புதன், 18 ஜூலை, 2018

நீ கே, நா சொ .... புதன் 180718

   


அதிரா :

உண்மை விளம்பியிடம் ஒரு கிளவி:) சே.சே.. கேள்வி:).. அந்த உண்மை விளம்பியின் இன்றைய வயசென்ன? 

ப: இன்றைய வயதா? நாளைய வயதைவிட ஒருநாள் குறைவு!


நேற்றைக்கு ஒன்று கூடி..?


              ஒ! இப்படியும் சொல்லலாமோ!

நெல்லைத்தமிழன் :

தெரியாமல் நான்வெஜ் சாப்பிட்டிருக்கின்றீர்களா ?// - விளக்கம் இல்லாமல் உண்டு/இல்லை என்றா பதில் சொல்றது?  

ப: ஆமாம்!

தெரியாமல் அசைவம் சாப்பிட்ட அனுபவம் என்று கேட்டிருந்தால் விவரமான பதில் தரலாம் அல்லது கேள்வியை "ஒத்தி வைக்கலாம்".

மற்றவங்கள்லாம் உண்மை சொல்ல விருப்பம் இல்லையா? 

ப: இருக்கும். 

          அட! 

//பலநாட்கள் தயிர்சாதம், உப்பு நார்த்தங்காய் // - தற்போது நல்லா வசதியா, அவங்க அவங்க பசங்களும் நல்ல நிலைமையில இருக்கற பெரும்பாலான மத்திய தர வர்க்கம் இதைக் கடக்காமல் வரமுடியுமா? 

ப: வந்திருக்க முடியாது. முன் காலத்தில் lower middle class, இப்போ upper middle class. 

தயிர்சாதம் நார்த்தங்காய் என்பதை இல்லாமையின் அடையாளமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

                                                     ஐயோ, பாவம்! ஏழைங்க! 

ராஜி :

இதுலாம் ஒரு கேள்வி பதிலா? 

ப: இதுவா? ஆமாம்! கேள்விக்குறி இருந்தாலே கேள்வியாதான் பார்க்கிறோம்!

இதெல்லாம் பல கேள்வி பல பதில்கள். எண்ணிக்கை தெரியாத குற்றம்.


கீதா சாம்பசிவம் :

கேஜிஜி சார், நாங்க கேட்கிற கேள்விகளாலே உங்களுக்கு உலக அறிவு அதிகம் ஆகிறது தானே?  

ப: நாங்க சொல்கிற பதில்களால உங்களுக்கு உலக அறிவு அதிகமாகுதுன்னா, கேள்விகளால் எனக்கும் கொஞ்சம் உனா அனா அதிகமாகி இருக்குன்னு நான் சொல்லிக்கலாம்! 

  

அறிவு, புத்தி, ஞானம், மனசு, மூளை எல்லாமும் ஒண்ணா?

ப: இல்லை. ஐம்புலன்களால் அறிவது அறிவு. அப்படி அறிந்ததை, மூளை பகுத்தறிந்து தெரிந்துகொண்டால் புத்தி. இவை எதையுமே சாராமல், சிலருக்கு மட்டும் ஏற்படுவது ஞானம். மனசு என்பது நம் ஐம்புலன்களால் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. மூளை ஒரு மெஷின். ஐம்புலன்கள் அனுப்பும் செய்திகளை, உடனுக்குடன் ப்ராசஸ் செய்து, எதிர் வினை ஆற்றக் கட்டளை இடுகின்ற அல்லது சிக்னல் கொடுக்கின்ற இயந்திரம். 

அறிவு தகவல் பெட்டகம்.
புத்தி இனங்கண்டு செயல் படும் ஆற்றல்
ஞானம் இயல்பறியும் மனப்பாங்கு.
அறிந்தும் மதிக்காமல்,  புத்தி இருந்தும் ஆற்றாமல் இருக்கக் கூடும்.  ஞானம் அப்படி யல்ல என்பதால் இவை வெவ்வேறு தானே.

சிந்திப்பது மூளையா? மனமா? அறிவா? புத்தியா? 

ப: இந்தக் கட்சிகளின் கூட்டணி.

மனம் தூண்டி, அறிவைக் கொண்டு  மூளை சிந்திக்கிறது என என் மனம் சொல்கிறது.

Kayena Vacha Mana-Sendriyair Va Budhyaatmana Va Prakruteh Swabhavath

நீலவண்ணக் கண்ணர் பதில்களையே காணோமே? அடுத்த பதிவிலாவது வருவாரா? 

ப: அவருக்கு என்னவோ கோபம்! என்ன கேட்டாலும் பதில் சொல்லமாட்டேன் என்கிறார். அடுத்த வாரம் பதில் எழுத வருகிறாரா பார்ப்போம்! (வந்துதான் ஆகணும்! நான் ரெண்டுவாரம் விடுமுறையில் குரோம்பேட்டை செல்கிறேன்!) 


                          அப்பாடி! ரெண்டுவாரம் தலைவலி இல்லாம இருக்கலாம்!


இன்னொரு கேள்வி இருக்கு! அதைக் கேட்கலாமா? 

ப: உம்.

இப்படி எங்களிடம் கேள்விகள் கேட்டு பதில் சொல்வதன் மூலம் உங்கள் அறிவு விசாலம் அடைகிறதா? 

ப: மேலே உங்க முதல் கேள்வி ^ இதுதானே!

தேடல் விளைவித்த கேள்வியும் தெளிவில் பிறந்த பதிலும்
கேடில் ஞானம் புகல்.

யோசித்து யோசித்துக் கேட்பதன் மூலம் நாங்க புத்திசாலியாகறோமா? 

ப: யோசிக்காம பதில் சொல்வதால் நாங்கதான்       ______________  ஆகிவிடுகிறோம்! 
    
                                              இது  யோசிக்க வேண்டிய விஷயமோ? 

கேள்வி கேளுங்க பதில் சொல்றேன்னு சொல்லிட்டு இப்படி மாட்டிண்டோமேனு நீங்க நினைச்சது உண்டா? அல்லது நினைப்பீங்களா? நினைக்கிறீங்களா? இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூணிலேயும் கேட்டிருக்கேனா? 


ப: ஜூலை நான்காம் தேதி கேள்வி பதில் பகுதியில் இதே கேள்விக்கு பதில் அளித்துள்ளேன். 

நினைத்தது இல்லை, நினைக்கவில்லை, நினைக்கமாட்டேன். 


எதிர்காலம் இனிமேல்தானே வர இருக்கிறது ?

வாட்ஸ் அப் 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

தினமும் அதிகாலையில் எழுந்து கொள்வது, 
தினமும் உடற்பயிற்சி செய்வது
உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது இவைகளில் எது கஷ்டம்?

ப: என்னைப் பொறுத்தவரை, இரண்டும் மூன்றும். 
நடைப்பயிற்சி தவிர வேறு உடற்பயிற்சி தினமும் செய்வதில்லை. எந்த நிலையிலும், எனக்கு எது பிடிக்குமோ அதை உண்பதற்குத் தயங்கமாட்டேன். 

எழுந்து விட்டால் நடந்து விடலாம்.  உணவுக்கட்டுப்பாடு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தானே கைவந்து விடும் அல்லது வாய்வந்துவிடும்!!!

உணவு கட்டுப்பாடு. நாக்கு நீளம் காரணம் இல்லை
Availability தான்! 

 

அடுத்தவாரம் நீலவண்ணக் கண்ணன் பதில் என்று போட்டிருக்கீங்க! இப்போ பாருங்க ! கேள்விகள் பல பாய்ந்து ஓடிவரும்!

அடுத்தவாரம், அவருக்கு நானும் கேள்விகள் கேட்கப்போகிறேன்! 
ஜூட்! ஸ்டார்ட் மூசிக்கு !! 


75 கருத்துகள்:

 1. நடை முடித்து பிறகு வருகிறேன்.....

  பதிலளிநீக்கு
 2. எல்லாரும் பிஸியா இருக்காங்க...... இருக்கட்டும் இருக்கட்டும்....

  பதிலளிநீக்கு
 3. இன்னிக்கு படம் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே...

  பதிலளிநீக்கு
 4. இனிய காலை வணக்கம் வெங்கட். ஆறு மணியை ஒட்டி வருவார்கள்!

  பதிலளிநீக்கு
 5. ஓ! இன்று புதன் சீக்கிரம் வந்துரும் என்பது மறந்தே போச்சு ஹா ஹா ஹா ஹா

  இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி, ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா (காலைல இனி வருவது சிரமம் என்று சொல்லியிருந்தாங்க....) பானுக்கா எல்லோருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 6. நான் வழக்கம் போல 5.30க்கு தில்லி சென்று விட்டு வந்தேன் அப்பத்தான் எபி 6 மனிக்குனு ஓபன் பண்ணினப்ப 7 கமென்ட் ஆஹா இன்று புதன் மறந்தே போனேனே என்று தோன்றியது..ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 7. ///..அம்மிணியை ஒட்டி....///

  அட...
  விடியக் காலையிலேயே கோளாறா!?...


  ///ஆறு மணியை ஒட்டி...///

  எத்தனை நம்பிக்கை...

  அன்பின் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்.. வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 8. படங்கள் எல்லாம் என்னென்னவோ சொல்லுது கலர்ஃபுல்...ஒவ்வொண்ணா பார்க்கனும்...இன்னும் இங்க திங்க முடியலை அப்புறம் வாக்கிங்க..கடமைகள்....ஸோ அப்பால

  கீதா

  பதிலளிநீக்கு
 9. ///..அம்மிணியை ஒட்டி....///

  அட...
  விடியக் காலையிலேயே கோளாறா!?...//

  ஹா ஹா ஹா ஹாஹ் ஆ துரை அண்ணா......

  அப்புறம் பாருங்க அவர் நம்பிக்கையும் காப்பாற்றியாச்சு.நான் புதன் என்றால் 5 மணியிலிருந்தே பார்க்கத் தொடங்கிடுவேன்...அப்பப்பா....ஆனா இன்று கிச்சன் வேலையில் மூழ்கியதால் மறந்துவிட்டது...

  கீதா

  பதிலளிநீக்கு
 10. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 11. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். மெஸேஜைக் காணோம்!! எதற்கு வம்புன்னு விட்டுட்டீங்களா?!!

  தில்லியில் என்பதைவிட, ராஜஸ்தானில் (உதய்பூரில்) உங்களைப் பார்த்தேனே...

  பதிலளிநீக்கு
 12. படங்கள் ஒரு மாதிரியாக போகுதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // படங்கள் ஒரு மாதிரியாக..//

   பழைய நெனப்புடா.. பேராண்டி..
   பழைய நெனப்புடா!...

   நீக்கு
 13. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 14. //..ஞானம் இயல்பறியும் மனப்பாங்கு..//

  இப்படி அஞ்ஞானத்தைக் காண்பித்து வழியத்தான் வேண்டுமா?

  பதிலளிநீக்கு
 15. மெஸேஜைக் காணோம்!! எதற்கு வம்புன்னு விட்டுட்டீங்களா?!!//

  எடுத்து வைத்திருந்தேன் ரெடியாக. ஆனால் நீங்கள் சொல்லியதும் மனதில் தோன்றியது. அவ்வப்போது கொடுக்கலாமா என்ற எண்ணம் உள்ளது. பார்ப்போம் ஸ்ரீராம்.

  தில்லியில் என்பதைவிட, ராஜஸ்தானில் (உதய்பூரில்) உங்களைப் பார்த்தேனே...//

  ஹா ஹா ஹா ஹா யெஸ் யெஸ் ஃப்ளைட் வயா தில்லிதான் கிடைத்தது. கொஞ்சம் சுற்றிச் சுற்றி மெதுவாக வேறு இறங்கியது. தில்லி என்று சொல்லி இடையில் அங்கிருந்து உதய்பூர்ல உங்களுக்கு வெயிட் செய்தேன் என்று சொல்ல நினைத்தது அடிக்கும் முன் அந்த சென்டென்ஸ் அடிக்கும் முன் சுண்டெலி கமெண்டை தூக்கிக் கொண்டுஓடிவிட்டது. எனவே தில்லியிலிருந்து வந்தேன் என்றாகிவிட்டது……ஹா ஹா ஹாஹ்ஹா

  துரை அண்ணாவின் கமெண்டிற்குச் சிரித்துவிட்டு போட்டுவிட்டு கிச்சனுக்கு ஓடிவிட்டேன்…

  கீதா

  பதிலளிநீக்கு

 16. ஹா ஹா ஹா நெல்லையின் கேள்விகள் முடிந்ததும் தமனாக்கா (கவனிக்கவும் தமனாக்கா….ஆனால் அனுஷ்!!!! அனுக்கா இல்லை அனுஷ்தான்!!!!!!!!) டாடா பை என்று சொல்லுகிறார்….தமனா சார்பில் நெல்லை கேள்வி கேட்டிருப்பார் போலும் ஹா ஹா ஹா ஹா ஹா…..
  பொட்டு வைத்த தமனா ஆஹா!! டாடா சொன்னவர் மீண்டும் அடக்க ஒடுக்கமா வந்து போஸ் என்ன சொல்லுறார் கேளுங்க!..பார்த்தா ஏழை மாதிரியா கீது!!!!! சமர்த்தா குடும்பம் நடத்தும் பொண்ணு போல அல்லவா இருக்கேன்…..தயிர்சாதமும் நார்த்தாங்காயும் ஏழைக்கானது என்றில்லை உடம்புக்கு நல்ல உணவு” எவ்வளவு சமர்த்தா சொல்லுறார் பாருங்க….நெல்லைக்கு ஒரே சந்தோஷம்!!!! ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 17. //.. அப்பாடி! ரெண்டுவாரம் தலைவலி இல்லாம இருக்கலாம் ..//

  தலைவலின்ன ஒடனே டக்குன்னு பொருத்தமா படம்போட்டுர்றீங்களே ?

  பதிலளிநீக்கு
 18. // படங்கள் ஒரு மாதிரியாக..//

  பழைய நெனப்புடா.. பேராண்டி..
  பழைய நெனப்புடா!...//

  ஹா ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா அதே அதே...

  கீதா

  பதிலளிநீக்கு
 19. (வந்துதான் ஆகணும்! நான் ரெண்டுவாரம் விடுமுறையில் குரோம்பேட்டை செல்கிறேன்!) //

  ஹா ஹா ஹா அப்ப குரோம்பேட்டை குறும்பனாக அவதாரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 20. நீலவண்ணக் கண்ணன் நீல வண்ணக் கண்ணனாகத்தான் இருக்காரா....நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன் போல...சரி அதிருக்கட்டும்..

  //அடுத்தவாரம் நீலவண்ணக் கண்ணன் பதில் என்று போட்டிருக்கீங்க! இப்போ பாருங்க ! கேள்விகள் பல பாய்ந்து ஓடிவரும்!//

  .நீலவண்ணக் கண்ணன் க்கு அதுக்காக இப்படி சிம்பாலிக்கா நீல வண்ண உடையில் த்ரிஷா படமா!! ஹா ஹா ஹா ஹா.....நீல வண்ண உடையில் அனுஷ் படம் போட்டிருந்தால் இன்னும் குஷியாகப் பதில் சொல்ல பாய்ந்தோடி வருவார்...ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 21. தலைவலின்ன ஒடனே டக்குன்னு பொருத்தமா படம்போட்டுர்றீங்களே ?//

  ஹா ஹா ஹா ஹா ஆமா அந்த படத்திலிருக்கறவங்களுக்கும் தலைவலிதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 22. அனுஷ் படம் வேறு ஒன்றுமே கிடைக்கலையாக்கும்....தமனாக்கா படம் மட்டும் நல்லதா போட்டுருக்கீங்க..

  அரமவின் கண்டனக் குரல்கள்...!!!!!!!!! இதை பானுக்கா பார்க்காம போயிட்டாங்க போல...

  கீதா

  பதிலளிநீக்கு
 23. எல்லா கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கின்றன. சகோதரிகள் கீதா சாம்பசிவமும், பானுமதி வெங்கடேஸ்வரனும் நன்றாகவே கேள்விகள் கேட்கிறார்கள்.

  இதோ எனது இன்றைய கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

  திரையுலகில் பெண்கள் தங்களுக்காகப் போராடத் தொடங்கியுள்ளார்கள். இது தொடருமா இதனால் நல்ல மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கலாமா? இல்லை நிலைமை பழையபடிதான் இருக்குமா?

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 24. ஓ, இங்கே இருக்கா துளசியின் அந்தக் கேள்வி! நல்ல கேள்வி தான். ஆனால் நான் கவனிக்காமல் பதிலை அங்கே சொல்லி இருக்கேன். :)))) கேஜிஜியும் , யுகேஜியும், எல்கேஜியும் நர்சரிப்பாப்பாவும் டே கேர் பாப்பாவும் என்ன சொல்லப் போறாங்கனு பொறுத்திருந்து பார்க்கலாம். :)))))

  பதிலளிநீக்கு
 25. மக்கள் ஏன் ஜோஸ்யம் பார்க்கிறார்கள்?

  1. கடவுளை நம்பினாலும் ஏன் ஜோஸ்யம்? அப்போ கடவுளிடம் நம்பிக்கை குறைகிறதா? ஜோஸ்யத்தில் நம்பிக்கை கூடுகிறதா? இல்லை என்றால் இறைவனை எப்படித் தொழுவது என்ற குழப்பத்தில் இறைவனிடம் மன்றாடினால் பதில் நேரடியாகக் கிடைப்பதில்லை என்பதால், ஜோஸ்யம் சொல்லும் வழிகளில் இறைவனை வழிபட எளிது என்று நினைத்து, விடை தெரிய முற்படும் மனிதனின் பரபரப்பான அவசர குணம் ஜோஸ்யத்தை நாட வைக்கிறதா?

  2. இல்லை மனிதனின் இயல்பான க்யூரியாசிட்டியா எதிர்காலத்தில்/அடுத்து என்ன நடக்கும் என்ற அறிய முற்படும்

  3. இன்செக்யூர்ட் ஃபீலிங்கா?

  கீதா

  கீதாக்கா, பானுக்கா, நெல்லை இதற்கான பதிலை நீங்க அடுத்த புதன் விடைகளின் போது சொல்லுங்க...

  பதிலளிநீக்கு
 26. அந்தத் தயிர்சாதம், நாரத்தங்காய் சாப்பிட்டிருப்பது தான் தமன்னாக்காவா? அப்போக் கீழே நீலவண்ணக் கண்ணனைப் பார்த்துச் சிரிக்கிறது யாருங்கோ! என்னமோ தெரியலை! இவங்க எல்லார் மூஞ்சியும் ஒரே மாதிரி இருக்கு! சினிமாவில் தான் இப்படின்னா இங்கேயுமா? :)))))

  பதிலளிநீக்கு
 27. தயிர் சாதம் சாப்பிட்டால் ஏழைனு அர்த்தமா நீலவண்ணக் கண்ணரே? பதில் சொல்லுங்க! பால் வாங்கணும். அதை உறை ஊத்தித் தயிராக்கணும். உப்புப் போட்டுப் பிசைந்து நாரத்தங்காயோடு சாப்பிடணும். நாரத்தங்காயும் வாங்கணுமே? அதுக்குக் காசு?
  தயிர்சாதம், நாரத்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டால் ஏழைனு இனிமே சொல்லுவீங்க? :)))))

  த.சா+நா.கா. காம்பினேஷனுக்காகவே நான் சாப்பிடுவேனாக்கும்! :)))))

  பதிலளிநீக்கு
 28. இப்போக்கொஞ்சம் சீரியஸான கேள்வி! பெண் குழந்தைகளை இப்படிப் பாடாய்ப்படுத்தறாங்களே! அதை எப்படி நிறுத்தறது? அரசு சட்டங்கள் போட்டாலும் யாரும் பயப்படறதே இல்லையே! என்ன செய்தால் திருந்துவார்கள்?

  பதிலளிநீக்கு
 29. மிச்சத்துக்கு அப்புறமா வரேன்!

  பதிலளிநீக்கு
 30. தி/கீதா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் அடுத்துக்கேட்க இருந்த கேள்விகள்! நீங்க என் வாயிலிருந்து பிடுங்கிட்டீங்க! அதனால் நான் பதில் சொல்ல மாட்டேன், மாட்டேன், மாட்டவே மாட்டேன்! :)))))

  உங்க திருமணம் ஜாதகப் பொருத்தம் பார்த்து நடந்ததா?

  உங்க வீட்டில் மற்றத் திருமணங்கள்?

  ஜாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்வது நல்லதா? அல்லது மனப்பொருத்தம் மட்டும் போதுமா?

  உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா?

  எந்த ஜோசியர் சொன்னதாவது உங்க வாழ்க்கையில் நடந்திருக்கா?

  கீதா முந்திடப் போறங்கனு அவசரம் அவசரமாக் கேட்டிருக்கேன். :)))))

  பதிலளிநீக்கு
 31. அட! அடுத்த வாரம் நீல வண்ண கண்ணன் பதில்களா? அப்போ அழகான அனுஷ்காவின் படங்களை எதிர்பார்க்கலாமா?

  பிரவேசிக்கும் பொழுதே புரட்டிப் போடும்படியானா செயல்களை அல்லது சாதனைகளை புரிபவர்களுக்கு புயல் என்னும் பட்டம் தரப்படுகிறது. உ.ம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், வைகைப்புயல் வடிவேலு. இது ஒரு புறம் இருக்கட்டும், இன்னொரு புறம் நிஜமான புயல்களுக்கு பெரும்பாலும் பெண்களின் பெயர்களைத்தான் வைக்கிறார்கள். இது இரண்டையும் எப்படி இணைப்பீர்கள்?

  பதிலளிநீக்கு
 32. அரமவின் கண்டனக் குரல்கள்...!!!!!!!!! இதை பானுக்கா பார்க்காம போயிட்டாங்க போல...

  பார்த்தேன், பார்த்தேன். ஒருத்தரைப் பார்த்து பொறாமைப் பட்டு அவரின் பெருமையை குறைக்கணும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டாலே, எதிராளிகள் தோற்க தொடங்கி விட்டார்கள் என்றுதானே பொருள்? அதனால்தான் பேசாமல் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 33. கீதாவின் கேள்வி நம்பர் 1-ஐப் படித்ததும், என் கண்கள் மேலும் கீழும் துழாவின. இது கீதாவின் கேள்விதானா? அதிராவின் வாடை தூக்கலாக இருக்கிறதே.. ஒரு கேள்வி ஒரு பாரா முழுதும் வியாபித்தால் அது அதிராவல்லவா?

  ஒருவேளை, அதிராவும் கீதாவும் ஒற்றர்தானா -ஐ மீன் - ஒருத்தர்தானா? ம்ஹ்ம்.. எவ்வளவு தெளிவாக இருந்தது, ஒருகாலத்தில் எபி?

  பதிலளிநீக்கு
 34. //த.சா+நா.கா. காம்பினேஷனுக்காகவே நான் சாப்பிடுவேனாக்கும்! :)))))//
  கையை கொடுங்க கீதா அக்கா!அது நார்த்தங்காய் ஊறுகாயோடு தயிர் சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எச்சில் கையாக இருந்தாலும் பரவாயில்லை.
  தயிர் சாதம் +நார்த்தங்காய் ஊறுகாய் காம்பினேஷனுக்கு பாதி ராஜ்ஜியத்தையே எழுதி வைக்கலாம் என்று தோன்றும்.(என்னிடம்தான் ராஜ்ஜியம் கிடையாதே, ஹி! ஹி!)

  பதிலளிநீக்கு
 35. @ஏகாந்தன், :)))))) தி/கீதாவே தான்!

  பதிலளிநீக்கு
 36. //என்னிடம்தான் ராஜ்ஜியம் கிடையாதே, ஹி! ஹி!)// அதுவே சொர்க்க சாம்ராஜ்யம் தானே! :))))

  பதிலளிநீக்கு
 37. என்னுடைய முதல் கேள்விக்கான இணைக்க மறந்த பின் குறிப்பு: அதற்கு போட்டோ ஷாப்பின் உதவியை நாடக்கூடாது சொல்லிப்புட்டேன்.

  பதிலளிநீக்கு
 38. நோ !! என் கேள்விகளுக்கு பதில் வரலை ??

  ஒரு வாரம் முழுதும் கேள்விகளை அனுப்பலாம்தானே ?
  எங்கே என் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் ?

  பதிலளிநீக்கு
 39. Angel said...
  நோ !! என் கேள்விகளுக்கு பதில் வரலை ??

  ஒரு வாரம் முழுதும் கேள்விகளை அனுப்பலாம்தானே ?
  எங்கே என் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் ?

  சாதாரணமாக நாங்கள் ஞாயிறு இரவு வரை பதிவில் காணப்படும் கேள்விகளையும், திங்கள் மாலை வரை வாட்ஸ் அப் பில் எங்களுக்கு வருகின்ற கேள்விகளையும், உடனே தொகுத்து, engalblog editors என்னும் வாட்ஸ் அப் குழுவில் பரிமாறிக்கொள்வோம். ஒவ்வொரு ஆசிரியரும் தருகின்ற பதில்களை, செவ்வாய்க்கிழமை மாலைக்குள் தொகுத்து வைத்துவிடுவோம். செவ்வாய் இரவு பத்து மணிக்கு, மறுநாள் காலை வெளியாகும் வகையில் schedule செய்துவிடுவோம்.
  உங்கள் கேள்விகளை, இப்போதான் பார்த்தேன்.
  அடுத்த வார பதில்களில், உங்கள் கேள்விகளுக்கு முதல் மரியாதை செய்துவிடுகிறோம். பொறுத்தருள்க !

  பதிலளிநீக்கு
 40. // Bhanumathy Venkateswaran said...
  என்னுடைய முதல் கேள்விக்கான இணைக்க மறந்த பின் குறிப்பு: அதற்கு போட்டோ ஷாப்பின் உதவியை நாடக்கூடாது சொல்லிப்புட்டேன்.//

  அட! அடுத்த வாரம் நீல வண்ண கண்ணன் பதில்களா? அப்போ அழகான அனுஷ்காவின் படங்களை எதிர்பார்க்கலாமா?.... இதுதானே உங்க முதல் கேள்வி? இதுல 'படக்கடை' க்கு எங்கே வேலை இருக்கு!

  பதிலளிநீக்கு
 41. @கௌதமன் சார் :) சும்மா விளையாட்டுக்குத்தான் சவுண்ட் விட்டேன் :)
  பரவாயில்லை . கேள்விகளும் மறந்திடக்கூடாதுனு உடனே முந்தாநேத்து எழுதினேன் .ஏன்னா நானா எப்போ வருவேன் எங்கே வருவேன்னு எனக்கே தெரியாது :)
  நீங்க அடுத்த வாரமே பதில் கொடுங்க

  பதிலளிநீக்கு
 42. ) கேஜிஜியும் , யுகேஜியும், எல்கேஜியும் நர்சரிப்பாப்பாவும் டே கேர் பாப்பாவும் என்ன சொல்லப் போறாங்கனு பொறுத்திருந்து பார்க்கலாம். :)))))//

  ஹா ஹா ஹா ஹா கீதாக்க்கா சிரிச்சு முடிலைக்கா...அந்த டே கேர் பாப்பா நீலவண்ணக் கண்ணன் தானே !!!

  கீதா

  பதிலளிநீக்கு
 43. தி/கீதா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் அடுத்துக்கேட்க இருந்த கேள்விகள்! நீங்க என் வாயிலிருந்து பிடுங்கிட்டீங்க! அதனால் நான் பதில் சொல்ல மாட்டேன், மாட்டேன், மாட்டவே மாட்டேன்! :)))))//

  ஹையோ ஹையோ முடிலை முடிலை...கீதாக்காவும் நான் கேக்க நினைச்சதையே கேட்டுருக்காங்க ..ஹா ஹா ஹா ஹா ஹா.....ஹைஃபைவ்!!! கீதாக்கா...ஆமாம் உங்க மனசைப் புடிச்சு கேட்டுட்டேன்....இடைல நெட் போயிருச்சு வந்தா ....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  கீதா முந்திடப் போறங்கனு அவசரம் அவசரமாக் கேட்டிருக்கேன். :)))))// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....நான் கேக்க நினைச்சதுதான் முந்திக்கிட்டீங்க... ஹா ஹா ஹாஹ் ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 44. ஏகாந்தன் அண்ணா உங்கள் கிளவிகள்/....//கீதாவின் கேள்வி நம்பர் 1-ஐப் படித்ததும், என் கண்கள் மேலும் கீழும் துழாவின. இது கீதாவின் கேள்விதானா? அதிராவின் வாடை தூக்கலாக இருக்கிறதே.. ஒரு கேள்வி ஒரு பாரா முழுதும் வியாபித்தால் அது அதிராவல்லவா?

  ஒருவேளை, அதிராவும் கீதாவும் ஒற்றர்தானா -ஐ மீன் - ஒருத்தர்தானா? ம்ஹ்ம்.. எவ்வளவு தெளிவாக இருந்தது, ஒருகாலத்தில் எபி?//

  ஓ அதிரானதும் டங்க் ஸ்லிப் ஆயிடுது...கேள்விக் குறி வந்திருப்பதால் எபிக்கான கேள்விகள் அது!!! ஸோ வீ எஸ்கேப்...ஓவர் டு ஆசிரியர்கள்...அடுத்த புதன் உங்களுக்கு அவங்களே பதில் சொல்லுவாங்க...ஹா ஹா ஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 45. பதிவர்களின் பெயரில் கேள்வி பதிலாக பதிவா?
  அருமை நண்பரே...!

  பதிலளிநீக்கு
 46. என்ன இண்டைக்குப் பெண்கள் மயமாகவே இருக்குதே.. “நீ.....கேட்டால்ல்ல்ல்ல் நான்..... சொ”..ர்க்கம் கூட்டிப்போவேனே என தலைப்பு வேற போட்டிட்டு பாவனாக்காவை உள்ளே இறக்கியிருக்கிறார் கெள அண்ணன்.. இதுக்காகத்தான் அனுக்காவுக்கு வயசாகிட்டுது என அறிவிச்சவர்போல ஹையோ ஹையோ:))..

  1. அழகிய மிதிலை நகரினிலே.. ஆருக்கு யானகி காத்திருந்தா:)???

  1. குண்டக்க மண்டக்க என்றால் என்ன?:).

  3. பாரி காலத்தில் ஏழைகளே இல்லையோ?:), அப்படி ஏழைகள் இருப்பின் எதுக்காக ஒரு முல்லைக்கொடிக்கு தன் தேரை முட்டாகக் கொடுத்தார்? அவருக்கு என்ன பிரச்சனை?:).. [இப்பூடி எல்லாம் அதிரா அடிக்கடி ஜிந்திப்பேன், இப்போதான் என் டவுட்ஸ் ஐக் கிளியர் பண்ண நல்ல ஒரு மேடை அமிஞ்சிருக்கே:)).. ].

  பதிலளிநீக்கு
 47. ///அதிராவின் வாடை தூக்கலாக இருக்கிறதே.. ஒரு கேள்வி ஒரு பாரா முழுதும் வியாபித்தால் அது அதிராவல்லவா? ///
  ஏ அண்ணன் எனை இங்கின ஆரும் கொப்பி பண்ணி என்னைப் போலவே பேசுகினமோ?:) உடனே உங்கட சுட்டு விரல் நுனியை மட்டும் காட்டிடுங்கோ தட்டி விட்டிடுறேன்ன்ன்:))

  http://www.funnycatpictures.net/wp-content/uploads/2012/07/cool-cat-holding-gun.jpg

  பதிலளிநீக்கு
 48. //உண்மை விளம்பியிடம் ஒரு கிளவி:) சே.சே.. கேள்வி:).. அந்த உண்மை விளம்பியின் இன்றைய வயசென்ன?

  ப: இன்றைய வயதா? நாளைய வயதைவிட ஒருநாள் குறைவு!//

  அச்சச்சோ ஆபத்பாண்டவா.. அருந்ததிப் புதல்வா.. கிளவியில ஒரு குறை வச்சிட்டனே:)) சே..சே.. கேள்வியில “இன்றைய” எனப் போட்டு ஒரு குறை வச்சிட்டனே:)).. இதுதான் கேள்வி கேய்க்கும்போது நிதானம் தேவையாம்ம்:))..

  உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்தானே.. தெரியாட்டிலும் அதிரா ஓல்ரெடி இங்கின எழுதிட்டேன் அக் கதையை தேடிப் படிங்கோ:)).. சோட்டா ஒரு வசனம்..

  கடவுள் ரொம்பக் கோபத்தோடும் ரயேட்டோடும் இருந்த நேரம் பார்த்து, பேன்[லைஸ்] எல்லாம் கூட்டமாகப் போய்க் கேட்டினமாம் .. “கடவுளே நாங்க எங்கே இருப்பது” என... எரிச்சலில் இருந்த கடவுள் சொன்னாராம்ம். “என் தலையில இருங்கோ”.. எண்டு அப்பூடி ஆச்சேஎ:)) சே..சே.. ஓடுற மீனில நழுவுற மீன் ஆக விட்டிட்டனே:) சரி சரி வலையில் தண்ணி சிக்காமல் போகலாம் ஆனா மீன்கள் சிக்குமாமே:) ஹா ஹா ஹா எனக்கு இண்டைக்கு என்னமோ ஆச்சூஊஊஊஊ:))

  பதிலளிநீக்கு
 49. //தெரியாமல் நான்வெஜ் சாப்பிட்டிருக்கின்றீர்களா ?// - விளக்கம் இல்லாமல் உண்டு/இல்லை என்றா பதில் சொல்றது?

  ப: ஆமாம்!///

  ஆவ்வ்வ்வ்வ் மாட்டி மாட்டி.. தெரியாமல் இல்லை ச்சும்மா எப்படி இருக்கும் எனும் ஆர்வமாகக்கூட இருக்கும் ஆனா அப்பா அம்மாவிடம் மாட்டுப்படப்போகிறோமே என தெரியாமல் எனச் சொல்லியிருப்பார் ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ.. கெள அண்ணன் காணாமல் போகப்போறாராம் ரெண்டு கிழமைக்கு:)

  பதிலளிநீக்கு
 50. தமனாக்கா இருக்காக.. பாவனாக்கா இருக்காக.. வடிவேல் அங்கிள் இருக்காக செந்தில் மாமா இருக்காக அனுக்கா இல்லயேஏஏஏஏஏஏஏஏஏ:)).. அடுத்த வாரம் தனிய அனுக்கா வாரமாகவே மாத்திடப்போகிறார்ர்.. புதன் பொறுப்பை எடுக்கப் போகும் 3 ஆவது ஆசிரியர்:)) ஹா ஹா ஹா..

  //அடுத்தவாரம், அவருக்கு நானும் கேள்விகள் கேட்கப்போகிறேன்!
  ஜூட்! ஸ்டார்ட் மூசிக்கு !! ///

  யேச்ச்ச் யேச்ச்ச்ச்ச்ச் ஸ்ராட் மூஊஊஊஊஊஊஊசிக்க்க்க்க்க்க்க்க்க்...

  4. உங்களுக்கு அனுக்காவைப் பிடிச்சிருப்பதன் ரகசியம் என்னவோ? ஏனெனில் படத்தில மட்டுமே பார்த்துத்தான் பிடிச்சிருக்கும்.. நேரில் பாகவில்லை, குணம் நடை உடை தெரிந்திருக்க ஞாயமில்லை எனவே அவவி படத்தில மட்டும் பார்த்து பிடித்ததன் காரணம் என்ன? டெல் அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்?:))) ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
 51. //கீதா முந்திடப் போறங்கனு அவசரம் அவசரமாக் கேட்டிருக்கேன். :)))))//

  ஹா ஹா ஹா கீசாக்கா அவசரத்தில வந்த குழந்தைகள் வெரி சோரி டங்கு ஸ்லிப்பாச்ச்ச்ச்.. கிளவிகள் சே..சே மறுபடியும்ஸ்லிப்ட் கர்ர் கேள்விகள் டூப்பரூஊஊஊஊஊ:).. ஆனா கீசாக்காவுக்கு பொருத்தம் பார்த்த திருமணமோ?:) நீங்க என்ன ராசி சொல்லவே இல்லையே ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
 52. 5.உங்களுக்கு மனதில் பதிந்து விட்ட சில பாடல் வரிகள்.. பாடல்கள் அல்ல... அவை பாட்டின் நடுப்பாகத்தில் கூட இருக்கலாம்.. ஆனா அடிக்கடி மனதில் ஓடுபவை அப்படி ஏதும் இருக்கோ?:)..

  பதிலளிநீக்கு
 53. கேள்வி கேட்கத்தெரியாமல் வளர்ந்தவர்கள் கேள்வி கேட்பது எப்படி. என் கணினியில் கேள்விக்குறியே இல்லை. இது ஜெர்மன் கணினி.ஹாஹா.

  பதிலளிநீக்கு
 54. இல்லை. ஐம்புலன்களால் அறிவது அறிவு. அப்படி அறிந்ததை, மூளை பகுத்தறிந்து தெரிந்துகொண்டால் புத்தி. இவை எதையுமே சாராமல், சிலருக்கு மட்டும் ஏற்படுவது ஞானம். மனசு என்பது நம் ஐம்புலன்களால் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. மூளை ஒரு மெஷின். ஐம்புலன்கள் அனுப்பும் செய்திகளை, உடனுக்குடன் ப்ராசஸ் செய்து, எதிர் வினை ஆற்றக் கட்டளை இடுகின்ற அல்லது சிக்னல் கொடுக்கின்ற இயந்திரம். //

  அருமையான பதில்.

  //KILLERGEE Devakottai said...
  படங்கள் ஒரு மாதிரியாக போகுதே..//

  அதனே!

  பதிலளிநீக்கு
 55. அசத்தல் படங்களா போட்டு அசத்தி பூட்டீங்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 56. அட! அடுத்த வாரம் நீல வண்ண கண்ணன் பதில்களா? அப்போ அழகான அனுஷ்காவின் படங்களை எதிர்பார்க்கலாமா?//

  போட இல்லைனா அரம பொயிங்கும்னு நான் சொல்ல மாட்டேன் மாட்டேன் ட்டேன் டேன் ன்.....ஏன்னா நீவக டபால்னு வித்தியாசமா சொல்லி போட்டிருவார்....பார்ப்போம் பானுக்கா...ஏதாவது ஏடா கூடமா நீவக போட்டார்னு வையுங்க இருக்கவே இருக்கு....ஹா ஹா ஹா

  நீவக பதில்னதும் கெளவி கேட்டுப்புட்டோம்ல....நீவக இப்பவே மேசைக்கு அடில படுத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம்...!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 57. அட! அடுத்த வாரம் நீல வண்ண கண்ணன் பதில்களா? அப்போ அழகான அனுஷ்காவின் படங்களை எதிர்பார்க்கலாமா?.... இதுதானே உங்க முதல் கேள்வி? இதுல 'படக்கடை' க்கு எங்கே வேலை இருக்கு!

  இது என் முதல் கேள்வி அல்ல. பின்னூட்டம். இதுவரை கேட்டிருப்பது ஒரே ஒரு கேள்விதான், இனிமேல் ஏதாவது கேட்கத் தோன்றினால் பின்னர் அனுப்புவேன். அதனால் இதை முதல் கேள்வி என்று குறிப்பிட்டு விட்டேன். ஐயம் சாரி, நானும் குழம்பி உங்களையும் குழப்பி விட்டேன்.

  பதிலளிநீக்கு
 58. வணக்கம் சகோதரரே

  கேள்வி பதில்கள் இந்த தடவையும் வழக்கம் போல சுவாரஸ்யம்.
  எனக்குத்தான் கருத்துரைக்க தாமதமாகி விட்டது. புதன் பதிவுக்கு வியாழன் வந்து கருத்து தருகிறேன். மன்னிக்கவும்.
  இத்தனை பேர் அற்புதமாக கேள்வி கேட்கிறார்கள். எனனிடம் மட்டும் ஒரு கேள்வியும் ஏன் மாட்ட மாட்டேனென்று அடம் பிடிக்கிறது? தெரியவில்லை. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 59. இப்போ கேள்வி பதில் படித்துவிட்டேன்.

  படிக்கறவங்கள்ல யார் யார் யாருடைய ரசிகர்னு தெரிஞ்சுக்க பல நடிகைகளின் படங்கள் போட்டிருக்கீங்க. இது ஆணாதிக்க மனோபாவமா இல்லை பெண்கள் யாருடைய ரசிகைகளும்அல்ல, அப்படி இருந்தால் வடிவேலுவின் ரசிகையாக மட்டும்தான் இருக்க முடியும்னு நினைக்கறீங்களா?

  பிளாக்கில் ஆர்வத்துடன் கலந்துகொள்வதற்கும் ஒரு ரிடைர்மென்ட் ஏஜ் உண்டா? கோபு சார், கந்தசாமி சார், தமிழ் இளங்கோ சார், சமீபமா ஜீவி சார் இன்னும் பலர் இடுகைகளைக் குறைக்கிறாங்க இல்லைனா எழுதறதே இல்லையே? என்ன காரணம்?

  இப்போ பயணத்தில் குரும்பூர் என்ற ஊரையும் ரயில்வே ஸ்டேஷனையும் பார்த்தேன். யாருக்காவது குரும்பூர் குப்புசாமி ஞாபகம் இருக்கா?

  பதிலளிநீக்கு
 60. மனம் புத்தினு இரண்டுதான் இருக்கு. இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது ஞானப் பாதை தொடங்கும்.

  கீசா மேடம்தான் உங்களை சோதனை செய்ய இந்தக் கேள்வி கேட்டிருக்காங்கன்னா, பதில் கேஜிஒய்கூட சரியாச் சொல்லலையே

  பதிலளிநீக்கு
 61. எனக்கு சில சமயம் எக்சாம் நாளை இருக்கு இன்னும் நிறையப் படிக்கவேண்டுமேன்னு கனவில் பயந்து, எழுந்தவுடன், அப்பாடா.. இப்போ வேலைனா பார்க்கிறோம்னு மனசு ரிலாக்ஸ் ஆயிருக்கு. உங்களுக்கு குறிப்பிடும்படியான, வெளியில் சொல்லக்கூடிய கனவுகள் (தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்துக்கும்படியான) என்ன வந்திருக்கு?

  பலர் பதிலளித்து குழப்பாம ஒரு பதிலை மட்டும், ரசனையான ஒன்றை, வெளியிடுவது ரசனையைக் கூட்டுமா?

  பதிலளிநீக்கு
 62. பத்திரிகைகளுக்கு எழுதியதுண்டா? அந்த அனுபவம் சொல்லுங்க

  திருடியது உண்டா? அந்த அனுபவமும் அதை எப்படி கடந்து வந்தீங்க என்பதும்.

  மன்னிப்பு கேட்டிருக்கீங்களா, குறிப்பா இணை/துணையிடம்? அப்போ அவங்க ரியாக்‌ஷன் எப்படி?

  பதிலளிநீக்கு
 63. ரொம்ப கடவுள், நேர்மை, பக்தி என்றெல்லாம் சொல்றவங்க, நல்லவங்களா இல்லாத்தை கவனிச்சிருக்கீங்களா? அப்போ இறை நம்பிக்கையைப் பத்தி, அதை பிரீச் பண்றவங்களைப் பற்றி என்ன தோணும்?

  இன்னொரு வீட்டில் சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம்னு (சில அருமையான உணவையோ, உண்மைப் பசி சமயத்திலோ) சொல்ல வெட்கப் பட்டுக்கொண்டு அப்புறம் ஏன் அப்படிச் செய்தோம்னு தோணியிருக்கா?

  பதிலளிநீக்கு
 64. நாயை அடிப்பானேன் ... சும்ப்பானேன் என்ற பழமொழி, எதுக்கு அதீத கலோரி உணவைச் சாப்பிடுவானேன், பொழுது போகாமல் (யாருக்கும் உபயோகம் இல்லாமல்) நடப்பானேன் என்பதை ஞாபகப்படுத்துதா?

  பதிலளிநீக்கு
 65. தமிழ் மண ரேங்க் காலத்தில், ஆஜர் கடமைக்காக பின்னூட்டம் போடுவது இடுகைக்கு பெருமை சேர்க்குதா? பின்னூட்டம் இடுவதன் பர்பஸ் என்ன?

  பதிலளிநீக்கு
 66. இப்போ பயணத்தில் குரும்பூர் என்ற ஊரையும் ரயில்வே ஸ்டேஷனையும் பார்த்தேன். யாருக்காவது குரும்பூர் குப்புசாமி ஞாபகம் இருக்கா?//

  ராணி பத்திரிக்கையில் குரங்கு பெண், ஆண் வருவார்கள் அவர்கள் பேசும் வசனம் குரும்பூர் குப்புசாமிதான் எழுதுவார்.

  பதிலளிநீக்கு
 67. கோமதி அரசு, குரும்பூர் குப்புசாமி தொடர் நாவல் எல்லாம் கூட எழுதி இருக்காரே!

  பதிலளிநீக்கு
 68. நிறைய கதைகள் எழுதுவார் குரும்பூர் குப்புசாமி

  பதிலளிநீக்கு
 69. கோமதி அரசு மேடம் - நீங்கள் "குரங்கு குசலா"வைச் சொல்றீங்களா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!