செவ்வாய், 9 அக்டோபர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : என்னுயிர் உன்னதன்றோ - ரேவதி நரசிம்மன்





என்னுயிர் உன்னதன்றோ 
வல்லிசிம்ஹன் 
..................................................... 

     எழும்பூர் ப்ளாட்ஃபார்மில்  ராமேஸ்வரம்  எக்ஸ்ப்ரஸ் பெருமூச்சு விட்டுக் கொண்டு காத்திருந்தது. பயணிப்பவர்களும் ,அவர்களுக்கு விடை கொடுக்க வந்தவர்களும் கலந்து உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தனர்.

புதுமணத்தம்பதியினர் ,அவர்களுக்குப் புத்திமதி சொல்லும் பெரியவர்கள் என்று ஒரு கம்பார்ட்மெண்டில் நின்று கொண்டிருந்தனர்.

பெண்ணின் அப்பாவும் அம்மாவும் மகளிடம் கண்கள் கலங்க ஏதோ பேச, அவள் அவர்களைச் சிரித்து வழி அனுப்பிக் கொண்டிருந்தாள்.

பையனின் பெற்றோர் ஏற்கனவே தங்களுக்கான  இடத்தில்
உட்கார்ந்து கொண்டு வந்த பொருட்களை ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தனர்.

''கல்யாணப்பாயும், குடையும்,பத்திரமாக வைத்தீர்களா''  என்று கேட்டு நிமிர்ந்த ஜானகியின் முகம் பல நாட்கள் அலைச்சலில் வாடி இருந்தது.

ராகவன் அவள் கைகளைப் பிடித்து உட்கார வைத்தார்.  ''நம்ம நாட்கள் மாதிரி இல்லம்மா  இப்போ.   புதுக்கோட்டை போனதும் மாடி அறையில் பீரோ மேல் ஏறப்போகிறது.  நான் பத்திரமாப் பாத்துக்கறேன்.  நீ உன் தம்பிகள் மனைவியருக்கு பை பை சொல்லு.'' என்றார் புன்முறுவலோடு.

ஜன்னலோரம் சென்று தம்பி மனைவிகளை ஆதரவுடன்
பார்த்தாள்.  ''நீங்கள் இல்லாவிட்டால் ரொம்ப சிரமப் பட்டிருப்பேன்.
டேய் உங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.   மாமாக்கள் பலசாலிகளாக மாப்பிள்ளைப் பையனைத் தூக்கி மாலை மாற்ற வைத்தீர்களே...  என் கண்ணே பட்டிருக்கும் டா...''

''ஆமாம் இந்த 27 வயசுக் காளையைத் தூக்குவதற்குள் எங்கள் முதுகு பிடித்துக் கொண்டது பாரு... '' 

52 வயதுப் பெரிய தம்பியும், 48 வயது சின்னத் தம்பியும் ஒருவர் மேல் ஒரு வர் சாய்ந்து கொண்டது சிரிப்பாக வந்தது.

''போறும்டா கோமாளித்தனம்.  இதோ விசில் கொடுத்துட்டான்.   அகத்துக்குப் போகும் வழியைப் பாருங்கோ.  இந்தாத்து கடைசிக் கல்யாணத்தையும் நன்றாக நடத்திக் கொடுத்தீர்கள்...''  

''இந்தா.. இந்தா..  அத்திம்பேரோட 69 வயது பூர்த்திக்கு சாந்தி செய்யணும்   மறந்திட்டியா.  இதோ மாசி மாதம் உத்ராடம் வந்துண்டே இருக்கு...''

ஜானகி சட்டென்று உணர்ச்சி வசப்பட்டவளாக ''எல்லாம் உச்சிப் பிள்ளையார் கருணையில் நன்னா நடக்கணும்.   நீங்க தேவையான ரெஸ்ட் எடுத்துண்டு தை மாசக் கடைசியில் வந்துடுங்கோ'' என்றாள்.

''நடுவுலயும் வருவோம்.   ஏண்டா புது மாப்பிள்ளை ...  வரலாம் இல்லையா?" என்று ஸ்ரீதரனைச் சீண்டினார்கள்.

''வாங்கோ மாமா..  ஆல்வேஸ் வெல்கம்''  என்றபடி தன் மனைவியை அழைத்தபடி அடுத்த கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொண்டான் ஸ்ரீதரன்.

வண்டி வேகம் பிடிக்க , மெதுவாக வந்து அமர்ந்து கொண்டாள்
ஜானகி.

''இந்த வண்டி கொஞ்சம் எட்டு மணிவாக்கில்  இருக்கக் கூடாதோ
இந்தப் பசங்க திருவான்மியூர் போணுமே'' என்று கவலைப் பட்டாள்.

''இதப் பாரு..   அவர்களைப் பார்த்துக் கொள்ள உங்க அம்மா அப்பா இருக்கிறார்கள்.  9 வருடங்கள் முன்னாடி பொறந்துட்டதனால  நீ அந்த வேலையைய் எடுத்துக் கொள்ளாதே.  நல்ல வேளையா இரண்டு லோயர் பர்த் கிடைத்திருக்கு...'' என்றபடி ஜானகி படுத்துக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

''பால் சாப்பிடுங்கோ...''  என்றபடி  ஃப்ளாஸ்கிலிருந்து,  டம்ப்ளரில் விட்டுக் கொடுக்க,  அவரும் ''நீயும் சாப்பிட்டுக்கோ.  இந்த ரயில் சத்தத்தில் தூக்கம் எங்க  வரப் போறது"  என்றபடி தன் இடத்தில் படுத்துக் கொண்டார்.

உண்மையாகவே தூக்கம் வரவில்லை.

ஜானுவோ, படுத்ததுதான் தெரியும் அசந்துவிட்டாள்.

இரண்டு பெண்கள் கல்யாணத்துக்கு அவளுடைய அக்காக்கள் இருந்து உதவி செய்தனர்.  காலத்தின் கோலம், அவர்களை ஏதோ நோயின் பெயரில் அழைத்துக் கொண்டுவிட்டது.

மூன்றாவது பையனின் திருமணம் திருச்சியில் நடந்தது.  அவனுக்கு அங்கேயே வேலை. புதுக்கோட்டைக்கு வரப் போக இருப்பான்.
நான்காவதுதான்  இந்த கோவிந்தன்.

பெண்கள் மும்பையிலும் தில்லியிலும் இருந்தனர்.  திருமணம்  பள்ளிக்கூட நாட்களில் இருந்ததால் அவர்கள் மட்டும் வந்து போனார்கள். மாப்பிள்ளைகள் வரவில்லை என்று ஜானகிக்குக் குறைதான்.

இதே ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸில் முதன் முதலில் ரகசியமாக ஜானகியைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.  பெண்பார்த்த அன்று ஜானகியைப் பார்த்தது போதவில்லை அவருக்கு.

அப்போது ஜானுவின் அப்பா அம்மா கும்பகோணத்தில் இருந்தார்கள்.

இவர்களும் இதே வண்டியில் கிளம்புகிறார்கள் என்று தெரிந்தே  அம்மாவின் வேண்டுகோளையும் மீறி இந்த வண்டியில் டிக்கெட் வாங்கி வந்தார்.

ஜன்னலோரம் பாவாடை தாவணி அணிந்து உட்கார்ந்திருந்த 
ஜானுவையும் பார்த்துவிட்டார். 

மனம் ஜிவ்வென்று பறக்க நிதானமாக அந்தப் பக்கம் நடந்தார்.  அவர் நினைத்தபடி ஜானுவும் அவளைப் பார்த்துத் திகைத்தது தெரிந்தது.

படபடப்புடன் தலையை உள்ளே இழுத்து, அம்மாவை எழுப்புவதையும் அந்த வெற்றிலைப் பாக்குக் கடையின் பக்கத்தில் இருந்து பார்த்தார்.

சின்னப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறோமோ
என்ற கவலை வந்து விட்டது.  ஒன்பது வயது வித்தியாசம். .  ஜானு அப்பாவுக்கும் கும்பகோணம் பக்கம் பந்தல்குடி கிராமம்.

ஜானுவின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவள் தந்தை உப்பிலி
ப்ளாட்ஃபார்மில் இறங்குவது தெரிந்தது.

சட்டென்று எதிர்பக்கம் உலாவுவது போலப் போய்த் திரும்பவும், வருங்கால மாமனார் முகம் எல்லாம் புன்னகையுடன்
தன்னை எதிர்கொள்ளவும் சரியாக இருந்தது.

''நீங்களா?  நாங்களூம்..."  விசாரணை முடிந்ததும் ஜானுவின் கலவரம் சந்தோஷக் கண்ணில் தெரிந்தன.

''நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள் மாமா.  நான் புதுக் கோட்டையில் இறங்கணும்...''

''அம்மாவிடம் சொல்கிறேன்'' என்றபடி இவர்கள் இருந்த கம்பார்ட்மெண்டைத் தாண்டி அடுத்ததில் ஏறிக் கொண்டதும் நினைவுக்கு வர, சிரிப்பு வந்தது அவருக்கு.

ஜானு அவர் மகிழ்ச்சியைக் காணவில்லை. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.  அதே செங்கல்பட்டு ஜங்க்ஷன் வந்தது.

மேலும் இருவர் இவர்கள் இடத்திற்கு வந்தனர்.  அந்தப் பெண்கர்ப்பிணி என்று தெரிந்தது.   

ராகவன் உடனே எழுந்து ''இங்கே உட்காரம்மா...  நான் சமாளித்துக் கொள்கிறேன்'' என்றார். 

''ஜானு. கொஞ்சம் நகர்ந்து கொள்ளுமா.  நானும் இங்கேயே
உட்கார்ந்துக்கிறேன்''  என்றவர் சொன்னதைக் கேட்டு கண் விழித்த ஜானு,  நிலைமையைப் புரிந்து கொண்டாள்.

''ஓ செங்கல்பட்டு வந்துவிட்டதா?''  என்றபடி  மனதில் பூத்தப் பழைய நினைவுகள் புது உற்சாகம் கொடுக்க எழுந்து உட்கார்ந்து 
எதிரில் இருப்பவர்களிடம் பேசத் தொடங்கினாள்.......

அந்த நேரத்தில் ராகவனுக்குக் கண்கள் சொக்கி உறக்கம் வந்தது,.

தான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு அவரைப் படுத்துக்கச் சொன்னாள் ஜானகி.

அவரும் தூங்க, வெளியே  மங்கலாகத் தெரியும் நிலவை
கண்கொட்டாமல் பார்த்தபடி,பழைய நினைவுகளில்.ஆழ்ந்தாள் ஜானு.

43 வருடங்கள் எங்கே போயின....

எத்தனை ஏற்றம் இறக்கம்...  பெண்கள் திருமணங்கள், மூன்றாவது மகன் சக்கிரபாணி திருமணம்.   இதோ ஸ்ரீதரன் என்னும் கோவிந்தன் மைதிலி திருமணம்.

புதுக்கோட்டையில் தொழிற்கூடம் ஒன்று நிறுவி, ஆட்டோமொபைல்  உதிரி பாகங்கள் செய்து விற்பனை செய்து வந்தார்.

இப்போது கோவிந்தனும் அவருடன் சேர்ந்து பங்குதாரர் ஆனதில் அவரது வேலைப் பளு மிகக் குறைந்திருந்தது.  இருந்தும்  தொழிலில் அலைச்சல் மிகுதியால் உடல் அலுப்பு கூடி இருந்தது.

அசந்து தூங்கும் கணவரை ஆதுரத்துடன் பார்த்தாள்.  இது போலக் கணவரைத் தன்னுடன் இணைத்த, உப்பிலியப்பனுக்கு மனம் நிறைந்த நன்றியுடன் கரம் கூப்பினாள்.

இதுவரை பட்ட அலைச்சல், சேர்த்த பணம் போதும்.   இனி அவரவர் வாழ்க்கையை அவரவர் கவனித்துக் கொள்வார்கள்.

புதுக்கோட்டை வீடு கட்டின நாட்கள். 

மெதுமெதுவே விரிந்து மாடியில் மூன்று படுக்கும் அறைகளும் 
கீழே இரண்டு படுக்கும் அறைகளும், கூடம், சமையல் உள்,  பூஜை அறை,  வீட்டைச் சுற்றி வராந்தா...   நல்ல தோட்டம், தோட்டத்து வீட்டில், வீட்டுப் பணியாளர்களும், தோட்டக்காரர்  இருக்க சிறிய வீடும்  என்று செழிப்பாகத்தான் இருந்தது,.

அறந்தாங்கி செல்லும் சாலையில் , அவர்களது தொழிற்கூடத்தை ஒட்டியே வீடு இருந்ததால் தந்தை மகன் இருவருக்கும் சௌகரியமாகவே இருந்தது.

வண்டி குலுக்கலுடன் நின்றதும்தான் தெரிந்தது,  திருச்சி வந்து விட்டது என்று.

சொல்லிவைத்தாற்போல் விழிப்பு வந்தது ராகவனுக்கு.  எதிர் சீட்டில் இருந்த தம்பதியினர் இறங்குவதற்கு தயாராயினர்.  இதோ  இரண்டு மணி நேரத்தில் புதுக்கோட்டை வந்துவிடும்.  

''காப்பி வாங்கி வரட்டுமா?" என்றார் ராகவன்.   

"நீங்க சாப்பிட்டு வாங்கோ.  நான் கொஞ்சம் தலை சாய்த்துக் கொள்கிறேன்" என்றாள்.

''ஆமாம் இறங்கியதும்  வேலை பிடித்துக் கொள்ளும்.  நீ போர்த்துக் கொண்டு படுத்துக்க கொள்.   எதிராப்பில காப்பி விற்கிறான்.  வாங்கி வருகிறேன்'' என்று இறங்கினார்.

மகனும் இறங்கி அவர்களை பார்க்க வந்து கொண்டிருந்தான்.

''அம்மாவை எழுப்பாதடா.  ராத்திரி பூராவும்  முழித்துக் கொண்டு வந்தாள்'' என்று சொல்லியபடி காப்பியை வாங்கி கொண்டு வண்டி ஏறினார். 

ஐந்து நிமிடங்களில் வேகம் எடுத்துக் கிளம்பியது வண்டி.  'முன்ன மாதிரியா, 7 மணி நேரத்தில் புதுக்கோட்டை வந்து விடுகிறது' என்று நினைத்தபடி  அசந்து தூங்கும்   மனைவியைப்  பார்த்தார்.

ஆதரவாக அவள் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு அவள் தலையைத் தன்  மடியில் ஜாக்கிரதையாக  வைத்துக் கொண்டார்.  கணவனுடைய ஆதரவான செய்கையில் மனம் மலர்ந்த ஜானு இன்னும் சுருண்டு படுத்து   ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாள்.



அவள் முதுகில் அரவணைத்தபடி அவரும் கண்மூடிக்கொண்டார்.

இன்னும் பிறவிகள் எத்தனை வந்தாலும் என் ஜானுவே என் கூட வரவேண்டும்   என்று  பிரார்த்தனை செய்து கொண்டார்.


என்றும்  வாழ்க வளமுடன்.

54 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  2. மதிப்புக்குரிய வல்லிசிம்ஹன் அவர்களின் கைவண்ணம் மனதை நெகிழ்த்துகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு துரை செல்வராஜு,
      இனிய காலை வணக்கம். இந்த அன்பு தம்பதிகள்
      தான் பெற்ற செல்வங்களுக்கும் எடுத்துக் காட்டாக
      இருந்தார்கள். மிகவும் நன்றி மா. அனைவரும்

      சுகமே கொண்டு இன்பமே வாழவேண்டும்.

      நீக்கு
  3. /// இன்னும் எத்தனை பிறவிகள் வந்தாலும்... ///

    அன்பினில் சங்கமித்த நெஞ்சங்களின் வேண்டுதல்கள் எப்போதும் இவ்வாறாகத் தான் இருக்கும்...

    அதுவே அனைவருக்கும் சித்திக்கட்டும்...

    வாழ்க மங்கலம்..
    வாழ்க மனையறம்...

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. அன்பு ஸ்ரீராம் , இனிய காலை வணக்கத்துடன்
      இந்தக் கதையையும் வெளியிட்டதற்கு மனம் நிறைந்த நன்றி மா.

      வெகு சாதாரணம் .திருப்பம் கிடையாது. எனக்குப் பிடித்த வகையில் ஓட்டம்.

      நீக்கு
  5. சில இடங்கள் உங்க சொந்த அனுபவங்கள்! சிலவற்றைச் சேர்த்திருக்கீங்க! என்றாலும் சுவாரசியம். ரயிலில் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் ரகசியமா/திருட்டுத்தனமா/ பார்த்துக் கொண்டதை எழுதி இருந்ததும்,பசுமலை வீட்டுக்கு சொந்தக்காரர் வண்டியில் அவர் உங்களைப் பார்க்க ரகசியமா வந்ததும் நினைவில் வந்தது. அதுவே சினிமாவை விட சுவாரசியம். :) நினைவுகள் எப்போதுமே சுகமானவை! அதுவும் இம்மாதிரியான நினைவுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதாக்கா... சில விஷயங்களை பொதுவெளியில் சொல்லக்கூடாதாக்கும்!!!

      நீக்கு
    2. ஆஹா. கீதாமாவுக்கு யானை மெமரி.
      ஆமாம் அதே கதைதான். அவர் இருந்தால் எப்படி இருந்திருக்கணுமோ அப்படி எழுதிவிட்டேன்.
      நன்றி மா. நவராத்திரி வாழ்த்துகள். எங்கும் எப்போதும் சுகம் நிலவட்டும்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

      நீக்கு
    2. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார் . ரசித்துப் படித்ததற்கு மிக மிக நன்றி.

      நீக்கு
  7. கீழ உள்ள படத்தை நான் முதலில் பார்க்கலை. எங்க, இரயில் பயணத்திலேயே அவரது வாழ்க்கையை முடிக்கப் போகிறீர்களோ (ஜானு அவரை எழுப்பினாள்... ஏன்னா எழுந்திரிங்கோ.. ஸ்டேஷன் வரப் போகிறதென்று.. ராகவன் கடமை முடிந்தது என்ற எண்ணத்தில் உலகை விட்டே பறந்திருந்தார்... இல்லைனா ஜானு இதே சிச்சுவேஷன்ல). கதையை சுபமாக முடித்திருக்கிறீர்கள்...

    படத்துக்கு ஏற்ற பொருத்தமான கதை. மனதில் சூழல் விரிகிறது. பாராட்டுகள் வல்லிம்மா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோ வே. அன்பு முரளி. எனக்கு யாரையும் மேலோகம் போக விட முடியாதுமா.
      நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்த்து சிரித்து விட்டேன்.

      எல்லோரும் நூறாண்டு இருந்து இன்பமே வாழணும் மா.
      நன்றியும் நவராத்திரி வாழ்த்துகளும்

      நீக்கு
  8. நெகிழ வைத்த கதை. கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  10. வல்லி அக்கா , அருமையான கதையை எழுதியதற்கு வாழ்த்துக்கள்.
    மனநிறைவான முடிவை எழுதியதற்கு நன்றி.

    சகோதர சகோதரி உரையாடல் அருமை.
    கணவன், மனைவி நினைவுகள் மிக அருமை.
    உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு உங்கள் கதையின் கரு புரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கோமதி மா. நீங்கள் அனைவரும் என் பதிவுகளுக்கு மிக நெருக்கமானவர்கள். என் மனதையும் படித்தவர்கள்.
      நுணுக்கமாகப் படித்து அதைச் சுட்டிக்காட்டும் திறமை எனக்கு வந்ததே இல்லை.

      நன்றாக இருக்கிறது என்று சொல்வத்ற்கும் நல்ல மனம் வேண்டும் இல்லையாமா.
      ஆமாம் என் கற்பனை வாழ்வு கதையாக விரிந்திருக்கிறதுமா.
      மிக மிக நன்றி. வாழ்க வளமுடன்.

      நீக்கு
    2. இக் கதையில் காதாபாத்திரங்கள் யார் யார் என்று மனதில் விரிந்தது.
      நீங்கள் சொல்ல சொல்ல அப்படியே தொடர்ந்து பயணித்து அடுத்து என்ன என்ற ஆவலை ஏற்படுத்தும் எழுத்து இல்லையா உங்கள் எழுத்து. வாழ்வை ரசித்து ருசித்து வாழ்ந்து பிறரும் அப்படியே வாழ விரும்பும் உள்ளம் உங்களுடையது அல்லவா?

      நீக்கு
    3. அன்பு கோமதி மா. உண்மையே. அனைவரும். நலமாக. ,மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் பிரார்ததனைகள்.வாழ்க வளமுடன்.

      நீக்கு
  11. எத்தனை தம்பதிகள் இப்படி அமைகின்றனர் உலகில் ? புண்ணியவான்களுக்கு மட்டுமே இப்படி அமையும் வாழ்க நலம்.

    நல்ல கதை அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு தேவகோட்டைஜி., இனிமையை மட்டுமே எழுதுகிறேன். ஆளுமை இல்லாத ஆணை யாரும் அதிகம் மதியார்கள். அதே போல நளினமான ஆனால் திடமான பெண்களை வாழ்க்கைத்துணையாக அடைந்தவர்களின் சாமர்த்திய வாழ்க்கையே நல் இல்லறம்.

      நம் இணையத்திலியே எத்தனையோ தம்பதிகளைப் பார்க்கிறேன். என்றும் வளமுடன் இருங்கள்.

      நீக்கு
  12. @ ரேவதி நரசிம்ஹன்:

    //.. அவர் இருந்தால் எப்படி இருந்திருக்கணுமோ அப்படி எழுதிவிட்டேன்.//

    அவர் எங்கும் போய்விடவில்லை. உங்களுக்குள்ளேதான் ஒளிந்துகொண்டிருக்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஏகாந்தன், நீங்களும் புதுக்கோட்டையில் வாசம் செய்பவரா.
      எங்கள் வாழ்வின் வசந்தகாலம் அங்கே ஆரம்பம். என்றுமே மறக்க முடியாத,
      பஸ்ஸ்டாண்ட், டிவிஎஸ், பட்டுக்கோட்டை அறந்தாங்கி ரோடு, கோவில்கள்,
      ஜகதா தியேட்டர், புகைப்பட ஸ்டுடியோ, எல்லாமே 50 வருடங்களுக்கு முன்பத்திய நினைவுகள்.

      ஆமாம் என்னவர் என்னை விட்டு அகல மாட்டார்.உங்கள் புரிதலுக்கும் மிக மிக அன்புக்கும் நமஸ்காரம்.

      நீக்கு
    2. புதுக்கோட்டை என் மனக்கோட்டையும்! படித்தது, வளர்ந்தது எல்லாம் அங்கேதான். நீங்கள் சொல்கிற பஸ்ஸ்டாண்ட் (அதாவது பழைய பஸ்ஸ்டாண்ட்), அறந்தாங்கி ரோடு, கீழராஜவீதி, கோவில்கள், மீனாட்சி பதிப்பகம், இன்னும் மேலாக அப்போதைய ராஜாஸ் காலேஜ்.. போகும் கதை இப்படியே..!
      நான் புதுக்கோட்டையை விட்டுவந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பணி நிமித்தம் டெல்லி/வெளிநாடுகளில் சுற்றிவிட்டு, இப்போதிருப்பது பெங்களூரில்.

      நீக்கு
  13. புதுக்கோட்டை, புதுக்கோட்டை என எங்கும் கண்ணில்பட, இது என்ன நம்ப ஊர்க்கதையாக இருக்கிறதே எனக் கவரப்பட்டேன். நினைவுப்பாதையில் குதித்து, மெல்ல நடந்து பார்த்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. இன்று வல்லிம்மா கதையோ.. மிக இயல்பாக மிக அருமையாக இருக்கு. நானும் அந்த கூட்டத்தினுள் இடிபட்டு வழி அனுப்புவதைப்போல இருந்தது.

    பதிலளிநீக்கு
  16. எப்பவுமே கடந்து வந்த பாதையை நினைக்கும்போது நெஞ்சுக்குள் என்னமோ செய்யும்... சந்தோசமாகவும் இருக்கும் அதே நேரம் இனிமேல் அக்காலங்கள் திரும்ப வராதே என அழுகையும் வரும்... மிக அழகாக பழசை நினைப்பதைச் சில்லியிருக்கிறீங்க.... முடிவில் ஆளை முடிச்சிடுவீங்களோ என எண்ணினேன் நல்லவேளை அப்படி ஏதும் இல்லாததில் மகிழ்ச்சி. அழகிய கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு அதிரா, கருத்துடன் வந்து படித்ததுக்கு மிக நன்றி.

      உலகில் தான் மனம் விரும்பாத மாற்றங்கள் நடக்கின்றன்வே. நம் கற்பனை உலகிலாவது

      நன்மைகள் நடந்தேறட்டும். நன்றி மா.
      ஆமாம் கடந்து வந்த பாதையில் முள்ளும் இருக்கும், பண்பட்ட தோட்டங்களும் இருக்கும்.

      நான் முட்களைத் தள்ளும் வயதுக்கு வந்துவிட்டேன்.
      நல் நினைவுகளே மனசில் . மனம் நிறை வாழ்த்துகள் அம்மா.

      நீக்கு
  17. பாசமா,இல்லை. லவ்அண்ட் கேர் சொல்ராளே அதுதான் இது. அது இல்லேன்னுதானே இப்போ பசங்கள்ளாம் கோர்ட்டுக்குப் போரா. கொஞ்சம் வயது வித்யாஸமிருந்தா, ஆண்களுக்கு பொருப்பும்,பெண்களுக்குப்பணிவும்,அன்பும் ஏற்படுகிறது. ஸமவயதுன்னா நீயா,நானா யார் சொல்றதுஸரி என்ற போட்டி வந்து விடுகிறது. அதுபோகட்டும் ராகவன்,ஸீதா இயற்கையில் அன்பு மனம் கொண்டவர்கள். இரயிலில் ஏதோ ஒரு காட்சியை எழுதியே இப்படி மனம் கவர்ந்து விட்டீர்களே. அவர்கள் காலத்தில் இன்னும் எவ்வளவோ நினைவுக்காட்சிகள் இருக்குமே. அன்பையே கொட்டி அழகாக நல்லபடியாக காட்சி விரிந்தது நல்லது. ரொம்ப அழகான கதை. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு காமாட்சி மா,
      காதலும் புரிதலும் ,பொறுமையும்
      ஒரு தாம்பத்தியத்தை அரவணைத்து செல்லும். ஆமாம். எங்கள் வாழ்வில் என்னை விட நல்ல மன முதிர்ச்சி பெற்றவர் அவரே.
      வயது வித்தியாசத்தை நாங்கள் நினைத்ததே இல்லை.
      இன்னும் பல நினைவுகள் என் பொக்கிஷம்.
      உங்களின் சரியான புரிதல் மனசுக்கு இதம்.

      எப்பொழுதும் உங்கள் அன்பு வேண்டும்.

      நீக்கு
  18. நன்றாக உள்ளது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  19. கதைகள் எழுதும்போது சில அனுபவங்களும் நினைவுகளும் கை கொடுக்கு ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வணக்கம் பாலசுப்ரமணியம் சார்.
      எனக்கு நினைவுகளும் நிகழ்ச்சிகளுமே
      பதிவுகளாக எழுதுவது வழக்கமாகிவிட்டது.
      மிக மிக நன்றி.

      நீக்கு
  20. அழகான நடையில் நெகிழ்வான கதை. அருமை வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ராமலக்ஷ்மி , நீங்கள் வந்து படித்தது எனக்கு
      மிகப் பெருமை. அன்பு கனிந்த கருத்துக்கும் நன்றி ராஜா.

      நீக்கு
  21. கதை நன்றாக இருக்கிறது. ஆனால் கமல் திரைப்படம் போல சரியாகப் புரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகத் தோன்றுகிறது.

    வானவல்லி: முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா
    https://sigaram-one.blogspot.com/2018/10/Mudi-Meetta-Moovendhargal-08.html
    #முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. நான் தேர்ந்த எழுத்தாளர் இல்லை.
      நினைத்ததை வடித்துவிடுவேன்.
      அதை எங்கள்ப்ளாகிலும் கௌரவப் படுத்துகிறார்கள்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!