புதன், 22 ஆகஸ்ட், 2018

புதன் பதில்கள். 180822


வாங்கோ, வாங்கோ! 

Image result for beautiful lady welcoming 



இந்தவாரம் பெரும்பாலும் வாட்ஸ் அப் கேள்விகள்தான்.

பதிவில் யாரும் கேள்வி கேட்கவில்லை என்றாலும், நெ த வின் இரண்டு கேள்விகள் கண்ணில் பட்டதால், அவைகள் இங்கே முதலில் இடம் பெற்றுள்ளன.

நெல்லைத்தமிழன் : 

ராஜராஜ சோழன் இலங்கைமீது படையெடுத்து வென்றான், பெரியகோவிலைக் கட்டினான் என்று சொல்லிப் புகழ்வதெல்லாம் அவன் ஒருவனுக்கா சேரும்? 

ப: ராஜராஜன் தலைமையில், அவரிடமிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு ஒரு குழு, அவர் இட்ட பணியை செவ்வனே செய்கிறது. சம்பளத்திற்கு வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது. சம்பளம் கொடுத்தவருக்கு, புகழ் கிடைக்கிறது. அவ்வளவுதான். 

நான் வேலை பார்த்த தொழிற்சாலைக்கு, நான் நடைமுறைப்படுத்திய சில மாற்றங்களால், ஒவ்வொரு வருடமும், இலட்சக்கணக்கில் பணம் மிச்சம் ஆனது. அந்த மாற்றங்களை செய்ததற்கு எனக்கு சம்பளம், சிறப்பு சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் கிடைத்துவிட்டது. புகழ் & பலன்,  தொழிற்சாலைக்கு. பணம் & பதவி உயர்வு எனக்கு. 

 ஒருத்தர் எழுதுற இடுகையை, 'ஆஹா அபூர்வம்', 'அருமை', 'நல்லா இருக்கு' என்று எழுதுவதில் என்ன திருப்தி எழுதுபவருக்கு இருந்துவிட முடியும்? 


ப: Not the content - but the response is important. 
ஒன்றும் கூறாமல் (எழுதாமல்) படிப்பவற்றைக் கடந்து சென்றுவிடலாம். எழுதியவருக்கு, தன்னுடைய படைப்பைப் பற்றி, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விடும். சில படைப்பாளிகள் இதனால் நொந்து நூடுல்ஸ் ஆகி, தன்னைத்தானே சுருக்கிக்கொள்ளும் அபாயமும் உண்டு. என்னைப்பொருத்தவரை, வலைப்பதிவுகள் மற்றும் முகநூல் பதிவுகளில், புதிய தகவல், புதிய கண்ணோட்டம், காயப்படுத்தாத நகைச்சுவை, ஆராய்ச்சி, அனுபவக் கட்டுரைகளை எங்கு படித்தாலும், எழுதியவருக்கு ஒரு வார்த்தையாவது பாராட்டாக அளிக்கத் தவறுவதில்லை. அப்போ, "ஆஹா அபாரம், அருமை, நல்லா இருக்கு"  போன்ற வார்த்தைகளை எழுதி, என் திருப்தியைத் தெரிவித்து, எழுதுபவரை ஊக்கப்படுத்துவேன். 

இப்போ வாட்ஸ் அப் போயிடலாம் !

Image result for whatsapp

அட இங்கேயும் முதலில் நெல்லைத்தமிழன் கேட்ட கேள்விகள்! 

நெல்லைத்தமிழன் : 

வாதாங்கொட்டைகளை உடைத்து உள்ளிருக்கும் பருப்பைச் சாப்பிட்டபோது இருந்த சந்தோஷம் (தேவையான அளவு சாப்பிடணும்னா, அதுக்கு நிறைய வாதாங்கொட்டைகளை உடைக்கணும்), காசைக் கொடுத்து பாதாம் பருப்பு வாங்கிச் சாப்பிடும்போது இருக்கிறதா? (நாமே முயற்சித்ததைவிட எளிதாகக் கிடைக்கும் உணவு அந்த திருப்தியைத் தருமா?)

வாதுமை பருப்பு புதிது பல் கூச்சங்கள் வராத வயது இரண்டும் ஒரு நல்ல அனுபவம். கடையில் கிடைக்கும் பாதாம் பருப்பு அந்த அடுக்கடுக்கான பருப்புக்கு இணை ஆவதில்லை.

நாட்டு வாதாம்பருப்பு ருசியே அலாதிதான். என்னதான் சொன்னாலும் இப்போது கடைகளில் கிடைக்கும் பாதாம்பருப்பு அதற்கு ஈடு இல்லை.

சிறிய வயதில், நாமே சில செயல்களை செய்து, அதிலிருந்து வருகின்ற பலனை அனுபவிப்பது, அதில் உள்ள திரில், மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. வாதாங்கொட்டை உடைப்பது, மாவடுவை கதவிடுக்கில் நசுக்கிச் சாப்பிடுவது, புளியம்பழம் பொறுக்குவது, ஆற்றுமணலில் அத்திப்பழம் பொறுக்குவது எல்லாமே இதில் அடக்கம். அவை யாவும் காசு இல்லாமல் கிடைத்த சொர்கங்கள். இப்போ கிடைக்கின்ற பாதாம் பருப்புகள் ஒவ்வொன்றும் ஒரு கிராம் உள்ளது. விலை ஒரு பாதாம் குறைந்தபட்சம் ஒரு ரூபாய். சுவையும் இல்லை.   

வெளிநாட்டுப் பொருட்களை வாங்காதீங்க, சுதேசிப் பொருட்கள் கிடைக்கும்னா அதையே வாங்குங்க என்று சொல்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஆம் என்றால் என்ன என்ன பொருட்கள் ‘சுதேசி’தான் வாங்குவேன் என்று நினைத்து நீங்கள் வாங்குகிறீர்கள்?

கூடியமட்டும் உணவு உடை இரண்டுக்கும் வெளிநாட்டுப் பொருள்களை வாங்குவதில்லை.

எலக்ட்ரானிக் பொருள்கள் ஷேவிங் பிளேடு  இந்திய தயாரிப்பில் அவ்வளவு தரமாக இல்லை. மற்றபடி பெரும்பாலும் இந்திய பொருட்களையே வாங்குகிறோம்.

வெளிநாட்டுப் பொருட்களில் சீனத் தயாரிப்புகளும், உள்நாட்டுப் பொருட்களில் ஜலந்தர் தயாரிப்புகளும் உன்னதமில்லாதவை. 

இவ்வளவு தொலைக்காட்சிகளில், இத்தனை ‘விவாதங்கள்’ தினமும் நடக்கிறதே. அதனால் யாருக்காவது உபயோகம் இருக்கா?

எல்லா விவாதங்களையும் போலவே தொலைக்காட்சி விவாதங்களும் ஒரே நேர விரயம் தான்.

உபயோகம்? ஓ ! உண்டே! விளம்பரதாரர்களுக்கு! 


ஸ்ரீராமைத் தவிர்த்து மற்ற ஆசிரியர்கள் திங்கக் கிழமைப் பதிவுக்கு ஏன் எழுதுவதில்லை?

திங்கட்கிழமை பதிவுக்கு ஸ்ரீராமுக்கு இருக்கும் அனுபவமும் ஆற்றலும் வேறு யாருக்கும் இல்லை என்பதே காரணம்.

ஸ்ரீராமா? திங்கட்கிழமைப் பதிவுக்கா! பாத்து ரொம்ப நாளாச்சு! இப்போ மற்றவர்கள் ரெசிப்பிகள்தானே வந்துகிட்டு இருக்கு!

இத்தனை போக்குவரத்து வாகனங்கள் இருந்தும் இன்னொரு இடத்துக்குப் போக அவ்வளவு சோம்பலாக இருக்கிறதே… இவை எதுவுமே இல்லாத காலம் எப்படி இருந்திருக்கும்? (என் பெரியப்பா அவரது 30 வயதுக் காலங்களில் எங்குமே நடந்துதான் சென்றிருக்கிறார்-10 கி.மீட்டர் தூரம் வரை. என்னையும் அதுபோல் நடத்தித்தான் கூட்டிச்சென்றிருக்கிறார், பேருந்து வசதி இருந்தபோதும்)

நேரக்குறைவு ஒரு பெரிய காரணம் இரண்டாவது தெருக்களில் மாசு மூன்றாவதாக நம் dependence on மின்விசிறி ஏர் கொண்டிஷனெர் இவை. போக்கு வரத்து வசதிகள் இருந்தாலும் காத்திருத்தல் காசு செலவழித்தல் இரண்டுமே நம்மால் முடிவதில்லை. 


இது சோம்பல் யுகம். அந்த காலம் அப்படி அல்ல. நானே ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னால் நடை மிகவும் அதிகமாக நடந்திருக்கிறேன் இப்போதுதான் ஆட்டோ பஸ் டாக்ஸி என்று தேடல்.

 பயணம் என்று வந்துவிட்டால் எனக்கு சலிப்பு தரும் எதுவுமே இருப்பதில்லை. உடல் அசதி மட்டும் வி.வி.

சங்கீத சீசனில் நானும் என் சகோதரர்களும், பஸ், ரயில், ஷேர் ஆட்டோ, இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் நடை என்று எல்லாவற்றையும் சோம்பல் இல்லாமல் செய்துவருகிறோம். எதற்காகப் பயணிக்கிறோம் என்பதைப் பொருத்தது சோம்பலும் சுறுசுறுப்பும். 

முன்போல் ஒவ்வொரு உறவினர் வீட்டுக்கும் நேரில் சென்று நேரம் செலவழிப்பதை விட்டுவிட்டு, வாட்சப்பில் நட்பு பேணுவது சுலபமாக இருக்குன்னு விட்டுவிடுகிறோம்? இல்லை, பெரும்பாலானவர்கள் அப்படி இல்லையா?

Familiarity breeds contempt என்பதெல்லாம் சும்மா !
It breeds confidence. I have always felt comfortable at home irrespective of where it was or is. 

உறவினர் வீடுகளுக்கு நேரில் செல்ல நாம் தயாராக இருந்தாலும், அவர்கள் நம்மை வரவேற்க வீட்டில் இருப்பதில்லை! ரிடையரானவர்கள் தவிர வேறு யாரும் வாரநாட்களில் காலை முதல் இரவு வரை வீட்டில் தங்குவதில்லை. வாட்ஸ் அப் எங்கேயும் எப்போதும் தொடர்பு கொள்ளலாம். 'அப்'புறம் வாட் ? 


பெங்களூரில் இருந்துவிட்டு, சென்னை வரும்போது,, எது எரிச்சலா இருக்கு, எதை மிஸ் பண்ணுவீங்க? (அதேபோல் சென்னையை விட்டுவிட்டு பெங்களூர் செல்லும்போது).  இதுக்கு நண்பர்களும் பதிலளிக்கலாம். (சென்னையை விட்டு வேற்றூருக்குச் சென்று அங்கே சில மாதங்கள் இருப்பவர்கள்)

கருத்து உரைப்பவர்கள், பின்னூட்டத்தில் இதுபற்றிக் கூறுங்கள்.

என்னைப் பொறுத்தவரை, சென்னை வெயில் பயங்கர எரிச்சல். சென்னை நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் சந்தோஷ காரணங்கள். 

பெங்களூரில் சுற்றி உள்ள அண்டை அயலார் எல்லோரும் இந்தி, மலையாளம், கன்னடம் பேசுபவர்கள். யாரும் அவ்வளவு எளிதாக பழகுபவர்கள் இல்லை. புன்னகை புரிபவர்கள் கூட இல்லை. பரிச்சயமான கடைக்காரர்கள் மட்டும் புன்னகைக்கிறார்கள். ரிடையர் ஆனவர்களுக்கு பெங்களூரில் சொந்தங்கள் தவிர வேறு சொர்கங்கள் இல்லை. 

1. சீசனல் பழங்கள், காய்கறிகள் என்று இயற்கையோடு ஒன்றி இருந்த நாம், இப்போ எல்லாக் காலங்களிலும் எல்லாப் பழங்கள், காய்கறிகள் என்று இயற்கையை ஓரளவு மாற்றியமைத்ததுபோல் ஆகிவிட்டோமே. இது நல்லதுக்கா?           

 எல்லா பழமும் ஆண்டு முழுதும் என்கிற வசதிக்கு அடிப்படை என்ன என்பது எனக்கு சரியாக தெரியவில்லை.  ஆனால் இது பயிரிடும் முறையில் தலையிட்டு எல்லா பழங்களும் எப்போதும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வது என்றால் அதில் இயற்கையினுடைய நியதிக்கு சற்று இடையூறு செய்கிறோம் என்பதுதான் பொருள்.  அது விரும்பத்தகாத ஒன்றா என்பது கேள்விக்குறி.       

நல்லதுக்குதான்!                       

2. அந்த அந்த தேச, இடங்களின் கால நிலைக்கு, செய்யும் வேலைக்கு ஏற்றவாறே அனாதி காலமாக உணவுப் பழக்கங்கள் இருந்தன. அதை இப்போது, உலகமயமாக்கல் என்ற கான்செப்டில் இழந்துவிட்டு, எல்லா உணவையும் எல்லாரும், எல்லாக் காலங்களிலும் சாப்பிடுகிறோமே. இதன் விளைவு என்னவாக இருக்கும்? (கொழுப்பு சாப்பிடவேண்டியவர்கள் குளிர் பிரதேசக் காரங்க. அப்போதான் எனெர்ஜி அவங்களுக்கு இருக்கும். கேப்பை, கம்பு போன்றவை சாப்பிடவேண்டியவங்க உழைக்கும் வர்க்கம், வயல்களில் உழைப்பவர்கள் போன்று. ஆனா இப்போ எல்லாரும் பிட்சா, பர்கர் என்று வகை தொகை இல்லாமல் சாப்பிடறாங்களே) 

இன்று வரை  மாற்றி அமைக்கப்பட்ட தாவரங்களை உண்டதால் யாருக்கும் எதுவும் பெரிய கேடு நடந்ததாக தெரியவில்லை எனவே வசதி ருசி இவற்றை உத்தேசித்து, இந்த முன்னேற்றத்தை நாம் வரவேற்க வேண்டியது தான்.     

எது வாய்க்குப் பிடிக்கிறதோ, எது உடம்புக்கு ஒத்துக்கொள்கிறதோ அதை மிதமாக எந்தக் காலத்திலும் சாப்பிடலாம் என்பதே என் எண்ணம். 
                                                                           
 3. இப்போ கலையை ரசிக்கின்ற மனோபாவம் அதிகமாகி இருக்கா இல்லை கீழ்த்தரமான ரசனைகள்தான் அதிகமாகிவிட்டனபோல் தோன்றுகிறதா?       

தற்காலத்தில் ரசனை மிகவும் கீழ் நிலையை அடைந்து விட்டது என்பது ஒரு பரவலான கருத்து.

 இது ஒரு மாயையாக இருக்குமோ என்று எனக்கு தோன்றும்.
 காரணம் இப்போது ஊடக வளர்ச்சியின் காரணமாக ரசக்குறைவான பல செய்திகளும் மிகவும் பரவலாக உலா வருகின்றன.  ரசனை குறைந்து விட்டது என்று நாம் நினைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
     

இந்தக் காலத்தில், கலைஞர்களும் அதிகம், கலையை இரசிப்பவர்களும் அதிகம் என்று நினைக்கிறேன். ரசனைகள் வயதுக்கு ஏற்ப மாறும்.

4. இப்போ உள்ள ஜெனெரேஷனைப் பார்க்கும்போது, அவங்க சதா சர்வ காலமும் ஆங்கிலப் பாடல்களைக் கேட்டிட்டிருக்காங்க. அதைவிட்டால் துள்ளும் பீட்ஸ் உள்ள தமிழ்ப்பாடல்கள்தான். இதனை ரசனை மாற்றம் என்று எடுத்துக்கொள்வதா இல்லை எதைத்தான் மேற்கத்தைய நாடுகளிலிருந்து எடுத்துக்கொள்வது என்று தெரியாத சிறுபிள்ளைத்தனம் என்று எடுத்துக்கொள்வதா?     

 சும்மா ஒரு ஜாலி என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

 ரசிகர்கள் எண்ணிக்கையும் ரசனையின் தரமும் எப்போதும் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் குடும்ப அளவில் ரசனையை வளர்க்க நாம் ஆவன செய்ய வேண்டும்.          

உணவு - சிற்றுண்டி குறித்த ரசனை அல்லது ஈடுபாடு என்பது விரும்பத்தகாத ஒன்று அல்ல. அது குறித்து செய்யப்படும் கிண்டல் தாக்குதல் அன்று.  

இப்போ உள்ள ஜெனெரேஷன் என்று சொல்கிறீர்கள். ஆங்கிலப்பாடல்கள்? என்னுடைய சொந்தக்கார இளைஞர்களைப் பார்க்கும்பொழுது அப்படித் தெரியவில்லை. எந்த நாட்டில், எந்த ஊரில், எந்தப் பொருளாதார நிலையில் உள்ள இளைஞர்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கூறுங்கள்.
               

5. கீசா மேடம் ஒரு பின்னூட்டத்தில், கோவிலுக்குப் போனால், உணவு ஞாபகம்தானா உங்களுக்கு வருகிறது என்று என்னைக் கேட்டிருந்தார். நம்ம பாரம்பர்யத்துல, உணவையும் கோவிலையும் சேர்த்துவைத்திருக்கிறார்கள். திருப்பதி போனேன் என்று சொன்னால் 'லட்டு எங்க' என்ற கேள்வியும், கூடாரை வெல்லும் சீர் இன்றைக்காச்சே, கோவிலில் சர்க்கரைப் பொங்கல் தருவார்களே என்ற நினைப்பும், இந்தக் கோவிலில் இந்தப் பிரசாதம் என்பதையும் அறியமலா முன்னோர்கள் வழிவகுத்திருப்பார்கள்?     

  
The way to a man's heart is through his stomach. So, God wants to enter our heart, through our stomach. Temples show the way! 

என்னுடைய சிறிய வயதில், நாங்கள் குடியிருந்த வீட்டின் அருகில், சட்டையப்பர் கோவில், அதன் வாயில்புறத்தில் ராமமடம். அந்த ராமமடத்தில், மார்கழி மாதங்களில், காலை நாலரை மணிமுதல் ஆறு மணிவரை, மார்கழி பஜனை நடக்கும். சுமார் முப்பது நாற்பது பேர் வருவார்கள். பாடத் தெரிந்தவர்கள் பாடுவார்கள். ஒவ்வொரு வரிக்கும் நடுவில் கேப் விடும்போது நாங்கள் கோஷ்டியாக உரத்த குரலில் அவர் பாடிய வரிகளை அதே இராகத்தில் பாடுவோம். குறிப்பிட்ட பாடல் வந்ததும் அல்லது ஐந்தே முக்கால் மணி ஆனதும் எல்லோர் முகத்திலும் சந்தோஷம் பொங்கும். சூடான வெண்பொங்கல் உபயதாரரால் கொண்டுவரப்பட்டு, வெளிவாயிலில் வைக்கப்பட்டு, பக்தர்கள் மடத்திலிருந்து வெளியே வருகின்ற கதவுக்குப் பக்கத்தில் ஒருவர் நின்றுகொண்டு, சூடான பொங்கலை நம் கை நிறைய கொடுப்பார். அந்தப் பொங்கலின் சூடும்,சுவையும், மணமும் இப்பவும் என் மனதில் நிற்கிறது. 

எதற்கு இவ்வளவு விஸ்தாரமாக சொல்கிறேன் என்றால், அந்த சிறிய வயதில், கோயிலில் பொங்கல் கொடுத்திருக்கவில்லை என்றால், நான் அதிகாலையில் அங்கு போயிருப்பேனா? நிச்சயம் போயிருக்கமாட்டேன்.  ஆனால் தினம்தோறும் போய் பாடல்கள் கேட்டு, கூடப் பாடி, அந்தப் பாடல்கள் எல்லாம் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது! 

உணவு, பக்தியைப் பெருக்க ஒரு யுக்தி. 
                                                                                   
6. சுதந்திர தினம் என்ற உடனே, பள்ளிக்கூட வயதில், சாக்லேட் தருவார்களே என்று ஆசை ஆசையாக காலையிலேயே பள்ளிக்குச் சென்ற ஞாபகம் வருகிறதா? இப்போது அந்த சந்தோஷம் குறைவாக இருக்கிறதா?

1947இல் முதல் சுதந்திர தினம். முத்துப்பேட்டை என்கிற சிறு ஊரில் மாபெரும் பட்டு கொடி ஏற்றப்பட்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்தக் காலத்தில் சாக்லேட்டுகள் அதிகம் புழக்கத்தில் கிடையாது எனவே பெப்பர்மின்ட் என்று சொல்லக்கூடிய சர்க்கரை மிட்டாய் களை பிடிப்பிடியாக  வந்திருக்கும் எல்லோருக்கும் சந்தோஷமாக வழங்கினார்கள்.  

அப்போது சுதந்திர இந்தியாவைப் பற்றிய எதிர்பார்ப்புகள் ஏராளம். பெரும்பாலும் எல்லாமே பொய்த்துப்போனது என்ற விஷயம் தான் சோகம். முன்னேற்றம் இல்லாமல் இல்லை. கனவு கண்ட அளவு இல்லை. எதிர்பாராத கெடுதல்களும் விளைந்தன.

மிட்டாய் விஷயத்தில் மட்டும் ரொம்ப முன்னேறிவிட்டோம்:  வேறு எல்லாத்துறைகளிலும் ஏமாற்றம்.

அந்த சந்தோஷமே தனி! இப்போ கூட யாராவது ஆரஞ்சு சுளை மிட்டாய் கொடுக்கிறார்கள் என்றால், நான் கொடி ஏற்றம் காணப் போக ரெடியாக இருக்கிறேன்!


பானுமதி வெங்கடேஸ்வரன் :

கேரள மழை, வெள்ளத்திற்கு ஐயப்பனின் கோபம்தான் காரணம் என்று ஒரு கருத்து நிலவுகிறதே?

கடவுளைக் கருணாமயமாக மதங்கள் காண்கின்றன.
துஷ்ட நிக்ரகம் செய்வதும் கடவுளின் இயல்பு எனவும் கூறப்படுகிறது.
கேரளத்தில் அவதியுறுவோர் *அனைவரும்* துஷ்டர்கள் என ஒருபோதும் சொல்ல முடியாது.

கடவுள் கணக்கு வைத்துப் பரிசுகளும் தண்டனைகளும் தருவதாக எண்ணுவது இறைமையின் உயர்வைப் பழிப்பதாகும் என்று நம்புகிறேன். இது மனிதரின் அற்ப அறிவின் வெளிப்பாடு.

எ.பி.யில் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் அனுஷ்கா,தமன்னா, பாவனா,எம்.வி.ராஜம்மா என்று ஆண்களை கவர்ந்த கனவு கன்னிகளின் படங்களை மட்டும் போட்டு க் கொள்கிறீர்களே, அஜித், சூர்யா, அரவிந்த் சாமி, மாதவன் மற்றும் ஜெய் சங்கர் மாமா, ஜெமினி தாத்தா பாடங்களை போட்டால் நாங்கள் ரசிக்க மாட்டோமா? அல்லது தன் கணவரைத் தவிர அன்னிய ஆடவர்களை ரசிக்கக் கூடாது என்று கருதுகிறீர்களா?

ஆண் நாயகர்களின் படங்கள் பெண் வாசகர்களைக் கிளர்ச்சி அடையச் செய்யும் என்று நம்புவது கடினமாகத்தான் இருக்கிறது. Playboy பிரபலமான அளவுக்கு  Playgirl பிரபலமாகவில்லை. அப்படி ஒரு பத்திரிகை இருப்பதே பலருக்கும் தெரியாது.

கவர்ச்சிப் படம் என்பது காலம் காலமாக பாலியல் விஞ்ஞான அடிப்படையில் மேற்கொள்ளப் படும் யுக்தி.  Easily excited தத்துவப் பிரகடனம்.

பெரும்பான்மையானவர்களை, ஒருங்கே கவர்கின்ற படங்கள்  என்று பார்த்தால், இந்த வரிசையில் வரும்:

# நடிகைகள்.( சமகாலத்தவர்கள்)
# குழந்தைகள்.
# சிற்றுண்டி போன்ற உணவு வகைகள். 
# வீட்டு வளர்ப்புப் பிராணிகள்
# இயற்கைக் காட்சிகள். 

மேலும், அனுஷ்கா ரசிகர்கள் தமன்னாவை வெறுப்பதில்லை; த ரசிகர்கள் அ வை வெறுப்பதில்லை. 

ஆனால், எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் எல்லோரையும் ரசிப்பார்கள் என்றோ, ஒருவரின் ரசிகர் மற்றவர்களை வெறுக்கமாட்டார் என்றோ சொல்லமுடியாது. 

ஜெய் சங்கர் மாமா, ஜெமினி தாத்தா ..... ஐயோ ஐயோ !! என்ன கேள்வி இது ! ரசிக்கிறவங்க இப்படி எல்லாம் சொல்லமாட்டாங்க! 

=======================

கேள்வி கேட்பவர்கள் எல்லோரும் ஓடிவாங்க! நிறைய கேள்விகளை அள்ளி வீசுங்க!

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!

======================

Image result for beautiful girl saying bye
                  
             

56 கருத்துகள்:

  1. அன்பின் KGG அவர்களுக்கும் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் உல்லாச வானில் சிறகடித்துத் திரியும் ஊர்க் குருவிகள் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. அது யாருங்க உல்லாச வானில் சிறகடித்துத் திரியும் ஊர்க்குருவிங்க?

      நீக்கு
    3. நாம எல்லாரும் தான்....

      எபி..க்கு வந்தாலே பத்து வயசு குறைஞ்ச மாதிரி இருக்கே!...

      (அனுஷ்காவை எங்கே காணோம்... ன்னா சண்டைக்கு வந்திடுவாங்க!...)

      நீக்கு
  2. இப்போ இவங்க வந்திருப்பது
    அவங்களுக்குத் தெரியுமா?....

    தெரியும் என்றால் -
    அவங்க ஏன் வரலை!?...

    பதிலளிநீக்கு
  3. போன வாரம் கண்ணாம்பா வந்தாங்களே..

    இந்த வாரம் T.R.ராஜகுமாரி வருவாங்களாக்கும்..ன்னு நெனைச்சேன்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸார்... கண்ணாம்பா வந்தது விசாளக்கெளம... இது புதன்!!!

      நீக்கு
    2. @Durai, நீங்க வேறே! நான் எம்.எஸ். அம்மாவையும் ராஜரத்தினம் அம்மாவையும் எதிர்பார்த்திருந்தேன். :)

      நீக்கு
    3. ஐயோ... கீசா மேடம் எம்.எஸ் சுப்புலக்‌ஷ்மி அம்மா சண்முகவடிவை எதுக்கு எதிர்பார்த்தூங்க? ராஜரத்னம் பிள்ளையோட அம்மாவுக்கு புதன் கேள்வி பதில்ல என்ன வேலை?

      நீக்கு
    4. @ நெ.த. இஃகி,இஃகி இஃகி, ராஜலக்ஷ்மி என்பதற்கு ராஜரத்தினம்னு தப்பாய்ச் சொல்லிட்டேன். அ.வ.சி.

      நீக்கு
  4. //உணவு - சிற்றுண்டி குறித்த ரசனை அல்லது ஈடுபாடு என்பது விரும்பத்தகாத ஒன்று அல்ல. அது குறித்து செய்யப்படும் கிண்டல் தாக்குதல் அன்று. // பதில் இடம் மாறி விட்டது! :))))) இஃகி, இஃகி, யாருப்பா அது கழுகுக்கண்ணுனு சொல்லுறது?

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. ஆமாம். வர வர, எங்களைக் கேள்வி கேட்க ஆளே இல்லாம போயிடுச்சு பாருங்க!

      நீக்கு
    2. காலை வணக்கம் அனைவருக்கும். கேள்விகள் குறைவாக இருந்தாலும், பதில்களில் நிறைய அருமையான செய்திகள் கிடைத்தன.
      பின்னூட்டக் கருத்துகளே வலைத்தளங்களை வளர்க்கின்றன என்பதில் சந்தேகமே கிடையாது.

      துளசி கோபால் பின்னூட்ட அரசி என்றே பட்டம் கொடுக்கப்பட்டார்.

      நீக்கு
    3. எங்கள் ப்ளாக் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன.
      தி.கிழமை, செ கிழமை கதை, பு கிழமை கருத்துகள், வி கிழமை கதை
      ஸ்ரீராம் பதிவுகள்.
      எது முக்கிய காரணம்.

      நீக்கு
    4. நான் சென்னையிலிருந்து பெங்களூர் வந்து அதிக நாட்கள் ஆகவில்லை, அதனால் கருத்து கூறுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் புலம்ப ஒரு மேடை கிடைத்தால் விடுவோமா?

      இப்போதைக்கு லஸ் பிள்ளையார், கற்பகம்,கபாலி, கே.கே.நகர் அம்மன் கோவில், மாங்காடு காமாட்சி, ராமாபுரம் வைத்தியநாதா சாயிபாபா, டி.நகர் மதர் (சென்டர்) இவர்களைத்தான் அதிகம் மிஸ் பண்ணுகிறேன்.

      மற்றபடி சின்ன சின்ன குடும்ப கேதரிங்குகள், சமீபத்தில் கூட என் சகோதரிகள் எல்லோரும் குடும்பத்தோடு சொக்கிதானி சென்ற புகைப்படங்களை வாட்ஸாப்பில் பகிர்ந்திருந்தார்கள். நம்மால் கலந்து கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தது.

      அதற்குப் பிறகு ராமாபுரம் விக்னேஸ்வரா லேடீஸ் கிளப்பின் நிகழ்ச்சிகள்(அங்கு நான்தான் ஆஸ்தான நிகழ்ச்சி தொகுப்பாளர்).

      ராமநவமியை ஒட்டி கே.கே.நகர் ராம பக்த ஜன சபாவின் ஆதரவில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள்.

      அப்புறம் என் தோழி பிரமிளா. அவரும் நானும் சேர்ந்துதான் கோவில்,சினிமா என்று செல்வோம். ஹூம்..!

      பெங்களூர் விட்டு வேறு எங்கு சென்றாலும் மிஸ் பண்ணுவது இதன் இதமான சீதோஷ்ணம்.

      புலம்பலை சகித்து கொண்டதற்கு நன்றி!

      நீக்கு
    5. /எது முக்கிய காரணம்.// - வல்லிம்மா... எங்கள் பிளாக்கைப் படிக்கின்ற வாசகர்கள்தான் காரணம்னு மொக்கை போடக்கூடாதுன்னு சொல்ல விட்டுட்டீங்களே....

      நீக்கு
  6. ஏன் பத்திரிகைகளில் அதிகம் பெண்களின் படங்களையே போடுகிறார்கள் என்று விளங்க வைத்ததிற்கு நன்றி. அது சரி பதிவில் இரண்டு குழந்தைகள் படம் போட்டிருக்கிறீர்கள். முதல் குழந்தை யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியா பொதுவில் வெளிப்படையா உங்க வயசைக் காண்பித்துக்கொள்வது? இல்லை ஒருவேளை சாமியாரிணி ஆகிவிட்டீர்களா... பார்ப்பவர்களை எல்லாம் குழந்தாய் என விளிக்க?

      நீக்கு
    2. //ஒருவேளை சாமியாரிணி ஆகிவிட்டீர்களா... பார்ப்பவர்களை எல்லாம் குழந்தாய் என விளிக்க?//
      ஹி ஹி! ஒரு மதர்லி ஃபீலிங் ஆக இருக்கக்கூடாதா?

      நீக்கு
  7. //ஆமாம். வர வர, எங்களைக் கேள்வி கேட்க ஆளே இல்லாம போயிடுச்சு பாருங்க!// கேஜிஜி சார், நான் வந்துட்டேனே கேள்வி கேட்க! :) உங்களுக்குச் சென்னை பிடிக்குமா? பெண்களூர் பிடிக்குமா?ஏன்? எங்கு வாழ்வது ரசிக்கத் தக்கது?

    எனக்குச் சென்னையே பிடிக்காது! ஏன்? கண்டு பிடிங்க பார்க்கலாம்! :)

    பிடிச்ச ஊர் எது? (கல்யாணமஹாதேவி என்னும் பதில் தவிர்க்கவும்)

    பானுமதி இத்தனை மிஸ் பண்ணுவதாய் எழுதி இருக்காங்க! நீங்க? சென்னையில் எதை மிஸ் செய்கிறீர்கள்?

    சொந்தங்கள் எல்லாம் சென்னையில் இருந்தும் எனக்கு அப்படி ஏதும் தோணலை! ஏன்? வரேன் அப்புறமா முடிஞ்சா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @துரை செல்வராஜு, இணையம் வந்ததிலே இருந்து "பெண்களூர்" "பையர்" "ரங்க்ஸ்" போன்ற வார்த்தைகள் எம்மால் அறிமுகம் செய்யப்பட்டன என்பதை அறிவீர்! :)))))

      நீக்கு
    2. எதை அறிமுகம் செஞ்சீங்களோ... இந்த 'பெண்களூர்' என்பது மட்டும் உண்மை. அதுக்காகவே உங்களுக்கு விழா எடுக்கலாம். காவிரி நடுவே மணலில் விழா கொண்டாடினால் நல்லா இருக்கும். வெண்மணல் பரப்பு கண்ணுக்குத் தெரிஞ்ச உடனே சொல்லுங்க கீசா மேடம்

      நீக்கு
    3. சென்னையா, பெங்களூரா என்று என்னைக் கேட்டால், எனக்கு பெங்களூர்தான் பிடித்திருக்கிறது, அதன் சாம்பார்/சட்னி தவிர. அது மட்டும் கிடைக்குமானால், பெங்களூரை மிஞ்ச முடியாது. அதன் சீதோஷ்ணம் சென்னை உஷ்ணத்தைவிட எவ்வளவோ தேவலை.

      நீக்கு
    4. @ Geetha Sambasivam..

      >>> துரை செல்வராஜு, இணையம் வந்ததிலே இருந்து "பெண்களூர்" "பையர்" "ரங்க்ஸ்" போன்ற வார்த்தைகள் எம்மால் அறிமுகம் செய்யப்பட்டன என்பதை அறிவீர்! :)))))<<<

      தன்யானானேன்... மா ஜீ!... ( கா ஜீ..ன்னு போடலாமோ!?...) தன்யனானேன்!..

      நீக்கு
    5. ஓய்!.. அது என்னங்காணும் மா ஜீ.. கா ஜீ!...

      அதுவா..
      மா ஜீ..ன்னா அம்மா ஜீ!..
      கா ஜீ..ன்னா அக்கா ஜீ!..

      நீக்கு
    6. இஃகி, இஃகி துரை, எப்படி வேணாக்கூப்பிடுங்க! என்னை விடப் பெரியவங்க எல்லாம் அம்மானு கூப்பிடறாங்க! சரினு நானும் விட்டுட்டேன்.

      நீக்கு
  8. கண் திருஷ்டி என்பதை நம்புகிறீர்களா? கண் திருஷ்டியால் நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ பாதிக்கப்பட்ட அனுபவம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Bhanumathy Venkateswaran

      >> கண் திருஷ்டி என்பதை நம்புகிறீர்களா?..<<

      நல்ல கதை...
      அம்பாளுக்கே திருஷ்டிப் பொட்டு வெச்சித்தான் ஊர்வலமா கொண்டு வர்றாங்க!...

      அதைப் பற்றி நெறைய எழுதலாம்...

      கண் திருஷ்டி மெய்.. ஆனா, கண் திருஷ்டி கணபதி..ங்கிறது பொய்...
      அது இந்த அச்சாபீஸ்....காரனுங்களும் போலி சோசியங்களும் கிளப்பி விட்ட சங்கதி...

      அதிலயும் பார்த்தீங்க..ன்ன்னா - அகத்தியர் அருளிய.. - அப்படி..ன்னு போட்டிருப்பான்...
      இப்போ அதுக்கு யந்திரம் மந்திரம் எல்லாம் உருவாக்கி விட்டுட்டானுங்க...

      நீக்கு
    2. கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
      கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
      எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
      என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்

      திருஅருட்பா, திருமுறை : 6, பாடல் : 4225

      நீக்கு
    3. திரு. தனபாலன் அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  9. கடவுள் என்று ஒன்று உண்டு என்று நம்பாதவர்கள் அதை இயற்கை என்பார்கள்.. நாம் இயற்கையை எக்ஸ்ப்லாய்ட் செய்யும் பொழுது அது சீற்றமடைய வாய்ப்பு உண்டுதானே? எனவே, இயற்கை சீற்றம் என்பது கடவுளின் கோபம் என்று கொள்ளலாமா?(எப்படி நம்ம லாஜிக்?)

    பதிலளிநீக்கு
  10. //நாட்டு வாதாம்பருப்பு ருசியே அலாதிதான். என்னதான் சொன்னாலும் இப்போது கடைகளில் கிடைக்கும் பாதாம்பருப்பு அதற்கு ஈடு இல்லை.//

    என் மாமியார் வீட்டில் வாதாம் மரம் இருந்தது. அதன் பழங்களை காய வைத்து உடைத்து பருப்பை சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதன் இலையில் மாலை நேர சிற்றுண்டி வைத்து கொடுப்பார்கள் அத்தை.

    //எது உடம்புக்கு ஒத்துக்கொள்கிறதோ அதை மிதமாக எந்தக் காலத்திலும் சாப்பிடலாம் என்பதே என் எண்ணம்.

    உண்மைதான்.

    கடவுளைபற்றி சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
  11. பதில்களை ரசித்தேன். சிலருடைய பதில் ரொம்பவும் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதாகப் பட்டது.

    நான் 7வது படித்துக்கொண்டிருந்தபோது, சாலையில், ஒருவரைப் படுக்கவைத்து அவர் மீது துணியைப் போர்த்தி, அதனுடன் அவரை 7 அடிக்குமேல் படுத்த வாக்கிலேயே மேலே எழுப்பி ஒரு சுத்து சுத்தவைத்த மோடிமஸ்தான் வித்தையைப் பார்த்திருக்கிறேன். அதுபோல் நீங்க ஆச்சர்யமூட்டும் வித்தைகளைப் பார்த்த அனுபவம் உண்டா?

    கடவுளை உணர்ந்திருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாப்பது வருசத்துக்கு முன்னால -

      அப்போ நாங்க கிராமத்தில இருந்தோம்... நண்பன் தஞ்சாவூர் அரண்மனை எல்லாம் பார்த்து இல்லை ..ன்னு வருத்தப்பட்டான்..

      சரி..ன்னு அவனைக் கூட்டிக்கிட்டு தஞ்சாவூர் சித்தப்பா வீட்டு வந்தேன்..
      காலைல கிளம்பி புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்குப் போய்ட்டு திரும்ப வந்தோம்..

      பஸ்ஸ்டாண்டுக்கு பக்கத்தில ஞானம் டாக்கீஸ்...( இப்போ அது ஹோட்டல் வணிக வளாகமா ஆகி விட்டது..) அதுக்கு முன்னால - கூட்டம்..

      மோடி மஸ்தான் குறளி வித்தை...

      நண்பன் குறளி வித்தையும் பார்த்ததேயில்லை...ன்னான்...

      சரி..ன்னு கூட்டத்துக்குள்ளே புகுந்து முன்னால உட்காந்துகிட்டோம்...

      டுமுடுமு...ன்னு குட்டி உடுக்கையை அடிச்சுக்கிட்டேயிருந்தான் - மஸ்தான்...

      புன்னகை ததும்பும் மண்டையோடு, முன் கை எலும்பு.. ஏதேதோ மை டப்பா, தாயத்து கயிறு, பிரம்புக் குச்சி, ரெண்டு பாம்புக் கூடை, பக்கத்துல கீரிப்பிள்ளை...

      அவங்கூட்டத்தில இருந்த சின்னப் பயலைப் பார்த்து ஆ..ஹூ.. ந்னு கத்துனதும்
      அவன் வாயில இருந்து சிவப்பா ஒழுகுனது...

      அவனக் கீழே தள்ளி பழைய அழுக்குத் துணியால மூடிட்டு மஸ்தான் கத்தினான்..

      அல்லாரும் காசப் போட்டுட்டு சாயபு கிட்ட தாயத்து வாங்கி கட்டிக்கிங்க..
      அல்லாட்டி இதே கதிதான்..ரத்தம் கக்கி சாவீங்கோ...

      அதுக்குள்ள துணிக்குள்ள கிடந்தவன்...

      அரே... பாய் ... இன்னிக்கு ரெண்டு மூதேவிங்க வந்து குந்திக்கினு இருக்குதுங்க.. அதுங்கள வெரட்டு முதல்ல... இல்லேன்னா நாஷ்டாவுக்கு ஆவாது...ன்னான்...

      பயந்து போன மஸ்தான் ஒவ்வொருத்தர் முகத்தையா பார்த்துக்கிட்டே வந்தான்...

      எங்க ரெண்டு பேர் மூஞ்சிகளையும் பார்த்ததும் அவனுக்குப் பேதியாயிடுச்சி...

      அரே.. சைத்தான்களா... முதல்ல... போங்க இங்கேருந்து..
      பொழப்பைக் கெடுக்காதீங்க!.. - அப்படி... ந்னு கத்துனான்...

      அவ்வளவு தான்... எடுத்தோம் அங்கேருந்து ஓட்டம்..

      வீட்டுக்கு வந்து சித்தப்பாகிட்டே சொன்னோம்...

      மாரியம்மன் குங்குமம் வெச்சிருந்தீங்கள்ள... அதான் அவனோட கொறளி வித்தை செல்லாமப் போய்டுச்சு!.. - ந்னு சொன்னார்...

      அதுக்கு அப்புறம் கிராமத்து கூட்டாளி சொன்னான்..

      சே.. இவ்வளவு தூரம் வந்தும் மோடி மஸ்தான் வித்தைய பார்க்க முடியலையே!...

      நீக்கு
    2. அந்த நேரத்தில் யாரும் கைகளைக் கட்டிக்கொண்டுஇருக்கக் கூடாது என்றும் சொல்வார்களே

      நீக்கு
    3. /// சே.. இவ்வளவு தூரம் வந்தும் மோடி மஸ்தான் வித்தைய பார்க்க முடியலையே!... ///

      இன்றைக்கு பல இடங்களில் அந்த வித்தைய மக்கள் பார்க்கிறார்களே...?!

      நீக்கு
  12. ராஜராஜன் பேருக்குண்டான பதில் ஒத்துக்கொள்ளக்கூடியதுதான்..

    சகோ ஸ்ரீராமைவிட நல்லா சமைக்குறவங்க இருந்தாலும் அவர்கள் பதிவு வராததுக்கு காரணம் சமையலை படமெடுக்காததுதான். இதுக்குதான் என்னைய மாதிரி அடுக்களையில் ஒரு போன் இல்லன்னா கேமரா வச்சுக்கனும். மாமாவோட பழைய போன் மசாலா டப்பாவில் வச்சிருக்கேன். சுடுதண்ணி வச்சாலும் க்ளிக்தான்.

    பதிலளிநீக்கு
  13. பதில்கள்
    1. ஹாஆஆஆஆஆஆஆஆஆ ஹாஆஆஆஆஆஆஆ ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ:)) ஹையோ என்னால முடியல்ல:)) மீ ஓடிடுறேன் ஜாமீஈஈஈஈஈஈ:)

      நீக்கு
  14. //நொந்து நூடுல்ஸ் ஆகி, //

    ஆங்ங்ங் அது டு அல்ல டி ஆக்கும்:)) ஹா ஹா ஹா:) அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:))

    பதிலளிநீக்கு
  15. எங்கின விட்டேன் ஜாமீ.. பாதியில விட்டிட்டுப் போனேனா இப்போ லெக்கு எங்கின வைக்கிறது காண்ட்டூ எங்கின வைக்கிறதென்றே தெரியல்ல:)..

    ///ஒருத்தர் எழுதுற இடுகையை, 'ஆஹா அபூர்வம்', 'அருமை', 'நல்லா இருக்கு' என்று எழுதுவதில் என்ன திருப்தி எழுதுபவருக்கு இருந்துவிட முடியும்? //

    இதில நெ.தமிழன் கேட்டிருக்கும் கிளவியே சே சே கேள்வியே வேறு ப.மைக்கார ஆசிரியரே:)..

    நெல்லைத்தமிழன் என்ன சொல்ல வருகிறார் எனில்.. ஒருவர் கஸ்டப்பட்டுப் போஸ்ட் எழுதிப் போடுகிறார்... அதைப் படிச்சு விமர்சனம் செய்யாமல்.. வெறுமனே அருமை.. சூப்பர்.. நல்லாயிருக்கு எனப் போட்டு விட்டுப் போவது ஓகேயா? எனக் கேட்கிறார்:)), சிலர் போஸ்ட் படிக்காமல், ஒரு துன்பப் பகிர்வுக்குக்கூட.. சூப்பர், நல்லாயிருக்கு எனச் சொல்லி விடுவதும் நடக்குதெல்லோ உலகில்:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துபாய்ல நான் போன புதுசுல ஒரு கிளையன்ட் ஆபீசுக்குப் போயிருந்தேன். அவர் சாஃப்ட்வேர் பத்தி, அதன் பிரச்சனையைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தபோது, well, good என்று சொல்லி நான் விளக்கிக்கொண்டிருந்தேன் (அவர் குஜராத்தி). இடையில் ஏன் அவர் லீவுல போனார், அவர் அம்மா ரொம்ப முடியாம இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தார். நான் ஒரு ஃப்ளோல, Good. This software..னு ஆரம்பிச்சேன். அவருக்கு பயங்கரக் கோபம். என் அம்மாக்கு உடம்பு சுகமில்லைனு வருத்தப்பட்டா நீ goodனு சொல்லறயே என்று கோபமாகப் பேசினார்... அதை ஞாபகப்படுத்திட்டீங்க அதிரா. ஸ்டான்டர்டு கட் & பேஸ்ட் பதில்ல சில சமயம் சங்கடம் வந்து சேரும்.

      நீக்கு
    2. ///ஸ்டான்டர்டு கட் & பேஸ்ட் பதில்ல சில சமயம் சங்கடம் வந்து சேரும்.///
      ஹா ஹா ஹா அதேதான்:) 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

      நீக்கு
    3. நீங்க அர்ச்சுனன் மாதிரி:) கருமமே கண்ணாயிருந்திருக்கிறீங்க நெ.தமிழன். க்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா.

      நீக்கு
  16. இந்த முறை அலகமாபாத்:) ல இருந்து ஒரு அக்காவை இறக்குமதி செய்து போட்டிருக்கிறார் கெள அண்ணன்.. எங்கட ரி ஆர் ஐப்போல:)) ஹா ஹா ஹா...

    அடுத்தமுறை கார்த்திக்கையும் ஜெயம் ரவியையும் மாதவனையும் இறக்குமதி செய்யுங்கோ ஹா ஹா ஹா:)).

    நான் முன்பு கேட்ட ஒரு முக்கியமான கேள்விக்கு, பதில் தரப்படவில்லை.. அந்த வாரம் நான் வரவில்லை, ஆனா பின்பு செக் பண்ணினேன் ஸ்ரீராம் போஸ்ட் போட்டிருக்கிறார் புது ஸ்டைலில்.. அதில் என் வினாவுக்கு விடை கிடைக்கவில்லை கர்ர்ர்ர்ர்:))..

    வழக்கு என்று வந்து கூண்டிலே ஏறி நின்று விட்டால் “அதிரா~:) கேய்க்க்ய்ம் கிளவிகளுக்கு சே..சே கேள்விகளுக்கும் பதில் சொல்லித்தானே ஆகோணும்:)))..

    அடுத்த புதன் என்னால் வர முடியாமல் இருக்குமென்றே நினைக்கிறேன் அதனால் இனி செப்டெம்பரில் வந்து அடுக்குகிறேன் என் கேள்விக்கணைகளை,.

    பதிலளிநீக்கு
  17. கேள்வி பதில் சுவாரஸ்யமாக உள்ளது பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  18. பாராட்டுரைகள் அளித்த எல்லோருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!