புதன், 3 ஜூலை, 2019

புதன் 190703 : உரையாடல்கள் பெ, வ, கு மனோபாவங்கள்!



சென்ற வாரப் பதிவில் கல்யாண செலவுகள் அவசியமா இல்லையா என்பது குறித்து பலரும் கருத்துகளைக் கூறியிருந்தீர்கள். 

பலரும் யோசிக்க வேண்டிய விஷயம். 



அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே, வெற்றிலை பாக்குக் கடையிலே... 

என்று அந்தக் காலத்துப் பழமொழிப் பாட்டு ஒன்று உண்டு. எவ்வளவு சிக்கனமானக் கல்யாணம்! எந்தக் காலத்தில் இப்படி எல்லாம் நடந்திருக்கு! 



சென்ற வாரம் கீதா ரெங்கன் அவர்கள் கேட்டிருந்த கேள்விகளைப் படித்த பேயார் எங்களுக்கு மெயிலில் அனுப்பியிருந்த பதில்களை கீழே வெளியிட்டுள்ளோம். 

'எங்கள் ப்ளாக்' மின்னஞ்சலுக்கு வந்த பேயாரின் பதில்களை,  காபி செய்து, எனக்கு அனுப்பி வைத்த காசு சோபனாவுக்கு நன்றி. 


கீதா ரெங்கன் :

a) எங்களின் நட்பேயார் அவர்களே! நீங்கள் வணக்கம் எப்படிச் சொல்வீர்கள்?

💀 சுபோத் கயா ! 


b) இங்கு எந்த ரூபத்தில் உலவுகிறீர்கள் எங்களின் யார் கண்ணிலும் படவில்லையே!! ஹிஹிஹி. 

💀 அரூபம் 

c) இங்கு செம ஃப்ரீயாக உலவுகிறீர்களே.....உங்கள் வாகனம் என்னவோ? ட்ராஃபிக் ஜாம் எதுவும் இல்லையோ? சிக்னல் எல்லாம் உண்டோ?

💀 வாகனமா? வேறென்ன எருமைதான். ஜாமாவது ! அதெல்லாம் எந்தப் புண்ணாக்கும் கிடையாது. சிக்னலா ! எங்கள் வாகனங்கள்தான் மற்றப் போக்குவரத்து வாகனங்களுக்கு ரெட் சிக்னல்! 

d) உங்களுக்கு குழுமம் எல்லாம் உண்டா? அதில் உங்கள் டிபி என்னவாக இருக்கும்?


💀  இதுதான் என் டி பி. விரைவில் வாட்ஸ்அப்(பேய்) என்று ஒரு குழுமம் ஆரம்பிக்கப்போகிறோம்! 

e) பேயார் குளியல் எல்லாம் உண்டா? பல் உண்டா இல்லை பல்கொட்டிப் பேயாரா?!!!!!!

💀 காற்றிலே குளிப்போம். பேயோபால் பல்பொடி. பேயோரியா பல்பொடியும் கோபால் பல்பொடியும் சமபங்கு சேர்த்து தயாரித்தது. 

f) உங்கள் குடியிருப்பு எது? எபிதானா இல்லை ஆங்காங்கே அவ்வப்போது ட்ராவலிங்கா!!? வேப்பமரம் இல்லா இருப்பிடமோ?!!!!!!!!!!!!!!!!

💀 புளியமரம் மட்டுமே! 

g) பேயாரிடமிருந்து ஒரு சமையல் குறிப்பு எதிர்பார்க்கலாமா?! ஹிஹிஹி ப்யூர் வெஜிட்டேரியனாத்தான் இருக்கணுமாக்கும்...லேடீஸ் ஃபிங்கர்னு எல்லாம் போடப்ப்டாதாக்கும்..

💀  சமையல் எல்லாம் கால் இருந்த காலத்தில் செய்தது. இப்போ எல்லாம் மறந்து போச்சு. பேயான பின் காற்றிலே குளித்து, காற்றை உண்டு, காற்றிலே மிதந்து புளிய மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறேன்.


h) ஜக்கு ஜிக்கு ஜமைக்கா. ஜிம்மு கம்மு குமைக்கா...(ஹிஹிஹிஹி)

💀  நஹி நஹி நஹி நஹி கபி நஹி. 

எங்கள் நட்பேயார் ஜாலி என்பதால் தான் இப்படியான சும்மா கலாய்த்தல் கேள்விகள்...ஜாலியான சிரிக்க வைக்கும் பதில்களே வரும் என்பதால்....ஜாலிக்குத்தான் கௌ அண்ணா...


& கேட்பதை எல்லாம் பேயிடம் கேட்டுவிட்டு, கடைசியில் எனக்கு எதற்கு இந்தக் குறிப்பு! இது கேள்வி இல்லை என்பதால் பதிலும் ஏதும் இல்லை! 


வாட்ஸ் அப் கேள்விகள் :

பானுமதி வெங்கடேஸ்வரன்: 


 எம்.ஆர்.ஆர்.வாசு, ராதா ரவி, ராதிகா இந்த மூவரில் எம்.ஆர்.ராதாவின் சரியான வாரிசு என்று யாரைக் கூற முடியும்?

# யாருமே இல்லை. ராதா கடுமையான சுதந்திர உணர்வு கொண்ட முரட்டு ஆத்மா. வாரிசுகள் அவரது கடுமை அவருக்கு மட்டுமே பொருத்தம் என உணர்ந்து வெற்றி கண்டவர்கள். மூவரில் ராதிகா உறுதியான கொள்கை கொண்டவர் என்று நான் நினைக்கிறேன்.

& எதிர் நீச்சல் (பழைய ) படத்தில் எம் ஆர் ஆர் வாசுவைப் பார்த்து, சௌகார் ஜானகி 'வாடாப்பா எம் ஆர் ராதா வாரிசு' என்பார். எனக்கும் அதுதான் சரி என்று தோன்றுகிறது. 

அரசியல், கலை இவைகளில் வாரிசுகள் ஏன் பரிமளிப்பதில்லை?

# அரசியலில் இல்லைதான். கலை உலகில் சூர்யா, பிரபு, சிம்பு, அபர்ணா ஸென் போன்ற சிலரைக் காண்கிறோமே !  நேருவைக்காட்டிலும் தைரியசாலி என இந்திரா பேர் வாங்கவில்லையா ?

 'படித்து கொண்டிருந்த அவன் காதில் பாத்ரூமிலிருந்து வந்த 'சொட் சொட்..' என்ற சத்தம் தொந்தரவு செய்தது. எழுந்து அதை நன்றாக மூடி விட்டு திரும்பினால், மீண்டும் சொட்,சொட் சத்தம். எரிச்சலோடு திரும்பினான், குழாயிலிருந்து சொ ட்டியது ரத்தம்....' இப்படிப்பட்ட கதைகளை படித்து அல்லது கேட்டு பயந்திருக்கிறீர்களா?

# இந்தப்  பேத்தல் எங்கே போய் முடிகிறது என்ற ஆவல் காரணமாக கடைசி வரை படிப்பதுண்டு.

"அப்போது கவசம் டணால் என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது" என்ற வரிகள் (ஆங்கில நாவலின் அப்பட்டமான காப்பி) தன்னை திடுக்கிட வைத்ததாக என் தாயார் சொன்னதுண்டு. (மஞ்சள் அறையின் மர்மம்) வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர்.ரங்கராஜூ நாவல் (தழுவல்)கள் கொடிகட்டிப் பறந்த 1935 - 1947 காலகட்டம்.

& அந்தக் காலத்தில் நாஞ்சில் பி டி சாமி நாவல்களை வாடகைக்கு வாங்கியோ அல்லது ஓ சி வாங்கியோ, அண்ணன், அவருடைய நண்பர்கள், எங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு குழுவாக அமர்ந்து, ஆளுக்கு ஒரு பக்கம் அல்லது ஒரு அத்தியாயத்தை வாய் விட்டு உரத்த குரலில் ஒவ்வொருவராகப் படித்து, மற்றவர்கள் கேட்போம். ஒரு குழுவாக பகலில் உட்கார்ந்து உரத்த குரலில் படித்துக் கேட்டதால், யாருக்குமே பய உணர்ச்சி வரவில்லை! 

======================================

*PAC பற்றி எழுது முன்பாக கீழ்க்கண்ட உரையாடல்களைக் கூர்ந்து கவனியுங்கள். 

பேருந்து நிலையத்தில் 

A) 

ஒருவர்: " சார்! டைம் என்ன ஆச்சு?"

மற்றவர் : " ஊருல இருக்கறவங்களுக்கெல்லாம் டைம் சொல்வதற்காக நான் வாட்ச் கட்டவில்லை. எங்காவது மணிக்கூண்டு இருந்தால் அங்கே போய் நேரம் பார்த்துக்கொள்ளுங்க "


வீட்டில் 

B) 
புதிதாக வந்துள்ள மருமகள் : " அத்தே! மாமாவுக்கு சமையலில் உப்பு கொஞ்சம் தூக்கலா இருந்தாதான் பிடிக்கும் என்று இவர் சொன்னார். நான் வைத்த ரசத்தில் உப்பு சரியாக இருக்குதா என்று கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பார்த்து சொல்லுங்க !"

மாமியார் : " நாங்க எல்லாம் இந்தக் குடும்பத்துக்கு வந்தபோது இப்படி எல்லாம் நைஸ் பண்ணி, மாமனார் மாமியாரை எல்லாம் கைக்குள்ளப் போட்டுக்கற வித்தை எல்லாம் பழகிக்க நெனைக்கலை அம்மா! எல்லா இடத்திலும் பட்டுப் பட்டுத்தான் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டோம்."

C) 

சிறுவன் : " அம்மா! நான் விளையாடப் போகலாமா? "

அம்மா : " ஓ எஸ். தாராளமாக விளையாடப் போகலாம். வீட்டுக் கணக்கு எல்லாம் போட்டு முடித்துவிட்டு, அப்புறம் போவியாம்! சரியா கண்ணா ?"

D) 

அப்பா : (கோபமாக) " இந்தக் கண்ணாடிக்கு பக்கத்தில் இருந்த சீப்பு எங்கே? யார் அதை எடுத்து ஒளித்து வைத்தது?" 

அம்மா : " ஆமாம் - இங்கே எல்லோருக்கும் பால்யம் திரும்பி, உங்களோட விளையாடறதுக்குத்தான் சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கிறோமாக்கும்!" 


E) 
புடவைக் கடையில் :

வாங்க வந்தவர் : " சார்! அதோ மேலே இருக்கே சர்ட்டிங் துணி, அதை எடுங்க. அது என்ன விலை? "

கடை ஆள் : " அதெல்லாம் ரொம்ப விலை அதிகம் சார். நீங்க வாங்க மாட்டீங்க."


மேற்கண்ட ஐந்து உரையாடல்களில், எது அல்லது எவை, சுமுகமாக தொடர்ந்திருக்கும்? ஏன்?

இது சம்பந்தமாக நாம் ஆராய்ந்து பார்த்தால், ஒன்றே ஒன்றுதான் சுமுகமாகத் தொடர்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. (எது?) 

சாதாரண மனிதர்களின் மனதில் எப்போதும் மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஒன்று : பெற்றோர் மனோபாவம்.
இரண்டு : வயது வந்தோர் மனோபாவம்.
மூன்று : குழந்தை மனோபாவம்.

நம்முடைய சொற்களில், உரையாடல்களில், இந்த மூன்று மனோபாவங்களும் வெளிப்படும். எதிரே உரையாடுபவரிடமும் இந்த மூன்று மனிதர்கள் இருப்பார்கள்.

இவை எப்படி நமக்குள் வந்து குடியேறின என்ற விவரத்தை அடுத்த வாரம் விளக்குகின்றேன்.

இப்போ நம்முடைய எடுத்துக்காட்டு உரையாடல்களை கூர்ந்து கவனிப்போம்.

ஒருவர்: " சார்! டைம் என்ன ஆச்சு?"

(வயது வந்தோர் மனோபாவம். விவரம் அறிய கேள்வி கேட்பது. )
மற்றவர் : " ஊருல இருக்கறவங்களுக்கெல்லாம் டைம் சொல்வதற்காக நான் வாட்ச் கட்டவில்லை. எங்காவது மணிக்கூண்டு இருந்தால் அங்கே போய் நேரம் பார்த்துக்கொள்ளுங்க "

(பெற்றோர் மனோபாவம் - கண்டிப்பு. இன்னும் ஆழமாகப் பார்த்தால், பெற்றோரும் வயது வந்தோரும் சேர்ந்த மனோபாவம். criticising attitude )

உளவியல் அறிஞர்கள் சொல்வது என்ன என்றால், வயது வந்தோர் மனோபாவத்தில் தகவல் அறிய கேட்கப்படும் கேள்விக்கு, தகவலைத் தருவதோ அல்லது தர இயலவில்லை என்றால், ஏன் இயலவில்லை என்ற விவரத்தைக் கூறினால், அங்கு சுமுகமான கருத்துப் பரிமாற்றம் நிகழும். 

இல்லையேல் யாராவது ஒருவருக்கு hurt feeling ஏற்படும். 

அடுத்த வாரம் தொடர்வோம். 

மீண்டும் சந்திப்போம்!

============================================

பின் குறிப்பு : * P A C = Parent, Adult, Child. 

============================================ 

88 கருத்துகள்:

  1. அன்பின் KGG, ஸ்ரீராம்...
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும்,
      இனி வரவிருக்கும் அனைத்து நட்புறவுகளுக்கும்
      வணக்கம், நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. அனைவருக்கும் காலை வணக்கம்.

      நீக்கு
    3. நல்வரவு, காலை வணக்கம்.

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  3. Net pack முடிந்து விட்டது....
    பிறகு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்

    உங்களுடன் பேசி விட்டு கொஞ்சம் வேலை பார்த்துவிட்டு இங்கு வருவதற்குள் நான் தான் முதலில் என்று வந்தால் 8 கமென்ட்ஸ் ஹா ஹா ஹா ஹா

    பானுக்காவும் வந்தாச்சு

    கீதா

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் கௌ அண்ணா என்னாச்சு?!!

    பேயார்கள் எல்லாம் மின் அஞ்சல் வழி கூட பதில் அனுப்பறாங்களா!! ஹா ஹா ஹா ரொம்ப டெக்னாலஜிக்கலி அட்வான்ஸ்ட் போலும்!! மனதில் எனக்கும் பல கற்பனைகள் வருது.

    நட்பேயாரின் பதில்கள் ஹா ஹா ஹா ரகம். சுபோத் கயா!!

    மிக்க நன்றி கௌ அண்ணா நட்பேயாரிடம் இருந்து பதில்கள் வாங்கி இங்கு போட்டதுக்கு.

    இன்று விருந்தினர் வருகை மாலை. எனவே பணிக்குச் சென்று வந்த பின் வேலைகள். பிஸி... இப்போதும் கொஞ்சம் செய்துவிட்டுப் போக வேண்டும்.

    அப்புறம் வரப் பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேயாருக்குத் தெரிந்த ஒரே மின்னஞ்சல் engalblog@gmail.com அதற்கு மட்டுமே மின்னஞ்சல் அனுப்புகின்றது. engalblog மெயில் கடவுச்சொல்லை கா சோ மாற்றி, இரகசியமாக வைத்திருப்பதால், அங்கு வரும் மெயில்களை அவர் பார்த்து, எனக்கோ ஸ்ரீராமுக்கோ அனுப்பினால்தான் உண்டு.

      நீக்கு
    2. கௌ அண்ணா எனக்கென்ன தோணுதுனா கா சோ மாற்றலை இந்தப் பேயார்தான் ஹேக் பண்ணி வைச்சிருக்கார்னு நினைக்கிறேன்...கா சோவையும் மிரட்டி வைச்சிருப்பாரோ?!!!!!!

      கீதா

      நீக்கு
  6. பி.ஏ.சி.யில் எனக்கு சி. பதில் தான் பிடித்தது. பெரும்பாலும் எங்க குழந்தைகளிடம் அப்படித் தான் சொல்லி இருக்கேன். வீட்டுப் பாடங்களை முடிச்சுட்டு எத்தனை நேரம் வேணுமானாலும் விளையாடுங்க! என்று சொல்லிடுவேன். வீட்டில் இதுக்கு பயங்கர எதிர்ப்புகள் வரும். இத்தனை நேரம் பள்ளியிலே படிச்சுட்டு வந்திருக்கும் குழந்தைகளுக்குக் கொஞ்சமானும் ஓய்வு வேண்டாமா? மாற்றம் வேண்டாமா? போட்டுக் கசக்கி எடுக்கிறாளே என்பார்கள். ஆனால் குழந்தைகள் விரைவில் பாடங்களை முடிச்சுட்டு விளையாடப் போனா அப்புறமா நிறைய நேரம் விளையாட முடியும் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்கள். ஆகவே குழந்தைகளோடு பிரச்னை வந்ததில்லை.

    பதிலளிநீக்கு
  7. நட்பேயாரின் பதில்கள் சுவாரசியமாக இருக்கின்றன. ரசித்தேன். அது என்ன காசு சோபனா மூலம் தட்டச்சி அனுப்பிப் பதில்கள் வந்திருக்கு? அவர் நட்பேயாருக்கு ரொம்பவே நட்பா? இல்லைனா பயமே கிடையாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேயாருக்குத் தெரிந்த ஒரே மின்னஞ்சல் engalblog@gmail.com அதற்கு மட்டுமே மின்னஞ்சல் அனுப்புகின்றது.

      நீக்கு
    2. கா.சோ.கடவுச் சொல்லை மாத்தினது உங்க யாருக்கும் தெரியலையா? அப்புறமா மத்ததெல்லாம் எப்படி வந்தது? கேள்வி பதில்கள் பானுமதியோடது எல்லாம்?

      நீக்கு
    3. மற்றவை யாவும் பதிவிலோ அல்லது, வாட்ஸ் அப் மூலம் தனி செய்தியாகவோ வந்தவைதான். ஜிமெயிலுக்கு கேள்விகள் எதுவும் வருவதில்லை.

      நீக்கு
  8. பொதுவா யாரையானும் மணி என்னனு கேட்டால் சொல்லுவாங்க, இல்லைனா கடிகாரம் கட்டலைனு சொல்லுவாங்க. இப்படிச் சொல்லிப் பார்க்கலை! பொதுவாகப் பேருந்து நிலையம் என்றால் அங்கே எங்கானும் ஓர் இடத்தில் கடையில்/ஓட்டலில்/டீக்கடையில் கடிகாரம் இருக்கும். அங்கே போய்க் கேட்டுக்கலாம், பார்த்துக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான். ஆனால், சில சமயங்களில், மணி என்ன? ஒரே வெய்யிலா இருக்கே! இந்த வருடம் வெயில் ஜாஸ்திதான் என்பது போன்ற உரையாடல்கள் ஒரு starter. அதை வைத்து அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும்.

      நீக்கு
    2. ஓ, உரையாடல்கள் ஆரம்பத்திற்காகக் கேட்கப்படும் கேள்வினு எடுத்துக்கணுமா? சரிதான்! நான் நிஜம்மாவே கேட்பார் என நினைத்துவிட்டேன். நாங்கல்லாம் நீங்க எங்கே போறீங்க என்றோ, அல்லது நீங்களும் இந்த ஊருக்குத் தானா என்று கேட்டும் பேச்சை ஆரம்பிப்போம். ஹிஹிஹி! :))))) கௌதமன் சாருக்கு வெறுத்துப் போயிடாது? இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    3. " எங்கே போறீங்க"ன்னு கேட்டுவிட்டால் அவ்வளவுதான்! எதிராளி சில சமயங்களில் நம்மைத் தூக்கிப் போட்டு மிதித்துவிடுவார்கள்!

      நீக்கு
    4. ம்ம்ம்ம், சகுனம் பார்க்கிறவங்களுக்குக் கோபம் வரும் தான்! ஆனால் நாங்க கதவைப்பூட்டும்போதே கேட்பவர்கள்/ கேட்டவர்கள் பலர் உண்டு! :)))) அதுவும் காலை வேளையில் பல்லவனுக்குக் கிளம்பினால், என்ன,பல்லவனா? சென்னையா? எப்போ திரும்பறீங்கனு அந்த அவசரத்திலும் எல்லாம் கேட்டுக் கொண்டே நம்மை லிஃப்டில் அனுமதிப்பார்கள்! :)))))

      நீக்கு
  9. மாமியாரின் மனோபாவம் பெரும்பாலான மாமியார்களிடம் இருந்திருக்கலாம். இப்போ வாய்ப்பு இல்லை. கடையில் துணி வாங்குகையில் எனக்கு இம்மாதிரி அனுபவம் ஏற்பட்டிருக்கு. இந்தப் புடைவை எல்லாம் உங்களால் வாங்க முடியாதும்மா எனச் சில கடைக்காரர்கள் சொல்லுவாங்க! :)))) சீப்பை ஒளிச்சு வைச்சுக் கல்யாணங்களை நிறுத்தும் பழக்கம் எங்க வீட்டில் இல்லை. ஏனெனில் எல்லோருக்கும் தனித்தனி சீப்பு, தனித்தனி துண்டு எனத் தனியாக இருக்கும் என்பதால் ஒருத்தர் மற்றவர் பொருளை எடுத்துப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்தப் புடைவை எல்லாம் உங்களால் வாங்க முடியாதும்மா எனச் சில கடைக்காரர்கள் சொல்லுவாங்க!// அது ஒரு வியாபார தந்திரம். அதைக் கேட்கின்ற பெரும்பாலான பட்டுப்புடவை கட்டிய பெண்கள் அதை அப்படியே விட்டுவிடமாட்டார்கள் .... " ஏன்? அதை எடுத்துக் காட்டுங்க. இன்னும் விலை அதிகமான புடவை இருக்குதா " என்றெல்லாம் கேட்டு, தன் பர்சில் இன்னும் பெரிய ஓட்டையாகப் போட்டுக்கொள்வார்கள். பெரும்பாலும் நகைக் கடை அல்லது துணிக்கடை சிப்பந்திகள், வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைந்தவுடனேயே அவர்களை எடை போட்டு விடுவார்கள். அப்புறம் என்ன தலையில் எதைக் கட்டவேண்டும், எப்படிக் கட்டவேண்டும் என்று தெரிந்து செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்!

      நீக்கு
    2. // தனித்தனி சீப்பு, தனித்தனி துண்டு எனத் தனியாக இருக்கும் என்பதால் ஒருத்தர் மற்றவர் பொருளை எடுத்துப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை.// தனித்தனி சீப்பு இருந்தபோதிலும், பயன்படுத்துபவரே அதை வேறு எங்காவது ஞாபக மறதியாக வைத்துவிட்டு, பிறரை blame செய்வது உண்டு.

      நீக்கு
    3. என்னைப் பொறுத்தவரை புடைவைக்கடையில் போகும்போதே அதிக பட்ச விலை என்னவாயிருக்கணும்னு முடிவு பண்ணிக் கொண்டு போயிடுவேன். ஆகவே கடைக்காரர் சொன்னாலும் அதை லட்சியம் செய்வதில்லை. நம்ம பட்ஜெட்டுக்குள்ளே தானே வாங்கப் போறோம். பட்ஜெட்டை முதலிலேயே சொல்லிடறதால் கூடக் கடைக்காரர் அப்படிச் சொல்லலாம்! சொல்லி இருக்கார். இது விலை அதிகம், பரவாயில்லையானு கேட்பவர்களும் உண்டு தான்!

      நீக்கு
    4. சீப்பை எல்லாம் "சீப்"பாக விடறதே இல்லை. அதுவும் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாங்கன்னா சீப்புக் கொண்டு வரலைனாக் கேட்பாங்களே! அதுக்குனு தனியாப் புதுச் சீப்பு 2.3 இருக்கும்/ ஆகவே சீப்புக்களின் ஏகபோகப் பாதுகாவலர் நான் தான் என்பதால் யாரோட சீப்பும் இடம் மாற வாய்ப்பில்லை. சீப்பு, சோப்பு, துண்டு இவை மாறுவதினால் ஏற்படும் பலாபலன்களை நிறைய அனுபவிச்சிருக்கேன் என்பதால் இதில் கவனம் அதிகமாகவே இருக்கும். யார் கேட்டாலும் என்னோட சீப்பை, துண்டை, சோப்பைக் கொடுக்கவே மாட்டேன்! :)

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  11. உளவியல் அறிஞர்கள் சொல்வது என்ன என்றால், வயது வந்தோர் மனோபாவத்தில் தகவல் அறிய கேட்கப்படும் கேள்விக்கு, தகவலைத் தருவதோ அல்லது தர இயலவில்லை என்றால், ஏன் இயலவில்லை என்ற விவரத்தைக் கூறினால், அங்கு சுமுகமான கருத்துப் பரிமாற்றம் நிகழும்.

    இல்லையேல் யாராவது ஒருவருக்கு hurt feeling ஏற்படும். //

    அதே அதே அதே!

    இந்த அனுபவங்கள் பல உண்டு! (ஆனா நான் சின்னக் குழந்தைதானாக்கும்!)

    சிறியவர்கள் கூட தகவல் அறிய கேட்கலாமே. குழந்தைகள் பல கேள்விகள் கேட்குமே ஆனால் பெரும்பாலான பெரியவர்கள் ஏன் ஆசிரியர்கள் உட்பட உனக்குத் தேவையில்லாதது இது, வேற வேலை இல்லை சும்ம தொண தொணனு என்றும் இல்லைனா இது கூடத் தெரியாதாக்கும் என்று சிலரும்...சர்க்காஸ்டிக்காகச் சிலரும்..சொல்வது வீட்டில் என்றால் ஆசிரியர்கள் இதெல்லாம் பின்னாடி படிப்ப இப்ப உக்காரு என்றும் சொல்வதுண்டே.

    யார் கேட்டாலும் நீங்கள் சொல்லியிருக்கும் பதில் தான் சுமூகமாகச் செல்லும் என்றும் உண்டல்லவா உளவியலில் சரியா அண்ணா.?

    இன்று நிறைய பேசுவதற்கான மேட்டர் நீங்கள் கொடுத்திருப்பது...வரப் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சிறியவர்கள் கூட தகவல் அறிய கேட்கலாமே. குழந்தைகள் பல கேள்விகள் கேட்குமே// இது பற்றிய விளக்கம் அடுத்த புதன் பார்ப்போம்.

      நீக்கு
    2. எங்க பையரோட"ஏன்"கேள்விக்குப் பதில் சொல்லவேண்டியே நிறையப் படித்துத் தெரிந்து கொண்டேன்.

      நீக்கு
    3. கீதாக்கா அதே நானும் என் மகன் கேட்ட கேள்விகளுக்காகவும் அவனுக்காகவும் நிறைய படித்துத் தெரிந்து கொண்டேன்

      கௌ அண்ணா நானும் சி க்குத்தான் அதைத்தான் நான் என் மகனுக்கும் சொல்லியது.

      கீதா

      நீக்கு
    4. அம்மா மகன் உரையாடல்கள் எல்லாமே எப்பவும் சுமுகமாகத்தான் நடக்கும். க மு காலங்களில். (க மு = மகன் கல்யாணத்திற்கு முன். )

      நீக்கு
    5. எங்க பையர் எப்போவுமே சுமுகமாய்த் தான் பேசுவார். நாங்க ஏமாந்துட்டோம்னு அவர் நினைக்கும்வரை! அது மட்டும் தெரிஞ்சதோ!எங்களைக் காய்ச்சி எடுத்துடுவார். :)))) எப்படி ஏமாந்தீங்கனு! ஒரு தரம் நீ வந்து பக்கத்திலே இருந்து எல்லாம் செய்து கொடுப்பா என்று சொன்னோம். வந்துட்டு இங்கே அரசு அலுவலகங்களில் வேலைகள் முடிக்கப் படை எடுக்க வேண்டி இருந்ததைப் பார்த்துட்டு வெறுத்துப் போயிட்டார். ஒரு வங்கிக்கணக்கை மாற்றச் சென்னையிலே அலைய வேண்டி இருந்தது. அப்புறமாப் புரிந்து கொண்டார். ஆகவே எப்போப் பேசினாலும் அடிப்படையைப் புரிஞ்சுக்கணும். புரிந்து விட்டால் சுமுகமாகவே இருக்கின்றன.

      நீக்கு
  12. அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே, வெற்றிலை பாக்குக் கடையிலே... //

    பொம்மை கல்யாண செய்து விளையாடும் போது பாடும் பாடல்.

    கீதா ரங்கன் கேள்வியும் பேயார் பதில்களும் நன்றாக இருந்தது ரசித்து படித்தேன்.

    // காற்றிலே குளிப்போம். பேயோபால் பல்பொடி. பேயோரியா பல்பொடியும் கோபால் பல்பொடியும் சமபங்கு சேர்த்து தயாரித்தது. //
    இந்த பதில் சிரிக்க வைத்து விட்டது.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காற்றிலே குளிப்போம். பேயோபால் பல்பொடி. பேயோரியா பல்பொடியும் கோபால் பல்பொடியும் சமபங்கு சேர்த்து தயாரித்தது. //
      இந்த பதில் சிரிக்க வைத்து விட்டது.

      நந்தி, நந்தி! ��

      நீக்கு
    2. அது என்ன நட்பேயாரே? நந்தியைக் கூப்பிட்டிருக்கீங்க? பூத கணத்தைக் கூப்பிட்டிருந்தால் கொஞ்சமானும் ஒத்துப் போயிருக்குமே! போகட்டும். பேயோபால் பல்பொடி கடைகளில் சுலபமாக்கிடைக்குதா?

      நீங்க காலம்பர எழுந்ததும் காஃபி குடிக்கும் பழக்கம் உண்டா?

      ஆண், பெண் பேய்கள் உண்டு தானே? உங்களுக்குள் வித்தியாசம் உண்டா? இல்லைனா அங்கேயும் பெண் பேய்கள் சமத்துவம் பேசும் பேய்களா?
      உங்களுக்குள் தலைவர்கள், சங்கம் இதெல்லாம் உண்டா?

      தலைவர் சொல்வதைத் தான் கேட்கணும்னு கட்டுப்பாடு உண்டா? சுதந்திரமாக அலைந்து கொண்டு இஷ்டத்துக்கு எங்கே வேண்டுமானாலும் போய்க் கொண்டு இருப்பீங்களா?

      உங்களை வைச்சு நெடுந்தொடர்கள் எடுக்கிறாங்களே அவங்களைப் பத்தி என்ன நினைக்கறீங்க?

      நெடுந்தொடர்ப் பேய்கள் எல்லாம் உங்களைப்போல் தான் இருக்கா? நடவடிக்கைகள், உருவங்கள் போன்றவற்றிலும், பழி வாங்குதலிலும்!
      அதென்ன பேயாய் ஆகித் தான் பழி வாங்கணும்னு இருக்கீங்க? இல்லைனா பழி வாங்கக் கூடாதுனு சட்டமா?

      பழிவாங்காமல் நல்ல பேய்களாக இருக்கக் கூடாதா? நல்ல பேய்கள், சமர்த்துப் பேய்கள் இருக்கு தானே?

      நீக்கு
    3. பேயார் பதில்கள் அனுப்பினால் பார்ப்போம்! நேற்று அமாவாசை என்பதால், பேய்கள் எல்லாமே பயங்கர பிசி.

      நீக்கு
    4. முக்கியமான கேள்வியை விட்டுட்டேன். நீங்க பேயாகறதுக்கு முந்தி ஆணா, பெண்ணா? ஆணாக இருந்தால் உங்க மனைவியோ, பெண்ணாக இருந்தால் உங்க கணவரோ இப்போப் பேயாக இருக்காங்களா? அவங்களை உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சுக்க முடியுமா? இப்போவும் அங்கே பேயுலகிலும் சேர்ந்து டூயட் பாடிட்டு இருக்கீங்களா? இல்லைனா மனைவி பேய் கணவன் பேயைக் கண்டும், கணவன் பேய் மனைவி பேயைக் கண்டும் ஒளிஞ்சுக்கறீங்களா?

      பேயுலகிலும் வெள்ளைப்புடைவை கட்டிக்கொள்ளும் பெண் பேய்கள், கொலுசு போடும் பெண் பேய்கள் அவற்றை வாங்கித் தந்தேஆகணும்னு கணவன் பேய்களைத் தொந்திரவு செய்யுதுங்களா?

      இன்னும் ஜந்தேகமெல்லாம் வரும் போல இருக்கு. சாயந்திரத்துக்குள்ளே கேட்டுடறேன். ஏழு மணி ஆச்சுன்னா பேயார் வர நேரம் ஆயிடுமே! அப்போ நான் பதிவுக்கெல்லாம் வர மாட்டேன்.

      நீக்கு
    5. //பேயார் பதில்கள் அனுப்பினால் பார்ப்போம்! நேற்று அமாவாசை என்பதால், பேய்கள் எல்லாமே பயங்கர பிசி.//

      ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ கௌ அண்ணா சிரித்து முடில!! அதான் நெத்தும் எபில துரை அண்ணா கதைல எட்டிப் பார்த்துட்டுப் போயிடுச்சு போல!!!!

      கீதா

      நீக்கு
    6. இரசிப்புக்கு நன்றி!

      நீக்கு
  13. //குழாயிலிருந்து சொ ட்டியது ரத்தம்....' இப்படிப்பட்ட கதைகளை படித்து அல்லது கேட்டு பயந்திருக்கிறீர்களா?//

    பானுமதி அவர்களின் கேள்விக்கு உங்கள் பதில் உங்கள் அம்மா கதை படித்து பயந்த அனுபவ பதில் அருமை.

    //ஒன்றே ஒன்றுதான் சுமுகமாகத் தொடர்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. (எது?) //

    தாய், மகன் ஒன்று தான் சுமுகமாய் தொடர்ந்து இருக்கும்.
    மற்றவை வாக்குவாதங்களில் வந்து முடியும்.

    //அம்மா : " ஆமாம் - இங்கே எல்லோருக்கும் பால்யம் திரும்பி, உங்களோட விளையாடறதுக்குத்தான் சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கிறோமாக்கும்//

    நல்ல பதில்

    நகைச்சுவை உணர்வு உடைய அம்மா போலும் ! அவரும் நகைச்சுவை உணர்வு உடையவர் என்றால் சிரித்து கடந்து போவார்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தாய், மகன் ஒன்று தான் சுமுகமாய் தொடர்ந்து இருக்கும்.
      மற்றவை வாக்குவாதங்களில் வந்து முடியும்.// கரெக்ட்.

      நீக்கு
    2. // நகைச்சுவை உணர்வு உடைய அம்மா போலும் ! அவரும் நகைச்சுவை உணர்வு உடையவர் என்றால் சிரித்து கடந்து போவார்.// உண்மைதான். இருவரும் குழந்தை மனோபாவத்தில் இருந்து உரையாடல் நிகழ்ந்தால், சுமுகமாக கடந்திருக்கும்.

      நீக்கு
    3. நம்ம ரங்க்ஸிடம் நான் அப்படிச் சொல்லுவேன். ஹிஹிஹி, வழுக்கைத் தலை என்பதால் அவருக்கும் சிரிப்பு வந்துடும். :)))))

      நீக்கு
  14. //எந்தக் காலத்தில் இப்படி எல்லாம் நடந்திருக்கு! // - திருமணச் செலவுகள் கடுமையாக ஆனது கடந்த நூறு ஆண்டுகளில்தான். சமூக விரோதிகள் இப்போது, திருமணத்தை அளவுக்கு அதிகமான டாம்பீகமாக நிகழ்த்துகிறார்கள்.

    சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
    சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி

    என்பது இவர்களைப் பார்த்துத்தான் பாடிய பாடல்.

    பதிலளிநீக்கு
  15. //இப்படிப்பட்ட கதைகளை படித்து அல்லது கேட்டு பயந்திருக்கிறீர்களா?// - சொன்னா நம்பமாட்டீங்க. சில நாட்களுக்கு முன்பு காஞ்சரிங்2 படத்தை ஃபாஸ்ட்ஃபார்வேர்ட் பண்ணிப் பண்ணிப் பார்த்தேன். அன்றிலிருந்து என் அறைக்கு வெளியே இருக்கும் பாத்ரூம் கதவு அவ்வப்போது படபடவென அடித்துக்கொள்கிறது. ஏதேனும் காற்று காரணமாயிருக்கும் என்றாலும், இது அந்தப் படத்தைப் பார்த்ததற்குப் பிறகுதான் நடக்கிறது...ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தை அடுத்த தடவைப் பார்க்கும்போது slow motion ல பாருங்க. அப்போ பாத் ரூம் கதவு 'மெல்லத் திறந்தது கதவு ' ஆகிவிடுமா பார்ப்போம்.

      நீக்கு
  16. //நஹி நஹி நஹி நஹி கபி நஹி. // - இந்த ஊரில் இருந்தாலும், உங்களுக்கு 'தமிழ்ப் பேய்' கிட்டவில்லையா? ஹிந்தி பேய்தானா? பேயிலும் ஹிந்தித் திணிப்பு செய்கிறவரை எப்படி கண்டனம் செய்வது? யாராவது சொல்லுங்களேன்...ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ ! இது இந்தி மொழியா ! எனக்கு இந்தித் தெரியாது. பேய்க்கு எல்லா பாஷையும் தெரியும் என்று சொல்வார்கள்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹ நெல்லை காலைல பேய் ஹிந்தி மீடியம் படிச்ச பேய் போலனு சொல்ல நினைச்சுப் போட்டேன்...

      கீதா

      நீக்கு
  17. சிறுவன், அம்மா கேள்வி பதில் தவிர மற்ற உரையாடல்கள் abruptஆக நின்றிருக்காதோ?

    //" அதெல்லாம் ரொம்ப விலை அதிகம் சார். நீங்க வாங்க மாட்டீங்க."// - நான் +1 படித்துக்கொண்டிருந்தபோது என் உறவினருடன் நாகர்கோவில்-திருவனந்தபுரம் பகல் இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். உறவினர் மிக மிக ஆச்சாரம். அப்போ கடலைமிட்டாய் விற்றுக்கொண்டு ஒருவர் வந்துகொண்டிருந்தார். ஒவ்வொரு பெட்டியிலும் (அதாவது 3+3 உட்காரும் சீட்டுகள் கொண்ட இடம்), 'மிட்டேய்..கடலைமிட்டேய்' என்று நாராசமாக ஒரே ராகத்தில் குரல் கொடுத்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார். எங்கள் பெட்டிக்கு வரும்போதே, நான் உடனே 'மிட்டாய் வேண்டாம்' என்று சொல்லிவிட்டேன். (குரல் கொடுக்குமுன்). அவருக்கு வந்ததே கோபம்..'உங்களைப் பாத்தா காசு கொடுத்து வாங்கற மாதிரியா இருக்கு. நான் மிட்டாய் உன்னை வாங்கச் சொன்னேனா' என்று கோபத்துடன் கேட்டார். அதை நினைவுபடுத்திவிட்டது.

    பதில் சொல்பவர்கள் எல்லோரும் ரவுடிகளாகத் தெரிகிறார்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரங்கநாதன் தெரு நடைபாதை காய்கறி வியாபாரிகளும் சிலர் இப்படித்தான். rough and tough ஆக பதில் கூறுவார்கள்!

      நீக்கு
    2. அங்கே முதலும் கடைசியுமாகப்பொருட்கள் வாங்கினது நான் கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைக்கும்போது பழைய ரத்னா ஸ்டோர்ஸில்! அப்போல்லாம் இத்தனை கூட்டம் ரங்கநாதன் தெருவில் இருக்காது. காய்கள் வாங்கறதுன்னா ஸ்டேஷனை ஒட்டிப் போட்டிருக்கும் கடைகளில் வாங்கலாம். தராசு இருக்கும். ஆனால் அங்கேயும் அடியில் ஏதோ ஒட்டி இருப்பாங்கனு எல்லோரும் சொல்வாங்க. முக்கியமா என் சித்தி, சித்தப்பா இருவரும் அம்பத்தூரில் கறிகாய்களின் தரம், விலை, எடை இவற்றைப் பார்த்துட்டு தி.நகரில் ஏமாற்று வேலை என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொள்வார்கள். இதுக்காகவே என் மைத்துனர் நீல்கிரிஸில் மட்டும் வாங்குவார் விலை அதிகம் ஆனாலும்!

      நீக்கு
  18. பேய்கலாய்த்தல் ரசிக்க வைத்தன...

    பதிலளிநீக்கு
  19. வாழ்வியல் பறிமாற்றங்கள் என்னு தலைப்பில் I AM OK YUO ARE OK என்னும் புத்தகத்தின் சாராம்சத்தை எழுதி இருந்தேன்

    பதிலளிநீக்கு
  20. அம்மா மகன் உறவுதான் தொடர்ந்திருக்கும்.

    பேயார் பதில் ரசனை.

    பதிலளிநீக்கு
  21. PAC : Problem, Adjustment, Complication - என நினைத்தேன்..

    பதிலளிநீக்கு
  22. கீதாவின் கேள்விகளுக்கு பேயாரின் பதில்கள் பிரமாதம்.
    அது சரி, கீதா அக்கா என்ன பேர்களிடம் மட்டும்தான் கேள்வி கேட்பாரா? கேள்விகளாக கொட்டுகிறதே?

    பதிலளிநீக்கு
  23. கீதாவின் கேள்விகளுக்கு பேயாரின் பதில்கள் பிரமாதம்.
    அது சரி, கீதா அக்கா என்ன பேயார்களிடம் மட்டும்தான் கேள்வி கேட்பாரா? கேள்விகளாக கொட்டுகிறதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, பானுமதி, பேயார் என்றாலே சுவாரசியம் தானே! ஜாலியா விளையாட முடியுமே!

      நீக்கு
  24. இப்போதுதான் 'I am OK , you are OK' படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்தேன். உங்களின் மொழி பெயர்ப்பை படித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் மாலை வணக்கம். இது பேயார் வாரமாகிவிட்டதே.

      என்ன சத்தா கீதாவுக்குப் பதில் சொல்கிறார் இவர். ஹஹஹஹஹா.

      பொதுவாகத் திருமணங்களுக்கு ஒரு ரூல் வரவேண்டும். இப்படிக் கும்மாளம் அடித்து
      லட்சங்களைக் கோடிகளைக் கொட்டினால்
      இன்கம் டாக்ஸ் பாயும் என்று சட்டம் போட வேண்டும்.

      வெகு சுவாரஸ்யம் இந்த வாரம் .

      நீக்கு
    2. // இப்போதுதான் 'I am OK , you are OK' படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்தேன். உங்களின் மொழி பெயர்ப்பை படித்து விடுகிறேன்// நான் சொல்லப்போவது அந்தப் புத்தகத்தின் சாராம்சமாக நான் தெரிந்துகொண்டதை மட்டுமே. மொழி பெயர்ப்பு அல்ல!

      நீக்கு
    3. // பொதுவாகத் திருமணங்களுக்கு ஒரு ரூல் வரவேண்டும். இப்படிக் கும்மாளம் அடித்து
      லட்சங்களைக் கோடிகளைக் கொட்டினால்
      இன்கம் டாக்ஸ் பாயும் என்று சட்டம் போட வேண்டும்.

      வெகு சுவாரஸ்யம் இந்த வாரம் .//
      நன்றி வல்லிசிம்ஹன் மேடம்!

      நீக்கு
    4. எல்லாமே சூப்பர் கௌ அண்ணா.

      பேயார்களிடம் கேட்டுச் சொல்லுங்க அவர்கள் சொசைட்டிலயும் ஈவ் டீசிங்க் உண்டா?

      கோபம், பொறாமை எல்லாம் உண்டஆ?

      அவர்களுக்குள்ளும் பங்காளிச் சண்டை உண்டா? இல்லைனா இங்குள்ள பங்காளிகளிடம் குடிகொண்டு பயமுறுத்துவாங்களஆ?

      கீதா

      நீக்கு
    5. பேயாரே பதில் அனுப்புவீர்களா?

      நீக்கு
    6. i AM OK YOU ARE OK ன்னும் புத்தகத்தின் சாராம்சம்வாழ்வியல் பரிமாற்றங்கள் என்னும்பதிவில் நானெழுதியது சுட்டி இதோ https://gmbat1649.blogspot.com/2011/03/blog-post_20.html

      நீக்கு
    7. சமீபத்தில் ஒரு தொழிலதிபரின் வீட்டுத் திருமணத்தில் வெள்ளிப் பலகையில் தங்கத்தட்டுப் போட்டு விருந்தினர்களுக்குச் சாப்பாடு போட்டாங்களாம். ஒவ்வொருவர் எதிரேயும் ஒரு பெண்மணி வந்து ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைக்கிறாள். பக்கத்தில் இன்னொருவர் ஒவ்வொரு விருந்தினருக்கும் ஓர் தங்கச் சங்கிலி அன்பளிப்பாகக் கொடுக்கிறார். அப்படின்னா மொய் எம்புட்டு எழுதி இருப்பாங்க??????????????? மயக்கமே வந்துடுச்சு!

      நீக்கு
    8. விருந்தினர் உபசரிப்பு, மொய்யைப் பொருத்து அமைந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இவ்வளவு படாடோப திருமணம் செய்பவர்கள் மொய் எல்லாம் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

      நீக்கு
    9. ம்ம்ம்ம்ம்??? இப்போ வேணா அப்படி இருக்கோ என்னமோ! எனக்குத் தெரிந்து என் புக்ககத்தில் எங்க கல்யாணத்தின்போது அதன் பின்னர் எல்லாம் வீட்டுக் கல்யாணங்கள், உபநயனம், ஶ்ரீமந்தம் ஆகியவற்றுக்கு அவங்க எவ்வளவு பணம் போட்டாங்க என்பதைத் தெரிந்து கொண்டே அதற்கேற்றாற்போல் பதிலுக்கு வைச்சுக் கொடுப்பாங்க! இதை எண்பதுகள் வரை பார்த்திருக்கேன். அதன் பின்னரே சூறாவளி போல் வந்தது ஆடம்பரங்கள் அனைத்தும். கல்யாணத்துக்கு 100 ரூ மொய் எழுதினவருக்கு 25 ரூதிரும்பக் கொடுப்பார்கள். பத்து ரூபாய் கொடுத்தால் ஒரு ரூபாய் வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். :))))

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!