திங்கள், 16 ஜூலை, 2018

திங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பிமாம்பழ மோர் கூட்டான் அல்லது 
மாம்பழ புளிசேரி 

தேவையான பொருள்கள்:

மாம்பழம்  --  ஒன்று 
தயிர்           --  இரண்டு கப் 
தேங்காய் துருவல் ---  ஐந்து அல்லது ஆறு டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய்  --- ஐந்து 
சீரகம்         ---- ஒரு டீ ஸ்பூன்
உப்பு  ---    தேவையான அளவு 
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்  -- இரண்டு டீஸ்பூன் 
கடுகு    ---  1/4 டீ ஸ்பூன் 
வெந்தயம் --- 1/4 டீ ஸ்பூன் 
கறிவேப்பிலை -- சிறிதளவு

செய்முறை:

மாம்பழத்தை நன்றாக கழுவி விட்டு தோலோடு சற்று பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொண்டு, அது முழுகும் வரை தண்ணீர் விட்டு கொஞ்சமாக உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம்இவைகளை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தயிரில் உப்பு போட்டு அதில் வெந்த மாம்பழம், அரைத்த விழுது இவைகளை சேர்த்து அந்த கரைசல் நீர்க்க இருப்பது போல தெரிந்தால், கொஞ்சம் அரிசி மாவையும் சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைக்கவும். மோர் குழம்பு நான்கு பக்கமும் நுரைத்து வரும் பொழுது அடுப்பை நிறுத்தி விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, ஒரு வற்றல் மிளகாய் இவைகளை தாளித்து இறக்கி விடவும். சூடான சாதத்தில், பப்படம் அல்லது அப்பளத்தோடு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். 


குறிப்பு: 

பச்சை மிளகாய்க்குப் பதிலாக, கடலைப் பருப்பு, வற்றல் மிளகாயும் ஊற வைத்து அரைக்கலாம்.

அதிராவுக்காக ஊசிக்குறிப்பு:

படத்தில் இருப்பது மாம்பழம் தான். பச்சை நிற மாம்பழம்

71 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்!

  சந்தோஷத்தை விட கஷ்டங்கள் மனிதனுக்கு நிறைய நல்ல படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கின்றன.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 3. ஆஹா பானுக்கா கேரளத்து மாம்பழ மோர்க்கூட்டானா...வாவ் இப்ப மகன் வந்திருந்த போதும் செய்தேன்...மோர்க்குழம்பு என்றாலே பிடிக்கும்..இதுவும் சூப்பரா இருக்கும்


  பதிவு முழுவதும் வாசித்துவிட்டு வரேன்...இன்று எழுவதற்கு லேட் ஆகிவிட்டது..இங்கு திங்க இன்னும் முடியலை ..ஸோ..இங்கு ஆஜர் வைச்சாச்சு அப்புறம் வரேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 4. மாம்பழக் கூட்டான்...

  இதுவும் ஒருவிதமாகத்தான் இருக்கிறது..
  நேரம் கிடைக்கும்போது செய்துவிட வேண்டியது தான்...

  பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 5. கீதாக்கா!...
  நலம் தானே..
  எப்படியிருக்கிறீர்கள்!..

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் கீதா ரெங்கன். நம்முடைய அனுபவங்கள் மட்டுமல்ல, நண்பர்களுடைய அனுபவங்களும் நமக்கு படிப்பினையாகின்றன!

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். பெஞ்ச் மேல் ஏறி நிற்கிறேன்! நான் லேட்!

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம் வாழ்கவளமுடன்.
  கீதா, இன்பமோ, துன்பமோ வாழ்க்கை நாள்தோறும்
  அனுபவபாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. பானுவின் மாம்பழ மோர்கூட்டான் மிக நன்றாக இருக்கிறது . படங்கள் மிக அழகு.

  அதிராவிற்கு மட்டும் அல்ல மாங்காய் போல இருக்கே மாமபழம்! என்று நானும் ஆச்சிரியப்பட்டேன்.

  சில கிளிமூக்கு மாங்காய் வெளியே காய் போல் இருக்கும் வெட்டினால் உள்ளே
  பழமாக இருக்கும்.
  இந்த மாம்பழம் பேர் என்ன?

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் காலை வணக்கம். ஓ! இன்று என்னுடைய ரெசிப்பியா?

  பதிலளிநீக்கு

 11. புதிய குறிப்பு இதுவரை நான் கேள்விபடாதது. தெளிவாக சொன்ன முறையும் அதற்குகேற்ற படங்களும் பதிவை மெருகூட்டி இருக்கின்றன..பாராட்டுக்கள்@Bhanumathy Venkateswaran ...

  பதிலளிநீக்கு
 12. இந்த ரிசிப்பியை அதிரா சொல்லி இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் சொல்ல மாட்டேன் ஹீஹீ

  பதிலளிநீக்கு
 13. @ கீதா: ..சந்தோஷத்தை விட கஷ்டங்கள் மனிதனுக்கு நிறைய நல்ல படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கின்றன.//

  இதென்ன, காலையெழுந்தவுடன் கஷ்டத் தத்துவம்..!

  பதிலளிநீக்கு
 14. அருமை... ஆனால் நான் சாப்பிடக்கூடாது...!

  பதிலளிநீக்கு
 15. காலை வணக்கம்.

  ஆஹா இங்கே மாம்பழ மோர்க்கூட்டான் இன்னிக்கு! வாவ். எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த கேரளாக்காரர்கள் செய்து தந்து சாப்பிட்டு இருக்கிறேன்.

  முயற்சித்ததில்லை. முயற்சி செய்து பார்க்கத் தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
 16. விரைவாக செய்திடலாம் போலயே... நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 17. செய்து பார்க்கிறேன் பானுமா. ரொம்ப தித்திப்பா இருக்குமோ.
  தயிர் சேர்ப்பதால் உஷ்ணம் குறையும் என்று நினைக்கிறேன்.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. ஒரு சுய விளம்பரம். என் ஜிமெயில் அழிபட்டதால்,என் ப்ளாகிற்குப் //நாச்சியார்//
  பதிவிட முடியவில்லை. http>//kothainaachiyaar.blogspot.com புதிதாக

  ஆரம்பித்திருக்கிறேன். முன்னால் பின்னூட்டம் இட்ட யாருக்கும் பதில் அளிக்க முடியவில்லை. மன்னிக்கணும்.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  இன்றைய ரெசிபி சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் ரெசிபி மிகவும் வித்தியாசமாக நன்றாகவே உள்ளது. மோர் குழம்புக்கு "தான்" னாக எத்தனையோ காய்கறிகளை உபயோகபடுத்தியாச்சு.அதே போல் மாம்பழத்தை வைத்து இனிப்பு பச்சடிகளும் செய்து ருசித்தாகி விட்டது. ஆனால் மாம்பழமிட்டு மோர்கூட்டு.. இந்த முறையில் வெகு நேர்த்தியாக, அழகான படங்களுடன் செய்முறைகளையும் அறிமுகபடுத்திய சகோதரிக்கு என் பாராட்டுகளுடன் நன்றிகளும்.
  இனி இந்த முறையிலும் அவசியம் செய்து பார்க்கிறேன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. அனுபவங்கள் மட்டுமல்ல, நண்பர்களுடைய அனுபவங்களும் நமக்கு படிப்பினையாகின்றன//

  யெஸ் யெஸ் நம்மைச் சுற்றி நடப்பவை அனைத்துமே!


  கீதா, இன்பமோ, துன்பமோ வாழ்க்கை நாள்தோறும்
  அனுபவபாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.//

  ஆமாம் கோமதிக்கா ஒவ்வொரு நொடி என்றும் கூடச் சொல்லலாம்...நிஜமாகவே....நன்றி அக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 21. மாம்பழப் புளிசேரி.... எனக்குக் காம்பினேஷன் பிடிக்கும்னு தோணலை. மாம்பழம் இருக்கு. வீட்டின் அபிப்ராயம் கேட்டு செய்துடவேண்டியதுதான். இதற்குப் பதில் மாவடு (ஊறினது) உபயோகப்படுத்தி இதேபோல் செய்யமுடியுமோ?

  நல்லவேளை... மாம்பழ சீசன் இன்னும் முடியலை.

  பதிலளிநீக்கு
 22. ஏதோ ஒரு பின்னூட்டத்தில் ஶ்ரீராமுக்கு, மாம்பழ சீசன் முடியப்போகிறதே என்று எழுதினபோதே பா.வெ அவர்கள் மாம்பழத்தை வைத்து ஒரு ரெசிப்பி அனுப்பியிருப்பாங்கன்னு நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
 23. // நல்லவேளை... மாம்பழ சீசன் இன்னும் முடியலை. //

  // ஏதோ ஒரு பின்னூட்டத்தில் ஶ்ரீராமுக்கு, மாம்பழ சீசன் முடியப்போகிறதே என்று எழுதினபோதே//...

  ஹா... ஹா... ஹா... நெல்லை... ஸோ ஸ்மார்ட்! உங்களுக்கு அபார ஞாபக சக்தி!

  பதிலளிநீக்கு
 24. மாம்பழம் போட்டு மோர்குழம்பா...

  நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
 25. பானுக்கா இது எங்கள் (பிறந்த) வீட்டில் அடிக்கடி செய்வார்கள்...எங்கள் வீட்டில் மாமரம் இருந்ததால் காய்க்கும் போது மாங்கா மோர்க்குழம்பு, மாம்பழ கூட்டான் என்றுதான் மெனு இருக்கும்.எங்கள் சமையல் கேரளா, திருநெல்வேலி சார்ந்தது என்பதால்...

  நீங்கள் இங்கு சொல்லியிருப்பதும் ப்ளஸ் ஒவ்வொரு முறை செய்யும் போதும் சில சில வேறுபாடுகள் செய்தும் செய்வாங்க..நானும் அப்படியே...இதே மெத்தடில் ஜீரகம் இல்லாமல்......ப மி க்குப் பதில் சி மி ஜீரகம் இல்லாமல், அப்புறம் நீங்கள் சொன்ன இன்னொரு மெத்தடும் என்று...

  வெந்தயம் கொதிக்கும் போதே வற்றுத்து போடுவேன் இல்லை என்றால் கடைசியில். நீங்கள் சொல்லியிருப்பது போல். வெந்தயம் சேர்க்கப்படும் எந்த ரெசிப்பியும் அது ஊற ஊறதான் அதன் மணம் குணம் இறங்கி ரெசிப்பி சுவை இன்னும் கூடும். புளியோதரை, வெந்தயகுழம்பு, திருநெல்வேலி மோர்க்குழம்பு உட்பட....

  கீதா

  பதிலளிநீக்கு
 26. இதற்குப் பதில் மாவடு (ஊறினது) உபயோகப்படுத்தி இதேபோல் செய்யமுடியுமோ?//

  நெல்லை அழுகமாங்கா பச்சடினு சொல்லுவது அது அழுக மாங்கா இல்லை...நன்றாக ஊறி கொஞ்சம் மெத்தென்று இருக்கும் மாவடுக்களை வைத்து செய்யலாம். மகன் வந்த போது செஞ்சேன். புகைப்படமும் இருக்கு...ஸோ

  கீதா

  பதிலளிநீக்கு
 27. பானுக்கா ஜீரகமும் சேர்த்துச் செய்வாங்கனு சொன்னாலும் எங்க பிறந்த வீட்டுல பொதுவா மோர்க்குழம்புக்கு எங்க பாட்டிகள் ஜீரகம் சேர்க்காமல் செய்வாங்க...அது மோர்க்குழம்பை பிற ரெசிப்பியிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதோனு தோணும்...வெந்தய மணமும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 28. @கோமதி அரசு, சேலத்து மாம்பழங்களைப் பார்த்திருக்கீங்க தானே? சேலம் "க்ரேப்" என்பார்கள். உண்மையில் தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் தான் அது அதிகம். அந்த மாம்பழம் மேலே பச்சையாகவும் உள்ளே மாம்பழ நிறத்துடனும் இருக்கும். ஒரே கதுப்பாகவும் கிடைக்கும். பெரிசு பெரிசாக இருக்கும். ஒரு மாம்பழம் தின்ன முடியாது. அதே போல் திருச்சி இமாம்-பசந்த். மேலே பச்சையாக உள்ளே மாம்பழ நிறம். இதுவும் பெரிசு! மாயவரம் பாதிரிப் பழம்! எங்க அம்பத்தூர் வீட்டில் மரம் இருந்தது. பாதிரிப்பழமாமரம். அதுவும் பச்சையாக உள்ளே மாம்பழ நிறத்தோடு இருக்கும். வாசனையில் முதலில் சேலம்க்ரேப் அப்புறம் பாதிரி எனில் கடைசியில் தான் இமாம்பசந்த் என என்னோட கருத்து!

  பதிலளிநீக்கு
 29. என் கணவருக்கு மாம்பழம்னா உயிர்! ஆனால் இப்போ சாப்பிட முடியலையா! வாங்குவதே இல்லை! ஆகவே நானும் சாப்பிடுவதில்லை. பொதுவாகவே நான் மாம்பழம் குறைவாகவே சாப்பிடுவேன்.எப்போதாவது! யாரானும் வாங்கி வந்தால்! நாங்க வீட்டில் வாங்கறதில்லை! வாங்கினால் மாதுளை, பப்பாளி, அன்னாசி, கொய்யா, எப்போவானும் ஆப்பிள், பண்டிகை நாட்களில் மட்டும் நிவேதனத்துக்கு வாழைப்பழம்!

  பதிலளிநீக்கு
 30. இந்த மாம்பழ மோர்க்குழம்பு நிறையச் செய்திருக்கேன். ஆனால் சர்க்கரை இல்லாத நாட்களில் கூட என் கணவருக்குப் பிடிக்காது. மாமனார், மாமியார் கூட இருந்தப்போச் செய்திருக்கேன். அவங்களுக்குப் பிடிக்கும். மாம்பழம் போட்டு சாம்பார் கூட வைக்கச் சொல்வாங்க! அநேகமா மாங்காய்ப் பச்சடியும் இம்மாதிரி மோர்க்குழம்பு, சாம்பார் பண்ணாத நாட்களில் இருக்கும். மாங்காய்ப் பச்சடியை ஒரு பெரிய கல்சட்டி நிறையப் பண்ணணும்! அந்தக் கல்சட்டியைப் பச்சடி தீர்ந்தால் தான் கீழே இறக்க முடியும். அவ்வளவு பெரிது என்பதோடு அவ்வளவு பச்சடியும் செலவும் ஆகும்! அது ஒரு காலம். இப்போ மாங்காய்த் துண்டங்கள் போட்டு ஊறுகாய், எப்போதாவது தொக்கு, மற்றும் மாவடு(இது இருந்தால் போதும்.) மட்டுமே! ஆவக்காய் ஊறுகாய் போடுவதைக் கூட நிறுத்தியாச்சு!

  பதிலளிநீக்கு
 31. என் அம்மா வீட்டில் மோர்க்குழம்புக்கு எப்போவுமே ஜீரகம் வைக்க மாட்டாங்க! அதோடு அரைத்த விழுதைக் கொஞ்சம் போல் ஜலம் சேர்த்து உப்புப்போட்டு வேகும் தான்களோடு சேர்த்து ஒரு கொதி விட்ட பின்னர் தயிரை மத்தினால் கடையாமல் கரண்டியால் சிலுப்பி அதில் தயிருக்கு மட்டும் தேவையான உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக் கொதிக்கும் கலவையில் ஊற்றுவார்கள். ஒரு கொதி மேலே நுரைத்து வரும்போதே தாளித்துக் கீழே இறக்கிடுவோம். தே.எ. தான் தாளிக்க. மோர்க்குழம்பு பண்ணினால் கூடவே ஒரு புளி சேர்த்த கூட்டு அல்லது கறி. அல்லது பச்சடி! இல்லைனா பருப்பு உசிலி! (பருப்பு உசிலி கடைசி பட்சம் தான்!) புளிக்கூட்டுக்குத் தான் முதல் விருப்பம். அதே போல் பொரிச்ச குழம்புன்னா புளி விட்ட கீரை! இப்போல்லாம் சொப்பு வைச்சுச் சமைப்பதால் பாதி நாட்கள் பொடி, துவையல் எனச் சாப்பிட வேண்டி இருக்கு. இல்லைனா ரசம்,கூட்டு! இன்னிக்குப் பண்டிகைனு வைச்ச சாம்பார் அப்படியே இருக்கு! :))))

  பதிலளிநீக்கு
 32. மழைக் காலத்தில் மோர் குழம்பா

  பதிலளிநீக்கு
 33. இதென்ன, காலையெழுந்தவுடன் கஷ்டத் தத்துவம்..!//

  ஹா ஹா ஹா ஓ! ஏகாந்தன் அண்ணா நீங்க அப்படிப் பார்க்கறீங்களா...ம்ம்ம் இனி இப்படி தராம பார்த்துக்கொள்கிறென்...

  கீதா

  பதிலளிநீக்கு
 34. நன்றி செல்வராஜ் சார். நேரம் கிடைத்தால் போதாது, மாம்பழமும் கிடைக்க வேண்டும். சீசன் முடிவதற்குள் செய்து விடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //.. சீசன் முடிவதற்குள்..//

   இங்கே குவைத்தில் மாம்பழம் வருடம் முழுதும் கிடைக்கிறது...

   போன மாதம் இப்படித்தான்
   ஒருநாள் -

   பச்சரிசி குழைய வடித்து மோர் தாளித்து ஊற்றி மாம்பழத்தை நறுக்கிக் கொண்டு இரு கவளம் சாப்பிட்டதும் ஒரு யோசனை...

   அப்படியே மாம்பழத் துண்டுகளை வழித்து சோற்றில் போட்டு பிசைஞ்சு அடிச்சா!...

   கேள்றா... கேள்றா... ன்னு
   ஏக அமர்க்களம்...

   நீங்க சொல்வது போல இந்த கைப்பக்குவம் தஞ்சாவூர் காரர்களுக்குத் தெரியாது தான்...

   இத்தனைக்கும் தஞ்சை ஜில்லாவில் மாம்பழ உற்பத்தி அதிகம்....

   மகிழ்வுடன் வாழ்க நலம்...

   நீக்கு
 35. என்னாதூஊஊஊஊஉ மாம்பழத்தில் மோர்க் குழம்போ? அவ்வ்வ்வ்வ் மாம்பழம் போட்டு இனிப்பு ஐட்டங்கள் சிலது செய்ததுண்டு.. உறைப்பு சேர்த்துச் செய்ததில்லை... அதிலயும் பானுமதி அக்கா ரெசிப்பியோ அவ்வ்வ்வ்வ் ... ரொம்ப ஈசி ரெசிப்பியாக இருக்குமே என நினைச்சேன்ன்..

  சூப்பராக இருக்கு. இதை முயற்சி செய்யோணும்.. இங்கு இங்கத்தைய சூப்பமர்கட்டுகளில் ஒரு வித விலாட் மாங்காய் போன்று பென்னாம்பெரிய உருண்டை மாம்பழங்கள்தான் கிடைக்குது.. அது இனிப்பு பெரிதாக இருக்காது பல சமயம்.

  இம்முறை கிளிச்சொண்டு மாங்காய் வந்திருந்துது.. பார்க்க காய்போல இருந்துது.. ஆவ்வ்வ்வ்வ் என் பலநாள் கனவு நனவாகப்போகிறது.. மீயும் உப்பில தொட்டூஊஊஊத் தொட்டுத் சாப்பிடப்போகிறேன் என வாங்கி வந்தால்.. அது நல்ல பழுத்த பழம் பட்.. சூப்பர் இனிப்பாக இருந்துதே.

  பதிலளிநீக்கு
 36. ///அதிராவுக்காக ஊசிக்குறிப்பு:

  படத்தில் இருப்பது மாம்பழம் தான். பச்சை நிற மாம்பழம்//

  ஹையோ வைரவா.. பழனிமலைக் கந்தா.. சத்தியமா படத்திலிருப்பது தேசிக்காய் என நினைச்சேன்ன்.. மாம்பழப் படம் போடவில்லை என நினைச்சுட்டேன்ன்ன் கர்ர்ர்ர்:) நீங்க சொல்லியிருக்காட்டில் நான் மட்டும் இல்லை பலரும் மங்கோப்பிள்ளையக் காணமே எனத் தேடி இருப்பினம்.. ஆனா பயத்தில கேட்டிருக்காயினம்.. பிக்கோஸ் எல்லோருக்கும் அதிராவைப்போல அடிச்சுப் பிடிச்சுக் கேய்க்கும் தெகிரியம் இல்லைத் தெரியுமோ?:) சவுண்டு மட்டுமேஎ விடுவினம்:))..

  ஹா ஹா ஹா நேக்கு 35 பவுண்டுகள் ஃபிரான்ஸ் வின் பண்ணியதால கிடைச்சிருக்கெல்லோ அதில இப்போ மாம்பழம் வாங்கலாமோ என ஓசிக்கிறேன்ன்ன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 37. ஆங்ங்ங் இன்னொன்று.. காதைக் கொண்டு வாங்கோ.. கிட்ட.. இன்னும் கிட்டவாக கேட்டிடப்போகுது இங்கின எல்லோருக்கும்.. ஹையோ சந்தன சோப் போட்டுக் கழுவிப்போட்டுக் கிட்டக் கொண்டு வாங்கோ.. நான் ஒண்ணும் தோட்டைக் கழட்டிட மாட்டேன்ன் கர்ர்:)).. அஞ்சுவும் மாம்பழத்தில ஒரு ரெசிப்பி செய்திருக்கிறா.. பார்க்க சூப்பரா இருந்தது.. ஊர் பேர் சொல்ல மாட்டேன்ன் அடிப்பா:)).. விரைவில் போடுவா என நினைக்கிறேன்ன்ன்.. அப்பாடா தகவல் ஜொள்ளிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா:).

  பதிலளிநீக்கு
 38. நன்றி கோமதி அக்கா. இது செந்தூரான் வகை.

  பதிலளிநீக்கு
 39. இன்னொன்று பானுமதி அக்கா.. வாழ்க்கையில் முதல் தடவையாக புதினா அரைச்சு.. உங்கள் புதினா பன்னீர் செய்தேன் அப்பவே.. படம் இருக்கு.. ஒருநாள் போடுறேன்ன்.. கறி சுப்பர் ஆனா நான் சொன்னனே புதினா சேர்த்தால் வீட்டில் ஆரும் சாப்பிட மாட்டினம்.. :(.

  பதிலளிநீக்கு
 40. உண்மையை உண்மையாக சொன்ன உண்மைக்கு நன்றி! வர வர அதிராவின் பாதிப்பு எல்லோருக்கும்.. ஹும்ம்!

  பதிலளிநீக்கு
 41. டி.டி. சார், நீங்களும் இனிமையான மனிதர் என்று தெரிகிறது. கண்ணால் பார்த்துக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 42. ஆமாம், கில்லெர்ஜி ஈசியாக செய்திடலாம். நன்றி.

  பதிலளிநீக்கு
 43. இல்லை வள்ளி அக்கா, இனிப்பு தனியாக தெரியாது. மாம்பழ இனிப்பு, பி.மிகை உறைப்பு, தயிர் புளிப்பு எல்லாம் ப்லென்ட் ஆகி நன்றாக இருக்கும். நன்றி.

  பதிலளிநீக்கு
 44. பானு காட்டிய மாம்பழம் உருண்டையாக இருந்ததால் என்ன பழம் என்று கேட்டேன் கீதா சாம்பசிவம்.

  மாயவரத்தில் பாதிரி மாம்பழம் தான் மிகவும் பிரசத்தி பெற்றது. அது இது போல் உருண்டையாக இருக்காது, அது பச்சையாகதான் இருக்கும், தோல் சுருங்கினால்தான் பழுத்து விட்டது என்று அர்த்தம்.
  ஆனால் எனக்கு இமாம்பசந்த் மிக ருசியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 45. @கமலா ஹரிஹரன் & அனுராதா பிரேம்குமார்: இது கேரள ரெசிபி. திருநெல்வேலி சீமையிலும் செய்வார்கள். திருச்சி, தஞ்சை, ஆற்காட்டு ஜில்லாக்காரர்கள் அறியாதது.

  பதிலளிநீக்கு
 46. வெந்தயம் சேர்க்கப்படும் எந்த ரெசிப்பியும் அது ஊற ஊறதான் அதன் மணம் குணம் இறங்கி ரெசிப்பி சுவை இன்னும் கூடும்.
  சரியாக சொல்லியிருக்கிறீர்கள் கீதா. அழுக மாங்காய் பச்சடி ரெசிபி எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 47. கோமதி அரசு said...
  ///ஆனால் எனக்கு ///இமாம்பசந்த்/// மிக ருசியாக இருக்கும்.//

  ஹா ஹா ஹா கோமதி அக்காவும் பூனைப்பாஷையில் பேசத் தொடங்கிட்டாஆஆஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

  பதிலளிநீக்கு
 48. வாசனையில் முதலில் சேலம்க்ரேப் அப்புறம் பாதிரி எனில் கடைசியில் தான் இமாம்பசந்த் என என்னோட கருத்து!
  வாசனை மட்டுமல்ல, சுவையிலும் இமாம்பசந் அப்படி ஒன்றும் சிறப்பு இல்லை என்பது என் தாழ்மையான கருத்து கீதா அக்கா.

  பதிலளிநீக்கு
 49. இந்த வருடம் மழை கொஞ்சம் சீக்கிரம் துவங்கி விட்டதோ? அசோகன் குப்புசாமி சார்?

  பதிலளிநீக்கு
 50. //இதென்ன, காலையெழுந்தவுடன் கஷ்டத் தத்துவம்..!//

  ஏகாந்தன் சாரைப் போல எனக்கும் அப்படித்தான் தோன்றியது கீதா.

  பதிலளிநீக்கு
 51. வாங்க ஞானியாரே. உங்களுக்காக தனியாக ஊசிக்குறிப்பு போடும்படி எப்படி மிரட்டி வைத்திருக்கிறீர்கள் பார்த்தீர்களா?

  பதிலளிநீக்கு
 52. புதினா,ஆலுவைப் போல மாம்பழ மோர்க்கூட்டானும் போனி ஆகாது என்று பயப்படுகிறீர்களா? கொஞ்சமாக செய்யுங்கள். புதினா பிடிக்காவிட்டால் கொத்தமல்லியில் செய்திருக்கலாமே.

  பதிலளிநீக்கு
 53. @நெல்லைத்தமிழன் ..லக்ஷ்மி அம்மா குறையொன்றுமில்லை பிளாக் வச்சிருக்காங்களே அவங்க மாவடுவில் செஞ்சாங்க அம்மாஞ்சி குழம்புன்னு பேர் :) .நான்னனும் செஞ்சேன் செம ருசி
  இருங்க லிங்க் தேடி தரேன் .

  பதிலளிநீக்கு
 54. பானுக்கா ..இந்த மாம்பழம் செங்காயா இருக்கணுமா இல்லை கொஞ்சம் புளிப்பு டேஸ்ட் இருந்தாலும் ஓகேவா ?

  பதிலளிநீக்கு
 55. ஹாஹா :) நெல்லைத்தமிழன் ஏற்கனவே உங்களுக்கு அங்கே லிங்க் கொடுத்தேன் போலிருக்கு உங்க பின்னூட்டம் அங்கிருக்கே :)

  பதிலளிநீக்கு
 56. செங்காயான மாங்காயை சாம்பாரில் போடுவாங்க அம்மா .அது தனி ருசி .
  எங்களுக்கு ரொம்பா இனிப்பான பழங்கள் கிடைக்குது அது போட்டு செய்யலாமா ?

  பதிலளிநீக்கு
 57. நீங்க படத்தில் காட்டியிருக்கும் மாங்கா ,மல்கோவா வெரைட்டி போலிருக்கு .தோல் டார்க்கா இருக்கும் ஆனா உள்பக்கம் ஸ்வீட் .

  பதிலளிநீக்கு
 58. @ கீதா: .. நீங்க அப்படிப் பார்க்கறீங்களா...ம்ம்ம் இனி இப்படி தராம பார்த்துக்கொள்கிறென்.//

  @ பானுமதி வெங்கடேஸ்வரன்: .. எனக்கும் அப்படித்தான் தோன்றியது கீதா.

  காலையில் எழுந்து கதவைத் திறந்ததும் வணக்கம், வாழ்க நலம், பலம் என்றெல்லாம் படித்துத்தானே பழக்கம். இதென்ன இந்த நாள் திகைப்புத் திங்களாக ஆரம்பிக்கிறதே என்று பார்த்தேன்.வேறொன்றுமில்லை..!

  பதிலளிநீக்கு
 59. ஸீஸன் மோர்க்குழம்பு என்ற பெயரில் 2015 வருஷம்,மே மாதம் நானும் இந்த மாம்பழ மோர்க்குழம்பை எழுதி இருக்கிறேன். அதிக வித்தியாஸமில்லை. பழத்தின் கதுப்பை எடுத்து மோரில் கரைத்து,அரைத்தஸாமான்களைச் சேர்த்து மாமூல் மோர்க்குழம்புதான். நல்ல ருசிதான். அதையும் பார்த்து விட்டு உங்களுக்குப் பின்னூட்டமிடுகிறேன். எல்லாம் கலந்த ருசி. மாம்பழ வாஸனையுடன் பின்னும் ஒருபிடி சாப்பிடலாம். நல்ல குறிப்பு. அன்புடன்

  பதிலளிநீக்கு
 60. இது எங்க ஊர் பக்கம் புதுசு

  பதிலளிநீக்கு
 61. இல்லை ஏஞ்சல், பழமாக இருந்தால்தான் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 62. @காமாட்சி அம்மா: உங்கள் லிங்க் கொடுங்கள் பார்க்கலாம்.

  ராஜி உங்களுக்கு எந்த ஊர்?

  பதிலளிநீக்கு
 63. //எழுந்து கதவைத் திறந்ததும் வணக்கம், வாழ்க நலம், பலம் என்றெல்லாம் படித்துத்தானே பழக்கம். இதென்ன இந்த நாள் திகைப்புத் திங்களாக ஆரம்பிக்கிறதே என்று பார்த்தேன்.வேறொன்றுமில்லை..! //
  அதே அதே, ஏகாந்தன் சார்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!