வெள்ளி, 27 ஜூலை, 2018

வெள்ளி வீடியோ 180727 : சின்னச் சின்ன காரணத்தால் கன்னமதில் நீர்த் துளிகள்


மகரந்தம் திரைப்படம் 1981 இல் வெளிவந்தது.  கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் சங்கர் கணேஷ் இசை. பாடல் எழுதியது வாலி.  எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் ஒரு இனிமையான பாடல்.  கதாநாயகி அருணா என்று தெரியும்.  'கல்லுக்குள் ஈரம்' புகழ்!!  கதாநாயகன் அருண்ராமாம்!

கடலில் அலைகள் பொங்கும் - ஆனால்   கரையை தாண்டுமோ - வெறும்   தரையை தீண்டுமோ
என் உடலில்   உணர்வு  பொங்கும்  - உந்தன்   உருவைத் தாண்டுமோ - வேறு   உறவை தீண்டுமோ . சின்னச் சின்ன காரணத்தால் கன்னமதில் நீர்த் துளிகள் என்னை மட்டும் புரிந்து கொண்டால் அத்தனையும் தேன் துளிகள் தேன் துளியை தேக்கி வைக்கும் தாமரையின்  இதயமம்மா தாமரையை மலரவைக்கும் ஆதவனின் உதயமம்மா . . கண்கள் சொன்ன கவிதை எல்லாம் கல் எழுத்து போன்றதம்மா கல் எழுத்து என்றிருந்தால்  காலம் என்ன செய்யுமம்மா நீரிடித்து நீர் விலகி
பார்த்ததில்லை பூமியிலே  
நீ பிரிந்து நான் இருந்தால்
வாழ்க்கை இல்லை பொன்மகளே 


.

59 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்!
  கீதா

  பதிலளிநீக்கு
 2. பாட்டு கேட்டுட்டு கருத்து அப்புறமா வரேன் ஸ்ரீராம்...இப்பத்தான் பெண்டிங்க் தளங்கள் பார்த்துட்டு வந்தேன்...இனிதான் துளசியின் கமென்டுகளைத் தேடணும்...தேடிப் போடனும்..மெயில் பார்த்து

  கீதா

  பதிலளிநீக்கு
 3. விடியற்காலைப் பூக்கள் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
 4. இப்படியொரு படம் வந்தது தெரியும்...
  ஆனால், பார்த்ததில்லை... பாடலையும் கேட்டதில்லை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் நானும் பார்த்ததில்லை துரை ஸார்... அந்த தைரியம் எனக்கில்லை! இந்தப் பாடல் மட்டும் ஃபேமஸ். இதனுடன் கூட எஸ் பி பி யின் இன்னொரு பாடல் ஜோடியாக எனக்குப் பிடிக்கும். அதனை பிறிதொரு நாளில் பகிர்கிறேன்!

   நீக்கு
 5. பாட்டு பார்த்ததும் கேட்காமல் போகத் தோன்றவில்லை ஏனென்றால் மிகவும் பிடித்த பாடல் முதல் வரியிலேயே எஸ்பிபி யின் அந்த அழகான சங்கதிகள் என்னமா இருக்குல ஸ்ரீராம்...ஆரம்பமே என்ன ஒரு ஃபீல்!!!!!!.அழகான தேஷ் ராகம்...வாவ்...சங்கர் கணேஷின் இசையில்!!! வாவ்...இசையமைப்பாளர் தெரியாது இப்பத்தான் தெரியும்..படமும் தெரியாது ஆனால் பாடல் மட்டுமே கேட்டதுண்டு...செம பாடல் ஸ்ரீராம் அதான் பாடல் என்னனு பார்த்ததும் கேட்டுட்டேன்..மீது கருத்து அப்பால

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... நீங்கள் இந்தப் பாடல் கேட்டிருப்பது சந்தோஷம் கீதா.. தேஷ் ராகம் - அருமையான ராகம். இந்தப் படத்தில் இன்னொரு பாடல் உண்டு... "நீயின்றி நானோ..."

   நீக்கு
 6. காலை வணக்கம்....

  மகரந்தம் என்று ஒரு சினிமா....
  அருணா என்று ஒரு கதாநாயகி....
  அருண்ராம் என்று ஒரு கதாநாயகன்....

  மூன்றுமே தெரியாத விஷயம். இந்தப் பாடலும் கேட்டதில்லை. முதல் முறையாக கேட்டேன். ஓகே ரகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம், பாடல் இரண்டுமே கேள்விப்பட்டதில்லை என்பது ஆச்சர்யம் வெங்கட்.... ரசித்ததற்கு நன்றி.

   காலை வணக்கம்.

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை வணக்கம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

   நீக்கு
  2. வெகு அருமையான பாடல். வீடியோ பார்க்க வேண்டாம். எஸ்பி பி குரல்
   தேன். உண்மையிலியே சோகத்தைக் கரைத்துவிடும் உருக்கம்.
   மிக மிக நன்றி ஸ்ரீராம்.
   இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

   நீக்கு
  3. காலை வணக்கம் வல்லிம்மா... நன்றி. ஆம் கீதாவும் சொல்லி இருப்பது போல ஆரம்ப ஹம்மிங்கிலிருந்தே எஸ் பி பியை ரசிக்க முடியும்.

   நீக்கு
 8. பாடல் அழகா இருக்கு,ஆனால் இந்த பாடலை இப்போதுதான் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி கேட்காத பாடல்களை அறிமுகப்படுத்துவதில் எனக்கும் மகிழ்ச்சி.

   நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.

   நீக்கு
 9. அருணா தெரியும். பாடல் கேட்டதுண்டு படத்தின் பெயர் ஞாபகத்தில் இல்லை ஜி

  பதிலளிநீக்கு
 10. விளையாடியிருக்கிறார் வாலி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ ஏ அண்ணன் வாலி அங்கிள் சிக்ஸ்சர் அடிச்சிருக்கிறார்.. சும்மா வெளாடல்ல:)) ஹா ஹா ஹா

   நீக்கு
  2. ஓ... வரிகளை ரசித்திருக்கிறீர்கள் ஏகாந்தன் ஸார்.

   கிரிக்கெட் பாஷையில் சொல்றீங்களா அதிரா!

   நீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
  பாலசுப்பிரமணியம் குரலின் இனிமை பாடலை ரசிக்க வைக்கிறது.
  பாடல்கள் வரிகளும் நன்றாக இருக்கிறது.
  சினிமா பார்த்தது இல்லை.

  பதிலளிநீக்கு
 12. பாடல் வரிகளும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா..

   நானும் சினிமா பார்த்தது இல்லை. பாடலை அப்போதிலிருந்தே ரசிப்பேன்.

   நீக்கு
 13. பாட்டு கேட்ட மாதிரியே இல்லையே!

  பிளாக்கை தூசு தட்டி இருக்க மாதிரி இருக்கே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி ராஜி... ஆமாம்... டிடி உதவியில் தூசி தட்டினோம்!

   நீக்கு
 14. அது என்னவோ தெரியலை பதிவில் வெளியாகும் பாடல்கள் பழையதாக இருந்தாலும் நான்கேட்டதாய் இருப்பதில்லை

  பதிலளிநீக்கு
 15. ஒரு தலை ராகம் படம் மற்றும் பாடல்களின் தாறுமாறான வெற்றிக்குப் பின் அதே போல இளம் புது நடிகர்களை வைத்து அதே போன்ற பாடல்களுடன் பல படங்கள் வெளிவந்தன.

  இதுவும் அதில் ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பாலகுமார் பராஜசிங்கம். நீங்கள் சொல்வது சரி... முதல் வருகையோ...

   நீக்கு
 16. ஓஓஓஓஓஓஓஓஓ நோஓஓஓஓஓஓஓஓஓஓஓ மய் ஃபேவரிட் சோங்ங்ங்ங்ங்:)) ஹையோ நேக்கு காண்ட்ஸும் ஓடல லெக்ஸ்ஸும் ஆடல்ல.....

  எந்த வசனத்தைச் சொல்லுவேன் எந்த வசனத்தை விடுவேன்ன்.. அத்தனையும் தத்துவ வசனம்.. ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு தட்துவம் இருக்கே.. ஆஆஆஆஆ மீ ஃபெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்ன்ன்ன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... அதிரா.. உங்களுக்கு பிடித்த பாடலா? வெரிகுட்! அப்பாடி!

   நீக்கு
 17. இந்தப் பாடலை பலபேர் கேட்டதில்லையாமே.. அதெப்படி இப்படி ஒரு அழகைக் கேட்காமல் போனார்கள்.. இதுக்குத்தான் இலங்கை வானொலி கேட்டு வளர்ந்திருக்கோணும் என்பது:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே? நானும் இலங்கை வானொலியில்தான் கேட்டிருக்கிறேன்.

   நீக்கு
 18. ஓ மகரந்தம்.. படம் இன்றே தேடப் போகிறேன்.. பார்க்கோணும்.. பூஸோ கொக்கோ:))..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ மை காட்... படம் பார்த்துடாதீங்க... வேணாம் விபரீத யோசனை!

   நீக்கு
  2. ஹையோ ஏன்ன்ன்? ஆவ்வ்வ்வ் இப்போ என் ஆர்வக்கோளாறை அதிகமாட்டிட்டாரே ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா.

   நீக்கு
  3. விதியை வெல்ல முடியுமா?!!

   நீக்கு
 19. அதிராவை 24 மணி நேரமாக் காணல்ல ஆராவது தேடினீங்களோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏன் தேடல்ல?:))..

  https://i.ytimg.com/vi/1DF93e8GBqw/hqdefault.jpg

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /ஆராவது தேடினீங்களோ?:)// அடிக்கடி காணாமல் போவது உங்கள் (இருவரின்) வழக்கம் என்பதால் இருக்குமோ?

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கமலா சிஸ்டரையும் கொஞ்சக் காலமாக் காணம்:)).. மீதான் தேடுறேன், வேற ஆருமே தேடவில்லை கர்ர்ர்ர்:)) இப்போ புரியுதோ? மீ ரொம்ப நல்ல பொண்ணு:))

   நீக்கு
  3. நான் மனசுக்குள்ள தேடினேன்!

   கமலா சிஸ்டர் வந்தாச்சே... பார்க்கவில்லையா?

   நீக்கு
  4. அப்பாடா.. நீங்களாவது தேடியிருக்கிறீங்க என்பது நம் மக்களுக்கு தெரியோணுமெல்லோ?:) இல்லை எனில் என் இமேஜ் டமேஜ் ஆகிடாது:)).. நான் ஹொலிடே முடியும்வரை இப்படி அடிக்கடி காணாமல் போவேன்ன்.. எல்லோரும் என்னை.. மூலை முடுக்கெல்லாம் தேடோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்:)).

   ஓ கமலா சிஸ்டர் வந்திட்டாவோ இங்கு பார்த்தேன் வரல்ல..

   நீக்கு
  5. அதென்ன எப்போ பார்த்தாலும் ஹாலிடே ஹாலிடேங்கறீங்க...!

   நீக்கு
 20. பாடலை இதுவரை கேட்டதில்லை. வரிகள் நல்லா இருக்கு. (சமூகக் கோட்டைத் தாண்டுபவர்கள் சுனாமி மாதிரி அபூர்வம் என்று கவிஞர் சொல்கிறாரா?). பாடல் ஆரம்பம், 'மவுனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்' என்பதற்கான ஹம்மிங்கோ என்று தோன்றியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மவுனமே பார்வையாய் மாதிரி... அப்படிக் கொஞ்சம் இருக்கும் நெல்லை.

   நீக்கு
 21. இப்பொழுதுதான் முதல் முறையாக இந்தப் பாட்டு கேட்கிறேன் , பாடல் நன்றாகவே இருக்கிறது . நடிப்பும் தான் , இயல்பாக உள்ளது

  பதிலளிநீக்கு
 22. இப்படி ஒரு படம் வந்தது தெரியாது.முதல் முறையாக பாடல் கேட்கிறேன்.ஓகே! வரிகள் நன்றாக இருக்கின்றன.
  அருணா, விசுவின் ஏதோ ஒரு படத்தில் பெண்ணியம் பேசும் பத்திரிகையாளராக வருவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பானு அக்கா. விசு படம் ஏதோ ஒன்றில் அருணா பத்திரிகையாளராக நடித்திருப்பார் என்று எனக்கும் ஞாபகம்!

   நீக்கு
 23. தேஷ் ராகத்தில் எனக்குத் தெரிந்த, பிடித்த பாடல், பாரதிதாசனின்,"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?.." படம் மணமகள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 24. பாடல் கேட்ட நினைவிருக்கிறது. நல்ல பாடல். இலங்கை வானொலி நிலையம் உபயம். அந்த வருடத்தில் மதுரையில் இருந்ததால் பார்த்திருப்பேன்....ஆனால் நினைவில்லை...நல்லபாடல் ஸ்ரீராம்ஜி...

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 25. இனிய பின்னணி இசையில் பாடல் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 26. உள்ளத்தை ஈர்க்கும் அருமையான பாடல்கள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!