புதன், 11 ஜூலை, 2018

கேள்வி பதில் புதன் 180711

       
கீதா சாம்பசிவம் :

கௌதமன் சார், எல்கேஜி நீங்க தானே? சீனியர் கேஜிஒய்! ஜூனியர் கேஜிஎஸ்! அப்போ ஶ்ரீராமும், காசு சோபனாவும் குழந்தைங்களா? 

ப: ஆமாம்! வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாது!


அவங்க ரெண்டு பேரில் பல் முளைக்காத குழந்தை யார்?

ப: பல் இருக்கும்; ஆனால் கடிக்காது!

எல்லாம் சரி! மத்த இரண்டு பேரும் ஏன் எ.பி. ஆசிரியர்களாக இல்லை? கேஜிவி மற்றும் கேஜிஜ! தனி ஆட்சியைத் தான் விரும்பறாங்களா? 

ப: இரண்டு பேரா! மூன்று பேர் இருக்கிறார்கள். ஒருவர் தனிக்கட்சி. வேறொருவரின் அலுவலக அனுபவங்கள் அடிக்கடி ஸ்ரீராமின் கைவண்ணத்தில் வெளியானதுண்டு. எல்லோருக்கும் பெரியவர் இப்போதான் ப்ளாக் படிக்க ஆரம்பித்திருக்கிறார். 

எல்லாரும் ஆசிரியர் பணி செய்ய வேண்டுமா என்ன ? இருக்கிற குழப்பம் போதாதா ?

உங்க எல்லோருக்குமே நகைச்சுவை உணர்வு அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம்? 

ப: சீனியர் கே ஜி (ஆசிரியர்)தான் காரணம் என்று நினைக்கிறேன். அவர் படிக்கும் தமிழ், ஆங்கில நகைச்சுவை கட்டுரைகளை என் சின்ன வயதிலேயே அவர் எல்லோருக்கும் படித்துக் காட்டுவார். நான் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஊர் நூலகத்திலிருந்து கொண்டுவந்து, கல்கியின் நகைச்சுவை கட்டுரைகள் (பூரி யாத்திரை)  போன்றவற்றை படித்துக் காட்டியது எனக்கு நன்கு நினைவில் உள்ளது. 
அம்மா, அப்பா இருவருக்குமே நகைச்சுவை பிடித்தமான ஒன்று.

உங்க எல்லோருக்குமே சங்கீதத்தில் ஆர்வமும், ருசியும் இருக்கு. எல்லோருமே பாடுவீங்களா? கேஜிஜ நல்லாப்பாடுவார்னு ஶ்ரீராம் சொன்னார். அது போல உங்க எல்லோருக்கும் சங்கீத ஞானம் உண்டா?
கேஜிவியும் கேஜிஜவும் ஏன் இதில் ஆ"சிரி"யர்கள் பட்டியலில் இல்லை? அதே போல் ஶ்ரீராமின் அண்ணா?அவர் ஏன் இல்லை? 

ப: அம்மா அப்பாவின் சங்கீத ஆர்வம் எங்களுக்கும் வந்துவிட்டது. எல்லோருமே கேட்டு ரசிப்போம். கே ஜி ஜ மட்டும் அல்ல, அவருடைய பையன்களும் பாட்டு பாடுவதில் மன்னர்கள். 

  
கானம் கொஞ்சமே கொஞ்சம் உண்டு. ஞானம் அருளப்படவில்லை !
ஆர்வம் ஏராளமாக உண்டு.


குரோம்பேட்டை குசும்பன் வந்தால் கேஜிஜி வர மாட்டார். கேஜிஜி வந்தால் குசும்பன் ஒளிஞ்சுப்பார்! இருவரும் ஒருவர் என்பதாலா? 

ப: குறும்பன் என்று சொல்லுங்கள். குறும்பு என்பது childlike (not childish). என்னைப் பொறுத்தவரை, குசும்பு என்பது மற்றவரை (மனதால்) காயப்படுத்துவது. குரோம்பேட்டை குறும்பனை இந்த மாதத்தில் மூன்றாவது வாரத்தில் சந்திக்க உள்ளேன்.  

ஒருத்தர் இருப்பதை அடுத்தவர் சகிக்க மாட்டார் என்பதை இதுவரை ரகசியமாக வைத்திருந்தோம்.

முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே ஒரு தரம் கேஜிஜி சார், அதிகாலை வேளையில் காஃபி போடும்போது (மைக்ரோவேவ்?) அமானுஷ்யமாக யாரோ வந்து பால் ஊத்தினதாப்படிச்ச நினைவு! இப்போவும் அதே அமானுஷ்யம் தான் பால் கொடுக்கிறாரா? பால் பாத்திரத்தில் இருக்கும் தானே! அதுவும் மறைஞ்சுடுமா? 

ப: யாரு? ஓ! அந்த பால்காரரா! . அவர் எங்க பால்காரர் இல்லை. நல்ல வேளை! அதனால அந்தப் பாலிலிருந்து ஆவி என்னைப் பிடித்துக்கொள்ளவில்லை! எதுத்த வீட்டு பால்காரர். அதற்கப்புறம் அவரைக் காணோம்! 


கோமதி அரசு:
    
கண்கொடுத்தவனிதம் ஊர் பேர் அழகாய் இருக்கே!
இப்படியே சொல் வழக்கில் இருக்கா? மாற்றிவிடாமல் இருக்கிறார்களா மக்கள்? 


ப: என் மனைவியின் 'பான் கார்டி'ல் அந்த ஊர்ப் பெயர் அப்படியேதான் சிதையாமல் இருக்கு! 
   
கங்குடுத்த வனிதம் என்பதற்கு மேலாக யாராலும் அதை சிதைக்க முடியவில்லை.

அதிரா :

////பதில் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே...///

ஏன் இது ஸ்ரீராமுக்குப் பிடிக்கவில்லை?:) 

ப: அவர் ஒரு உண்மை விரும்பி! 

துளசிதரன் :

பள்ளியில் படிக்கும் போது லஞ்ச் கொண்டு செல்வது வழக்கம் தான். கல்லூரிக்கு வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு சென்றீர்களா இல்லை கேண்டினில் சாப்பிடுவீர்களா? 

ப: நான் படித்த சமயம், நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் காண்டீன் கிடையாது. வீட்டிலிருந்து பலநாட்கள் தயிர்சாதம், உப்பு நார்த்தங்காய் கொண்டு சென்று சாப்பிட்டது நினைவில் உள்ளது. வீட்டிலிருந்து பாலிடெக்னிக் இரண்டரை கிலோ மீட்டர் தூரம். சக்தி விலாஸ் பஸ் அல்லது நடராஜா சர்விஸ் !

நான் படித்தது தபால் கல்லூரி !

பள்ளியில், கல்லூரியில் முன் பெஞ்சா பேக் பெஞ்சா? முன் பெஞ்சில் இருந்து கொண்டு ஆசிரியர் பாடம் எடுத்த போது தூங்கியதுண்டா? தூங்கும் போது கேள்வி கேட்டால் உங்கள் ரியாக்ஷன் எப்படி? 
பேக் பெஞ்ச் என்றால் பாடம் கவனித்ததுண்டா? இல்லை ஆசிரியரைச் சொல்லி நகைச்சுவையா? அப்படி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா? 

ப: எப்பவுமே முன் பெஞ்சுதான். வகுப்பில் தூங்கியது இல்லை. அப்பப்போ (போர் அடிக்கும் சமயங்களில்) பக்கத்துப் பையன்களிடம் வம்பு செய்துகொண்டிருப்பேன். சோசியல் ஸ்டடீஸ் வகுப்பில் அப்படி வம்பு செய்துகொண்டிருந்த சமயத்தில், ஆசிரியர் என்னைப் பார்த்து ஏதோ  கேள்வி கேட்க, என்ன கேள்வி கேட்டார் என்று தெரியாமல் நான் எழுந்து, அவரைப் பார்த்து முழித்தேன். அப்போ இன்னொரு பக்கத்தில் உட்கார்ந்திருந்த (குறும்புக்கார) பாலச்சந்திரன் எனக்கு உதவுவது போல ரகசியக் குரலில், "Aravalli hills" என்றான். நான் உடனே அதை பெருமையாக பெரிய குரலில் கூறினேன். வகுப்பு முழுவதும் 'கொல்'லென்று சிரித்தார்கள்! ஆசிரியர் கேட்ட கேள்வி என்ன என்று இன்று வரை தெரியாது!

ஃப்ரண்ட் பெஞ்சில் இருந்து அப்பா நண்பரான ஆசிரியரிடம் (கவனக் குறைவுக்காக) "பளார்" ..
அபிமான ஆசிரியரைக் "கலாய்த்து" அவரிடமே பாராட்டு . .
இரண்டு அனுபவமும் உண்டு.
  
உங்களுக்கே அறியாமல் தெரியாமல் நான்வெஜ் சாப்பிட்டிருக்கின்றீர்களா ?

ப: உண்டு. 

ஏகாந்தன் :

கேஜிஜி அமானுஷ்யத் திலகமா? 

ப: கிறி ....  கிறி .....  ப்ரூச் ........ கீச் ....... யஹாங் ........ ஹோ! 
==    ==
     ||
=====

 (பேய் பாஷையில் பதில்!)

மாதவன் :

1) தாய்லாந்து இளம் கால்பந்து வீரர்கள், குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டது பற்றி....

ப: எப்படியோ எல்லோரும் காப்பாற்றப்பட்டுவிட்டார்கள் என்று கடைசி தகவல்கள் கூறுகின்றன. கடவுளுக்கு நன்றி. 

"கடவுளேதான் ஆகட்டும் இவ்வளவு கொடூரமாக..." என்று எண்ணவைக்கும் நடப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.


2) 'வேலியில் போகும் ஓணானை எடுத்து காதில் மாட்டிக்கொண்டது போல' -- உதாரணம், மேற்கண்ட செய்தியுடன் தொடர்பு படுத்தாமல் சொல்லவும். 

ப: என்ன சொல்வது ! தலை எழுத்து என்று ஒன்று உள்ளது சரிதான் போலிருக்கு. விநாச காலே விபரீத பந்தே! ( அடடா ! கால் பந்து தொடர்பு வந்திடுச்சே! ) 

உதாரணம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதற்கு டச் வுட்.

வாட்ஸ் அப்:

பானுமதி வெங்கடேஸ்வரன் :

படித்தவர்களுக்கு புரியாத டாக்டர்களின் ப்ரிஸ்கிரிப்ஷன் கிறுக்கல்கள் மருந்து கடைகளில் வேலை பார்க்கும் அதிகம் படிக்காதவர்களுக்கு புரிந்து விடுவது எப்படி?

ப: இப்போ டாக்டர்களின் உதவியாளர்கள் 'நீட்'டாக கணினியில் டைப் அடித்துக் கொடுத்துவிடுகிறார்கள் 

முன் காலத்தில், ஒரு பெண்ணுக்கு டாக்டர் காதலர் ஒரு அவசரக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டாராம். அந்தப் பெண்ணுக்கு அவர் எழுதியிருந்ததில், ஒரு அட்சரம் கூடப் புரியவில்லையாம். நிரம்ப யோசித்து, அந்தப் பெண், அந்த டாக்டரின் கம்பவுண்டரிடம் சென்று, அந்தக் கடிதத்தைக் கொடுத்தாராம். 

அந்தக் கம்பவுண்டர், அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, "பாட்டில் கொண்டுவந்துருக்கீங்களா ?" என்று கேட்டாராம். 

டாக்டர் கிறுக்கல் இப்போது  ஜோக்குகளில் மட்டும் தான் இருக்கிறது. பேஷண்ட் கிறுக்குகள் பற்றிக் கேளுங்கள் !!

எதற்காகவாவது போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் வாசல்படிகளை மிதித்த அனுபவம் உண்டா?

ப: போலீஸ் ஸ்டேஷன் மூன்று அல்லது நான்கு சந்தர்ப்பங்ககளில். நாகையில் நானும் என் சின்ன அண்ணனும் சுதந்திர தின நாட்களில் ஜாலியாக சென்று, சுற்றிப் பார்ப்பதற்காக கோர்ட் வாசப்படியை மிதி மிதி என்று மிதித்துள்ளோம்! 

இரண்டு மூன்று  முறை போலீஸ் கோர்ட் அனுபவம் உண்டு.  டிராஜி-காமெடி, பரிதாபம், வியப்பு அனுபவம் உண்டு. ஒன்று பற்றி ஆரம்ப காலத்தில் எழுதியதாக நினைவு.

   
அப்பாடி ! அ வும், த வும் இல்லாம் ஒரு புதன் பதிவு வந்துருக்கு! (ஏ எங்கே காணோம்?) 

  


மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்! 

======================================

56 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீத்ஸ், வெங்க்ட் மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 2. // பாட்டில் கொண்டாந்திருக்கீங்களா?..//

  பாவம்.. அந்தப் பொண்ணுக்கு ஜூரமே வந்திருக்கும்....

  பதிலளிநீக்கு
 3. முன்னால் வந்த வெங்கட்
  அவரை விட்டுடுவோம்!....

  அதுக்குப் பின்னால
  வரிசை கட்டி சமயத்தில்
  சலங்கை கட்டி யாரையும் காணோமே!...

  பதிலளிநீக்கு
 4. எல்லோருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 5. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 6. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
  என் கேள்விக்கு பதில் சொன்னதற்கு நன்றி.

  குழந்தை சுறு சுறுப்பாய் சிரித்து விளையாடி உடனே தூங்கி விடுகிறது, அது போல் படுத்தவுடன் தூக்கம் வந்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 8. இனிய காலை வணக்கம் கோமதி அக்கா. எனக்கு தூக்கம்தான் பிரச்னை. சும்மாச் சும்மா வந்து விடுகிறது. எப்படிக் குறைக்க? வழி சொல்லுங்கள்!

  பதிலளிநீக்கு
 9. கேள்வி, பதில் ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 10. குகைக்குள் சென்று மாட்டிக்கொண்ட தாய்லாந்து இளம் கால்பந்து வீரர்களை மீட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். இறைவனுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

  அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படி தவித்து போய் இருப்பார்கள்?
  மீட்பு குழுவில் ஒருவர் இறந்து விட்டார் அதுவும் நடக்காமல் இருந்து இருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.

  பதிலளிநீக்கு
 11. கோமதி அக்கா..

  // அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படி தவித்து போய் இருப்பார்கள்?//

  உள்ளே மாட்டிக்கொண்டிருந்த நிலையிலேயே பயிற்சியாளர் எழுதிய மன்னிப்புக் கடிதம் குழந்தைகளின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாம். படித்தேன்.

  பதிலளிநீக்கு
 12. சிரிப்பான குடும்பம் சிறப்பான குடும்பம்...

  பதிலளிநீக்கு
 13. சுவையான பதில்கள்.

  பாட்டில் கொண்டு வந்திருக்கீங்களா..... ஹாஹா. கேட்டாரே ஒரு கேள்வி!

  பதிலளிநீக்கு
 14. இந்த முறை நகைச்சுவை குறைவாக இருப்பது போல தோன்றுகிறதே. மொத்த நகைச்சுவையையும் கம்பவுண்டர் எடுத்துக் கொண்டு விட்டார்.

  பதிலளிநீக்கு
 15. //எனக்கு தூக்கம்தான் பிரச்னை. சும்மாச் சும்மா வந்து விடுகிறது. எப்படிக் குறைக்க? வழி சொல்லுங்கள்!//

  கொடுத்து வைத்தவர் ஸ்ரீராம்.(உங்களுக்கு குழந்தை மனம் என்று நினைக்கிறேன்). தூக்கம் நினைத்தவுடன் வருவது வரபிரசாதம்.
  எனக்கு தூக்கம் வரும் படுத்தால் தூக்கம் போய்விடும்.
  ஏதாவது ஸ்லோகம் சொல்லிக் கொண்டு இருப்பேன் எப்போது தூங்கினேன் என்று தூங்குவேன்.

  தூக்கம் வரவில்லை என்றால் எழுந்து உட்கார்ந்து புத்தகங்கள் படிப்பேன். பாட்டு கேட்பேன்.

  தூக்கம் வராமல் இருப்பதற்கு காரணம், படுக்க போகும் முன் தொலைக்காட்சி, வாட்ஸ் அப் போன்றவை என்கிறார்கள். படுக்க போகும் ஒரு மணி நேரத்திற்கு இவை எல்லாம் பார்ப்பதை விட்டு விடுங்கள் என்கிறார்கள். நானும் அப்படித்தான் செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. என்ன!...
  இன்னைக்கு தேர் நிலைய விட்டு
  கிளம்பவே இல்லை!?...

  ஏதாவது கெரக கோளாறா இருக்குமோ!..

  பதிலளிநீக்கு
 17. //துரை செல்வராஜூ said...
  என்ன!...
  இன்னைக்கு தேர் நிலைய விட்டு
  கிளம்பவே இல்லை!?...

  ஏதாவது கெரக கோளாறா இருக்குமோ!..//

  ஹா ஹா ஹா அதைத்தான் நானும் இப்போ நினைச்சேன் சரி நாமளாவது கொஞ்சம் எட்டிப்பார்த்திட்டு ஓடுவோமோ என காலை உள்ளே வைக்கிறேன்ன்:))... கிரகக் கோளாறு அல்ல.. கஞ்சி ஆத்தும்போது கொம்பியூடர் எலி எங்காவது ஓடி ஒளிச்சிருக்குமோ?:))

  பதிலளிநீக்கு
 18. எங்கள்புளொக் வருவோரை விடக் கிளாவி கேய்ப்போர்ர் சே..சே.. கனநாளைக்குப் பிறகு திரும்படியும் டங்கு ச்லிப்பாகுதே கர்ர்:)) கேள்வி கேட்போர் எண்ணிக்கை அதிகமாகியிருக்கே:)).. கேள்வி கேட்பதென்றால் ஆருக்குத்தான் புய்க்காது:).. ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 19. //அதிரா :

  ////பதில் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே...///

  ஏன் இது ஸ்ரீராமுக்குப் பிடிக்கவில்லை?:) ///

  இதைப் பார்த்ததும் எனக்கு எங்கட டெய்ஸிப்பிள்ளைதான் நினைவுக்கு வந்தா:).. அதாவது குட்ல்டின் வெளியே நம் கால் விரல் எங்காவது கொஞ்சம் தெரிஞ்சிட்டால் போதும், உடனே ஜம்ப் பண்ணிப் பிடிப்பா ஹா ஹா ஹா அதனால எல்லோருக்கும் பயம் , எப்பவும் ஒழுங்கா கை கால் எல்லாம் மூடியே படுப்போம்ம்:) எங்கிருந்து எப்படி ஜம்ப் ஆவா என்றே தெரியாது:)

  அப்படித்தான் கெள அண்ணனுக்கும் தப்பித்தவறி ஒரு கேள்விக்குறி போட்டிட்டால் போச்ச்ச்ச்ச்ச்:) லபக்கெனப் பிடிச்சு இங்கே போட்டிடுறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 20. //அதிரா :

  ////பதில் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே...///

  ஏன் இது ஸ்ரீராமுக்குப் பிடிக்கவில்லை?:)

  ப: அவர் ஒரு உண்மை விரும்பி! ///

  ஓ ஓஒ அப்போ அந்த உண்மை விளம்பியிடம் ஒரு கிளவி:) சே.சே.. கேள்வி:).. அந்த உண்மை விளம்பியின் இன்றைய வயசென்ன?:) ஹா ஹா ஹா ஹையோ வழி விடுங்கோ வழி விடுங்கோ...:)

  http://wac.450f.edgecastcdn.net/80450F/929nin.com/files/2014/05/Running-Cat-feat.jpg?w=600&h=0&zc=1&s=0&a=t&q=89

  பதிலளிநீக்கு
 21. உலக அறிவு பெறுவதற்காக கேள்வி கேளுங்க என்றால், கீசா மேடம், ஆசிரியர்களைப் பற்றியே ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டிருக்கிறாரே...

  கில்லர்ஜி எப்போ கேள்வி கேட்கப்போகிறார் என்று நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. //டாக்டர்களின் ப்ரிஸ்கிரிப்ஷன் கிறுக்கல்கள் // - இது எனக்குமே எரிச்சல் உண்டாக்கும் விஷயம். ஒரு பிரிஷ்கிரிப்ஷனில் Telma H (அல்லது 1+) 10 Tablet என்று எழுதியிருக்கு. சில கடைகள்ல, அது 30 கொண்ட ஸ்டிரிப் 400+ ரூபாய் என்று சொல்றாங்க. ஜெனெரிக் மெடிசன் ஸ்டோரில் (போன்ல கேட்டேன்) 25 ரூபாய் என்று சொல்றாங்க (15 tablet). உண்மையிலேயே பேஷண்டுகள் பாவம்தான்...

  பதிலளிநீக்கு
 23. //தெரியாமல் நான்வெஜ் சாப்பிட்டிருக்கின்றீர்களா ?// - விளக்கம் இல்லாமல் உண்டு/இல்லை என்றா பதில் சொல்றது? மற்றவங்கள்லாம் உண்மை சொல்ல விருப்பம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 24. //கோமதி அரசு said...
  //எனக்கு தூக்கம்தான் பிரச்னை. சும்மாச் சும்மா வந்து விடுகிறது. எப்படிக் குறைக்க? வழி சொல்லுங்கள்!//

  கொடுத்து வைத்தவர் ஸ்ரீராம்.(உங்களுக்கு குழந்தை மனம் என்று நினைக்கிறேன்). தூக்கம் நினைத்தவுடன் வருவது வரபிரசாதம்.///

  ஹா ஹா ஹா கோமதி அக்காவின் பதில் தான் நானும் சொல்லுவேன்.. எனக்கும் இப்படித்தான், உடல் நன்கு களத்தால் அல்லது ஏதும் மூக்கு முட்டச் சாப்பிட்டால் மட்டுமே நல்ல நித்திரை வரும்.. அதுவும் நினைக்கும் நேரமெல்லாம் வராது.. அப்படி வந்தாலும் ஒரு ஊசி விழுந்தால்கூட முழிச்சிடுவேன்.. முழிச்சிட்டால் அது எத்தனை மணி சாமமாக இருப்பினும் திரும்ப உடனே நித்திரை வராது.. இப்படி நிலைமை இருக்கும்போது.. சிலர் சரிந்தால்போதும் டக்கென நித்திரை கொள்வார்கள்.. தட்டி எழுப்பி ஏதும் கேட்டால் முழிச்சு பதில் சொல்லிட்டு திரும்ப டக்கென நித்திரை ஆகிடுவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்படியானோர் குடுத்து வைத்தவர்களே.

  ஸ்ரீராம், உடல் உழைப்பு அதிகமாக இருப்பின் எப்பவும் சோர்வாகவே இருக்கும் நித்திரைதான் வரும்.. இன்னொன்று இந்தியாவில் பெரும்பாலும் எல்லோரும் புளித்த உணவுகள் அதாவது தோசை இட்லி.. இப்படியானவற்றை காலையில் சாப்பிடுவோருக்கும் நித்திரை ஓவரா வரும்..

  இன்னொன்று உடம்பில் விட்டமின்ஸ் குறைவாக இருப்பினும் உடல்சோர்வு நித்திரை வரும்..

  உணவிலும், பழக்க வழக்கத்திலும்[உடல் உழைப்பிலும்] நித்திரை தங்கியுள்ளது... என்றே நான் சொல்லுவேன். ஸ்ரீராமுக்கு நித்திரை வருவதற்கு இன்னொரு காரணம்.. மனம் ஒவர்லோட் ஆவது:)) புளொக்கிலேயே ஓடிஓடிக் கொமெண்ட்ஸ் போட்டே கிட்னி சோர்ந்திடுமே.. இதைவிட உங்கள் ஒபிஸ் வேர்க்.. அதையும் தாண்டி வீட்டில் ஏதும் வேலைகள்.. இப்படி கிட்னிக்கு ஓய்வில்லை எனில் அது அப்படியே சோர்வாகி நித்திரையைத்தான் தரும் ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
 25. //நெ.த. said...
  உலக அறிவு பெறுவதற்காக கேள்வி கேளுங்க என்றால், கீசா மேடம், ஆசிரியர்களைப் பற்றியே ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டிருக்கிறாரே...

  கில்லர்ஜி எப்போ கேள்வி கேட்கப்போகிறார் என்று நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.//

  ஹா ஹா ஹா அது அவரின் கோடரிவேந்தனின் பிரச்சனை முடிவுக்கு வந்தபின்பே நடக்கும்:))

  பதிலளிநீக்கு
 26. என்னுடன் வேலை பார்த்தவர், அவருடைய குழந்தையின் இரண்டாவது பிறந்த நாளுக்கு என் பெண்ணை அவர் வீட்டில் கொண்டுவிடச் சொன்னார். (அவர் குஜராத்தி). கொண்டுவிடும்போது, மேசையின்மேல் சாசேஜ் (எனக்கு இதெல்லாம் அப்போ சுத்தமாத் தெரியாது) நிறைய வைத்திருந்தார். அதை என் பெண்ணை எடுத்துக்கச் சொன்னார் (அவளுக்கு 2 வயசு). நான் அது என்ன என்று கேட்டதற்கு, நான்வெஜ்தான், இப்போவே குழந்தையைப் பழக்கிவிடுங்கள் என்று சொன்னார். அதுலேர்ந்து பிறந்த நாள் பார்ட்டிக்கு பெண்ணைக் கொண்டுவிடுவதில்லை.

  வேலை பார்த்த கம்பெனி சூப்பர்மார்கெட்டில் ஒரு தடவை, சமோசா வாங்கினேன். (அங்கு ஏகப்பட்ட வெரைட்டி உண்டு, வெஜ் நான் வெஜ்). பொதுவா தனித் தனி டிரேயில் இருக்கும். அன்றைக்கு அது ஆர்கனைஸ்ட் ஆக இல்லாததுபோல் தோன்றியது. கேட்டதற்கு அந்தப் பெண், மிக்ஸ் ஆகியிருக்கும், அதனால் என்ன என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாள்.

  தாய்வானில் பார்த்த 'Sausage' படத்தை அனுப்பினால், ஸ்ரீராம் நிச்சயம் வெளியிடமாட்டார். நான், என் நினைவுக்காக படம் எடுத்துக்கொண்டுவந்தேன். இது பொது இடங்களில், இரவு மார்கெட்டில் விற்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 27. //பலநாட்கள் தயிர்சாதம், உப்பு நார்த்தங்காய் // - தற்போது நல்லா வசதியா, அவங்க அவங்க பசங்களும் நல்ல நிலைமையில இருக்கற பெரும்பாலான மத்திய தர வர்க்கம் இதைக் கடக்காமல் வரமுடியுமா? இந்த பதில் என் இளமைக் காலத்தை நினைவுகூர வைத்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 28. //அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீத்ஸ், வெங்க்ட் மற்றும் அனைவருக்கும் நல்வரவு...// - துரை செல்வராஜு சார்... கீசா மேடத்தை நீங்கள் 'நல்வரவு' கூறி வரவேற்காததால் அவர் இன்று வரவில்லையா? கோபம் குறைந்தால்தான் வருவார் போலிருக்கு.

  பதிலளிநீக்கு
 29. துரை அண்னா ஹை என்னை நீங்களும் கீத்ஸ் என்றதற்கு நன்னியோ நன்னி!! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 30. //அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீத்ஸ், //

  நெல்லை இதில் கீதா கீதாக்காவாக்கும்...தினமுமே துரை அண்ணா கீதா/கீதா என்று இரு கீதாக்களையும் சொல்லுவார்....என்னை கீத்ஸ் என்று...ஹையோ ஹையோ நான் இன்னும் குயந்தையாகிட்டேன் ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 31. அட! நீல வண்ணக் கண்ணன் இப்ப கார்மேகக் கண்ணன் ஆகிவிட்டாரே!

  கீதா

  பதிலளிநீக்கு
 32. ஸ்ரீராம் தூக்கம் வருவதைப் பற்றிக் கவலையே வேண்டாம். நானும் அந்த லிஸ்டில்தான்....அப்படினா மனசுல ஒன்னுமில்லை...களங்கமற்ற குயந்தை மனசுனு அர்த்தம்....ஹா ஹா ஹா ஹா (இப்படி சைக்கிள் கேப்ல சொல்லிக்குவோம் ஸ்ரீராம். இல்லைனா இங்க போட்டிக்கு ஒரு அதிரடி இருக்கு...எப்ப வேணாலும்வந்து குதிக்கும்...ஹா ஹா ஹா)

  கீதா

  பதிலளிநீக்கு
 33. ஞானியின் நித்திரை பற்றிய சொற்பொழிவு சரிதான் ஞானி. பாயின்ட்ஸ்சரிதான் ஆனா இட்லி தோசை விட.....பொங்கல் தான் கொஞ்சம் ஹெவி. மற்றபடி இதெல்லாம் பழக்கமான ஒன்றுதானே...எதுவானாலும் அளவோடு இருந்தால் நல்லதே..

  ஆனா எனக்கெல்லாம் ராத்திரி படுப்பதுதான் தெரியும் அடுத்து காலை கரீக்டாக பயலாஜிக்கல் க்ளாக் எழுப்பிவிடும். இடையில் ஊசி விழுந்தால் எல்லாம் தெரியவே தெரியாதாக்கும். மழை பெய்தால் கூடத் தெரியாது.. இடையில் முழிப்பு கொடுத்தாலும் மீண்டும் அபப்டியே தூங்கிடுவேன்....உடலுழைப்பும் மூளையை அதிகம் பயன்படுத்தினாலும் தூக்கம் வரும்...டென்ஷன் இருந்தாலும் சோர்வு வரும்...தூக்கம் வரும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 34. //டாக்டர்களின் ப்ரிஸ்கிரிப்ஷன் கிறுக்கல்கள் // - இது எனக்குமே எரிச்சல் உண்டாக்கும் விஷயம். ஒரு பிரிஷ்கிரிப்ஷனில் Telma H (அல்லது 1+) 10 Tablet என்று எழுதியிருக்கு. சில கடைகள்ல, அது 30 கொண்ட ஸ்டிரிப் 400+ ரூபாய் என்று சொல்றாங்க. ஜெனெரிக் மெடிசன் ஸ்டோரில் (போன்ல கேட்டேன்) 25 ரூபாய் என்று சொல்றாங்க (15 tablet). உண்மையிலேயே பேஷண்டுகள் பாவம்தான்/

  நெல்லை ஜெனரிக் மெடிசன் வாங்குவதே நல்லது பாருங்க எவ்வளவு வித்தியாசம் விலையில்...என் மகன் எப்போதுமே ஜெனரிக் தான் சொல்கிறான் வாங்கவும் சொல்லுகிறான் என்னிடம்...ஆனால் நடைமுறையில் இங்கு கஷ்டமாகதான் இருக்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
 35. கில்லர்ஜி எப்போ கேள்வி கேட்கப்போகிறார் என்று நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்//

  நெல்லை கில்லர்ஜி கேள்வி கேட்கமாட்டார்...அவரது கோடரிதான் பேசும் ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 36. அதானே அ இல்லாமல் த இல்லாமல் பதிவு....அது சரி ஏஞ்சல் எங்கே?! காணலையே அவங்க வந்தாங்கனா பெரிய கொவ்ஷென் பேப்பரே தயாரிச்சுருப்பாங்க!!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 37. அப்படித்தான் கெள அண்ணனுக்கும் தப்பித்தவறி ஒரு கேள்விக்குறி போட்டிட்டால் போச்ச்ச்ச்ச்ச்:) லபக்கெனப் பிடிச்சு இங்கே போட்டிடுறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா..//

  யெஸ் யெஸ் இப்ப சொல்ல நினைச்சு ஸ்க்ரோல் ஆகும் போது இதைப் பார்த்திட்டேன். ஏன் சொல்ல நினைச்சேன் என்றால் "அது சரி ஏஞ்சல் எங்கே?"னு ஒரு கேள்விக்குறி போட்டுட்டேனே...இதுவும் கேள்வியாகிடுமேனு நினைச்சேன்..ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 38. என் கேள்விகளுக்கு விரிவாகப் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. ஆசிரியர்களுக்கு இந்த ஆசிரியரிடமிருந்து 15க்கு 14 மதிப்பெண்கள் கிடைக்கின்றன. ஒரு கேள்விக்கு மட்டும் ஒற்றை வார்த்தையில் பதிலளித்திருப்பதால்!!!!

  அனைத்து பதிகளும் ரசித்தோம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 39. //சிலர் சரிந்தால்போதும் டக்கென நித்திரை கொள்வார்கள்.. தட்டி எழுப்பி ஏதும் கேட்டால் முழிச்சு பதில் சொல்லிட்டு திரும்ப டக்கென நித்திரை ஆகிடுவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்படியானோர் குடுத்து வைத்தவர்களே.//

  ஆமாம் அதிரா, நானும் இப்படியானவர்களைப் பார்த்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 40. இறைவன் எனக்கு கொடுத்த ஒரே வரம் படுத்தவுடன் தூங்கி விடுவது அதை சுட்டி காட்டியமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 41. அந்தக் கம்பவுண்டர், அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, "பாட்டில் கொண்டுவந்துருக்கீங்களா ?" என்று கேட்டாராம். //

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடில ஸ்ரீராம்....(இந்த கார்மேக வண்ணன் நீங்கதான் தெரியும்!!!ஹிஹிஹிஹி)

  கீதா

  பதிலளிநீக்கு
 42. இதுலாம் ஒரு கேள்வி பதிலா?! கேள்விக்கு பதில் சொல்லனும். பதிலிலிருந்து கேள்வி வரனும்... கேள்வில இருந்து பதில் வரனும்.. அப்பாலிக்கா சண்டை வரனும்...
  இப்படி போகனும் பதிவு

  பதிலளிநீக்கு
 43. //சிலர் சரிந்தால்போதும் டக்கென நித்திரை கொள்வார்கள்.. தட்டி எழுப்பி ஏதும் கேட்டால் முழிச்சு பதில் சொல்லிட்டு திரும்ப டக்கென நித்திரை ஆகிடுவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்படியானோர் குடுத்து வைத்தவர்களே.//

  ஆமாம் அதிரா, நானும் இப்படியானவர்களைப் பார்த்து இருக்கிறேன்.//

  கோமதிக்கா நானும் அப்படியே....இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரம் என்றுதான் நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 44. அந்த பாப்பா ஜிஃப் க்யூட்டா இருக்கு...அழகு!

  கீதா

  பதிலளிநீக்கு
 45. கீதாக்காவையும் காணலை....ஏஞ்சலையும் காணலை...

  கீதா

  பதிலளிநீக்கு
 46. @ கீதா: ..இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரம் என்றுதான் நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.//

  ரொம்பவும் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். தூக்கம் கலைந்துவிடப்போகிறது!

  பதிலளிநீக்கு
 47. எங்கள் ப்ளாக்கில் இருக்கும் எல்லா ஆசிரியர்களையும் வேலை செய்ய(பதிவு எழுத ) சொல்லுங்கள் இல்லை என்றால் கவர்னர் விசிட் செய்யும் போது மாட்டிக் கொள்ள வாய்புண்டு

  பதிலளிநீக்கு
 48. அ, த எல்லாம் இல்லாமல் பு கே வி கலர்ஃபுல்லா இல்லாத மாதிரி இருக்கு!! ஆசிரியர்கள் விரதமா!!?? ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 49. //உலக அறிவு பெறுவதற்காக கேள்வி கேளுங்க என்றால், கீசா மேடம், ஆசிரியர்களைப் பற்றியே ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டிருக்கிறாரே.// கேஜிஜி சார், நாங்க கேட்கிற கேள்விகளாலே உங்களுக்கு உலக அறிவு அதிகம் ஆகிறது தானே! அப்புறமும் நெ.த. இப்படிச் சொல்வது சரி தானா?

  அறிவு, புத்தி, ஞானம், மனசு, மூளை எல்லாமும் ஒண்ணா?

  சிந்திப்பது மூளையா? மனமா? அறிவா? புத்தியா?

  இந்தப் பதிவில் நீலவண்ணக் கண்ணர் பதில்களையே காணோமே? அடுத்த பதிவிலாவது வருவாரா?

  இன்னொரு கேள்வி இருக்கு! அதைக் கேட்கலாமா?

  பதிலளிநீக்கு
 50. அந்தக் குஞ்சுக்குட்டிப் பாப்பா தூங்கறாப்போல் நானும் தூங்கினா நல்லா இருக்கும். ஆனால் அப்படி எல்லாம் தூக்கம் வரதே இல்லை. ஶ்ரீராம் சொல்றதைப் பார்த்தாப் பொறாமையா இருக்கு. இப்போனு இல்லை, எப்போவுமே எனக்குத் தூக்கம் கம்மி தான்.சின்ன வயசில் லீவு நாளில் மத்தியானமா, அப்பா, அம்மா, அண்ணா, தம்பி எல்லாம் போட்டிபோட்டுத் தூங்குவாங்க. நான் மட்டும் குடைவேன். ராத்திரியும் படுத்துப்பேனே தவிரத் தூங்கப் பத்து மணிக்கு மேலாயிடும். கல்யாணம் ஆகி வந்த பின்னரும் தூக்கம் அவ்வளவெல்லாம் இருக்காது. மாமியார்,மாமனார், நாத்தனார்கள் எல்லோரும் மத்தியானம் தூங்குவாங்க. காலம்பரேயும் எழுந்துக்க நேரம் ஆகும். நான் முழிச்சுண்டு கொட்டுக் கொட்டுனு உட்கார்ந்திருப்பேன். :))))

  பதிலளிநீக்கு
 51. அது சரி கேஜிஜி சார், இப்படி எங்களிடம் கேள்விகள் கேட்டு பதில் சொல்வதன் மூலம் உங்கள் அறிவு விசாலம் அடைகிறதா?

  அல்லது யோசித்து யோசித்துக் கேட்பதன் மூலம் நாங்க புத்திசாலியாகறோமா?

  என்னடா இது, கேள்வி கேளுங்க பதில் சொல்றேன்னு சொல்லிட்டு இப்படி மாட்டிண்டோமேனு நீங்க நினைச்சது உண்டா? அல்லது நினைப்பீங்களா? நினைக்கிறீங்களா? இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூணிலேயும் கேட்டிருக்கேனா?

  பதிலளிநீக்கு
 52. 1,அமாவாசை வந்ததும் பவுர்ணமி எங்கே போகிறது ?????

  (இது மாதிரியான கேள்வியையே என்னைத்தவிர யாரும் உங்களை கேட்ட்டிருக்க மாட்டாங்க இனியும் கேட்கமாட்டாங்க :)))))))))))))))))))))))

  2, உங்கள் வாழ்வின் மாபெரும் இலட்சியம் என்ன ? அதை எட்டி பிடிக்க என்ன முயற்ச்சி எடுத்தீர்கள் அல்லது எடுக்கப்போகின்றீர்கள் ?

  3, மனிதன் அழிப்பதில் அல்லது உருவாக்குவதில் இவ்விரண்டில் எதில் சிறந்தவன் ?

  4, அரசாங்கம் ஒரு கடும் சட்டம் போடணும்னா என்ன விஷயத்துக்கு போட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

  5, அன்றாடம் நடக்கும் அல்லது நடைபெறும் ஒரு அதிசயம் ??

  6, சமீபத்தைய டெக்னாலஜி வளர்ச்சியின் கண்டுபிடிப்புகளில் உங்களை அதிகம் மகிழ்விப்பது எது ??
  அதிகம் எரிச்சலையே தருவது எது ?

  7,உங்கள் வாழ்க்கையில் அதிகம் சந்தோஷத்தை கொடுக்கும் நபர் ???
  ஒருவரை மட்டும் சொல்லணும் :)))))))))))

  8,நம்மை சந்தோஷப்படுத்தும் ஒரு விஷயம் எல்லோரையும் சந்தோசம் ஆக்க மாட்டேங்குதே ஏன் ?

  9,நல்லது எது கெட்டது என்று எப்படி தீர்மானிப்பீர்கள் ??
  (எதுக்கு கேட்டேன்னா நான் கெட்டதுன்னு நினைக்கிறது சிலருக்கு நல்லதாக படுகிறதே )

  10, திடீர்னு உங்களை கமிஷனர் ஆக்கிட்டா நீங்கள் முதலில் அரெஸ்ட் செய்யும் நபர் யாராக இருக்கும் ? என்ன காரணத்துக்கு ?


  பதிலளிநீக்கு
 53. பத்து கேள்விகள் இருபத்தைந்தாம் தேதி பதிவுக்கு எடுத்துக்கொண்டோம். நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!