திங்கள், 2 ஜூலை, 2018

"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா




சென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  பேசிக்கொண்டிருந்தபோது அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்டார் பாஸ்.

"இன்று இரவுக்கு என்ன டிஃபன்?"

"சப்பாத்தி"

"தொட்டுக்கொள்ள?"

"கேப்ஸிகம் மசாலா"

(தலைப்பு இங்கே வந்து விட்டது, கட்டுரை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்பவர்களை பசிக்காத புலி பார்க்கட்டும்)

"கேப்ஸிகம் மசாலாவா?  என்ன செய்வே?  எப்படின்னு சொல்லு..."

பிரபல நிபுணரை ஒருமையில் பேசுகிறாரே பாஸ் என்று உங்களுக்கு சந்தேகம் கலந்த ஆச்சர்யம்  வரலாம்.  நிபுணர் பாஸின் அக்கா ஆச்சே!  அப்புறம் இன்னொரு விஷயம்.  பாஸும் ஒரு நிபுணரே!

அக்கா சொன்ன ரெஸிப்பியை கடந்த 26 ஆம் தேதி செய்து சுவைத்து ரசித்தோம்.  அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

இதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.  நான் அறிந்திருக்கவில்லை.  
இதை நீங்கள் செய்து சுவைத்திருக்கக் கூடும்.  நான் சுவைத்ததில்லை.  இதைச் சொல்லவேண்டியது என் கடமை!

எனவே புதுசு போலவே பகிர்ந்து கொள்கிறேன்.  நீங்களும் புதுசு போலவே படியுங்கள்.  ஏதோ ஒன்றிரண்டு பேராவது "இது நான் செய்ததில்லை, நன்றி" என்று சொன்னால் சந்தோஷம்.  (நிச்சயம் இந்த வார்த்தையை கீதா ரெங்கன் சொல்ல மாட்டார்) சொல்லா விட்டாலும் சந்தோஷம்!  ஹி.. ஹி..  ஹி...

ஆறு பேர்களுக்கான அளவில் செய்முறை சொல்கிறேன்.

மூன்று கேப்ஸிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.  மூன்று பெரிய வெங்காயம்,  இரண்டு தக்காளி (நாங்கள் காவிரி நகரத் தக்காளி எடுத்துக் கொண்டோம்)

தக்காளி, ஒரு பத்து பல் பூண்டு, கொஞ்சம் இஞ்சி, எட்டு பச்சை மிளகாய் நாலு முந்திரிப்பருப்பு ஆகியவற்றை அப்படியே வதக்காமல் மிக்சியில் இட்டு அரைத்துக் கொண்டோம்.




கேப்ஸிகத்தை மீடியமாக, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு. வெங்காயத்தையும் நறுக்கிக் கொண்டோம்.




வாணலியில் எண்ணெயிட்டு (நாங்கள் தேங்காய் எண்ணெய் உபயோகித்தோம்) வெங்காயத்தை முதலில் போட்டு வதக்கிக்கொண்டு, அப்புறம் கேப்ஸிகத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.  மஞ்சள்பொடி சேர்க்கச் சொன்னார் அக்கா.  ஆனால் நாங்கள் சேர்க்கவில்லை.  காரணம்...  அது எதற்கு?  சேர்க்கவில்லை, அவ்வளவுதான்!




அரைத்த விழுதைச் சேர்த்து, தேவையான அளவு  உப்பு சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து கொதி வந்ததும் இறக்கிவிடவேண்டியதுதான்.

அக்கா தேங்காய் அரைத்துவிடச் சொல்லவில்லை என்றாலும் நாங்கள் சேர்த்தோம்.




இதுவரை நாங்கள் சுவைத்திராத சுவை.  ரசித்தோம்.

[ இதைச் செய்த பாஸுக்கு படங்கள் எடுக்கும் பழக்கம் இல்லாததால் கடைசியாக தயாரான மசாலாவை மட்டுமே இப்போதைய படமாகச் சேர்க்கிறேன்.  குடைமிளகாய், வெங்காயம் போன்றவை ஏற்கெனவே குடைமிளகாய் - உருளை -வெங்காயத்தாள் மசாலாவுக்காக எடுக்கப்பட்டவை.  அதை முன்பு வெளியிட்டேன் என்று நினைவு! ]

114 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  2. /// பாஸூம் ஒரு நிபுணரே!...///

    நல்லவேளை...
    நாங்க தப்பிச்சோம்!..

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் கீதா அக்கா.. ஆமாம் என் பாஸேதான்!

    பதிலளிநீக்கு
  5. கீதா ரெங்கனை இரண்டு நாட்களாய்க் காணோம் துரை ஸார்.. இணையப்படுத்தல் போலும்!

    // நல்லவேளை...
    நாங்க தப்பிச்சோம்!.. //

    நீங்க இல்லை, நான் தப்பிக்கறதுதான் மெயின்!

    பதிலளிநீக்கு
  6. இங்கே இந்த Bell Pepper தாராளமாக கிடைப்பதால் அடிக்கடி செய்வதுண்டு...

    தயிர் சோற்றுக்கு அருமையாக இருக்கும்..

    பதிலளிநீக்கு
  7. நீங்க தப்பிச்சது தானே
    எங்களுக்கு அதிர்ஷ்டம்!....

    பதிலளிநீக்கு
  8. கிட்டத்தட்டக் கடாய்ப் பனீர் செய்முறை. ஆனால் நான் வழக்கம் போல்பூண்டு போட மாட்டேன்.. தக்காளியை நறுக்கியும் சேர்ப்பேன். அரைத்தும் சேர்ப்பேன். க்ரேவியாக வரத் தக்காளி ப்யூரி தான் முக்கியம் என்பதால்! அதிகம் நீர் சேர்ப்பதில்லை. பனீர் கொஞ்சம் உதிராக ஆகிடும். என்றாலும் கடைசியில் தான் பனீரை நெய்யில் வறுத்துச் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  9. இஞ்சி, பூண்டு, பமி. யோடு கொஞ்சம் கொ.ம. புதினா (பிடித்தால்) வைச்சுக்கலாம். வெங்காயமும் பச்சையாகக் கொஞ்சம் அரைக்கும் போது ( ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கியது) வைத்துச் சேர்த்து அரைக்கலாம். தேங்காய், மு.ப.வைத் தனியாக அரைத்துக் கடைசியில் சேர்க்கலாம். தாளிக்க எண்ணெய் ஊற்றும்போதே ஒரு டீஸ்பூன் சர்க்கரையை அதில் போட்டுக் கரைந்ததும் வதக்க வேண்டியதை வதக்கலாம். பொதுவாக மசாலா சேர்த்த உணவு வகைகளுக்குக் கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால் மசாலாவின் காரம் மட்டுப்படும்.

    பதிலளிநீக்கு
  10. இங்கே குடைமிளகாய் எனக்குத் தான் பிடிக்கும் வழக்கம் போல். ஆகவே எப்போவானும் வாங்குவது தான்! அதிலும் ஒன்றே ஒன்று வாங்குவார் அது மட்டும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  11. இங்கே இந்த Bell Pepper Masala
    செய்தது எப்படி!..

    சித்தன் போக்கு சிவன் போக்கு தான்!...

    பதிலளிநீக்கு
  12. நிபுணரான பாஸ் உங்களுக்குக் கிடைத்திருப்பது உங்கள் அதிர்ஷ்டம்.

    பெல் பெப்பர் எல்லா வண்ணங்களையும் சேர்த்து இந்த முறையில் செய்தால் சுவை கூடும். வண்ணக் கலவை.
    அருமையான செய்முறை விளக்கம்.

    கீதா சொல்லி இருக்கும் மெதட் மகள் செய்வாள்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  14. // நீங்க தப்பிச்சது தானே
    எங்களுக்கு அதிர்ஷ்டம்!.... //

    ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  15. // கடாய் பனீர் செய்முறைதான் //

    அப்படியா அக்கா? புதினா சேர்த்தால் டேஸ்ட் வேறுமாதிரி ஆகிவிடும்! தயிர் சேர்த்திருக்கலாமோ என்று பின்னர் தோன்றியது. தயிர் சேர்த்து சீரகப்பொடி சேர்த்தால் வேறு சுவை!

    பதிலளிநீக்கு
  16. கீதாக்கா..

    // வெங்காயமும் பச்சையாகக் கொஞ்சம் அரைக்கும் போது ( ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கியது) வைத்துச் சேர்த்து அரைக்கலாம்//

    ஆம், செய்யலாம். தேங்காய் முந்திரியை எதற்காக தனியாய் அரைத்து சேர்க்க வேண்டும்?

    மசாலாவுக்காக சர்க்கரை. புதிய தகவல் எனக்கு. அடுத்த முறை மசாலா சேர்க்கும் தருணங்களில் நினைவு வைத்துக் கொள்கிறோம். பாஸ் கிட்ட சொல்லிட்டேன்.

    பதிலளிநீக்கு
  17. // சித்தன் போக்கு சிவன் போக்கு தான்!... //

    ஹா.. ஹா.. ஹா.. அதுதான் புதுப்புது சுவைகளை கொடுக்கும் துரை ஸார்.

    பதிலளிநீக்கு
  18. வாங்க வல்லிம்மா.. மாலை வணக்கம்.

    // நிபுணரான பாஸ் உங்களுக்குக் கிடைத்திருப்பது உங்கள் அதிர்ஷ்டம்.//

    ஆமாம். ஆமாம். ஆமாம்.. ஆமாம்..

    நாங்கள் இதுவரை பச்சை வண்ணத்தில் இருக்கும் காய் மட்டுமே வாங்கி சமைத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  19. தேங்காய், முந்திரியை முதலில் அரைக்கும் மசாலா விழுதை வதக்கிச் சேர்ப்பது போல் சேர்த்தால் அவ்வளவு சுவை இருக்காது. கடைசியில் அரைத்துச் சேர்த்தால் மசாலாவுக்கு ஒரு ரிச் லுக் கிடைக்கும். அல்லது க்ரீம் உள்ள பாலில் இருந்து எடுக்கப்பட்ட புத்தம்புதிய க்ரீமை இறக்கும்போது சேர்க்கலாம். நான் எப்போவும் தேங்காய், முந்திரி வைத்து அரைப்பதில்லை. இங்கே நல்ல பால் என்பதால் அநேகமாய்ப் பாலில் இருந்து எடுக்கும் க்ரீமைச் சேர்ப்பேன். காரமும் மட்டும்ப்படும். க்ரேவிக்கு consistency யும் அதிகரிக்கும். பார்க்கவும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  20. தேங்காய், முந்திரியை வதக்கும் பொருட்களோடு சேர்த்து அரைத்து வதக்கிச் சேர்க்கையில் ருசியும் வித்தியாசப்படும்.

    பதிலளிநீக்கு
  21. இங்கு அப்படி பால் கிடைப்பதில்லை. இருந்தாலும் நீங்கள் சொல்லியிருப்பதை கவனத்தில் வைத்துக் கொள்கிறோம் கீதா அக்கா.

    பதிலளிநீக்கு
  22. புதினா விரும்பினால் மட்டுமே!

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் அனைவருக்கும் வாழ்க வளமுடன்.
    (நாங்கள் காவிரி நகரத் தக்காளி எடுத்துக் கொண்டோம்)//
    பெங்களூர் தக்காளியா ? சரி.

    பதிலளிநீக்கு
  24. பச்சைமிளகாய் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமோ?
    செய்முறை நன்றாக இருக்கிறது.
    சர்க்கரை சேர்த்து வதக்கும் போது அழகான கலர் கொடுக்கும்.முந்திரி, தேங்காய் சேர்த்து அரைக்கும் போது கொஞ்சம் கட்டி தன்மையும் அழகான தோற்றமும் கொடுக்கும் மசாலா.

    பதிலளிநீக்கு
  25. பாஸுக்கும் நன்றிகளை சொல்லி விடுங்கள் ஜி

    பதிலளிநீக்கு
  26. //..அப்புறம் இன்னொரு விஷயம். பாஸும் ஒரு நிபுணரே!//

    இதென்ன, காலை வேலையில்! யாருக்கும் தெரியாத ஒன்றை சொல்லிவிட்ட பெருமையா!

    பதிலளிநீக்கு
  27. Fusion food ஐட்டமாக இருக்கிறதே.......குட்

    பதிலளிநீக்கு
  28. ஆஹா.... இதுவரை சுவைத்ததில்லை.

    மோர் சாத்த்துக்கு இதைத் தொட்டுக்கொள்வதா? பேச்சலர் வாழ்க்கை சரி.. அதற்காக அடிப்படை காம்பினேஷனுமா மாறவேண்டும்? அட ராமா...

    பதிலளிநீக்கு
  29. இந்தத் திங்கக்கிழமையில் ஏனிந்த அசட்டுத் துணிச்சல்?
    அதிரடிஞானி, கீதா Jr., கீதா Sr., போன்ற உலகப்புகழ்பெற்ற மகாவீரர்கள் சுற்றிச் சுற்றிவந்து கலக்கும் மைதானத்தில், பாவம், கையில் குடை மிளகாயுடன் இறங்கியிருக்கிறீர்களே !

    பதிலளிநீக்கு
  30. வாவ்.... இந்த குடை மிளகாய் ரெசிப்பி சூப்பர். இங்கே அடிக்கடி செய்வதுண்டு. கடாய் பனீர் சாப்பிட்டு இருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  31. நல்ல ரெசிபி..

    இந்த மாதரி நான் செய்தது இல்லை...


    எங்க வீட்டில் எனக்கு மட்டுமே இந்த மிளகாய் பிடிக்கும் ..அதனால் பன்னீர்...காலிபிளவர...உருளை...இந்த மாதரி யார்கூடவாவது சேர்த்து தான் செய்வேன்..

    பதிலளிநீக்கு
  32. நல்ல சைட் டிஷ்தான், ஆனால் தயிர் சாதத்திற்கா?
    பூண்டு கொஞ்சம் அதிகம் என்று தோன்றியது.
    எல்லா க்ரேவிகளுக்குமே சிட்டிகை சர்க்கரையும், ஒரு டேபிள் ஸ்பூன் தயிரும் சேர்ப்பது காரத்தை சமப்படுத்தும்.
    முந்திரியும், ஃப்ரஷ் க்ரீமும் சுவையை கூட்டும். ஆனால் எடை அதிகரித்து விடுமோ என்னும் பயம்.

    பதிலளிநீக்கு
  33. ஶ்ரீராம் மாம்பழ சீஸன் முடிந்து விடப் போகிறது.

    பதிலளிநீக்கு
  34. பூண்டு, பச்சை மிளகாய் எண்ணிக்கை அதிகம் என்று தோன்றியது.
    காரம் அளவாய் இருந்ததா ? அதிகாமாய் இருந்ததா?
    சப்பாத்திக்கு என்றால் காரம் அதிகம் வேண்டாம் அதனால் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  35. @ நெ.த. said...
    >>> ஆஹா.... இதுவரை சுவைத்ததில்லை.
    மோர் சாதத்துக்கு இதைத் தொட்டுக்கொள்வதா?... <<<

    @ Bhanumathy Venkateswaran said...
    >>> நல்ல சைட் டிஷ்தான், ஆனால் தயிர் சாதத்திற்கா?... <<<

    ஒருநாளைக்கு தயிர் சாதமும் கேப்ஸிகம் மசாலாவும் சாப்பிட்டுத்தான் பாருங்களேன்!...

    பதிலளிநீக்கு
  36. கடாய் பனீருக்குப் புதினா தேவை இல்லை. ஆனால் பெண்களூர்க் கத்திரிக்காய், குடமிளகாய், உ.கி. சேர்த்துச் செய்யும் சப்ஜிக்குப் புதினா சேர்த்தால் அதுவும் வதக்கும்போது சேர்த்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  37. புதினா போடுவதில் எனக்கு இஷ்டமில்லை கீதா அக்கா.

    பதிலளிநீக்கு
  38. வாங்க கோமதி அக்கா..

    // பெங்களூர் தக்காளியா ? //
    ஹிஹிஹி... அதே.. அதே..


    // பச்சைமிளகாய் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமோ?//

    உடம்புக்கு நல்லதில்லைதான்.. ஆனால் காரம் சாப்பிட்டுப் பழகி விட்டது.

    // பாஸுக்கு வாழ்த்துக்கள்.//

    சொல்லி விடுகிறேன்!

    பதிலளிநீக்கு
  39. நன்றி கில்லர்ஜி. சொல்லி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  40. வாங்க ஏகாந்தன் ஸார்...

    // இதென்ன, காலை வேலையில்! யாருக்கும் தெரியாத ஒன்றை சொல்லிவிட்ட பெருமையா!//

    ஆமாம்... பின்னே? அட ஒரு நிபுணத்துவத்தைச் சொல்ல விடமாட்டேங்கறீங்களே...!!!

    பதிலளிநீக்கு
  41. வாங்க நெல்லைத்தமிழன்...

    // பேச்சலர் வாழ்க்கை சரி.. அதற்காக அடிப்படை காம்பினேஷனுமா மாறவேண்டும்? அட ராமா... //

    அதானே? மோர் சாதத்துக்கு நார்த்தங்காய் தொட்டுக்கலாம், ஊறுகாய் தொட்டுக்கலாம்... இதைத் தொட்டுப்பாங்களோ!!

    பதிலளிநீக்கு
  42. ஏகாந்தன் ஸார்..

    // இந்தத் திங்கக்கிழமையில் ஏனிந்த அசட்டுத் துணிச்சல்? //

    வேறு ஸ்டாக் கையில் இல்லை.

    // அதிரடிஞானி, கீதா Jr., கீதா Sr., போன்ற உலகப்புகழ்பெற்ற மகாவீரர்கள் சுற்றிச் சுற்றிவந்து கலக்கும் மைதானத்தில், பாவம், கையில் குடை மிளகாயுடன் இறங்கியிருக்கிறீர்களே ! //

    ஆஹா... இப்படி ஆயிப்போச்சே என் நிலைமை! பாருங்க வெங்கட்டை.. ஸூப்பர்ங்கறார்!

    பதிலளிநீக்கு
  43. வாங்க வெங்கட்...

    கடாய் பனீர் ஒருமுறை கடையில் ஆர்டர் செய்து சாப்பிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  44. வாங்க அனுராதா பிரேம்குமார்..

    // இந்த மாதரி நான் செய்தது இல்லை...//

    அப்பாடி... முதல் ஆளு.. இப்படிச் சொல்ல! நன்றி.

    பதிலளிநீக்கு
  45. வாங்க பானுமதி அக்கா.. நான் தயிர் சாதத்துக்கு இதெல்லாம் தொட்டுக்கொள்ள மாட்டேன்!! ஃபிரஷ் க்ரீம்லாம் வீட்டில் வாங்கி வைக்கும் வழக்கம் இல்லை பானுக்கா..

    பானுக்கா..

    // ஶ்ரீராம் மாம்பழ சீஸன் முடிந்து விடப் போகிறது. //

    மெயிலை தவற விட்டு விட்டேனா?

    பதிலளிநீக்கு
  46. கோமதிக்கா...

    காரம் நாங்கள் - குறிப்பாக நானும் என் மகன்களும் - காரம் அதிகம் விரும்புவோம். ஆரோக்யமான விஷயம் இல்லைதான். ஆனாலும்...! பூண்டு அளவு பாதிக்கவில்லை. குடைமிளகாய் வாசனையை சமப்படுத்தியிருக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  47. துரை ஸார்..

    // ஒருநாளைக்கு தயிர் சாதமும் கேப்ஸிகம் மசாலாவும் சாப்பிட்டுத்தான் பாருங்களேன்!.//

    செஞ்சுட்டாப் போச்சு!

    பதிலளிநீக்கு
  48. கீதாக்கா.. புதினா குறிப்பிட்ட சில ஐட்டங்களில்தான் சேர்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  49. @சிரிராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், புதினா பிடிக்காதுனு சொன்னதுக்கு. அதான் சிரிராம், ஶ்ரீராம்னு சொல்லலை! :))))) நம்ம ரங்க்ஸும் உங்களைப் போல் தான்! புதினாவை ஜூஸ் செய்து கொடுத்தால் அடம்பிடிக்காமல் சமர்த்தாய்க் குடிப்பார். அதுவே புதினா சாதம், காய்கள், துவையல்னா நான் மட்டும்! நான் மட்டுமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  50. //சிரிராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், புதினா பிடிக்காதுனு சொன்னதுக்கு. //

    ச்ரீராம் க்கு சிரிராம் பரவாயில்லை! முன்பு எங்கள் அலுவலகத்தில் ஒருவர் என்னை "சிற்.. றாம் ஸார்" என்று அழைப்பார்!

    பதிலளிநீக்கு
  51. என்னாது எட்டுப் பச்சை மிளகாயா? எல்லோரும் சொல்றாங்களேனு பார்த்தேன்! தொப்!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மயங்கி விழுந்துட்டேன்! நானெல்லாம் அரைப் பச்சை மிளகாய் போடுவதற்கே இங்கே உஸ்ஸ்ஸ்! புஸ்ஸ்ஸுனு பெருமூச்சு வரும். தண்ணியைத் தண்ணியைக் குடிப்பாங்க! உங்க பாஸ் பாவம்! அவங்களுக்கும்பழகிடுச்சா? காரம்? புதுசு புதுசா ஆர்வத்தோடு செய்யறாங்களே! அதுக்கே அவங்களுக்குப் பாராட்டுச் சொல்லணும். ஆனால் நீங்க தான் வெளிப்படையா உங்க பாஸின் சமையலைப் புகழ்ந்து சொல்லிடறீங்களே! அதுக்கு உங்களைப் பாராட்டணும்! :)))) (இல்லைனா அடி விழுமோ?) :)))))

    பதிலளிநீக்கு
  52. எங்க வீட்டில் எத்தனை நன்றாகச் சமைத்தாலும் ரங்க்ஸ் வாயைத் திறக்காமல் சாப்பிட்டால் சரியா இருக்குனு அர்த்தம். இப்போத் தான் சொல்லிச் சொல்லிக் கொஞ்சம் கொஞ்சம் பாராட்ட ஆரம்பிச்சிருக்கார். அதே என் மாமியார், மாமனார், நாத்தனார் எல்லோரும் பரவாயில்லை, தேவலை என்று தான் சொல்வார்கள். அதோடு சமையல் என்ன புதுசா பாராட்டிச் சொல்ல! பொம்மனாட்டிக்கு இதெல்லாம் தெரிஞ்சு வைச்சுக்கணுமே என்பார்கள்! :))))) பாராட்டையே எதிர்பார்த்தது இல்லை. குழந்தைகள் தவிர மற்ற யாரிடமும்! :)))))

    பதிலளிநீக்கு
  53. எனக்கு காரம் சரியாக இருந்தது.

    // ஆனால் நீங்க தான் வெளிப்படையா உங்க பாஸின் சமையலைப் புகழ்ந்து சொல்லிடறீங்களே!//

    வேற வழி? சாப்பிட்டு சாப்பிட்டு பழகிடுதே...

    // இல்லைனா அடி விழுமோ?//

    விழாதுன்னு சொன்ன நம்பவா போறீங்க!

    பதிலளிநீக்கு
  54. கீதாக்கா...

    // ரங்க்ஸ் வாயைத் திறக்காமல் சாப்பிட்டால் சரியா இருக்குனு அர்த்தம்//

    இங்கேயும், எங்கேயும் அப்படிதான். பாஸும் சொல்லிச்சொல்லி நானும் இப்பதான்...

    நாத்தனார், மாமியார்... பெண்ணுக்குப் பெண்ணே எதிரி!

    பதிலளிநீக்கு
  55. பார்க்க படிக்க சாப்பிட தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  56. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  57. //இப்போத் தான் சொல்லிச் சொல்லிக் கொஞ்சம் கொஞ்சம் பாராட்ட ஆரம்பிச்சிருக்கார்.//

    கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் கீசா மேடம். சமையல் நல்லாப் பண்ண ஆரம்பிச்சுட்டீங்கன்னா, அவரே பாராட்ட ஆரம்பிச்சுடுவார். பண்ணிக்கிட்டே இருந்தீங்கனா, நல்லா அவர் பாராட்டுற அளவுக்கு வந்துடும். ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  58. @நெ.த. வாய்விட்டுச் சிரித்தேன். நோய் விட்டுப் போச்சு! நன்னி ஹை! :))))

    பதிலளிநீக்கு
  59. //முன்பு எங்கள் அலுவலகத்தில் ஒருவர் என்னை "சிற்.. றாம் ஸார்" என்று அழைப்பார்!//

    அவர் டமிளில் டபுள் ‘டி’ எனக் கேள்வி..

    பதிலளிநீக்கு
  60. //"தொட்டுக்கொள்ள?"

    "கேப்ஸிகம் மசாலா"//

    ஆஆஆஆஆஆஆ கப்ஸிகத்தில மசாலாவோ? ஆவ்வ்வ்வ் .. இங்கு கப்ஸிகம் எனச் சொல்வதில்லை.. பெப்பர் எனத்தான் சொல்லுவோம்.. கிரீன் பெப்பர், ரெட் பெப்பர், யெலோ பெப்பர்:)

    பதிலளிநீக்கு
  61. //(நாங்கள் காவிரி நகரத் தக்காளி எடுத்துக் கொண்டோம்)//

    நீங்கதான் நாட்டுத்தக்காளி சாப்பிடமாட்டேன் என்றீங்களே.. மறந்துபோய்ச் சாப்பிட்டீங்களோ?:) அதுசரி காவிரித்தக்காளி என்பது அந்த இடத்தில் விளைவதைத்தானே சொல்றீங்க?.

    பதிலளிநீக்கு
  62. //மஞ்சள்பொடி சேர்க்கச் சொன்னார் அக்கா. ஆனால் நாங்கள் சேர்க்கவில்லை. காரணம்... அது எதற்கு? சேர்க்கவில்லை, அவ்வளவுதான்!//

    அதானே அக்கா சொல்லிட்டா என்பதற்காக கட்டாயம் சேர்க்கோணுமோ என்ன?:) ஹா ஹா ஹா கண்ணதாசன் அங்கிளின் வரிகள் நினைவுக்கு வருது..:)

    “அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக, உப்பு நீரையே குடித்துக் கொண்டிருக்கும் ஞானக் குருடர்களோடு வாதாட முடியுமோ?”

    பதிலளிநீக்கு
  63. //அக்கா தேங்காய் அரைத்துவிடச் சொல்லவில்லை என்றாலும் நாங்கள் சேர்த்தோம்.//
    என் ஸ்டைலும் இதேதான், ஒரு ரெசிப்பியைப் பார்த்து பேஸ் ஐ எடுத்துக் கொண்டு, மிகுதிக்கு என் ஸ்டைலிலேயெ சமைப்பேன்ன்.. அதனாலதானே என் குறிப்புக்கள் எல்லாம் அவ்ளோ சுசி.. ஹையோ ருசி:)) ஆவ்வ்வ்வ்வ் இப்போ எதுக்கு எல்லோரும் கீழே குனியுறாங்க? ஆவ்வ்வ் கல்லெடுக்கவோ.. ?:)

    பதிலளிநீக்கு
  64. //இதுவரை நாங்கள் சுவைத்திராத சுவை. ரசித்தோம்.
    ///
    நல்லது.
    பார்க்க நல்லாத்தான் இருக்கு ஆனா நம் வீட்டில் பிடிக்குமோ தெரியவில்லை. கப்ஸிகம் சலாட் வகையைச் சேர்ந்ததுதானே அதனால அதனை அவித்து சமைத்ததில்லை நான், எப்பவும் கொஞ்சம் ஒயிலில் பிரட்டி சோயா சோஸ் போட்டு இறக்குவேன், அல்லது அப்படியே புட்டு, ரைஸ் போட்டு பிர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆணி ஆக்குவேன். பச்சையாகத்தானே சாப்பிடுகிறோம் சான்விச்களில்.

    பதிலளிநீக்கு
  65. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    //..அப்புறம் இன்னொரு விஷயம். பாஸும் ஒரு நிபுணரே!//

    இதென்ன, காலை வேலையில்! யாருக்கும் தெரியாத ஒன்றை சொல்லிவிட்ட பெருமையா!///

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏ அண்ணன் டமில்ல மிஸ்ரேக் விட்டிட்டார்ர்ர்ர்ர்:)) காலை வேளையில் என்றெல்லோ வந்திருக்கோணும்.. மீக்கு டமில்ல டி ஆக்கும்:)

    பதிலளிநீக்கு
  66. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    இந்தத் திங்கக்கிழமையில் ஏனிந்த அசட்டுத் துணிச்சல்?
    அதிரடிஞானி, கீதா Jr., கீதா Sr., போன்ற உலகப்புகழ்பெற்ற மகாவீரர்கள் சுற்றிச் சுற்றிவந்து கலக்கும் மைதானத்தில், பாவம், கையில் குடை மிளகாயுடன் இறங்கியிருக்கிறீர்களே !///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸ்ரீராமின் பொஸ் ஏற்கனவே எம்மோடு களம் புகுந்து விளையாடியிருக்கிறாவெல்லோ அதனால அவவுக்கு இது புதுசில்லை:))

    பதிலளிநீக்கு
  67. //ஸ்ரீராம். said...
    புதினா போடுவதில் எனக்கு இஷ்டமில்லை கீதா அக்கா.//

    ஆங்ங்ன் எனக்கும் தான், எதிலும் சேர்க்க மாட்டேன், தனியாக சட்னியாக அரைப்பேன்.

    பதிலளிநீக்கு
  68. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    //முன்பு எங்கள் அலுவலகத்தில் ஒருவர் என்னை "சிற்.. றாம் ஸார்" என்று அழைப்பார்!//

    அவர் டமிளில் டபுள் ‘டி’ எனக் கேள்வி..///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது எனக்குப் போட்டியாக டபிள் எடுத்தவர்?:)) .. ச் ரீராம்.. சே..சே.. சிரீராம் சே..சே.. பெயரை மறந்திட்டேன்.. ஸ்ரீராமை அது யார் உங்கள் ஒபிஸில் அப்படிக் கூப்பிடுவது?:)

    பதிலளிநீக்கு
  69. //..காலை வேளையில் என்றெல்லோ வந்திருக்கோணும்.. //

    ஆ! டமிள் ‘டி’ கண்ணிலே விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு எபி-க்குள் இறங்குவதைப் பார்க்காமல் போய்விட்டேனே!

    பதிலளிநீக்கு
  70. காப்ஸிகம் மசாலா !! இதுவரை செய்ததுமில்லை சாப்பிட்டு பார்த்ததுமில்லை .நான் எப்பவும் மூணு கலர் பெல் பெப்பர்ஸையும் வெட்டி ப்ரைட் ரைஸ் ,ப்ரைட் நூடுல்ஸில் சேர்ப்பதே வழக்கம் வெஜ் குருமாவில் காப்ஸிகம் போடுவேன் .இது தனி கிரேவியா இருக்கு .சப்பாத்தி செய்யும்போது செய்கிறேன் .அதாவது வெயில் வெதர் முடிவுக்கு வந்ததும் :)
    எனக்கு ஒன்று புரியலை எதற்கு எல்லாரும் முந்திரிப்பருப்பை அரைத்து சேர்க்கிறாங்க க்ரேவியில் ?
    எனக்கு அந்த சுவை பிடிக்கலை .

    பதிலளிநீக்கு
  71. //எல்லாரும் முந்திரிப்பருப்பை அரைத்து சேர்க்கிறாங்க க்ரேவியில் ?
    எனக்கு அந்த சுவை பிடிக்கலை .// கொஞ்சம் 'ரிச்' ஆகத் தெரியத் தான், முப சேர்த்தால் க்ரீம் அல்லது பால் அல்லது தயிர் வேண்டாம். மசாலாவின் காரத்தைச் சமன் செய்யும். மு.ப. பிடிக்கலைனா ஃப்ரெஷ் க்ரீம் சேருங்க. அங்கே க்ரீமுக்குப் பஞ்சம் இல்லையே! :)))

    பதிலளிநீக்கு
  72. ஓஹோ !! அதான் ரீஸனா ..தாங்க்ஸ் கீதாக்கா

    பதிலளிநீக்கு
  73. //அதானே அக்கா சொல்லிட்டா என்பதற்காக கட்டாயம் சேர்க்கோணுமோ என்ன?:) ஹா ஹா ஹா கண்ணதாசன் அங்கிளின் வரிகள் நினைவுக்கு வருது..:)

    “அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக, உப்பு நீரையே குடித்துக் கொண்டிருக்கும் ஞானக் குருடர்களோடு வாதாட முடியுமோ?”//

    ஆஹா!

    சமயத்தில் கண்ணதாசன் அங்கிள் நினைவுக்கு வந்து விட்டாரே !

    பதிலளிநீக்கு
  74. (தலைப்பு இங்கே வந்து விட்டது, கட்டுரை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்பவர்களை பசிக்காத புலி பார்க்கட்டும்)//

    ஹா ஹா ஹா ஹா ஹா...நான் நல்ல பசியோடு வந்துபார்த்துட்டு வாசித்து நாவால் தடவிக்கொண்டு சப்புக் கொட்டிவிட்டுச் சென்றேன்...ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  75. (நிச்சயம் இந்த வார்த்தையை கீதா ரெங்கன் சொல்ல மாட்டார்) சொல்லா விட்டாலும் சந்தோஷம்! ஹி.. ஹி.. ஹி...//

    ஹிஹிஹிஹிஹிஹிஹீ......ஸ்ரீராம் இருந்தாலும் நான் நன்றி சொல்வேன் உங்களுக்கு. என்ன செய்யறதுனு மண்டைல உள்ள இத்துனூண்டு மூளைய போட்டு கசக்கி என்னென்னவோ உதிர்ந்துட்டுருந்துச்சா...எனக்கு இதை நினைவு படுத்தியமைக்கு!!! ஹா ஹா ஹா ஸோ நன்றியோ நன்றி!!!

    ஸ்ரீராம் இதோடு பனீர் சேர்த்துச் செய்தாலும் சூப்பரா இருக்கும். நீங்கள் பச்சையாக அரைத்து அப்புறம் வதக்கிச் செய்தீர்கள் இல்லையா நான் வதக்கி அரைத்து மீண்டும் அரைத்த விழுதை கொஞ்சம் எண்ணை சேர்த்து வதக்கி மசாலா சேர்ப்பது வழக்கம். ஸோ உங்க மெத்தடையும் செய்து பார்த்துடறேன்....தே எ பயன்படுத்தியிருக்கேன். (குக்கிங்க் ஆயில் தீர்ந்த சமயத்தில்...ஹிஹிஹி) வெண்ணையிலும் வதக்கி செய்யலாம்.

    முந்திரி ஊறவைச்சு மசாலாவோடு அரைத்துச் சேர்த்தாலும் நல்ல க்ரேவி கொஞ்சம் ராஜா வீட்டு சமையல் போல...ஹா ஹா ஹா அப்புறம் இருக்கவே இருக்கு க்ரீம்.....நான் பெரும்பாலும் கடையில் வாங்காமல் பாலை ஸ்லோவாகக் காய்ச்சும் போது ஏடு படியும் அப்புறம் அபப்டியே விட்டால் படியும்..திக்காக. அப்படிக் காய்ச்சும் போது அதையும் எடுத்து வைத்துச் சேர்ப்பது உண்டு.

    நல்லாருக்கு ஸ்ரீராம் பாஸ் செய்திருப்பது. அவருக்குப் பாராட்டுகள் சொல்லிடுங்க...

    சூப்பர் ரெசிப்பி திங்க!! அடுத்து யார் யார் என்ன சொல்லிருக்காங்கனு பார்க்கணும் புதுசா குறிப்புகள் இருக்கானு...

    கீதா

    பதிலளிநீக்கு
  76. ///Geetha Sambasivam said...
    //. மு.ப. பிடிக்கலைனா ஃப்ரெஷ் க்ரீம் சேருங்க. அங்கே க்ரீமுக்குப் பஞ்சம் இல்லையே! :)))//

    அஞ்சூஊஊஊஊ உங்களுக்குப் புரியாது.. மீ பிரிய வைக்கிறேன் ஹையோ புரிய வைக்கிறேன்.. இதில் மு ப என்றால்... முனிப் பசாசு:)) என அர்த்தம்:)) இன்னும் ஏதும் டவுட் இருப்பின் கேளுங்கோ பிளீஸ்ஸ் பிக்கோஸ் மீக்கு டமில்ல டி எல்லோ:))

    பதிலளிநீக்கு
  77. @கோமதி அக்கா
    //ஆஹா!

    சமயத்தில் கண்ணதாசன் அங்கிள் நினைவுக்கு வந்து விட்டாரே !///

    ஆவ்வ்வ்வ்வ் கோமதி அக்காவுக்கு இப்போ தலையிடி சுகம் வந்திட்டுதூஊஊஊ எனப் புரியுதூஊஊஊ:))

    பதிலளிநீக்கு
  78. //Angel said...
    ஓஹோ !! அதான் ரீஸனா ..தாங்க்ஸ் கீதாக்கா//

    ம்ஹூம்ம் இது தெரியாமலோ தேவதைக் கிச்சின் வேறு ஓபின் பண்ணினா:) விட மாட்டேன் கிச்சினை தேம்ஸ்ல வீசும் வரை ஓய மாட்டேன்ன்ன்ன்ன்.. இப்பவே கிச்சினைப் பூட்டிப்போட்டு ஒழுங்கா நாலு குறிப்புக்கள் செய்து சிற்..றாமுக்கு[இப்பூடி எழுத ஈசியாக்கிடக்கூஊஊஊஊஊ:)) ஹ ஹா ஹா] அனுப்போணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))]

    பதிலளிநீக்கு
  79. 3 வது ஆசிரியர் சிற்..றாமை இன்னும் காணம்:))

    பதிலளிநீக்கு
  80. ஓ கேய்க்க மறந்திட்டேன் கிதாவின் கெட் தெரியுது.. இப்போ எல்லாம் கீதாவைக் காணாவிட்டால் தேடுவதில்லை.. நெட் புரொப்ளம் என நாமே முடிவு கட்டி விடுகிறோம்ம்.. அப்படி எப்பவும் நினைப்பது தப்பு.. ஒருவேளை உடல் நலமில்லையோ என இன்று காலையில் சூரியன் கண்ணில பட்ட்டுத்தெறிக்கும்போது எனக்கு இந்த ஓசனை வந்துதேஎ:)) பிக்கோஸ்ஸ் மீ மெடிரேஷன் கிளாஸ் போகிறேனெல்லோ:))

    பதிலளிநீக்கு
  81. சனை வந்துதேஎ:)) பிக்கோஸ்ஸ் மீ மெடிரேஷன் கிளாஸ் போகிறேனெல்லோ:))//
    நோ :) எனக்கு கூடதான் உடம்பு சரியில்லை அதை நிங் கண்டுபிடிக்கலை :) அது போலி மெடிடேஷன் :)

    பதிலளிநீக்கு
  82. / எட்டு பச்சை மிளகாய் //
    தட்டில் ரெண்டுதானே இருக்கு மீதி 6 எங்கே ??

    பதிலளிநீக்கு
  83. //எனக்கு கூடதான் உடம்பு சரியில்லை அதை நிங் கண்டுபிடிக்கலை :) அது போலி மெடிடேஷன் :)//

    அதையும் கண்டு பிடிச்சிட்டனே.. அது பூஊஊஊ ..பூஊஊஊஊ.. நடிப்ப்ப்ப்ப்பூஊஊஊஊஊ ஹா ஹா ஹா ஓகே மீ கோயிங்:)).. பாய் பாய் இது வேற பாய்:))

    பதிலளிநீக்கு
  84. / பெப்பர் எனத்தான் சொல்லுவோம்.. கிரீன் பெப்பர், ரெட் பெப்பர், யெலோ பெப்பர்:)//

    வாங்க அதிரா... பெப்பர்னா மிளகு இல்லையோ? இது மிளகாயல்லோ?

    //நீங்கதான் நாட்டுத்தக்காளி சாப்பிடமாட்டேன் என்றீங்களே.//

    ஆமாம்... ஆமாம்... எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்கிட்டு கரெக்ட்டா அங்கங்க கேட்டுடுவாங்க அதிராவும் அஞ்சுவும்! இது பெங்களூரு தக்காளியாக்கும்... அதான் காவேரி!

    பதிலளிநீக்கு
  85. அதிரா

    //ஹா ஹா ஹா கண்ணதாசன் அங்கிளின் வரிகள் நினைவுக்கு வருது..:)//

    கண்ணதாசனுக்கு இப்படி ஒரு ரசிகையா! என்னே ஞாபக சக்தி..


    //ஒரு ரெசிப்பியைப் பார்த்து பேஸ் ஐ எடுத்துக் கொண்டு, மிகுதிக்கு என் ஸ்டைலிலேயெ சமைப்பேன்ன்//

    அதே... அதே... ருசியை மாத்தணும். மாத்தறோம்! அதென்ன அவங்க சொல்றதையே செய்துகொண்டு...! இல்லையா!

    பதிலளிநீக்கு
  86. அதிரா...

    //பார்க்க நல்லாத்தான் இருக்கு ஆனா நம் வீட்டில் பிடிக்குமோ தெரியவில்லை.//

    கேப்ஸிகம், உருளை, வெங்காயம் போட்டு மசாலா கறி செய்து சாப்பிட்டதைச் சொன்னேனோ? நல்லாயிருக்கும். இன்னொன்றும் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. செய்தால் சொல்கிறேன். எப்படியும் கீதா 'ஹைஃபை ஸ்ரீராம்... நான் நேற்றுதான் செய்தேன்'னு சொல்லப்போறாங்க!

    //ஸ்ரீராமின் பொஸ் ஏற்கனவே எம்மோடு களம் புகுந்து விளையாடியிருக்கிறாவெல்லோ அதனால அவவுக்கு இது புதுசில்லை//

    அப்பாடி... சப்போர்ட்டுக்கு நமக்கும் பாஸுக்கும் ஆள் இருக்கு!

    பதிலளிநீக்கு
  87. //ஆங்ங்ன் எனக்கும் தான், எதிலும் சேர்க்க மாட்டேன், தனியாக சட்னியாக அரைப்பேன்.//

    அதே... அதே... அதிரா... ஆனால் நாங்கள் புதினா ரைஸும் செய்வோம்..நீங்களும் செய்வீர்கள்தானே?

    //ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது எனக்குப் போட்டியாக டபிள் எடுத்தவர்?:)) .//

    அவர் மேலுலகம் சென்று விட்டார் அதிரா...

    பதிலளிநீக்கு
  88. வாங்க ஏஞ்சல்...

    //காப்ஸிகம் மசாலா !! இதுவரை செய்ததுமில்லை சாப்பிட்டு பார்த்ததுமில்லை //

    ஆஹா... நீங்களும் அனுபிரேமும் (அதிராவுமோ?)தான் நான் செய்ததில்லைன்னு சொல்லி இருக்கீங்க!! வாழ்க! முப விளக்கம்லாம் அக்கா கொடுத்திருக்காங்க..

    பதிலளிநீக்கு
  89. வாங்க கீதா ரெங்கன்.. இப்பல்லாம் அடிக்கடி ஆப்சென்ட் ஆகறீங்க!

    உங்களுக்கு இதை நினைவுபடுத்தி விட்டேனா? எத்தனை நாட்களுக்குப் பிறகு செய்யப் போறீங்க? பனீர் சேர்த்திருக்கலாம்தான். எங்கள் வீட்டில் அதெல்லாம் தயாராய் இருக்காது!

    பதிலளிநீக்கு
  90. //3 வது ஆசிரியர் சிற்..றாமை இன்னும் காணம்:))//

    வந்துட்டேன் அதிரா... பதிலும் சொல்லிட்டேன்!!

    பதிலளிநீக்கு
  91. அதிரா காவிரி தக்காளி நா பெங்களூர் தக்காளி...

    கீதாக்கா இந்த ரெசிப்பிக்கு புதினா எடுபடுமா? எடுபடாது என்று எனக்குத் தோன்றும். நான் சேர்த்ததில்லை. மற்றபடி வேறு சில ரெசிப்பிகளுக்குச் சேர்ப்பதுண்டு.

    கீதாக்கா சொல்லியிருக்கும் மத்தது க்ரீம் முந்திரி எல்லாம் போட்டுச் செய்வதுண்டு.

    இந்த க்ரேவியிலேயெ கசூரி மேத்தி சேர்த்துச் செஞ்சு பாருங்க முந்திரி அல்லது க்ரீம் சேர்த்து...செமையா இருக்கும். காப்சிக்கமும் கசூரி மேத்தியும் சேர்ந்து ஒரு ஃப்ளேவர்....பஞ்சாபி ஃப்ளேவர் வந்துரும்..

    ஸ்டஃப்ட் கேப்சிகம் (குட்டி கேப்சிகம் கிடைக்கும் போது) செஞ்சு ப்ரௌன் க்ரேவி, க்ரீன் க்ரேவி அல்லது வொயிட் க்ரேவி அல்லது ரெட் க்ரேவியில் போட்டாலும் செமையா இருக்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  92. வாங்க ஏஞ்சல்..

    // தட்டில் ரெண்டுதானே இருக்கு மீதி 6 எங்கே ?? //

    எம் ஜி ஆர் மாதிரி கணக்கு கேட்கறீங்க... நாந்தான் படங்கள் இதற்கு எடுக்கப்பட்டவை இல்லன்னு சொல்லி இருக்கேனே...

    பதிலளிநீக்கு
  93. அதிரா...

    சரி விடுங்க.. உங்க ரெண்டு பேருக்குமே உடம்புசரியில்லை!

    பதிலளிநீக்கு
  94. // இந்த க்ரேவியிலேயெ கசூரி மேத்தி சேர்த்துச் செஞ்சு பாருங்க //

    கர்ர்ர்... கீதா பயமுறுத்தாதீங்க... நான் அதெல்லாம் பார்த்ததே இல்லை!

    // ஸ்டஃப்ட் கேப்சிகம் (குட்டி கேப்சிகம் கிடைக்கும் போது) செஞ்சு ப்ரௌன் க்ரேவி, க்ரீன் க்ரேவி அல்லது வொயிட் க்ரேவி அல்லது ரெட் க்ரேவியில் போட்டாலும் செமையா இருக்கும்..//

    போச்சுடா... இதைதான் நான் நெனச்சுக்கிட்டிருக்கேன்னு சொல்லி இருக்கேன்

    பதிலளிநீக்கு
  95. உங்களுக்கு இதை நினைவுபடுத்தி விட்டேனா? எத்தனை நாட்களுக்குப் பிறகு செய்யப் போறீங்க? பனீர் சேர்த்திருக்கலாம்தான். எங்கள் வீட்டில் அதெல்லாம் தயாராய் இருக்காது!//

    எங்க வீட்டுலயின் பனீர் எல்லாம் தயரா இருக்காது ஸ்ரீராம். வடிவேலு ஸ்டைல்ல சொல்லிக்கங்க..."ப்ளான்" பண்ணித்தான்...ஹா ஹா ஹாஹா

    மகன் வந்திருக்கும் போது கூடச் செய்யலை. அவன் அங்கு செய்து கொள்வதால் இங்கு அவன் வந்த போது எல்லாம் நம்ம சவுத் இந்தியன் சாப்பாடுதான் வாழைப்பூ, வாழைத்தண்டு கோவைக்காய் என்றுதான் சாப்பிட்டான். அதனால கொஞ்ச மாதங்கள் ஆகிவிட்டது. என்னிடம் கேட்டு வாங்கிச் சாப்பிடு ஆட்கள் எலலம் இப்ப அம்பேரிக்காவுக்குப் போயிருக்காங்க. ஹா ஹா ஹா ஹா அதனால எனக்கு மட்டும் வெங்காயம் என்பதால் செய்வதில்லை. ஸ்ரீராம்....ஆனா நாளை இரவு செய்யலாம்னு இருக்கேன் பார்ப்போம்

    கீதா

    பதிலளிநீக்கு
  96. ஸ்ரீராம் கசூரி மேத்தினா ஒன்னுமில்ல காஞ்ச வெந்தய இலை நீங்க முன்னாடி எதுக்கேனும் போட்டிருப்பீங்க ...

    கீதா

    பதிலளிநீக்கு
  97. // ஸ்ரீராம்....ஆனா நாளை இரவு செய்யலாம்னு இருக்கேன் பார்ப்போம்//

    நல்லது கீதா.. அங்கே வெங்காயம் போன்றவற்றையே சாப்பிட்ட மகன், இங்கு இந்திய உணவுகளை மட்டுமே விரும்பி இருக்கிறார் போலும்!

    // கசூரி மேத்தினா ஒன்னுமில்ல காஞ்ச வெந்தய இலை//

    நினைவிருக்கு. வெங்கட் கூடச் சொல்லி இருக்கார்.

    பதிலளிநீக்கு
  98. வாங்க கீதா ரெங்கன்.. இப்பல்லாம் அடிக்கடி ஆப்சென்ட் ஆகறீங்க! //

    ஸாரி சார். சார் சார் லீவ் லெட்டர் கொடுக்காம போய்ட்டேன் ஸார். அது எதிர்பாராம என் நோட்புக் எல்லாம் தேம்ஸுக்கு போயிருச்சு சார். பூஸார் வராதப்ப நோட்ஸ் எல்லாம் கேட்டாங்களா கொடுத்துட்டேன் . நோட் இல்லாம வந்தா கீதா டீச்சர் திட்டுவாங்க ஒயிங்கா யாரும் அவங்க நோட்ஸ் படிக்கறதில்லைனு...ஏற்கனவே திட்டினாங்க.

    இனி ஆப்சென்ட் ஆகமாட்டேன் ஸார். ஒயிங்கா க்ளாஸுக்கு வந்துருவேன் ஓகேயா ஸார். ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  99. ஸ்ரீராம் பாஸ் கலக்குறாங்க...நீங்க இன்னொரு பக்கம் கலக்குறீங்க..வீட்டுல கிச்சன் கிங்க் அண்ட் க்வீன்!!! கில்லாடிகள் தான் போங்க...கினி பிக்ஸ் பசங்கதானே ஹா ஹா ஹா அவங்களும் எஞ்சாய் செய்வாங்க...எங்க வீட்டுல முதல் கினி பிக் என் பையன், அப்புறம் என் மச்சினர், ஒன்றுவிட்ட நாத்தனார்ஸ்....

    துரை அண்ணா சொல்லிருக்காப்புல எல்லாம் சும்மா அப்படியும் இப்படியும் பூந்து விளையாடறதுதான் இங்கி பிங்கி பாங்கி இல்லைனா பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன் தான் இப்படித்தான் நிறைய பெயர் வைக்கப்படாத ரெசிப்பிஸ் உருவாகும் வீட்டுல...ஆஃப்கோர்ஸ் எல்லார் வீட்டுலயும்தான்...கிச்சன் ஒரு பரிசோதனைக் கூடம் என்றால் வீட்டிலுள்ளோர் பரிசோதனை எலிகள்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  100. // ஸாரி சார். சார் சார் லீவ் லெட்டர் கொடுக்காம போய்ட்டேன் ஸார். அது எதிர்பாராம என் நோட்புக் எல்லாம் தேம்ஸுக்கு போயிருச்சு சார். பூஸார் வராதப்ப நோட்ஸ் எல்லாம் கேட்டாங்களா கொடுத்துட்டேன் . நோட் இல்லாம வந்தா கீதா டீச்சர் திட்டுவாங்க ஒயிங்கா யாரும் அவங்க நோட்ஸ் படிக்கறதில்லைனு...ஏற்கனவே திட்டினாங்க.

    இனி ஆப்சென்ட் ஆகமாட்டேன் ஸார். ஒயிங்கா க்ளாஸுக்கு வந்துருவேன் ஓகேயா ஸார். ஹா ஹா ஹா ஹா//

    ஹா... ஹா... ஹா... கீதா ... சிரிக்க வச்சுட்டீங்க!

    // ஸ்ரீராம் பாஸ் கலக்குறாங்க...நீங்க இன்னொரு பக்கம் கலக்குறீங்க.//

    நெசமாதானே சொல்றீங்க? கிண்டல் சுண்டல் இல்லையே.... நன்றி நம்பிச் சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  101. // ஸ்டஃப்ட் கேப்சிகம் (குட்டி கேப்சிகம் கிடைக்கும் போது) செஞ்சு ப்ரௌன் க்ரேவி, க்ரீன் க்ரேவி அல்லது வொயிட் க்ரேவி அல்லது ரெட் க்ரேவியில் போட்டாலும் செமையா இருக்கும்..//

    போச்சுடா... இதைதான் நான் நெனச்சுக்கிட்டிருக்கேன்னு சொல்லி இருக்கேன்//

    ஹா ஹா ஹா அப்பூடியா சூப்பர்!! செய்ங்க ஸ்ரீராம்...

    இன்னொன்றும் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. செய்தால் சொல்கிறேன். எப்படியும் கீதா 'ஹைஃபை ஸ்ரீராம்... நான் நேற்றுதான் செய்தேன்'னு சொல்லப்போறாங்க!//

    ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் இந்த வரிக்கு மேல சொன்னது " இதைத்தான் நினைச்சுட்டுருக்கேன்னு"...அதானா ஸ்ரீராம்!!? சரி சரி செய்ங்க செய்ங்க....பூந்து வெளாடுங்க...திங்கவுக்கு ஒழுங்கா கொண்டு வந்துடுங்க..

    பாஸோட அக்காவும் கில்லாடியா...அப்ப திங்க கிச்சன்ல இழுத்துருவோம்...பாஸையும் இழுத்துருவோமா...

    கீதா

    பதிலளிநீக்கு
  102. // ஸ்ரீராம் பாஸ் கலக்குறாங்க...நீங்க இன்னொரு பக்கம் கலக்குறீங்க.//

    நெசமாதானே சொல்றீங்க? கிண்டல் சுண்டல் இல்லையே.... நன்றி நம்பிச் சொல்லலாமா?//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....என்னைய அப்பூடியா நினைச்சுட்டீங்க...அவ்வ்வ்வ்வ்.....மெய்யாலுமே சொன்னதுதான்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  103. // பாஸோட அக்காவும் கில்லாடியா...அப்ப திங்க கிச்சன்ல இழுத்துருவோம்...பாஸையும் இழுத்துருவோமா...//

    அவங்களுக்கே தெரியாம இழுத்தாச்சுன்னுதானே அர்த்தம்!

    // தானா ஸ்ரீராம்!!? சரி சரி செய்ங்க செய்ங்க....பூந்து வெளாடுங்க...திங்கவுக்கு ஒழுங்கா கொண்டு வந்துடுங்க..//

    ஹா... ஹா... ஹா... ஆமாம். எப்ப நேரம் அமையுமோ? எப்ப பொறுமை வருமோ!

    // அவ்வ்வ்வ்வ்.....மெய்யாலுமே சொன்னதுதான்.....//

    அப்போ மனப்பூர்வமான நன்றி கீதா!

    பதிலளிநீக்கு
  104. கீகீகீ :) அது ஸ்ஸ்ஸ்ஸ்ரீ ராம் :) தி .ஜாவின் சிறுகதைகள் முழுத்தொகுப்பு அப்புறம் சுந்தரராமசாமியின் புளிய மரம் கதை ரெண்டும் கைக்கு கிடைச்சிருக்கா கையும் ஓடலா காலும் ஆடலை :) நீங்க வெங்காயம் படம் மட்டும் பழசுன்னு நினைச்சிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  105. //ஸ்ரீராம். said...
    அதிரா...

    சரி விடுங்க.. உங்க ரெண்டு பேருக்குமே உடம்புசரியில்லை!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதை எப்பூடி விட முடியும்ம்ம்ம்? நான் நல்லாத்தானே இருக்கிறேன்ன்.. ஆர் சொன்னது எனக்கு உடம்பு சரியில்லை என விடுங்கோ விடுங்கோ என்னை விடுங்கோ நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்:))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!