திங்கள், 27 ஆகஸ்ட், 2018

"திங்க"க்கிழமை 180827 : தவலை வடை - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி



தஞ்சை ஜில்லாவில் பெரும்பாலும் தவலை அடைனு உருளி அல்லது வெண்கலப்பானையில் அரிசி உப்புமா மாதிரிக்கிளறிக் கொட்டிய மாவில் பண்ணுவாங்க! ஆனால் எங்க பக்கம் முக்கியமா மதுரை, திருநெல்வேலிப்பக்கம் தவலை வடைனு செய்வாங்க! இது முக்கியமா வீட்டுக்கு மாப்பிள்ளை வரும்போது கட்டாயமாய் இருக்கும். அந்தப் பக்கங்களில் இது சிறப்பு உணவு. இதுவும் கோதுமை அல்வாவும் மாப்பிள்ளை வந்தால் கட்டாயமாய் வரவேற்புக்கு இருக்கும். இப்போச் செய்முறையைப் பார்ப்போமா? சும்மா ஒரு ஜாலிக்காக நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிற மாதிரி எழுதினேன். ஆம், முன்னர் எழுதினது தான். ஆனால் போன வாரமும் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்குத் தவலை வடை பண்ணிக் கொடுத்தேன். 

ஏய், இன்னிக்கு என்ன டிஃபன்? பசிக்குமே சாயந்திரமா!

க்ர்ர்ர்ர்ர்ர், என்னால் எதுவும் பண்ண முடியாது!

அப்படி எல்லாம் சொல்லலாமா? நீ தான் தவலை வடை நல்லாப் பண்ணுவியே! இன்னிக்குப் பண்ணேன்.

யாரானும் வந்தால் பண்ணலாம். நம்ம ரெண்டு பேருக்கு எதுக்கு?

அதான் உன்னோட சிநேகிதி வராங்களே!
ஆமா இல்ல! மறந்துட்டேனே! கொஞ்சம் உதவி செய்யுங்க!

(நிஜத்தில் அவர் கிட்டேக்கூட வரமாட்டார்!) என்றாலும் சும்மாச் சொல்லி வைக்கிறேன்.

சரி, சரி, இப்போ இந்தப் பொருட்களை எல்லாம் எடுத்து ஊற வைங்க தவலை வடைக்கு.

இது நான்கு பேருக்கானது!

புழுங்கலரிசி ஒரு கிண்ணம்
பச்சரிசி ஒரு கிண்ணம்
து.பருப்பு ஒரு கிண்ணம்
க.பருப்பு ஒரு கிண்ணம்
உ.பருப்பு முக்கால் கிண்ணம்
பாசிப் பருப்பு அரைக் கிண்ணம்

புழுங்கலரிசியையும், பச்சரிசியையும் நன்னாக் கழுவிட்டுச் சேர்த்து ஊற வைக்கணும்.




கலர் போற துணியைத் தனியா நனைப்போமே அப்படியா?

கடவுளே, துணிக்கும், சமையலுக்கும் என்ன பொருத்தம்னு கேட்கறீங்களோ?

இல்லை தனித்தனியா ஊற வைக்கச் சொன்னியே அதான்!

தனித்தனியா ஊற வைக்கிறது அரைக்கச் செளகரியமா இருக்கும், அதுக்குத் தான். நீங்க தானே அரைக்கப் போறீங்க? அதோடு அரிசியை முதலில் அரைச்சால் தான் அரிசி நன்றாக அரைபடும். அதுக்கப்புறமாப் பருப்புக்களை அரைக்கணும்.




என்ன நானா? எனக்குத் தவலை வடையே வேண்டாம். :P

க்ர்ர்ர்ர்ர்ர் யாரு விட்டா? நீங்க மிக்சியிலே தானே அரைக்கப் போறீங்க? நான் கையாலேயே அரைச்சுப் பண்ணிக் கொடுத்திருக்கேனே?

சரி, சரி, எல்லாம் ஹெட் லெட்டர்! சரி இப்போ ஊற வைச்சாச்சு! அடுத்து என்ன??

படுத்துத் தூங்கணும்!

என்ன??

பின்னே? ஊறவேண்டாமா இரண்டு மணி நேரமாவது! அதுக்குள்ளே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே!

எழுந்திருங்க. மணி மூணாச்சு, அரைச்சு எடுத்துத் தவலை வடையைத் தட்டி எடுக்கணும்! இன்னிக்குனு பார்த்து எனக்கு வீசிங் வேறே ஜாஸ்தியா இருக்கு!

சரி, சரி, அப்போ வடை சாப்பிடாதே!

என்ன??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மிக்சியை எடுத்துக்குங்க. அதோட ஜாரிலே முதல்லே மி.வத்தல் ஆறு, ப.மி. இரண்டு, உப்பு தேவைக்கு ஏற்பச் சேர்த்துட்டுப் பெருங்காயத் தூளும் சேர்த்து ஒரு அடி அடிங்க.

பளார்!

ஹையோ, என்னை அடிக்கச் சொல்லலை, மி.வத்தல் கலவையை மிக்சியிலே அடிக்கணும்! நறநறநறநற நானே அரைச்சுடலாம் இதுக்கு!

அப்பாடா! நிம்மதி! என்ன இருந்தாலும் உன் கையாலே செஞ்சு சாப்பிடற டேஸ்டே தனிதான்.

க்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன ஐஸா! நகருங்க இத்தனை நேரம் நான் அரைச்சு முடிச்சிருப்பேன்.

மி.வத்தல் கலவையை ஒரு அடி அடிச்சுட்டு அதிலேயே அரிசியைப் போடறியா?



அப்புறம்?

அப்புறம் என்ன? பாசிப் பருப்பை மட்டும் களைஞ்சு வடிகட்டி வச்சுட்டு மற்ற து.பருப்பு, க. பருப்புக்களை அரைச்ச அரிசியோடு சேர்த்து அரைக்கணும். இதுவும் கொஞ்சம் கொர கொரப்பாகவே அரைக்கணும்'. உளுந்தை இதோடு சேர்க்கவேண்டாம்.

ம்ம்ம்ம் அப்புறமா??

இப்போ இதைத் தனியா வைச்சுடுங்க.

சரி, சரி கொண்டா, அடுத்து என்ன பண்ணப் போறே?

இப்போ உளுந்தை எடுத்து நல்லா அரைச்சுக் கொட கொடனு எடுக்கணும். வடை மாவு பதத்துக்கு இருக்கட்டும்.

சரி, சரி, அதெல்லாம் உனக்குத் தான் சரியா வரும். நீ தான் வடை தட்டறதிலே நிபுணி ஆச்சே!

பல்லைக் கடிக்கும் சப்தம் மட்டும் சிறிது நேரம்.

அங்கே என்ன சத்தம்??

ஒண்ணுமில்லை, என்னோட பல் அரை படுது!

ஹிஹிஹி, அதுக்குள்ளே மாவாவே திங்க ஆரம்பிச்சிட்டியே?

என்னது??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபத்திலே பல் அரைபட்டதிலே அந்த சத்தம் வந்ததாக்கும்.

சரி சரி, உளுந்தை அரைச்சுட்டியா? என்ன பண்ணினே இப்போ?

நீங்களோ செய்யப் போறதில்லை, அப்புறம் எதுக்குச் சொல்லணுமாம்?

அதான் இத்தனை சொல்லிட்டியே? மிச்சமும் சொல்லிடேன் என்ன இப்போ? பேசிண்டே வேலை செஞ்சா உனக்கும் அலுப்புத் தட்டாது பாரு!



இதுக்குக் குறைச்சல் இல்லை. இப்போ அரிசி பருப்பு அரைச்ச கலவையிலே இந்த உளுந்து அரைச்சதைச் சேர்க்கணும். ஊற வைச்சு வடிகட்டி வச்சிருக்கிற பாசிப்பருப்பையும் சேர்க்கணும். ஒரு இரும்புக் கரண்டியிலே தே. எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊத்திக் கடுகு, உ.பருப்புப் போட்டுத் தாளிக்கணும். கருகப்பிலை, கொ,.மல்லி, இஞ்சி, சேர்க்கணும், ஒரு பச்சை மிளகாயை இரண்டாய் வகிர்ந்துட்டு விதைகளை எடுத்துட்டு இதிலே சேர்க்கணும். மாவை நல்லா எல்லாம் சேரும்படிக் கலக்கிக்கணும். தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறிச் சேர்க்கணும்.




பத்து நிமிஷம் அப்படியே வச்சுட்டு அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கணும். காய்ந்த எண்ணெயிலே ஒரு கரண்டியாலே இந்த மாவை எடுத்துப் போட்டால் குண்டு குண்டாக மேலே மொறு மொறுனும் உள்ளே மிருதுவாகவும் தவலை வடை ரெடி, ரெடி ரெட்டை ரெடி.



தொட்டுக்கத் தேங்காய்ச் சட்டினியோடு சூப்பர் தவலை வடை! என்ன இருந்தாலும் உன் கைவண்ணமே வண்ணம்!



ஆஹா!



படங்களை அதனதன் இடத்தில் சேர்க்க முயன்றேன். முடியலை. அதோடு எல்லாப் படங்களையும் போட்டால் பதிவு வருமானும் சந்தேகம். அதனால் முக்கியப் படங்கள் மட்டும் சேர்த்திருக்கேன். என் பிறந்த வீட்டில் என் அம்மா அடிக்கடி இதைச் செய்வார். இப்போவும் தவலை வடைனு செய்யறாங்க. ஆனால் இந்தப் பாரம்பரிய முறையில் செய்யறதில்லை. அரிசி, பருப்பு எல்லாத்தையும் சேர்த்து ஊற வைச்சு அரைச்சுக் கலந்து செய்யறாங்க. அதுவும் பச்சரிசி தான் அநேகமா! ஆனால் இதுக்குப் புழுங்கல் அரிசியும் போடணும். சுவையில் மாறுபாடு கட்டாயம் தெரியும்.

95 கருத்துகள்:

  1. இது தவலை அடை இல்லை. தவலை வடை! தலைப்பில் தவலை வடைனே போட்டிருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...

      அடையா.. வடையா?...
      உங்களுக்கே கொழப்பமா!..

      நீக்கு
    2. எனக்கு இல்லை. தவலை அடை என்பது வெண்கல உருளி அல்லது வெண்கலப்பானையில் அடையாகத் தட்டுவாங்க. அது வேறே, இது வேறே

      நீக்கு
    3. தலைப்பில் மாற்றம் செய்து விட்டேன் அக்கா.. நீங்கள் அனுப்பிய பதிவில் அடை என்றும் இருந்ததே....

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. தம்பி:

    வடையைக் கொடுத்த அக்கா
    தேங்கா சட்டினி எங்கே..க்கா?...

    அக்கா:

    சட்டினி தானே தம்பி அதை
    நீயே செஞ்சுக்கப்பா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை துரை செல்வராஜு சாருக்கு கரகாட்டக்காரன் ஞாபகத்துக்கு வரலை. இல்லைனா தம்பிக்கு, அக்கா, சட்னி எங்க என்றதற்கு அதானே அது என்று சொல்லியிருப்பார்

      நீக்கு
    2. சட்னி படம் வரலை துரை! தவறுதலாகச் சில படங்கள் டெலீட் ஆனதில் அதுவும் போயிருக்கு! :(

      நீக்கு
    3. சும்மா கலாட்டாவுக்காக எழுதினேன்..
      தங்களது சிரமம் அறியாததா!...

      நலம் வாழ்க...

      நீக்கு
  4. தேங்காய்ச் சில்லுகளை பல்லு பல்லாக் கீறிப் போட்டு.....


    ஆகா... சுவையோ சுவை!..

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. இன்னும் முழுதாக சரியாகவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் துரை ஸார்...!

      நீக்கு
    2. /// முழுதாக சரியாக வில்லை...///

      இதிலும் மகிழ்ச்சியா!...
      நன்றாக இருக்கிறது...

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. தவலை வடை அருமை.
    பார்க்கவே அழகு.
    இந்தகலரில் தான் இருக்கவேண்டும்.
    வெளியே மொறு மொறு தெரிகிறது படத்தில்.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    ரயில் நிலையத்தில்( மாயவரத்தில்) கிடைக்கும் ஆனால் பெரிதாக அடை அளவு தட்டி இருப்பார்கள் நம்மால் சாப்பிட முடியாது முழுதாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்காகவே மாயவரம் போகலாம் போலிருக்கிறதள.... மனதில் குறித்து வைத்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    2. குட்டி குட்டியாக ஐந்து ஆமவடை பாக்கெட் கிடைக்கும் ரயில் நிலையத்தில் அதுவும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    3. அப்பாடா! இப்போத் திறந்தது, இந்தப் பெட்டி! மாயவரத்தில் போனால் பார்க்கிறேன், கோமதி!

      நீக்கு
    4. கோமதி அரசு மேடம்.... சொன்னாச் சிரிப்பீங்க. மாயவரம் காளியாகுடி ஹோட்டலில் சாப்பிடணும் என்று 7-8 வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் (அப்புறம் திருவையாறு ஆண்டவர் ஸ்வீட்). இன்னும் அதற்கான நேரம் வரலை.

      நீக்கு
    5. நெ.த. காளியாகுடி ஓட்டல் இப்போது அதன் ஒரிஜினல் சொந்தக்காரர்களால் நடக்கலை! ஆகவே சாப்பிடும் முன்னர் யோசிங்க! திருவையாறு ஆண்டவர் கடையில் இருமுறை அசோகா, அல்வா இரண்டும் வாங்கியும் ஒரே சொத, சொத! :( உங்கள் அதிர்ஷ்டம் நன்றாய்க் கிடைக்கலாம்.

      நீக்கு
    6. நான் எழுபதுகளில் காளியாகுடி ஓட்டலில் முழுச்சாப்பாடு சாப்பிட்டிருக்கேன். அப்போல்லாம் சாப்பிடவும் முடிஞ்சது! இப்போப் போன வாரம் இங்கேயே ஒரு ஓட்டலில் சாப்பிட நேர்ந்தது! சகிக்கலை! கறி, கூட்டு, ரசம் எல்லாத்திலேயும் பூண்டு! சாம்பாருக்கு சோம்பு அரைச்சு விட்டிருந்தாங்க! :( என்னோட வயித்துக்கெல்லாம் சரிப்பட்டு வராது!

      நீக்கு
    7. கீதா சொல்வது போல் காளியாகுடி ஓட்டல் இப்போது வேறு கை மாறி விட்டது.பழைய ஆட்கள், பழைய பெருமை இல்லை.
      திருவையாறு ஆண்டவர் கடை எனக்கு தெரியாது.

      நீக்கு
  8. அருமை
    மிகவும் பிடித்தமான வடை
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  9. இந்த தவலை வடையை கீதா அக்கா வீட்டில் ருசித்திருக்கிறேன். அருமை. தவலை அடை வேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பானுமதி,என்னோட பதிவில் இன்னிக்குப் பகிர்ந்திருக்கும் உருளி குலோப்ஜாமூனும் சாப்பிட்டிருக்கீங்க! அது தவலை வடையா, குணுக்கானு நெ.த. கிட்டே எடுத்துச் சொல்லுங்க, கொஞ்சம் சத்தமாவே! :))))

      நீக்கு
  10. என் நாத்தனார் தவலை வடைக்காக அரைத்த மாவை குழிப்பணியார சட்டியில் மோர் அப்பம் போல செய்து விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி, உங்க நாத்தனார் மாவை நைசாக அரைச்சுடுவாங்களோ? குழிப்பணியாரச் சட்டியில் இதைப் பண்ணி நான் பார்க்கலை!

      நீக்கு
  11. ஶ்ரீராம் காய்ச்சலிலிருந்து மீண்டு விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காய்ச்சல் எல்லாம் இல்லை பானு அக்கா. தசைப்பிடிப்போ, எதுவோ கடுமையான முதுகு வலி. கையைக் காலை அசைக்க முடியாமல்..

      நீக்கு
  12. கீதா சாம்பசிவம் மேடம்.... வசிஷ்டர் வாயால் உங்களுக்கு பிரம்மரிஷி பட்டம் கொடுத்தாச்சு.

    எல்லாம் சரிதான், ஆனால் குனுக்கு, உருட்டிப்போட்ட வடை மாதிரி தவலடை வராது. கொஞ்சம் பெரிய அதிரசம் அளவுக்குத் தட்டினாத்தான் திருநெவேலி தவலடை. நீங்க பொரிச்செடுத்திருக்கறதை குனுக்குன்னு சொன்னா அடிக்க வருவீங்க என்பதால் விடு ஜூட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நெ.த. குணுக்கு அடை மாவில் தான் அநேகமாய்ப் போடுவாங்க. இல்லைனா எல்லாத்தையும் சேர்த்துப் போட்டு ஊற வைச்சு அரைப்பாங்க. இது அரைக்கும் விதமே தனி! தவலடை என்பது வேறே! அது தோசைக்கல்லில் இப்போதெல்லாம் பண்ணினாலும் முன்பெல்லாம் வெண்கல உருளி அல்லது வெண்கலப்பானையில் தான் செய்வாங்க! அதிரசம் மாதிரித் தட்டினால் அது தவலடை! தவலை வடை இல்லை. இது வடை! பெரிதாகவே இருக்கும். படத்தில் சின்னதாய்த் தெரியுது!

      நீக்கு
  13. கீசா மேடம்... உடம்புக்குலாம் ஒரு பிரச்சனை இல்லையே? Is everything alright? உடவு இடுகைக்கு இது மாதிரி ஸ்டெப் பை ஸ்டெப் படம்லாம் போட மாட்டீங்களே. கேமரா சார்ஜ் இல்லை, போட்டோ எடுக்க மறந்துட்டேன், அவசரமா கிளம்பிக்கொண்டிருந்ததால் படமெடுக்கலை என்றெல்லாம் எப்போதும் ஸ்டான்டர்ட் சாக்கு சொல்வீங்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போவும் சில, பல படங்கள் விடுபட்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  14. இந்த சிநேகிதி தற்போது வலையுலகில் காணாமல் போயிருக்கும் துளசி டீச்சரா? நாங்களும் வருவதற்கு முன்னால் சொல்லிட்டு வந்தால் தவலடை கிடைக்குமா இல்லை கீழ்க்கடை வடைதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவலை வடையைக் கண்டு மகிழ்ந்தேன். செய்து உண்டு
      மகிழ்கிறேன். அடிக்காத சாம்பு சாரை,அடித்தார்னு சொல்றது மஹா பெரிய தப்பு. வடைக்காகப்
      பொறுத்தோம். ஹாஹா. புழுங்கலரிசி, சேர்த்தாலே வாசனை தனி தான்.
      பயத்தம்பருப்பு பளபளக்க வடையின் அழகே தனி. நன்றி கீதா,

      நீக்கு
    2. என்ன காய்ச்சல் ஸ்ரீராம. சீக்கிரம் குணமடையப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. துளசிக்கு ஒன்றும் கொடுக்க முடியவில்லை உடம்பு சரியில்லை என்று கீதா சொல்லி இருந்ததை படிக்கவில்லையா நெல்லைத்தமிழன்?
      கீதா நான் எழுதுவதை சரியாக படிப்பதே இல்லை என்று சொல்லப் போகிறார்கள்.
      பானுதான் கீதா அக்கா வீட்டில் ருசித்திருக்கேன் என்று சொல்லி இருக்கிறார்கள் அதையும் நீங்கள் படிக்கவில்லையா?

      நீக்கு
    4. வல்லிம்மா.. தசைப்பிடிப்போ, எதுவோ கடுமையான முதுகு வலி. கையைக் காலை அசைக்க முடியாமல்.. பேசினால் கூட கடும் வலி என்ற அளவிலிருந்து இப்போது வலி என்கிற அளவுக்கு குறைந்துள்ளது. பேச, கைகால் அசைக்க முடிகிறது!

      நீக்கு
    5. //அடிக்காத சாம்பு சாரை,அடித்தார்னு சொல்றது மஹா பெரிய தப்பு.// ஹிஹிஹி, சும்மா ஒரு ஜோக்குக்காகப் போட்டேன் வல்லி. :)

      நீக்கு
    6. வரேன், கொஞ்ச நேரத்துக்குப் பின்னர்!

      நீக்கு
    7. //இந்த சிநேகிதி தற்போது வலையுலகில் காணாமல் போயிருக்கும் துளசி டீச்சரா? நாங்களும் வருவதற்கு முன்னால் சொல்லிட்டு வந்தால் தவலடை கிடைக்குமா இல்லை கீழ்க்கடை வடைதானா?// துளசி வந்தப்போ அப்போத் தான் எழுந்து உட்கார்ந்து கொண்டு இருந்தேன். எதுவும் கொடுக்கலை, தண்ணீர் கூட! என்னைப் பார்த்துட்டு அவங்களே வேண்டாம்னுட்டாங்க! :))))

      நீங்க வந்தால் பச்சைத் தண்ணீர் கூடக் கிடையாது நெ.த. எங்க வீட்டுப் பானைத் தண்ணீர் நல்ல ருசியா இருக்கும். அது கூடக் கிடையாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    8. //பானுதான் கீதா அக்கா வீட்டில் ருசித்திருக்கேன் என்று சொல்லி இருக்கிறார்கள் அதையும் நீங்கள் படிக்கவில்லையா?// எங்கே, கோமதி! அவருக்குத் தான் பீத்திக்கவே நேரம் போதலையே! :)))))) இது தவலடைனே நான் சொல்லலை! ஆனால் இது இல்லைனு வேறே சொல்லிட்டிருக்கார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))) இந்த ஆம்பிளைங்க கொஞ்ச நாள் சமைச்சுட்டு என்ன பீத்தல்! நாமெல்லாம் தினம் தினம் சமைச்சாலும் எவ்வளவு அடக்கமா இருக்கோம்! :)))))

      நீக்கு
    9. /// நாமெல்லாம் தினம் தினம் சமைச்சாலும் எவ்வளவு அடக்கமா இருக்கோம்!.:>))))))...///

      ஆகா!..

      :>)

      நீக்கு
    10. //இந்த ஆம்பிளைங்க கொஞ்ச நாள் சமைச்சுட்டு என்ன பீத்தல்! // - உண்மைதான் கீசா மேடம்... ருசி விஷயத்தில் நான் ரொம்ப எக்ஸ்பர்ட் என்று ரொம்ப ரொம்பச் சொல்லுவேன். நிறைய ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கேன். ஒருத்தர் ஒரு இடம் நல்லா இருக்கும்னு சொன்னா சாப்பிட்டு, அவங்க தெரிஞ்சு சொல்றாங்களா இல்லை அவங்களுக்கே ருசி இல்லையா என்பதைக் கண்டுபிடிச்சுடுவேன். அதை பீத்திப் பீத்தி, 3 மாசமா எனக்கு வாசனை அறியும் திறன் சுத்தமாகப் போய்விட்டது. (காய்ச்சல், இருமல் வந்து 4 மாசம் முன்னால 2 வாரம் ரொம்பக் கஷ்டப்பட்டேன்.. அப்போ என் ப்ரெஷர் ரொம்பக் கீழ போயிடுத்து).

      இப்போவும் ரெசிப்பி புக் பார்க்காம (எல்லாம் மனைவிட்ட கேட்டு எழுதினது, அவளது அம்மா, எங்க கல்யாணத்துக்கு முன்னால அவள்ட சொல்லி எழுதி வச்சுண்டது, இரண்டையும் நான் புத்தக வடிவில் வச்சிருக்கேன். என்னோட புக்ல, அவள் சொன்னது மற்றும் இணையத்தில் நான் நல்லாருக்கும்னு ரசித்து குறிப்பெடுத்துக்கொண்டது.. சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க.. எனக்கும் அதே உணர்வுதான்.... உங்கள் அறிமுகத்துக்கு முன்னாலேயே, உங்கள் ரெசிப்பில்லாம் தனியா எடுத்து 'கீதா சாம்பசிவம் ரெசிப்பீஸ்' என்று ஒரு டாகுமெண்ட் தயார் செய்து வைத்திருந்தேன். அப்படீன்னா, உங்க செய்முறையால கவரப்பட்டுத்தான் அப்படி எடுத்து வச்சிருப்பேன்.).

      அதுனால, நிறைகுடம் தளும்பாது, குறை குடம் கூத்தாடும் என்று நினைத்துக்கோங்க. தப்பா எடுத்துக்காதீங்க.

      நீக்கு
    11. துரை, எல்லாம் சும்மாக்கலாய்த்தலுக்குத் தான்! எனக்குச் சில வருடங்களாக இப்படி வம்பு பண்ண யாருமே இல்லாமல் இருந்தது. இப்போ நல்லா வகையா நீங்கல்லாம் மாட்டிக்கிட்டீங்க! :)))) அதான் வம்பு பண்றேன். என் கடன் வம்பு பண்ணிக் கிடப்பதே! :)

      நீக்கு
    12. தப்பால்லாம் எடுத்துக்கலை நெ.த. நீங்க கிண்டல் பண்ணினாப்போல் நானும் கிண்டல் தான் செய்தேன். :))) முன்னரே என்னோட பதிவுகளைப் படித்து வந்ததாய்ப் பல முறை சொல்லி இருக்கீங்க! அதனால் அதில் எல்லாம் எனக்குக் குழப்பமே இல்லை. சும்மா வம்பு! அதிராவும் இல்லை, அஞ்சுவும் இல்லை! போர் அடிக்குதே! அதான்.

      நீக்கு
    13. நெல்லைத் தமிழன் குறை குடம் என்றால் யார் நம்புவார்கள்!
      சமையல் குறிப்பை பொறுமையாக போட்டோ எடுத்து போட்டு
      எல்லோருக்கும் செய்யும் ஆவலை ஏற்படுத்தி விடுவீர்கள்.
      பன்முகத் திறமையாளர் அல்லவா!

      நீக்கு
    14. நெல்லையின் பக்திப் பக்கம் என்னை இன்னும் வியக்க வைக்கும்.

      நீக்கு
  15. @ஸ்ரீராம்:
    வரலக்ஷ்மி விரதத்தில் பிடித்த ஜுரம், காயத்ரி ஜெபத்துக்குப் பின்னும் விடவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜுரம் இல்லை ஏகாந்தன் ஸார்... மேலே புலம்...சொல்லி இருக்கிறேன் பாருங்கள்...

      நீக்கு
    2. ஏகாந்தனுக்குத் தவலை வடை பிடிக்காது போல! :)

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    தாங்கள் செய்து காண்பித்த தவலை வடை மிகவும் அருமையாக உள்ளது. படங்கள் நன்றாக உள்ளன. இருவரும் பேசுவது போல் அமைந்த நகைச்சுவை உரையாடல்கள் அருமை. ஆனாலும் பிறரை வேலை வாங்கும் கலை என்னைப் போலவே உங்களுக்கும் தெரியவில்லை.. ஹா ஹா ஹா ஹா (தவறாக நினைக்க வேண்டாம்) பேசிப்பேசியே நீங்களே அனைத்தையும் செய்து காண்பித்து விட்டீர்கள். தவலை வடை மிக நன்றாக (அந்த கலரை பார்த்தாலே தெரிகிறது.) வந்திருக்கிறது. தங்கள் பதிவு நானும் தங்கள் பாணியில் செய்து சாப்பிடும் ஆவலைத் தூண்டி விட்டது.
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா, இது தவலை வடை! எண்ணெயில் பொரித்து எடுப்பது. இன்னொன்று தவலடை! அதையும் போடப் பார்க்கிறேன்.இங்கே இல்லைனாலும் என்னோட பதிவிலே! :)))))

      //ஆனாலும் பிறரை வேலை வாங்கும் கலை என்னைப் போலவே உங்களுக்கும் தெரியவில்லை..// நீங்க வேறே! வீட்டிலே வேலைக்கு வைக்கும் உதவிப் பெண்ணிடம் கூட வேலை வாங்கத் தெரியாது எனக்கு! அதனால் வைச்சுக்கறதே இல்லை. எப்போவானும் விருந்தினர் அதிகமா வந்தால் ஒரு வாரம், பத்து நாள் கூப்பிட்டுச் செய்யச் சொல்லுவேன். இல்லைனா எங்க வீட்டில் ஆல் இன் ஆல் நான் தான்!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      /வீட்டிலே வேலைக்கு வைக்கும் உதவிப் பெண்ணிடம் கூட வேலை வாங்கத் தெரியாது எனக்கு! அதனால் வைச்சுக்கறதே இல்லை/

      ஆகக்கூடி இதிலேயும் நாம் இருவரும் ஒரே மாதிரிதான் போலும். முன்பு எப்பவாச்சும் ஒரு சில சமயங்களில் உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டால், யார் உதவியாளர் என்று தெரியாதபடிக்கு நானும் அவ்வேலையில் சங்கமிப்பேன். அதனால் நான் இதுவரை யாரையுமே உதவிக்கென்றே வைத்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன். அப்படியே பழகி விட்டது. ஆனால் இப்ப உடம்பு அடிக்கடி மக்கர் செய்கிறது. இனி ஆண்டவன் விட்ட வழி! நன்றி..

      நீக்கு
    3. ஆமாம், கமலா! எனக்கு இந்த வயிறுதான் ரொம்பத்தொல்லை! மருந்து எடுத்துக்கறேன். பார்ப்போம்!

      நீக்கு
  17. நான் வித்தியாசம் தெரியறதுக்காகச் சொன்னேன் ஸ்ரீராம்! உப்புமா மாதிரிக் கிளறி வெண்கல உருளியில் செய்வது தவல அடை! அல்லது தவலடை! நெ.த. அதான் சொல்றாரோனு நினைக்கிறேன். கோமதி அரசு சொல்வதும் அதுதானோனு நினைக்கிறேன். அந்த அந்தக் கருத்துகளுக்கு நேரே கருத்திட முடியவில்லை, கருத்துப் பெட்டி திறக்க மாட்டேன்னு அடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... உண்மையாவே தவலடை (நீங்க இங்க போட்டிருப்பதுதான்) எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆலையில்லா ஊருக்கு என்ற வகையில் நானும் அந்த ஊர்ல செய்து எங்கள் பிளாக்லகூட வந்திருக்கு. சும்மா கலாட்டாவுக்குத்தான் கமென்ட்ஸ் போட்டேன்.

      சின்ன வயதில் (12-14 வயது வரை), திருநெல்வேலியில் நிறைய தெருக்களில் வீடுகளில் தவலடை, மிக்சர், காராசேவு போன்ற பலவற்றை அன்றன்று செய்து விற்பார்கள். எங்க அம்மா வழிப் பாட்டி வீடு ஜங்ஷன்ல. அவங்க லிபரல்ஸ். (அப்பா வழிப் பாட்டி வீடு 5-6 கி.மீ தொலைவில் கிராம்ம். அவர்கள் அடுத்த வீட்டில் செய்வதைக் கூட சாப்பிடமாட்டார்கள்) அங்க போகும்போது அம்மாவோ, மாமாக்களோ வாங்குவார்கள், என்னையும் வாங்கிவரச் சொல்லியிருக்பிறார்கள். அதன் ருசி மனசுல இருப்பதால் காலையிலேயே ஆர்வமாகப் படித்தேன்.

      உங்கள் சமையல் திறமையைப் பாராட்டுகிறேன்.

      நீக்கு
    2. ஹை, நீங்க வந்தால் எதுவும் தரமாட்டேன்னு ஐஸ்! ஐஸ்! ஐஸ்! அதெல்லாம் எதுவும் கிடையாது! கிடையாதுனால் கிடையாத் தான்! காக்கா பிடிக்கிறீங்க? :)

      நீக்கு
    3. அப்படீல்லாம் இல்லை கீசா மேடம். இன்னொரு உண்மையையும் சொல்றேன் உங்களுக்காக. நான் எழுதுவதுபோன்று நான் கிடையாது. அதாவது சாப்பிட ஆசை உள்ளவன்போல் எழுத்தில் தெரியும். உண்மைதான், புது விதமான உணவு எங்கு கிடைத்தாலும் ருசிப்பேன், பணம் கொடுத்து. என்னவோ, பிறர் வீட்டில் சாப்பிட ரொம்பக் கூச்சம், சாப்பிட மாட்டேன். எனக்கே உள் மனசு சொன்னால்தான் சாப்பிடுவேன். என்னவோ எனக்கு மனசில் ஒரு எண்ணம். பிறரிடம் வாங்கிச் சாப்பிடும் உணவு, உதவி எல்லாமே நம்மை அவங்களுக்கு கடனாளியாக்கும்னு. (அதாவது அதைத் தீர்க்க மறுபிறப்பு இருக்கும்னு). அதுனால நான் பிறர் வீட்டில் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப அபூர்வம். ஹோட்டல்ல சாப்பிடும்போது பணம் கொடுத்துவிடுகிறோம். அப்படி பணம் கொடுக்காமல் அல்லது ஏதேனும் செய்யாமல் நான் எங்கும் சாப்பிடுவதில்லை. இந்த எண்ணம் சரி கிடையாது என்று பலர் சொல்லியிருக்காங்க சத்சங்கத்துல. இருந்தாலும் நான் இப்படிப்பட்டவந்தான். ஹாஹா.

      நீக்கு
    4. நெ.த. எல்லோருமே அப்படித் தான் எழுதுவதில் பார்ப்பவர்களை நேரில் பார்க்க முடியாது என்பதை நானும் அறிவேன். என்னைப் பார்க்கிறவங்க எல்லோருமே எழுத்தில் தெரியும் கேலி, கிண்டல், நகைச்சுவை எல்லாம் நேரில் தெரியலை என்பார்கள். ஒரு காலத்தில் கேலி, கிண்டல், கலாட்டானு தூள் பரத்திக் கொண்டு தான் இருந்தேன். காலம் மாறிப் போச்சு! இப்போ இணையம் வந்தப்புறமா அந்த அடிப்படை குணம் அடிக்கடி தலை தூக்கும்! அநேகமா எல்லோருக்கும் அது பிடிக்கிறது என்பதால் ஓடிட்டு இருக்கு! :)))))

      நீக்கு
  18. துரை, சட்டினி படம் எடுக்கலை போல! ஆல்பத்தில் காணோம்! :( சில படங்கள் தவறுதலாக டெலீட் ஆகி விட்டன. அதில் போயிருக்கலாம். எல்லாம் இரண்டு, மூன்று இருக்குனு டெலீட் செய்து கொண்டிருந்தேன். அதிலே சில படங்கள் போய்விட்டன.

    பதிலளிநீக்கு
  19. கோமதி அரசு, இரண்டு நாட்களில் மாயவரம் போகலாம். அப்போ ஸ்டேஷன் பக்கம் போய்ப் பார்க்கணும் நினைவிருந்தால்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரில் போனால் ரயில் நிலையம் தாண்டிதானே ஊருக்குள் போவீர்கள் . வடை வாங்க என்று போக முடியாது தானே!
      குட்டி ஆமவடை வயிற்று தொந்திரவு செய்யாது. தவல வடைதான் பெரிதாக சாப்பிட முடியாது.கால்வாசிதான் சாப்பிட முடியும்.
      ஒரு தகவலுக்கு சொன்னேன் மாயவரத்தில் கிடைக்கும் என்று.
      நீங்கள் செய்து இருப்பது போல்தான் திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டில் செய்வார்கள் காரவடை என்று சொல்வார்கள் அங்கு.
      எனக்கு பிடிக்கும். செய்யசோம்பல் ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

      நீக்கு
    2. கார வடை முழுக்க முழுக்க வேறே இல்லையோ கோமதி! என் அம்மா இருக்கும்போது சாப்பிட்டது. இப்போப் பண்ணுறவங்க யாரும் இல்லை. இங்கேயும் பிடிக்குமோ, பிடிக்காதோ எனப் பண்ணுவதே இல்லை. ஒரு நாளைக்குச் செய்து கொடுத்துப் பார்க்க்:))))) எங்க பிறந்த வீட்டில் வெள்ளை அப்பமும், கார வடையும் அடிக்கடி அம்மா பண்ணுவார். பொரிப்பதெல்லாம் நல்லெண்ணெய் தான்! கடலை எண்ணெயே எனக்குக் கல்யாணம் ஆகி வந்து தான் பழக்கம். கொஞ்ச நாட்கள் ஒத்துக்காமல் இருந்து பின்னர் பழகியது.

      நீக்கு
  20. பானுமதி வந்தப்போவும் பண்ணினேன். இன்னொருத்தர் வந்தப்போவும் பண்ணினேன். அப்புறமா ஒரு நாள் தவலடையும் பண்ணினேன். அதிலும் சில படங்கள் இல்லை! :))))

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

    தற்சமயம் தங்கள் உடல்நிலை எவ்வாறுள்ளது? காய்ச்சல் முற்றிலும் குணமடைந்து வருகிறதா? உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும். இங்கு என் பேத்திக்கும் பயங்கர ஜுரம். ஆறு நாட்கள் விடாமல் இருந்தது. நடுவில் பண்டிகைகள் வேறு.. அதையும் நாம் அந்த ஜுரத்தை போல்"விடாமல்"பிடித்ததால், எனக்கும் வலையின் பக்கம் அதிகம் வர இயலவில்லை. நேற்றிலிருந்து என் பேத்திக்கு காய்ச்சல் பரவாயில்லை. இப்போதுதான் எங்களுக்கும் நிம்மதியாக உள்ளது. தங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

  22. //..ஏகாந்தனுக்குத் தவலை வடை பிடிக்காது போல! :)//

    சாப்பிட்டதில்லை. பார்ப்பதற்கு சின்ன சைஸ் உ.கி.பஜ்ஜி போலிருக்கிறது. ருசியாக இருக்கும் என நினைக்கிறேன். சட்டினி சுறுசுறுவென்றிருந்தால் சரசரவென உள்ளே போகும். தொடர்ந்து வரவேண்டும் ஃபில்ட்டர் காப்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ஏகாந்தன், உருளைக்கிழங்கு பஜ்ஜி இதைவிடப் பெரிசா இருக்குமா? ஙே!!!!!!!!!!!!!!! இது சட்னி இல்லாமலும் சாப்பிடலாம். முதலில் மேல் பக்கம் உள்ள மொறுமொறுவை உள்ளே தள்ளிட்டு, உள்ளே இருக்கும் ஸ்பாஞ்ச் பாகத்தைச் சட்னி இல்லாமலே அந்தத் தேங்காய்க் கீற்றுகள், பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கொ.மல்லி எல்லாத்தோடயும் கடிச்சுச் சாப்பிடும்போது ஆஹா! சொர்க்கம்! :))))

      நீக்கு
    2. ஆமாம், நீங்கள் சொன்னது சரி அதுவும் சூடாய் சாப்பிட வேண்டும் இன்னும் ருசியாக இருக்கும்.

      நீக்கு
  23. Kalakareenga geethaa akka.will come later.thavalai adai looks yummy..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல், அனானி நீங்க தான்னு புரிஞ்சுண்டேன். எப்போ வருவீங்க? உங்க மியாவும் செப்டெம்பர் வரை பிசினு சொல்லிட்டு ஓடிப் போயாச்சு! :)

      நீக்கு
  24. தவலை வடை சாப்பிட்டு - அப்படியே
    நம்ம தளத்தில பவித்ரோத்ஸவம் தரிசனம் செய்ய வாங்கோ!!..

    பதிலளிநீக்கு
  25. ரொம்ப நன்னா இருக்கு. ஹோட்டல் தவலடை என்ற பெயரில் இரண்டொருமுறை செய்திருக்கிறேன். இருந்தாலும் உங்களுடையது ரொம்ப ருசியாக இருக்கும்னு தோன்றது. நாம் செய்யாவிட்டால் என்ன? கேட்கிறவர்களுக்குச் சொல்லலாமே! ரொம்ப ஸ்வாரஸ்யம். படங்களும் அழகு. பாவம் அடி ஒன்று போலியாக வாங்கி இருக்கிறீர்கள். நிறைய எழுதநினைத்தாலும் குறுகிய பதில்தான் கொடுக்க முடிகிறது. பாராட்டுகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா. நீங்களும் உங்கள் செய்முறையை எழுதுங்கள். நிதானமாக. காட்மாண்டு சென்று வந்த படங்களை உங்கள் மாட்டுப்பெண் போட்டிருந்தார். பார்த்தேன். இப்போ தில்லி வந்திருப்பீங்கனு நினைக்கிறேன்.

      நீக்கு
  26. என் மனைவி இதே கலவையை அடையாகச் செய்வாள் தவலை வடையை வேறு வடிவத்தில் சாப்பிட்டுஇருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. பதில்கள்
    1. சட்னி செய்திருந்தேன். படம் இல்லை. :) ஆனாலும்சட்னி இல்லாமலும் சாப்பிடலாம்.

      நீக்கு
  29. காலை வணக்கம்.

    தவலை வடை - ஆஹா... நடக்கட்டும் நடக்கட்டும். தனி ஒரு ஆளுக்காக செய்து பார்க்க விருப்பமில்லை. ஊருக்கு வரும்போது சாப்பிட வேண்டும்.

    இன்னிக்கு நடை பயிற்சி கட்! மழை பெய்து கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லேட்டா வந்திருக்கீங்க வெங்கட், தவலை வடையெல்லாம் சூடாச் சாப்பிடணும். :)

      நீக்கு
  30. அருமையா இருக்கு இந்த வடை...நோட் செஞ்சுகிறேன்...

    பதிலளிநீக்கு
  31. தவலை வடை கேள்விப்பட்டிருக்கேன். இப்பதான் செய்முறை தெரிஞ்சுக்கிட்டேன். நன்றிம்மா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!