சனி, 28 ஜூலை, 2018

டாக்டர் வாத்தியார்






இது போல முன்னர் ஒரு செய்தியும் படித்த நினைவு.  இது இப்போதைய செய்தி..












உத்தனப்பள்ளியில், கிளீனிக் நடத்தி வரும் இவர், ஆரம்பக்கல்வி கற்ற, உத்தனப்பள்ளி அரசு துவக்கப்பள்ளியை மறக்கவில்லை. நேரம் கிடைக்கும் போது, ஐந்தாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, அறிவியல், தமிழ் பாடங்களை நடத்தி வருகிறார்.














இச்செயலியை மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து, ஆண்டு முழுவதும் வரைமுறையில்லாமல் இலவசமாக பேசிக்கொள்ளலாம்.

இதற்கான கட்டணம், 1,099 ரூபாய் மட்டுமே. எஸ்.எம்.எஸ்., அனுப்ப முடியாது. இணைய வசதி அல்லது'வைபை' இணைப்பில் மட்டுமே பேச முடியும்; ரோமிங் வசதி உண்டு.இந்த செயலியை பதிவிறக்கி வைத்திருப்போர் இடையே தான் பேச முடியும்....

சிம் இல்லாமல் என்பது நல்ல செய்திதான்.  எதிர்காலத்தில் மாறுதல்களும், முன்னேற்றங்களும் ஏற்படலாம்.















வேலுார் மாவட்டம், வாலாஜாப்பேட்டை ஒன்றியம், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள கிராமம் பூண்டி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, கல்வி தரத்தில், சத்தமில்லாமல் சாதனை படைத்து, தேசிய விருதுக்கு தகுதி பெற்றுள்ளது.




32 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் மற்றும் சங்கத்தினர் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மற்றும் சங்கத்தினர் அனைவருக்கும் //

      சங்கம்! புதிய வார்த்தை! ரெஜிஸ்டர் செய்ய சொல்லிவிடப் போகிறார்கள்..!!! ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு
    2. விடியற்காலையில் விழித்திருப்போர் சங்கம் வாழ்க..

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா ஹா துரை அண்ணே அண்ட் ஸ்ரீராம்...விகாவிச லதான் நான் கீதாக்கா ஸ்ரீராம் வெங்கட்ஜி எல்லோரும் உறுப்பினராச்சே...என்ன இங்க வர முடியலை அவ்வளவுதான்...விகாவிச வாழ்க வளர்க!!!

      கீதா

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  3. டாக்டர் வாத்தியார் - நல்ல மனம் வாழ்க.

    பதிலளிநீக்கு
  4. பி.எஸ்.என்.எல். - அவர்களும் ஏதேதோ செய்து பார்க்கிறார்கள். சேவை என வரும்போது நிறைய விஷயங்கள் செய்ய முனைந்தாலும், அதனை சரிவர execute செய்யத் தவறிவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த முயற்சியே இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இத்தனை நாட்கள் தனியாருக்கு வழிவிட்டு ஒதுங்கி இருந்தார்கள். இதிலும் கூட, அந்த ஆப் இருப்பவர்களுடன் மட்டும்தான் பேச முடியும் என்பது ஒரு மைனஸ் பாய்ண்ட்! சீக்கிரம் அதுவும் சரிசெய்யப்படவேண்டும்!

      நீக்கு
    2. ஸ்ரீராம் இந்த பி எஸ் என் எல் ஆப் பற்றி வாசித்ததும் நம்ம கீதாக்கா நினைவு வந்து சிரிச்சுட்டேன்...."ஸ்ரீராம் என் வாய்ஸ் கேக்குதா...இது டெஸ்டிங்க்" அப்படினு கீதாக்கா கேப்பாங்க ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  5. பூண்டி பள்ளி - ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
      நற் செய்திகளுக்கு மிகவும் நன்றி. ஸ்ரீராம்.

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் அம்மா.

      நீக்கு
  7. இரண்டு சேவைகள் செய்யும் மாமனிதர் வாழ்க...

    பதிலளிநீக்கு
  8. டாக்டர் ரஜனி கலையரசன், அதுவும் மிகவும் சிறியவர் இளைஞர் ரொம்பவே கவனத்தை ஈர்க்கிறார். நல்ல சேவை. இரு சேவை. மருத்துவப் பணி ஆசிரியர் பணி இரண்டுமே மகத்தான பணிகள் என்று சொல்லுவதுண்டு இல்லையா. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவரைப் பற்றி வாசித்ததும் இன்னும் மனம் நெகிழ்ந்து அவரை மிகவும் வாழ்த்தியது. அருமையான செய்தி இது.

    நூலகத்திற்குத் தன் வீட்டைக் கொடுத்த ஆசிரியர் வாழ்க..

    பி எஸ் என் எல் ஆப் நீங்கள் கருத்தில் சொல்லியிருப்பது போல் மைனஸ் பாயின்ட் தான். மட்டுமல்ல இந்த சேவை ஒழுங்காக வேலை செய்யணுமே...இப்போது வெளிநாட்டில் இருக்கும் நெருங்கியவர்களிடம் வாட்சப்பில் பேசுவது மிகவும் சௌகர்யமாகத்தான் இருக்கு...ரிலையன்ஸ் 3 மாதத்திற்கு (86 நாட்கள்) மெசெஜ், வாய்ஸ், ஃப்ரீ கால் என்று இணைய வசதியுடன் வாட்சப்பிலும் செய்து கொள்ள 399. நெட் நன்றாகவே இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பூண்டி பள்ளி ஆச்சரியப்படுத்துகிறது...வாழ்த்துகள்!!! பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அத்தனையும் அருமையான செய்திகள் நண்பரே!

    கரையோரம் சிதறிய கவிதைகள்
    துயில் கொள்ளப் போனாயோ...? http://ajaisunilkarjoseph.blogspot.com/2018/07/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  11. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நூலகத்திற்காக வீட்டைத் தானம் செய்த செயல் அவ்வளவாக்க் கவரவில்லை. நூலகம் என்ற கான்செப்டின் ஆயுள் குறையும் காலம் இது. வேறு விதத்தில் பயனுறச் செலவழித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
    அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.
    டாக்டர் பள்ளி பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவது நல்ல செயல்.
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    ஊரட்சி ஒன்றிய பள்ளிக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. டாக்டர் ரஜினி கலையரசன் என்ற இளைஞர் தன் விடாமுயற்சியால் மருத்துவம் படித்துச் சாதனை படைத்தாலும் தான் படித்த பள்ளியை மறவாமல் பள்ளிச் சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் நன்றிக்கடன் போற்றதக்கது. காரைக்குடியின் வள்ளல் அழகப்பர் தான் குடிருந்த வீட்டையும் கல்லூரி வளாகத்திற்கு அளித்தது போல கோடி ரூபாய் பெரும் தன் வீட்டை நூலகதிற்குக் கொடையாக வழங்கிய தமிழாசிரியரின் ஈகைத் திறனும் போற்றத்தக்கதே

    பதிலளிநீக்கு
  14. அடிக்கடி நிகழ்வதுதான் வீடு, வாசல் சொத்தை நூலகத்துக்கும் பள்ளிக்கும் எழுதி வைப்பது. ஆனா, அதுக்கு அசாத்திய தைரியம் வேணும். ஏன்னா, வயசான காலத்தில் ஒருவேலை சோறுக்கு அல்லாட வேண்டி வரலாம். முதுமையில் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க், வாழ்த்தி வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  15. எந்த விதத்திலோ தர்மம் செய்யத் தோன்றியதோ அதை உடனே நிறைவேற்றி இருக்க வேண்டும். மனது மாறாது செய்தது உயர்வுதான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  16. எனக்கு இங்கு பி எஸ் என் எல் லின் சேவை டிருப்திகரமாகவே இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பி எஸ் என் எல் கனெக்ஷன்தான் வைத்திருக்கிறேன். நன்றாகவே இருக்கிறது.

      நீக்கு
  17. டாக்டர் ரஜினி கலையரசன் இன்று போல் எப்போதும் இருக்க வேண்டும்.

    பூண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமையாசிரியை மணிமேகலைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
    இப்போதெல்லாம் ஆசிரியர்களை பற்றி நல்ல செய்திகள் அடிக்கடி காதில் விழுகின்றன. சந்தோஷமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. BSNL-லில் தற்கால தொழிற் நுட்ப தேவைகளுக்கேற்ப பணியாள்ர்களை நேரடித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்க முடியாது. படிப்படியாக இலாகா தேர்வுகளின் மூலம் தான் பதவி உயர்வு பெற்று வருகிறார்கள். அன்றாட பணி அனுபவங்கள் தான் அவர்களின் திறமையை பட்டை தீட்ட உதவுகிறது. அப்படியானவர்கள் இன்றைய
    சவாலான தொழிற் நுட்ப சேவைகளுக்கு ஈடு கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  19. பள்ளிக்கு பாராட்டு பி.எஸ்.என்.எல் வேஸ்டு

    பதிலளிநீக்கு
  20. வழக்கம்போல அனைத்து நேர்மறை செய்திகளும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!