1) மரம் நடுவதையே வாழ்நாள் லட்சியமாக வைத்து, வாழ்ந்து வரும், திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தைச் சேர்ந்த செல்வகுமார்.
2) உழைப்பால் உயர்ந்தவர். மற்றவர்களுக்கு உபயோகமான தொழில்.
3) தஞ்சை அருகே, இளைஞர் ஒருவர், தன் வயலில் வீணான போர்வெல்லில், நிலத்தடி நீரை சேமிக்கும், 'போர்வெல் ரீசார்ஜ்' முறையை பயன்படுத்தி, விவசாயத்தில் அசத்தி வருகிறார்.
========================================================================================
சனிக்கிழமை 27.07.2019 சாமியாத்தாள் முதல் வெள்ளிக்கிழமை 02.07.2019 பிபிஎஸ், டிஎம்ஸ், ஜெமினி வரையான எங்கள் ப்ளாக் பதிவுகளைப் பற்றிய ஒரு மீள்சுற்று
- கீதா ரெங்கன் -
- கீதா ரெங்கன் -
ஸ்ரீராம் அழைப்பு விடுக்க, விமர்சனம் என்பதால் சனிக்கிழமையிலிருந்து தொடங்கி இந்த வெள்ளிக்கிழமை வரையிலான பதிவுகளை மீள்சுற்று செய்து (தலைப்பில் உள்ள வார்த்தை டேலி ஆகிவிட்டது!) விமர்சனம்.
எங்கள் ப்ளாகில் பதிவுகளுக்குக் கருத்துகள் முன்பை விட கொஞ்சம் குறைவாக இருக்கிறது. கருத்துகள் மாயமாய் பதுங்கி ஒளிந்து கொள்ளும் அளவு இடப் பற்றாக்குறை ஏற்பட்ட காலம் இருந்து வந்தது. அதிகமான கருத்துகள் கொடுப்பவர்களைக் காணாததும், முன்பு கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இப்போது குறைவாகக் கருத்து இடுவது போன்றும் தோன்றுகிறது. என்றாலும் இந்த வாரம் புதன், வியாழன், வெள்ளி தினங்களில், கருத்துள் இடப்பற்றாக் குறையால் ஒளியவில்லை என்றாலும் கருத்துப் பெட்டிகளைக் கணிசமாகவே நிறைத்தன என்பது மகிழ்ச்சி. மீண்டும் கருத்து மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எங்கள் பிளாகின் கருத்து வானிலை அறிக்கை சொல்கிறது.
சரி முன்னுரைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து என்னுரைக்கு வருகிறேன்.
சனிக்கிழமை
சனிக்கிழமை
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
நல்வழியில் ஈட்டிய பொருளை தகுதி படைத்தவர் அதாவது உழைத்து வாழ முடியாத நிலையில் இருப்பவர்க்கும், பொருளின் இன்றியமையாமையை உணர்ந்தவர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்பதைப் பற்றித்தான் ஐயன் பேசுகிறார். உழைக்க முடிந்தும் உழைக்காதவர்க்குப் பொருள் கொடுத்து அவர்களைச் சோம்பேறி ஆக்கிக் கெடுப்பதை விட அறவே தவிர்க்க வேண்டும்.
ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
முதலில் சொல்லப்பட்ட குறளின் பொருளின் கடைசி வரிகளின் தொடர்ச்சியாக இதைக் கொள்ளலாம். நம் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு (போதும் என்ற மனம் இருந்திடல் வேண்டுமே) உதவி தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வாழ்பவன்தான் உயிருடன் வாழ்பவனாவான். தான் உழைத்துச் சம்பாதித்த பொருளைத் தேவைப்பட்டும் பிறருக்கு வழங்காதவன் உயிர் இருந்தும் பிணத்திற்குச் சமமாகவே மதிக்கப்படுவான்.
அப்படியான உள்ளங்களைத் தேடி எடுத்து இடும் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றியுடன் பாராட்டுகள்.
பனி போல் விலகிடும் துன்பம் என்றே
கனிவாய் கரம் நீட்டும்
இனிய மனம் படைத்த
மனிதரும் உளர் என்று
சனி அன்று எடுத்தியம்புமே எங்கள் ப்ளாக்!
கடந்த சனி (27.07.2019) அன்று வெளியான பாசிட்டிவ் செய்திகளில் இடம் பெற்றவர் சாமியாத்தாள்! இயற்கை மருத்துவம் சார்ந்த மாநாடு, கால்நடை மருத்துவ முகாம், கட்சி விழாக்களில், குடில்கள் அமைத்து, மூலிகை செடிகளை வழங்கி வருவதுடன், பல நோய்களுக்கும் தீர்வு கண்டு வருகிறார். நல்லதொரு செய்தி. எங்கள் ப்ளாகிற்கு ஒரு பூங்கொத்து!
ஒரே ஒரு செய்தி என்றாலும், அன்றைய பதிவை நிறைவாய் ஆக்கியது ஜீவி அவர்களின் விமர்சனம். அருமையான விமர்சனம். கதை எப்படி இருக்க வேண்டும் என்று முந்தைய வாரத்து செவ்வாய்க் கதையை அலசி ஆராய்ந்து சிறப்பித்து, கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் கதையை எப்படி எழுதலாம் என்பதற்கும், ஒரு கதையையும் சரி பிற படைப்புகளையும் சரி எப்படி விமர்சிப்பது என்பதற்கும் நல்ல உதாரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல.
ஞாயிறன்று பொதுவாக எல்லோருக்கும் விடுமுறை நாள். பலரும் தங்களின் வாரப் பணிகளில் இருந்து ஓய்வெடுத்து மனதை இலேசாக்கிக் கொள்ள முனைந்திடும் நாள். அதற்கு ஏற்றாற் போல், எங்கள் ப்ளாக் ஆசிரியர்களில் ஒருவரது சுற்றுலாப் படங்கள் தற்போதைய தொகுப்பு.
கடந்த ஞாயிறு (28.07.2019) அன்றைய படங்கள் வழக்கம் போல் இருந்தன. அதில் ஒரு படத்தில் காய்கள் எல்லாம் கோன் போன்ற மூங்கில்? கூடைகளில் நிரப்பப்பட்டு செல்லும் வழியில் சுவற்றில் தொங்கவிடப்பட்டு இருந்தது வித்தியாசமாகவும், அழகாகவும் இருந்தது.
இப்போதெல்லாம் சில உணவகங்களில் தோசை/தோசா/தோஷா (அந்த தோசைக்கு என்ன தோஷம்? எண்ணெய்தான் தோஷம்) அல்லது ஊத்தப்பம். (ஊத்து+அப்பம். அப்பம் போன்று தடிமனாக, மாவை தாராளமாக ஊற்று என்பதால் வந்த பெயர். இப்போது ஊத்தப் என்றுதான் சொல்ல வேண்டும். பின்னே கவுண்டரில் வட இந்தியர்கள் இருந்தால்!) போன்றவற்றில் என்ன டாப்பிங்க் செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியல் கொடுத்து அதில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்றைத் தேர்ந்தெடுத்துச் சொன்னால் அதை மாவின் மேல் போட்டு செய்து தருவது போல் நாம் சொல்லும் காய்களில் கறி அல்லது கூட்டு செய்து தருவார்களோ? அதையும் சென்றவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டு சொல்லியிருக்கலாம். (வாசலில் வாத்து. போகும்போது எண்ண மறந்து விட்டோம். பக்கத்து டேபிள்காரர் duck soup சாப்பிட்டார் என்று ஞாபகம் என்று சொல்லியிருந்ததால்!)
படத்திற்கான தலைப்புகள் நன்றாக இருந்தன. ஆனால், சில வித்தியாசங்கள் + சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதைச் சொல்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.
திங்களன்று வெளியாகும் சமையற் குறிப்புகளுக்கும், பின்னூட்டக் கருத்துகளுக்கும் எந்த எதிர்மறைக் கருத்தும் கிடையாது எனலாம். அவரவர் பாணியிலான சமையற் குறிப்புகள். எதுவும் சோடை போனதில்லை!
எச்சரிக்கை 1: கூகுள் தேவதையிடம் தமிழ்ச் சொற்கள் கற்றுக் கொள்ளுங்கள். கோந்தடை, புரியடை, தோய்ச்சி, செழும்பம், பிறைமடி, புடைச்சி என்று யாரேனும் சமையற்குறிப்பு போட்டால் இதென்னது என்று குழம்பினால் அதுக்கு நான் பொறுப்பல்ல.
கடந்த திங்கள் (29.07.2019) அன்று நெல்லைத் தமிழனின் பருப்புப் பொடியும், இட்லி மிளகாய்ப் பொடியும். நல்ல குறிப்புகள். அன்றைய குறிப்பின் தனித்துவமே தந்தை மகன் பாசம் தான் அந்தப் பொடிகளில் தெரிந்தது. மகனுக்காகப் பார்த்து பார்த்துச் செய்யும் தந்தை. மகன் தந்தைக்காற்றும் உதவி எனும் குறளை மாற்றிப் போட்டுக் கொள்ளலாம்!
இதெல்லாமா ஒரு குறிப்பாகப் போடுவார்கள் என்று கலாய்த்தல் கருத்து வந்திருந்தது. சமையல் ஜாம்பவான்/ஜாம்பவிகளுக்கு அப்படித் தோன்றலாம். என்னைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கும், வேறு வேறு அளவீடுகளில் செய்து பார்க்க விரும்புபவர்களுக்கும் உதவும் எனலாம்.
செவ்வாய்க் கிழமை கேட்டு வாங்கிப் போடும் கதை வெளியாகும் நாள் என்பதால் பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள். யாருடைய கதை எப்படியான கதை என்ற எதிர்பார்ப்பு. பலரது எழுத்துத் திறனும் ஒளிரும் நாள். கதை எழுதுபவர்கள் தங்கள் எழுத்தின் வலிமையை உணரவும், மேம்படுத்தி, மெருகேற்றிக் கொள்ளவும் உதவும் நாள்.
கடந்த செவ்வாயன்று (30.07.2019) மண்ணின் மைந்தன் ஜூனியர் என்று பட்டம் சூட்டிடலாம் என்று சொல்லும் அளவிற்கு அவர் தம் மண்ணின் மணத்துடன் கதை படைக்கும் படைப்பாளி பரிவை சே குமாரின் கதை. அருமையான கதை சொல்லி எனலாம். அழகான, அருமையான கதை. (மண்ணின் மைந்தர் சீனியர் ஒருவர் இருக்கிறார். அவர் யாரென்று நீங்கள் கேட்க மாட்டீர்கள். கேட்டால் நீங்கள் செவ்வாய் அன்று கதைகளைப் பார்ப்பதில்லை என்று சொல்லிவிடலாம்)
நினைவுகள் - இந்த நினைவுகளை என்ன செய்வது..?
நினைவுகள் - இந்த நினைவுகளை என்ன செய்வது..?
அதுதானே என்ன செய்வது? இந்த மனமானது மனதின் அடியில் கிடப்பவற்றையும் தேவையில்லாத சமயத்தில் எழுப்பி விட்டு இவன் என்ன செய்கிறான் என்றுதான் பார்ப்போமே என்று வேடிக்கை பார்க்கும் அளவிற்குப் பல நினைவுகளை அழுத்தமாகப் பதித்துப் போகின்றது. அப்படி பலரது மனதிலும் பதிந்து போன ஒன்று. பொதுவான விஷயம் அதுவும் தொடர்கதையாக, தலைமுறை தலைமுறையாகச் சொல்லி வருவதுதான் “எங்க காலத்துல” என்று. அதற்கு அக்கதையின் கதாபாத்திரமான அந்த 70 வயதுககாரரும் விதிவிலக்கல்ல.
'நல்லாயிருக்கு... இந்த வயசுல இனி தனியா இங்கேருந்து அந்த ஊருக்குப் பொயிட்டு வர்றதுன்னா நடக்குற காரியமா..”
மனைவியின் கேள்விக்கு பெரியவர் இப்படிப் பாடியிருப்பாரோ மனதிற்குள்?
அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா (டி)
அதனால் அவரையும் இளைஞர் ஆக்கியிருக்கும்தான். அந்த நினைவுகளுடனேயே தன் ஊருக்குச் செல்கிறார். மாற்றம் ஒன்றுதானே மாறாதது. ஊரில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்க்கும் பெரியவருக்கு அதுவும் பல வருடங்களுக்குப் பிறகு பழைய நினைவுகளுடனேயே செல்லும் அவரது மனம் அந்த மாற்றங்களை ஏற்க மறுக்கிறது. ஏற்படும் மனதின் வலி, வெறுமை. இறுதியில் மனதில் ஒரு முள். அதனால் அம்முள்ளின் அருகில் மலர் பூக்காமல் போயிற்று போலும். விரைவில் முள்ளின் அருகில் ஒரு மலரும் பூத்திடும் என்று நம்புவோம்.
இது தங்கள் ஊரின் மீதான பாசம் நிறைந்த பலர் மனதிலும் ஏற்படும் உணர்வுகள். இந்த மன நிலையையும், மாற்றங்களையும், உணர்வுகளையும் மிக யதார்த்தமாகத் தன் மண்ணின் மணத்துடன் சொல்லியிருக்கிறார். கதையை வாசித்ததும் அவரவர் மண்ணின் சுகந்தமான வாசம் மனதில் நெடுநேரம் இருந்திருக்கும் என்பது உறுதி. அப்படியான மணத்தைப் பரப்பிய கதாசிரியருக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.
பிஏசி யில் குழந்தை போன்ற மனதைப் பற்றிய சிறப்புக் கருத்துகளும், பெரியவர்களின் மனதிலும் குழந்தை மனது இருக்கும் அதை கண்டு அதனுடன் உரையாட வேண்டும் என்றும், இயல்பாக்ச் சிரிக்கும் மனதுடையவர்களை எளிதாக அணுக முடியும் என்பதான அருமையான கருத்துகள் சொல்லப்பட்டிருந்தது.
ஒரு சிலர், சிரிப்பா? அப்படி என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? நான் இதுவரை அறிந்ததே இல்லையே? அதன் விலை என்ன? என்று கேட்பது போன்ற அகம், முகம் (அகத்தின் அழகு முகத்தில்) உடையவர்களும் இருக்கிறார்கள்தான். அவர்களைக் காணும் போது ஏன் இப்படித் தங்கள் வாழ்க்கையை வருத்திக் கொள்கிறார்கள் என்று தோன்றும். கீழே வாழ்க்கை பேசுகிறது.
கடந்த புதன் அன்று (31.07.2019) கோயிலுக்கு எதற்காகச் செல்கிறோம் என்ற கேள்விக்கான பதில்கள் சிறப்பு. அதிலும் ஒவ்வொரு பருவத்தின் காலகட்டத்திலும் செல்வதன் காரணம் அதி சிறப்பு. உண்மைதான். வயதாகும் வேளையில் கடமைகள் எல்லாம் ஓரளவிற்கு முடிந்த நிலையில் பொதுவாகவே பலரும் அமைதி நாடித்தான் செல்வது. அதன் பின் நடமாட்டம் குறையும் தருவாயில் இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம் தான்!. அந்தி செயலழின் தலம் வரும் பொழுது அவன் பெயர் நாவில் வாராதே. ஆதலினால் மனமே இன்றே சிவன் நாமம் சொல்லிப் பழகு.
பிஏசி யில் குழந்தை போன்ற மனதைப் பற்றிய சிறப்புக் கருத்துகளும், பெரியவர்களின் மனதிலும் குழந்தை மனது இருக்கும் அதை கண்டு அதனுடன் உரையாட வேண்டும் என்றும், இயல்பாக்ச் சிரிக்கும் மனதுடையவர்களை எளிதாக அணுக முடியும் என்பதான அருமையான கருத்துகள் சொல்லப்பட்டிருந்தது.
ஒரு சிலர், சிரிப்பா? அப்படி என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? நான் இதுவரை அறிந்ததே இல்லையே? அதன் விலை என்ன? என்று கேட்பது போன்ற அகம், முகம் (அகத்தின் அழகு முகத்தில்) உடையவர்களும் இருக்கிறார்கள்தான். அவர்களைக் காணும் போது ஏன் இப்படித் தங்கள் வாழ்க்கையை வருத்திக் கொள்கிறார்கள் என்று தோன்றும். கீழே வாழ்க்கை பேசுகிறது.
புன்சிரிப்பைப் பற்றி பேசிக் கொண்டே வந்தால் ஆங்கே சில அழகு தேவதைகளின் மோகனப்புன்னகையின் அணிவகுப்பு. லிஸ்டில், எங்கள் பிளாகில் தவறாமல் இடம் பிடிக்கும் அனுஷ்காவும், தமன்னாவும் இல்லாதது இரு விசிறிகளுக்கும் கொஞ்சம் குறையாகப்பட்டிருக்கும் என்று கருத்துகளில் அறிய முடிகிறது. ஒரு வேளை அவர்கள் புன்சிரிக்க மாட்டார்களோ? விசிறிகள் விரிந்து என்னைத் துரத்த வந்தாலும் அத்திப் பூத்தாற் போல் பூத்திருக்கும் அத்திவரதர் என்னை ரட்சிப்பாராக. (இப்போது அவர்தானே ஃபேமஸ்!).
அன்று கருத்துப் பெட்டியில் ஒரு பெட்டியில் கொஞ்சம் ஜொள். ஆண் நடிகர்களின் புன்னகை பற்றிய வருணனை. கூடவே வேறொருவரும். எனவே அடுத்த புதன் அன்று அவர்களுக்காகவேனும் நடிகர்களின் படங்கள் போட்டு யார் நன்றாகப் புன்சிரிக்கிறார்கள் என்று கேட்டு வையுங்கள். வித்தியாசமான மழையாகப் பொழியட்டுமே. இஃகி இஃகி என்ற சிரிப்பும், கடும் போட்டிகளும் நிலவும் வாய்ப்பு உண்டு.
பின்னூட்டத்தில் டிடி அவர்கள் புதியதொரு தொழில்நுட்பம் கற்றுக் கொடுத்திருக்கிறார். கருத்துகளிலும் சொற்களின் மூலம் சுட்டி பகிர்வது எப்படி என்று. அவருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.
எச்சரிக்கை 2: கீழே உள்ள படத்திற்கும் பி ஏ சி கருத்துகளுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்
இது பெண் குழந்தை வளர்ப்பிற்கும் பொருந்தும்
You are not raising your daughter… You are raising somebody’s wife and somebody’s mother. Rais her well.
கடந்த வியாழன் (01.08.2019) அன்று கயகயகயகயகயா. தலைப்பைப் பார்த்ததும். ஹர ஹர ஹர ஹர மாஹாதேவ் என்று சொல்வது போலத் தோன்றியது. கயா “கயா” வாகி பயணக் குறிப்புகள் முடியும் தருவாயில் வந்துவிட்டது. படங்கள் நன்றாக இருந்தன. கூடவே விவரங்களும் நன்றாகவே இருந்தது. பல இடங்களில் ஸ்ரீராமால் நினைத்தது போல் படங்கள் எடுக்க முடியவில்லை என்பதும், அப்படியான பயணமும் இல்லை என்பதும் புரிகிறது. பயண ஏற்பாட்டாளர்களும் அதற்கு ஒரு காரணம் எனலாம். பேசாமல் காசி டூர் ஆர்கனைசரிடம் ஏற்பாடு செய்து தரச் சொல்லியிருக்கலாம்!. ஸ்ரீராமின் காசிப்பயணத்தைத் தொடர்ந்து இருவர் காசி, கயா நோக்கிய பயணம் செய்ய தயாராக இருக்கிறார்கள். காசி டூர் ஆர்கனைசரும் நஷ்டத்தினால் ஓடிப் போய்விட்டார் போலும்.
//"இன்னும் கொடு.. இன்னும் கொடு.." என்று என்னை அரித்துக் கொண்டே இருந்தார்கள். ரமேஷ் சொன்ன திருப்தியில்லா பிராமணர்கள் நினைவு வந்தது. மேற்கொண்டு நூறு ரூபாய் கொடுத்தேன். அவரவர்கள் எதிரே நின்றவர்கள்தான் அவரவர்கள் பித்ருக்கள் - முன்னோர்கள்.//
நாம் பித்ருக்கள் என்று அன்புடனும், கருத்துடனும் ஓடி ஓடிப் பரிமாறி அவர்களைக் கவனிக்கும் போது இவர்கள் இப்படி டிமான்ட் செய்வது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இப்படி இருப்பவர்கள் சடங்குகள் செய்பவர்களை நல்ல மனதுடன் ஆசிர்வதித்து அனுப்ப வேண்டும் இல்லையா? அவர்கள் மனம் அதில் ஈடுபடாமல் பணத்தில், பொருளில் குறியாக இருக்கும் போது முன்னோர்கள் திருப்திப்பட்டார்கள் என்று சொல்வது கொஞ்சம் நெருடல்தான். நாம் நம் கடமையைச் செய்வோம் பலன் எதிர்பாராமல் என்ற மனம் தான் இதற்குப் பொருந்தும் என்றாலும் சில கேள்விகள் எழுகின்றன.
//பார்த்தால் என் செல்லைக் காணோம்! பகீர் என்றது. என் மாமா "போனால் போகட்டும் விடு... அதுவும் நல்லதற்குதான் (யாருக்கு?) ஏதோ கர்மவினை" என்று பீதி ஊட்டினார்.// இது பீதியான கர்மவினை.
//நான் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்திருந்தவர்களை சற்றே நகரச்சொல்லி தேடினேன். சுவர் ஓரம் பத்திரமாக அமர்ந்திருந்தது என் செல்!//
இதற்கும் கர்மவினை என்ற பதில்? இது மகிழ்ச்சியான கர்மவினை.
கவிதை மிக அழகான கவிதை. மிகவும் பிடித்தது. வரிகள் அனைத்தும். எல்லோரும் அகத்துள்ளே இறைவனை வைத்துக் கொண்டு வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. கவிஞர் ஸ்ரீராமிற்குப் பாராட்டுகள்!
வெள்ளி அன்று பாடல்கள். இப்போது நேயர் விருப்பமும் சேர்ந்துள்ளது கூடுதல் சிறப்பு. டபுள் தமாக்கா! மிகவும் பிடித்த நாளும் கூட.
நண்பர்கள் யாரும் விரும்பிய பாடலை அப்போதே கேட்காமலா இருக்கிறார்கள்? – இது ஜி எம் பி சாரின் கேள்வி!// //சும்மா.. இதெல்லாம் ஒரு சுவாரஸ்யம்! அவ்வளவுதான்.// இது ஸ்ரீராமின் பதில்
இங்கு நமக்குப் பிடித்த பாடலைச் சொல்லி வெளி வரும் போது அதற்கு மற்றவர்களின் கருத்து, பல தகவல்கள், கருத்துகளிலும் பாடல்கள் என்று வருவதும், நமக்குத் தெரியாதவை வருவதும், நாம் அதை அறிவதும், நமக்குத் தெரிந்த கூடுதல் தகவல்கள் பகிர்வதும் என்பதெல்லாம் நிச்சயமாக ஒரு ஸ்வாரஸ்யம்தான். வரவேற்கிறேன்.
நேற்றைய வெள்ளி (02.07.2019) அன்று பகிரப்பட்ட இரு பாடல்களுமே மிகவும் அருமையான பாடல்கள். முதல் பாடல் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் மிளிரும் பாடல் என்றால் இரண்டாவது டி எம் எஸ் மற்றும் பிபிஎஸ் இருவரின் குரலில் அருமையான பாடல். என்னே குரல்வளம் இருவருக்கும்! கூடவே தகவல்களும், பின்னூட்டங்களிலும் பாடல்கள் என்று மிகச் சிறப்பான “வெள்ளி”யாக ஒளிர்ந்தது. பகிரப்பட்ட பாடல்களும் அதற்குக் காரணம் எனலாம்.
நலம் வாழ்க...
பதிலளிநீக்குவாங்க... வாங்க...
நீக்குஅன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குகீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
வழிமொழிந்து வரவேற்கிறேன் உங்களோடு சேர்(ந்து)த்து அனைவரையும்.
நீக்குவரவேற்ற துரைக்கும், மற்றும் வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
நீக்குவரவேற்காத கீசா மேடத்துக்கும் மற்றும் வருகை புரியும் நண்பர்களுக்கும் வணக்கம், வாழ்த்துகள், ப்ரார்த்தனைகள்.
நீக்குபொங்கும் புதுவெள்ளம் போல்
பதிலளிநீக்குநலமெலாம் பெருகட்டும்..
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்...
நலமெல்லாம் விளையட்டும் காவிரியோடும் தஞ்சையாகத்தாரே...
நீக்குஅன்பு ஸ்ரீராம்,அன்பு துரை அனைவருக்கும், இன்னும் வரப் போகிறவர்களுக்கும்
நீக்குஇனிய காலை வணக்கம்.
மீண்டும் வருகிறேன். யார் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
அடையாளம் தெரியவில்லையே.
அனைவருக்கும் ஆடி பதினெட்டாம் அழகு வெள்ள நாள் வாழ்த்துகள் வளம் பெருகட்டும்.
நீக்குஇனிய காலை வணக்கம் வல்லிம்மா...
நீக்குநல்லதெல்லாம் விளையட்டும்...
நீக்குநாற்றங்கால் செழிக்கட்டும்..
புல்லதுவும் பொலியட்டும்..
பூமரங்கள் தழைக்கட்டும்!..
அல்லதெல்லாம் தொலையட்டும்..
ஆணவங்கள் அழியட்டும்..
சொல்வதெல்லாம் விளங்கட்டும்..
சூழ்கலைகள் துலங்கட்டும்!..
DD விமரிசனம் வல்லி
நீக்குநீங்கள் சொன்னவர்தான் என்று நினைக்கிறேன் கீதா.
நீக்குமுதலில் இரண்டு குறள் தனபாலன் என்று நினைக்க வைத்தது, அப்புறம் விவேகானந்தரின் பொன்மொழிகள் ரஞ்சனியே என்று சொல்லவைத்தது.
// இஃகி இஃகி என்ற சிரிப்பும் //
நீக்குகீதா அம்மா என்று நினைத்தேன்... அவர்கள் என்னை சொல்லி விட்டார்கள்...
ஆனாலும் இந்த விளையாட்டு நல்லாத்தான் இருக்கு... ஒவ்வொரு வாரமும் இப்படியும் தொடரலாம்...
அட? ஆமாம், காலம்பர அவசரத்தில் புரியலை! இது ரஞ்சனி தான் கோமதி! டிடி இல்லை! நல்லா விமரிசனம் எழுதி இருக்காங்க. வாழ்த்துகள். திரும்ப 2 முறை படிச்சதும் ரஞ்சனி தான் எனத் தோன்றுகிறது.
நீக்குடிடியே இந்த ஆட்டம் நல்லா இருக்குனு சொல்லிட்டார். அப்புறமா என்ன? வாரா வாரம் விளையாடிடுவோமுல்ல! :)
நீக்குஎல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி. இதோ வருகிறேன் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல...இங்கு மாலை ஆனால் என் நெட் மயங்கிவிடும்!!! அது மயங்குவதற்குள் கடகடவென்று கருத்திட வேண்டும்...
நீக்குபலரும் பல ஊகங்கள் என்று ஸ்வாரஸ்யமாகச் சென்றது இந்த நாள்!!!
கீதாக்கா கோமதிக்கா, வல்லிம்மாஅ எல்லோருக்கும் நீங்கள் டிடி என்று சொன்னது திருக்குறள் கண்டு...சரி ஆனால் டிடி வந்துதான் தான் இல்லை என்பதற்கான அந்த வரியை கோட் செய்து சொல்லியிருந்தார்.
நான் பெரும்பான்மையான கருத்துகளை வேலைக்குப் போய் வந்து மதியம் தான் பார்த்தேன். ஆனால் எனக்கு ஸ்ரீராம் அப் டேட் கொடுத்துக் கொண்டிருந்தார்!!
அடுத்து ரஞ்சனி அக்கா! அவங்களை சில வார்த்தைகள் காட்டிக் கொடுத்துவிடும்!!! அந்த வார்த்தைகள் இதில் இருக்கிறதோ என்று தேடிப் பார்த்தேன்...
யாரென்று தெரியாமலேயே விமர்சனம் நன்றாக இருக்கிறது என்று எல்லா அக்காக்களும் அம்மாவும், டிடி யும் சொல்லியிருப்பது மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது.
உங்கள் எல்லோரது ஊக்கமும் தான் என்னை இன்னும் உற்சாகமாக்குகிறது. சுணக்கத்தி ல் இருக்கும் என் எழுத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
மிக்க மிக்க நன்றி...
கீதா
இணையம் தள்ளாடத் தொடங்கிவிட்டது...!!! இறைவா முழுவதும் போடும் வரை விழாமல் இருக்க வேண்டும்.
நீக்குதுரை அண்ணா உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை! மிகவும் ரசித்தேன்.
கீதா
கீதாக்கா, விமர்சனம் நன்றாக இருக்கிறது என்று சொன்னதுக்கு மிக்க நன்றி...
நீக்குகீதா
கீதா அருமையான விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள்.
நீக்குதனபாலன், ரஞ்ச்னி, எல்லாம் கலந்த கலவையாக இருந்தது.
உங்களை நினைக்கவில்லை, நீங்கள் எழுதி விட்டீர்கள் முன்பே இல்லையா?
உங்களை நீங்களே உற்சாகபடுத்திக் கொண்டு நேரம் கிடைக்கும் போது வந்து பதிவுகளை போடுங்கள் கீதா.
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஆகா...
பதிலளிநீக்குமர்மயோகி போல வந்து
கர்மயோகியாக விமர்சனம்!...
அருமை.. அருமை..
ஆஹா.. நல்ல வார்த்தை விளையாட்டு பூடகமாகவே ஊடகத்தில் விளையாடுகிறீர்கள்!
நீக்குஅந்த சீனியர் மண்ணின் மைந்தர் தான் மேலே வைர பதில் கொடுத்திருக்கிறார்.
நீக்குயாருப்பா அந்தக் கர்மயோகி. குறள்கள் கொடுத்திருப்பதால் தனபாலனோ/.
மரங்கள் நடும் செல்வகுமாருக்கும்,
ரீசார்ஜ் செய்யும் வாலிபருக்கும்,\
ஆசிரியராக இருந்து கோடீஸ்வரரான பைஜுவுக்கும் வாழ்த்துகள்.
அழகாக அளவாக விமரிசனம் செய்திருப்பவருக்கு வாழ்த்துகள். மர்மமாக
இருக்க வேண்டாமே.
மிக்க நன்றி துரை அண்ணா. அந்த சீனியர் மண்ணின் மைந்தர் வேறு யாருமல்ல அது நீங்கள் தான்! நீங்களேதான்...!!!!!!! உங்கள் காதில் மட்டும் ஏன் இங்கு இந்த மேடையிலேயே சொல்லிவிடலாம்!!!
நீக்குவல்லிம்மா கருத்திற்கு மிக்க மிக்க நன்றி!!!
கீதா
>>> சிறப்பான “வெள்ளி”யாக ஒளிர்ந்தது... <<<
பதிலளிநீக்குகடந்த வெள்ளி - வெள்ளியாக இல்லாமல்
கட்டித் தங்கமாக ஒளிர்ந்தது..
வைரவரிகள்!
நீக்குதேடகமாக தமிழ் ஏடகமாக
நீக்குதேனிடமாக எங்கள் பிளாக்!..
ஆடகமாக அன்பு கூடகமாக
மானிடமாக எங்கள் பிளாக்!...
ஆஹா.. ஆஹா...
நீக்குஎசப்பாட்டு சட்டென வரவில்லை எனக்கு!
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குநல்ல செய்திகள். உரியவர்களுக்குப் பாராட்டுகள்.
இன்றைய விமர்சனமும் நன்று.
நன்று... நன்று..
நீக்குநன்றி நெல்லை.
மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு...
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க வாங்க...
நீக்குமுதல் இரண்டு செய்திகளும் படித்த செய்திகள் முன்பே இருவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமூன்றாவது செய்தி காலத்துக்கு ஏற்றசெய்தி. வெளி நாடு சென்று வந்தாலும் விவசாயம் செய்ய ஆசைபட்டு அதற்கு வேண்டிய தண்ணீரை சேமிக்கும் முறையை கற்றுக் கொடுத்தது சிறப்பு.
நிலத்தடி நீரை சேமிக்கும், 'போர்வெல் ரீசார்ஜ்' முறையை பயன்படுத்தி, விவசாயத்தில் அசத்தி வருகிறார்.
வாழ்த்துக்கள்.
நல்லசெய்திகளுக்கு நன்றி.
நேற்றைய பாலிமர் செய்தியில் இந்த இளைஞர் மழைநீர் சேமிப்பின் மூலம் பயிர் செய்வதையும், நிலத்தடி நீர் உயர்ந்திருப்பதையும் குறித்துக் காட்டினார்கள். நல்ல ஆக்கபூர்வமான செயல்! அந்த இளைஞர் நீடூழி வாழட்டும். அக்கம்பக்கம் நிலத்துக்காரர்களும் இம்முறையைப் பின்பற்ற ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார்கள். அதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
நீக்குஓ... பாலிமரிலேயே வந்தாரா? அட!
நீக்கு//நேற்றைய பாலிமர் செய்தியில் // - அட... கீசா மேடமும் பொதிகையைத் தவிர்த்து மத்த சேனல்களையும் பார்ப்பாங்க போலிருக்கே.. இது எனக்கு புது நியூஸ்.
நீக்குநான் பார்ப்பது பொதிகை, மக்கள் செய்தி தவிர்த்துப் பாலிமர் செய்திகள் மட்டுமே! மற்றவை செய்திகளே அல்ல! ஆங்கிலத்திலும் ரிபப்ளிக், டைம்ஸ் நவ்(எப்போதாவது) பார்ப்பேன். பொதிகையிலும், மக்கள் தொலைக்காட்சியிலும் தமிழ் அருமையாக இருப்பதோடு உண்மையல்லாத ஆதாரமற்ற செய்திகளைச் சொல்ல மாட்டார்கள். பாலிமரும் அப்படியே! புதிய தலைமுறையைப் பார்க்கவே மாட்டேன். இப்படி இன்னும் சில சானல்கள் உள்ளன. கலைஞர், காப்டன், சன் நியூஸ், கலைஞர் செய்திகள், கேடிவி, விஜய்(இப்போ எங்களுக்கு வராது)ஜீ தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, இன்னும் சிலவும் இருக்கின்றன, இவற்றை எல்லாம் பார்த்ததே இல்லை. விஜய் பல வருடங்கள் முன்னால் ஆரம்பத்தில் பார்த்திருக்கிறேன். பின்னர் அது கைமாறிய பின்னர் பார்ப்பதில்லை.
நீக்குபொதிகை செய்தி பார்ப்பதில்லை என்றாலும் பாலிமர், ரிபப்ளிக், டைம்ஸ் நவ் பார்ப்பேன். அவ்வப்போது லேசாய் சன் செய்திகளும், தந்தி செய்திகளும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கங்களுடன் பொங்கும் ஆடிப் பதினெட்டில்,செல்வங்கள் பதினாறும் பெற்று நலங்கள் சிறக்கவும் பிராத்தனைகள் செய்கிறேன்.
புதிதாக வந்த நற்செய்திகளும், புதிராக வந்திருக்கும் விமர்சனமும் முறையே படித்துணர,பகல் பொழுது வந்து விடும். ஆகவே காலை வணக்கத்துடன்,படித்த பின் வருகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம் கமலா அக்கா.
நீக்குபிரார்த்தனைக்கு நன்றி.
மெதுவா வாங்க.
இன்றைய விமர்சன பகுதி அருமை. விமர்சனம் யார் என்ற கேல்வியும், இவர்தான் என்று நினைக்கிறேன் என்ற பதிலும் படிக்க ஆவலை ஏற்படுத்தும் என்பது உண்மை.
பதிலளிநீக்குஎனக்கு மனதில் தோன்றியது ரஞ்சினி நாராயணன் .
விமர்சனம் பகிர்ந்து கொண்டதை பற்றி பேச பின் வருகிறேன் இன்று ஆடிபெருக்கு , மருத்துவரை பார்க்கும் நாள்.(கணவருக்கு)
//கோயிலுக்கு எதற்காகச் செல்கிறோம் என்ற கேள்விக்கான பதில்கள் சிறப்பு. அதிலும் ஒவ்வொரு பருவத்தின் காலகட்டத்திலும் செல்வதன் காரணம் அதி சிறப்பு. உண்மைதான். வயதாகும் வேளையில் கடமைகள் எல்லாம் ஓரளவிற்கு முடிந்த நிலையில் பொதுவாகவே பலரும் அமைதி நாடித்தான் செல்வது. அதன் பின் நடமாட்டம் குறையும் தருவாயில் இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம் தான்!. அந்தி செயலழின் தலம் வரும் பொழுது அவன் பெயர் நாவில் வாராதே. ஆதலினால் மனமே இன்றே சிவன் நாமம் சொல்லிப் பழகு//
மிக நன்றாக சொல்லி இருக்கிறார்.
வாழ்த்துக்கள் அருமையான விமர்சனத்திற்கு.
படங்கள் செய்திகள் என்று அசத்தி விட்டார்..
மருத்துவரைப் பார்த்து வந்தாச்சா? ஆம் அசத்தி இருக்கிறார்.
நீக்குஇனிமேல்தான் கிள்மபி கிட்டே இருக்கிறோம். இடையில் வந்தேன்.
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா விரிவான கருத்திற்கும் பாராட்டிற்கும்.
நீக்குரஞ்சனி அக்கா என்ற ஊகம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்கள் எப்படியான எழுத்தாளர். அழகான அருமையான எழுத்திற்குச் சொந்தக்காரர். அவரது விமர்சனம் எனும் போது அப்படி அதைப் போலவா அத்தனை நல்லாவா இருக்கு நான் எழுதியது என்று தோன்றிட...கூடவே மகிழ்ச்சியும்.
மிக்க நன்றி கோமதிக்கா...
இணையம் படுப்பதற்குள் கருத்து இட வேண்டும் என்று வேகமாகப் போகிறேன்...
இப்போதே கூட கருத்து வெளிவர மிகவும் தாமதமாகிறது. அல்லது எரர் காட்டுது...
கீதா
இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்..
பதிலளிநீக்குஇன்று மதியம் வருகிறேன்...வேலைப்பளு...
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். மெதுவா வாங்க.
நீக்குமற்றச் செய்திகளும் தெரிந்தவையே!
பதிலளிநீக்குஓ...!
நீக்குடிடி மிக அழகாக விமரிசனம் செய்திருக்கிறார். ஆங்காங்கே பொருத்தமான குறள்களையும் இணைத்து அவரோட தொழில் நுட்பத் திறமை பளிச்சிடுகிறது.
பதிலளிநீக்கு────────────────────
நீக்கு──╔╦╗║║────╔╦╔╦║╔╗╔╦
╔═╚╝╬╣║────║║║║║║║║║
╚═══╝║╚══──║║║║╚╩╝║║
────────────╝───────
நான் இன்னும் இந்தக்கலையை நீச்சல்காரன் பதிவு சென்று பயிலவில்லை!
நீக்குஅட ராமா// அட!!!!!இது போன்ற தொழில் நுட்பத்தை நேற்று கோமதிக்காவும் நன்றி என்று சொல்லியிருந்தாங்களே. இது எப்படி என்று கற்க வேண்டும்...
நீக்குஇன்னும் அந்த சுட்டி கொடுக்கும் முறையே முயற்சி செய்யவில்லை/. செய்ய வேண்டும்...
கீதா
இன்னிக்கு ஆடிப்பெருக்கு. எல்லார் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடவும், தமிழ்நாட்டில் மழை பெருக்கெடுத்து ஓடாமல் சேகரிக்கவும் பிரார்த்தனைகள். மத்தியானமா வரேன்.
பதிலளிநீக்குDD THAANAA. VAAZHTHTHUKAL MA.அதுதான் தமிழ் வார்த்தைகள் வந்திருக்கிறதா.
நீக்குநன்றி கீதா அக்கா... உங்களுக்கும் வாழ்த்துகள். திருச்சிக்காரராயிற்றே...!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஆடிப்பெருக்கன்று பரிமாறப்படும் பல வகையான சித்ரான்னங்கள் போல பல்சுவையில் மிளிர்கிறது விமர்சனம்.
பதிலளிநீக்குஅடடே... நாளோடு இணைத்து பொருத்தமான கமன்ட்!
நீக்குஆஹா!! பானுக்கா மிக்க நன்றி உங்கள் பாராட்டுடன் கூடிய கருத்திற்கு...உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி கொஞ்சம் மாற்றி எழுத ஊக்குவித்து., பெயர் போடாமல் போடச் சொல்லி ஸ்ரீராமிடம் சொல்லச் சொன்னதற்கும்...இன்று மிகவும் ஸ்வாரஸ்யமாக ஓடியிருக்கிறது.
நீக்குமிக்க நன்றி பானுக்கா உங்கள் யோசனைக்கு..
டிடி சொல்லியிருப்பது போல் இதைத் தொடரலாம் ஸ்ரீராம். ஸ்ரீராம் தான் முதல் ஜட்ஜ் அவர்வர் அனுப்பும் விமர்சனத்தைப் பார்த்து கண்டுபிடிப்பார்களா மாட்டார்களா என்று பார்த்து பெயருடனா இல்லை மர்மமாகவா என்று முடிவு செய்து வெளியிடல்...
கீதா
//கருத்துப் பெட்டியில் ஒரு பெட்டியில் கொஞ்சம் ஜொள்.// அப்ஜெக்ஷன் யுவர் ஆனர். அது ரசனை என்பதை புன்னகையோடு கூறிக்கொள்கிறேன்.
பதிலளிநீக்கு- புன்னகை -
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா பானுக்கா! முதலில் நான் எழுதியிருந்தது என்னே ரசனை! என்று பின்னர் அப்படி எழுதினால் உங்கள் பின்னாலேயே நானும் கொஞ்சம் ஜொள்ளியிருந்தேனே...மாதவனைச் சொல்லி...அந்தக் கருத்தைப் பார்த்து கண்டுபிடிக்க சான்ஸ் என்று ஜொள்ளு என்று எழுதினால் என்று நினைத்திட நானே சிரித்துவிட்டேன். அத்னால் உங்களையும் கொஞ்சம் வம்புக்கு இழுக்கலாமே என்றுதான்...ஹிஹிஹி
நீக்குடிடி வேறு பாருங்க அங்க போய் கமென்ட்ஸ் பார்த்து அதை கோட் செய்து யாராக இருக்கும் என்று ஊகிக்க வேண்டி இங்கு கொடுத்து நீங்களாக இருக்குமோ என்று கொடுத்திருக்கிறார்!!!!!!!!!! அதிலும் சாம்பார்!!!! என்று ஹா ஹா ஹா
கீதா
//கருத்துப் பெட்டியில் ஒரு பெட்டியில் கொஞ்சம் ஜொள்.// அப்ஜெக் ஷன் யுவர் ஆனர். அது ரசனை என்று புன்னகையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குசெல்வகுமார் பற்றிய செய்தியை முகநூலில் பார்த்தேன். போர்வெல் ரீசார்ஜ் உபயோகமான தகவல். இப்போது ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங் செய்யும் அபார்ட்மெண்டுகளுக்கு சப்ஸிடி தரப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பதிலளிநீக்குஅடடே....
நீக்குவிமர்சனம் சிறப்பு. அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கும் நன்றி.
நீக்குமிக்க நன்றி மாதேவி கருத்திற்கு
நீக்குகீதா
Quote செய்து வாழ்வாரே வாழ்வர் - மற்றவரெல்லாம்
பதிலளிநீக்குNote எண்ணிக் காணாமற்போவர் !
அடடே....
நீக்குசெல்வகுமார் அவர்களின் துணையாரும் துணை சேர்ந்து, ஊக்கம் தந்ததும் சிறப்பு...
பதிலளிநீக்குதஞ்சை இளைஞருக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...
சுருக்கமான விமர்சனம் என்றாலும் அருமை...
//சுருக்கமான விமர்சனம் என்றாலும் அருமை//
நீக்குஎன்ன ஜி நீங்கள் விமர்சனம் செய்ததாக நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் நீங்களே அருமை என்று சொல்லி இருக்கின்றீர்கள் ???
ஐயன் பேசுகிறார். என்று தனபாலன் தான் சொல்வார் தனபாலன் தான் என்று நினைக்கிறேன்.
நீக்குநன்றி DD
நீக்குமிக்க நன்றி டிடி உங்களின் கருத்திற்கும்...இந்த விளையாட்டில் பங்கெடுத்தும் யூகங்களுக்கு வழிவகுத்தும் என்று.....நீங்களும் புகுந்து விளையாடியிருக்கீங்க...
நீக்குகீதா
தொடக்கமே இது திண்டுக்கல் பூட்டு என்பது அறிய வந்தாலும்...
பதிலளிநீக்கு//மீண்டும் கருத்து மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எங்கள் பிளாகின் கருத்து வானிலை அறிக்கை சொல்கிறது//
இதைப்படித்தவுடன் ரமணன்தான் விமர்சனம் செய்தாரோ என்ற ஐயமும் எட்டிப் பார்த்தது.
ரசித்தேன் ஜி வாழ்த்துகள்.
ஹா. ஹா. ஹா. ஹா. இன்னமும் புதிர் விடுவிக்கப் படவில்லையா? நம்பிக்கை ஸ்திரமாகட்டும். விமர்சனம் மிக மிக அட்டகாசமாக உள்ளது. அருமையாக எழுதிய மர்ம மனிதருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். யார் என்பதை சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் தெளிவாக்கட்டும்.( ஒருவேளை அவராகவே இருக்கலாமோ..நீலநிற எழுத்துப் பிண்ணனி ஐயம் வருகிறது.) நன்றியுடன் வாழ்த்துக்கள்.
நீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்குகில்லர்ஜி மிக்க நன்றி கருத்திற்கு!
நீக்குகீதா
கமலா அக்கா விடை வந்தாச்சு!! வாங்க!!
நீக்குஉங்கள் ஊகம், மற்றும் கருத்து எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி...
ஆ ஸ்ரீராம்?!!! அவருடைய எழுத்து எங்கே நான் எங்கே!!
கமலா அக்கா இப்படி நன்றாக எழுதும் ஒவ்வொருவருடனும் நானும்!!!! டிடி முதல் ஸ்ரீராம் வரை ....மிக்க நன்றி
கீதா
திண்டுக்கல் தனபாலன் இன்று போட்டு இருக்கும் பதிவில் உள்ள சகிப்புதன்மை, நம்பிக்கை,பொறுமையை கடைசி படம் சொல்வதால் அவர்தான் விமர்சனம் செய்து இருக்கிறார் என்று சொல்கிறது உறுதியாக.
பதிலளிநீக்குகோமதிக்கா நீங்கள் சொல்லியிருந்ததை நான் டிடியின் பதிவை வாசிக்கும் போது நினைவுபடுத்திக் கொண்டேன். உண்மைதான்...
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா...
கீதா
// கருத்துகளிலும் சொற்களின் மூலம் சுட்டி பகிர்வது எப்படி என்று. அவருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்... //
பதிலளிநீக்குஎனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்வதா...?
யாராக இருக்கும்...?
//தலைப்பில் உள்ள வார்த்தை டேலி ஆகிவிட்டது! //
பானுமதி அம்மா...?
Catch the point. Appo ithu DD illa.
நீக்குநானும் காலையில் டிடி என்று திருக்குறளைக் கண்டதும் சொல்லிட...அதற்கு அப்புறம் வரும் வரி யார் கண்ணிலும் படாமல் போய்விட்டது போலும், வேறு கலரில் நான் ஹைலைட் செய்யாமல் விட்டதும் அதனால்தான் ...
நீக்குமிக்க நன்றி வல்லிம்மா அண்ட் டிடி
கீதா
பரந்தாமா... மாதவா...
பதிலளிநீக்குஓ இப்போது ஞாபகம் வந்து விட்டது... லேப்டாப் ஸ்கிரீனைத் துடைத்த நெ.த. அவர்களின் மறுமொழியும்...
பானுமதி அம்மாவின் விமர்சனம் தான் (நினைக்கிறேன்)
மாதவா உன் கருணையே கருணை...
ஹா ஹா ஹா டிடி நெல்லையின் கருத்தைப் பார்த்த நீங்கள் பானுக்காவுடன் கூடவே நானும் கீழே..ஹிஹிஹி அதை நான் ஜொள்ளவில்லை இங்கு...அதைப் பார்க்கலையோ நீங்க
நீக்குகீதா
நீளத்தைப் பார்த்து கீதா என்பார்...
பதிலளிநீக்குநச்சென சொன்னால் நெத என்பார்...
குறளைப் பார்த்தால் DD என்பார்...
அதையும் சில பேர் உண்மை என்பார்...!
பாடல்கள் இல்லாத பதிவினைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன் - சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்...?
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
ஸ்ரீராம்சார் தான் இதுக்கு நீதிபதி...
கருத்துரைகள் நிறைய நிரம்பட்டுமே...
பிறகு சொல்லுங்க நல்லபடி - ஸ்ரீராம்சார்
பிறகு சொல்லுங்க நல்லபடி...
ஆஹா... இது புது மாதிரி! ஸூப்பர் DD
நீக்குநீளத்தைப் பார்த்து கீதா என்பார்...//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் அடையாளம் இப்படி ஆகிப் போச்சே! எப்படி இருந்த நான்!!! ஹா ஹா ஹா ஹா ஹா..
கீதாக்கா கூட தில்லைஅகத்தில் சொல்லியிருந்தாங்க கீதாவுக்கும் சுருங்க எழுத வரும் என்று இப்போதுதான் பார்க்கிறேன்னு...
இங்கு எபியிலேயே என் கதைகள் சில சின்னதாக வந்துள்ளதே....ஹூம் யார் கண்ணிலும் படலை போல!! நீளம் மட்டும்தான் படுது!!! ஹிஹிஹிஹி...
டிடி, நட்ஷெல் போல சுருங்கச் சொல்பவரை விட்டுட்டீங்களே!! பானுக்கா...
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆஹா... தாங்கள் முற்பகல் வாக்கில் வந்து போயும் புதிருக்கு விடை இல்லையா? நீங்களாக இருக்குமென ஊகித்தேன். தன்னைத் தானே நல்லபடியாக தட்டிக் கொடுத்து யாரும் எழுத மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், நீங்களும், தனபாலன் சகோதரரும் ஊகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தாலும், யார் என மனது சிந்தித்து கொண்டேயிருக்கிறது.யார் என்பதை தெரிந்து கொள்ள (எழுதியவரும், பிரசுரித்த தாங்களும் தவிர) அனைவரும் பொறுமையுடன் காத்திருக்கிறோம். ஆனால் இந்த பதிவுக்கு பக்கப்பார்வைகள் நிச்சயமாக முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை. விமர்சனம் மிக அருமை.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா...
நீக்குஇன்றுமாலைக்குள் தெரிந்து விடாது?
பார்ப்போம்.
/இரு விசிறிகளுக்கும் கொஞ்சம் குறையாகப்பட்டிருக்கும்// - ஏன் 'விசிறி' என்ற பிரயோகம் ரசிகர்களுக்குக் கொடுக்கறாங்க? (இது புதன் கேள்வி கேஜிஜி சாருக்கு)
பதிலளிநீக்குசொல்வோம்.
நீக்குமேலும் விசாரித்ததில் கீழ்கண்ட தகவல்களை ஆராய்ச்சி செய்யும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்...
பதிலளிநீக்குதிங்கள் :-
// கலாய்த்தல் கருத்து - கத்துக்குட்டி //
அன்னைக்கு யார் கலாய்த்தது... யார் கத்துக்குட்டி ஆனது...?
செவ்வாய் :-
// இந்த நினைவுகளை என்ன செய்வது..? //
// அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா (டி) //
இது சாம்பார் பாட்டாச்சே... ஏற்கனவே ஒரு தொடர்கதை சாம்பாராய் வந்ததே...!
புதன் :-
// Rais her well //
e விடுப்போச்சே... அது இருக்கட்டும், பி ஏ சி கருத்துகளுக்கே சவால் விடுவது யார்...?
// அன்று கருத்துப் பெட்டியில் ஒரு பெட்டியில் கொஞ்சம் ஜொள் //
தமிழ் ஜேம்ஸ்பாண்ட் சிரிப்பா...? அல்லது மஞ்சளழகி தான் காரணமா...?
துப்பறியும் DD.
நீக்குடிடி, நல்லா குழப்பறீங்க.
நீக்குநீல வண்ணத்தில் இது போல எழுதுபவர் நமக்குத் தெரியும்...எனக்குத் தெரியாது.கவனம் போறாது.
மஞ்சளழகி சாண்டில்யனிடமிருந்து தப்பிவிட்டாளா.
கீதா ரங்கனோ.
நான் கூடக் கத்துக்குட்டிதான். கலாய்ப்பவர் யாராவது நம்மில் இருக்கோமா.
ம்ஹூம்.
வல்லிம்மா கீதாக்காதான் அந்தக் கலாய்த்தல் கமென்ட்...அதுவும் நெல்லை அல்லவா அன்று திங்க பதிவு!!
நீக்குநான் நினைத்துக் கொண்டே இருந்தேன் கீதாக்கா வந்து..சொல்லுவாங்க இந்தக் குறிப்பெல்லாம் கூடவா என்று..அதே போல அக்காவும் சொல்லிருந்தாங்க..கலாய்த்து...நான் போட நினைத்த இந்தக் கமெண்டை போடாமல் பதுக்கி வைத்துக் கொண்டேன் விமர்சனத்திற்கு!!!!!
அந்த மஞ்சள் அழகி வேறு யாருமல்ல தமன்னாக்காதான்!!! ஹிஹிஹி
கீதா
நண்பர் குழாம் ஒன்று ரொம்ப பிரபலமானது. கருத்துரையாடல், கலந்துரையாடல் என்று என்னன்னவோ நிகழ்ச்சிகளை நடத்துவர்கள் அவர்கள். நம்மையும் கூப்பிட்டாரென்று போகிறோம்... மேடையில் நடக்கும் நிகழ்த்திக் காட்டும் நிகழ்ச்சிகளை 'தேமெ'னென்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று நம்மை பெயர் சொல்லி அழைத்து நீங்கள் தான் நடந்த நிகழ்ச்சிகளை 'வைண்ட் அப்' பண்ணிப் பேசுகிறீர்கள் என்றால் நமக்கு எப்படி இருக்கும்?..
பதிலளிநீக்குஅந்த நிலை தான் இந்த சனிக்கிழமை தோறும் எங்கள் பிளாக் விமரிசனப் பகுதியும். ஒரு சின்ன வித்தியாசம்: திடீரென்று இல்லாமல் முன்னாலேயே நம் விருப்பம் கேட்டு அல்லது நாம் விரும்பி ஏற்றுக் கொள்கிறோம். அவ்வளவு தான்.
முன்னாலேயே அனுபவப்பட்ட உரிமையோடு சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
எந்தப் புண்ணியவானின் சிந்தனையில் தோன்றி இந்தப் பகுதி உருவானதோ தெரியவில்லை.. பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
நாமோ எத்தனையோ பின்னூட்டங்களை எத்தனையோ பதிவுகளுக்கு போட்டிருப்போம். அருமை என்ற ஒரே வார்த்தையில் கூட விட்டு விலகி இருப்போம். இன்னொருவர் எழுதிய (செயலைப்) பற்றி கோர்வையாக பத்து வரிகளாவது விமரிசன ரீதியில் எழுத இங்கு ஒரு பயிற்சி கிடைக்கிறது என்பது ஒரு உண்மையான அனுபவமாகிப் போகிறது.
மேலே சொன்ன மேடையேறும் அனுபவம் போலத் தான்.
நம் பதிவு, நமக்கு வரும் பின்னூட்டம் என்றால் நமக்குள் ஆயிரம் இருக்கும் என்று ஒரு வம்பு கச்சேரி நடக்கும். ஆனால் இங்கு அப்படியில்லை. மேடையில் ஏறியதும் பத்து பேர் நம்மை கவனிக்கிறார்கள் என்ற புரிந்துணர்வில் ஒரு பொறுப்பு ஏற்படும் அல்லவா?.. அந்த பொறுப்புணர்வு இங்கு நிச்சயமாக நம்முள் ஏற்படுவதை நாமே உணர்வோம். அளவான வார்த்தைகள், அதில் ஒரு ஆராய்ச்சி, உணர்ந்தவற்றை உணர்ந்தவாறே நோகாமல் எடுத்துரைப்பது, தேடித் தேடிப் பார்த்து சாதாரணமாக மற்றவர் கண்ணுக்குப் படாததை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம்---
பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் போடும் பொழுதும் நாம் எடுத்து வைத்த கருத்துக்களுக்கு இளகி விடாது, அதே சமயம் மற்றவர் கருத்துக்கு மரியாதையும் கொடுத்து பக்குவமாக எடுத்துரைக்கும் பாங்கு
என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள்...
சும்மாச் சொல்லக் கூடாது, சனிக்கிழமை விமர்சனப் பகுதி விமர்சனக் கலையின் ஆரம்பப் பாடத்தைப் படிக்க நமக்கோர் பயிற்சி அரங்கமாகத் திகழ்கிறது என்று தீர்மானமாகச் சொல்ல முடியும்.
'வாராது வந்த மாமணி போல' வந்திருக்கும் இந்தப் பகுதியை எங்கள் பிளாக் அபிமான வாசகர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டு சிறப்பு செய்து இந்த பேரின்ப அனுபவத்தை அடைந்து களிக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் பகுதி மற்றவர்களையும் கலந்து கொள்ள வைகும் ஆற்றுப்படுத்தலாக அமையப் போவதும் திண்ணம்.
நண்பர் டி.டி.யின் கைவண்ணம் அட்டகாசமாக அமைந்து விட்டது.. இடையிடையே படங்களையும் செய்திகளையும் போனசாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
நன்றி சார்... ஒரு பாடலை முழிபெயர்த்து... சே... மொழி பெயர்த்து கொண்டிருந்தேன்... கீழே எனது கருத்துரை இட்ட பின்பு, இப்போது தங்களின் கருத்துரையை வாசித்தேன்... மீண்டும் நன்றி சார்...
நீக்குநன்றி ஜீவி ஸார்.
நீக்குமிக்க நன்றி ஜீவி அண்ணா...
நீக்குஇந்த விமர்சனப் பகுதி ஸ்ரீராமின் ஐடியாவேதான்....
கீதா
பள்ளிக் கூடங்களில் வகுப்பு என்றால் விளையாட்டுப் பிள்ளைகளும் இருக்கும் தான். ஆனால் புத்திசாலி பிள்ளைகள் அந்த கவனம் திருப்பும் விளையாட்டுகளுக்கு இரையாகிப் போய் விடாமல் பாடத்தில் கவனம் செலுத்தும் தான்..
பதிலளிநீக்கு--- ஒரு ஆசிரியரின் அனுபவம்
தன்னை ஒளித்துக் கொண்டு இன்று விளையாட்டுக் காட்டும் போது
பதிலளிநீக்குநாம் மட்டும் குரல்/குறள் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டுமா!...
மண்ணின் மைந்தர் சீனியர்?!..(யாரது?.. காதுக்குள் சொல்லி விடுங்களேன்!.. ஸ்ரீராம்...)
வணக்கம் சகோதரரே
நீக்கு/மண்ணின் மைந்தர் சீனியர்?!..(யாரது?.. காதுக்குள் சொல்லி விடுங்களேன்!.. ஸ்ரீராம்...)/
அது நீங்களாகத்தான் இருக்குமென்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அது உறுதியாகி விட எங்கள் காதுகளிலும் தங்கள் பெயர் எட்ட வேண்டும் என்பதே எங்கள் அவா.. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா ஹா ஹா துரை அண்ணா விளையாட்டு முடிந்துவிட்டதே!!!
நீக்குகீதா
ஸ்ரீராம் சார்... பாடலுக்கேற்ற வரிகளை எழுதி உள்ளேன்... தவறாக இருந்தால் மன்னிக்கவும்... சும்மா ஜாலிக்காக...
பதிலளிநீக்குநிஜ பாடலை ரசிக்க இங்கே → ரைட் கிளிக் சொடுக்கி ← "open link in new tab" என்பதையும் சொடுக்கி, அதன் பின் கீழ் உள்ள வரிகளை வாசிக்கவும்... நன்றி...
ஹூ இஸ் தி பிளாக் ஷீப்
அது யார் யார் யார்...?
ஹூ இஸ் தி பிளாக் ஷீப்
அது யார் யார் யார் - இந்த
விமர்சன கூட்டத்தில் ஒரு குறும்புஆடு...
அது யார் யார் யார்...?
இருந்தால் எனக்கில்லை உடன்பாடு...
அது யார் யார் யார்...? (2)
ஸ்ரீராம் ஏனிந்த ஏற்பாடு...
நீ சொல்... சொல்... சொல்...
ஏற்பதும் மறுப்பதும் என் பாடு...
ஒஹ் நோ... நோ... நோ...
ஹூ இஸ் தி பிளாக் ஷீப்
அது யார் யார் யார்...?
ஹூ இஸ் தி பிளாக் ஷீப்
அது யார் யார் யார்...?
கருத்துரைகள் சொல்லத்தானே வாசகர்கள்...
சோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள்...
இப்பதிவில் நானும் தந்த கருத்துரைகள்...
என்றாலும் ஏதோ ஒன்று உப்புக்கல்...
இந்தப் பாடல் எனக்குத் தெரியாதா DD? ஸோ சொடுக்கி எல்லாம் பார்க்கவில்லை. இங்கேயே பாடி விட்டேன்! ஸூப்பர்.
நீக்குடிடி! துரை அண்ணா சொல்லிருப்பது போல் உப்புக் கல் இல்லைனா குப்பையிலே! நல்ல கடல் உப்பு!!!! உங்க உப்புல ஐயோடின் இருக்கா?!!! ஹா ஹா ஹாஅ ஹா..
நீக்குபாடலில் சொல்ப்படும் ப்ளாக் ஷீப் நான் அல்ல நான் அல்ல நான் அல்ல..ஹிஹிஹி..
கீதா
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
மரங்கள் நடுவதை தன் வாழ்க்கையின் லடசியமாய் கொண்டிருக்கும், திருப்பூர் மாவட்டம் காங்கேயநல்லூரில் வசிக்கும் திரு செல்வகுமார் அவர்களையும், அவருக்கு உறுதுணையாய் இருந்து வரும் அவர் மனைவியையும் பாராட்டிப் போற்றுவோம்.
தன் உழைப்பால் உயர்ந்தவரையும், வீணாகிப் போன போர்வெல்லில் ரீசார்ஜ் செய்து நிலத்தடி நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்துபவரையும் மனதாற வாழ்த்திப் போற்றுவோம்.
இந்த வார விமர்சனம் எழுதியவர் யாராக இருந்தாலும் மிக அருமையாக எழுதியுள்ளார் ஒவ்வொரு நாட்களுக்கும் சுவையான கருத்துகளும் தந்து, நல்ல படங்களும், நல்லதொரு வாசகங்களுமாக சிறப்பாக தொகுத்துள்ளார். பெயர் காட்டாது மறைந்திருக்கும் அந்த மர்மானவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
காலையிலிருந்தே அவரை கண்டுபிடிப்பதில், அனைவரின் மனமும் ஒரே சிந்தனையில் உழன்று வருகிறது. இன்றைய மாலைக்குள் தெரிய வாய்ப்பில்லை என சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் கருத்துச்சொல்லி அகன்று விட்டார். இன்று முழுவதும் விநாயகர் பாணியில் செயல்படுவதால், மயிலேறி மற்ற பதிவுகளை மனதிலேற்ற இயலவில்லை. பார்க்கலாம்.! (எப்படியும் நாளை "ஞாயறு" உதயமாக இன்னமும் பதினைந்து மணி நேர அவகாசம் இருக்கிறதே.!ஹா. ஹா. ஹா.) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா...
நீக்குவிடை வெளியாகும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது..
...
...
...
என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி கமலா அக்கா அந்த மர்மமான ஆளின் விமர்சனத்தைப் பாராட்டியமைக்கும் கருத்திற்கும்...
நீக்குகீதா
மரம் நடுவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ள, காங்கேயத்தைச் சேர்ந்த செல்வகுமாருக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குபைஜு ரவீந்தரன் அசத்துகிறார். நல்ல முயற்சி. நல்ல உழைப்பு, மாற்றி யோசிக்கும் திறன். வெற்றி! பாராட்டுகள் இவருக்கும்.
திருவையாறு தினேஷ் தான் டாப். இன்று..நிலத்தடி நீர் உயர அவரது செய்முறை மிகவும் சிறப்பான ஒன்று...விவசாய செய்திகள் என்னை ஈர்க்கும். இவரும் மாற்றி யோசித்திருக்கிறார். வாழ்த்துகள் பாராட்டுகள் அவருக்கும்.
மூன்று செய்திகளூமே மிக அருமை.
கீதா
நன்றி கீதா.
நீக்குஎன்னமோ நடக்குது... மர்மமா இருக்குது!..
பதிலளிநீக்குஒன்னுமே புரியலே உலகத்திலே!..
இஃகி..இஃகி.. இஃகீய்!..
அன்பளிப்பாக ஆளுக்கொரு பல்ப்!..
இலவசமாக பல்ப்...ஆஹா... ஏதோஅதாவது கிடைக்கிறதே!
நீக்குஹா ஹா ஹா ஹா துரை அண்ணா பல்பு கொடுத்துவிட்டோமா நாங்கள்! எல்லாருக்கும்? கிடைச்சுச்சானு சொல்லுங்க இல்லைனா ஸ்ரீராமிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளவும்!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குகீதா
@ திண்டுக்கல் தனபாலன்..
பதிலளிநீக்கு>>> என்றாலும் ஏதோ ஒன்று உப்புக்கல்...<<<
உப்புக்கல் இல்லையென்றால் சமையலில் சுவை தான் ஏது!?...
அதிகமானாலும் சுவைக்காது...
நீக்கு(நாமும் ஏதோ சொல்லி வைப்போமே...)
Somebody's husband.. somebody's father என நினைத்து அந்த நீலப் பேண்ட், க்ரே கலர் ஸ்வெட்டர் பொடியனைப் பார்க்கையில் சுவாரஸ்யமாக இருக்கிறது!
பதிலளிநீக்குஆமாம் ஏகாந்தன் ஜி.
நீக்குமனம் பூராவும் மகிழ்ச்சி.அவனுக்கும் நல்ல மனைவி ,நல்ல பிள்ளை அமைய வேண்டும் என்று ஓடுகிறது எண்ணம்.
கட்டாயம் இது ஸ்ரீராம் எழுதியது தான். ஸ்ரீராம்+ இன்னும் ஒருத்தர். கௌதமன் ஜி யாகக் கூட இருக்கலாம்.
நீக்குஇப்படியும் இருக்கலாம் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொருத்தர்.
பானு,ஸ்ரீராம், கௌதமன் ஜி, டிடி, கீதாரங்கன் நெ த.
ஹா... ஹா.... ஹா... அம்மா.. இன்னும் ரெண்டு மூணு பேர் சேர்த்தால் எல்லோர் பேரும் வந்துடும்!
நீக்கு//ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொருத்தர். பானு,ஸ்ரீராம், கௌதமன் ஜி, டிடி, கீதாரங்கன் நெ த.// - வல்லிம்மா.. நான் நினைத்தேன்... பின்னூட்டத்திலிருந்து மாலையா ஆசிரியர்களில் ஒருவர், கொஞ்சம் சிலர் எழுத்து நடையையும் சேர்த்துக்கொண்டு செய்திருக்கிறார்களோ இல்லை இது கீதா ரங்கன் வேலையா இருக்குமோ என்று..
நீக்குஇல்லை இது கீதா ரங்கன் வேலையா இருக்குமோ என்று..//
நீக்குஹா ஹா ஹா ஹா நெல்லை....!!!!!
கீதா
இன்னும் ஆறு நிமிடங்கள் இருக்கின்றன... ஆறு மணிக்கு!
பதிலளிநீக்குவிடை வெளியாகும் நேரம் நெருங்குகிறது...!
பதிலளிநீக்குடொட்டடொய்ங்க்!! வந்துவிட்டேன் வந்திவிட்டேன்!!!!!
பதிலளிநீக்குஎல்லோருக்கும் பதில் சொல்ல வந்துவிட்டேன்!!!
பானு அக்கா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!!!!
கீதா
பானு அக்காவிற்கு மிக்க நன்றி நன்றி!
நீக்குநான் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி எழுத வேண்டும் என்று நினைத்திருந்த வேளையில் அக்காவும் என்னை ஊக்கப் படுத்த வித்தியாசமாக எழுதுங்க ஸ்ரீராமிடம் உங்கள் பெயர் போட வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்... வார்த்தைகள் கவனம் என்று சொல்லிட மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு உரித்தான சில வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் எழுதியிருந்தேன்.
குறிப்பாக ஹா ஹா ஹா ஹாஹ் , ஹிஹிஹி, அக்கா, அண்ணா, எல்லாம், ஆங்கில வார்த்தைகள்
அப்படியும் இருந்த சிலதை ஸ்ரீராம் மாற்றி உதவிட...
ஸ்ரீராம் மிக்க மிக்க மிக்க நன்றி.!!!!! எல்லாவற்றிற்கும்...
கீதா
என்னைப் பொறுத்த மட்டில் எந்த சலனமும் இல்லை. விமரிசனம் எழுதியது யாராயிருந்தால் என்ன?.. நமக்கு பொருள் தானே முக்கியம்.
பதிலளிநீக்குஆக, டி.டி. என்று நான் நினைத்தது சகோதரி கீதா ரெங்கனுக்குப் போய்ச் சேரட்டும்.
மிக்க நன்றி ஜீவி அண்ணா!
நீக்குகீதா
முதலில் டி.டி. க்கு நன்றி சொல்லுங்கள். அவர் வேறு இடையில் மாட்டிக் கொண்டு எத்தனை பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் படி ஆகி விட்டது, பாருங்கள்..
பதிலளிநீக்குஜீவி அண்ணா டிடிக்கு ஆங்காங்கே சொல்லிக் கொண்டே வருகிறேனே...
நீக்குகீதா
நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு...
பதிலளிநீக்குமுடியாதா...? சரி வசனத்தை நான் மாற்றிக் கொள்கிறேன்...
ஹாஹஹாங்... என்ன அருமையான நாடகம்... எவ்வளவு அலங்காரமான அமைப்பு... என்ன அழகான நடிப்பு...
அய்யய்யோ... புதிய பறவை கோப்பால் சொல்லும் கிளைமேக்ஸ் வசனத்தை சொல்ல வச்சிட்டாங்களே...!
சகோதரி கீதா அவர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...
மிக்க நன்றி டிடி!!! இதற்குப் பின் ஸ்ரீராம் அண்ட் பானு அக்கா அவர்களுக்கும் நன்றிகள் பல!
நீக்குகீதா
ஆரம்பத்தில் இரண்டு குறளைப்போட்டு அட்டென்ஷனை திருப்பிவிட்டதால், டிடி பக்கம் ஆனந்தமாக ஓடியவர்களெல்லாம், அமர்ந்து அழுந்தத் துடைத்துக்கொண்டிருக்கிறார்கள் முகத்தை!
பதிலளிநீக்குசஸ்பென்ஸை அபாரமாக ஓட்டிய கீதாவுக்கு பரிசு கொடுக்கவேண்டியது ஸ்ரீராம்..
ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா!!
நீக்குஆனால் எல்லோருமே மிக மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஊகம் செய்து எத்தனை முறை மீண்டும் மீண்டும் வந்திருக்கிறார்கள் எல்லோரும்...கமலா அக்கா ஆர்வம் தாளாமல் அவ்வப்போது வந்து சென்று என்று இந்த நாள் இனிய நாள் ஏகாந்தன் அண்ணா. எல்லோரும் மகிழ்ச்சியில்தான் இருப்பார்கள் அண்ணா...
மிக்க நன்றி சஸ்பென்ஸ் ஓட்ட ஸ்ரீராமுக்கும் நன்றி சொல்லனும்!!
கீதா
சகோதரி கீதா என்று ஒரு கணம் நினைத்தது : முதல் குறளின் விளக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்த குறள் விளக்கத்தை சொல்ல ஆரம்பித்த போது... ஏனென்றால் அவர்கள் எனது தளத்தில் இடும் கருத்துரைகளை அறிவேன்...
பதிலளிநீக்குஅதே போல் பானுமதி அம்மாவும், சகோதரி கீதாவும் இணைந்த விமர்சனம் என்று என் மனதில் ஒரு நொடி வந்து போனது எப்போது என்றால், // ஏற்கனவே ஒரு தொடர்கதை சாம்பாராய் வந்ததே...! // என்று நான் கருத்துரை இடும் போது...
"மனம் எப்படி எல்லாம் நினைத்தது...?" - என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்... "விமர்சனம் நான் எழுதவில்லை, அதை பிறரிடம் நிரூபிக்க வேண்டும்..." - என்பதிலேயே எனது கவனம் இருந்திருக்கிறது... இருந்தாலும் சில நொடிகள் - உள்மனம் இருமுறை சொல்லியும் நான் கண்டுக்கவில்லை... அடடா... இப்படியே சிந்தித்தால் ஒரு சிந்தனைப்பதிவு எழுதலாம் போல...
இன்றைய தினம் மிகவும் உற்சாகமாக இருந்தது...
அனைவருக்கும் நன்றி...
டிடி நீங்கள் சாம்பார் என்று சொன்னதுமே...ஆஹா டிடி கிட்ட வந்துவிட்டாரே!! என்று நினைத்தேன்...
நீக்கு//"விமர்சனம் நான் எழுதவில்லை, அதை பிறரிடம் நிரூபிக்க வேண்டும்..." -//
டிடி அதற்கு அவசியமே இருந்திருக்காது அந்த ஒரு வரி எல்லோர் கண்ணிலும் பட்டிருந்தால்!!!!! நான் வேறு கலர் போட்டிருந்து இறுதியில் அதை எடுத்தேன்...குறளைப் பார்த்து டிடி என்று டைவேர்ட் ஆவார்கள் என்று...ஹா ஹாஹ் ஆ என்னா தெக்கினிக்கி...
//இன்றைய தினம் மிகவும் உற்சாகமாக இருந்தது//
மிக்க மிக்க நன்றி டிடி!! எப்போதுமே உற்சாகம் தான்!!!
இப்போது இருவர் குறைவு! இல்லை என்றால் இன்னும் ஓடியிருக்கும்..
கீதா
ஆம் பானுமதி அம்மா... இல்லை... இல்லை... சகோதரிஸ் அதிரா & ஏஞ்சல்... சரி தானே...? (ஆறுதல் பரிசாவது கொடுங்கப்பா... ஹிஹி...)
நீக்குபானுமதி அம்மா தான் பயணத்தில் உள்ளார்களே... பாருங்க இப்ப தான் நினைவிற்கு வருகிறது...! இது முன்னமே ஞாபகம் வந்திருந்தால்...?!
வணக்கம் கீதாரெங்கன் சகோதரி
பதிலளிநீக்குஆறு மணிக்கு துல்லியமாக மர்ம விடை தெரிந்து விட்டது. அபாரமாக விமர்சனம் எழுதிய தங்களுக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள். காலையிலிருந்து யார் என தெரிந்து கொள்வதில் ஒரு முனைப்பு. தினமும் ஒரிரு தடவைகளுக்கு மேல் வராத என்னை நிறைய தடவை வந்து பார்க்கச் செய்து விட்டது தங்கள் பெயரை மூடிய முகமுடிக்குள் வைத்திருந்த விமர்சன பகுதி. ஹா.ஹா.ஹா. பதிவு மட்டுமல்ல.. இன்றைய நாளும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ரகசியத்தை கட்டிக் காத்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி.
சகோதரர் துரை செல்வராஜ் அவர்களை "மண்ணின் மைந்தர் சீனியர" என்று சொல்லியிருப்பது பொருத்தமான ஒன்று. அவருக்கும் அவருடைய கருத்துக்கு அதை நான் உறுதிபடுத்தி உள்ளேன்.மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா அக்கா மிக்க மிக்க நன்றி. ஆமாம் நீங்கள் வந்து வந்து இங்கு எட்டிப் பார்த்து ஸ்ரீராமும் சொல்லிக் கொண்டே இருந்தார்!!!
நீக்குஇந்த நாள் இனிய நாளாக உங்களுக்கும் இருந்தமைக்கு மிக்க நன்றி கமலா அக்கா...
விரிவான கருத்துகள் கூறி எங்களையும் மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி கமலா அக்கா
கீதா
எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇந்த நாள் எல்லோருக்கும் மிக இனிய நாளாக அமைந்தமைக்கு அப்படி அமைய வைத்த உங்கள் எல்லோருக்கும் தான் க்ரெடிட்ஸ்! நீங்கள் மகிழ்வுடன் வந்து கருத்துகள் பல சொல்லி பங்கு கொள்ளாது போயிருந்தால் இப்படி ஸ்வாரஸ்யம் பெருகியிருக்குமோ சொல்லுங்க? ஸோ எப்பவுமே ஒரு படைப்பு ஸ்வாரஸ்யமாக்கப்படுவதற்கு வாசக நட்புகளின் பங்குதான் மிக மிக முக்கியம். உங்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால்? எனவே இந்த நாள் இனிய ஸ்வாரஸியமான மகிழ்வான நாளாக அமைந்ததற்கு உங்கள் எல்லோருக்கும் எபி மற்றும் என் நன்றிகள் பல!
ஸோ யு ஆல் மேட் திஸ் டே!
உண்மைய சொல்ல வேண்டும் என்றால், சமீபகாலமாக மாலை நெருங்கும் சமயம் என் இணையம் மயங்கிவிடும். இரவு மிகவும் போராட வேண்டியிருக்கும். நான் மாலை நேரத்தில் தளங்கள் வரமுடியாம போகுது…பல பதிவுகள் வாசிக்க முடியாமல் போகிறது.
நேற்றும் அதே பிரச்சனைதான். நான் விமர்சனம் எழுதி முடித்தும் ப்ளாகரில் போட்டு அதை ஸ்ரீராமுக்கு அனுப்ப முடியாமல் போனது. படங்கள் சேர மறுத்த்து. நெட் வராது. வந்தாலும் பக்கங்கள் வராது. படனளை லோட் செய்ய முடியாமல் அது சேமிக்க முடியாமல்….ஸ்ரீராமிடம் சொன்னேன் நீங்க தூங்குவதற்குள் அனுப்பிவிடுகிறேன் என்று.
இடையில் நெர் வருகிறது என்று கொஞ்சம் கொஞ்சமாக ப்ளாகாரில் சேமித்தவற்றை எச்டிஎம் எல் ஆக ஸ்ரீராமுக்கு அனுப்ப போராடி, அனுப்பினால் பாதிதான் போயிருந்த்து. மீண்டும் போராட்டம். முழு பதிவும் அனுப்ப கிட்ட்த்தட்ட 10 மணி….எனக்கும் தூக்கம்…
பார்த்தால் ஸ்ரீராம் பாவம் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அவருடைய கஷ்டங்களுக்கு இடையில் கவலைகளுக்கு இடையில் இதையும் கவனித்து, பாசிட்டிவ் செய்திகள் கோர்த்து, நான் அனுப்பியதையும் போட்டு, அதில் சில வார்த்தைகளை மாற்றி என்று….பாவம் அவரும் கஷ்ட்டப்பட்டார். ஸ்ரீராமுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் அதற்கு முடிவில்லை. இத்தனைக்கும் நடுவில் வெற்றிகரமாகத் தளத்தை நட்த்திச் செல்வதற்கும் பாராட்டுகள் ஸ்ரீராம்.
எப்படியோ இன்று வெளியாகி உங்கள் எல்லோரது ஊக்கத்துடன், ஒத்துழைப்புடன், ஆர்வத்துடன், கருத்துகளுடன் இனிதாக முடிந்து மகிழ்வான நாளாக அமைந்தமைக்கும் மீண்டும் நன்றி உங்கள் எல்லோருக்கும்.
நேற்று வரை மயங்கிப் படுத்துக் கொண்டிருந்த இணையம் இன்றும் மயங்கினாலும், கொஞ்சம் ஸ்லொவாகி கருத்துகளை வெளியிட்டாலும் ஒத்துழைத்து விட்ட்து. எனவே அதற்கும் ந்ன்றி சொல்லிக் கொள்ள வேண்டும்.
மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ட் எபி, பானுக்கா ஐடியாவிற்கு…
கீதா
இன்றைய தினம் மிகவும் உற்சாகமாக இருந்தது...//மனம் நிறை வாழ்த்துகள் கீதா ரங்கன்.
நீக்குஆஹா எத்தனை அருமையான விமர்சனம்.
நீளம் இல்லை. கருத்து அதிகம். மனம் நிறை வாழ்த்துகள்.
நேற்றைய தினம் ஒரு சுவாரஸ்யமான நாளாய் அமைந்தது. நன்றி நட்புறவுகளே...
பதிலளிநீக்குவழக்கம்போல போற்றத்தக்க அரியவர்களைப் பற்றிய செய்திகள் அருமை.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
நீக்குஇந்த வார நற்செய்திகள் சிறப்பு. போர்வெல் ரீசார்ஜ் - தனிச்சிறப்பு பெற்ற தகவல். பாராட்டுகள்.
பதிலளிநீக்குஆஹா இந்த வாரம் கீதாஜி விமர்சனமா? நிதானமாக படிக்க வேண்டும்.