புதன், 4 செப்டம்பர், 2019

புதன் 190904 இப்போதிலிருந்து பத்து வருடங்கள் முன்னும், பின்னும் ...


சென்ற வாரம் வீட்டுச் சாப்பாட்டுக்கே எங்கள் வோட்டு என்று பதிந்து வீட்டுச் சாப்பாட்டை வெற்றி பெற செய்துவிட்டீர்கள். கருத்து எழுதியவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி. இந்த வார கேள்வி, பதில்களைப் பார்ப்போம். 

நெல்லைத்தமிழன் :


1. இன்று 'நடிகர் விஜய் சங்கீதா திருமண நாள் வாழ்த்துகள்' என்று பெரிய போஸ்டரைப் பார்த்தேன். சொந்த வாழ்க்கைக்கோ அல்லது தன் பெற்றோர்களுக்கோ பணத்தை உபயோகிக்காம, முகம் தெரியாதவர்களுக்கு, தேவையில்லாத விஷயங்களுக்கு அதைச் செலவழித்து கொண்டாடும் மனநிலை எப்படி வருகிறது?


& எனக்கும் அந்த சந்தேகம் எழுவது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட பிரபலஸ்தரின் பொருளுதவி இல்லாமல் போகாது.

சென்ற வாரம், அந்த நடிகரின் அம்மா, பக்கத்து ரூமில் இருக்கின்ற அந்த நடிகருக்கு, 'நீதான் அடுத்த சூப்பர் ஸ்டார்' என்று கடிதம் எழுதி, அதை நேரே அவரிடம் கொடுக்காமல், தொலைக்காட்சி நிலையங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பிய காமெடி நிகழ்வும் நடந்தது!

மொத்தத்தில் அவர்கள் பைத்தியமா அல்லது நாம் பைத்தியமா என்ற சந்தேகமும் வருகின்றது!


2. எந்த வயதில் உணவின்மீதான ஆர்வம் ஒருவருக்குக் குறைகிறது?

& எனக்கு இன்னும் அந்த வயது வரவில்லை என்பதால், இதற்கு விடை தெரியவில்லை. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு உணவின் மீதான ஆர்வம் குறைய வாய்ப்பே இல்லையோ என்றும் தோன்றுகிறது.

3. நல்ல சமையல் பண்ணத் தெரிந்தவள், ரொம்ப அன்பானவள் - இவற்றில் புதுமனைவியின் எந்த குணம் ஆணைக் கவரும்?


$ அன்பானவளுக்கு சமையல் எப்படி இருந்தால் அவருக்கு பிடிக்கும் என்றொரு ஆர்வம் உண்டாகி தேர்ந்த சமையல் நிபுணி ஆகிவிடுவாங்களே!


& புது என்ற வார்த்தையில்தான் உள்ளது சூட்சுமம். புது மனைவி என்றால் அன்புதான் முதலில் கவரும் அம்சம். திருமணம் செய்துகொள்ளும் வரை ஆண், அம்மா சமையலையோ அல்லது ஹோட்டல் சாப்பாட்டையோ சாப்பிட்டு பழக்கம் ஆகியிருக்கும். அதனால் எப்பேர்ப்பட்ட சமையல் நிபுணியும், புதுக் கணவனை சமையல் மூலம் முதலில் கவர இயலாது. 'என்ன இருந்தாலும் என்னுடைய அம்மா சமையல் சுவை உன் சமையலில் வரவில்லை' என்று வாய் தவறி சொல்லிவிட்டால் அப்புறம் அன்பாவது சொம்பாவது! கம்புதான்!


ஏஞ்சல் :1, உங்க காதுக்குள் சின்ன குட்டி எறும்பு போன அனுபவம் உண்டா ? அப்படி போன எறும்பை எப்படி வெளியே எடுத்தாங்க ?

$ காதுக்குள் போன எறும்பை உப்புத்தண்ணீர் ஊற்றி வெளியேற்ற உதவிய பக்கத்து வீட்டு உபாத்யாயருக்கு இன்றும் நன்றி கூர்வதுண்டு.

& அனுபவம் இருக்கு. அது ஒருவிதமான துன்பமான இன்ப அனுபவம். காதுக்குள்ள திடீரென்று யாரோ ' குடு குடு குடுக் ...' என்று பாங்கோஸ் இசைப்பது போலத் தோன்றும். ஒருவேளை அந்தச் சின்னக் குறும்பு சாரி சின்ன எறும்பு தன் குட்டிக் கைகளால் நம்முடைய ear drum மைத் தட்டிப் பார்க்குமோ? 
காதுக்கு வெளியே வெல்லக்கட்டி வைத்தால், அதனை மோப்பம் பிடித்து எறும்பு வெளியே வரும் என்று கிராம விஞ்ஞானி ஒருவர் சொன்னதைக் கேட்டு, அப்படியே ஒரு வெல்லக்கட்டியை காது அருகே வைத்துக்கொண்டு படுத்தேன். வெல்லக்கட்டி எறும்புக்கு தெரியவேண்டுமே என்று அடிக்கடி வெல்லக்கட்டி மீது டார்ச் லைட் அடித்து அதை வெளிச்சக்கட்டியாக விளம்பரப் படுத்திக்கொண்டிருந்தேன். குடு குடுக் நின்றது.  ஆனால் எறும்பு வெளியே வரவில்லை. ஒருவேளை அது அப்படியே ஊர்ந்து ஊர்ந்து மூளைக்குள் ஒரு incredible journey மேற்கொண்டிருக்குமோ என்றும் பயம் வந்தது. இன்னமும் அந்த எறும்பு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. 

2,, உண்மைக்கு ஆதாரம் தேவையா ?


$ உண்மையை மற்றவர் நம்பவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் மட்டும்.

& தேவை இல்லை - ஆனால் இருந்தால் நல்லது. இல்லையேல் வாதத் திறமை உள்ளவர்கள் உண்மையை இன்மை ஆக்கிவிடுவார்கள்.

3, Law Of Attraction என்பதை கண்டவுடன் காதல் தவிர்த்து வேறெதற்கு ஒப்பிடலாம் ?


$  காந்தத் துண்டுகளுக்கு. 


4,, ரகசியம் என்றால் என்ன ? அது எதுவரைக்கும் ரகசியமா இருக்கும் ?

 $ காதிலிருந்து வாய் வழியே வெளி வரும் வரை.


   Image result for secret

& ரகசியம் என்றால், சின்னக் குரலில் அல்லது குரலே எழாமல் மற்றவருக்கு சொல்லப்படுவது என்றுதான் நான் நினைத்திருந்தேன். இருவருக்கு மட்டும் தெரிந்திருக்கும் விஷயம் எல்லாம் ரகசியம் என்று வைத்துக்கொள்ளலாம். இருவருக்கு மேல் தெரியும் என்றால் அது ரகசியம் இல்லை. 

5,,சமீபத்தில் நீங்கள் பார்த்த கேள்விப்பட்ட முரண் /முரணான விஷயம் எது ?

$ ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல!

&  இதோ இதுதான் : 
6,, பிரவுன் நிறத்தில் இருக்கும் பால் சேர்க்காத காபி மற்றும் தேநீரை எதுக்கு கருப்பு காபி கருப்பு தேநீர்னு சொல்றாங்க ?


$ green tea  green coffee இவற்றிலிருந்து வேறுபடுத்தத்தான்.

& Black coffee யில் வெள்ளை நிறப் பால் சேர்ப்பதால்தான் அது brown coffee ஆகிறதோ என்னவோ?


7, பள்ளி நாட்களில் இம்போசிஷன் எழுதிய அனுபவம் உண்டா ?


$ அப்போதெல்லாம் எந்த வார்த்தை எழுதினாலும் 10 முறை தான்.

& ஓ ! நிறைய உண்டு. 

இதோ ஓர் உதாரணம். 

நான் இனிமேல் தப்பும் தவறுமாக  எழுதமாட்டேன்.
நான் இநிமேல்  தப்பும் தவறுமாக   எழுதமாட்டேன்.
நான் இநிமேல்  தப்பும் தவருமாக  எழுதமாட்டேன்.
நான் இநிமேல் தப்பும் தவருமாக    எழுதமட்டேன்.
நான் இநிமேல் தப்பும் தவாருமாக  எழுதமட்டேன்.
நான் இநிமேள் தப்பும் தவாருமாக  எழுதமட்டேன்.
நான் இநிமேள் தப்பும் தவாருமாக  எழுதமுட்டேன்.
நான் இநிமேள் தாப்பும் தவாருமாக  எழுதமுட்டேன். 
நான் இநிமேள் தாப்பும் தவாருமாக  கழுதமுட்டேன். 
நான் இநிமேள் தாப்பும் தவாருமாக  கழுதமுட்டேண். 8, இப்போ இருக்கும் ஆசிரியர்கள் ஐ மீன் எங்கள் பிளாக் டீச்சர்ஸ் ஹெட் டீச்சர்ஸ்கள் இப்போதிலிருந்து 10 வருடம் முன்னும் 10 வருடம் பின்னும் எப்படி இருந்தார்கள் எப்படி இருப்பார்கள் ?

$ எப்படி இருந்தார்கள் என்று சொல்லலாம்..எப்படி இருப்பார்கள் என்று.

& நான் இந்த பதிலை எழுதுகின்ற இன்றைய தேதியாகிய 03-09-2019 என்பதை வைத்துப் பார்த்தால், 
பத்து வருடம் முன்பு 3.9.2009 அன்று, காணாமல் போன ஒய் எஸ் ஆர் ரெட்டி என்ன ஆகியிருப்பார் என்று யோசனை செய்துகொண்டிருந்தோம்; மறுநாள்  என்ன பதிவு எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். பத்து வருடங்களுக்குப் பிறகு  3.9.2029 அன்று அது ஒரு திங்கட்கிழமை என்பதால் யாருடைய ரெஸிப்பி வெளியிட்டிருக்கோம், அதை நாமே செய்து பார்க்கலாமா என்று யோசித்துக்கொண்டிருப்போம். மறுநாள் செவ்வாய்க்கிழமைக் கதை சரியான வடிவத்தில் உள்ளதா என்று பார்த்து, அதை வெளியிடுவதற்கு schedule செய்துகொண்டிருப்போம். 


அதிரா : 

1. இந்தக் கேள்விக்கு எனக்கு ஒரு விடை தெரியும், ஆனா உங்களிடமிருந்தும் சுவாரஷ்யமான பதிலை எதிர்பார்க்கிறேன்.

மனிதர்களுக்கு மட்டும் உயர்திணை எனும் பெயர் ஏன் வந்தது?


# நாம் உயர்வாக மதித்து மரியாதை செலுத்தாததால் சினம் கொள்ளாத / கொள்ள இயலாதது யாவும் அஃறிணை.

& எல்லாம் நமக்கு நாமே சூட்டிக்கொண்ட பெயர்தான் என்கிறார் மதன், தன்னுடைய வரலாற்றுத் தொடர் ஒன்றில். 


2. இது கொஞ்சம் நம் சமயம் சார்ந்தது. கோயிலுக்குப் போனால் முன்னைய காலங்களில் விழுந்து கும்பிடாமல் வரமாட்டார்கள். ஆனா இப்போ பெரும்பாலானோர் கோயிலில் விழுந்து கும்பிடுவதில்லை [நான் விழுந்து கும்பிடுவேன்] ஆனா இப்போ அதுக்கு ஒரு முறை சொல்கிறார்கள், விழுந்து கும்பிடாவிட்டாலும், கோயிலைச் சுற்றிக் கும்பிட்டபின், கால்களை மடிச்சு கொஞ்ச நேரம் நிலத்தில் இருந்துவிட்டு வாங்கோ அப்போதான் பலன் கிடைக்கும் என... இது எந்தளவு தூரம் உண்மை? 


# கையை இப்படி வை, காலை அப்படி வை, கண்ணைக் கிழக்காகத் திருப்பு போன்றன எல்லாம் வெறும் சடங்கு. பலன் நாடி கோயிலுக்குச் சென்றால் கால்வலிதான் உறுதியாகக் கிடைக்கும்.

& சும்மா ஒரு focus ஏற்படுத்ததான்  சிலர் கண்டுபிடித்த வழிபாடு முறைகள், இப்படி செய் அப்படி செய் என்று சொல்லி வைத்திருப்பார்கள். வேறு ஒன்றும் விசேஷ காரணங்கள் இருக்காது.                    

3.இப்போ பிக்பொஸ் பார்க்கிறனீங்களோ? அதில் பிடிச்ச ஒருவர்? பிடிக்காத ஒருவர்?[மொத்தக் கணக்கில் சொல்லலாம்]. [ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அமைதி பிளீஸ்ஸ்ஸ்:) யாரும் பொயிங்கக்கூடாது:)].


# பிக் பாஸ் பாராதது மட்டுமல்ல அது எந்த மாதிரி நிகழ்ச்சி என்று கூடத் தெரியாது. (எந்த சானலில் எப்போது வருகிறது ?)

& பிக் பொஸ் எல்லாம் பார்க்கிறனில்லை. நேர விரயம். 
4.தமக்கு ஒரு பிரச்சனை வரும்போது மட்டும் அதைப் பெரிய பிரச்சனையாகவும், மற்றவர்களுக்குப் பிரச்சனை வரும்போது அதை .. இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. என்பதைப்போலவும் பார்ப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து?..


# அவரும் என் போல்தான் என்பதுதான்.

& நம்முடைய பிரச்னை என்பது நம் கண்ணருகே நாம் வைத்துப் பார்க்கும் சிறிய கல். நம் கண் அருகே இருப்பதால் அது மலை போலத் தோற்றமளிக்கும். மற்றவர்களின் பிரச்னை அவர்களுடைய கண்ணருகே அவர்கள் வைத்துப் பார்க்கும்  சிறிய கல். அவர்களுக்கு மலை, நமக்கு மிளகு. 
5. தான் எப்பவும் கரெக்ட்டானவர், தான் செய்வதெல்லாம் நல்ல விசயங்கள், மற்றவர்கள் தப்பானவர்கள், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது எனும் மனப்பாங்கோடு இருப்பவர் பற்றி என்ன நினைக்கிறீங்க?


# மேலே காணும் அதே விடைதான்.

& I am OK; You are not OK! மன நிலை. 


6. “தன்னைப்போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டும்” என்பினம், ஆனா இந்தத் தன்மை இல்லாதவர்கள் பற்றி உங்கள் பார்வையில் ஏதும் சொல்லுங்கோ. அதாவது நாம் எதிர்பார்ப்பதுபோல, விரும்புவது போலத்தானே மற்றவர்களும் நினைப்பார்கள் என எண்ணாமல், தன் விருப்பம் நிறைவேறிட்டால் போதும் என எண்ணுவோர்.


& தன்னைப்போல் பிறரை எண்ணும் தன்மை உள்ள ஒருவர் தன்னைப் பற்றி உயர்வாகவும், பிறரை தாழ்வாகவும் எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மற்றவர்களும் அவரை உயர்வாகவும் மற்ற எல்லோரையும் தாழ்வாகவும் நினைத்தால், அவர், தன்னைப்போல் பிறரும் எண்ணுகிறார்கள் என்று சந்தோஷப்படுவாரா? அல்லது மற்றவர்களும் அவர்களை உயர்வாகவும் மற்றவர்களைத் தாழ்வாகவும் எண்ணினால் அது சரி என்று நினைப்பாரா? 

7. இந்த தலைமுறை இடைவெளி [generation gap] என அடிக்கடி பேசுகிறார்கள், ஆனா இதன் சரியான விளக்கம் என்ன?.. தலைமுறை என்பது எப்படிக் கணக்கெடுக்கப் படுகிறது.. அப்பா, அம்மா - பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள்.. இப்படியா இல்லை குறிப்பிட்ட வருடங்களை வைத்தா?.. குட்டிக் குட்டிக் இடைவெளிக்குள், எப்படி பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?


# தலைமுறை இடைவெளி 12 ஆண்டுகளில் வலுவடைகிறதாகக் கருதப் படுகிறது.

& தலைமுறை இடைவெளி என்பது நாம் தலை சீவிக்கொள்ளும்போது எடுக்கின்ற வகிடு. சிலர் நேர் வகிடு எடுப்பார்கள்; சிலர் கோண வகிடு எடுப்பார்கள்! இதுல வருடங்கள் எங்கேயிருந்து வரும்? 😼

===============================================

மீண்டும் சந்திப்போம். (எப்போ?) 

===============================================

79 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

  என்ன இது.. இன்று யார் வரவையும் காணவில்லை. சகோதரி கீதா ரெங்கன் நலமுடன் உள்ளாரா? அவரின் தவறாத வருகை முதலில் இல்லாமல் எந்த பதிவும் நன்றாகவே இல்லை.. அவர் விரைவில் நலம் பெற இனிய பிரார்த்தனைகள்.

  கேள்வி பதில்களை படித்து விட்டு வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 3. கேள்வி பதில்கள் நன்றாக இருக்கிறது.
  மதுரையில் எங்கு பார்த்தாலும் எல்லா வற்றுக்கும் மிக் பெரிய பெரிய போஸ்டர் வைக்கிறார்கள். எப்படி இப்படி செலவு செய்கிறார்கள் என்று நினைப்பேன்.

  க்டைசி வரை உணவு தள்ளுபடி இல்லாமல் எல்லாம் விரும்பி சாப்பிட்டால் கடவுளால் ஆசீற்வாதம் செய்யபட்டவர்.

  புதுமனைவி முதலில் மாமியார் கை சமையலை கேட்டு செய்து கொடுத்து கணவர், மற்றும் கண்வர் குடும்பத்தார் அன்பை பெற்று விட்டால் எல்லாம் நலமே!
  எங்கள் வீட்டில் இப்படிதான் செய்வோம் என்பதை கொஞ்ச நாள் மறந்து விட வேண்டும். அன்பை பெற்ற பின் நம் கை மணத்தை காட்டலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மதுரையில் எங்கு பார்த்தாலும்,,,,,,,,பெரிய பெரிய போஸ்டர் ........எப்படி இப்படி செலவு செய்கிறார்கள்// எல்லாம் ஆதாயத்தை எதிர்பார்த்துத்தான்! போஸ்டருக்கு முன்னால் சுவரெழுத்து விளம்பரமாக இருந்த நாட்களில் மதுரையில் ஒச்சுபாலு என்றொரு திமுக ஆசாமி ஆளுயர சுவரெழுத்து, அப்புறம் போஸ்டர் என்று ஒட்டியே கட்சியில் பிரபலமானதுண்டு. அப்புறம் காணாமல் போய்விட்டார்! பெரிய இடத்தின் கண்ணில்பட பெரிய ,பெரிய போஸ்டர்!

   இப்போது மொய்விருந்துக்கும் கூட flex போர்டுகள் என்றாகிவிட்டது. மருதேய்னா சும்மாவா?

   நீக்கு
  2. நீங்கள் சொல்வது சரிதான், காதுகுத்துக்குதான் அதிகமாய் flex போர்டுகள் .

   நீக்கு
  3. மருத மருக்கொழுந்து வாசம், போஸ்டர் ஓட்டுகின்ற தேசம்!

   நீக்கு
 4. காதுக்குள் பூச்சி போய் அது அதன் சிறகை பட பட என அடித்த அனுபவம் உண்டு. தலையை சாய்த்து காதில் தண்ணீர் விட்டு வேகமாய் தலையை சாய்த்தவுடன் வந்து விட்டது.

  ஒரு பெண்ணுக்கு எங்கள் மாமா வீட்டு விழாவிற்கு வந்தவருக்கு கண்ணில் எறும்பு விழுந்து விட்டது அது கடித்துக் கொண்டு இருந்தது எத்தனை பேர் எத்தனையோ யோசனை கொடுத்தும் எடுத்து பார்த்தும் வரவில்லை. அதன் தலை பகுதி கண்ணில் ஒட்டிக் கொண்டு இருந்தது அப்புறம் டாக்டரிடம் போய் அவர்தான் எடுத்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதேதான் கோமதி அக்கா, ஊரில் ஒரு அண்ணா, ஹெல்மெட் போடாமல் போயிருக்கிறார்ர்.. மரத்திலிருந்து தொங்கி ஒரு மசுகுட்டி மயிர் கண்ணில் குத்தி விட்டதாம், பின்பு [ஒபரே..]தியேட்டருக்குள் கூட்டிப்போய்த்தான் எடுத்ததாம் வெளியே...

   நீக்கு
  2. காதுக்குள் பூச்சி புகுந்த அனுபவம் உண்டு எனக்கும்!

   நீக்கு
  3. அதிரா, எறும்பை எடுக்கிறேன் என்று ஆளுக்கு ஆள் அந்த பெண்ணை கஷ்டபடுத்தியது இன்னும் நினைவுகளில் அது நடந்து பலவருடம் ஆச்சு. எறும்பின் உடல் பகுதியை எல்லோரும் இழுத்து எடுத்து விட்டார்கள் அதன் தலை பல் பகுதியை எடுக்க முடியவில்லை. விழித்திரையை கடித்து கொண்டு இருக்கு. டாக்டரிடம் போனால் நல்ல திட்டு கிடைத்தது எல்லோருக்கும்.உடனே எங்களிடம் வராமல் உங்களை யார் எடுக்க சொன்னது கண் பார்வை போனால் என்ன செய்வது என்று.

   ஒரு குழந்தை மூக்கில் சிலேட்டில் எழுதும் குச்சியை (பலப்பம்) வைத்து விளையாடிக் கொண்டு இருந்தது அது உடைந்து சிக்கி கொண்டது அதையும் டாக்டரிடம் கொண்டு போய் தான் எடுத்தார்கள்.

   நீக்கு
  4. மூக்கில் சிலேட்டுக்குச்சி விட்டுக்கொண்ட நாகை பையன் ஒருவனை (பெயர் ராம்குமார்) அவன் பட்ட அவஸ்தையை அரை நூற்றாண்டுக்குப் பின், இன்றும் ஞாபகம் இருக்கிறது! அப்பொழுதும் ஒரு டாக்டரின் உதவியோடுதான் வெளியே எடுத்தார்கள்!

   நீக்கு
 5. அன்பான வணக்கம் வணக்கம் எல்லா அம்மாஸ், அக்காஸ், அண்ணாஸ், தம்பிஸ், தங்கைஸ் மற்றும் ஆர்ச்சியின் க்ரானி, எங்களின் தி ஒன் அண்ட் ஒன்லி..அன்பு ஆச்சிக்கும், நட்பூக்கள் எல்லோருக்கும்.

  ஒரு வாரம் ஆகிவிட்டது எல்லோரையும் கண்டு. நலமே. எல்லோரும் நலமுடன் இருப்பீர்கள். எபி கொஞ்சம் டல்லடிப்பது தெரிகிறது. விரைவில் சரியாகிவிடும்.

  என் வலக்கைக்கும், தோள்கள், கழுத்திற்கும் கொஞ்சம் பலம் சேர்த்துக் கொண்டு வருகிறேன். அப்பத்தானே பூஸாரின் வாலை பிடித்து இழுக்க முடியும். அதுவும் பூஸாரை குண்டு பூஸார்னுதானே அவங்க செக் நம்ம தேவதை சொல்லி...ஹிஹிஹிஹி....இரு வாரங்கள் கழித்து மெதுவாக இங்கு வந்துவிடுவேன். தற்போது டைப்பிங்க் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது.

  ஆனால் விரைவில் வந்துவிடுவேன்...கீதாவா கொக்கா..ஹா ஹா ஹா...

  இப்போதைக்கு விடை பெறுகிறேன். விரைவில் சந்திப்போம்...

  அன்புடன் கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

   நலமா? நலமுடன் குணமடைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எவ்வாறு இப்படி ஏற்பட்டது?

   /எபி கொஞ்சம் டல்லடிப்பது தெரிகிறது. விரைவில் சரியாகிவிடும்./

   தங்களின் இந்த பாஸிடிவ் வார்த்தைகள் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.
   உடல் நலம் பேணவும்.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. ஆஆஆஆஆஆஆஆஆ கீதாவைத் தேடினேன்.. என் கண்ணுக்கு இங்கு தெரியவில்லை:) 2ம் தடவையாக தேடினேன் கண்டு பிடிச்சிட்டேன்ன்:))..

   கை வலியோ கீதா, என்னை இழுத்து தேம்ஸ்ல தள்ள ட்றை பண்ணினனீங்களெல்லோ:) அதனால வந்திருக்கும் ஹா ஹா ஹா..

   விரைவில் நலமாகி வாங்கோ கீதா, கை, கழுத்து வலிகள் வந்தால், அதுக்கு எவ்வளாவு ஓய்வு குடுக்கிறீங்களோ அவ்வளவுக்கு குணமாகிவிடும்.. இன்னொன்று இதுக்கு ஹொட் வோட்டர் பாக் சிறந்தது கீதா.. படுக்கும்போது, இருக்கும்போது கையை அதன் மேல் வச்சிருங்கோ..

   simple/normal bags

   https://www.amazon.co.uk/Fast-Litre-Plain-Water-Bottle/dp/B01KYKA712/ref=asc_df_B01KYKA712/?tag=googshopuk-21&linkCode=df0&hvadid=309964069570&hvpos=1o2&hvnetw=g&hvrand=7654028508709822026&hvpone=&hvptwo=&hvqmt=&hvdev=c&hvdvcmdl=&hvlocint=&hvlocphy=9046990&hvtargid=pla-699770195423&psc=1

   நீக்கு
  3. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் கீதாரெங்கன் கை பயிற்சி தோள்பட்டை பயிற்சி எல்லாம் செய்யுங்கள். அதிரா சொல்வது போல் வெந்நீர் ஒத்தடம் நல்லது.

   நீக்கு
 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். கேள்விகளும் பதில்களும் ஸ்வாரஸ்யம். சிறுவயதில் காதுக்குள் எறும்பு சென்று அவதிப்பட்ட அனுபவம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் காலத்தில் தரையில் படுத்துறங்கிய எல்லோருக்குமே அந்த அனுபவம் நிகழ்ந்திருக்கும்!

   நீக்கு
 7. கேள்வி பதில்கள் ரசிக்கும்படி இருந்தது.

  பயணம். விரிவாக எழுத முடியலை

  14ம் தேதிவரை இணையம் மேய்வது கடினம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// இணையம் மேய்வது கடினம்///

   எனக்கு நிறையக் கேள்வி வருது:)) ஆனாலு கேய்க்க மாட்டேனே.. அஞ்சு திட்டுவா பிறகு என்னை ஹா ஹா ஹா:))

   நீக்கு
  2. நெல்லைத்தமிழன் மீண்டும் இணையம் வரும்வரை நானும் சற்று ஓய்வு எடுத்துக்கொள்ள நேரிடும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 8. ஆஆஆஆஆஆ மீ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன் மீ தான் 1ஸ்ட்டூஊஊஉ:)).. ஹையோ லேட்டாயிடுச்சோ.. நைட் வர நினைச்சே நித்திரையாகிட்டேன்.. இப்போ குளிர் ஆரம்பமாகிவிட்டது அதனால எல்லோருக்கும் இருமல் தடிமன் காச்சல் குணம் வரப்பார்க்கிறது.

  //சென்ற வாரம் வீட்டுச் சாப்பாட்டுக்கே எங்கள் வோட்டு என்று பதிந்து வீட்டுச் சாப்பாட்டை வெற்றி பெற செய்துவிட்டீர்கள். கருத்து எழுதியவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி. //
  எந்த வீட்டுச் சாப்பாடு எனச் சொல்லவே இல்ல:)).. சரி அது போகட்டும் இதுக்காக ஒரு வீட்டுச் சாப்பாட்டுப் படமவது போட்டு நம்மைப் பேய்க்காட்டியிருக்கலாஆஅ.. சரி இதுவும் போகட்டும்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டுச் சாப்பாட்டைக் காட்டி பேய் காட்டுவதா! ஹ ஹா

   நீக்கு
 9. //இப்போதிலிருந்து பத்து வருடங்கள் முன்னும், பின்னும் ...//

  ஹா ஹா ஹா தலைப்பு மட்டும் ஒழுங்காப் போடுறார் கெள அண்ணன் ஆனா இதுக்கான பதில் சரியில்லையாக்கும் ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
 10. முதேல்ல்ல்ல்ல்ல்ல் கேய்வி:)).. பார்த்தாலே தெரியுது நெலைத்தமிழனுக்குப் பொறாஆஆஆஆஆஆஅமை:)).. தனக்கு இதுவரை ஒரு நோட்டீஸ் கூட ஒட்டுறாங்க இல்லையே என..:))

  [ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பொயிங்கக்கூடா மீ இன்னமும் முடிக்கவில்லை வசனம்..]

  தொடர்கிறது வசனம்... அப்பூடின்னு நாங்க ஆஅரும் நினைக்கவில்லை என ஜொள்ள வந்தேனாக்கும்.

  பதிலளிநீக்கு
 11. //2. எந்த வயதில் உணவின்மீதான ஆர்வம் ஒருவருக்குக் குறைகிறது? //

  இந்தக் காலத்தில் ஆருக்கும் எதன் மீதும் ஆர்வம் குறைவதுபோல தெரிவதில்லை.. புதுப்புது ஆர்வம் வருகிறது அவ்ளோதேன்ன்ன்:)) ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
 12. //3. நல்ல சமையல் பண்ணத் தெரிந்தவள், ரொம்ப அன்பானவள் - இவற்றில் புதுமனைவியின் எந்த குணம் ஆணைக் கவரும்?//

  அழகை விட்டிட்டாரே இதில் ஹா ஹா ஹா..
  அன்பு இருந்தால் அனைத்தும் தானா வரும் எந்த வயதிலும் அது அப்படியே இருக்கோணும்..

  மேலே இருவர் பதில்கள்தானே இருக்கு, ஸ்ரீராம் இப்போ கிரேட் எஸ்கேப் ஆகிடுறார்ர் புதனுக்கு:))

  பதிலளிநீக்கு
 13. ஆஆஆஆஆ அடுத்து எங்கட கேள்வியின் நாயகியோ.. விடுங்கோ விடுங்கோ மீ ஒரு ரீ குடிச்சிட்டு வந்திடுறேன்.. தெம்ம்ம்ம்ம்பா ஹா ஹா ஹா...

  //பள்ளி நாட்களில் இம்போசிஷன் எழுதிய அனுபவம் உண்டா ?//

  நாங்கள் இப்படி எழுதியதாக நினைவில்லை.. நம் காலங்களில்..

  பதிலளிநீக்கு
 14. அனைத்துக் கேள்வி பதில்களும்.. நன்று.

  மனிதர்களுக்கு உயர்திணை எனும் பெயர் வந்தமைக்கு காரணம்.. நம்மால் மட்டுமே சிந்தித்து செயல்பட்டு உயர்வடைய முடியும் என்பதாலாம் ... அதாவது, நம்மால் மட்டுமே சிந்தித்து உணர்ந்து நம் குணத்தை மாற்றி உயர்வை அடைய முடியும்... அல்லது முயற்சி எடுத்து உயர்வடைய முடியும் தன்மை கொண்டவர்கள்.. இதுக்கு உதாரணமாக உடனே நினைவுக்க்கு வருவது..

  போன சனிக்கு முதல்சனி ஸ்ரீராம் போட்ட, கஞ்சா விற்றவர் பால் வியாபாரியாக மாறியது நினைவுக்கு வருது.

  பதிலளிநீக்கு
 15. சே..சே.. ஸ்ரீராம் பிக்பொஸ் பார்க்க்கிறாராமே:)) அவரிடம் கேட்காமல் விட்டிட்டீங்க கெள அண்ணன் பதிலை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அடுத்த கிழமை.. நீல மைப் பதிலும் வேணும்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. ஹையோ... எனக்கு பதில் எல்லாம் சொல்லத் தெரியாதே... என்னை மாட்டி விடறாங்களே...​

   நீக்கு
 16. // தலைமுறை இடைவெளி 12 ஆண்டுகளில் வலுவடைகிறதாகக் கருதப் படுகிறது.//
  ஓ...

  //தலைமுறை இடைவெளி என்பது நாம் தலை சீவிக்கொள்ளும்போது எடுக்கின்ற வகிடு. //
  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) இது தலைமயிர் இடைவெளியாக்கும் ஹையோ ஹையோ..:))

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை
  சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சத்துடன் சேர்ந்தது. அனைவருக்கும் அதில் நடிக்கும் நாயக,நாயகிகளைப் பற்றி நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில்லை.ஆனால், அதில் அவர்களின் உயிர் ரசிகர்கள் என்றால் அவரின் அனைத்து விபரங்களும் ரசிகரின் விரல் நுனியில் இருக்கும். பின்பு வாங்கிய சுதந்திரத்தை என்ன செய்வதாம்...!!

  ஆசைப்பட்டு சாப்பிட்டு வந்த உணவை தவிர்க்க முடியாமல் ஒதுக்கி வைக்க இப்போதுதான் ஏராளமான உபாதைகள் வந்திருக்கின்றனவே! ஆனால் தாங்கள் கூறியபடி ஆரோக்கியமான இருப்பவர்கள் அவர்கள் வாங்கி வந்த வரம்.

  புது மனைவி பதில்கள் நகைச்சுவையாக உள்ளது. ரசித்தேன். ஆமாம்! புது மனைவிகளுக்கு இப்போதெல்லாம் எங்கே நேரம்.. வேலைக்குப் போகும் பெண்களுக்கு அன்பையும் கலந்து சமைப்பதென்பது கொஞ்சம் கடினம்தான்.. அவர்களது நேரம் அப்படி..! பணி முடிந்து வீட்டுக்கு வரும் போது,அலுப்புதான் எஞ்சி இருக்கும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 18. //..மொத்தத்தில் அவர்கள் பைத்தியமா அல்லது நாம் பைத்தியமா என்ற சந்தேகமும் வருகின்றது! //

  தமிழருக்குத்தான் இந்த பாக்யம்! வேறு எந்த மாநிலத்தவனும் இதில் போட்டிபோட முடியாது! தமிழ்நாடு, கடந்த சில தசாப்தங்களுக்குள் வெகுவாக ’முன்னேறி..’ பைத்தியநாடு என்றாகிவிட்டது .. Excellent development !

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  எனக்கு சிறு வயதில் "செவிப்பூரான்" என்ரொரு பூரான் வகை காதில் புகுந்து விட்டது. அந்த உணர்வு இன்னமும் மறந்தபாடில்லை. சுற்றியிருந்தவர்கள் நல்லவேளை! பார்த்து எடுத்து விட்டாய்.. இல்லையென்றால், அது முளையை (இருந்தால்) கடித்து பாதித்திருக்கும் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். அதிலிருந்து கொஞ்ச நாளைக்கு தூங்கும் வரை பத்திரமாக ஒரு டவலை காதுகளைக் சுற்றி கட்டிக் கொண்டு படுக்கும் இருந்தது.


  அது போல் இல்லத்தரசியாக இருந்த போது மேலையிருந்து எடுத்த வெல்ல டப்பாவில் இருந்த கடிஎறும்புக்கு, வெல்லத்தை விட்டு அதைப்பிரிப்பதால், கோபம் அடைந்து என் கண்ணுக்குள் போய் அமர்ந்து விடாமல் நான்கு தினங்களுக்கும் மேலாக கடிக்க,அதை முழுதாக எடுப்பதற்குள் பட்டபாடு.. ஆக காதையும், கண்ணையும் மற்ற ஜீவராசிகள் பதம் பார்த்து விட்டன. தாங்கள் சொல்வது போல் அந்த காலத்தில் கீழே வெறும் தரையில் படுப்பதால் இந்த மாதிரி சில பிரச்சனைகள்..கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு நன்றி.எறும்புகள் யானையையே திண்டாடவிடும் என்று கேள்விப்பட்டிருக்கேன். நாம் எல்லாம் எம்மாத்திரம்!

   நீக்கு
 20. ///இவற்றில் புதுமனைவியின் எந்த குணம் ஆணைக் கவரும்?///

  ஹாஹாஆ :)) சமையல் எல்லாம் புது மனைவிக்கு ஏணி வச்சாலும் எட்டா துன்னு அறியாதவர்களா புது கணவர்கள் :)ஆல்வேஸ் அன்பே அன்பு மட்டுமே  கவரும் 

  பதிலளிநீக்கு
 21. //சொந்த வாழ்க்கைக்கோ அல்லது தன் பெற்றோர்களுக்கோ பணத்தை உபயோகிக்காம, முகம் தெரியாதவர்களுக்கு, தேவையில்லாத விஷயங்களுக்கு அதைச் செலவழித்து கொண்டாடும் மனநிலை எப்படி வருகிறது?//
  இவ்ளோ ஏன் தன்  வீட்டில் தனக்கு துணி தோச்சி சாப்பாடு போட்டு கவனிக்கிற மனைவிக்கு குட்மார்னிங் சொல்லாதவங்கதான் முகப்புத்தகத்தில் உள்பெட்டில வந்து காலை வணக்கம் டோலி :) னு சொல்றாங்க 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ! உண்மை. ஆனால் அந்தக் காலத்தில் நான் என் மனைவிக்கு காலையில் 'குட் மார்னிங்' என்று சொன்னால், அல்லது எதற்காவது 'தாங்க் யு' என்று சொன்னால், "இதெல்லாம் ஏன் சொல்கிறீர்கள்? நான் என்ன அந்நியமா?" என்று கேட்பார்கள்!

   நீக்கு
  2. ஹாஹாஆ :) சொன்னாலும் தப்பு சொல்லாட்டியும் தப்பாகுது :) பாவம் அப்பாவி ரங்கமணிகள் .
   ஆனால் வெளிநாட்டில் கட்டாயம் சொல்லணும் இல்லேனா அவ்ளோதான் :) குறட்டைக்கே கோர்ட்டுக்கு போறவங்க இங்கே .குழந்தைகளும் ஸ்கூலில் நர்சரிலருந்தே  எல்லாத்துக்கும் தாங்க்யூ /யெஸ் ப்ளீஸ் ,would யு குட் யூ என்றே பழக்கப்படறாங்க 

   நீக்கு
 22. என் கணவருக்கு முகப்புத்தக அக்கவன்ட் இல்லை என்பதை சந்தோஷமா அறிவிச்சிக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பார்த்தவரையிலும் கணவன் அல்லது மனைவி முகப்புத்தகத்தில் ஆக்டிவ் ஆக இருந்தால், மற்றவர் ஒன்று அக்கவுண்ட் வைத்திருப்பதில்லை; வைத்திருந்தாலும் ஆக்டிவ் ஆக இருப்பதில்லை!

   நீக்கு
  2. அதே அதே :) 2017 ஆரம்பத்தில் மூடிட்டு வந்துட்டேன்  நாங்கள் இருவரும் தனி அக்கவுண்ட் வச்சிக்கலை ஆனா ஒரு அக்கவுண்ட் சில அனிமல் வைல்ட் லைஃப் சேரிட்டிஸ் ,சமையல் மற்றும் ஆலய யூஸுக்காக ஒரு கூட்டு  அக்கவுண்ட் வச்சிருக்கோம் 

   நீக்கு
 23. //அந்த நடிகரின் அம்மா, பக்கத்து ரூமில் இருக்கின்ற அந்த நடிகருக்கு, 'நீதான் அடுத்த சூப்பர் ஸ்டார்' என்று கடிதம் எழுதி, அதை நேரே அவரிடம் கொடுக்காமல், தொலைக்காட்சி நிலையங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பிய காமெடி நிகழ்வும் நடந்தது! //
  ஆஹா :) இது வேறயா :) எதுக்கும் கவனமா கலாய்ப்போம் ..எங்கிருந்து திடீர்னு குதிப்பங்கன்னே தெரியாது இந்த ரசிகர்கள் .ஒருமுறை மெத்த படித்த வெளிநாட்டு வாழ் நட்பு  ஒரு நடிகரை சப்போர்ட் செஞ்சி யாரையோ திட்டினார் முகப்புத்தகத்தில் .அப்போதான் நினைசிக்கொண்டேன் மார்க்ஸுக்கே போனாலும் ஸ்பேஸுக்கே போனாலும் சிலர் குணம் அடிப்படை குணம் மாறாதுன்னு 

  பதிலளிநீக்கு
 24. அன்பு எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும், அழகாகக் கேள்வி கேட்டு
  அருமையான பதில்களைப் பெற்ற அனைவருக்கும் இனிய
  மாலை வணக்கம். இங்கு லேபர் தினக் கொண்டாட்டங்கள் ,தள்ளுபடியில்
  பொருட்கள் வாங்குதல்,
  பேரனின் பிறந்த நாள் என்று விடுமுறை சென்றது.
  கேட்கப் பட்ட கேள்விகள் அருமை. எறும்பு ரொம்ப பேரைப் பதம் பார்த்து இருக்கிறது.

  இதற்கெல்லாம் சுவையாகப் பதில் சொல்லும் கீதாமா பிசி.

  கௌதமன் ஜியின் பதில்கள் சுவாரஸ்யம். இன்னோரு ஆசிரியர் யார் என்று தெரியாது.

  அன்பு கீதா ரங்கன், இவ்வளவு டைப்பியதே அதிசயமாக இருக்கிறது.
  ஓய்வு தேவை கீதாமா.
  சீக்கிரம் குணமாகிவிடும்.

  தலைமுறை இடைவெளி தாறுமாறாக மாறுபடும். பாட்டிகளால் வளர்க்கப்
  பட்ட பெண்கள் அவர்களை மாதிரியே சிந்திருப்பார்கள்
  பசங்களும் அப்படியே.

  திருமணமான புதிதில் மனைவியின் மீதிருக்குமன்பில்
  எந்தக் குற்றமும் சொல்ல மனமிருக்காது.
  என் கணவர் உற்சாகப் படுத்துவாரே தவிர குறையே
  சொல்ல மாட்டார்.

  எங்களுக்குக் கேள்வி கேட்கவில்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // திருமணமான புதிதில் மனைவியின் மீதிருக்குமன்பில்
   எந்தக் குற்றமும் சொல்ல மனமிருக்காது.// ஆம். உண்மை!

   நீக்கு
 25. நல்ல புதன்...
  நல்ல கேள்விகள்... நல்ல பதில்கள்...

  நலமெல்லாம் வாழ்க.. வாழ்க...

  பதிலளிநீக்கு
 26. @ கீதா...

  >>> ஆனால் விரைவில் வந்துவிடுவேன்...கீதாவா கொக்கா..ஹா ஹா ஹா...
  இப்போதைக்கு விடை பெறுகிறேன். விரைவில் சந்திப்போம்... <<<

  வரவேண்டும்... வரவேண்டும்... விரைவில் வரவேண்டும்...

  அன்பின் சகோதரி விரைவில் பூரண நலம் எய்த வேண்டும்...
  அம்பாள் அருகிருந்து காத்தருள்வாளாக!..

  வளர்க நலம்...

  பதிலளிநீக்கு
 27. 1,இது மேலே flex பற்றி  பார்த்ததும்  உதித்த கேள்வி 

  இந்த வகை flex போர்டுகள் என்ன மெட்டிரியலில் ஆனவை ?மாநாடு அல்லது விழா முடிஞ்சதும் என்ன ஆகின்றன ? எங்கே கொண்டு வீசப்படுகின்றன ?

  2, நீங்க மரமா மாறுவதாக இருந்தா என்ன மரமாக மாற விரும்புகிறீர்கள் ? ஏன் ? 

   3. வறுமையின் நிறம் சிவப்பு என்று ஏன் சொல்கிறார்கள் ? அப்போ செழுமையின்/செல்வத்தின்  நிறம் பச்சையா ?

  4, பெண்கள் கிட்டி ( kitty ) பார்ட்டி போன்ற கெட் டு கெதர்களுக்கு செல்வதுபோல் ஆண்களுக்கும் தனியா இப்படி கிட்டா பார்ட்டி அல்லது கிட்டு பார்ட்டி என்று எதாவது இருக்கா ? 

  5, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போட்டிகளில் வெற்றி யாரால் நிர்ணயிக்கப்படுகிறது ?நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ?அல்லது பொதுமக்கள் ?

  6,நீங்கள் சமீபத்தில் சந்தித்த ஒரு அதி பொறுமைசாலி யார் ? ஒரு ஆண் ஒரு பெண் இருவரை குறிப்பிடலாம் 

  7,உலகத்தில் எல்லாமே நேர்மறை ஆக இருந்தால் எப்படி இருக்கும்?


  8, முதன் முதலா பாலர் பள்ளி /நர்சரி வகுப்புக்கு போனது நினைவிருக்கா ? நீங்கள் படித்த நர்சரி ஸ்கூல் பெயர் என்ன ?     


  9, ஆண்களிடம் சம்பாத்தியதையும் பெண்களிடம் வயதையும் கேட்கக்கூடாது என்கிறார்களே அது உண்மையா ? ஏன் ?    ஒரு விண்ணப்பபடிவம் நிரப்பும்போது அதில் கட்டாயம் இந்த கேள்விகள் வருமே அப்போ என்ன செய்வாங்க :)  ???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //6,நீங்கள் சமீபத்தில் சந்தித்த ஒரு அதி பொறுமைசாலி யார் ? ஒரு ஆண் ஒரு பெண் இருவரை குறிப்பிடலாம் //

   இதிலென்ன டவுட்டூஊஊஊஊஊ:)) அது அதிராதேன்ன்ன்ன்:))

   நீக்கு
 28. உங்களுக்கு உங்கட... அம்மம்மா, அப்பம்மா, அப்பப்பா, அம்மப்பா சின்ன வயதில் கதைகள், பாட்டுக்கள் சொல்லித் தந்ததுண்டோ? அவற்றில் இன்ற்வரை மனதில் நிற்கும் குட்டிக்கதை? அல்லது பாடல்?

  பதிலளிநீக்கு
 29. //உங்க காதுக்குள் சின்ன குட்டி எறும்பு போன அனுபவம் உண்டா ? அப்படி போன எறும்பை எப்படி வெளியே எடுத்தாங்க ?//ஒரு முறை சின்னக்கரப்பு போய்விட்டது. உள்ளே ஒரே குடைச்சல். அப்புறமா சத்தமே இல்லை. ஆனால் காதில்தான் இருக்குனு தெரிகிறது. உணரமுடிகிறது. நம்ம ரங்க்ஸோ ஒத்துக்கலை. உனக்குப் பாதி பிரமை என்று சொல்கிறார். விடாப்பிடியாகக் காது மருத்துவரிடம் போய்விட்டேன். (அவர் தான் குடும்ப மருத்துவரும் கூட) நம்மவரும் அரை மனசா வந்தார். ஆனால் ஒரே சிரிப்பு! மருத்துவர் ஒண்ணும் இல்லைனு சொல்லப் போறார்னு. அவரிடமும் சொல்லவே சொன்னார். ஆனாலும் அவர் என் முகத்தைப் பார்த்துட்டோ என்னமோ எதுக்கும் பார்த்துடலாம்னு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய டார்ச்சை எடுத்து வந்து எந்தக் காதில் சொன்னேனோ அந்தக் காதில் அடித்துப் பார்த்தார். பின்னர் கண்களில் லென்ஸ் மாட்டிக்கொண்டும் பார்த்தார். உள்ளே ஓர் ஆள் இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டார். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஊசியை எடுத்தார். நான் இப்போ பயந்து போனேன். அவர் பயம் வேண்டாம்னு சொல்லிட்டு மருந்து நீரை அந்த ஊசிக்குழாயில் நிரப்பிக் காதைப் பிடிக்கச் சொல்லி உதவி ஆளிடம் சொல்லிவிட்டு அந்த நீரைப் பீய்ச்சி அடித்தார். தலை கிறுகிறு. ஆனால் உடனே காதைச் சாய்க்கவும் மருந்து நீரோடு கரப்பாரும் உயிரை இழந்த கோலத்தில் வெளியே வந்தார். நம்மவருக்கு அப்போத் தான் நம்பிக்கை பிறந்தது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!