திங்கள், 23 ஜூலை, 2018

"திங்க"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி





இந்த வல்லாரை பிஸினெஸே, அதிரடி, ஏஞ்சலின் இவங்க சொல்லித்தான் நான் கேள்விப்படறேன். அவங்கதான் எப்பவும் வல்லாரை ஜூஸ் (யூஸ்) சாப்பிடுவேன் என்று சொல்வார்கள். வீட்டருகில் இருக்கும் பழமுதிர்ச்சோலை காய்கறி கடையில், என் மனைவி வல்லாரைக் கீரை காண்பித்தாள். ஒரு பாக்கெட் 8-10 ரூபாய். அதை துவையல் பண்ணலாம் என்றாள். எனக்குத்தான் எந்த புதிய ஐட்டமும் பிடிக்காதே. நான் ஆர்வம் காட்டலை. அவள், பெண்ணுக்கு துவையல் சாதம் பிடிக்கும், ஒரு பாக்கெட் மட்டும் வாங்குங்க என்றதால், ஒரு பாக்கெட் வாங்கிக்கொடுத்தேன். பசங்க சாப்பிடும்போது எனக்கு ஒரு வாய் துவையல் சாதம் தந்தாங்க. ரொம்பப் பிடித்துவிட்டது. திரும்பவும் பண்ணு, எங்கள் ப்ளாக் தி.பதிவுக்கு எழுதறேன் என்று சொல்லி, அடுத்த சில நாட்களில் 2 பாக்கெட் வாங்கிவந்தேன். அதுதான் இன்றைய திங்கக்கிழமை பதிவு.

இதுதான் சென்னையில் இருந்து நான் எழுதி அனுப்பற முதல் செய்முறை.

எப்படிச் செய்வது..

அளவு 2 பாக்கெட் வல்லாரைக் கீரைக்கு. வதக்கின பின்பு, 1 டம்ளர் கீரை இருந்தது.

7-8 சிவப்பு மிளகாய், 2-3 துண்டு பெருங்காயம், 1/4 கப் உளுத்தம்பருப்பு, தேங்காய் சில்லுகள் கொஞ்சம், புளி, கடுகு 1 ஸ்பூன், தேவையான உப்பு.  கடுகு ஜாஸ்தியானா கசப்புச் சுவை வந்துடும்.

முதல்ல வாணலியில் சிறிது எண்ணெயில், மிளகாய், பெருங்காயம் போட்டு வறுத்துக்கொள்ளவும். அப்புறம், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுத்துக்கோங்க. இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். சூடான வாணலியில் (அடுப்பை அணைத்தபின்பு), புளியை ஒரு பிரட்டு பிரட்டிக்கொள்ளவும்.

தேங்காயை வறுக்கலை. பச்சையாத்தான் வச்சிருக்கேன். (எங்க ஊர்ல தேங்காயை கடைல துருவியே தந்துடுவான். 1 தேங்காய் துருவினது கிட்டத்தட்ட 45 ரூபாய். இந்த ஊர்ல பழமுதிர்ச்சோலைல, தேங்காயை எடை போட்டு வாங்கினேன். 1 தேங்காய் 45 ரூபாய் – கிலோ 75 ரூபாய். கட்டுப்படியாகுமா?. சென்னைல பொருட்கள் விலை எனக்கு ரொம்ப அதிகமாகத் தெரியுது. இங்க எல்லாரும் பணக்காரங்க போலிருக்கு)

கீரையைத் தண்ணீரில் அலம்பிச் சுத்தம் செய்துக்கோங்க. இப்போ, வல்லாரைக் கீரையின் கடினத் தண்டை (கடைசியில் சிவப்பு நிறத்தோடு இருக்கும்) எடுத்துவிட்டு, இலையோடு ஒட்டிய தண்டை சிறிது சிறிதாக கட் பண்ணிக்கோங்க. அப்போதான் மிக்சில அரைக்கும்போது சுலபமா அரைபடும்.

வாணலில கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு, சுட்டதும், வல்லாரை இலையைப் போட்டுப் பிரட்டிக்கோங்க.

மிக்சில, முதலில் மிளகாய்/பெருங்காயம்/உ.பருப்பு, தேங்காய் போன்றவற்றை கரகர வென்று அரைத்துக்கொண்டு, புளி சேர்த்து, அத்துடன் வதங்கின வல்லாரைக் கீரையையும் தேவையான உப்பு சேர்த்து அரைச்சுக்கோங்க.  வல்லாரைத் துவையல் ரெடி.







சுட சுட சாதத்தில், தேங்காய் எண்ணெய் விட்டுக்கொண்டு, துவையலைச் சேர்த்து சாப்பிட்டால் அட்டஹாசமா இருக்கும்.

பழமுதிர்ச்சோலை காய்கறி கடையில், தூதுவளைக் கீரையும் பார்த்தேன். உடனே பதிவர் (வெறும்ன எழுதினா கோபம் வந்துடப்போகுது. பழம் பெரும்-அப்படிச் சொல்லும்போதே வயதான என்ற அர்த்தம் வந்துடுதோ?, அனுபவமிக்க பதிவர்) கீதா சாம்பசிவம் மேடம் ஞாபகத்துக்கு வந்தார். அவர்தான் ஒவ்வொரு கீரையைப் பற்றி விளக்கமாக அவரது உணவுத் தளத்தில், http://geetha-sambasivam.blogspot.comஎழுதிக்கொண்டுவருகிறார். என் மனைவி, தூதுவளைக் கீரையையும் வல்லாரையைப் போல் துவையல் செய்யலாம், அதன் முள்ளை மட்டும் நான் எடுத்துத் தரணும் என்றாள். அதனால் நான் தூதுவளைக் கீரையை வாங்கலை.

பொதுவா எனக்கு துவையல் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள ரெய்த்தா இருந்தால் போதும். சாதம் ரொம்ப சூடா இருக்கணும்.  இதற்குத் தொட்டுக்கொள்ள அன்று செய்த பரங்கிக்காய் தயிர்ப் பச்சிடி செய்முறை விரைவில்.

அன்புடன்

நெல்லைத்தமிழன்

125 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்!
    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் கீதா/ கீதா மற்றும் மற்றும் மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  3. வரேன் இங்கு மறதிக்கு மருந்தெடுக்க...ஹா ஹா ஹா

    இன்னும் தம்பட்டம் வீட்டுல தலை வாழை விருந்தே முடியலை....பார்த்து பார்த்து பரிமாறனும் இல்லையோ...அதான் அங்கு ஸ்வாரஸ்யமா பரிமாறிக்கிட்டு வம்படிச்சுட்டு வரேன்...அப்புறம் கில்லர்ஜி, ராஜஸ்தான் செல்லங்கள் எல்லாம் பார்க்கணும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. துரை அண்ணா உங்களை தம்பட்டம் வீட்டுல பந்தில பார்க்கலையே...வாங்க வாங்க வந்து சாப்பிட்டுப் போங்க..அங்கு பார்த்து பார்த்து பரிமாறல் நடக்குது...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வல்லாரை...
    நினைவு சக்தியை வலுப்படுத்தும் கீரை..

    கிராமங்களில் இது சர்வ சாதாரணம்...

    எவ்வளவு பெரிய வரவு செலவையும் விரல் நுனிகளைக் கொண்டு முடித்து விடுவார்கள்...

    கால்குலேட்டர்களால் காய்ந்து போன மூளைகளுக்கு மிக அவசியம் தான்...

    மகிழ்ச்சி - நெ.த.,
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. தம்பட்டத்திலயா!..

    ஜொல்லவேயில்லை!....

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம் துரை எல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  9. // இன்னும் தம்பட்டம் வீட்டுல தலை வாழை விருந்தே முடியலை...//

    நான் சுடச்சுட முடித்து விட்டேன். இனி அவ்வப்போது வந்து ருசித்துக் கொண்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. /மகிழ்ச்சி - நெ.த.,
    வாழ்க நலம்..//

    ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் நெல்லைத்தமிழன்...

    "BANG..."

    இம்முறை இந்தியாவிலிருந்து சமையல் விருந்து படைக்கிறார்!

    பதிலளிநீக்கு
  11. ஆமாம் ஸ்ரீராம் நீங்க சுடச்சுட முடித்த பந்திக்கு நான் வரலை நீங்க கீதாக்கா நெல்லை ஏஞ்சல் எல்லாம் முடிச்சுட்டுப் போயிட்டீங்க போல நான் லேட்டு .....துரை அண்ணா வாங்க அங்க..நான் கொஞ்சம் அப்பால போயிட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. வல்லாரைக்கீரைத் துவையல் சென்னையில் இருந்தவரை வாசலில் கீரைக்காரி/காரர்கள் கொண்டு வருவார்கள். சாப்பிட்டிருக்கோம். அநேகமா தினம் ஒரு கீரை எனச் சாப்பிட்டிருக்கோம். இங்கே வந்து மார்க்கெட் போய்த் தான் வாங்க வேண்டி இருக்கு. அப்போ என்ன கீரை கிடைக்குமோ அதை வாங்க வேண்டி இருக்கு. அம்பத்தூர் வீட்டில் தூதுவளை, சிறியா ,பெரியா நங்கைச் செடிகள், சித்தரத்தை, பிரண்டை, துளசி போன்றவை இருந்தன. தூதுவளை ரசம் நினைத்தால் வைப்பேன்.

    பதிலளிநீக்கு
  13. @நெ.த. நீங்க ஸ்பென்ஸர், ரிலயன்ஸ், பழமுதிர்ச் சோலை போன்ற வணிக வளாகங்களில் காய்கள் வாங்கறீங்கனு நம்பறேன். உங்க வீட்டுப் பக்கம் காய்கறிக்கடை இல்லையா? அங்கே விலை கொஞ்சம் குறைச்சலாவே இருக்கும். 45 ரூபாய் ஒரு தேங்காய் எனில் நினைச்சே பார்க்க முடியாது போல! அம்பத்தூரில் நாங்கள் தேங்காய் பறிக்கையில் அக்கம்பக்கம் யாருக்கானும் தேங்காய் வேணும்னா 3 காய் 10 ரூபாய்க்கு மேல் கொடுக்க மாட்டாங்க! இப்போ ஏழு வருஷமாத் தேங்காய் வாங்கித் தான் சாப்பிடறோம். 10 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை அதிக பட்ச விலை.

    பதிலளிநீக்கு
  14. இலவச விளம்பரம் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்னி ஹை! :)))))








    பதிலளிநீக்கு
  15. // இப்போ ஏழு வருஷமாத் தேங்காய் வாங்கித் தான் சாப்பிடறோம். 10 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை அதிக பட்ச விலை. //

    கீதாக்கா.. இப்போது பதினைந்து அல்லது இருபது ரூபாய்க்கு தேங்காய் கிடைக்கிறது என்றாலும் கொஞ்ச நாட்கள் முன்பு 40 ரூபாய் வரை வெளிக்கடைகளிலேயே விற்பனை நடந்தது.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  17. வல்லாரை கீரை துவையல் செய்ததில்லை. முயற்சி செய்கிறேன். நன்றி. நெ.த. இப்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறீர்கள்,தவிர பெஸன்ட் நகர் வேறு. பழக கொஞ்ச நாள் ஆகும்.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இந்தியாவந்து இட்ட முதல் பதிவுக்கு
    வாழ்த்துகள் நெல்லைத் தமிழன்.
    இங்கே முருங்கைக் கீரை சக்கபோடூ போடுகிறது.

    வல்லாரைக் கீரை தேடணும். மிக அழகான படங்களுடன்
    நல்ல விளக்கம்.தேங்காய் விலை இவ்வளவா. இப்பொழுதுதான் மழை பெய்கிறதே
    விலை குறையுமாக இருக்கும்.
    இதே போல நவதிருப்பதிப் படங்களை எல்லாம் இங்கே
    பதிவிடலாமே.

    பதிலளிநீக்கு
  19. வல்லாரைக்கீரையை பச்சையாகவே பொடியாக நறுக்கி பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் , தேங்காய்ப்பூ, உப்பு, புளி சேர்த்து பிசைந்து சுடு சோற்றுடன் சாப்பிடுவோம். இங்கே இலங்கை, இந்தியப்பொருட்கள் விற்கும் கடைக்கு சென்றால் கீரைகள் கட்டாயம் வாங்கி வருவோம். அதில் வல்லாரைக்கு தனி இடம் உண்டு. கீரையை அவித்து புதினாக்கீரை சட்னி போல் சொல்லும் இந்த முறை எனக்கு புதிது. நாளை கடைக்கு செல்ல திட்டமிட்டிருப்பதனால் வல்லாரை கிடைத்தால் இந்த சட்னி செய்து சுவைக்க வேண்டியது தான்

    பதிலளிநீக்கு
  20. வாங்க வல்லிம்மா (மா) காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  21. நாங்கள் ஊரில் வாழ்ந்த நாட்களில் அதாவது 30 வருடம் முன்பு வெள்ளிக்கிழமை மதிய சாப்பாட்டில் கட்டாயம் தூதுவளைப்பச்சடி இருக்கும். சுடச்சுட சோறு போட்டு அதன் மேல் தூதுவளை பச்சடியை வைத்து வேறே எதையும் சேர்த்துக்காமல் பிசைந்து சாப்பிடுவோம். வெள்ளிக்கிழமை சமையல் சின்னவெங்காயம் வெந்தயக்குழம்பு, கீரைப்பச்சடி, பருப்புத்துவையல் என்பது தவறாது இடம் பெறும். அப்போதெல்லாம் அம்மம்மா, அம்மா தான் சமையல். விறகடுப்பில் சோற்றுக்கஞ்சி வடித்தபின் சோற்றுப்பானையின் மேல் வாழை இலை போட்டு தூதுவளைக்கீரையை சுத்தம் செய்து கழுவி உலை மூடி விடுவார்கள். நெருப்புத்தணலில் கிடைக்கும் பானை சோற்று சூட்டில் தான் கீரை வேகும். அதனுடன் தேங்காய், பச்சைமிளகாய், சின்ன வெங்காயம். உப்பு, எலுமிச்சம் புளி சேர்த்து அம்மியில் அரைத்து எடுப்போம். அமிர்தம் போலிருக்கும். இதே முறையில் முருங்கைக்கீரை துளிர், கறிவேப்பிலை துளிர் பச்சடி எல்லாம் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம். said...
    வாங்க நிஷா.. அபூர்வ வருகை.///////

    ஹாஹா ஏன்? அப்பப்ப வந்திட்டிருக்கேன் தானே? நீங்கல்லாம் மறந்தாலும் நன மறக்க மாட்டேனாக்கும். ஹாஹா.

    பதிலளிநீக்கு
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. நான் என திருத்தி வாசிங்கப்பா.

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    மாயவரத்தில் இருக்கும் போது ஒரு வயதானவர் தினம் கொண்டு வருவார் பல கீரைகள். அதில் வல்லாரையும் இடம் பெறும்.
    நான் அடிக்கடி, துவையல், வல்லாரை கூட்டு எல்லாம் செய்வேன். தேங்காய் இல்லாமலும் செய்யலாம்.
    தூதுவளையை முள் எடுத்து விட்டு சமைத்தால் நன்றாக இருக்கும் சளி பிடிக்காமல் இருக்கும் , பிடித்து இருந்தால் விலகிவிடும்.

    //பெண்ணுக்கு துவையல் சாதம் பிடிக்கும்//

    எனக்கும் அப்படித்தான். குழம்பு, ரசத்தைவிட துவையல் போட்டு வத்தல், வடகத்துடன் சாப்பிட பிடிக்கும்.

    //தேங்காயை எடை போட்டு வாங்கினேன்//

    இன்னும் இங்கு அப்படி வரவில்லை.

    படங்கள் , செய்முறை எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. வல்லாரைக்கீரை இலங்கை,இந்தியா,தாய்லாந்து என ஆசிய உணவுப்பொருட்கள் விற்கும் க்டைகளில் கிடைக்கும்.முருங்கை,அகத்தி பொன்னாங்கன்னி,வல்லாரைக்கீரைகளோடு முளைக்கீரையும் கிடைக்கின்றது. நாங்கள் மாதம் ஒரு தடவை அல்லது இரு தடவை தான் எங்கள் ஹோட்டலுக்கு பொருட்கள் வாங்க செல்வோம். அனேகமாக ஷாப்பிங்க என்பது நலல் பிசி நேரத்தில் என்பதனால் கீரை வாங்கி,அதை சுத்தப்படுத்தி சமைக்க நேரம் ஒத்துழைக்காது. வல்லாரை மட்டும் வாங்கி வந்தால் வேலைசெய்யும் யாரிடமேனும் கயுவி நறுக்க சொன்னால் சட்டென செய்து உடனே சாப்பிட வசதியாக இருக்கும். அப்படியும் போன வாரம் முருங்கை கீரை வாங்கி வந்து பொரியல் செய்தேன்.

    அடுத்த வாரம் பிறந்த நாள் பார்ட்டிக்கு 150 பேருக்கான மதிய உணவில் வல்லாரை சம்பல் கேட்டிருக்கின்றார்எங்கள் கஸ்டமர். இது எப்படி இருக்குது?

    பதிலளிநீக்கு
  27. எல்லோருக்கும் காலை வணக்கும்.

    இங்கே சூப்பர்மார்க்கெட்டுகளில் ஒரு தேங்காய் 130 இந்திய ரூபாய்கள் ஆகும். சில நேரம் நலல் தேங்காய் கிடைக்கும், பல நேரம் ஐந்தில் இரண்டு அழுகி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  28. எங்கள் வீட்டிலும் இதே போல் செய்வார்கள்...

    Reply comment button சேர்த்து விடலாமே...

    பதிலளிநீக்கு
  29. கீரையில் துவையல் செய்து இல்லை.... செஞ்சுபார்த்திடனும்....வல்லாரைக்கீரை சாப்பிட்ட ஞாபகசதி அதிகமாகும் என்றால் அதை சாப்பிடக்கூடாது...இல்லைன்னா பிறர் நம்மை வார்த்தைகளால் குத்தி இருந்தால் அது எப்போது ஞாபகத்திலே இருக்கும்... வல்லாரைக்ககீரை சாப்பிடலைன்ன எதுவும் ஞாபகத்தில் இருக்காது

    பதிலளிநீக்கு
  30. //சென்னையில் விலை அதிகம் இங்குள்ளவர்கள் பணக்காரர்கள் போலிருக்கு//

    பின்னே ஒரு மாதம் வேலை செய்துட்டு முப்பது கோடி ஊதியம் வாங்கும் கூத்தாடிகளும், மக்கள் உழைப்பை சுரண்டி ராஜபோகமாய் வாழும் எம்.எல்.ஏ.முதல், கவர்னர்வரை சென்னையில்தானே வாழுறாங்க...

    இந்த துவையல் வகைகள் எனக்கு பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
  31. புதினா துவையல் போல் இருக்கிறது...நல்ல குறிப்பு..

    பதிலளிநீக்கு
  32. திருச்சியில் விதம் விதமான கீரைகள் கிடைக்கும். அதில் ராஜாத்தி கீரை, சக்ரவர்த்தி கீரை போன்றவை அங்கு மட்டுமே கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  33. ஆஹா !! நம்மா வல்லாரையா இன்னிக்கு ..வீட்டில் ரெண்டு கட்டு இருக்கே ஒன்றில் துவையல் அதோட தாளிச்ச மோர்க்குழம்பு அப்பளம் ..
    இன்றைய noon மென்யு ரெடி :))))))))))))))

    பதிலளிநீக்கு
  34. @jk ஐயா ..

    //ராஜாத்தி //
    ராஜ்கிரா கீரையை சொல்றிங்களா ??

    பதிலளிநீக்கு
  35. ஏஞ்சல், பருப்புக்கீரையைச் சக்கரவர்த்திக்கீரை என்பார்கள். ஆனால் ராஜாத்திக் கீரைனா என்னனு தெரியலை! :( கேள்விப் பட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நந்தி கோவில் தெருவில், காந்தி மார்க்கட்டில் பார்த்திருக்கிறேன். லகொடி வகை, ஆனால் பசலை அல்ல. நான் பார்த்து சுமார் 35 வருடங்கள் இருக்கும்
      எனக்குத் தெரிந்த சில கீரை வகைகள்.
      தண்டுகீரை,முளைக்கீரை,அரைக்கீரை,சிறுகீரை,பாலக் பசலை,கோழிக்கீரை,கொடி பசலைக்கீரை,முருங்கைக்கீரை,அகத்திக்கீரை,வெந்தயக்கீரை,பருப்புக்கீரை (து பருப்பு விதைத்து),பொன்னாங்கண்ணி கீரை,மணத்தக்காளி கீரை,குப்பைக்கீரை,மற்றும் முள்ளங்கி, கேரட் இலைகள், பிரண்டை ஆகியன. வல்லாரை,தூதுவளை ஆகியவை முன்னரே குறிப்பிடப் பட்டுள்ளன.

      நம்ம வாணியம்பாடி அக்பர் கவுசர் புகழ் காசிணிக்கீரையை விட்டு விட்டேன். மாமாவுக்கு செய்து கொடுங்கள்.

      நீக்கு
    2. ஜேகே அண்ணா, நாங்க பொதுவா இங்கே அம்மாமண்டபம் போகும் வழியில் இருக்கும் காய்கறிக்காரர்களிடமோ அல்லது அங்கே உள்ள ஒரு மளிகைக்கடையிலோ எப்போதாவது கீரை வாங்குவோம். பெரும்பாலும் சாத்தாரத் தெருவில் தான்! அங்கே தான் கட்டு சிறியதாகவும் கிடைக்கும். பல விதக் கீரைகளும் கிடைக்கும். அவற்றில் ராஜாத்திக்கீரை கேள்விப் படலை. சொல்லி அனுப்பறேன். காசினிக்கீரை என நான் சொல்வதை இல்லை என வேறொரு நண்பர் சொல்கிறார். கேட்டுப் பார்க்கணும்.

      நீக்கு
  36. கீரை மற்றும் தேங்காய் விலையை கம்பேர் பண்ணினா தேங்காய் தான அநியாய விலையாகியிருக்கு
    பெரம்பூரில் ஒரு மார்க்கெட் அங்கேதான் அம்மா மாலை நேரங்களில் வாக்கிங் போறமாதிரி கீரை வாங்குவாங்க ,வில்லிவாக்கம் மார்கெட்லயும் கிடைக்கும் .95 இல் 2 ரூபாய்தான் கொடுத்த நினைவு .
    உங்க ஊரில் 45 ரூபாய் இப்போ தேங்காய் இங்கே லண்டனில் அல்டி யி ல் 40 பென்ஸ் செயின்ஸ்பரில 80p ..ஆகா மொத்தம் வெளிநாட்டது விலைதான் தேங்காய் அங்கேயும் ..(சமையல் பொருள் விலைலாம் எனக்கு தெரியும் என்பதை எலலாருக்கும் தெரிவிச்சுக்கறேன் :)))))))))))

    பதிலளிநீக்கு
  37. இந்த வல்லாரை ஜூஸ் குடிக்கும் பழக்கம் எனக்கு பேலியோ வீகன் க்ரூப்பில் இருந்தப்போ ஆரம்பிச்சது ..இப்போ அதுக்கு நானா அடிக்ட் தான் :) அதோட டீனேஜ் பிள்ளைங்களுக்கு பிம்பிள்ஸ் தொல்லை இருந்தா வாரம் இருமுறை கொடுங்க இந்த ஜூஸை .என் மகளுக்கு பயன்பட்டது ஆனா தினமும் குடிச்சதில் இருமல் வந்து ஸ்டாப் பண்ணினேன் அவளுக்கு ..
    எனக்கு முன்ஜென்ம நினைவெல்லாம் வர காரணம் இந்த வல்லாரையா :))

    பதிலளிநீக்கு
  38. வல்லாரை சாப்பிடாமலேயே எனக்கு ஏழு ஜன்மங்கள் நினைவிருப்பதாய் ரங்க்ஸ் சொல்லிட்டு இருக்கார் ஏஞ்சல்! :))))

    பதிலளிநீக்கு
  39. இங்கே ஹாலண்ட் பேரட்ஸ் ஆங்கில கடையில் இதை கொட்டுகொலானு காப்ஸ்யூலாக்கி விக்கிறாங்க :)

    இலங்கை தமிழர் கடையில் கீரை தவறாமல் கிடைக்கும் ..

    @கீதாக்கா ஒரு டவுட் இதை ப்ரம்மி லீவ்ஸ் என்றும் சொல்றாங்களா ??

    பதிலளிநீக்கு
  40. @ நெல்லைத்தமிழன் இதே போல் நிறைய பதிவுகள் சென்னையிலிருந்து வரவேற்கிறோம் :)

    பதிலளிநீக்கு
  41. நிஷா சொன்னமாதிரிதான் ஒரு இலங்கை தமிழர் எனக்கு வல்லாரை செய்ய சொல்லித்தந்தாங்க ஆனா அது எனக்கு கொஞ்சம் டைஜஸ்டிவ் பிரச்சினை ஐ தந்தது ஆனா ஜூசா அரைச்சப்போ ஒரு problem um வரலை அதான் நான் ஸ்மூத்தியாக்கி குடிப்பேன் கூடவே கொஞ்சம் நெல்லிக்காயும் சேர்ப்பேன்

    பதிலளிநீக்கு
  42. நெல்லைத்தமிழன் மாம்பலம் பெரம்பூர் புரசைவாக்கம் வில்லிவாக்கம் இங்கே இன்னும் மார்க்கெட்டில் இந்த கீரை கிடைக்குமான்னு பாருங்க .
    திருவள்ளூர் அரக்கோணம் பக்கமிருந்து காலையில் கூடையில் தூக்கிட்டு வருவாங்க ..

    பதிலளிநீக்கு
  43. அங்கெல்லாம் மார்கெட்ஸ் இன்னும் இருக்கா ?? கோணி விரித்து நீர் தெளித்த தள்ளுவண்டி இல்லைனா தரையில் கோணி விரித்த மார்க்கெட் பற்றி சொல்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே சாத்தாரத் தெரு, தெற்கு கோபுர வாயில், காந்தி மார்க்கெட் பக்கம் சில பகுதிகளில் உண்டு. நாங்க இந்த வருஷத்து மாவடு அப்படி ஒரு வியாபாரப் பெண்மணியிடம் தான் ஆண்டார் தெருவில் வாங்கினோம். உண்மையில் அவங்களிடம் தான் கிராமத்துத் தோட்டத்துக் காய்கள், கீரைகள், மாங்காய் போன்றவை வரும்.

      நீக்கு
    2. தள்ளுவண்டிகள் தெருக்களில் வரும். நாங்க நாலாவது மாடி என்பதாலும் உள்ளே தள்ளி இருப்பதாலும் குரல்கள் மட்டுமே கேட்கும். போய் வாங்க முடியாது. பாதுகாவலர்களால் அனுமதிக்கப்பட்ட காய்க்காரர்கள் மட்டுமே உள்ளே வருவாங்க. அதுவும் கீழே இருந்து கொண்டு பாதுகாவலர் மூலம் தொலைபேசியில் செய்தி வரும். நாங்க போய்த் தேவைன்னா வாங்கிக்கலாம். மேலே எல்லாம் வர முடியாது!

      நீக்கு
  44. @ கீதாக்கா

    //
    Geetha Sambasivam said...
    ஏஞ்சல், பருப்புக்கீரையைச் சக்கரவர்த்திக்கீரை //





    உங்ககிட்ட சொல்லணும் இங்கே பருப்பு கீரை வாங்கி நீங்க சொன்ன மாதிரி சமைச்சாச்சு ..

    படமும் எடுத்தேன் விரைவில் வரும்

    பதிலளிநீக்கு
  45. வல்லாரையைத் தான் எனக்குத் தெரிந்து பிரம்மி இலைகள் னு சொல்வாங்க! :)

    பதிலளிநீக்கு
  46. //Geetha Sambasivam said...
    வல்லாரை சாப்பிடாமலேயே எனக்கு ஏழு ஜன்மங்கள் நினைவிருப்பதாய் ரங்க்ஸ் சொல்லிட்டு இருக்கார் ஏஞ்சல்! :))))//

    ஹாஹ்ஹா :)))))))))))))))
    அதான் யோசிப்பேன் லெபில்ஸ் இல்லாமலேயே நீங்க பழைய பதிவு லிங்க்கை சட்டுனு தருவீங்க எல்லா பக்கமும் .உங்களுக்கு நினைவு சக்தி அதிகம்தான் :))

    பதிலளிநீக்கு
  47. ஏஞ்சல், ராமாயணம் எழுதறச்சே ஒரு சில நண்பர்கள் வற்புறுத்தலில் லேபல்கள் போட்டேன். அப்புறமா என்னமோ பிடிக்கிறதில்லை. அதான் போடுவதே இல்லை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் லேபிள் போட்டதெ இல்லை :( அதான் இப்போ எது எஙெனு தேடி எடுக்க முடில

      நீக்கு
  48. மீ டூ சேம் மெத்தட். கிடைக்கும் போதெல்லாம் வாங்கிச் செய்வதுண்டு. சூப்பர் துவையல் நெல்லை!!! எனக்கும் துவையல் சாதம் என்றால் பிடிக்கும்...

    நெல்லை பழமுதிர்ச்சோலைனு போய் வாங்கறீங்க?!!...நான் அது போன்ற கடைகள் பக்கம் செல்வதில்லை. தேங்காய் எங்கள் ஏரியாவில் 25 ரூ. நல்ல பெரிய தேங்காய் அடர்த்தியாக இருக்கும். இது அண்ணாச்சி கடையில். நான் பொதுவாக அண்ணாச்சி கடையில்தான் பொருட்கள் வாங்குவது. டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் பக்கம் செல்வதில்லை.

    நீங்கள் இருக்கும் பகுதியில் ஜஸ்ட் ஆப்போசிட் வரிசையில் அதாவது அடையார் சிக்னலில் இருந்து அம்பிகா ஸிக்னல் வரும் முன் அந்த வரிசையில் வரும் லாஸ்ட் முடுக்கு அதில் நடேசன் ஸ்டோர் இருக்கிறது....அங்கு பொருட்கள் கொஞ்சம் விலை குறைவு. நன்றாகவும் இருக்கும். அங்கு முன்பு வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது கொத்தமல்லி விரை சாயம் கலந்த விரை தான் விற்றார்கள். பொதுவாகவே பல கடைகளில் பாம்பே தனியா என்று காட்டுவதற்கு பச்சையாகத் தெரியணும் என்று கலர் கலந்து மூட்டை மூட்டையாக வைத்திருப்பதை பாரீஸ் கார்னரிலேயே பார்த்தேன். நடேசன் கடையில் வாங்கியதை அதை வீடு வந்ததும் தான் தெரிந்தது உடனே அதனை ஒரு பாட்டிலில் கொஞ்சம் தனியா போட்டு தண்ணீர் விட்டு வைத்துவிட்டேன் கொஞ்ச நேரத்தில் சாயம் இறங்கியது அப்படியே பாட்டிலை வாங்கிய பாக்கெட்டை எடுத்துக் கொண்டு கடையில் கொண்டு காட்டி இனி இது போல் உள்ள தனியாவை வாங்காதீங்கனு சொல்லி விளக்கினேன். அவர் இப்படித்தான் வருது நாங்க கலக்கலை என்றார். நான் கல்க்காததை கொள்முதல் செய்யலாமே தரம் பார்த்து என்று சொல்லி கொடுத்து காசும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். அதிலிருந்து ரொம்பவே கவனமாகத்தான் வாங்குவது. அதன் பின் அவர்கள் கடையில் சொல்லி சொல்லி இப்போது நல்ல தனியா விற்கிறார்கள்.

    ஆனால் இப்போது நான் அங்கு வாங்குவதில்லை. வீட்டுப் பக்கத்திலேயே ஒரு ஹோல்சேல் ரேட் கடை இருக்கு. அங்குதான் வாங்குகிறேன்...ப்ராண்டட் கூட எம் ஆர் பி குறைத்து...

    கீதா

    பதிலளிநீக்கு
  49. ஆவ்வ்வ்வ்வ்வ் என்னாதூஊஊஊஊ வல்லாரைச் சம்பலுக்கு இவ்ளோ பில்டப்பாஆஆஆஆஆஆ.. மீ பெயிண்ட்டாகிறேஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் எனக்கு ஆராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. குளிர்நீர் வாணாம் மீக்கு தடிமன் வந்திடும்....

    பதிலளிநீக்கு

  50. @ நெ.த., கீதா: வல்லாரை துவையல் சாப்பிட்டதில்லை. சாப்பிட்டால் நன்றாக இருக்கும்போல் இருக்கிறது.
    பாம்பே தனியா ! பச்சை நிறத்திலேயே வருகிறதா ஆபத்து?

    பதிலளிநீக்கு
  51. நான் நேற்று முழுக்க நினைச்சுக் கொண்டிருந்தேன் .. கடவுளே இன்று தெரிந்தோரின் குறிப்பு வந்திடக்குடா என.. பிக்கோஸ் நேரமே இல்லை.. ஆனாலும் பாருங்கோ.. ரொம்ப ரொம்ப நல்லவிங்களை[என்னைச் சொன்னேன்:)] கடவுள் எப்பவும் சோதிப்பாராமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .. ஊஞ்சல் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை கட்:))..

    நெ.தமிழன் அதிகம் அலட்ட முடியல்ல, ஏலுமெண்டால் ஈவிங் தான் வருவேன்.. சூப்பரா இருக்கு துவையல், இதில் துவையல் என்பதை விட கொஞ்சம் தண்ணி விட்டு, குட்டி மிக்சிக் கப்பில் போட்டு நல்ல பசுந்தா அரைச்செடுங்கோ.

    இன்னொன்று, இப்படியான வல்லாரை, தூதுவளை, புதினா, கொத்தமல்லி சம்பலுக்கெல்லாம் பழப்புளி சேர்க்காதீங்க.. அது சுவைதான் ஆனா அதிலிருக்கும் மருத்துவக் குணத்தை முறிச்சிடுமாம், எனவே நாங்க அரைத்த பின் எப்பவும் தேசிக்காய்தான் சேர்ப்போம்ம்..

    நினைவிருக்கோ இங்கு நான் என் வல்லாரை சம்பல் ரெசிப்பி போட்டிருக்கிறேனே இடைவேளையில்[வேறு ஒரு சமையல் குறிப்பின்]...

    பதிலளிநீக்கு
  52. மேலே நிஷா சொன்னதுபோல, இலங்கையில் நாங்க இதை பச்சையாகவேதான் அதிகம் செய்வோம்.. சம்பலுக்குகூட வதக்குவதில்லை.

    பச்சையாக கழுவிப்போட்டு, அப்படியே காம்புடன் நல்ல குட்டிக் குட்டியாக அரிந்து சின்ன வெங்காயம், கிரீன் மிளகாய்:) உப்பு தேங்காய்ப்பூ தேசிக்காய் போட்டு பிரட்ட்டி விட்டால் டூப்பரோ டூப்பர்ர்..

    ஆனா அப்படி வெட்டி எடுக்க, அதிராவைப்போல ரொம்ப பொறுமை தேவை:)).[கிடைக்கும் இடத்திலெல்லாம் நம் பெருமையைப் பேசிடோணும்].

    இன்னொன்று இந்த இலைவகைச் சமையலில் அண்ட் விதம் விதமான இலைகளில் இலங்கையர்களை ஆரும் அடிக்க முடியாதூஊஊஊஊஊ...

    வல்லாரை, தூதுவளை, பொன்னாங்கண்ணி, லெச்சகட்டை, முசுமுசுக்கை, காணாந்தி, முள்முருக்கம் இலை, முல்லை இலை.. இன்னும் இருக்கு இமா றீச்சர் இப்போ இருந்தா இன்னும் சொல்லியிருப்பா.. இப்படி இலைவகையெல்லாம் அங்கு பேமஸ்ஸ்ஸ்ஸ்:)).

    சரி சரி ரைமாகுது பின்னுட்டங்கள்கூட படிக்க ரைம் இல்லை.. பாய் பாய்... ஹையோ இது வேற பாய்..

    அதுசரி இந்த சமையலில் கிறடிட் நெ.தமிழனுக்கா? அண்ணிக்கோ?:)... பூதம் கிணறு வெட்ட அணில் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டு ரோட்டு ரோட்டா ஓடி ஓடிச் சொன்னதாமே நாந்தேன் கிணறு வெட்டினேன் என ஹா ஹா ஹா .. மீ ஒண்ணும் சொல்லல்ல ஜாமீஈஈஈஈஈஈஈ மீ ரொம்ப நல்ல பொண்ணு.. ஓகே பாய்:)!!!.

    பதிலளிநீக்கு
  53. காரஸாரமான துவையல். சமையலே தேங்காயெண்ணெயில்தானா? பொதுவாக புளி வைத்து அரைக்கும் துவையல்களே சாப்பிட ருசிதான். வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, வதக்காமல் இம்மாதிரித் துவையல் அரைப்பார், வெங்கடாத்ரிமாமி. இந்த இருவாக்ஷி இலையை வதக்கி பித்தத்திற்கு நல்லது என்று எங்களம்மா துவையல் செய்வார். மெத்தட் எல்லாம் ஒரேமாதிரிதான். இப்போது பாருங்கள் கொய்யா இலைத் துளிரில் துவையல் அருமையாகச் செய்கிரார்கள்.பாரம்பரியமான வல்லாரைத் துவையல், அட்டஹாஸமாக இருக்கிறது. கீரைக்கு டிமாண்ட் வராமல் இருக்கணும். ஸ்டார் சமையல் குறிப்பு. மும்பையில் கீரை கிடைக்குமா? விசாரிக்கணும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  54. வல்லரைக் கீரை கேட்டது மட்டும்தான் உண்டு அடையாளம்கூடத்தெரியாது மேலு இங்கு அதன் பெயரென்ன தெரியாது

    பதிலளிநீக்கு
  55. நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம், வெளியிட்டமைக்கு.

    இப்போல்லாம் மனைவி செய்வதை படம் எடுத்து இடுகைக்கு அனுப்புவதுதான் என் வேலை. அவங்கள்ட சொல்லியிருக்கேன், எ.பிளாக்ல வெளிவராததைச் செய்தால், நான் படமெடுத்துக்கொள்கிறேன் என்று.

    பதிலளிநீக்கு
  56. துரை செல்வராஜு சார்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    நான் கிராமங்களில் இருந்தபோது இந்தக் கீரையைச் சாப்பிட்டதில்லை. மனைவி வாங்கியபோதும், எனக்கு 'வல்லாரை ஜூஸ்'தான் ஞாபகம் வந்தது. ஆனாலும் ஒரு தடவை சாப்பிட்டபோது மிகவும் நன்றாக இருந்தது.

    நீங்க கால்குலேட்டரைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க. நான், கால், அரைக்கால் வாய்ப்பாடுகள்லாம் படித்தவன். காலைல (1ம் வகுப்பு) ஸ்கூலுக்குப் போனால் (அதாவது ப்ரேயர் பெல்லுக்கு முன்பு), எல்லோரும் உட்கார்ந்து, 'ஓரொண் ஒண்ணு, ஈரொண் ரெண்டு' என்று வாய்ப்பாடு முழுவதும் சொல்வோம். இப்போல்லாம் பசங்க, கால்குலேட்டரைத் தேடுறாங்க. எங்க அப்பா, என்னைச் சோதிக்க, முக்கால், கால் வாய்ப்பாடுகளைச் சொல்லச் சொல்வார். (இல்லைனா, பக்கத்துல உட்கார்ந்திருந்தால் துடையில் கிள்ளு, நின்றுகொண்டிருந்தால் அடி.. ஹா ஹா)

    பதிலளிநீக்கு
  57. துரை செல்வராஜு சார்... உங்கள் கருத்து வேறு ஒன்றுக்கு என்னை இட்டுச் செல்கிறது.

    நான் சில ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய பள்ளி துணை தலைமை ஆசிரியர் (மற்றும் எங்கள் ஹாஸ்டல் வார்டன்) ஃபாதரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவரிடம், இப்போவும் அதே கண்டிப்புடன் இருக்கீங்களா என்று கேட்டேன். அதுக்கு அவர், இப்போல்லாம் கண்டிப்பைக் காண்பிக்கவே முடியறதில்லை, எங்கே தற்கொலை பண்ணிப்பாங்களோ என்று பயப்படவேண்டியிருக்கி. சிலர், இந்த சிஸ்டருக்கும் இந்த ஃபாதருக்கும் தொடர்பு என்று எழுதிடறாங்க. இதுக்கெல்லாம் பயப்படவேண்டியிருக்கு என்றார்.

    கண்டிப்பான படிப்பு, மாணவர்களுக்கு ஒழுக்கத்தை வளர்த்தது அப்போ என்றுதான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  58. தில்லையகத்து கீதா.... தலைவாழை இலை என்றவுடன் எல்லோருக்கும் ஆசைதான். 'தம்பட்டத்தில்' நிறைய பின்னூட்டங்கள், உணவு ரசிகர்களிடமிருந்து...

    பதிலளிநீக்கு
  59. கீதா சாம்பசிவம் மேடம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    நீங்க எழுதியிருக்கறதுல பாதி கீரை நான் சாப்பிட்டதில்லை. பார்த்ததும் இல்லை (சித்தரத்தை, சிறிய/பெரிய நங்கைச் செடிகள்). எங்க கற்பூர வல்லியை விட்டுட்டீங்க....

    பதிலளிநீக்கு
  60. கற்பூரவல்லி நாங்க வைச்சுப் பார்த்தும் வரலை!:( மஞ்சள், சித்தரத்தை செழிப்பாகவந்திருந்தது. நாரத்தை, மா, காய்த்துக் கொண்டிருந்தது. வாழை அடிக்கடி தார்போடும்! இலாக்கி எனும் ரகம்! இப்போ எதுவும் இல்லை. :( கீரை எல்லாம் வாசலில் கீரைக்காரியிடம் நாளைக்கு இந்தக் கீரை வேணும்னு சொன்னால் கொண்டு வருவா! அப்படி வாங்கிச் சாப்பிட்டது தான். எங்க தோட்டத்தில் நிழல் தட்டியதால் செடிகள் போட முடியாது!

    பதிலளிநீக்கு
  61. கீசா மேடம் - வந்த அன்று, பக்கத்தில் வயதானவர் தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்தார். அவர்கிட்ட வாங்கினேன் (வாங்கும்போதே, இந்தியாவிலும் காய்கறி விலை குறைவு மாதிரி தெரியலையே என்று நினைத்தேன்). அப்புறம் தெரு கடைசியில் இருக்கும் பழமுதிர்ச்சோலையில் வாங்க ஆரம்பித்தேன்.

    அங்க ஒரு நாளைக்கு தேங்காய் வாங்கினேன் (கிலோ 65-70?) அப்படி வாங்கி, ஒரு தேங்காய் 45 ரூபாய் என்று வந்துவிட்டது. அப்புறம் மனைவி சொல்லி சில கடைகளில் ஒரு தேங்காய் 25 என்று வாங்கக் கற்றுக்கொண்டேன்.

    இப்போ சென்ற வாரம் நவ திருப்பதி சென்றிருந்தபோது, ஸ்ரீவைகுண்டம் அருகில், ஒரு கடையில் பழங்கள் வாங்கும்போது, தேங்காய் என்ன விலை என்றேன். அவர், கிலோ 40 ரூபாய் என்றார். 'என்ன.. தேங்காயை கிலோவிலா விற்கிறீர்கள்' என்றேன். அதற்கு அவர், பல வருஷங்களாக தேங்காய் கிலோவில்தான் விற்கிறோம் என்று ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து நான் வந்திருப்பதுபோல் பார்த்தார்.

    ஆனால், நம்ம ராசி, நம்ம வீட்டுத் தென்னை மரத்திலிருந்து தேங்காய் கிடைத்தால், அதை விலைக்கு வாங்கிக்க ஆள் இருக்காது. எங்க வீட்டில் (பெருங்களத்தூரில்) அட்டஹாசமான பங்கனப் பள்ளி மாமரம் இருந்தது. அதில் நிறையக் காய்க்கும். வேஸ்ட் ஆகுதே என்று எங்க அப்பா, காயைப் பறிச்சுக்க ஆட்களைத் தேடி, கடைசியில் 50 ரூபாய்க்கு முழு மரக் காய்களையும் பறிச்சுக்கக் கொடுத்தார் (15 வருஷம் முன்பு. இப்போ மரம் இருந்திருந்தால் 100-150 ரூபாய் தருவானாயிருக்கும்).

    பதிலளிநீக்கு
  62. கீசா மேடம் - பூக்கடைக்கு விளம்பரமா? உங்கள் 'உணவு'த் தளத்தில் நிறைய குறிப்புகள் எழுதியிருக்கீங்க. நீங்க மட்டும் படங்களுடன் வெளியிட்டிருந்தால், உங்களை மிஞ்ச ஆள் கிடையாது (உணவு செய்முறைக் குறிப்பில்). இரண்டு வருடங்களுக்கு முன்பு, உங்கள் ஒவ்வொரு குறிப்பையும் செய்துபார்த்து, படங்களுடன் எ.பிக்கு அனுப்பலாமா என்று நினைத்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @நெ.த., படங்கள் இல்லாததுக்குக் காரணம் நான் குறிப்பிட்ட கீரை பத்தி எழுதுகையில் அன்று வேறே ஏதேனும் சமைத்திருப்பேன். அதோடு பொதுவாகவே கீரை சமையல் ஒன்றைப் போல் ஒன்று தான் இருக்கும். மேலும் சில கீரை வகைகள் சென்னையில் மட்டுமே கிடைத்தன. இங்கே கிடைப்பதில்லை. அதனாலும் கீரையின் படங்களை மட்டும் கூகிளார் தயவில் பகிர்கிறேன்.

      நீக்கு
  63. பானுமதி வெங்கடேச்வரன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கொஞ்சம் கர கரவென அரைத்தால் ரொம்ப நல்லா இருக்கும். செய்து பாருங்க.

    பதிலளிநீக்கு
  64. வல்லாரையில் துவையல் சாப்பிட்டதில்லை.. செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  65. வாங்க வாங்க வல்லிம்மா. பின்னூட்டத்துக்கு நன்றி.

    பஹ்ரைனில் இருக்கும்போது, முருங்கைக் கீரை நிறையக் கிடைக்கும். ஆனாலும், மனைவியிடம் பெர்மிஷன் வாங்காததினால் செய்துபார்த்ததில்லை. ரொம்ப வேண்டிக் கேட்டுக்கொண்டு, முருங்கை சாம்பார் வைத்துப் பார்க்கிறேன் என்று சொன்னேன். போனால் போகிறது என்று அனுமதித்தார். ஆனால் செய்துபார்க்கும் சந்தர்ப்பமே வரவில்லை. இப்போதுமே, டிரெடிஷனல் இல்லாத செய்முறைய அவர் அனுமதிக்கமாட்டார் (அதாவது, சேனைக் கறியில் வெங்காயம் போட்டு ஒரு செய்முறை பார்த்தேன், செய்யவா என்று கேட்டால், கூடாது, பசங்களுக்கு புது டேஸ்ட் கொண்டுவரக் கூடாது என்று சொல்லிடுவாள்)

    பதிலளிநீக்கு
  66. வருக நிஷா. ரொம்ப நாள் கழித்து உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கிறேன். ஹோட்டல் பிஸினெஸ் உங்கள் முழு நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது என்று நினைக்கிறேன்.

    புதினாக்கீரையை நன்கு அரைப்போம். வல்லாரையை அப்படி அரைக்கவேண்டாம். ரொம்ப வேகவைக்கலை. வெறும் சூட்டில் பிரட்டினதுதான்.

    தூதுவளைப் பச்சடியா? அந்த சிறு முட்களைப் பார்த்து, வாங்கும் ஆசையே போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  67. வாங்க கோமதி அரசு மேடம்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    நெல்லை பகுதிகளில் தேங்காயை எடைபோட்டு விற்பதைப் பார்த்தேன். போகிற போக்கில் இளனியையும் எடைபோடுவார்கள் போல் தெரிகிறது. (இங்கெல்லாம் இளனி 40-50 ரூபாய் சர்வ சாதாரணம்)

    பதிலளிநீக்கு
  68. @நிஷா - //சூப்பர் மார்க்கெட்டில் 130 ரூ தேங்காய்// - கல்ஃப் தேசங்களில் இவ்வளவு விலை இல்லை. ஒரு தேங்காய் 34 ரூபாய்தான் (எப்போதும்). திருவித் தந்தால், 40 ரூபாய்கள். பல சமயங்களில் 34 ரூபாய்க்கே திருவியும் தருவார்கள். அங்க பெரும்பாலும் தேங்காய் ஸ்ரீலங்கா இல்லை கேரளாவில் இருந்து வரும்.

    பதிலளிநீக்கு
  69. திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    இங்கு, 'பதிலளி' பட்டன் இருந்தால் மறுமொழி தருவது சுலபமாக இருக்கும். அதோடு மறுமொழி தொடர் கண்ணிபோல் படிக்க எளிதாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yes... Done...! நாளைக்கு அனைவருக்கும் வாசிக்க எளிதாக இருக்கும்...

      நீக்கு
  70. வாங்க மதுரைத் தமிழன் துரை. வல்லாரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் (என்று சொல்றாங்க). பிறர் நமக்குச் செய்யும் உதவிகளை ஞாபகம் வைத்துக்கொள்வதற்காவது நமக்கு ஞாபக சக்தி இருக்கணுமே. அதுக்காவது உடனே செஞ்சுடுங்க...

    பதிலளிநீக்கு
  71. வருகைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் சார்.

    பதிலளிநீக்கு
  72. செஞ்சி சாப்பிட்டாச்சி நெல்லைத்தமிழன் .மகள் சாப்பிடும்போதே தம்ஸ் அப் காட்டினா :) இந்த துவையல் தாலிச்ச மோர்குழம்புக்கு நல்ல காம்போ .

    கடுகு சேர்க்கலை அதேபோல உளுந்து அளவும் கொஞ்சம் குறைச்சே சேர்த்தேன் ..
    இந்த வல்லாரை கட்டு சிறிதா இருந்தா இலை இளசு முற்றவில்லை ..கொஞ்சம் பெரிசா ஆச்சுன்னா நிறைய நார் வருது அரைக்கும்போது .இன்னிக்கு நான் செஞ்சது கொஞ்சம் முற்றின லீவ்ஸ் ஆனாலும் சுவை அருமை .படத்தை விரைவில் ரசித்த சுவைத்த குறிப்புகளில் வெளியிடறேன் :) பை பை :) வெளியே போகிறேன் மகளுடன் .

    பதிலளிநீக்கு
  73. தாளித்த //என்று வாசிக்கவும் அவசரத்தில் டைப்பிங் :)

    பதிலளிநீக்கு
  74. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கில்லர்ஜி.

    சென்னையில் (மட்டும்தான்), பெரும் பணக்காரர்களும், மிகுந்த ஏழைகளும், நிறைய மத்தியதரத்தினரும் இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமே, இங்குதான் 'அம்மா உணவகங்கள்' ஏராளமாக ஜெ.வினால் ஆரம்பிக்கப்பட்டது என்று.

    பதிலளிநீக்கு
  75. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா பிரேம்குமார். எனக்குப் பிடிக்காத 'புதினா துவையலை' ஞாபகப்படுத்திட்டீங்களே.

    பதிலளிநீக்கு
  76. வருகைக்கு நன்றி ஜேகே. ராஜாத்தி, சக்ரவர்த்தி கீரை - கேள்விப்பட்டதில்லையே.

    ஆமாம் தொட்டிப்பாலத்துக்கு அப்புறம் வேறு எதுவும் நீங்க எழுதலையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா என்னை ஞாபகம் வைத்து இருப்பதற்கு நன்றி.

      வயதாகும் (69) போது சோம்பேரித்தனம் வந்து விட்டது. மேலும் எனது கணிணியும் (2000 windows 98), மடிக்கணினியும் (2010 lenovo T410 ,Linux) ஒன்றன் பின் ஒன்றாக உயிரை விட்டன. தற்போது இணையத்தில் நுழைவது செல்போன் வழி மாத்திரமே.

      நீக்கு
  77. ஏஞ்சலின் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இன்றைக்கே செய்துபார்த்துட்டீங்களே. ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு
  78. தில்லையகத்து கீதா ரங்கன் - வாங்க. எவ்வளவு நேரம் கழித்து உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கிறேன்.

    நானும் துவையல் ரசிகன். செய்வது சுலபம். தொட்டுக்க சிம்பிளா ஒரு ரெய்த்தா போதும்.

    சொன்னா ஆச்சர்யமா இருக்கும். எனக்கு இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாது. கண்டிப்பா அந்த வண்டில ஏறவும் மாட்டேன். ஒருவேளை எதிர்காலத்தில் ஓட்டக்கற்றுக்கொண்டாலும் இன்னொருவரை ஏற்றிக்கொள்ளமாட்டேன். இனித்தான் டிரைவிங் லைசன்ஸ் (காருக்கு) வாங்கணும். அது எல்லாம் கொஞ்சம் ஸ்லோ ப்ராஜக்டா வச்சிருக்கேன்.

    டூ வீலர் இல்லாததுனால, ஒரு இடத்துக்குப் போய் வாங்கி வருவது சிரமம். பக்கத்துல பழமுதிர்ச்சோலை என்பதால் அங்கு வாங்கறேன். இல்லைனா 'வாங்க வாங்க'வில்தான் வாங்கணும். நடேசன் கடை எங்க இருக்குன்னு பார்க்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///எனக்கு இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாது. கண்டிப்பா அந்த வண்டில ஏறவும் மாட்டேன்.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் சைக்கிள், ஸ்கூட்டர் எல்லாம் நன்கு ஓட்டுவேனே:).. முதன் முதலில் நான் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு ரோட்டில் ஏறியபோது, ஒரு வயதானவர் சைக்கிளில் வந்தவர், படாரென சைக்கிளால் குதிச்சு மதில் ஓரமாக நின்றார் ஒதுங்கி:).. கர்ர்ர்ர்ர்ர் என்னை இன்சல்ட் பண்ணுவதுபோல:)) ஹா ஹா ஹா, பின்பு எங்கட மாமா நான் ஓடுவதை கேட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர், அப்போ மாமாவிடம் அந்த வயதானவர் சொன்னாராம், சைக்கிளை விட்டுவிட்டு இப்போ ஸ்கூட்டர் ஓட வெளிக்கிட்டிட்டினம், இனி நாங்கள் எல்லாம் நடந்து போவதுதான் நல்லதென ஹா ஹா ஹா:))..

      //'வாங்க வாங்க'வில்தான் //

      ஹா ஹா ஹா தள்ளு வண்டிலோ:))

      நீக்கு
  79. கீதா ரங்கன் - தனியால பச்சைக் கலர் சேர்க்கறாங்களா? என்ன அநியாயம். இப்படித்தான் நம்ம ஊர் மிளகாய்ப் பொடில சிவப்பு சாயம் இருக்குன்னு யூகேல சில வருஷங்களுக்கு முன்பு தடை போட்டார்கள்.

    பொதுவா தாம்பரம் மார்க்கெட்ல விலை ரொம்ப கம்மி என்று தோன்றுகிறது. ஆனால் தாம்பரம் செல்வது மிக மிக அபூர்வம். (நீங்கதான் அப்போ அப்போ தாம்பரத்துல வாங்கினேன் என்று சொல்றீங்க)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  80. வல்லாரை, தூதுவளை, பொன்னாங்கண்ணி, லெச்சகட்டை, முசுமுசுக்கை, காணாந்தி, முள்முருக்கம் இலை, முல்லை இலை.//

    யெஸ் அதிரா நீங்க சொல்லிருபது போல் பொரியலும் செய்வதுண்டு செம டேஸ்டியா இருக்கும்...இதில் //லெச்சகட்டை, முசுமுசுக்கை, காணாந்தி, முள்முருக்கம் இலை, முல்லை இலை// இவை எல்லாம் பாண்டிச்சேரியில் இருந்தப்ப கீரைப்பாட்டி கொண்டுவந்து தருவார் அவர் தோட்டத்தில் என்று சொல்லி. சில கீரைகளை ஆய்ந்தும் கொண்டு தருவார். பச் பச்சென்று இருக்கும்.

    சென்னையில் மற்ற மூன்றும் கிடைக்கிறது.

    மெத்தட் இதேதான் என்றாலும் கடுகு அரைப்பதற்குச் சேர்ப்பதில்லை. அதே போல உ ப கொஞ்சம் குறைவாகச் சேர்ப்பேன். நீங்களும் கீரையை அதிகம் வதக்கவில்லை...பச்சையாகவே இருக்கிறது...

    படங்கள் எல்லாம் சூப்பர்...அருமையா இருக்கு. நாளை எங்கள் வீட்டு பால்கனியில் வளர்ந்த பிரண்டைத் துவையல்!! ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ பிரண்டையை மறந்திட்டேன் கீத்ஸ், ஆனா நான் இன்னும் அதை சாப்பிட்டுப் பார்க்கவில்லை.. இன்னொன்றையும் மறந்திட்டேன்.. குறிஞ்சா இலை.. அது இங்கு தமிழ்க் கடைகளில் கிடைக்கும்.

      நீக்கு
  81. அதிரா.. வாங்க வாங்க.... வரும்போதே அதிரடி கருத்துக்களோட வர்றீங்க.
    //வல்லாரைச் சம்பலுக்கு இவ்ளோ பில்டப்பாஆஆஆஆஆஆ// - நீங்கதானே சொல்லிக்கொடுத்திருக்கீங்க. நம்ம பொருளை நாமதானே டமாரம் அடிக்கணும்னு. நீங்க சொல்றது எதையும் கேட்கலைனாலும் இதைக் கேட்காமல் இருக்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா மீ ஸ்பீச்லெஸ்:)) இப்பூடி அடைச்சிட்டீங்களே என் வாயை:))

      நீக்கு
  82. ஏகாந்தன் சார்.... உங்க கருத்துக்கு நன்றி. ஆனால் உங்க கருத்தை எழுதாமல், கமலஹாசன் பாணியில் எழுத முயற்சிக்கிறீங்களே.. அது ஏன்? (அவர்தான், 'கடவுள் இல்லை. இருந்தால் நன்றாக இருக்கும்போல் இருக்கிறது' என்று சொல்லுவார்).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெ.த.: என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் - மய்யத்தோடு ஒப்பிட்டுப் பதட்டம் தந்துவிட்டீர்களே! குண்டுகுழியாயிருந்தாலும் பரவாயில்லை என ஓரமாகச் செல்பவன் நான்..

      நீக்கு
    2. ஏதோ... என்னால் முடிந்தது, கமலஹாசனுக்கு ஓரிரண்டு வாக்குகளையாவது பெற்றுத்தரலாம் என்றுதான்.. ஹாஹாஹா.

      இந்த ஜோசியர்கள்தான் கமலுக்கு அரசியலுக்கான நேரம் இது, ரஜினி அரசியலில் இப்போ நுழைந்தால் பெரிய லெவலுக்கு வருவார் என்றெல்லாம் கணித்து, அவர்களை அரசியலில் இறங்கும்படி செய்திருக்கிறார்களே.. நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் ஏகாந்தன் சார்

      நீக்கு
  83. நெல்லை ஆமாம் தனியா அது நான் பதிவுக்கு எல்லாம் எடுத்து வைத்தும் கதம்பமாகவேனும் போடணும் என்று எடுத்து வைத்தும் போடவே இல்லை...போடறேன் படங்களோடு...

    மிளகாய்பொடி மட்டுமா...மஞ்சள் பொடியும்தான்...எனக்குத் தெரிந்து இரு ப்ராண்டுகள் பற்றி புகார் வந்தது என் மகனின் பெரியப்பா மகள் பள்ளியில் படிக்கும் போது லாபில் டெஸ்ட் செய்ததில் தெரிந்தது என்று சொல்லுவாள். இப்போது எப்படி இருக்கிறதோ அந்த ப்ராண்டுகள் தெரியலை...

    அது போல மிளகுடன் பப்பாளி விதைகள் கலந்து வருகின்றன என்றும் சொல்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  84. @அதிரா - வந்திடக்குடா, ஏலுமெண்டால் (இயலுமென்றால்) - உங்கள் தமிழ் எப்போதும்போல் நல்லா இருக்கு. உங்க பேச்சு, எழுத்துத் தமிழ் நல்லா இருக்கு. (சமயத்துல டிக்‌ஷனரி புரட்டணும்)

    உங்கள் வல்லாரை சம்பல் என் நினைவுக்கு வரவில்லை. காபிரைட்டுல கேஸ் போட்டுடாதீங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றி.._()_ இன்னொன்று நெல்லைத்தமிழன், நான் கொமெண்ட்ஸ் இல் பேசுவதுபோலவே தான் நேரிலும் பேசுவேன், போஸ்ட் எழுதும்போது மட்டும் கொஞ்சம் டமிலைக் கவனிப்பேன்:)... எனக்கு ஒருவர் சொன்னார், தனக்கு அதிராவில் பிடிச்ச ஒரு உண்மை என்னவெனில், புளொக்ஸ்ல் பேசுவதுபோலவேதான் நேரிலும் இருக்கிறீங்க.. மாற்றமில்லாமல் அது எனக்குப் பிடிச்சிருக்கு என ஆவ்வ்வ்வ்வ்வ்வ் அதைக் கேட்டு மீ தன்யன்[கடவுளே இந்த வேர்ட்டை மட்டும் படிச்சதும் கிழிச்சிடுங்கோ:))] ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா[

      நீக்கு
  85. @அதிரா - //பூதம் கிணறு வெட்ட அணில் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டு ரோட்டு ரோட்டா ஓடி ஓடிச் சொன்னதாமே நாந்தேன் கிணறு வெட்டினேன் என ஹா ஹா // - அருமையான உதாரணம். ரசித்தேன்.

    நாந்தான் சொல்லியிருக்கேனே... செய்தது மனைவி, படம் எடுத்தது மட்டும் நான் என்று.

    இன்னொன்று உங்களுக்கு மட்டும் சொல்றேன். வந்த இரண்டு நாட்களில் ஓவர் ஆர்வத்தில் கிச்சனில் ஓரிரண்டு ஐட்டங்கள் செய்தேன். ஆக்கிரமிப்பாளரைப் பார்ப்பதுபோல் மனைவிதான் பார்த்தார் என்றால், பெண்ணும், அம்மா செய்வதுபோல் வராது என்று தடா போட்டுவிட்டாள். ஹா ஹா ஹா. அதனால எனக்கு சமையல் செய்துபார்க்க, மாதத்தில் ஒரு சில சந்தர்ப்பங்கள் கிடைத்தாலே அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///நாந்தான் சொல்லியிருக்கேனே... செய்தது மனைவி, படம் எடுத்தது மட்டும் நான் என்று. //

      வரலாறு முக்கியம்:)) ஹஸ்பண்ட் செய்தா, நான் படமெடுத்தேன் நாகம்போல எனச் சொல்லோணும் ஹா ஹா ஹா:))

      நீக்கு
  86. வாங்க காமாட்சி அம்மா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    துவையல் தேங்காய் சேர்த்துச் செய்ததால், சுட சாதத்தில் தேங்காய் எண்ணெய் போட்டுக்கொண்டால் வாசனையா இருக்கும். நல்லெண்ணெய் அவ்வளவாக சரிப்படாது. மற்றபடி பொதுவா நல்லெண்ணெய் நல்லா இருக்கும். (முடிந்த அளவு அதைத்தான் உபயோகப்படுத்துவேன்)

    //மும்பையில் கீரை கிடைக்குமா? // - நான் 1990ல் மும்பைக்கு முதல் முறை வந்தபோது (ஒரு வாரத்துக்கு), அந்த உணர்வை எழுத்தில் வடிக்கமுடியாது. அங்கு சாப்பிட்ட பூந்தி லட்டு (அதாவது ஜீனிப் பாகில் கல் மாதிரி இருக்கும் லட்டு) ரொம்ப நாளா 'மஹாராஷ்டிரா லட்டு' என்று சொல்லிக்கொண்டிருந்தேன், என்னால் மறக்கவே முடியாது. மும்பைல என்னதான் கிடைக்காது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தத் துவையல் சாதம் ஆனாலும் நல்லெண்ணெய்க்கு ஈடு, இணை ஏதும் இல்லை! :) தே.எண்ணெய், கறி, கூட்டு, சாம்பார், அவியல், மோர்க்குழம்போடு ஒத்துப் போகிறாப்போல் துவையலோடு ஒத்துப் போகாது! :)

      நீக்கு
    2. // எந்தத் துவையல் சாதம் ஆனாலும் நல்லெண்ணெய்க்கு ஈடு, இணை ஏதும் இல்லை! :) //

      ஆமோதிக்கிறேன் கீதாக்கா ... பயங்கரமா ஆமோதிக்கிறேன்!

      நீக்கு
    3. கீதாக்கா யெஸ்ஸோ யெஸ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ....ஸ்ரீராமின் கமெண்டை அப்படியே லபக்கி என்னோடுதாகவும் எடுத்துக்கோங்க...ஹா ஹா அஹ

      கீதா

      நீக்கு
  87. கருத்துக்கு நன்றி ஜி.எம்.பி சார்.. உங்களுக்காக அதன் கன்னடப் பெயரைத் தேடினேன். அப்போது, அமேசானில் அந்தக் கீரையை ஆர்டர் செய்யலாம் 180 ரூபாய் என்று போட்டிருந்தது. ஒரு ஆள்தான் வாங்கியிருக்கிறார் போலிருக்கு. அவர் எழுதியிருக்கார், வல்லாரை விதை என்று நினைத்து வாங்கினால், 3-4 இலைகளை பார்சல் பண்ணிக் கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்கள் என்று.

    பதிலளிநீக்கு
  88. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  89. @தில்லையகத்து கீதா - //லெச்சகட்டை, முசுமுசுக்கை, காணாந்தி, // - அதிராதான் எழுத்துப் பிழைகளோடு எழுதியிருக்காங்க என்று நினைத்தால், நிஜமாகவே இந்த கீரையெல்லாம் உங்களுக்குப் பரிச்சியம்போல் தெரிகிறதே. உண்மையாவே நீங்க எந்த ஊர் என்பதில் எனக்கு எப்போதுமே சந்தேகம் வந்துவிடுகிறது.

    பிரண்டைத் துவையல் - எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இஞ்சி சேர்க்கக்கூடாது. (அப்புறம் ச்ராத்தம் ஞாபகம் வந்துவிடும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹிஹி பநெல்லை நான் எந்த ஊரூஊஊஊஊஊஊஊஊஉ ஹா ஹூ ஹூ ஹூ ஹெ ஹெ ஹெ ஹெ....அப்படியே இருக்கட்டும்!!!

      கீதா

      நீக்கு
  90. ஆஆஅவ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ்வ் எல்லோரும் ஓடிக்கமோன்ன்.. வியாச மாற்றம் வந்திட்டுது எங்கள் புளொக்குக்கு.... இந்தாங்கோ இது எங்கள் புளொக் ஆசிரியர்களுக்கு.. என்னா சூப்பரா இருக்குது இப்போ புளொக்...

    https://cs5.livemaster.ru/storage/20/c6/dafa1cd303855c57045e44a90axf--knitted-give-the-girls-flowers-26smvyazanaya-interior-cat-toy.jpg

    பதிலளிநீக்கு
  91. இன்னும் ஒன்று சொல்லோணும் நெ.தமிழனுக்கு,

    தூதுவளை இலையில் முள்ளெடுப்பது ஒன்றும் கஸ்டமில்லை, காம்பை மட்டும் கத்திரிக்கோலால் வெட்டினால் போதும், இலைகளை நன்கு வதக்கி, தண்ணி விடாமல் அரைக்கோணும் நல்லா... அப்போ முட்கள் வதங்கி அரை பட்டிடும்.. அவை இலைபோன்றே மென்மையா இருக்கும். ஒரு தடவை செய்து பாருங்கோ[வல்லரை முறையேதான் ஆனா நன்கு பசைபோல அரைக்கோணும்] அதன் சுவையே வேறு.. சூப்பரா இருக்கும், உடம்புக்கும் நல்லது.

    எங்கள் வீட்டில் இருந்தது ஊரில்.

    பதிலளிநீக்கு
  92. மாற்றங்களை ஏற்படுத்தி தோற்றத்தை சீர் படுத்தித் தந்தமைக்கு நன்றி DD

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவரைத்தான் நினைச்சேன், கில்லர்ஜி யும் சொன்னார்..... ச்சும்மா நன்றி சொன்னால் போதாது ஸ்ரீராம், உங்கட புதுப் ஃபோனையாவது அன்புப் பரிசா அனுப்பி வையுங்கோ:))

      நீக்கு
  93. வல்லாரை நினைவாற்றலுக்கு நல்லது நினைவு படுத்தியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அசோகன். இனிமேல் தினமும் இங்கு உங்களைப் பார்க்கலாம்னு சொல்லுங்க.

      நீக்கு
  94. நல்ல துவையல். வல்லாரை நல்லது. இப்போது மாத்திரையாகக் கூட கிடைக்கிறது.

    இங்கே நிச்சயம் கிடைக்காது! கிடைத்தால் செய்துவிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி வெங்கட். துவையல் போல் பேச்சிலருக்கு சுலபமான செய்முறை வேறு இல்லை. சப்பாத்தி செய்வது இன்னும் கடினம். செஞ்சு பாருங்க.

      நீக்கு
  95. வல்லாரைத் துவையல் செய்து பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  96. நெத சார் இப்போது சென்னையில் பெசன்ட் நகரிலா தொடர்பு முகவை தரலாமா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!