இது என் அம்மா பண்ணற மாதிரி இல்லைனு தைரியமா குறை சொல்லலாம். ஹாஹா

   நீக்கு
 22. அதை குளிர்சாதனப் பெட்டியில் இட்டு அன்றைய வாரத்துக்கான உணவைச் செய்தவனுக்கு//
  ஜெர்மனில அப்படிதான் பலர் செய்வாங்க .ஆனா லண்டனில் தினமும் கடைக்கு போவேன் வெண்டை கத்திரி அன்னணிக்கு வாங்கி சமைக்கிறேன் :) ஆணானாலும் சென்னை வெஜிஸ் மாதிரி வராது யூ எஞ்சோய் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆனாலும் // டைப்பிங் எர்ரர் :)

   நீக்கு
  2. ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நினைக்கறேன். வார இறுதியில்ர ஒரு வாரத்துக்கான சமையலைச் செய்து குளிர் சாதனப் பெட்டில வச்சு வாரம் முழுவதும் சாதம் மட்டும் செய்து சுட வச்சு சாப்பிடறவங்களை மிடில் ஈஸ்ட்ல தெரியும். ஒருவர் 6-9 மாத்த்துக்கு ஒருமுறை கனடா சென்று பசங்களுக்கு டிரே டிரேயா சைட் டிஷ் பண்ணிவச்சுட்டும் வருவாராம்.

   எனக்குத்தான் இதை நினைத்தால் ஒருமாதிரி இருக்கும்

   நீக்கு
  3. வேறு வழியில்லாமல் அப்படிப் பண்ணுகிறார்கள், ஆனா என்னதான் இருப்பினும் சுடச்சுட செய்து சாப்பிடுவதுபோல எதுவும் வராது.. தோசை இட்லி கூட எனக்கு உடனுக்குடன் செய்து முடிப்பதுதான் பிடிக்கும், ஃபிரிஜ்ஜில வச்சு வச்சு செய்வது பிடிக்காது. ரெடிமேட்டாக வாங்கும் மா வகையும் கொஞ்சம் கூடப் பிடிக்கல்ல[தோசை, இட்லி அப்பம்- மா]

   நீக்கு
  4. //எனக்குத்தான் இதை நினைத்தால் ஒருமாதிரி இருக்கும்//
   இங்கே வெளிநாட்டு வாழ் இந்தியர் ஸ்ரீலங்கன்ஸ்க்கு அதிக குடல் ரிலேட்டட் நோய் வர காரணமே இது தாம் அதோட ப்ரெஷ்க்ஷர் ,லிவர் கிட்னி பிரச்சினைக்கும் இதான் காரணம் .ப்ரிட்ஜில் இருக்கும் சமோசாவை வாங்கி பொரிக்கிறாங்க :( .எனக்கு மைக்ரோவேவ் சமையலே பிடிக்காது தினமும் ஒரு கூட்டு ஒரு குழம்பு இப்படித்தான் செய்றேன் .

   நீக்கு
  5. அட... ஆமாம்ல. குளிர்சாதனப் பெட்டில வச்சு திருப்பித் திருப்பி சுடவச்சு சாப்பிட்டால் எல்லா வகையான குடல் நோய்களும் வரும்..

   நீக்கு
 23. சப்பாத்திக்கே, சைட் டிஷ் ஆக, இந்தப் பச்சிடியை உபயோகப்படுத்தலாமோ?//

  சப்பாத்திக்கு ட்ரை பண்ணலாம் ,ஆனால் இடியாப்பத்துக்கு /சேவைக்கு ..நிச்சயம் நல்ல இருக்கும்போலிருக்கு .நான் செஞ்சிட்டு சொல்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சப்பாத்திக்கு நல்லா இருக்கும். இடியாப்பத்துக்கு-ரொம்ப ஜலமா இருந்தால் நல்லா இருக்குமான்னு தெரியலை. அடைக்கெல்லாம் தொட்டுக்கலாம்னு தோன்றியது.

   நீக்கு
 24. இப்படி ஒரு பச்சடியா?! அவன் இல்லாதவங்க ஆவியில் வேக வைக்கலாமா?! இல்ல சாதம் வடிக்குற மாதிரி வடிச்சுக்குலாமா?! இல்ல வாணலில வறுத்துக்கலாமா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பறங்கிக்காய் வேகணும். அவ்வளவுதான். வாணலிலயும் வதக்கலாம். இல்லைனா ஆவில வேகவைக்கலாம். மொத்தத்துல நல்லா வதங்கியிருக்கணும். (பச்சையா அவ்வளவு நல்லா இருக்காதுன்னு நினைக்கறேன்). நன்றி ராஜி.

   நீக்கு
 25. பறங்கிக்காய் பச்சடி செய்து பார்த்ததில்லை பறங்கிக்கயில் ஓலன்செய்வதுண்டு செய்முறை எளிது பயறை வேக வைத்து அதுவெந்துவரும்போதுபறங்கிக்காய் துண்டுகளை கீறிய பச்சை மிளகாயுடன் கருவேப்பிலையும்சேர்த்து நன்கு வெந்த பிறகு நல்ல தேங்காய் எண்ணை ஊற்றி தாளிதம் செய்தால் முடிந்தது ஓலன் கேரள விருந்துகளில் ஒரு மஸ்ட் ஐட்டெம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எம் பி சார்.. சட் என ஓலன் செய்முறையைச் சொல்லிட்டீங்களே. எப்போ உங்களுக்கு செய்துபார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது?

   உங்க உணவுப் பழக்கம் கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடுத்தா?

   நீக்கு
  2. பூவையர் எண்ணங்கள் என்னும் வலைப் பதிவே இருக்கிறது அவ்வப்போதுஅதில் எழுதியும் வருகிறேன் நானென்செய்முறைகளை படத்துடன்விளக்குவது இல்லை ஏதாவது எக்செப்ஷன்ஸ் இருக்கலாம் என் உணவுப்பழக்கம்மாறவில்லை என் மனையுடையதும் மாறவில்லை ஒரே மாற்றம் அவள அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறிவிட்டாள் திருமணத்துப்பின் உங்கள் மின் அஞ்சல்
   முகவரி மாறி இருக்குமோ

   நீக்கு
  3. http://kamalabalu294.blogspot.com/2017/07/blog-post.html பதிவையும் தளத்தையும்பாருங்கள்

   நீக்கு
  4. ஜி எம் பி சார்.. திருமணத்துக்குப் பின் உணவுப் பழக்கம்னை நான் சொல்றது, உதாரணமா இடியாப்பம் கடலைக்கறி, பத்ரி டிபனுக்கு இந்தமாதிரி. ஶ்ரீராம்கூட எங்கயோ சொல்லியிருந்தாரே வீட்ல பூண்டு உபயோகப்படுத்த மாட்டாங்க என்பதுபோல்.

   இமெயில் முகவரி மாற்றம்- இது புரியலை

   நீக்கு
  5. நீங்கள் உங்கள் கம்பனியின் முகவ்ரி கொடுத்திருந்தீர்கள் இப்போது இந்தியா வந்து விட்டதால் மாறியிருக்குமோ என்றுதான் கேட்டே ன்

   நீக்கு
  6. ஜி எம் பி சார்... வாட்சப்ல உங்களுக்கு எழுதியிருந்தேனே. இப்போ திருப்பி அனுப்பறேன்.

   நீக்கு
 26. பறங்கிக்காய் பச்சடி வித்தியாசமா இருக்கு.. செய்து பார்க்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஆதி வெங்கட். கதம்ப சாத்த்துடன், அதிலும் காரமான சாத்த்துடன்-புளியோதரை, எள் சாதம் போன்று, நல்லா இருக்கும்

   நீக்கு
 27. பூசணிக்காய் தயிர் பச்சடியின் distant cousin மாதிரி இல்ல இருக்கு . செஞ்சு பார்க்கணும்

  பதிலளிநீக்கு
 28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் நெல்லைத் தமிழன் சகோதரரே

  தாங்கள் அறிமுகபடுத்தியுள்ள பரங்கி தயிர் பச்சடி படங்களுடன். செய்முறையும் மிகவும் நன்றாக உள்ளது. பரங்கிகாயில், வறுத்து அரைச்ச சாம்பார், கூட்டு, கறி, துவையல் என பல செய்துள்ளேன். இந்த மாதிரி. தயிர் பச்சடி செய்ததில்லை. இனி அடுத்த முறை இதுதான். படங்களை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்குமென்று தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி. தாங்கள் சென்ற முறை செய்த வல்லாரை கீரை துவையலும் மிக நன்றாக உள்ளது.
  அதையும் செய்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா ஹரிஹரன். செய்து பாருங்கள். நான் சாப்பிட்டுப் பார்த்தது இப்போதுதான்

   நீக்கு
 30. நெல்லை செம பச்சடி..நான் துருவி வதக்கிச் செய்வதுண்டு. வேக வைத்துத்தான் செய்தேன் முதலில் அப்புறம் வதக்கிச் செய்தால் டேஸ்ட் இன்னும் நல்லாருக்குனு மகன் சொன்னதால் (சிறிய வயதில்) அப்புறம் அப்படியே!!! புடலங்காய் பச்சடியும் நல்லாருக்கும்...வெள்ளைப் பூஷணியிலும் செய்வேன். சுரைக்காய், பீர்க்கங்காய் எலலம் பொதுவாக எல்லா காய்களிலும் நான் செய்வதுண்டு. துவையல் சாதம் அல்லது கலந்த சாதம் செய்தால் இப்படித் தொட்டுக் கொள்ள...நல்லாருக்கும். வத்தக் குழம்பு, மிளகுக் குழம்பிற்கும் கூட நல்லாருக்கும்...

  சூப்பரா படங்கள் எல்லாம் எடுத்துப் போட்டுருக்கீங்க நெல்லை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா ரங்கன். புடலை, சுரை, பீர்க்கங்காய் பச்சடியா? படித்தால் பிடிக்கும்னு தோணலை. ஆனால் நீங்க நல்லாருக்கும்னு சொன்னால் நிச்சயமா நல்லாருக்கும் (கடுகோரை அனுபவம்)

   விரைவில் ரெண்டு ரிசைப்பி எபில எழுதுங்க

   நீக்கு
  2. அது நெ.தமிழன், என் வாழைக்காய்தோல் சம்பல் பார்த்தீங்க தானே இங்கு[சந்தடி சாக்கில சொல்லி நினைவு படுத்திடோணும்.. முதல்ல அதைச் செய்யுங்கோ பின்பு இதுபற்றி ஓசிக்கலாம் கர்ர்ர்ர்ர்:))].. அதேபோலதான். சிலர் அரைத்தும் செய்வதுண்டு.. எதுக்கும் ரெசிப்பி வரட்டும்.

   நீக்கு
  3. மனைவிட்ட சொல்லி பண்ணச் சொல்றேன். பிரச்சனை என்னன்னா, மகளுக்குப் பிடிக்கணும். பார்க்கலாம்

   நீக்கு
  4. ஆனா அதிரா, எனக்கு பெர்மனன்டா கிச்சன் கிடைக்காமலிருக்க நீங்க பண்ணற சதியில்லையே? எதுக்குச் சொல்றேன்னா, நான் ரொம்ப அப்பாவி.

   நீக்கு
  5. பிஞ்சுப் புடலையா இருக்கணும், பீர்க்கையும் பிஞ்சாக இருக்கணும். வதக்கும்போதே நீர் விட்டுக்கும். தயிர்ப்பச்சடி செய்தால் நன்றாக இருக்கும். சுரைக்காய் சாப்பிடுவதில்லை. கோவைக்காயும் சாப்பிடுவதில்லை.

   நீக்கு
 31. நான் நேற்றுதான் பறங்கி கொட்டையில் பால் கூட்டு செய்து, அதை திங்கற கிழமைக்கு அனுப்ப வேண்டும் என்று ரெடி பண்ணினேன். இன்றைக்கு, நெல்லை தமிழனின் பறங்கிக்காய் தயிர் பச்சடி ரெசிபி!!! முயற்சிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி. நீங்கள் நூற்றுல் ஒருவர்.

   பால்கூட்டையும் அனுப்புங்க. படித்துவிட்டு எழுதறோம்.

   நான் ஒரு ஸ்வீட் செய்முறை அனுப்பப்போறேன்

   நீக்கு
  2. எனக்குப் பறங்கிக்கொட்டைப்பால்க் கூட்டு ரொம்பப் பிடிக்கும். நம்ம ரங்க்ஸ் நேர் எதிர்! ஆதலால் பண்ணவே முடியாது! :))))

   நீக்கு
 32. ஆஆஆஆஆஆஆ மீ 103 ஆவது நெம்பர்ர்ர்:)).. இப்போதான் வர முடிஞ்சுது.. அதுசரி ஏன் இதுக்குப் பறங்கிக்காய் எனும் பெயர் வந்தது???:)

  நாங்கள் இதை சக்கரைப் பூசணி என்போம், இனிக்கும் எல்லோ.. அதேபோல பட்டர் நட் பூசணியை.. டுபாய்ப் பூசணி என்போம்:)).. அது இங்கு தாராளமாக வாங்கலாம் ஆனா இந்த ச.பூ தமிழ்க் கடையில மட்டுமே ஒரியினல் கிடைக்குது, வெளிநாட்டு உற்பத்தி சுவை இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, சர்க்கரை பூசனி அல்வா வெல்லம் போட்டுதான் செய்யமுடியும், வெண் பூசனி அல்வாவை (காசி அல்வா) ஜீனி போட்டுத்தான் செய்ய முடியும். ஏன்னு யோசிங்க.

   நீக்கு
  2. அதிரடி, பறங்கிக்காய், அதாவது சர்க்கரைப்பூஷணியில் சர்க்கரை சேர்த்தும் அல்வா பண்ணலாம். கோவா கிடைச்சால் போடுங்க. இல்லைனா பறங்கிக்காயைத் துருவி நெய்யில் வதக்கி நல்ல திக்கான க்ரீம் பாலைச் சேர்த்து வேக வைத்துச் சர்க்கரை போட்டுச் செய்து பாருங்க! விடமாட்டீங்க! :)))) நெ.த. சொல்றதை எல்லாம் கேட்காதீங்க! :))))))

   நீக்கு
  3. கீசா மேடம் - அடுத்த ஜென்மத்தில் (அப்படி ஒன்று இருந்தால்), நீங்க கோவா லதான் (இது வேற கோவா) பிறப்பீங்கன்னு நினைக்கறேன். வட நாட்டுக்காரங்க மாதிரி, எதுலயும் கோவாவைப் போட்டு அல்வா. நம்ம ஊர் மெதட், பாகில், காயைக் கிளறி அல்வா செய்யறதுதான். இதுல சர்க்கரைப் பூசனில ஜீனி சேர்த்து அல்வாவா? அட ஆண்டவா... எப்படி வருமோ..

   நீக்கு
  4. நெ.த.க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  5. எனக்கு மறு ஜன்மமே இல்லைனு எங்க குடும்ப ஜோசியரும் இன்னும் 2,3 பேரும் சொல்லி இருக்காங்க! :)))))

   நீக்கு
  6. /எனக்கு மறு ஜன்மமே இல்லைனு// - ஒருவேளை அவங்களுக்கு மறு ஜென்மம் இருப்பதால், பயந்துக்கிட்டு, உங்களுக்கு இனி ஜென்மமே இல்லைன்னு சொல்லியிருப்பாங்களோ? எனக்கு நாடி ஜோதிடத்தில், அடுத்த ஜென்மம் திருவாரூரில், அதுவும் மணமாகாத வாழ்வு, அதுவே கடைசி என்று சொல்லியிருக்காங்க. ஆமாம், அப்படிப் பிறக்கும்போது, என் நல் வாழ்க்கைக்கு இப்போ எப்படி பணம் போட்டு வைக்கிறது?

   ஆமாம், எந்த ஊர்ல பிறக்க 'முக்தி' என்று சொல்லியிருக்காங்க? ஏன் கேட்கிறேன்னா, நீங்க பிறந்த ஊரைத் தெரிஞ்சிக்கலாம்னுதான். ஹா ஹா.

   நீக்கு
  7. நான் பிறந்து, வளர்ந்து, படிச்சுக் கல்யாணம் பண்ணிண்டது எல்லாமும் மதுரை தான்! மதுரையே தான்!:))))) எண்பதுகள் வரைக்கும் அப்பா, அம்மாவும் மதுரையில் தான் இருந்தாங்க. அப்புறமா அண்ணாவுக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தை பிறந்ததும் சென்னை-மதுரை என்று இருந்துவிட்டுப் பின்னர் தம்பி கல்யாணத்தின் பின்னர் நிரந்தர மதுரை வாசம். நான் எவ்வளவோ சொன்னேன், மதுரையைக் காலி செய்ய வேண்டாம்னு! கேட்கலை! எனக்கு இன்னமும் அந்த வருத்தம் உண்டு! :( ஆனால் அப்போ இருந்த மதுரை இப்போ இல்லை தான்!

   நீக்கு
  8. எனக்கும் முதலில் மதுரையை விட்டு வந்தது கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போ அப்படித் தோன்றவில்லை.

   நீக்கு
  9. //எனக்கு நாடி ஜோதிடத்தில், அடுத்த ஜென்மம் திருவாரூரில், அதுவும் மணமாகாத வாழ்வு, அதுவே கடைசி என்று சொல்லியிருக்காங்க. //

   நெல்லை... அப்போ இந்த ஜென்மத்தில் எந்தத் தப்பும் பண்ணவில்லை என்று அர்த்தம். பண்ணப்போவதும் இல்லை என்றும் அர்த்தம்... எனக்கும் அங்க ஒரு ஸீட் போடுங்களேன்!

   நீக்கு
  10. //எனக்கு மறு ஜன்மமே இல்லைனு எங்க குடும்ப ஜோசியரும் இன்னும் 2,3 பேரும் சொல்லி இருக்காங்க! :)))))//

   கீதாக்கா.. இந்த ஜென்மத்தைப் பத்தியே ஒண்ணும் தெரியலை... அடுத்த ஜென்மம் பற்றி எப்படிச் சொல்றாங்க?!!

   நீக்கு
  11. ஸ்ரீராம்.. அப்படி எப்படிச் சொல்றீங்க? தப்பே செய்யலைனா, எதுக்கு இன்னொரு ஜென்மம்? அந்த ஜென்மத்துல தனிமை எதுக்கு? "திருவாரூரில் பிறக்க முக்தி" என்பதெல்லாம் எந்த அளவு சரி? அப்போ மதுரைல பிறந்தவங்களுக்கு 'முக்தி'யா? இப்படி எழுதி கீசா மேடத்தை வம்புக்கு இழுத்தால், அவங்க பயந்து காணாமல் போய்ட்டாங்க...

   நீக்கு
  12. ஸ்ரீராம், ஒரு ஜோசியர், என் ஜாதகத்தைப் பார்த்து, இத்தனை வருடம், இத்தனை மாதம், இவ்வளவு நாள் என்று (ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே) சொல்லிட்டார். எனக்கு திக் என்று ஆகிவிட்டது. அது எப்படி அப்படிச் சொல்லமுடியும்? ஒருவர் இப்போ இறப்பார் என்று சொல்லுவதற்கே ரொம்ப நேரம் செலவழித்து கிரகக் கணக்கெல்லாம் பார்க்கணும்.

   என்னைப் பொறுத்தவரையில், 'இப்போ சொல்றதுக்கே', 'நீங்க சொன்னீங்க, ஆனா நான் பட்னு போய்ட்டேனே' என்று கேட்கமுடியாது, இல்லை நாம அதைத் தாண்டி இருந்தால், 'ஜோசியர் அதுவரை இருப்பாரா', நாம் போய்க் கேள்வி கேட்க என்பதும் சந்தேகம்தான். அதனால இதெல்லாம் நமக்கு டைம் பாஸ்தான்.

   நீக்கு
  13. தாம்பரத்துல நாடி ஜோதிடம் பார்க்கப் போயிருந்தேன் (இருக்கும் 10-14 வருஷம்). என் அப்பா, தானும் என்ன நடக்கிறது என்று பார்க்க வருகிறேன் என்றார். நான் அவர்ட்ட, எதுவும் பேசக்கூடாது, எந்த க்ளூவும் குடுத்துடக்கூடாது என்று சொல்லி கூட்டிப்போயிருந்தேன். மற்றவற்றை மறந்துவிடுவோம், ஒரு ஓலைச் சுவடியில் என் அம்மா பெயரும், அப்பா பெயரும் எழுதியிருந்ததை அவர் சிறிது நேரம் கழித்து எடுத்துவந்துவிட்டார் (நாடி ஜோதிடக்காரர்). அந்தப் பெயர்கள் உள்ள வரிகளைத் தவிர மற்றவை படிக்கும்படியாக இல்லை. இது ஃப்ராடு என்று எண்ணிக்கொண்டாலும், அது எப்படி என்ற கேள்வி வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

   வெ.ஆ, ஜோதிடத்தில் பி.எச்.டி வாங்கியவர். மிகத் திறமையாளராம். அதனால்தான் அவர் நம்பர் கேட்டேன். ஹா ஹா. எனக்கு இதிலெல்லாம் ஒரு ஆர்வம்தான்.

   நீக்கு
  14. // இவ்வளவு நாள் என்று (ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே) சொல்லிட்டார்./

   என் பாஸுக்கு கூட அவர் தனது 38 வது வயதில் மறைந்து விடுவார் என்று ஜோசியம் சொல்லி இருந்தார்கள். எனக்கும் முன்னரே சொல்லி இருந்தார். நான் நம்பவில்லை. ஆனால் அவர் அந்த 38 வது வயதைத் தாண்டுவதற்குள் மனதளவில் பட்டபாடு....

   நீக்கு
  15. நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று எனக்கும் ஆவல் உண்டு. நடந்ததை எல்லோரும் சொல்லி விடுகிறார்கள். எதிர்காலம் குறித்துச் சொல்லப்படுவதுதான் பெரும்பாலும் நடப்பதில்லை!

   நீக்கு
  16. எங்கேயும் பயந்துண்டு ஓடலை. வீட்டில் வேலை இல்லையா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! என்னைப் பொறுத்தவரை குடும்ப ஜோசியர் கல்யாணம், குழந்தைகள் பத்திச் சொன்னதும் என் நண்பர்கள் புக்ககம் பத்திச் சொன்னதும் அப்படியே பலிச்சிருக்கு. மத்தபடி ஒரு வள்ளுவன், எங்க குடும்ப ஜோசியர் மற்றும் இன்னும் 2 பேர் மறுபிறவி கிடையாதுனு சொன்னாங்க! நான் அதை எல்லாம் ரொம்பத் தீவிரமா எடுத்துக்கறதில்லை. இன்னும் சொல்லப் போனால் அடுத்த பிறவியிலே இந்தப் பிறவி ஞாபகம் வருமா வராதானு எல்லாம் கவலைப்படுவேன். :))) அதே போல் உலகம் அழிந்து மீண்டும் பிறக்கையில் மீண்டும் சத்ய யுகம் அதாவது கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்னு பிறக்குமானும் ஒரே கவலை! அப்போ என்ன பிறவி எடுப்பேன் என்பதும் தோணும். அப்போதும் கலியுகத்தில் இதே மாதிரி கீதாவாகத் தான் பிறப்பேனா என்றெல்லாம் யோசனைகள் ஓடும்!

   நீக்கு
  17. மத்தபடி இந்த ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு அலையறதிலே நம்ம ரங்க்ஸுக்கு ஈடு, இணை இல்லை. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள ஜோதிடர்கள், நாடி ஜோதிடம், பிரச்னம் உட்படப் பார்த்துட்டார். ஆனால் நாடி ஜோதிடம் இங்கே பார்ப்பதெல்லாம் ஜுஜுபி! :( ஏமாற்று வேலை! எனக்கு எதிர்காலம் குறித்துச் சொன்னதும் பலித்துள்ளது, ஒரு பெண், (அப்போ என் பெண் வயிற்றில் இருந்தாள். பெண் தான் பிறக்கும் என நிச்சயமாய்ச் சொன்னார்கள். ) ஒரு ஆண் குழந்தை என்பதைச் சரியாகச் சொன்னார்கள். அதே போல் குழந்தைகள் இருவருமே வெளிநாட்டில் இருப்பாங்க என்பதையும் சொன்னார்கள். நானும் 50 வயசுக்கு மேல் வெளிநாடு போவேன் எனவும் சொல்லி இருந்தாங்க. அப்போ அதை நான் நம்பவில்லை. அதிலும் ரொம்பச் சின்ன வயசு வேறே! ஆகவே யார் சொன்னாலும் அதற்கு மனதிற்குள் ஓர் எதிர்ப்புத் தோன்றும். என்றாலும் அதிகம் வெளிக்காட்டிக்க மாட்டேன். அதன் தாக்கத்தைப் புரிந்து கொண்டதால். ஆனால் என் கணவரின் மாற்றல் பத்தி எங்க குடும்ப ஜோசியர் சொன்னது பலிக்கவும் தான் "அட!" என்று தோன்றியது. பின்னரும் ஓர் ஆர்வம் உண்டு. ஆனால் தேடிக் கொண்டு போனதில்லை. எங்க பொண்ணு எதுக்கெடுத்தாலும் ஜோசியம் பார்ப்பா! அன்றாட நாள்பலன் பார்ப்பா! அவ அப்பா மாதிரி!

   நீக்கு
  18. எங்களுக்கும் இந்த இந்த ஜோசியர் ரொம்ப நல்லாச் சொல்றார்னு கைகாட்டி விடறது. நாங்களும் உங்கள மாதிரி எதிர்காலத்தைப் பற்றித் தெரிஞ்சுப்போமே (இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கீசா மேடம் ரெசிப்பி எ.பியில் வருதா உள்பட)

   நீக்கு
  19. //தனது 38 வது வயதில் மறைந்து விடுவார் என்று ஜோசியம்// - ஸ்ரீராம்... இது எனக்கும் விளங்கிக்கொள்ளமுடியாத சமாச்சாரமாகத்தான் இருக்கு. எனக்கு ஒரு ஜோசியர் (என் அப்பா மறைந்து 5 வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன்), என் அப்பா இறக்கும் நேரம் அப்போ வரலை, இப்போதான் போயிருக்கணும் என்று சொன்னார். இன்னொரு ஜோதிடர், 'உங்க அம்மா இதுவரை போகவில்லை என்றால் இன்னும் பத்து வருடம் இருப்பார்' என்றும் சொன்னார். இதெல்லாம் புரிந்துகொள்வது கடினம். ஒருவேளை அவங்க சில கிரகங்களைப் பார்த்துவிட்டு, அந்த நிகழ்வுகளின்போது அந்த ஜாதகரின் ஆயுள் முடியும் வாய்ப்பு இருக்கு என்று கணிக்கிறார்களோ?

   நீக்கு
  20. ஒன்றும் புரியவில்லை. ஆனால் அந்நேரம் மனதுக்குள் திகிலாய், கவலையாய் இருந்தது நிஜம். அது கடந்து சில வருடங்கள் வரையும் டென்ஷனும் இருந்தது.

   இந்த பாணி கமெண்ட் பெட்டியில் இந்த கமெண்ட் எங்கே இருக்குன்னு தேடி பதில் போடறது ஒரு மாதிரி கஷ்டமாவும் இருக்கு!!!

   நீக்கு
  21. //ஒன்றும் புரியவில்லை. ஆனால் அந்நேரம் மனதுக்குள் திகிலாய், கவலையாய் இருந்தது நிஜம். அது கடந்து சில வருடங்கள் வரையும் டென்ஷனும் இருந்தது//

   இதை எல்லாம் நம்பவே கூடாது. ஏனெனில் எந்தஜோசியரும் அப்படிச் சொல்வாங்களானு தெரியலை. ஆனால் என் மாமியாருக்கு 60 ஆம் வயசு ஆரம்பிக்கையில் இறந்து போவாங்கனு யாரோ சொன்னதை நம்பி என் கடைசி மைத்துனன் எல்லோருக்கும் தகவல் தெரிவித்துவிட எல்லா இடங்களிலிருந்தும் கடிதங்கள்! அவங்க என்னமோ ஆரோக்கியமாத் தான் இருந்தாங்க. சொல்லப் போனால் ஓடி ஆடி வேலை செய்தாங்க! ஆனாலும் இந்த மாதிரிச் சொன்னதில் உள்ளூர ஒரு சந்தோஷமும் இருந்தது. எப்படி உயிர் போகும்னு பார்க்கலாம்னு இரவு 12 மணி வரை என் மாமனார், மைத்துனர் எல்லோரும் முழிச்சுட்டும் இருந்தாங்க! நாங்க போய்ப் படுத்துட்டோம். ஏனெனில் இதை நம்பலை என்பதே காரணம். ஆனால் அம்மாவின் மேல் அக்கறை இல்லைனு மாமியாருக்குக் கொஞ்சம் வருத்தம். நான் எவ்வளவோ சொன்னேன், இதை எல்லாம் நம்பாதீங்கனு! யாரும் கேட்கலை! :))) அக்கம்பக்கம் உள்ளவர்கள் எல்லாம் மறுநாள் விசாரிச்சாங்க. எனக்கென்னமோ நம் தலையில் என்ன எழுதி இருக்கோ அதை மாத்த முடியாது. அதைத் தாங்கும் வல்லமை இருந்தால் போதும் என்றே தோணும். முன்னாடியே தெரிஞ்சுட்டு என்ன செய்யப் போறோம்?

   நீக்கு
  22. அதே சமயம் கிட்டத்தட்ட இந்தச் சம்பவம் நடந்து ஓரிரு வருடங்களில் என் அம்மாவுக்குக் கீமோதெரபி கொடுத்தும் குணமாகா நிலையில் படுத்த படுக்கை ஆனார்! மருத்துவர்கள் ஆறு மாசம் என கெடு வைத்திருந்தார்கள். அப்போது அங்கே அம்பத்தூரில் ஒரு பாட்டி (இங்கே திருச்சி பக்கம் குழுமணி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்) இந்த ஜோசியம், கைநாடி பார்த்துச் சொல்லுதல், கை வைத்தியம் செய்தல், மணிமந்திர ஔஷதங்களால் விஷக்கடிக்கு மந்திரித்தல் போன்றவற்றைச் செய்வார். அவருக்கு அப்போது சுமார் எழுபது வயதுக்குள் இருக்கும். அவர் அம்மாவைப் பார்க்க வந்திருந்தப்போக் கைநாடியைப் பார்த்துட்டு மிகச் சரியாக இத்தனை நாட்களுக்கான நாடி பேசுகிறது. இந்த நாள், இந்தக் கிழமை, இத்தனை மணிக்குள்ளாக இந்த ஜீவன் உடலை விட்டுப் பிரியும் என்று சொன்னார். அதே மாதிரி அதே பாட்டி 2002 ஆம் வருடம் என் அப்பாவுக்கும் கெடு வைத்துச் சொன்னார். ஆனால் அப்பாவின் உள் மனம் எதையோ நினைத்து அலை பாய்கிறது என்றும் அதைக் கண்டு பிடித்து நிவர்த்தி செய்யும்படியும் சொன்னார். என் தம்பி அப்போது தாம்பரத்தில் புது வீடு வாங்கி இருந்தார். அந்த வீட்டுக்கு அப்பா போகவே இல்லை. நடமாட்டம் இல்லை! ஆகவே அந்த வீட்டு மண்ணை எடுத்து வந்து நீரில் கரைத்து வடிகட்டி வெறும் நீரை மட்டும் கொடுத்தோம். அன்று ஒரு நாள் போக மறுநாள் இரவில் உயிர் பிரிந்தது. அதுவும் அந்தப் பாட்டி சொன்ன கெடுவுக்குள்ளேயே!

   நீக்கு
  23. கீசா மேடம்.. முன்கூட்டியே தெரிந்தால் preparedஆ இருக்கலாம். எத்தனை பேருக்கு எமன் வந்து, ‘கிளம்பு, உன் டைம் முடிந்தது’ என்று சொல்லும்போது, ‘நான் ரெடி புறப்பட’ என்று சொல்லமுடியும்? குறைந்த பட்சம், மாடில துணி காயப்போட்டிருக்கேன் எடுத்துவச்சிட்டு வந்துடறேன், இட்லிக்கு ஊறப்போட்டிருக்கேன், அரைச்சிட்டு வந்துடறேன் என்று தாமதப்படுத்தத்தான் தோணும். ஹா ஹா ஹா

   நீக்கு
  24. இப்பக்கூட, பேங்க் அக்கவுன்ட், ஆன்லைன் பாஸ்வேர்ட் போன்று பல பென்டிங் ஐட்டம் இருக்குன்னே மனசுல தோணும்

   நீக்கு
  25. ஶ்ரீராம்— சப்ஜெக்டை ஜாலியா எடுத்துக்கோங்க. இந்தமாதிரி ஒருவர் மறைவார்னு சொல்லும்போது, நாம அந்த மனிதருக்காக கவலைப்படுவோமா இல்லை காத்திருக்கும் வேலைகளுக்காக, பண மற்ற ஆதாரங்களுக்காக கவலைப்படுவோமா அல்லது நாம தனியே எப்படி காலத்தை ஓட்டறதுன்னு கவலைப்படுவோமா? நம்ம மனசுல டென்ஷன் உண்டாக்க் காரணி என்னவாயிருக்கும்?

   நீக்கு
  26. நாம தயாரா இருக்கணும்னா முழு நினைவில் இருக்கணுமே! இந்த இரண்டு சமயங்களிலும் அப்படி இல்லை. இன்னொருத்தர் கொஞ்சம் உடம்பு முடியாமல் போனதுமே அந்தப் பாட்டியை வரவழைத்து நாடியைப் பார்க்கச் சொல்லணும்னு சொன்னார். பாட்டி வர முடியாதுனு சொல்லிட்டாங்க! அவர் அதன் பின்னர் பல வருஷங்கள் இருந்தார்! :))))) பாட்டியும் கிட்டத்தட்ட செஞ்சுரி அடித்தார்! :))))) ஆனால் கடைசி வரை தானே சமைத்துச் சாப்பிட்டார். இருந்தது பிள்ளையோடு தான் என்றாலும் பாட்டிக்குத் தனிக் கும்முட்டி, தனி வெண்கலப்பானை, எல்லாம் தனி! குளித்துவிட்டுத் தானே சமைத்துக் கொள்வார்.

   நீக்கு
  27. //இதை எல்லாம் நம்பவே கூடாது. //

   சரிதான் கீதா அக்கா.. நமக்கு சரி.. நம்பியும், நம்பாமலும் பயத்திலும் சந்தேகத்திலும் இருந்த பாஸை என்ன சொல்லி மாற்ற?!!!!

   நீக்கு
  28. //ஶ்ரீராம்— சப்ஜெக்டை ஜாலியா எடுத்துக்கோங்க. //

   நெல்லை.. அப்பவே ஜாலியாதான் எடுத்துக்கிட்டேன். அது நடக்காது என்று எனக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இருந்தது. என்னைத்தவிர மற்றவர்கள் இதுபற்றி பேசும்போது எப்படிச் சொன்னாலும் தவறாகும் என்று சும்மா இருக்க நேரிடும்!

   தயாரா இருப்பதைப் பற்றி ஒரு கவிதை எழுதி வைத்திருந்தேன். ரொம்பப் பழைய கவிதை. தேடித் தேடிப் பார்க்கிறேன்.. கிடைத்த பாடில்லை! நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்புகள் எல்லாம் வரும்!

   நீக்கு
 33. பறங்கிக்காயில் பச்சடி.. புதுசா இருக்கு. ஆனாலும் தோல் பச்சையாக இருப்பதைக் காட்டிலும் மஞ்சளாக.. பட்டர் கலரில் இருப்பதுதான் மாச்சத்து அதிகம் என்பது என் கருத்து.. அப்படியே கட்டியாக இருக்கும் ஒவ்வொரு துண்டும்.

  இதை செய்து பார்க்க ஆசை.. ஆனா நிட்சயமாக தெரியும் நான் மட்டுமே சாப்பிட்டு முடிக்கோணும்.

  //இதை கொஞ்சம் வேகவைத்துக்கொள்ளணும். அதுக்காக எங்க வீட்டில் அவனில் வேகவைக்கும் சாதனம் இருக்கு. அதுல கீழ கொஞ்சம் தண்ணீர்விட்டுவிட்டு, மேல் தட்டில் திருவின பறங்கிக்காய் கொட்டி, மூடிவிட்டு, அவனில் 4 //

  மைக்குரோவேவில் வைத்து எடுத்து விட்டுச் செய்யலாம் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மத்தவங்களுக்கும் கொடுத்துட்டு சாப்பிடுங்க. இல்லைனா மத்தவங்க, "என்னடா ஒடியல் கூழ், சம்பல்லாம் நமக்குக் கொடுத்துட்டு இவங்க மாத்திரம் தனியா என்னவோ சாப்பிடறாங்களே" என்று சந்தேகப்படப் போறாங்க.

   நீக்கு
 34. பரங்கி விதையை உடைத்து பருப்பை எடுக்க எளிய வழி. நன்றாக காய வைத்து அதை மிக்ஸியில் போட்டு அரைத்தால் பருப்பு மாவாகிவிடும் மேல் தோல் அரைபடாது. சல்லடையில் சலித்தால் மாவு தனியாக வந்துவிடும் தோல் சல்லடையில் தங்கிவிடும். இது நான் கண்டுபிடித்த வழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... பட்டாபி சார்... நீங்கள் நல்ல உணவுப் பிரியர்தான். ரசனையா எழுதியிருக்கீங்க. நன்றி

   நீக்கு
 35. எங்க குடும்ப ஜோசியர் அப்போவே போய்ச் சேர்ந்துட்டார். அதையும் எழுதி வைச்சிருந்தார். அப்படியே செத்துப் போனார்! மற்ற இருவரும் எங்கே இருக்காங்களோ, இல்லையோ தெரியாது, ஒருத்தர் என்னுடன் வேலை பார்த்தவர், இன்னொருத்தர் என்னுடன் படித்தவர். ரெண்டு பேருக்கும் என் வயசு தான்!

  பதிலளிநீக்கு
 36. அருமையான செய்முறை விளக்கம் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அசோகன் குப்புசாமி

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!