வியாழன், 25 ஜூலை, 2019

கட்டில் சாம்ராஜ்யம்



காசியில் விஸ்வநாதர் ஆலயமா, காலபைரவர் ஆலயமா என்று நினைவில்லை.  அங்கு நைஸாய் செல் எடுத்து ஒரு போட்டோ எடுத்திருந்தேன்.  நடுவே அமைந்திருந்த லிங்க வடிவத்துக்கு 'சாமியார்' (பண்டிட்) போல ஒருவர் அமர்ந்து அபிஷேகம், பூஜை செய்து கொண்டிருந்தார்.  அந்த இடத்தைப் புகைப்படம் எடுத்திருந்தேன். என்ன ஆச்சு என்று தெரியவில்லை.  காணோம்!  அதுபோல் வேறு சில .இடங்களும்...!

காலபைரவர் சன்னதியில் சுற்றிலும் கடைகள் போன்றவற்றில் அமர்ந்திருந்த பண்டாக்கள் பைரவாஷ்டகம் சொல்லிக்கொண்டே தலையை தலையை ஆட்டிக்கொண்டே, ஒரு குச்சியால் நம் தோளில் தட்டிக்கொண்டே சொல்லி விட்டு ஒரு கயிறு, அல்லது கருப்பு வளையம் ஒன்றை கையில் கட்டி விடுகிறார்கள்.  நானும் கடமையை செவ்வனே முடித்துக் கொண்டேன்.  பத்து ரூபாய், இருபது ரூபாய்!  இங்கும் அப்புறம் செட்டியார் கடையிலும் கொஞ்சம் காசிக்கு கறுப்புக் கயிறு வாங்கி கொண்டேன் - நண்பர்களுக்குக்கொடுக்க.


முதல் நாள் கங்கையில் நீராடக் கிளம்பும் முன் நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் அருகே எங்களைக் குழுமச் செய்து கங்கை பற்றி உணர்ச்சிகரமாக உரை நிகழ்த்தினார் ரமேஷ் ஜம்புநாதன்.  அவர் சொல்வதை செல்லில் ரெகார்ட் செய்து கொண்டிருந்தேன்.  நன்றாய் இருந்தது கேட்க.  முடித்துப் பார்த்தால் ரெகார்ட் ஆகவே இல்லை.  அப்புறம் சங்கர மடம் கோவிலில் அமர்ந்து கொஞ்சம் உரை நிகழ்த்தினார் அவர்.  அவரிடம் கங்கை விஷயத்தைச் சொல்லி மறுபடி சொல்ல முடியுமா என்று கேட்டேன். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் ரவிச்சந்திரனிடம் வந்து 'ஸம்திங் வொண்டர்ஃபுல்...  ஹலோ...  ஸம்திங் வொண்டர்ஃபுல்..." என்று சொல்லி கதை எழுத கேட்பாரே...   அதுபோல...

அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தை சிபாரிசு செய்தார்.  நட்பழைப்பு அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன்.  இன்றுவரை அவர் அதை ஏற்கவில்லை.  எனினும் அவர் பற்றிய செய்திகள் அவ்வப்போது பேஸ்புக்கில் வரும். இங்குதான் முதல்முறையாக காலில் இடித்துக் கொண்டேன்.  கோவில்கள் சுற்றும் போதெல்லாம் செம வலி!  வலிமாத்திரை டபுள் டோஸ் போட்டும் வலி இருந்தது.  கோவில்கள் சுற்றும் வழியில் எவ்வளவு கவனமாக இருந்தும் மூன்று நான்கு முறை  மறுபடி மறுபடி இடித்துக் கொண்டேன்.  என்ன பாவத்துக்கு தண்டனையோ!

கங்கையில் படகில் செல்லும்போது முன்னால் அமர்ந்து செல்ஃபி ஸ்டிக் வைத்து தனது கேமிராவில் படம் பிடித்துக்கொண்டே வந்தார் ரமேஷ் ஜம்புநாதன்.   பேஸ்புக்கில் லைவ் விட்டிருப்பார்.  எங்களிடம் உரை நிகழ்த்துவது போல அவர் பேசும் போது எங்களில் யாராவது செல்லில் பேசிக் கொண்டிருந்தால் அவருக்கு கோபம் வரும்.  பேச்சை நிறுத்தி விட்டு முறைப்பார். 

''ஸ்ராத்தம் என்கிற வார்த்தையே சிரத்தை என்கிற அர்த்தத்தில்தான் வருகிறது.  சிரத்தை இல்லாதவர்கள், போன் தான் முக்கியம் என்று நினைப்பவர்கள் வெளியில் சென்று பேசுங்கள்'' என்றார் ஒருமுறை.

அலஹாபாத் கங்கையில் பிடித்த நீரை இங்கிருக்கும் புகழ்பெற்ற பழமையான செட்டியார் கடையில் 'பேக்' செய்யக் கொடுத்தோம்.  பாலாஜி எங்களை குழுக்குழுவாக அங்கு அழைத்துச் சென்று 'சூ' காட்டிவிட்டுச் சென்றார்.  முப்பது ரூபாய், ஐம்பது ரூபாய்,  நூறு ரூபாய் என்று சைஸ் வாரியாக சொம்புகள் உள்ளன.  இரண்டு ஆப்ஷன்ஸ்...   ஒன்று நீங்களே பிடித்துக்கொண்டு போயிருக்கும் தண்ணீரை நீங்கள் செலெக்ட் செய்யும் சொம்புகளில் அடைத்துக் கொடுப்பார்கள்.  நீங்கள் கொண்டு போன தண்ணீரை(தான்) அவர்கள் சொம்பில் அடைத்துக் கொடுக்கிறார்கள் என்கிற நம்பிக்கை முக்கியம்.  இரண்டாவது ஆப்ஷன் அங்கேயே அதே சைஸ்களில் ரெடிமேடாகவும் கிடைக்கும்.  விலை ஒன்றுதான்.  அங்கு மேலும் ஏராளமாக கிடைக்கும் பூஜைப் பாத்திரங்கள், விஷ்ணுபாதம், ராமர்பாதம், சின்ன விக்ரகங்கள் என்று அங்கே கிடைக்காதவைகளே இல்லை.  உள்ளே போட்டோ எடுக்காமல் போனேன்!

இதெல்லாம் ஏப்ரல் பனிரெண்டாம் தேதி நடைபெற்ற சம்பவங்கள். அன்று பிற்பகல் உணவு தேங்காய் போடாத அவரை பொரியல், வெண்டை (மர) சாம்பார், ஏதோ ஒரு காய் போட்டு கூட்டு, ரசம், மோர்.  இங்கு கோவில் விஷயங்களில் மனம் ஈடுபடமுடியாத வகையில் சென்னையில் ஒரு சொந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருந்தது.  இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.  கால்வலி, மனவலி இணைந்து படுத்திய நாள். 

மாலை கோவில் வேலைகள், கடை வேலைகள் முடிந்தபின் ஏழுமணி வாக்கில் கயா நோக்கிக் கிளம்பினோம்.  புத்தகயாவை அடைந்தபொழுது இரவு ஒருமணி.  அதாவது பதிமூன்றாம் தேதி காலை ஒருமணி.  கயாவில் தங்குவதாய் இருந்தது. ஆனால் ஏதோ காரணங்களால் அங்கு இடம் இல்லையோ, வேறு ஏதோ அசௌகர்யமோ நேராய் புத்தகயா சென்று விட்டோம்.  தங்கியிருந்த இடம் சுற்றிலும் வயல்வெளி போல இருந்த இடத்துக்கு நடுவே அமைந்திருந்த ஒரு தங்குமிடம்.  ஒரே கொசு!

காசியிலும் சரி, இங்கும் சரி...   லிப்டில் இத்தனை பேர்கள்தான் (240 கிலோ) பயணிக்கலாம் என்று அறிவிப்பு போட்டிருந்ததோடு ரிசப்ஷனில் வலியுறுத்திய படியே இருந்தார்கள்.  ஆனால் நம் மக்கள் உள்ளே அமுக்கி அமுக்கி அடைந்து பயணித்துத் திட்டு வாங்கிக்கொண்டிருந்தார்கள்.  போத்கயாவில் லிப்டில் இந்தக் கண்டிஷன் மீறப்படாமலிருக்க சுமார் ஒரு பதினைந்து வயது சிறுவன் சரியாய் மூன்று பேர்களை மட்டும் ஏற்றிக்கொண்டு ஏற்றி, இறக்கிக் கொண்டிருந்தான்!

கயாவில் ஸ்ராத்தம் செய்யக் கிளம்பும் முன் எங்களை ஒன்று கூட்டி ரமேஷ் ஜம்புநாதன் பேசினார்....  அவர் பேசியது முடிந்தவரை அப்படியே கீழே தருகிறேன்...

"கங்கைல கோவில் பார்த்துக்கொண்டே போட்ல போகும்போது  மணிகர்ணிகா காட் பக்கத்துல ஒரு ஒரு கோவில் இருந்தது பார்த்தீர்களா?  அது ஏன் அப்படி சாஞ்ச நிலைல இருக்குன்னு தோன்றியதா?  தண்ணியில் உள்வாங்கின கோவிலை எத்தனை பேர் பார்த்தீர்கள்?அம்மாவின் பெத்த கடனை அம்பாளுக்கு கோவில் கட்டித் தீர்க்கிறேன் என்று ஒரு ராஜா சொல்லி இந்தக் கோவிலைக் கட்டினான்.  பெத்த கடனுக்காக கோவிலைக் கட்டறேன்னான்...  கோவில் நிற்கவில்லை.  (பூமி) உள்வாங்கி விட்டது.  

அம்மாவோட பெத்த கடனை நம்மால தீர்க்க முடியுமா?  பத்து மாசம் நம்மைச் சுமந்திருக்கா அம்மா.  அப்பாவால் நாம் பொறந்திருக்கோம்...    அம்மாவோட கடனை நம்மால் தீர்க்க முடியாது.  அம்மாவோட கடனை நம்மால் தீர்க்கக் கூடிய இடம் கயா.   நம்மோட அம்மாவுக்கோ அப்பாவுக்கோ எதனால திருப்தி ஏற்படறதுன்னா இங்கே கொடுக்கும் கயா ஸ்ராத்தத்தில்தான்.  நம்மளோட வாழ்க்கைல ஒரே ஒருமுறைதான் ஸ்ராத்தம்  திதி கொடுக்கலாம்னா அது கயா.  உங்க வீட்டுல வருஷா வருஷம் திதி பண்ணும்போது உங்க வீட்டுல ஸ்ராத்தம் பண்ணி வைக்கக்கூடிய வாத்தியார் வடக்குப் பக்கமாக நாலு அடி நகருங்கள்.  கயா கயா கயா என்று ஏழு முறை சொல்லுங்கள்...   அங்கே இருக்கும் அட்சயவடத்தை ஞாபகபபடுத்திக் கொள்ளுங்கள் என்பார். 

ஸ்ராத்தம் முடிந்ததும் ரெண்டு அட்சதையைப்போடுவார்...  'கயா ஸ்ராத்தம் முடிந்தது'ன்னு...  'நீங்கள் கயால பண்ணின ஸ்ராத்தம் மாதிரி ஆகட்டும் இது' என்பார்.  மற்ற இடங்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் செய்வது தீர்த்த ஸ்ராத்தம்.  இங்கு நீங்கள் செய்வது கயா ஸ்ராத்தம்.  

சமஸ்க்ருதத்துல கர்மசாஸ்திரத்துல சொல்லப்படுகிறது...   ஜீவதோர் வாக்ய கரணாது; ப்ராத்யாப்தம் பூரி போஜணாது ;  கயாயாம் பிண்ட தாணாது ;  த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய...  

ஒரு புத்திரனின் தலையாய கடமை என்ன என்றால் அப்பா அம்மா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி கேட்டு அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும்.  அவர்கள் காலமானபின் அவர்கள் மறைந்த திதியில் திதிகொடுத்து அவர்கள் பசியைப் போக்கவேண்டும்.  அவர்கள் பசியைப் போக்கத் தேவை எள்ளும் தண்ணீரும்தான்.  வேறு என்ன வேண்டும்?  

வாழ்வில் ஒருமுறையாவது கயா சென்று அங்கு பிண்டதானம் செய்யவேண்டும்.  அப்படி பிண்டம் கொடுத்து பெற்றவர்களை "புத்" என்ற நரகத்திலிருந்து காப்பவன்தான் புத்ரன்.  பெண்ணாயிருந்தாலும் சரி, பிள்ளையாயிருந்தாலும் சரி, இந்த மூன்றும் அவர்கள் கடமை.  தாங்கள் பிறந்தகுலத்தை முன்னோர்களை கடைத்தேற்றுவதற்கு கயாவில் பிண்டம் இடவேண்டும்.  தயவுசெய்து சிரித்துக்கொண்டோ, வேடிக்கை பார்த்துக்கொண்டோ, கேளிக்கையாகவோ புத்தகயாவில் வேலை கிடையாது. 

மேலிருந்து ஆகாயப் பார்வையாகப் பார்த்தால் பிண்டம் பிடித்து வைக்கிறோமே, அந்த மாதிரி இந்த பூமியிருக்கும்.  இது பிண்டபூமி என்று பெயர்.  அட்சயவடம், இந்த விருட்சம்  புத்தருக்கு ஒரு ஞானத்தைக்கொடுத்தது.  கயாவில் உள்ள எல்லா மரமுமே அட்சய வடம்தான்.  தனியா இதுதான் அட்சயவடம் என்று கிடையாது.  யாருக்கு அவர்கள் மனசோட அலைவரிசை உள்ளே ஒத்துப்போகிறதோ எல்லாம் அட்சயவடமே...

கயாசுரன் என்னும் அரக்கனின் ஜென்மபூமி இது...  வள்ளுவர் சொல்றார்...  தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு  ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.   

அத்தியாபனம் பிரம்ம யக்ஞஹா பித்ரு  யக்ஞஸ்ஸு தர்ப்பணம் கோமோ தெய்வோ பலிர் பூதோ ப்ரியதோ மனு பூஜனம்னு மனு சொல்லியிருக்கிறார்.  அத்யாபனம், ப்ரம்ம யக்ஞம், பூத யக்ஞம், பவிஷயக்ஞம் பித்ரு யக்ஞம்...   இதில் பித்ரு யக்ஞத்திற்கு உண்டான இடம் கயா.  இங்கே அம்மா...    நாம் பிறக்கும்போது நம் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாள் தெரியுமா?  அம்மாமேல் பிரியம் உள்ளவர்கள் இதை நினைக்கவேண்டும்.  உங்கள் பித்ருக்கள் இங்கே இருக்கிறார்கள்.  உங்கள் ஜென்மத்தில் ஏழு தலைமுறையினர் பண்ணிய புண்ணியம் இருந்தால் கயாவில் வந்து இரண்டு எள்ளும் தண்ணீரும் விட்டு அவர்களை முக்தாரணம் அடையச் செய்ய முடியும்.  அவர்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் தலைகீழா தொங்கிக்கொண்டிருப்பார்கள் இங்கே அட்சயவடத்தில்....  நம் மகன் /மகள் இங்கு வருவார்கள் ஒரு வாய் சோறு கொடுப்பார்கள் என்று...

அம்மாவோட பேசின பேச்சோ, வார்த்தையோ, ரூபமோ செயலோ ஏதோ ஒன்றாவது மனசிலாடும்.  ஸ்ராத்தம் என்பதே ஸ்ரத்தைதான்.  அப்படிச் செய்தால் இதில் ஒன்றாவது பிரத்யட்சமாய்க் கிடைக்கும். ஸ்வாமி கும்பிடுவது இரண்டாம் பட்சம்.  திதி கொடுப்பதுதான் இலக்கு...  முதல் இலக்கு.  எவ்வளவுக்கெவ்வளவு ஸ்ரத்தையாய் செய்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்கள் அம்மா அப்பாவை நீங்கள் பார்க்கலாம்.  அம்மா வயிற்றில் கரு உண்டாவதற்கு முன் பட்ட கஷ்டம் தொடங்கி பதினாறு பிண்டம் பல்குணியில் அம்மாவுக்கு வைக்கவேண்டும்.  

மாத்ரு ஷோடசி  (லிங்க் க்ளிக் செய்து சென்றால் அந்தப் பதினாறு ஸ்லோகங்களைப் படிக்கலாம்) என்று `சங்கரர் பண்ணியிருக்கார் (என்று இவர் சொன்னாலும் மாத்ரு பஞ்சகம் தான் சங்கரர் சொன்னது. ஷோடசி யார் அருளியது என்று சொல்லமுடியவில்லை) சாதி வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய இந்த 'மாத்ரு பிண்டம் ததாம்யஹம்' என்று சொல்லி இந்த பதினாறு பிண்டங்களை வாத்தியார் வைக்கச் சொல்வார்.  அம்மாவை நினைத்து சொல்லும் இந்தப்பதினாறு ஸ்லோகங்களுக்கும் தமிழ்ல அர்த்தம் சொல்வார் பாருங்கள்,  சத்தியமா  எல்லோரும் அழுதுடுவோம்.  அம்மாவுக்கு கோவில் கட்டவேண்டாம்....  கட்டிய கோவில் நிற்காமல் கங்கையில் சரிந்திருந்தது இல்லையா....  அது வேண்டாம்...  இங்கே பிண்டம் கொடுத்தால் போதும்.

இந்த க்ஷேத்திரத்தில் கயாசுரன் பெற்ற வரம் அவனை யாரெல்லாம் தொடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மோட்சம்.  சகல தீர்த்தங்களும் அவன் உடம்பில் வந்து விடுகிறது.  'தர்மக் கடமையாற்ற என்னை நியமித்தீர்கள்...  ஆனால் அதற்கெல்லாம் பயனில்லாமல் போனது' என்று தர்மர் விஷ்ணுவிடம் முறையிடுகிறார். 

இங்கு உத்தரவாகினியாய் ஓடும் பல்குணி நதியின் சிறப்பு வேறெங்கும் கிடையாது.  366 தீர்த்தம் பித்ரு தீர்த்தம் உட்பட, இந்த ஊரில் இருக்கிறது.  ப்ரம்மா, சரஸ்வதி, சாவித்ரிக்கு கோவில் .இருக்கிறது. சக்தி பீடம் இருக்கிறது. ப்ரம்மா கோவில் ஆயிரம் படிக்கட்டுகள் ஏறி மேலே போகணும்.  

விஷ்ணு ப்ரம்மாவைக் கூப்பிட்டு 'கயாசுரனிடம் அவன் உடம்பைக் கேட்டு அதில் ....   என்று சொல்லப்படும் அஸ்வமேத யாகம் பண்ண'ச் சொன்னார்.  அப்படியே பிரம்மாவும் செய்ததும், கயாசுரன் தலை ஆட,  விஷ்ணு தர்மராஜனை அழைத்து,  'மனிதர்கள் முக்தியடைய மரணத்துக்குப் பின் உன்னிடம் வரும்போது அவர்கள் செய்த பாவபுண்ணியங்களுக்கேற்ப ஒரு பட்டணத்துக்கு அழைத்துச்செல்வாயே  ரைவதம் என்னும் இடத்துக்கு அழைத்துச் செல்வாயே...  அங்கே ஒரு கல் இருக்கிறது...   அதை எடுத்துக்கொண்டு வந்து கொடு' என்று சொல்லி அந்தக்கல்லை கயாசுரன் தலையில் வைத்து அழுத்தினார்.  கயாசுரன் கால் ஆடியது.  உடனே விஷ்ணு தன் ஒரு பாதத்தை கயாசுரன் உடம்பில் வைத்து கதையால் அவன் தலையை அமுக்கினார்.  அப்போதுதான் கயாசுரன் முன்னர் சொன்னபடி வரம் வாங்குகிறான்.   யாரெல்லாம் முன்னோர்களை நினைக்கிறார்களோ..   அவர்களுக்கெல்லாம் முக்தி என்று விஷ்ணுவிடம் விண்ணப்பம் வைக்கிறான்.

இந்த க்ஷேத்திரத்தில் வந்து பித்ருக்களை நினைத்தால் பித்ரு லோகமாவது கிடைக்கிறது.  அந்த பித்ருக்கள்  நற்கதியடைகிறார்கள்.  அந்த விஷ்ணு பாதத்தில் 64 பிண்டம்.  மூன்று இடங்களில் அட்சயவடம்.  ப்ரயாக்,காசி, கயை.  

கயையின் அட்சயவடத்திற்கு உயரத்தில் ஏறிப் போவோம்.  அந்த இடத்தில் தலைகீழாக பித்ருக்கள் தொங்கி கொண்டிருக்கிறார்கள்.  அங்கேசென்று பிண்டம் போட்டு திருப்தி கேட்ட உடன் அவர்கள் அங்கிருந்து கிளம்பி உங்களுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்கள்.  

விஷ்ணு 'வேறு ஏதாவது வேண்டுமா' என்று கேட்டதும் கயாசுரன் தனது பெயரில் இந்த ஊர்  அழைக்கப்படவேண்டும் என்று கேட்கிறான். 

இரண்டு பாதங்களை வணங்குவது ராமர் பாதம்.  விஷ்ணுவின் வலது பாதத்தை   .அவர் பாதத்தில் சங்கு, சக்ரம், கதை, வில், சார்ங்கம், பத்மம் எல்லாம் இருக்கிறது.  

அதில்தான் தினமும் லட்சக்கணக்கான பேர்கள் பிண்டம் போடுகிறார்கள்.  இங்கு பிண்டம் விடாத நாள் இல்லை.  பிண்டம் போடப்படாத நாள் பிரளயம் ஏற்பட்டு உலகம் முடிந்துவிடும் என்பது நம்பிக்கை.  பகவான் அவன் மேல நின்று கதை வச்சானே...   அவன்தான் கதாதரன்.  பக்கத்தில் மகாவிஷ்ணு, இந்தப் பக்கம் லட்சுமி, ஒரே ஒரு சன்னதி விஷ்ணுபாதம்.  எதிர்த்த மாதிரி நீரே ஓடாத நதி.  ஏன் நீர் ஓடவில்லை?

இந்த ஊரில ராமபிரான் வந்து தங்கியிருக்கார்.  நாம் இதை ராமநவமி அன்று பேசுகிறோம்...  ராமர் இங்கு தங்கியிருக்கும் காலத்தில் வருகிறது அவர் தந்தைக்கான வருஷ திதி... ப்ரத்யாப்தீக ஸ்ரார்த்தம்.  காலையில் எழுந்துக்கறார் ராமன்.  ஒன்றுமே கிடைக்கவில்லை.

முன்னெல்லாம் இங்கு கள்வர் பயம் ஜாஸ்தி.  இந்தக் காலத்தில் போல சாலை வசதி இல்லை.  இப்பொழுதே மிகச் சின்ன சாலைதான் இருக்கிறது... 

நிறைய வருடங்களுக்கு முன் இங்கு ஐம்பது அறுபது பஸ்கள் வரும்வரை காத்திருந்து  ஒன்றாகத்தான் விடுவார்கள்.  அந்த பஸ்களில் போலீஸ்காரர் ஏறிவருவார்.  இல்லையானால் கள்வர் பயம் ஜாஸ்தி.  

வேறு வழிகிடையாது...   வறுமை.  இன்னமும் வறுமையின் கொடுமையில்தான் இந்த ஊரெல்லாம் இருந்து கொண்டிருக்கிறதே தவிர, அதிலிருந்து வெளியே வரமுடியவில்லை.   

இப்போது சில வருடங்களுக்கு முன்னரே அப்படி என்றால் ராமபிரான் காலத்தில்? ராமபிரான் காலையில் எழுந்து ஸ்ரார்த்தத்திற்கான காய்கறி உள்ளிட்ட பொருட்களைச் சேகரிக்க சென்று விடுகிறார்.  ஸ்ரார்த்த காலம் தாண்டிக் கொண்டிருக்கிறது.  ராமர் வரவில்லை.  சீதா தேவி கவலைப் படுகிறாள்.  உடனே தானே தொடங்கி பிண்டப்ரதானம் செய்யத் தொடங்குகிறாள்.  அப்போது  தசரத மகாராஜா நேரில் பிண்டம் வாங்க வருகிறார்.  சீதை பிண்டத்தை அவர் கையில் தரமுயல, கையில் தரவேண்டாம் என்று சொல்லி கீழே வைக்கச் சொல்கிறார் தசரதர்.  அதோடு தசரதர் சீதையிடம், "நீ பிண்டம் கொடுத்ததற்கு சாட்சி வைத்துக்கொள்" என்கிறார்.

ராமபிரான் வருகிறார்.  "எல்லாம்  ஆச்சு,கொடுத்தாச்சு" என்கிறாள் சீதை.  "நான் எப்படி நம்புவது?" என்று கேட்கிறார் ராமன்.  "சாட்சி வைத்திருக்கிறேன்.  இந்த பசுமாடு இருக்கிறது....  தீர்த்தம் இருக்கிறது....  அதோ திதி செய்துவைத்த அந்த பிராமணர் இருக்கிறார்...  கேட்டுப்பாருங்கள்" என்கிறாள் சீதை.

அத்தனை பேரும் பேசாமல் இருக்கிறார்கள். சீதை அவர்களுக்கு  சாபம் கொடுக்கிறாளாம்.  நதின்னா நீர் இருக்கவேண்டும். நீரில்லா ஆறாவாய்" என்று பல்குணி நதியைச் சபிக்கிறாள்.  அதனால்தான் பல்குணி நதி வற்றிப்போகிறது.  

பசுமாடைச் சபிக்கிறாள் .  அதனால்தான் பசுமாட்டின் முன்னனால் இருந்த லக்ஷ்மி பின்னால் போய்விடுகிறாள்.  

கயாவிலிருக்கும் பிராமணர்...   திருப்தி அடையாமல் போகச் சாபம் அவர்களுக்கு.  கோடி ரூபாய் கொடுத்தாலும் "இன்னும் ஒரு ரூபாய் கொடுங்கள்" என்று இன்னமும் கேட்கிறார்கள். 

அட்சயவடம் சாட்சி சொல்கிறது. அதனால் தீர்த்தம் எடுத்து அட்சயவடத்தில் விடுகிறோம்.  அட்சயவடம் ஜொலிக்கிறது.  இன்றும் சாட்சியாய் நிற்கிறது.

ஆகவே இந்த இடத்தில் ஆண், பெண், குழந்தைகள், மூன்றாம் பாலினர் அத்தனை பேரும் ஸ்ராத்தம் செய்வதற்குத் தகுதியானவர்கள்.  

நம் வீட்டில் இருந்து அம்மா, (மாதுலாதி வர்க்கம், பிதுலாதி வர்க்கம்) அம்மாவின் முன்னோர்கள், அப்பா அப்பாவின் முன்னோர்கள், நண்பர்கள், பக்கத்துக்கு  வீட்டுக்காரர்கள்,  மாமனார், மாமியார், சொந்தக்காரர்கள், வேலைக்காரர்கள்,  நாம் வளர்த்திருக்கக் கூடிய  விலங்கினங்கள், செல்லப்பிராணிகள், அதுமட்டும் அல்லாமல் வீட்டுக்காக அல்லது வேறெதற்காகவாவது மரங்கள் வெட்டுவோம்...  அந்த மரங்கள்..  இப்படி எல்லாவற்றுக்கும் பிண்டம் போடக்கூடிய ஒரே இடம் கயா.  கயா மட்டுமே.  வேறு எந்த இடத்திலும் கிடையாது...."

இப்படிச் சொல்லி எங்களைப்  போகவிட்டார் அவர்.


==============================================================================================


எங்கள் உறவில் நான் கண்ட ஒரு வயதான மாது பற்றி எழுதி பேஸ்புக்கில் போஸ்ட செய்தேன்.



அந்த பாட்டி என்னவோ சந்தோஷமாகத்தான் இருக்கிறார்.  அவர் எதை எல்லாம் இழக்கிறார் என்கிற என் கற்பனையை எழுதி இருந்தேன்.

அதற்கு கீழே உள்ள படமும் இணைத்திருந்தேன்.

அந்தக் கவிதையை முழுதுமாக கீழே தருகிறேன்.

கட்டில் சாம்ராஜ்யம்
--------------------------------- 


பல்லில்லா வாயிலிருந்து 
பலவிதமாய் 
வந்து விழுந்து கொண்டிருக்கின்றன 
பிரச்னைகளுக்கான தீர்வுகள் 

சமயங்களில் ஏதோ நகைச்சுவை சொல்லி 
சின்ன குரலில் 
தானே வாய்விட்டு சிரிக்கிறாள் 
கட்டிலில் படுத்திருக்கும் பாட்டி 

சமயங்களில் 
சிறு கானமும் இசைப்பதுண்டு 

​அவ்வப்போது அறையிலிருந்து 
வெளிவந்து 
அனைவரும் பேசுவதைப் பார்த்துப்
போவது உண்டு 
காது கேட்காததால் 
கண்கள் மட்டுமே 
ஒவ்வொருவர் மேலும் தாவும் 

தனக்குத் தானே கேள்வி கேட்டு 
தானே பதிலும் சொல்லிக் கொள்கிறாள் 
தனிமைப் பட்டுப் போன பாட்டி
கலந்துபேசி வளையவந்த 
கடந்த கால நாட்களின் 
நினைவுகள் 
கண்ணில் வந்துபோகின்றன 

இப்போதைய வீட்டின் பிரச்னைகளுக்கு 
அப்போதைய தன் மதிப்பை 
மானசீக பதிலாக்குகிறாள் 
அந்தக்காலக் குடும்பத்தலைவி 

அன்பாய்தான் இருக்கிறார்கள் 
ஆனாலும் பேசமுடியவில்லை 
பேரன்களுக்கிணையாய் ​பாட்டியால் ​ 

​சேர்ந்திருந்தாலும் 
தனியாய்த்தான் 
இருக்கிறாள் பாட்டி.

இதற்கு வந்த கமெண்ட்ஸ் : 

"கடைசி மூன்று வரிகள் கசக்கிப் பிழிகின்றன யதார்த்த சோகத்தை."  என்றார் கேஜிஜி.

"தனியாக இருக்கும் பாட்டி மனதை கனக்க வைத்து விட்டார்."என்றார் கோமதி அக்கா.

"கூட்டம் இருந்தாலும் தனிமைப்படுத்தி படுத்தப்பட்டது அந்த ஆத்மா. என் அம்மா நினைவில் வந்தார். " என்றார் வல்லிம்மா.   மேலும் "இந்தப் படத்துக்குக் கதை எழுதலாமா." என்றுகேட்டு, "நன்றி மா. எபியில் சொல்லிவிடுங்கள். நெ.த ரெடியாக இருக்கிறார்." என்றும் சொல்லி இருந்தார்.

"எனக்கும் என் அம்மாவின் நினைவுதான் வந்தது. படுத்துக் கொள்ளும் நேரத்தில் இதை ஏன் படித்தேன்? மனது கனத்து விட்டது." என்றார் ரஞ்சனி அக்கா.

"தனிமை படுத்தப்பட்ட முதிய பெண்ணின் சோகம் மிகவும் இயல்பாக வெளிப்பட்டிருக்கின்றன. அதனாலேயே துக்கம் 😢பொங்குகிறது. என் பாட்டி நினைவுக்கு வருகிறார்."  என்றார் பானு அக்கா.

இப்போது இங்கு படத்தையும் வெளியிட்டிருக்கிறேன்.  இந்தப் படத்துக்கு கதை எழுத நினைப்பவர்கள் எழுதி அனுப்பலாம்.




===========================================================================================

இந்த வாரமும் ஒரு சுகி சிவம்!



================================================================================================

மேல் சாவுனிஸ்ட் என்று நெல்லை சமீபத்தில் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.  அது சம்பந்தமான என் பழைய பேஸ்புக் பகிர்வு!


165 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. இந்த சவ்வனிசம் பற்றி முன்பு எப்போதோ எதிலோ வாசித்த நினைவு வந்தது நீங்கள் இப்ப சொல்லியிருப்பதை வாசித்ததும்....

    இதோ அந்தப் பாட்டியைப் பார்த்துவிட்டு வருகிறேன்...என் பாட்டி போல இருக்கிறார்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் திங்கள் பதிவில் நெல்லை இது பற்றிச் சொல்லி இருந்ததும் பகிரத் தோன்றியது!

      நீக்கு
    2. அன்பு துரை செல்வராஜு, அன்பு ஸ்ரீராம், அன்பு கீதா மா அனைவருக்கும் இன்னும் வரப் போகிறவர்களுக்கும் இனிய நற்காலை வணக்கம்.



      நீக்கு
    3. ஒரே எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் பதிவு பந்திருக்கே.
      கால் வலி போச்சாமா. எல்லா பிரச்சினையும்
      தீரட்டும். நம் மயிலை சாயியையும் , அனுமனையும் பிரார்த்திக்கிறேன்.

      ஆமாம் கயா ஸ்ராத்தம் உசத்திதான்.
      எனக்கே அங்கு போய் அம்மா அப்பாவுக்கு திதி கொடுக்க ஆசை.

      மரங்களுக்கும் கொடுக்கலாம் எனும் செய்தி மிகப் புதிது.
      துளசி கோபால் தன் செல்லங்களுக்கு அண்ட் அஸ்தி கரைத்து ஸ்ராத்தம் சேய்து
      வந்தார்.

      கட்டிடமே சரிந்திருக்கிறதா. என்ன ஒரு அதிசயம்.
      படம் ஒன்றும் காணோமே என்று பார்த்தேன்.

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    5. சாய்ந்த கோவில் நான் படம் எடுக்கவில்லை அம்மா... அப்போது கையில் செலில்லை!

      கால்வலி போயிந்தே... போயேபோச்! நாளாச்சு இல்லையா?

      நீக்கு
    6. வேறு வழிகிடையாது... வறுமை. இன்னமும் வறுமையின் கொடுமையில்தான் இந்த ஊரெல்லாம் இருந்து கொண்டிருக்கிறதே தவிர, அதிலிருந்து வெளியே வரமுடியவில்லை. // சீதையின் சாபம் இன்னும் பலித்துக் கொண்டிருக்கிறதா. பாவம்.

      நீக்கு
    7. பெயரோ அக்ஷயவடம். இருக்கிறவர்களோ வறுமையில்
      வாடுகிறார்கள் என்ன ஒரு முரண்.
      சுகிசிவம் சொல்லி இருப்பதும் நல்ல பரிகாரம்.

      மேல்சாவனிஸ்ட் விவரம் சுவாரஸ்யம்.

      ஓ படம் வந்து விட்டதே. அதில் நீங்களும் இருக்கிறீர்களா.

      கட்டில் சாம்ராஜ்யம் எல்லோரையும் பாதித்து விட்டது பாருங்கள்.
      அத்தனை உண்மை அந்தக் கவிதை வரிகள்.
      ஆமாம் அந்தப் பாட்டிக்குச் சோகம் இல்லை
      சுற்றி இருப்பவர்களுக்கே சோகம். இன்று நான் பார்த்த படமும் அல்சைமர்
      வந்த ஒரு ராணுவ வீரரின் கதைதான்.

      எப்படியோ வரிசையாக வந்துவிட்டது ஒரு கோய்ன்சிடென்ஸ்.

      நீக்கு
    8. //சீதையின் சாபம் இன்னும் பலித்துக் கொண்டிருக்கிறதா.//

      வறுமை இருக்கிறதோ இல்லையோ... பேராசை இருக்கிறது வல்லிம்மா.

      நீக்கு
    9. // பெயரோ அக்ஷயவடம். இருக்கிறவர்களோ வறுமையில்
      வாடுகிறார்கள் என்ன ஒரு முரண். //

      அது ஆன்மீக பலம். இது பேராசை, பணபலம்.

      //எப்படியோ வரிசையாக வந்துவிட்டது ஒரு கோய்ன்சிடென்ஸ். //

      ஆமாம்... உண்மைதான் அம்மா.

      நீக்கு
  5. ஸ்ரீராம் கவிதை சூப்பர்! மனதை அள்ளிட்டீங்க போங்க!

    என் பாட்டியை அப்படியே கண் முன் கொண்டுவந்துவிட்டது உங்கள் கவிதை!

    இப்படித்தான் என் பாட்டியும் கடைசி ஒரு நான்கைந்து மாதங்கள்...கொஞ்சம் நினைவு தப்பியது ஆனால் நாம் பேசினால் அவர் பேசுவார் இல்லை என்றால் படுத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பார்.

    என் மகன் காலேஜ்லிருந்து வந்ததும் தன் கதைகளைச் சொல்லுவான். பாட்டிக்காகவே வீட்டில் இரு பைரவிகளின் குட்டிகள் 13 ஐ வீட்டில் வைத்திருந்தோம். ஒரு பைரவிக்கு மகன் பிரசவம் பார்த்தான்!!!!!!!!!

    பாண்டிச்சேரியில் இருந்த மிகவும் சிறிய வீடு ஆனால் சுற்றி சிறிய கார்டன் என்பதால் (இருந்தது கிராமம் என்பதால்) குட்டிகள் அனைத்தும் சுற்றி சுற்றி வரும். சாப்பாடு போட்டு ஒரு கை தட்டினால் போதும் எல்லாம் ஓடி வரும் அழகு வாவ்! வீட்டில் ஏறியதும் இருக்கும் இடம் தான் பாட்டி அமரும் இடம். அங்கு எல்லாம் வந்து பாட்டியின் கையைத் தொடும். பாட்டியின் முகத்தில் ஒரு ஆனந்தம் வருமே சிரிப்பார் பாருங்கள்.

    என்னிடம் அப்போது கேமரா இல்லை. மொபைல் கிடையாது. இல்லை என்றால் ஃபோட்டோ எடுத்து வைத்திருப்பேன். மகன் பாட்டிக்கு இவர்கள் எல்லோரும் உற்சாகப்படுத்துவார்கள் என்று அத்த்னையைஉம் கட்டி மேய்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் இரண்டு மாதம் முடியும் தருவாயில் ஒவ்வொன்றாகக் காணாமல் போனது. இரண்டு இறந்துவிட்டன. கடைசியில் மிஞ்சியவைதான் கண்ணழகியும், ப்ரௌனியும் மகன் பிரசவம் பார்த்து தன் கைகளில் ஏந்தியவை!! பாட்டி இந்த இருவருடனும் அப்படி விளையாடுவார். கையைத் தட்டிக் கூப்பிட்டு.

    நல்ல நினைவுகள் உங்கள் கவிதை வரிகள் எழுப்பிவிட்டன.

    மிக மிக மிக ரசித்தேன் ஸ்ரீராம் உங்கள் வரிகளை

    எல்லா பாட்டிகளுக்கும் இதை சமர்ப்பிக்கலாம்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. எல்லோருக்கும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட பெரியவர்கள் நினைவுகள் வந்திருக்கின்றன என்று தெரிந்தது. வல்லிம்மா இந்தப் படத்தை வைத்து இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பதிவு போட்டிருந்தார்.

      நீக்கு
    2. இப்பக் கூட கதை என்று நினைக்கிறேன் அவர் தளத்தில் வந்திருக்கு....ஆனால் இனிதான் பார்க்கணும்...

      கீதா

      நீக்கு
  6. அன்பாய்தான் இருக்கிறார்கள்
    ஆனாலும் பேசமுடியவில்லை
    பேரன்களுக்கிணையாய் ​பாட்டியால் ​

    ​சேர்ந்திருந்தாலும்
    தனியாய்த்தான்
    இருக்கிறாள் பாட்டி.//

    மனதை என்னவோ செய்துவிட்டது ஸ்ரீராம் இந்த வரிகள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா...

      ப க அப்புறம்தானா?!!

      நீக்கு
    2. ப க வுக்கு வருகிறேன் ஸ்ரீராம்.

      முதலில் பாட்டியும் உங்கள் கவிதையும் கண்ணில் பட்டுவிட்டது!!! அதான்...இதோ

      கீதா

      நீக்கு
    3. ப க ஒரு படங்கள் வரவில்லை எனக்கு இங்கு கணினியில் ஏதோ மிஸ்டேக் அதான் ...இன்னும் வாசிக்கவில்லை. இதோ ரிஃப்ரெஷ் செய்துவிட்டு வாசித்துவிட்டு வருகிறேன்..

      கீதா

      நீக்கு
    4. ப க வில் இந்த முறை படங்கள் எதுவும் இல்லை கீதா.. ஒரே ஒருபடம் இருக்கும்!

      நீக்கு
    5. அந்தப் படமும் வர மாட்டேங்குது ஸ்ரீராம்...அது என்ன படம்?..சரி பரவாயில்லை பதிவு பார்த்துவிட்டு வருகிறேன்...

      கீதா

      நீக்கு
    6. இப்போது பாருங்கள் கீதா.... சரி செய்திருக்கிறேன் என்று பெயர்!

      நீக்கு
    7. படம் பார்த்துவிட்டேன் ஸ்ரீராம். காத்திருப்பவர்கள் படமோ?!!

      கீதா

      நீக்கு
  7. முழுப்பதிவையும் படித்தேன்...

    ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்துகிறது....

    சுகி.சி.. சொன்ன விஷயம் அப்புறமாக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் துரை செல்வராஜூ ஸார்... அவர் முன்னுரை சொன்னபோதே நானும் கனமாகி விட்டேன். பின்னர் சம்பவ இடத்தில...

      நீக்கு
  8. இப்போது என் மாமியார் நல்ல நினைவுடன் இருக்கிறார் 93 வயது. நாங்கள் அவருடன் நிறைய பேசுவோம். பேரன் பேத்திகளும் அவருடன் பேசுகிறார்கள். ஆனால் கொஞ்சம் நேரம் தான். அவரே கேட்டுவிடுவார் நான் கொஞ்சம் படுத்துக்கட்டுமா என்று. அப்போது அவரை படுக்க வைத்துவிடுவோம். மற்றபடி டிவி பார்க்கிறார். யார் விட்டுக்கு வந்தாலும் யாரென்று விசாரித்து நினைவு படுத்திக் கொள்வார். அவர்களும் அவரிடம் சில வார்த்தைகள் பேசுவார்கள். நல்லகாலம் அவர் தனிமைப்படுத்தப்படவில்லை என்பது மனதிற்கு இதம்...அவரும் வீட்டில் இருக்கும் போது எல்லோரையும் கூப்பிட்டுப் பேசுகிறார். தனக்கு வேண்டியதைக் கேட்டுக் கொள்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமியாரைக் கொண்டாடும் மருமகள்... Great.

      நீக்கு
    2. அப்படி எல்லாம் இல்லை ஸ்ரீராம். நல்லதை மட்டும் நினைப்போம் என்ற எண்ணம் தான். எல்லோரிடமும் குறைகள் இருக்குதானே. என்னிடமும் இருக்குதானே. அவர்கள் மனதில் என்னைப் பற்றியும் இருந்திருக்கலாம்...

      எங்களுடன் இருந்தப்ப தினமும் என் கையைப் பிடித்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொள்வார். என் கன்னத்தை வருடுவார். அவருக்கும் என்னென்னவோ நினைவுகள் மனதில் வந்து செல்லுமாக இருக்கலாம்.

      இப்போது இங்கு பங்களூர் வந்து அங்கு செல்லும் போது...கீதா வந்துவிட்டாளா என்று முக மலர்ச்சியுடன் என்னைப் பார்ப்பார். நான் அருகில் சென்றதும் கையைப் பிடித்துக் கன்னத்தில் வைத்துக் கொள்வார். நான் தலைக்கு உடம்புக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விட அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சமீப காலமாகக் கொஞ்சம் எல்லாம் திரும்ப திரும்பக் கேட்டுக் கொள்கிறார். மற்றபடி டிவியில் எப்போது திருப்பதி சேனல் ப்ரோக்ராம் வரும் என்பதெல்லாம் அத்துப்படி!!!!!

      இங்கு அழைத்து வந்து வைத்துக் கொள்ள முடியவில்லையே என்று தோன்றுகிறதுதான். இப்போது அவரை வெளியில் அழைத்துச் செல்வதென்றால் மைத்துனர் வீல் சேர் வாங்கி வைத்திருக்கிறார். அதில் அமர வைத்து வீட்டு நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று விடுகிறார்.

      ஒன்று சொல்ல வேண்டும் இங்கு. அவர் குழந்தைகள் அனைவருமே மாம்னார் இருந்தவரை மாமனாரையும் இப்போது மாமியாரையும் அதுவும் கடைசி மைத்துனர் நன்றாகவெ கவனித்துக் கொள்கின்றனர்.

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் கோமதி அக்காவும் கூடத் தன் மாமியார் குறித்து அப்போது நிறைய சொல்லியிருந்தாரே..பாராட்டி...

      கீதா

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  10. முதல் படம் வரவில்லை. மற்ற்வை வருகிறது.
    பதிவு படித்து முடித்ததும் கண்ணீர் பெருகி வருவதை தடுக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி அக்கா...வாங்க..வாங்க...

      இப்போது படம் மறுபடி ஏற்றி இருக்கிறேன். தெரிகிறதா பாருங்கள்.

      நீக்கு
    2. வந்து விட்டது படம் ஸ்ரீராம்

      நீக்கு
  11. //
    நடுவே அமைந்திருந்த லிங்க வடிவத்துக்கு 'சாமியார்' (பண்டிட்) போல ஒருவர் அமர்ந்து அபிஷேகம், பூஜை செய்து கொண்டிருந்தார். அந்த இடத்தைப் புகைப்படம் எடுத்திருந்தேன். என்ன ஆச்சு என்று தெரியவில்லை. காணோம்! அதுபோல் வேறு சில .இடங்களும்...!//

    நடுவே அமைந்த லிங்கம் காசி .

    இங்கும் காணாமல் போய்விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சில படங்கள் எப்படி தானாக காணாமல் போகின்றன என்பது புதிர். என் அப்பாவின் "கடைசி"ப் படத்தை செல்லில் வைத்திருந்தேன். எங்கே போச்சுன்னே தெரியவில்லை.

      நீக்கு
    2. ஸ்ரீராம்... எனக்கு ஒருவர் ஒரு சினிமா (பழைய) கொடுத்திருந்தார். அதில் திருப்பதி வெங்கடாசலபதி மூலவர் திருமஞ்சனம் எல்லாம் உண்டு. அதை பத்திரமாக வைத்திருந்தேன். என் உறவினர்களுக்கும் அந்தப் பகுதி போட்டுக் காண்பிப்பேன். சட் என்று அது காணாமல் போய்விட்டது.

      நான் கணிணி சம்பந்தப்பட்ட வேலை என்பதால், ஒவ்வொன்றையும் நிறைய காப்பி, பல இடங்களில் வைத்திருப்பேன். எங்கேயோ அது இருக்கும், ஆனால் அதனைக் கண்டுபிடிக்க முடியலை.

      நான் எல்லாவற்றிர்க்கும் 'ஏதோ காரணம்' என்று நம்புபவன்.

      நீக்கு
    3. அந்த நம்பிக்கை எனக்கும் உண்டு நெல்லை. ஆனால் அப்பா படம் மறைந்தது எனக்கு மகா வருத்தம்.என்னதான் அந்தப் படங்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வார்கள் என்றாலும்...

      நீக்கு
    4. //அந்தப் படங்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்று // - முன்னமே சொல்லியிருக்கிறேன் என்று நினைவு. என் அப்பா மறைந்தபிறகு நான் மறுநாள் 11 மணிக்கு வந்தேன். அப்பாவைக் கிடத்தியிருந்தார்கள். எனக்கு போட்டோ எடுக்க ரொம்ப ஆசை. அப்போ பார்த்து, என் உறவினர் அருகில் இருந்ததால் (என்னைவிடப் பெரியவர்) அவரிடம் கேட்டுவிட்டேன் (என் போதாத காலம்). அவர், நம் வழக்கத்தில் போட்டோ எடுப்பது இல்லை என்று சொல்லிட்டார். நானும் பேசாமல் இருந்துட்டேன். அதை நினைத்து நிறைய தடவை வருந்தியிருக்கிறேன்.

      எங்க வீட்டில் நாந்தான் எல்லாத்தையும் போட்டோ பிடிப்பேன். எங்க ஆபீஸில் (வெளிநாட்டில்) நான் போட்டோ எடுப்பதைப் பார்த்து, என்ன எல்லா இடத்திலும் போட்டோ எடுக்கிறாயே என்பார்கள். பிறகு அவர்களுக்கு நான் அனுப்பும்போது, ரொம்பவும் சந்தோஷப்பட்டு, நல்லவேளை நீ அப்போ போட்டோ எடுத்தியே..மிக்க நன்றி என்பார்கள். என் சொந்த மாமா, உடம்பு முடியாமல் இருந்தார். நான் அப்போதான் ஏர்போர்ட்டில் இறங்கியிருக்கேன். என் பெற்றோர், அவரைப் பார்த்துட்டு வீட்டுக்குப்போகலாம் என்று சொல்லி, நேரடியாக கூட்டிக்கொண்டு சென்றார்கள். அப்போ என்னிடம் ஃப்ளாஷ் கேமராதான். நான் 4 போட்டோ எடுத்தேன். ஓரிரு வாரங்களில் அவர் மறைந்தபோது, அவர் பசங்ககூட என்னிடம், அவருடைய போட்டோ இல்லை, அதை அனுப்பமுடியுமா என்றார்கள்.

      இதை வைத்துக்கொள்ளலாம், இந்தப் படத்தை வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கு அளவுகோல், அந்த போட்டோ வெளிப்படுத்தும் உணர்வு மற்றும் பார்ப்பவர்களுக்கு அது உண்டாக்கும் உணர்வு மட்டும்தான்.

      நீக்கு
    5. உண்மை. நீங்கள் கேட்காமல் படம் எடுத்திருந்தால் ஒன்றும் நிகழ்ந்திருக்கப் போவதில்லை. நாம் யாரிடமாவது சொன்னால்தான் நாம் இந்தப்படம் வைத்திருக்கிறோம் என்று தெரியும். நான் ஒரேயடியாக எல்லாவற்றையும்புகைபபடம் எடுக்கமாட்டேன்.எனினும் சில மறக்க முடியாதநிகழ்வுகளை படம் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

      நீக்கு
  12. அம்மாவோட பெத்த கடனை நம்மால தீர்க்க முடியுமா? பத்து மாசம் நம்மைச் சுமந்திருக்கா அம்மா. அப்பாவால் நாம் பொறந்திருக்கோம்... அம்மாவோட கடனை நம்மால் தீர்க்க முடியாது. //

    ஆமாம் ஸ்ரீராம். அம்மா அப்பா இருவரின் கடனையுமே நாம் தீர்க்க இயலாது! என்ன செய்தாலும் என்பதே ...மனம் என்னவோ செய்துவிட்டது ஸ்ரீராம். மனம் கொஞ்சம் அமைதிப்படட்டும் வருகிறேன்.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவைப் பற்றிச் சொல்லும்போது அழுது விட்டதாக என் மைத்துனர் கூடச் சொன்னார்.
      வாழ்வு முழுவதும் அம்மாவுக்குச் செய்தாலும்
      தீராது கடன். அதனால் தான் மீண்டும் அவளிடமே பிறக்கிறோமோ.

      தந்தையிடம் பட்ட கடனும் அதே.
      நல்ல கதைகள் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

      நீக்கு
    2. நல்ல கதைகள் என்பது நம் நண்பர்கள் படத்துக்கு எழுதப்போகும் கதைகளைசொல்கிறீர்கள். சரியா அம்மா?!

      நீக்கு
    3. "நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ... அடைபட்ட கடன் எத்தனையோ ஆயிரம் இருந்தும்" - இந்தப் பாடல் ஸ்ரீராமுக்கு நினைவுக்கு வரவில்லையா? பேசாம வெள்ளி பாடல் செலெக்‌ஷனை படிக்கறவங்க எடுத்துக்க வேண்டியதுதான் போலிருக்கு..ஹா ஹா

      நீக்கு
    4. எனக்கு அந்தப் பாடல் பிடிக்காது நெல்லை!

      நீக்கு
  13. //நிறைய வருடங்களுக்கு முன் இங்கு ஐம்பது அறுபது பஸ்கள் வரும்வரை காத்திருந்து ஒன்றாகத்தான் விடுவார்கள். அந்த பஸ்களில் போலீஸ்காரர் ஏறிவருவார். இல்லையானால் கள்வர் பயம் ஜாஸ்தி//

    நாங்கள் 1978ம் வருடம் போனபோது நகரத்தார் சத்திரத்தில் தங்கி இருந்தோம். இரவு பூஜைக்கு அவர்களுடன் போய் அவர்களுடன் வர வேண்டும் என்று சொன்னார்கள் கள்வர் பயம் என்று. இரவு பூஜை செய்யும் பண்டா "போத்திக்கோ போத்திக்கோ" என்று தமிழில் சொல்வார்.

    ரயிலில் கொள்ளை கொலை எல்லாம் நடக்கும் 80 வருடம் என்று நினைக்கிறேன் புதிதாக கல்யாணம் ஆன பத்திரிக்கை நிருபர் (திருநெல்வேலியை சேர்ந்தவர்)கொள்ளையர்களால் கொல்லப்பட்டார் ரயிலில்.

    முன்பு காசிக்கு போகிறவர்கள் திரும்பி வருவது கஷ்டம் என்று வாய்க்கரசி வாங்கி செல்வார்கள் என்பார்கள்.

    சார் வேலைபார்த்த கல்லூரி பிரின்ஸ்பால் தன் 59 வயதுக்கு சாந்தி செய்ய என்று காசிக்கு குடும்பத்துடன் போனார் .ரயிலில் குடும்பத்தினர் உடமைகள் கொள்ளையடிக்கபட்டு விட்டது. எல்லாம் புதிதாக காசியில் வாங்கி சாந்தி செய்து வந்தார். அவர்கள் சத்திரத்தில் (நாட்டுக்கோட்டை சத்திரம்) உறவினர் இருந்ததால் பணம் பெற்று அனைத்தையும் நடத்தி வந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது அப்படியில்லை நிலைமையென்று தெரிகிறது. காசி சென்று வருவதும் சர்வசாதாரணமாகி விட்டது.

      நீக்கு
  14. யாத்திரை விடயங்கள் பயனுள்ளவை.
    பாட்டியின் கவிதை மனம் கனக்க வைத்தது ஜி

    பதிலளிநீக்கு
  15. கட்டில் சாம்ராஜ்யம் கவிதை மனதை கனக்க வைக்கிறது. யாருக்கும் நினைவு தப்பக்கூடாது.
    நெல்லைதமிழன் கதையில் வருபவர்கள் டக்கென்று போய் விடுகிறார்கள் அப்படி கிடைத்தால் நல்லது. என் அப்பாவும் அப்படித்தான் தூங்குவது போல் சாக்காடு. என் அம்மா மூன்று மாதம் நினைவுகளுடன் கட்டிலில் இருந்தார்கள்.என் அப்பா, தாத்தா, பாட்டி இவர்களை கும்பிட்டு அழைத்துக் கொள்ள சொல்வார்கள். அது போல் அப்பா இறந்த கார்த்திகை மாதம் அதே கிழமையில் அந்த நினைவுகள் வந்து போயின.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நெல்லைதமிழன் கதையில் வருபவர்கள் டக்கென்று போய் விடுகிறார்கள்/

      ஹா... ஹா... ஹா...

      அப்படிக் கஷ்டப்படாமல் போகிறவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். என் உறவிலும் அப்படிச் சிலர் உண்டு.

      நீக்கு
  16. எங்களின் காசிப்பயணத்தை நினைவூட்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  17. இந்த வாரம் பயணக் கட்டுரை ரொம்ப நல்லா வந்திருக்கு.

    மற்ற கதம்பங்களும் நல்லா இருக்கு

    இன்னொரு முறை படித்துக் கருத்திடுகிறேன்

    பதிலளிநீக்கு
  18. படிக்கும் பொழுதே மனம் இளகி விட்டது. கவிதையும் உருக்கம்.
    சுகி சிவம் சொல்வது நல்ல விஷயம்.

    பதிலளிநீக்கு
  19. இல்வாழ்க்கையின் குறளோடு சொன்னது சிறப்பு...

    அம்மாவின் நினைவுகள்... கண்ணீருடன்...

    பதிலளிநீக்கு
  20. //காசியில் விஸ்வநாதர் ஆலயமா, காலபைரவர் ஆலயமா என்று நினைவில்லை. அங்கு நைஸாய் செல் எடுத்து ஒரு போட்டோ எடுத்திருந்தேன். நடுவே அமைந்திருந்த லிங்க வடிவத்துக்கு 'சாமியார்' (பண்டிட்) போல ஒருவர் அமர்ந்து அபிஷேகம், பூஜை செய்து கொண்டிருந்தார். அந்த இடத்தைப் புகைப்படம் எடுத்திருந்தேன். என்ன ஆச்சு என்று தெரியவில்லை. காணோம்! அதுபோல் வேறு சில .இடங்களும்...! //

    இந்த பாராவை ஆரம்பமாகக் கொண்டு சிறுகதை தொடங்க வேண்டும் என்று கே.வா.போ.கதைக்கு எழுதச் சொல்லி அழைப்பு கூட விடுத்திருக்கலாம்.. (நெல்லை.. கவனிக்கவும்)

    பதிலளிநீக்கு
  21. பிள்ளைகள் ஒதுக்காமல் இருக்கும்போதே பாட்டியை பார்க்க மனம் கனக்கிறது.

    இந்நிலையில் பிள்ளைகளால் ஒதுக்கப்படும் பெற்றோர் நிலை ....

    பதிலளிநீக்கு
  22. அட! இப்போத் தான் பார்த்தேன். பாட்டியின் படம் வெளியிட்டு நீங்களும் புகைப்படக் கதை கேட்டிருக்கிறீர்களே! என்ன coinside!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... நீங்கள் பேஸ்புக்கில் இல்லை, அல்லது கவனிக்கவில்லை ஜீவி ஸார்... அங்கு இந்த யோசனை வல்லிம்மாவால் முன்வைக்கப்பட்டு, கேஜிஜியால் வழி மொழியப்பட்டது.

      நீக்கு
    2. //ஓ... நீங்கள் பேஸ்புக்கில் இல்லை, // இருக்கார், இருக்கார், சமீபத்தில் பிறந்த நாள் அறிவிப்புக் கூட வந்ததே!

      நீக்கு
    3. அரிதாகத்தான் பேஸ்புக் பக்கம் வருவார் போலும்!

      நீக்கு
    4. நான் கீதாம்மா பேஸ்புக்கில் ரொம்ப நாளா இருக்கேன். அது தனி இல்லையா?..

      நீக்கு
    5. நான் சில சமயங்களில் உங்கள் பதிவுகளைப் பார்த்திருக்கேன் ஜீவி சார். ஶ்ரீராமுக்குத் தெரியலை போல! உங்கள் மனைவி, பெண், ஜீவா எல்லோரையுமே ஃபேஸ்புக்கில் பார்க்கிறேன்.

      நீக்கு
  23. //நண்பர்களுக்குக்கொடுக்க.// - அது வாங்கினேன்..இது வாங்கினேன்..நண்பர்களுக்குக் கொடுக்க என்று சொல்றீங்க. அப்போ எ.பிக்கு வர்றவங்கள்ல யாருமே உங்களுக்கு நண்பர் இல்லையா? இல்லை எனக்கு மட்டும்தான் இதெல்லாம் கொடுக்கலையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி யோசிக்கவில்லை நெல்லை. தினசரி சந்திக்கும் நண்பர்கள், அலுவலக நண்பர்கள்... 'ஸார்... காசிச்சென்று வந்தீர்களே... என்ன வாங்கி வந்தீர்கள்?" என்று கேட்பார்களே... என் அண்ணன்காசி அல்வா கேட்டார். அதை நான் வாங்கிவர மறந்து விட்டேன்!

      நீக்கு
  24. ஏதோ வேறே உலகில் இருப்பது போல் இருக்கு எனக்கு. எத்தனை விஷயங்கள்! எத்தனை உரையாடல்கள். எதுவும் தெரியாமல் போய் விட்டது. பாட்டி படம் வந்ததோ அனைவரும் கருத்திட்டதோ தெரியவில்லை.எங்கள் பாட்டி (அம்மாவின் அம்மா) கடைசி வரை ஆரோக்கியமாகவே இருந்தார். ஒரு வாரமோ என்னமோ படுத்தார்! அம்மாதான்! :(((((( என்ன சொல்ல முடியும்! என் மாமியாரும் கடைசி வரை பூரண நினைவுடன் இருந்தார்.கொஞ்சம் கூட ஞாபகம் பிசகவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அக்கா.. அப்போ நீங்கள் வேறு வேலைகளில் பிஸி.. அப்புறம் வல்லிம்மா பதிவு பார்த்து பேஸ்புக் சென்று பார்த்து ​'லைக்' கொடுத்தீர்கள் என்று நினைக்கிறேன்.

      என் அம்மா தானே யாரென்று தெரியாமல் மறைந்தார். பெரிய வருத்தம் எங்களுக்கு.

      நீக்கு
    2. பசங்க எல்லோரும் நிம்மதியாக ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே ஒரு அம்மா மகிழ்வாள். அம்மாவின் உள்ளுறை ஆத்மா உணர்ந்திருக்கும். வருந்தாதீர்கள் ஸ்ரீராம்.

      நீக்கு
    3. "வீடு செல்ல வேண்டும் வீடு செல்ல வேண்டும் என்றவளை அங்கிருந்து காட்டுக்கே அழைத்துச் சென்றேன் பாவி நான்..."

      ஆஸ்பத்திரியில் இருந்த அம்மா ஓரிருமுறை அப்பாவிடம் வீட்டுக்குப் போகவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். அதைப் பற்றி அப்பா ஹேமாஞ்சாலி புத்தகத்தில் எழுதி இருந்த வரிகள்.

      மன்னிக்கவும், இதை இங்குஇப்போது பகிர்ந்ததற்கு.

      நீக்கு
    4. வருந்துவதற்கேதுமில்லை. சரியான இடத்தில்தான் பொருத்தமாகப் பதிர்ந்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    5. நன்றி ஏகாந்தன் ஸார். புலம்பல்போல தோன்றுமோ என்கிற அச்சம்!

      நீக்கு
    6. //தானே யாரென்று தெரியாமல் மறைந்தார்// - ஸ்ரீராம்.....இதைப்போன்ற அனுபவம் சமீபகாலமாக எனக்குக் கிடைக்கிறது. (அம்மாவிடமிருந்து இல்லை). ரொம்ப பயமா, வருத்தமா, அலார்மிங்கா... அந்த உணர்வைச் சொல்ல முடியலை. நினைத்தால் வேதனையா இருக்கு.

      நான் ஏழாவது படிக்கும்போது, ஒரு நாள் கனவில், என் அம்மா பைத்தியமாக இருப்பதைக் கண்டு முழித்துக்கொண்டு அழுதுகொண்டே என் அம்மாவிடம் சொன்னேன்... இது போன்ற நிகழ்வு உண்மையில் சில வாரங்களுக்கு இரு வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தது. எல்லாமே....சிரிப்பு, வருத்தம் சேர்ந்த கலவைதான்.

      நீக்கு
    7. அந்த உணர்வுகளைக் கடப்பது என்னைப்பொறுத்தவரை ரொம்பக் கஷ்டம் நெல்லை. இன்னமும் மனசிலிருந்து மறையாதது அது.

      நீக்கு
  25. //முதல்முறையாக காலில் இடித்துக் கொண்டேன். // - எனக்கு ஒரு செண்டிமெண்ட் உண்டு. வலது பக்கம் அடியோ இல்லை தடுக்கிவிட்டாலோ அதை நல்ல சகுனமாகவும், இடது பக்கம் அது நேர்ந்தால் கெட்ட சகுனமாகவும் எடுத்துப்பேன். பரீட்சைக்குப் போயிருக்கும்போது, காலேஜ்ல என் கிளாஸ்மேட் யாராவது தவறுதலா இடது தோளைத் தட்டி, 'என்ன மாப்ளே எப்படி படிச்சிருக்க' என்று கேட்டு, கன்னா பின்னாவென அவங்களைத் திட்டியது ஞாபகத்துக்கு வருது. அதுபோல, ஒரு இடத்துக்குக் கிளம்பும்போது, 'எங்க போற' என்று கேட்டால் என்னிடமிருந்து பதில் வராது.

    இப்போ கால் வலி சரியாச்சா இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இடிச்சுக்கலைனா அன்னிக்கு நல்லநாள். சில,பல சமயங்கள் இடித்துக் கொண்டதால் விரலே வீங்கி விடும்!

      நீக்கு
    2. உங்கள் செண்டிமெண்ட் புதுவகையாய் இருக்கிறது நெல்லை. அதென்ன வலது இடது நம்பிக்கைகள்! இடித்துக்கொண்டால் எல்லாம் ஒன்றுதான். இதுவே இடது கைப் பழக்கம் உள்ளவர் என்றால் நம்பிக்கை அப்படியே மாறுமோ!!!!

      ​கால்வலி இவ்வளவு மாதங்கள் இருக்குமா! ஆனால் சற்றே இருக்கிறதுதான்... அவ்வப்போது நான் இருக்கிறேன் என்று ஞாபகப்படுத்தும்!

      நீக்கு
    3. //நான் இடிச்சுக்கலைனா அன்னிக்கு நல்லநாள்.//

      :) நல்ல நாளுக்கு எப்படிப்பட்ட அப்ரோச் பாருங்கள், ஸ்ரீராம்!

      நீக்கு
    4. ஸ்ரீராம்...இதைச் சொன்னால் நீங்க நம்பித்தான் ஆகணும். சில இந்தியா கிரிக்கெட் மேட்ச்ல, ஆரம்பிப்பதற்கு முன்பே எனக்கு இடது கண் துடிக்கும், அது கொஞ்சம் தொடரவும் செய்யும். உடனே கிரிக்கெட் பார்க்காம வேற வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன். இந்தியா கண்டிப்பா அந்த மேட்ச் தோக்கும். நிச்சயம் ஸ்கோர் செய்ய முடியாத ஸ்கோரா இருந்தாலும், வலது கண் துடித்தால், நிச்சயம் அன்று இந்தியா ஜெயிச்சுடும். இது எப்படி என்று எனக்குப் புரிவதில்லை. அந்த இண்ட்யூஷன் எப்படி எனக்கு வருதுன்னு. எல்லா மேட்சுக்கும் இப்படி இல்லை. சில சமயங்களில்.

      நிமித்தங்கள் இப்படி எனக்கு முன்னமேயே வரும்.

      நீக்கு
    5. இமைகள் துடிப்பதெல்லாம் நம் கட்டுப் பாட்டில் இருந்தால் எவ்வளவு குஷியாக இருக்கும்?

      ஒரு கற்பனை: வலது கண் இமை மட்டுமே துடிக்கணும்ன்னா அது எப்படிப்பட்ட ரோதனையா இருக்கும்?.. எப்படியோ இந்தியா ஜெயித்தால் சரி; அதுக்கு இந்த வேதனையைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா, நெல்லை!

      இதுவே புறநானூறு காலமாக இருந்தால், வலது இமை துடித்தான் என்று பெயர் வைத்து விடுவார்கள்!..

      நீக்கு
    6. நிஜமாகவே நம்ப முடியவில்லை நெல்லை... இது எப்படி சாத்தியம்!

      நீக்கு
    7. //இமைகள் துடிப்பதெல்லாம் நம் கட்டுப் பாட்டில் இருந்தால் எவ்வளவு குஷியாக இருக்கும்? //

      அதை வைத்து ஒரு வியாபாரமே ஆரம்பித்து விடலாம் ஜீவி ஸார்.

      நீக்கு
    8. பழைய பாடல் ஒன்றில் "என் வலது கண்ணும் துடித்தது.. உனைக்கண்டேன் இந்நாள், பொன்நாள்..." என்று எல் ஆர் ஈஸ்வரி குரலில் ஒரு பாடல் வரும். ("நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்...")

      நீக்கு
    9. ஸ்ரீராம்... அதிசயமாக நீங்கள் பாடல் வரிகளில் தவறு செய்திருக்கிறீர்கள். பெண்களுக்கு இடது கண் துடிப்பது நல்ல சகுனம். ஆண்களுக்கு வலது கண். எல்.ஆர். ஈஸ்வரி பாடுவது, என் இடது கண்ணும் துடித்தது உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்.... மிக அருமையான பாடல் (அதனால் வெள்ளியில் வருவது கஷ்டம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

      நீக்கு
    10. அதானே.. இன்னும் சினிமாப் பாட்டு தென்படவில்லையே என நினைத்தேன்! ஈஸ்வரியின் பாடலொன்றைப் பிடித்தது சுவாரஸ்யம்.

      நீக்கு
    11. ஆமாம் நெல்லை... இடது கண் என்றுதான் இருக்கவேண்டும். கண்களில் பேதமில்லை என்று இருந்துவிட்டேன் போல... ஹிஹிஹிஹி....

      நீக்கு
    12. //இன்னும் சினிமாப் பாட்டு தென்படவில்லையே என நினைத்தேன்! ஈஸ்வரியின் பாடலொன்றைப் பிடித்தது சுவாரஸ்யம்.//

      ஏகாந்தன் ஸார்... நான்... நான்... நான்.. நான்தான் பிடித்தேன். ஹிஹிஹி...

      காலை மனம் கனமாகிவிட்டது என்று சென்ற துரை ஸாரை இன்னும் காணோம்.

      நீக்கு
    13. //வலது கண் இமை மட்டுமே துடிக்கணும்ன்னா// - நாம எதையுமே மேனரிசமாகச் செய்து பழகக்கூடாது. சிலர் இரண்டு கண்ணையும் சிமிட்டிச் சிமிட்டிப் பேசுவாங்க (அது அவங்களுக்கு நல்லா இருக்குன்னு நினைச்சுக்கிட்டு). அப்புறம் அந்த வியாதி பெர்மனெண்டா மாற்றமுடியாதபடி ஆயிடும். எங்க ஆபீஸில் இப்படி ஒருத்தன் இருந்தான்.

      ஜீவி சார்...இண்டியூஷன் நீங்க அனுபவப்பட்டதில்லையா? எனக்கு நிறைய தடவை அதுபோல் வரும். அதாவது இடது, வலது கண் துடித்து நிமித்தத்தை உணர்த்துவது.

      //புறநானூறு காலமாக இருந்தால், வலது இமை துடித்தான்// - இதுக்கு எதுக்கு புறநானூறு காலம். 6-7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வாரின் சீடர்கள் பெயர், நீர் மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாள் ஊதுவான், தோலா வழக்கன்.

      நீக்கு
    14. .//இண்டியூஷன் நீங்க அனுபவப்பட்டதில்லையா?// எனக்கு நிறைய உண்டு. இந்த இன்ட்யூஷன் பற்றி நான் ஒரு முறை குறிப்பிட்டபோது நம்ம ரங்க்ஸ் இப்படிச் சொல்லாதே என்பார் என்றேன். அதுக்கு கௌதமன் சார்(?) அல்லது கோமதி அரசு இருவரில் யாரோ ஒருத்தர் ஆமாம், அப்படி நினைக்காமல் நல்லபடியாக நினைச்சுப் பாருங்க, நல்லதே நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த இன்ட்யூஷன் ஓர் எச்சரிக்கை உணர்வாகத் தெரியும்.

      நீக்கு
  26. கயா ச்ராத்தம் குறித்து நன்றாகச் சொல்லி இருக்கார். மாத்ரு பஞ்சகம் தான் ஆதி சங்கரர் எழுதினது. மாத்ரு ஷோடசி மார்க்கண்டேயரால் சொல்லப்பட்டது. மாத்ரு கயாவில் இதைப் பற்றிச் சொல்கின்றனர். அங்கேயும் மாத்ரு ஷோடசி சொல்லித் தான் பதினாறு பிண்டங்கள்!எல்லாம் குறித்து வைத்திருந்தேன். படங்களும் கூடியவரை எடுத்தேன். ஆனால் பதிவு போட முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்படிதானேஎழுதியிருக்கிறேன்? என்ன, யார் எழுதியது என்று தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறேன். 16 ஸ்லோகங்களுக்கு லிங்க் கொடுத்திருக்கேன் பார்க்கவில்லையா கீதா அக்கா?

      நீக்கு
    2. பார்த்தேனே. அதனால் தான் மார்க்கண்டேயரால் சொல்லப்பட்டது என்றும் சொன்னேன். :)

      நீக்கு
  27. கட்டில் சாம்ராஜ்யம் என்னும் தலைப்பு ஏதேதோ நினைவுகளைக் கொண்டு வந்தது. கயா ச்ராத்தத்தில் நாங்களும் எங்க வீட்டில் நாங்க வெட்டிய எலுமிச்சைமரம், மாமரம், மாதுளை மரம்னு எல்லாவற்றுக்கும் பிண்டம் வைத்தோம். எங்க மோதிக்கும் சேர்த்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைவடிவம் எழுதி விட்டு பேஸ்புக்கில் போடும் கணம் எனக்குத் தோன்றிய தலைப்பு அது! ஒரு காலத்தில் ஒரு பெரிய குடும்பத்தையே கட்டி ஆண்டுவிட்டு இப்போது தன் பேச்சுக்கு பெரிய மதிப்பில்லாத நிலையில் கட்டிலுக்குள் முடிந்து விடும் உலகம்!

      நீக்கு
  28. கவிதை மனதில் ஏதேதோ எண்ணங்களை உருவாக்குகிறது.

    சேர்ந்திருந்தாலும்
    தனியாய்த்தான்
    இருக்கிறாள் பாட்டி.

    பேசத் தெரிந்தாலும் நிலைமை அப்படித்தானே. தாத்தா பாட்டிகளை அப்போ அப்போதான் வந்து பசங்க ஹாய் சொல்லுமே தவிர கூடவே இருக்காதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெனரேஷன் கேப்! ஒரு அளவுக்கு மேல் நெருங்க முடிவதில்லை. ஆனால் பாசம் குறைவதில்லை. அது ஒரு ப்ளஸ்.

      நீக்கு
  29. சுகி சிவம் சொல்லி இருக்கும் பரிகாரங்களைப் பல ஜோதிடர்கள் சொல்லி இருக்காங்க! ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். கன்யாதானத்துக்குத் தங்கம் வாங்கிக் கொடுங்கள், ஊனமுற்ற குழந்தைகளுக்கு சனிக்கிழமை உங்களால் இயன்றதை வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லி வாங்கிக் கொடுத்திருக்கோம். வயதான ஆதரவற்ற முதியவர்களுக்குக் கூட உதவச் சொல்லிச் சிலர் சொல்லுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயம்தான். தாலிக்கு தங்கம் கேட்டு வந்த ஒருபெரியவரிடம் நான் ஏமாந்திருக்கிறேன். அதை தளத்தில் எழுதியும் இருக்கிறேன். காஞ்சிப்பெரியவர் பெயர் சொல்லி ஏமாற்றினார்.

      நீக்கு
    2. அந்த மாதிரி வருபவர்களைப் பார்த்தாலே தெரிஞ்சுடுமே! இது அக்கம்பக்கம் தெரிஞ்சவங்க மூலமா ஏழைக்குடும்பங்களுக்கு உதவி செய்வோம்!

      நீக்கு
    3. // அந்த மாதிரி வருபவர்களைப் பார்த்தாலே தெரிஞ்சுடுமே! //

      தெரியலையே...கடைசி நிமிடம் வரை தெரியலையே!

      நீக்கு
  30. ஒரு மாறுதலுக்கு சுகி சிவம் சொன்னது சரியான பரிகாரம் என்று எனக்குத் தோன்றுகிறது. சக மனிதர்களுக்கு உதவக்கூடிய பரிகாரத்தைப்போல் ஒன்று உண்டா?

    பதிலளிநீக்கு
  31. "சேர்ந்திருந்தாலும் தனியாய்த் தான்
    இருக்கிறாள் பாட்டி!" இது அநேகமா எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில் அனுபவிப்பது தான். நான் பல சமயங்களில் வீட்டில் கூட்டம் இருந்தாலும் தனிமையாக உணர்வேன். தனிமையாக இருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மீகத் தனிமை வேறு... யாரும் ஒருத்தரைக் கவனித்துக்கொண்டு, ஆனால் அவர்களோடு நெடுநேரம் செலவழிக்காமல் பேசாமல் இருப்பது என்பது வேறு. நீங்க தனியா இருப்பது, 'ஆன்மீகம்' சம்பந்தப்பட்டது. பாட்டி தனியா இருப்பது, to some extend ஒதுக்கமா இருப்பது.

      நீக்கு
    2. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நான்? ஆன்மிகம்? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    3. சரி...உங்களுக்காக 'ஸ்திதப்ப்ரஞ்ஞள்' ஹா ஹா....

      நீக்கு
    4. //இது அநேகமா எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில் அனுபவிப்பது தான்.//

      எப்பவாவது ஒரு சமயத்தில் அனுபவிப்பது வேறு... மீதி வாழ்க்கை முழுவதும் அப்படியே ஒட்டாமல் கழிவது வேறு இல்லையா கீதா அக்கா?

      நீக்கு
    5. பாட்டிக்கு அப்போது முழு நினைவு இருந்தால் ஒட்டாமல் கழிவது குறித்த வருத்தம் வருமே! எங்க மாமியார் நாங்க ஏதேனும் பேசிச் சிரிக்கையில் புரியலைனு வருத்தப்படுவாங்க! அப்புறமா அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும்! கடைசி வரை பூரண நினைவு இருந்தது. ஆகவே பாட்டி இப்படி இருந்ததும் அவங்களுக்கு நல்லது தானே! என்ன பராமரிக்கிறவங்களுக்குத் தான் பிரச்னை!

      நீக்கு
    6. நான் சொன்னது "எல்லோருக்குமே எப்போதாவது இப்படித் தோன்றும்" என்று சொன்னதற்காக பதில் அக்கா.

      நீக்கு
  32. பொருத்தமா சவ்வனிசம் என்னன்னு போட்டிருக்கீங்களே...எனக்கு இதுவரை தெரியாது.

    இன்றைய வியாழன் பதிவு ரொம்ப நல்லா இருந்தது. அதிலும் கயா யாத்திரையின் கட்டுரைப்பகுதி. இன்னும் படங்கள் சேர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சவ்வனிசம் எங்கேயோ படிச்சிருக்கேன். அரைகுறை நினைவு! ஆனால் நெப்போலியன் என்பது இப்போத் தான் தெரியும். பழைய குமுதத்திலேயோ????????????????????

      நீக்கு
    2. கீதா ரெங்கன் முன்னரே படித்தது மாதிரி இருக்குன்னு சொல்லி இருந்தார்!

      நீக்கு
    3. பொதுவான விளக்கங்கலாய்ப்போனதால் படம் பகிரவில்லை. சம்பவங்களாய்ச் சொல்லும்போது படம் தேறும்!

      நீக்கு
  33. எங்க பெண்ணுக்கு ஒரு ஜோதிடர் அன்னதானம் செய்யச் சொல்லிப் பரிகாரம் சொல்லி அதை அவள் சார்பில் நாங்க எங்க ஊரான பரவாக்கரையில் மாரியம்மன் கோயிலில் வைத்துச் செய்திருக்கோம். அம்பத்தூரில் இருக்கும்போதும் இதைப் போன்ற பரிகாரங்கள் செய்திருக்கோம்.இவற்றால் மன நிம்மதி கட்டாயம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னதானப் பரிகாரத்தில் மாட்டிக்கொண்டவன் நான். என் மாமா ஒருவர் பரிகாரம் என்ற பெயரில் எதையோ செய்யச் சொல்லி மீனாக்ஷி அம்மன் கோவிலில் போய் குறிப்பாய் சிலருக்கு தரச்சொல்ல, அவர்கள் அஞ்சி ஓட... (பின்னே கேட்கும் மற்றவர்களுக்கு மறுத்து குறிப்பாய் சிலருக்குக்கொடுத்தால்?) இதையும் முன்னர் தளத்தில் பதிவாக்கி இருக்கிறேன்!

      நீக்கு
    2. இந்த மாதிரிப் பிரபலமான கோயில்களில் செய்வது கஷ்டம் தான். அதனால் தான் நாங்க எங்க ஊர்க் குலதெய்வக் கோயிலிலேயே செய்தோம். அம்பத்தூரிலும் நாங்க இருந்த பகுதியில் ஒரு மாரியம்மன் கோயில் உண்டு. அங்கேயும் பூசாரியிடம் சொல்லிவிட்டுச் செய்வோம். பிரச்னைகள் வராது! நம் நோக்கம் அன்னதானம்! அதைக் கோயிலுக்கு வருபவர்களுக்குச் செய்வது நல்லது தானே!

      நீக்கு
    3. //நம் நோக்கம் அன்னதானம்! // - திருவல்லிக்கேணியில் ஒருத்தர் பிரகாரத்தில் பெரிய அண்டால சர்க்கரைப் பொங்கல் வைத்துக்கொண்டு, என்னைக் கூப்பிட்டார். நான் அவர்ட்ட, இது கோவில்லேர்ந்து தர்ற பிரசாதமா இல்லை நீங்க வேண்டுதலுக்குத் தருவதான்னு கேட்டேன். அவர், இங்க அதெல்லாம் கிடையாது, கோவில் பிரசாதம்தான் என்று சொன்னார். நான் அன்னதானம், வேண்டுதல்ல தரும் பிரசாதம்லாம் சாப்பிட மாட்டேன்.

      அதுனால சிலர், தானம் வாங்காம ஓடியதில் (ஸ்ரீராம் சொன்னதுபோல) எனக்கு ஆச்சர்யமில்லை.

      என்னவோ எனக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம். அதாவது தானம் பெற்றுக்கொண்டால், கடனாளி ஆகிடறோம் என்ற எண்ணம். 'எல்லாம் பகவத் ப்ரசாதம்' என்ற மனநிலை இருந்தால், இது மாதிரி தோணாது. அந்த நிலை எனக்கு இன்னும் வரலை

      நீக்கு
    4. இது கோவில்லேர்ந்து தர்ற பிரசாதமா இல்லை நீங்க வேண்டுதலுக்குத் தருவதான்னு கேட்டேன். அவர், இங்க அதெல்லாம் கிடையாது, கோவில் பிரசாதம்தான் என்று சொன்னார். நான் அன்னதானம், வேண்டுதல்ல தரும் பிரசாதம்லாம் சாப்பிட மாட்டேன்.//அதுனால சிலர், தானம் வாங்காம ஓடியதில் (ஸ்ரீராம் சொன்னதுபோல) எனக்கு ஆச்சர்யமில்லை.//

      ஓ அப்படியெல்லாம் உண்டா? வாங்காமல் போவாங்களா? எனக்கு இதெல்லாம் தெரியாது நெல்லை. நான் கோயிலில் பிரசாதம் கொடுத்தால் வாங்கிவிடுவேன்.

      யாரேனும் கொடுத்தாலும் கூட..நான் கேட்டதில்லை...அவர்களாகச் சொன்னால் ...எல்லாம் நல்லபடியாக முடியும் என்று வாழ்த்திவிட்டு, அங்கு அவர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்துவிட்டு வருவது வழக்கம். குழந்தைகள் பாசானதற்குக் கொடுத்தது தெரியவந்தால் அதற்கும் வாழ்த்திவிட்டு வாங்கிக் கொள்வேன். எதுவுமே தெரியாமல் என்றாலும் கூட உங்கள் பிரார்த்தனைகள் எல்லாம் நல்லபடியாக முடியும் என்று சொல்லி அவர்கள் முகத்தில் ஏற்படும் அந்த சந்தோஷத்தைப் பார்த்து மனம் சந்தோஷமடையும்.

      கீதா

      நீக்கு
    5. என்னவோ எனக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம். அதாவது தானம் பெற்றுக்கொண்டால், கடனாளி ஆகிடறோம் என்ற எண்ணம்.//

      நெல்லை அப்படி என்றால் திவசம் செய்யும் போதோ அல்லது ஒருவர் இறந்ததும் செய்யும் அந்தச் சடங்குகளுக்கு யாரும் தானம் பெற மாட்டேன் என்றால்? திவசம் செய்பவர்கள் யாரைத் தேடிச் செல்வார்கள்? இப்போது அப்படி ஆட்கள் கிடைப்பதே அரிதாகி வருகிறதுதானே?!!!!!!!!!!!!!!!!!!!

      அப்படிக் கிடைப்பவர்களை நாம் வாழ்த்த வேண்டும்தானே இல்லையா? நான் சொல்வது தவறு என்றால் மன்னிக்கவும்.

      கீதா

      நீக்கு
    6. நாம் கடனாளி ஆவது என்பதெல்லாம் நம் செயல்களினால்தானே...

      கீதா

      நீக்கு
    7. தானம் வாங்கி விட்டால் அந்தப் புண்ணியம் அவர்களுக்கு கிடைத்துவிடும், அவர்கள் பாவம் நமக்குச் சேர்ந்து விடும் என்கிற நம்பிக்கை சிலரிடம் உண்டு.

      நீக்கு
    8. //அப்படிக் கிடைப்பவர்களை நாம் வாழ்த்த வேண்டும்தானே இல்லையா?// - உங்க பாயிண்ட் சரிதான் கீதா ரங்கன்.

      என்னவோ என் மனதில், எதையேனும் பிறரிடமிருந்து பெற்றுக்கொண்டால் நான் கடனாளியாயிடறேன் என்று எண்ணம். எங்க சத் சங்கத்துல கூட (பஹ்ரைன்ல), சாப்பிட ரொம்ப தயங்குவேன்.

      ஒருத்தருக்கு தானம் கொடுத்தால் புண்ணியம் (தேவையானவருக்குக் கொடுக்கணும்). வாங்கினவருக்குப் பாவம் இல்லை, ஏனென்றால் அதைக் கொடுத்தது தெய்வம் (மனித ரூபத்தில்). தேவையில்லாதவங்க, பிறரிடமிருந்து தானம் பெற்றுக்கொண்டால், கொடுத்தவருக்குப் புண்ணியம், பெற்றுக்கொண்டவருக்குப் பாவம் (அதாவது அவர் கடனாளி ஆகிடறார். இனி வரும் பிறப்பில் அதைத் தீர்த்தாகவேண்டும்).

      திவசம் செய்பவர்கள் கடமையைச் செய்கிறார்கள், அதற்கு வருபவர்கள் (சங்குகளுக்கானவைகளுக்கு) அவர்களது கடமையைச் செய்கிறார்கள். இருவருக்கும் பாவ புண்ணியம் கிடையாது. (அந்த மனநிலையில் இருக்கும்போது)

      நீக்கு
    9. நெல்லை சொல்வது போல் தான் எங்க மாமியாரும் சொல்லுவார். கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிச் சாப்பிடவே மாட்டார்.ஆனால் நானெல்லாம் யார் வேண்டிக் கொண்டு கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடுவேன். நல்லா இருந்தது என்று சொல்லி விட்டும் வருவேன். நானே அது மாதிரி நிறையச் செய்திருக்கேன். அனுமாருக்கு வடைமாலை, நம்மாளுக்குக் கொழுக்கட்டை என்று கொண்டு போய் நிவேதனம் செய்யச் சொல்லி விநியோகம் செய்தது உண்டு.பிரசாதங்கள் ஆப்பிட்டால் எல்லாம் கடனாளி ஆக மாட்டேன். வாங்கலைனாத் தான் மனது உறுத்தும். ஒரு முறை நாங்க மதுரை மேலாவணி மூலவீதியில் இருக்கும்போது எதிர் வீட்டில் ஐயப்ப சமாராதனை. மார்கழி மாசம். பரிட்சை நேரம். ஆகவே பரிட்சைக்குப் படிக்கும் மும்முரத்தில் பஜனையில் கலந்துக்கலை. ஐயப்பன் பிரசாதமும் வாங்கிக்கலை! ஏனோ தெரியலை! அன்று பூரா மனசுக்குக் கஷ்டம், வயிற்றுக்கும் ஏதோ பிரச்னை வந்து சாப்பிடவே முடியலை! அதுக்கப்புறமா யார் பிரசாதம்னு கொடுத்தாலும் வாங்காமல் விடறதில்லை.

      நீக்கு
    10. நீத்தார் சடங்குகளில் தானம் வாங்குபவர்கள் தானம் வாங்குவதோடு கடமை முடிந்தது என இருக்க முடியாது. அந்த தானம் வாங்கியதற்காகப் பிராயச்சித்தமும், ஆயிரத்தெட்டு காயத்ரியும் சொல்லணும். அதோடு இல்லாமல் குறைந்த பட்சமாக அடுத்துப் பதினைந்து நாட்களுக்காவது வேறே எங்கும் தானம் வாங்கப் போகக் கூடாது. ச்ராத்தத்தில் பிராமணார்த்தம் சாப்பிடுகிறவர்களைப் பலரும் துச்சமாகப் பார்க்கின்றனர். ஆனால் அவங்க இதற்காகப் பின்னர் காயத்ரி செய்து தங்களைச் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளாவது உபவாசமாக இருக்கணும் என்பார்கள். ஒரு வீட்டில் சாப்பிட்டால் பின்னர் குறைந்தது ஒரு மாசம் வேறெங்கும் போகக் கூடாது! பிராமணார்த்தம் சாப்பிடக்கூடாது!

      நீக்கு
  34. ஸ்ரீராம் எப்படி படங்கள் காணாமல் போச்சு?

    உங்களிடம் கேட்கிறேனே தவிர எனக்கும் சில சமயம் கான்டாக்ட்ஸ் கூடத் தானாக அழிந்து போகிறது. அது போல மொபைல் சில சமயம் தானாகவே ஏதோ அப்டேட் என்றெல்லாம் செய்து கொள்கிறதே அப்போதும் இப்படி சிலது காணாமல் போயிருக்கிறது.

    உங்கள் மெமரி ஃபுல் ஆகிவிட்டதோ? ஸ்ரீராம் இனி செல்லில் எடுக்கும் ஃபோட்டோக்களையும் கணினியில் போட்டு வைச்சுக்கோங்க. நான் அப்படித்தான் செய்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 128 ஜி பி கீதா. எப்படி ஃபுல் ஆகும்? தானாய் அப்டேட் ஆவதெல்லாம் வைரஸ் காரணமாய் இருக்கலாம். ஒருமுறை என் போன் தானாய் யூடியூப் சென்று பாட்டெல்லாம் பிளே செய்தது. அப்போது நான் சார்ஜரில் போட்டிருந்தேன்!

      நீக்கு
    2. சும்மா எ.பில பேய்களைப் பற்றி குறை சொல்லிலாம் இடுகை போட்டால் இப்படித்தான் நடக்கும். ஏதேனும் பேய்ச்சமாச்சாரமா இருக்கும். ரொம்ப பேய்களை கேஜிஜி சாரை கலாய்க்கச் சொல்லாதீங்க.

      எந்தப்பாட்டை ப்ளே செய்தது? மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா அந்தப் பாட்டா இல்லை... வெண்மேகமே வெண்மேகமே..கேளடி என் கதையை பாட்டா?

      நீக்கு
    3. நெல்லை பாட்டை பிளே செய்தது மட்டுமில்லை. ஒரு ராங் கால் போய் அது ஒருவிபரீதம் கொண்டுவந்து... அதையும் பதிவாக்கியிருக்கிறேன் என்று நினைவு! ஆனால் என்ன பாட்டு என்று நினைவில்லை!

      நீக்கு
  35. சுகிசிவம் சொல்லியிருப்பதற்கு நான் அப்படியே டிட்டோ செய்கிறேன். நான் நினைப்பதும் சொல்வதும். பரிகாரம் என்றில்லை. மனமார்ந்து அன்புடன் முடிந்த போதெல்லாம் செய்யலாமே என்று. குறிப்பிட்ட காலம் தான் என்று எதற்குச் செய்ய வேண்டும். அப்போ அது ஜஸ்ட் எதிர்பார்ப்புதானே? நமக்குக் காரியம் ஆனதும் முடித்துக் கொள்வது...இது ஏனோ மனதை வருத்தும்...புண்ணியம் என்பது கூட எதிர்பார்த்துச் செய்வதுதானோ என்று தோன்றும் எனக்கு. இது என் தனிப்பட்டக் கருத்து.....

    என் தங்கை தன் பெண்ணிற்காகப் பைரவர் கோயில்கள் பரிகாரம் என்று திருப்பத்தூர் அருகே இருக்கும் கோயில்களுக்குச் சென்ற போது நானும் வர வேண்டும் என்று சொல்லி நான் சென்றேன். அப்போது நான் சொன்னது பைரவர் என்பது நம் செல்லங்கள் தானே அவர்களுக்கு உணவு கொடு என்றேன். அதே போல நட்சத்திரக் குழந்தைகளுக்கு அதாவது இல்லத்தில் வளரும் நட்சத்திரக் குழந்தைகளுக்கு முடிந்தால் சேவை செய் உடலாலோ அல்லது பணத்தாலோ என்றும் சொல்லியதுண்டு.

    பைரவர் பரிகாரம் சொல்லப்பட்டவர்கள் பலருக்கும் முதலில் எங்கள் வீட்டில் செல்லம் இருக்கு என்று வரத் தயங்கிவர்கள் அதன் பின் வந்து தள்ளி நின்று கொஞ்சிவிட்டுச் சென்றதுண்டு.

    நான் முன்னரே சொல்லிவிடுவேன். இது வீட்டில் வளர்வது எனவே நீங்கள் கொண்டுவரும் பிஸ்கட் ப்ரெட் அவளுக்கு வேண்டாம் என்று. தெருவில் பாவமாக எத்தனையோ இருக்கிறதே. அப்புறம் குங்குமம், பூ எதுவும் வைக்கக் கூடாது என்றும்.

    இதில் மற்றொன்றும் சொல்ல வேண்டும். இப்படிச் கெய்பவர்கள் தங்கள் பரிகார நாட்கள் முடிந்ததும் இப்படியான சேவைகள் எதுவும் செய்வதில்லை. ஸோ பரிகாரம் கூட எதிர்பார்ப்பில்தான்!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா... இந்த எதிர்பார்ப்பு சமாச்சாரம் எனக்கும் தோன்றும்.

      நீக்கு
    2. //எனவே நீங்கள் கொண்டுவரும் பிஸ்கட் ப்ரெட் அவளுக்கு வேண்டாம் என்று. தெருவில் பாவமாக எத்தனையோ இருக்கிறதே.//

      ஹா ஹா... நாம யாரும் பரிகாரம்னா என்ன, எதுக்குச் செய்யறோம்னு புரிஞ்சுக்கறதில்லை. அன்னதானம்னு சொல்லிட்டு, என்னை மாதிரி ஆட்களை வாங்க சாப்பிடுங்க என்று கூப்பிட்டு சாப்பாடு போடுவதில் என்ன பிரயோசனம் கிட்டும். வயிறொட்டிய ஏழைகளைனா கூப்பிட்டுச் சாப்பாடு போடணும்.

      நீக்கு
  36. சனிக்கிழமை எள்ளு சாதம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள் சிலர்.(கோவிலில்)
    இறைவனுக்கு படைத்த எள்ளு சாதத்தை கோவிலில் வைத்து உண்டால் தப்பில்லை, வீட்டுக்கு கொண்டு போக கூடாது என்பர் சிலர்.
    மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவிலில் அமாவாசை சமயம் அன்னதானம் நடக்கும், மக்கள் அவர்கள் அன்று அன்னதானம் செய்தால் நல்லது என்று அவர்களே உணவு பொட்டலம் வாங்கி கொடுப்பார்கள். சிலர் காசு கொடுங்கள் சாப்பாடு வேண்டாம் என்பார்கள். கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பின் அவர்கள் வயிற்றில் இடம் இருக்குமா?

    வேறு எத்தனையோ இடங்களில் சாப்பாடு கிடைக்காமல் மக்கள் சுற்றி அலைவார்கள் அவர்களை தேடி கொண்டு போய் கொடுத்தால் அவர்கள் பசி நீங்கி வாழ்த்தினால் நல்லது. மாட்டுக்கும் அமாவாசை அன்று அகத்திகீரையை போடுவார்கள், அது முகத்தை திருப்பிக் கொண்டு வாங்காது. மலை போல் குவிந்த அகத்திகீரையை குப்பையில் கூட்டி தள்ளுவதை பார்த்தால் மனம் கஷ்ட படும்.

    தவித்த வாய்க்கு தண்ணீர், பசித்த வயிறுக்கு உணவு, உடலை மூட ஆடை எப்போது தேவையோ அப்போது கொடுக்க வேண்டும்.
    நாம் புண்ணியம் பெற குறிப்பிட்ட நாளில் மட்டும் கொடுப்பதை பற்றி நாம் சிந்தித்தால் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா ஆமாம் அக்கா நீங்கள் சொல்லியிருப்பதும்...தேவைப்பட்டோருக்குக் கொடுக்காமல் ஜஸ்ட் புண்ணியம் பரிகாரம் என்று கொடுப்பது...

      கீதா

      நீக்கு
    2. ஆமாம் கோமதி அக்கா... பாவம் மாடுகள்! ஒரு நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பசி ஆற்றுகிறேன் என்று வந்தால் மாடுகளோ, மனிதர்களோ என்ன செய்ய முடியும்? ஒரு வாரத்து சாப்பாட்டை ஒரே நாளில் சாப்பிட முடியுமா என்ன!

      நீக்கு
    3. //அவர்களை தேடி கொண்டு போய் கொடுத்தால் அவர்கள் பசி நீங்கி வாழ்த்தினால்// - கோமதி அரசு மேடம்... சரியான ரெண்டு பாயிண்டைச் சொல்லியிருக்கீங்க. பாராட்டறேன்.

      சும்மா கோவில்ல இருக்கற யானை, காராம்பசுக்கு கோவிலுக்குப் போற பக்தர்கள் அனைவரும் உணவு (சும்மா இல்லை. புண்ணியம் என்ற நினைப்பில்) கொடுத்தா, அதுகள் சீக்கு வந்து சீக்கிரமே பரலோகம் போயிடும். அப்படிச் செய்வதற்குப் பதிலாக, யாருக்குத் தேவை என்று பார்த்துக்கொடுத்தால்தான் அந்த தானம் சிறப்புறும்.

      உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பது போல, கஷ்டப்படறவங்களுக்குத்தான் உதவி தேவை (என் மனசுல சுமங்கலிப் ப்ரார்த்தனை என்பதைப் பற்றியும் அபிப்ராயபேதம் உண்டு. எத்தனையோ ஏழை சுமங்கலிகளைக் கூப்பிட்டு அவங்களுக்கு புடவை போன்ற உதவி செய்வதுதானே இன்னும் சிறப்பு?)

      நீக்கு
  37. மற்றொன்று நம் பெற்றோர், பெரியவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை மகிழ்விக்க வேண்டும். அவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் மறைவிற்குப் பின் செய்வது என்பது அவரவர் நம்பிக்கை.

    ஆனால் இருக்கும் போது கவனிக்காமல் இறந்ததும் மட்டும் விழுந்து விழுந்து சடங்குகள் செய்வது என்னவோ பக்தி சிரத்தையாகச் செய்வது போல அப்போது அம்மா இப்படிச் செய்தாள் அப்பா அப்படிச் செய்தார் என்று சொல்வதைப் பார்க்கும் போது ஹிப்போக்ரட்ஸ் நல்ல நடிப்பு ஊருக்காக என்று தோன்றும். இவர்கள் எல்லோரும் ஆத்மார்த்தமாகச் செய்யாமல் பயத்தினாலும், இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே சாஸ்திரத்தில் என்பதற்காகவும் செய்கிறார்கள் என்றே தோன்றும். உயிருடன் இருக்கும் போது தனிமைப்படுத்திவிட்டு....மனம் மிகவும் வேதனைக்குள்ளாகிவிடுகிறது இதை நினைக்கும் போது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையான கருத்து. பின்னர் மனசாட்சி உறுத்துமோ என்னவோ!

      நீக்கு
    2. நீங்க என் மனசைத் தொடும்படி எழுதியிருக்கீங்க கீதா ரங்கன்(க்கா)

      நீக்கு
  38. "ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டேன் போலிருக்கிறது. இதிலிருந்து விடுபடுவது ..."ஹாய் நலமா முருகானந்தன் கிளினிக்...பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் அவர் தளம் சென்றிருக்கிறேன் சகோதரி மாதேவி. சமீபகாலத்தில் சென்றதில்லை.

      நீக்கு
  39. கயா ஸ்ரார்த்தம் பற்றிய ரமேஷ் ஜம்புநாதனின் விவரிப்பு வழிநடத்தக்கூடியது. பித்ரு காரியம் செய்யுப்போகுமுன் (எத்தனைபேர் செய்தார்கள் எனத் தெரியவில்லை) சரியான இடத்தில், விரிவாகச் சொன்ன புண்ணியவான். அதற்கப்புறம் மேலே படிக்கத்தோன்றவில்லை. அங்கேயே நீங்கள் இந்த வியாழனை நிறுத்தியிருக்கலாம் எனத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தோன்றியதுதான் ஏகாந்தன் ஸார். ஆனால் நண்பர்கள் கதம்பம் எதிர்பார்ப்பதால் போட்டேன். ஆனாலும் கிட்டத்தட்ட அதே சப்ஜெக்ட் போலவே அமைந்திருப்பது எதேச்சையாய்தான்.

      நீக்கு
    2. பாட்டி கதை அல்லது கவிதை நன்றாக இருக்கிறது. முதற்பகுதியின் தொடர்ச்சிபோல அமைந்ததால் ஒருவகையில் கோர்வையாக அமைந்தும்விட்டது

      நீக்கு
    3. //பாட்டி கதை அல்லது கவிதை //

      இப்படிச் சொல்லலாம்.. க(வி)தை !!!!

      நன்றி ஏகாந்தன் ஸார். இதே வரிசையில் சுகி சிவம் பரிகாரங்களையும் சேர்க்கலாம்!

      நீக்கு
  40. கயா, சிரார்த்தம் பற்றிய விவரணம், கதைகள் - சீதை கொடுக்கும் சாபம்...எல்லாம் இப்போதுதான் அறிகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    இன்றைய பயண கட்டுரை நன்றாக இருக்கிறது. உணர்ச்சி பூர்வமான பேச்சுகளை பதிவிட்டதில் மனது கலங்கியது. கவிதை மிகவும் நன்றாக உள்ளது. படித்ததும் மனதுக்கு பாரமாக இருக்கிறது. சுகிசிவம் அவர்களின் கூற்றும் நன்றே. இன்று என்னவோ அத்தனை விஷயங்களும் மனதை கலக்கமுறும் வண்ணம் (என் மனதும் கலக்கத்தில் சோர்ந்துள்ளது. அதனால் வலைதளம் வரவும் தாமதமாகி விட்டது.) கதம்பமாகி இருக்கிறது. தங்கள் பிரச்சனைகளும் நல்லபடியாக சுமுகமாக முடிந்து நல்ல வழிகளை காண, மனமாற இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..

      உங்கள் மனம் ஏன் சோர்வுற்றுள்ளது? கலகலப்பாக இருங்கள்.

      பயணக்கட்டுரை பாராட்டுக்கும், கவிதை பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
    2. மகன் மருமகள் வேலை விஷயமாக வெளி நாட்டு பயணம். இதுவரை பிரியாத பிரிவை சந்திக்க (எனக்கு) திராணியில்லை.மனம் இயல்பாக வாட்டமுறுகிறது.பயண வேலைகள் மும்மரத்தில் நேரம் பறக்கிறது. விசாரிப்பு ஆறுதலை தருகிறது. நன்றி.

      நீக்கு
    3. ஓ... கொஞ்ச நாள் போனால் சரியாகி விடும் அக்கா. ஸ்கைப், வாட்ஸாப் வீடியோ போன்ற டெக்னாலஜி வசதிகள் இருக்கின்றன. அவ்வப்போது பேசிக்கொள்ளலாம்.

      நீக்கு
  42. பயணம் பற்றிய குறிப்புகளும் விவரங்களும் சிறப்பு. நிறைய தகவல்கள். நான் சென்ற போது கேட்டவற்றை இங்கே மீண்டும் படிக்க முடிந்தது.

    அக்ஷய் வட் - அலஹாபாத் - இப்போது அங்கே நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள். கோட்டைக்குள் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!